Advertisement

 

அத்தியாயம் 20

 

என் சோக

கண்ணீருக்கு நீ

காரணமாக இருந்தாலும்

உனக்காக

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

“ஹ்ம்ம், அப்புறம் ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன் டா”, என்றாள் வேதா.

 

“என்ன கேக்கணும்? நீ இன்னும் சரியாகலை. ரொம்ப எல்லாம் யோசிக்காத டி”, என்றான் ரிஷி.

 

“ப்ச் சரி. இதையே ஆயிரம் தடவை சொல்லிட்ட. நான் அன்னைக்கு வசந்த் கிட்ட பேச போறேன்னு சொன்னப்ப, அவன் உன்னையே கல்யாணம் பண்ணனும்னு சொல்லுவான்டின்னு சொன்னல்ல?”

 

“ஆமா, இப்ப ஏன் அதை நியாபக படுத்துற?”

 

“நீ எப்படி அப்படி சொன்ன? நிஜமாவே அவன் அப்படி தான் டா சொன்னான். உனக்கு எப்படி முன்னாடியே தெரியும்?”

 

“வேதா, இப்பவாது நான் சொல்றதை முழுசா கேக்குறியா? அதுவும் நம்பிக்கையோட கேக்கணும். முடியுமா உன்னால?”

 

“நேரம் போகலை. அதனால சொல்லு கேக்குறேன்”, என்று சிரித்தாள் வேதா.

 

அவளை முறைத்தவன் மறுபடியும் அவர்களின் பூர்வ ஜென்ம கதையை, சித்தர் சொன்னதை, தனக்கு நினைவில் நின்றவை என அனைத்தையும் சொன்னான்.

 

இப்போது அவள் மனதில் எந்த குழப்பமும், கோபமும் இல்லாததால் அவன் கூறியதை அவளுக்கு நம்ப தோன்றியது. தன்னுடைய பிறப்பின் ரகசியத்தை கேட்டு ஒரு வித நடுக்கம் வந்தது.

 

அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை வைத்தே அவள் சொன்னதை நம்பி விட்டாள் என்று  உணர்ந்த ரிஷி மேலும் கூற ஆரம்பித்தான்.

 

எல்லாவற்றையும் கேட்டு விட்டு “நிஜமாவே எனக்கு பிரமிப்பா இருக்கு ரிஷி. முழுசா நம்பவும் முடியலை. நடந்ததை எல்லாம் நினைச்சு பாத்தா நம்பாம இருக்கவும் முடியலை. கடைசில அந்த சித்தர் சொன்ன படியே நடந்துருக்கு பாரேன்”, என்றாள் வேதா.

 

“ஹ்ம்ம் ஆமா டி”

 

“சரி, இதுல வசந்த் க்கு என்ன சம்பந்தம்?”

 

“அட லூசு, அவன் யாரு தெரியுமா போன ஜென்மத்துல நாம பிரியுறதுக்கு காரணமான கிஷோர் தான் அவன். எனக்கு அவன் முகம் நல்லா நினைவு இருந்தது. அன்னைக்கு பாத்ததும் அப்படி ஒரு அதிர்ச்சி”

 

“அப்படியா?”

 

“ஆமா டி, இன்னொன்னு தெரியுமா? தேவா பத்தி சொன்னேன்ல? அவனை மாதிரியே இருந்த ஆள் தான் அன்னைக்கு என்னை காப்பாத்துனான் டி”

 

“என்னமோ டா, எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியலை. அப்ப ஜான் அருந்ததி எல்லாரும் கூட நம்ம பூர்வ ஜென்மத்துல வந்துருப்பாங்க போல?”

 

“அப்படி தான் தோணுது. சாரி டி அப்ப இருந்த மனநிலைல தாலி கட்டுறது தான் சரின்னு தோணுச்சு. உன் பீலிங் யோசிக்கலை. உனக்கு வேணும்னா கல்யாணம் பண்ணனும், வேண்டாம்னா பண்ண கூடாதுன்னு யோசிக்கிறியா வேதா?”

 

“அப்படி எல்லாம் இல்லை டா. என்னோட மாங்கல்ய பலன் தான் உன்னை காப்பாத்திருக்கு. ஆனா ஊர்ல போய் அம்மா, அப்பாவை, அத்தை, மாமாவை எப்படி பேஸ் பண்ணணு தயக்கமா இருக்கு”

 

“தயக்கமா? எதுக்கு?”

 

“எதுக்கா? போகும் போது அவங்க பொண்ணா போனேன். வரும் போது உன் பொண்டாட்டியா வரேன், அதான்”

 

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. உன் மூளைக்கு ரொம்ப ஸ்ட்ரைன் கொடுக்க கூடாதுனு சொல்லிருக்காங்க”

 

“ஹ்ம்ம் சரி, நான் ஊருக்கு போய் வேலைக்கு போகட்டுமா?”

 

“இது என்ன கேள்வி? உனக்கு புடிச்சதை செய். ஆனா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு முழுசும் குணமான பின்னாடி தான் போகணும்”

 

“என்ன டா நீ? நான் அப்படி கேட்டா அதெல்லாம் போக கூடாதுன்னு ஆம்பிள்ளை திமிரை காட்டுவ. அப்படியே நாலு சண்டை போடலாம்னு நினைச்சா பொசுக்குன்னு சரண்டர் ஆகிட்ட?”

 

“பொண்டாட்டி கிட்ட எதுக்கு டி ஆம்பிள்ளை திமிரை காட்டணும்? உங்கிட்ட ஆம்பிள்ளைன்னு திமிரை காட்ட ஒரு இடம் தான் இருக்கு”

 

“என்னது? ஒரு இடமா? அப்படின்னா?”

 

“பெட் ரூம் மட்டும் தான்”, என்று சொல்லி கண்ணடித்தான் ரிஷி.

 

அவன் முகத்தை பார்க்காமல் அவன் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள் வேதா.

 

அதை பார்த்து சிரித்தவன் “என்ன டி பதிலே காணும்?”, என்று கேட்டான்.

 

“எனக்கு தூக்கம் வருது. டிஸ்டர்ப் பண்ணாத”, என்று சொல்லி கண்களை மூடி கொண்டாள் வேதா.

 

அவனும் அவளை அணைத்த படியே தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைத்த படி அமர்ந்திருந்தான்.

 

ஊருக்கு வந்ததும் அவர்களை வரவேற்க பெற்றோர்கள் நால்வரும் வந்து விட்டார்கள். ஏர்போர்ட்டில் வைத்தே ஒரு பாச போராட்டம் நிகழ்ந்தது. ஒரு வழியாக வீட்டுக்கு வந்ததும் அவர்களை ஆரற்றி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்கள்.

 

அதன் பின்னர் அந்த வீட்டில் ஒரே பேச்சு சத்தம் மட்டும் தான் கேட்டது. மூன்று வருட கதையை அனைவரும் பேசி கொண்டே இருந்தார்கள்.

 

பின் வேதாவையும், ரிஷியையும் ஓய்வெடுக்க போக சொன்னார்கள். வேதாவுக்கு தான் எங்கே போவது தன் வீட்டிற்க்கா? ரிஷியின் அறைக்கா? என்று குழம்பினாள்.

 

“வேதா அவ வீட்லே இருக்கட்டும். ரிசப்ஷன் முடிஞ்சு கல்யாண பொண்ணா ரிஷி ரூம்க்கு போகட்டும்”, என்று சொல்லி ரிஷியின் முறைப்பை பெற்று கொண்டாள் சாரு.

 

அதன் பின் நாட்கள் அழகாக சென்றது. மதுரைக்கு சென்று அந்த சாமிஜியை பார்த்து இருவரும் ஆசி வாங்கினார்கள்.

 

“இனி ஒரு குறையும் வராம சந்தோசமா வாழ்வீர்கள்”, என்று ஆசி வழங்கினார் அவர்.

 

பின் ஒரு வாரத்தில் ரிசப்ஷன் என்று நாள் குறிக்க பட்டு பத்திரிக்கை அடிக்க பட்டது. அருந்ததி, டேவிட் அங்கிள், ஜான் இங்கே வருவதற்கு டிக்கட் போட்டான் ரிஷி.

 

ரிசப்ஷனுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போதே அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

 

அதன் பின் நேரம் றெக்கை முளைத்து கொண்டு பறந்தது. பத்திரிக்கை கொடுப்பது, ஷாப்பிங், ஊரு சுத்துவது என்று கழிந்தது. கல்யாணத்தை முறைப்படி செய்யாததால் ரிஷப்சனை கிராண்டாக செய்தார்கள்.

 

ஒரு வழியாக ரிசப்ஷன் நாளும் வந்தது. இருவரும் அழகாக அலங்காரம் செய்து மேடையில் அமர்ந்திருந்தார்கள். அதுவும் அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பும் கண்களில் வழியும் காதலும் பார்ப்போரை கவர்ந்தது. வேதாவின் பிரண்ட்ஸ், சுஜாதா அனைவரும் வந்திருந்தார்கள்.

 

பங்க்சன் நல்ல படியாக முடிந்ததும் வீட்டுக்கு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்து வந்தார்கள். அன்று இரவு அவனுடைய அறைக்குள் புது பெண்ணுக்குரிய அலங்காரத்துடன் உள்ளே அனுப்ப பட்டாள் வேதா.

 

அவனுடைய அறைக்குள் வந்தவள் ஒரு புன்னகையுடன் அந்த அறையை அலசினாள். அவன் அங்கு இல்லை. “ஜான் கூட பேசிட்டு இருப்பான் போல?”, என்று நினைத்து கொண்டாள்.

 

பல தடவை இங்கு அவள் வந்தது தான். பல நாள் அங்கேயே தூங்கவும் செய்திருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வு இப்போது அவளை ஆட்கொண்டது.

 

மனதுக்குள்ளும் வெளியேயும் பட படப்பாக உணர்ந்தாள். பல விதமான உணர்வுகள் அவள் மனதில் அணி வகுத்தன.

 

ஒரு வித எதிர்பார்ப்புடன் கட்டிலில் அமர்ந்தவள் அறை முழுவதும் மாட்ட பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை பார்த்தாள்.

 

எல்லாவற்றிலும் ரிஷியும், வேதாவுமே இருந்தார்கள். ஒவ்வொரு போட்டோவிலும் புன்னகையுடன் இருந்த ரிஷியை பார்த்தவள் “அழகன் டா நீ”, என்று வாய் விட்டே சொல்லி கொண்டாள்.

 

“மூணு வருஷம் முன்னாடியே கல்யாணம் வேணும்னு நான் சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லி நினைச்சதை சாதிச்சிட்டல்ல? இன்னைக்கு என்னோட டேர்ன். ஒரு நாளாவது உன்னை தவிக்க வச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும். என்ன பண்ணலாம்?”, என்று யோசித்தவள் வெளியே அவன் வரும் அரவம் கேட்டதும் அப்படியே படுத்து கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தாள்.

 

“இப்படியே தூங்குற மாதிரி நடிச்சு இன்னைக்கு நைட்டை ஒப்பேத்தனும். நாளைக்கு இவனை பாத்துக்கலாம்”, என்று அவள் முடிவெடுத்து கொண்டிருக்கும் போது ஒரு வித துள்ளலுடன் உள்ளே வந்த ரிஷியோ படுத்திருந்த அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.

 

பின் அவளின் கண்ணின் மணிகள் உருளுவதை பார்த்து, அவளின் இந்த சிறு பிள்ளை தனமான செய்கையை ரசித்தவன் ஒரு சிரிப்புடன் கதவை பூட்டி  விட்டு லைட்டை அணைத்தான்.

 

லைட்டை அணைத்தவுடன் வேதாவின் இதய துடிப்பே எகிறியது. “கண்டு பிடிச்சிருவானோ?”, என்று கண்களை மூடி யோசித்து கொண்டிருந்தாள்.

 

அவள் அருகே  அமர்ந்தவன் அவள் முகத்தையே பார்த்தான். பளிச்சென்று இருந்த அவள் அழகை வெகுவாக ரசித்தான்.

 

கண் முன் தெரிந்த அவளின் மொத்த அழகும் தனக்கே சொந்தம் என்று பெருமிதமாக உணர்ந்தான் ரிஷி.

 

அவளோ அவன் என்ன செய்ய போகிறான் என்று தவிப்புடன் காத்திருந்தாள்.

அவள் நடிப்பை ரசித்தவன், “இப்படி ஒரு பொண்ணு கூட வாழ முடியலைன்னா நான் ஒரு ஜென்மம் என்ன? ஆயிரம் ஜென்மம் கேட்ப்பேனே. நன்றி கடவுளே இவளை எனக்கு தந்ததுக்கு. மற்றொரு பிறவியை கொடுத்த உனக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகாது. எனக்கு கிடைச்ச இந்த ரெண்டாவது வாய்ப்பை நான் தவற விட மாட்டேன். இவளை என்னுடைய உயிருக்குள் வச்சு பாத்துக்குவேன். என்னோட காதலை மொத்தமும் இவ மேல கொட்டி இவளை பாதுகாப்பேன். தேவை இல்லாம சண்டை போட்டு நிம்மதி சந்தோசம் இல்லாம தவிக்க மாட்டேன்”, என்று எண்ணி கொண்டவன், “ஏண்டி, வயிறு மேல பல்லி ஏறி உக்காந்துருக்கு. அதை கண்டுக்காம படுத்திருக்க? பாரின்க்கு போன அப்பறம் பல்லி பயம் போயிருச்சா?”, என்று கேட்டான்.

 

“ஐயோ, பல்லியா? அம்மா”, என்று அலறி  அடித்து எழுந்தவள் “ரிஷி, பல்லியா? எங்க டா? போயிருச்சா?”, என்று கட்டில் மேலேறி நின்று கொண்டு பயத்துடன் கேட்டாள்.

 

அவள் செய்கையை கண்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான் ரிஷி.

 

பயத்தில் முட்டுக்கு மேலே சேலையை தூக்கி பிடித்து கொண்டு கபடி ஆடுவதை போல நின்றிருந்தாள் வேதா.

 

சிரிப்புடன் அவள் முகத்தை பார்த்தான். அவளோ பல்லி எங்கே என்று தேடி கொண்டிருந்தாள். மனமோ “பல்லி வயித்தில் ஏறிருக்கு. அப்ப கண்டிப்பா குளிக்கணும். ச்சி, உவ்வே”, என்று யோசித்து கொண்டிருந்தது.

 

அவளுடைய முகத்தில் நிலைத்திருந்த அவன் பார்வை மெதுவாக தாழ்ந்து அவள் கால்களில் வந்து நின்றது.

 

முயல் குட்டி போல் இருந்த மென்மையான பாதங்களும், வள வள என்று இருந்த கால்களும் அதில் இருந்த பூனை முடிகளும் சேர்ந்து அவனை ஊமத்தம் கொள்ள செய்தது. முட்டின் மேல்  இருந்த சேலை இன்னும் கொஞ்சம் மேல ஏறாதா என்று எண்ண வைத்தது.

 

அப்படியே அவன் முகம் முழுவதும் மயக்கம் சூழ்ந்தது. சுற்றி சுற்றி கண்களை உருட்டி பார்த்த வேதாவோ பல்லி கண்களில் தட்டு படாததால் கேள்வியாக அவனை பார்த்தவள் திகைத்தாள்.

 

“அவன் பார்வை எங்கு போகுது”, என்று நினைத்து கொண்டே தன்னை குனிந்து பார்த்து கொண்டு படக்கென்று புடைவையை கீழே விட்டவள் “அடேய்”, என்று கத்தினாள்.

 

அதில் சுயநினைவுக்கு வந்தவன் அவளை பார்த்து புன்னகைத்தவாறே கண்களை சிமிட்டினான்.

 

“எருமை பண்றதையும் பண்ணிட்டு  கண்ணா அடிக்கிற? எதுக்கு டா ஏமாத்துன? நான் பயந்துட்டேன் தெரியுமா?”, என்று கேட்டு கொண்டே கட்டிலில் அமர்ந்தாள்.

 

“அதுவா செல்ல குட்டி? தூங்குற மாதிரி நீ நடிச்சா  எனக்கு தெரியாதா? அதான் சும்மா ஏமாத்துனேன்? எதுக்கு டி தூங்குற மாதிரி சீன் போட்ட?”

 

“நான் ஒன்னும் சீன் போடல. எனக்கு நிஜமாவே தூக்கம்  வருது தெரியுமா?”

 

“அடடா  அப்படியா?”

 

“ஆமா ரிஷி”

 

“சரி சரி ஒன்னும் பிரச்சனை இல்லை. உனக்கு சோர்வா இருக்கும். நீ தூங்கி ரெஸ்ட் எடு”, என்று அவன் சொன்னவுடன் அதிர்ந்து விழித்தவள் அவனை குழப்பமாக பார்த்தாள்.

 

“என்ன பொசுக்குன்னு இப்படி… இப்படி….  தூங்குன்னு சொல்லிட்டான்? நான் அவன் கிட்ட என்னலாமோ எதிர் பார்த்தேன்?”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்த படியே இருந்தாள்.

 

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் பெட்டில் படுத்து விட்டான். அவளும் குழப்பத்துடன் அவன் அருகே படுத்தாள்.

 

“அமைதியா படுத்துட்டான். என்னை கெஞ்சுவான் கொஞ்சுவான்னு நினைச்சேனே? அவனுக்கு ஆசையே இல்லையா என் மேல? இன்னைக்கு எல்லாரும் தூங்குற நாளா? எருமை எப்படி படுத்துருக்கு பாரு?”, என்று எண்ணி கொண்டே உருண்டு கொண்டிருந்தாள்.

 

அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்த படி படுத்திருந்தான் ரிஷி. குழப்பத்துடன் யோசித்து கொண்டிருந்தவளோ அதற்கு மேல் முடியாமல் “ரிஷி”, என்று அழைத்த படியே அவனை பார்த்த படி திரும்பி படுத்தாள்.

 

வானத்தை பார்த்து படுத்திருந்தவனோ, கண்களை திறக்காமலே “என்ன டி?”, என்று கேட்டான்.

 

“இல்ல உன்னை ஒன்னு கேக்கணும், அதான்”

 

“கேளு”

 

“அது வந்து, வந்து.. இன்னைக்கு நமக்கு.. நமக்கு”

 

“என்ன டி நமக்கு? கல்யாணம் ஆனதை சொல்ல வரியா?”

 

“அது இல்லை டா.  நான் கேட்டது நைட்டை பத்தி”

 

“என்ன நைட்டை பத்தி? இது தான நைட்? தூங்கு டி. காலைல நாலு மணிக்கே எழுப்பி விட்டுட்டாங்க. தூக்கம் வருது டி”

 

கடுப்புடன் எழுந்து அமர்ந்தவள் அவனை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

 

“ஆ என்ன டி? எதுக்கு கிள்ளுன?”, என்ற படியே எழுந்த உக்கார்ந்தான்.

 

“உனக்கு என் மேல லவ் இல்லை, ஆசை இல்லை, அன்பு இல்லை போடா”

 

“லூசு, இது என்ன புது பஞ்சாயத்து?”

 

“ஆமா, உண்மையிலே உனக்கு என்னை பிடிக்கலை”

 

“அடி வாங்காத வேதா. என்னன்னு சொல்லு”

 

“அது… அது… நமக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட் தான?”

 

“ஆமா, அதுக்கு தான நீ சேலையும் நான் வேட்டியும் கட்டிருக்கோம்”

 

“அது கட்டிருக்கோம், ஆனா ஒன்னும் நடக்கல?”

 

“அப்படி வா வழிக்கு”,என்று நினைத்து கொண்டு “என்ன நடக்கும்?”, என்று அப்பாவியாய் கேட்டான் ரிஷி.

 

“எப்பா சாமி, ஒன்னும் இல்லைப்பா, ஒண்ணுமே இல்லை. படுத்து தூங்கு”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

 

சிறிது நேரத்தில் அவனுடைய கை அவள் இடுப்பில் விழுந்தது. ஆனந்த அதிர்ச்சியுடன் அவனை பார்த்து திரும்பி படுத்தாள்.

 

“இத்தனை நாள் உன்னை விட்டு விலகி இருந்ததே கஷ்டம் டி. இன்னைக்கும் நீ தூங்குனா எப்படி இருக்கும்? இந்த ஒரு வாரமா ஒரு முத்தத்துக்கு கூட பஞ்சம். இன்னைல இருந்து நான் எப்ப சும்மா இருக்கேனா அந்த நேரம் மட்டும் தான் நீ தூங்கணும். மித்த நேரம் எல்லாம் நான் உன்னை தூங்கவே விட மாட்டேன்”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தான்.

 

அவளுடைய கழுத்தில் முகம் புதைத்தவன் அவளுடைய காதில் உதடு உரசும் படி “வேதா”, என்று கிசுகிசுப்பாக அழைத்தான்.

 

“ம்ம்”

 

“ஐ லவ் யு டி. எனக்கு நீ வேணும். அதுவும் இப்பவே”, என்று அவன் சொன்னதும் அவனுடைய நெஞ்சில் அழுத்தமாக முத்தத்தை பதித்தாள் வேதா.

 

அவளுடைய இசைவை கண்ட ரிஷி அவளை முழுதாக ஆட்கொள்ள ஆரம்பித்தான். விருப்பத்துடன் அவன் கை வளைவுக்குள் புகுந்து கொண்டாள் வேதா.

 

சேலை மறைக்காத வெற்றிடையில் பதிந்த கை எந்த வித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக ஊர்ந்தது. அவன் கைகளை தடுக்க முடியாமல் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து அவனை இறுக்க கட்டி கொண்டாள் வேதா.

 

இடுப்பில் இருந்த கை சற்று மேலேற தன்னுடைய பல்லால் தன் உதடுகளை கடித்து உடல் சிலிர்த்தாள் வேதா. ரிஷியோ முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமான தன் காதல் மனைவியிடம் சற்று எல்லை மீற ஆரம்பித்தான். அங்கே அவளுடைய கொலுசொலியும், வளையல் ஓசையும் மட்டுமே ஒலித்தது.

 

அழகான ஓவியமாக
என் மனதில்
உன் பிம்பத்தை
பதிக்கும் நிமிசங்களுக்காக

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

காதல் உயிர்தெழுந்தது…. முற்றும்.

கதையில் எதாவது சொதப்பிருந்தா மன்னிச்சிக்கோங்க பிரண்ட்ஸ்!!!!!!

Advertisement