Advertisement

“ஏன்? எதுக்கு?”, என்று மாறி மாறி கேள்வி கேட்ட சீதாவையும் சாருவையும் உண்மை சொல்லாமல் சமாளித்தான்.

 

அனைத்து டாக்டர்கள் மூளையையும் நன்றாக குழப்பி விட்டு மூன்று நாட்கள் கழித்து தான் கண் விழித்தாள் வேதா.

 

ஆவலுடன் அவள் அருகே சென்ற ரிஷியை ஏறிட்டு பார்த்தவளின் கண்கள் மறுபடியும் மூடி கொண்டது.

 

“கோமா”, என்று பெயர் வைத்தார்கள் மருத்துவர்கள். ரிஷி ஹாஸ்ப்பிட்டலே கதி என்று கிடந்தான். அருந்ததி அவனுக்கு உணவு கொடுத்து கவனித்து கொண்டாள் என்றால் ஜான் அவனுக்கு பக்க பலமாக  நின்று அவனை கவனித்து கொண்டான்.

 

அதன் பின் ஒரு வாரமாகியும் வேதா கண் விழிக்க வில்லை. வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க முடியாமல் திணறியவன் கடைசியில் உண்மையை கூறி விட்டான்.

 

உண்மை அறிந்து கதறிய பெற்றோர்களும் கடவுளே கதி என்று சரணடைந்தார்கள். வீடியோ காலில் அவளை அவர்களுக்கு காட்டுவான் ரிஷி.

 

எப்போதாவது கண் விழிப்பதும் சில வினாடிகளில் கண்களை மூடுவதுமாக இருந்த வேதா நான்கு வாரங்களுக்கு மேல் அனைவரையும் அழ வைத்தாள்.

 

இன்னும் மூன்று நாட்களில் ரிஷியின் பிறந்த நாள் முடிந்து அடுத்த மாதம் ஆகி விடும் என்ற நிலையில் சீதா அவனை அழைத்தாள்.

 

“என்ன அத்தை? சொல்லுங்க. வேதாவை பாக்குறீங்களா? வீடியோ கால் பண்ணவா?”, என்று கேட்டான் ரிஷி.

 

“செத்த பிணம் மாதிரி படுத்துருக்குறவளை பாத்து என்னப்பா செய்ய போறேன்? நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்ல தான் போன் செஞ்சேன்? அவளுக்கு இப்படி ஆகி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆக போகுது. எந்த மாற்றமும் இல்லை. நீ அவளை இங்கயே கூட்டிட்டு வரியா? என் பொண்ணை என் கையாள தொட்டு பாத்தாவது சந்தோச படுவேன்”, என்று கதறி அழுதாள் சீதா.

 

சீதா சொன்ன “ஒரு மாசம் ஆக போகுது “, என்ற வார்த்தையில் அப்படியே சிலை என நின்றவன் “சரி அத்தை இன்னும் மூணு நாளில் அவளை கூட்டிட்டு வரேன். அதுக்கு முன்னாடி, இன்னைக்கு ஒரு விஷயம் பண்ண போறேன். நான் சாயங்காலம் கால் பண்றேன். நாலு பேரும் ஒண்ணா நில்லுங்க”, என்று சொல்லி போனை வைத்தவன் ஜானை பார்த்துக்க சொல்லி விட்டு கடைக்கு சென்றான்.

 

தன்னுடைய கார்டில் இருந்து பணத்தை எடுத்தவன் ஒரு பாரம்பரியமான தமிழரின்  நகை கடைக்கு சென்றான். பின் ஒரு தாலியை வாங்கியவன் ஒரு செயினையும் வாங்கினான்.

 

பின் ஹாஸ்பிடலுக்கு வந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அங்கே ஜான் பயங்கர கலவரமாக நின்றான். “என்ன ஆச்சு ஜான்?”, என்று கேட்டான் ரிஷி.

 

“அது வந்து… நீ போன அப்புறம் நான் இங்கே தான் இருந்தேன். அப்ப டாக்டர் மெடிசின் பத்தி பேசணும்னு கூப்பிடுறாங்கன்னு ஒரு நர்ஸ் வந்து சொன்னாள். நான் போனேன். ஆனா அப்படி யாரும் கூப்பிடவே இல்லையாம். அதிர்ச்சியா இருந்தது. நான் உடனே வேதாவை தான் வந்து பாக்க வந்தேன். அப்ப… அப்ப…ஒருத்தன் அவளை கொள்ள முயற்சி செஞ்சான். அவனை அடிக்க போறதுக்குள்ள அவன் என்னை தள்ளி விட்டுட்டு ஓடிட்டான் ரிஷி. அப்புறம் டாக்டர் வந்து வேதாவை செக் பண்ணிட்டாங்க. இப்ப அவ ஆல்ரைட் ஆனா வேதா இங்க இருக்குறது சேப் இல்லைனு தோணுது”, என்றான்.

 

“ஹ்ம்ம்”, என்று முனங்கிய ரிஷி உடனடியாக அவளை அணுகி அவள் கைகளை பற்றி கொண்டு “நீ சீக்கிரம் வந்துருவ டி. உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நமக்கு கல்யாணம். நீ முழிச்சு வந்து சண்டை போட்டாலும் பரவால்ல. இப்ப முடிக்கலைன்னா மூணு நாள் கழிச்சு என்ன வேணும்னாலும் நடக்கலாம் கண்ணம்மா”, என்று அவளிடம் பேசி கொண்டிருந்தான்.

 

அருந்ததி அவர்களை பார்க்க வரும் நேரம் அவள் கையில் ஜானின் போனை கொடுத்து வீடியோ எடுக்க சொன்னான். தன்னுடைய போனை ஜான் கையில் கொடுத்து தன்னுடைய பெற்றோரை அழைக்க சொன்னான்.

 

அவர்கள் வந்ததும் “அம்மா, அப்பா, அத்தை, மாமா நான் இப்ப வேதாவை கல்யாணம் செய்ய போறேன்”, என்று அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தவன் அடுத்து சாமியார் சொன்னவற்றை கூறினான்.

 

அவர்களுக்கும் அது சரி என்று படவே அவர்களும் “சரி”, என்றார்கள்.

 

அடுத்த நிமிடம் ஒரு நர்ஸ் அவளை அமர வைக்க அவளுக்கு தாலியை கட்டினான் ரிஷி. “எப்படி எல்லாமோ நம்ம கல்யாணம் நடக்கணும்னு நினைச்சிருந்தேன் டி”, என்று எண்ணி கொண்டவனுக்கு சீக்கிரம் அவள் எழுந்து வர வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அனைவரின் கண்களும் கலங்கிய படி தான் இருந்தது.

 

அவளுக்கு தான் வாங்கிய சங்கிலியையும் அணுவித்தான். இது எதையுமே அறியாமல் இருந்தாள் வேதா.

 

அதன் பின் அனைவரும் ரிஷியிடம் பேசி விட்டு போனை வைத்தார்கள். அருந்ததி ஜானகியும் ரிஷியையும் சாப்பிட வைத்து விட்டு வீட்டுக்கு சென்றாள்.

 

ஜான் அங்கிருந்த விசிட்டர் அறையில் படுத்தான். ரிஷியோ அவளையே பார்த்து கொண்டே அவளிடம் மானசீகமாக பேசி கொண்டிருந்தான்.

 

அடுத்த நாள் விடிந்ததும் ஜானை வீட்டுக்கு அனுப்பி கிளம்பி வர சொன்னவன் அவன் கிளம்பி வந்ததும் தான் குளிக்க சென்றான்.

 

குளித்து முடித்து அவளை காண வேகமாக வந்து கொண்டிருந்தவனை அடிச்சு தூக்குவது போல வேகமாக வந்தது ஒரு கார்.

 

“எப்படி விலக?”, என்று அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவனை ஒரு கரம் இழுத்து பிடித்து காப்பாற்றியது. அதே நேரம் “ரிஷி”, என்று கதறலுடன் கண் விழித்தாள் வேதா.

 

அதிர்ச்சியாக விழித்த ரிஷி தன்னை காப்பாற்றியவரை பார்த்தான். அங்கே இவன் வயதில் ஒரு இளைஞன் நின்றிருந்தான். ரிஷியின் உதடுகள் “தேவா”, என்று உச்சரித்தது.

 

“பி கேர்புல் பிரதர். உங்களை இடிக்க வந்த காரின் நிலைமையை பாருங்க”, என்று சொல்லி அந்த இளைஞன் சுட்டி காற்றிய திசையில் பார்த்தான் ரிஷி. அங்கே கார் அப்பளமென நொறுங்கி கிடந்தது. அடுத்த நிமிடம் அந்த காரில் உள்ளவனை காப்பாற்ற ஓடினான் ரிஷி.

 

அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்டு அதிர்ந்தவன் அவனுடைய நாடியை பிடித்து பார்த்தான். ரிஷியை அடித்து கொல்ல வந்தது வசந்த் தான்.

 

அங்கே போலீஸ் வந்ததும் “பல்ஸ் இருக்கு. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்”, என்று ரிஷி சொன்னதும் அவன் கையை ஒரு முறை அழுத்தினான் வசந்த். ரிஷி திரும்பி வசந்த் முகத்தை பார்த்தான். அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வடிந்தது. அடுத்த நொடி அவன் தலை தொங்கி போனது.

 

தன்னுடைய கையை பற்றி இருந்த வசந்த் கையை எடுத்து விட்டு விட்டு “அவன் இறந்துட்டான்”, என்று போலீசிடம் சொல்லி விட்டு அவனை காப்பாற்றிய மனிதன் நின்ற இடத்தை பார்த்தான். அது வெறுமையாக இருந்தது. அந்த இடத்தில அவன் இல்லை.

 

“தேங்க்ஸ் தேவா”, என்று உச்சரித்தது ரிஷியின் உதடுகள். அடுத்த நிமிடம் ஹாஸ்ப்பிட்டலுக்கு விரைந்தான்.

 

அங்கே கண்களில் கண்ணீருடன் “எனக்கு ரிஷி வேணும்”, என்று ஜானிடம் சண்டை போட்டு கொண்டிருந்தாள் வேதா.

 

அப்படி ஒரு நிலையில் அவளை கண்டதும் ஓடி வந்தவன் அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான். அவன் கண்ணீர் அவள் முதுகை நனைத்தது. அவளோ அவனை கட்டி கொண்டு விடவே மாட்டேன் என்று அழுது கொண்டிருந்தாள். அவளை சமாதான படுத்துவதை பார்த்து கொண்டிருந்த ஜான் அது இப்போதைக்கு முடியாது என்று நினைத்து அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு வெளியே சென்றான்.

 

அது தான் சாக்கென்று அவளை இறுக அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான் ரிஷி. அவன் முத்த மழையில் நனைந்த வேதா அதை பன்மடங்காக திருப்பி கொடுத்தாள்.

 

இப்போதும் அவன் கைகள் எல்லை மீற அதை தடுத்தவள் “முடியலை டா கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று அவன் சொல்லும் வார்த்தையை சொன்னாள்.

 

“ஹா ஹா”, என்று சிரித்து கொண்டே  அவள் கழுத்தில் உதடுகளை பதித்து அவளை கூச செய்து உதடுகளால் தான் கட்டிய தாலியை வெளியே எடுத்தான்.

 

கூசி சிலிர்த்தவள் தாலியை கண்டதும் ஆனந்த திகைப்பை அடைந்தாள். “அட பாவி தாலியே கட்டிட்டியா டா?”, என்று கேட்டவளின் உதடுகளை சிறை செய்து அவளை பேச விடாமல் செய்தான் ரிஷி.

 

இப்போது அவள் உடலில் விரல்கள் மட்டுமல்லாமல் அவன் உதடுகளும் கோலம் போட்டது.

 

மெய்மறந்து அவன் தொடுகையில் சிலிர்த்து சிவந்து கொண்டிருந்தவளை விட்டு விலகினான் ரிஷி.

 

“இப்பவும் உனக்கு என்ன டா பிரச்சனை? ஆரம்பிச்ச வேலையை முடிக்கவே மாட்டியா? இல்லை அதுக்கு மேல தெரியாதா?”, என்று கேட்டாள் வேதா.

 

“அட பாவி உடம்பு சரி இல்லாதவ மாதிரியா பேசுற? கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆக போகுது. நீ எப்படி கிடந்த தெரியுமா? அப்புறம்  எனக்கு என்ன எல்லாம் தெரியும்னு நான் வீட்ல போய் உனக்கு புரிய வைக்கிறேன். இங்க வச்சு வேண்டாம்னு தான் விலகுனேன். இரு அத்தைக்கு கால் பண்றேன்”, என்று சொல்லி இந்தியாவுக்கு அழைத்தான்.

 

குணமான வேதாவை பார்த்து அவர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி தான். சிறிது நேரம் பேசிவிட்டு “நீங்க ரெண்டு பேரும் பாரின்ல இருந்து கிழிச்சது போதும் ஒழுங்கா கிளம்பி வாங்க”, என்றாள் சாரு.

 

“டாக்டர்ஸ் கிட்ட கேட்டுட்டு டிக்கட் போடுறேன் மா”, என்று சொல்லி போனை வைத்தவன் ஜானை அழைத்து டாக்டரிடம் பேச சொல்லி அனுப்பி விட்டு அவளை முத்தங்களால் அர்ச்சித்தான்.

 

அப்போது சரியாக கரடியாக அங்கே வந்தாள் அருந்ததி. வேதாவை பழைய படி கண்டதும் சந்தோசத்துடன் அவளை கட்டி கொண்டாள்.

 

“அரு, நீ சொன்னது சரி தான். அவன் சரியான பொறுக்கி. இந்த கல்யாணத்தை எப்படி நிப்பாட்ட?”, என்று கேட்டாள் வேதா.

 

“அதுக்கு அவசியமே இல்லை வேதா. இப்ப தான் நியூஸ் தெரிஞ்சது அந்த நாய் ஆக்சிடெண்ட்ல செத்துருச்சு. இனி கவலை இல்லை”, என்று சிரித்தாள் அருந்ததி.

 

“சரி பேசுனது போதும். நீ ஜானுக்கு துணைக்கு போ”, என்று சொல்லி அவளை விரட்டிய ரிஷியை புன்னகையுடன் முறைத்த படி அங்கிருந்து சென்றாள் அருந்ததி.

 

மறுபடியும் அவளை நெருங்கியவனை முறைத்தவள் “நீ இன்னும் உன் லவ்வை புரிய வைக்கலை. அதை புரிய வச்சிட்டு என்ன வேணாலும் செய்”, என்று சிரித்தாள்.

 

அவளை முறைத்த படியே விலகி அமர்ந்த ரிஷி அதன் பின் டேவிட் அங்கிளுக்கு அழைத்து வேதா சரியானதை சொன்னான்.

 

சிறிது நேரத்திலே அவரும், வேதா வீட்டில் இருந்தும் வேதாவை பார்க்க வந்தார்கள். அவர்களுடனே அருந்ததியும் கிளம்பி சென்றாள். அவள் “நானும் இருக்கேனு”, சொன்னதுக்கு “என் பொண்டாட்டியை நானே பாத்துப்பேன்”, என்று சொல்லி அனுப்பி வைத்தான் ரிஷி.

 

பின் டாக்டர் அனுமதி கொடுத்தவுடன் ஜான் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே அவளை அறையில் ஓய்வெடுக்க வைத்து விட்டு இருவரின் ஹாஸ்டலையும் காலி செய்தார்கள். பின் இந்தியாவுக்கு டிக்கட் போட போன ரிஷி நாளை இரவு பிளைட் புக் செய்து விட்டு வீட்டுக்கு வந்தான்.

 

அவன் வீட்டுக்கு வரும் போது சமையல் செய்கிறேன் என்று சமையல் அறைக்குள் புகுந்து கொண்டு ஜானை விழி பிதுங்க வைத்து கொண்டிருந்தாள் வேதா.

 

அந்த அக்கப்போரை பார்த்த ரிஷி மறுபடியும் கடைக்கு சென்றான்.

 

அவன் சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வரும் போது சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் வேதா.

 

ஜானை பார்த்து “என்ன ஆச்சு?”, என்று கேட்டான் ரிஷி.

 

“உன் பொண்டாட்டி கிச்சன்ல என்ன செஞ்சிருக்கானு பாரு”, என்று சிரித்த படியே சொன்னான் ஜான்.

 

உள்ளே சென்று பார்த்த போது கருப்பு கருப்பாய் அனைத்தும் தீய்ந்து போய் இருந்தது.

 

“இது தெரிஞ்ச விஷயம் தான?”, என்று நினைத்து கொண்டு இருவரையும் சாப்பிட அழைத்தான்.

 

பார்சலை பார்த்ததும் குதூகலமானவள் “செம பசி டா, வாங்க சாப்பிடலாம் என்று முதல் ஆளாய் அமர்ந்தாள்.

 

சிரித்து பேசிய படியே மூவரும் சாப்பிட்டார்கள். அப்போது அங்கே வந்தாள் அருந்ததி.

 

அவளை பார்த்ததும் ஜான் முகம் அதிகமாக ஒளிர்ந்தது. அருந்ததியையும் அமர்ந்து உண்ண சொன்னான் ரிஷி.

 

“கண்டிப்பா சாப்பிடுறேன். அதுக்கு முன்னாடி ஸ்வீட் எடுத்துக்கோங்க”, என்று சொல்லி கொடுத்தாள் அருந்ததி.

 

“எதுக்கு அரு சுவீட்?”, என்று கேட்டாள் வேதா.

 

ஜானை ஒரு பார்வை பார்த்தவள் “எனக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சிட்டாங்க”, என்று சொல்லி அவனை பார்த்து கண்ணடித்தாள்.

 

சந்தோசத்துடன் கூவினான் ஜான். அவன் சந்தோசம் அனைவருக்கும் தொற்றி கொண்டது. வேதாவும் ரிஷியும் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

 

ஜானுக்கு எதிரே அமர்ந்தாள் அருந்ததி. நால்வரும் பேசி கொண்டே சாப்பிட்டாலும் ஜானும் அருந்ததியும் காதல் பார்வை பார்த்து கொண்டிருந்தார்கள்.

 

“அரு எனக்கு ஒரு சந்தேகம்”, என்று ஆரம்பித்தாள் வேதா.

 

“என்ன சந்தேகம்?”

 

“இல்லை, உங்க ரெண்டு பேருக்கும் பிறக்குற குழந்தை இந்தியன் மாதிரி இருக்குமா? இல்லை ஜான் மாதிரி இருக்குமா?”, என்று வேதா கேட்டதும் வெட்கத்துடன் தலை குனிந்தாள் அருந்ததி.

 

அவள் வெட்கத்தை பார்த்து அப்படியே சொக்கி போன ஜான் “அவளை மாதிரி ஒன்னு, என்னை மாதிரி ஒன்னு”, என்றான்.

 

மேசைக்கு அடியில் அவன் காலை நன்றாக மிதித்தாள் அருந்ததி. மிதித்த பிறகு தான் போன தடவை மாதிரி ரிஷி காலை மிதிச்சிட்டோமோ?”,  என்று யோசித்தாள்.

 

ஆனால் யோசனையே தேவை இல்லை என்பது போல் மிதித்த அவள் கால்களை கால்களாலே பற்றி கொண்டான் ஜான்.

 

அவன் காலால் போடும் கோலத்தை தாங்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள் அருந்ததி. அவர்கள் இருவர் முகத்தை பார்த்த வேதா அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி “ரிஷி எனக்கு தலை வலிக்குது. தூங்க போகலாமா?”, என்று கேட்டாள்.

 

“சரி, அருந்ததி குட் நைட்.  குட் நைட் ஜான். அவளை பத்திரமா வீட்ல விட்டுரு. வா வேதா டேப்லெட் போட்டுட்டு படு”, என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு சென்றான் ரிஷி.

 

அவர்கள் போன பிறகு எதிரே அமர்ந்திருந்த ஜான் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து தான் அவளை வீட்டில் விட கிளம்பினான் ஜான்.

 

அடுத்த நாள் ஏர்போர்ட் வாசலில் டேவிட் அங்கிள், ஜான், அருந்ததி, ரிஷி மற்றும் வேதா நின்று கொண்டிருந்தார்கள்.

 

பிரிவின் வலியுடன் தான் அவர்களுக்கு விடை கொடுத்தார்கள் மூவரும். “டெய்லி போன் செய்யணும் ரிஷி”, என்றான் ஜான்.

 

“கண்டிப்பா டா, அப்புறம் ரிசப்ஷன் இருக்கும். நீ, டேவிட் அங்கிள், அருந்ததி மூணு பேரும் வாங்க. நான் அங்க போய்ட்டு உனக்கு கால் பண்றேன். வரேன் அங்கிள், வரேன் அருந்ததி, பை டா ஜான்”, என்று விடை கொடுத்தான் ரிஷி.

 

வேதாவோ அருந்ததியை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தாள். தன்னுடைய மனைவியின் சிறு பிள்ளை தனமான செய்கையை ஜானுடன் சேர்ந்து கிண்டல் அடித்து அவளையும் சிரிக்க வைத்தான் ரிஷி.

 

அவர்கள் உள்ளே செல்லும் போது டேவிட் அங்கிள் கண்கள் கூட கலங்கியது.

 

பிளைட்டில் ஏறி அமர்ந்ததும் “இங்க வரும் போது நான் எப்படி பயந்தேன் தெரியுமா டா? சீட் பெல்ட் கூட போட தெரியலை எனக்கு. உன்னை தான் ரொம்ப தேடுச்சு”, என்றாள் வேதா.

 

அவளை தன் தோளில் சாய்த்து கொண்டவன் “நீ எப்பவும் என்னை தான் தேடுவேன்னு எனக்கு நல்லா தெரியும் டி”, என்றான்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement