Advertisement

 

அத்தியாயம் 15

 

மின்னல் கீற்று

போல என்

வாழ்க்கைக்கு ஒளியாக

நீ மாறினால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

ஜானுக்கு தமிழ் தெரியும் என்று தெரிந்ததும் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது . பேசியது எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமே என்று கலக்கமாக இருந்தது.

 

சங்கடமாக ஜானை பார்த்தாள் வேதா. “சாரி ஜான்”, என்று தயங்கிய படியே சொன்னான் ரிஷி.

 

“அது எதுக்கு? எனக்கு நீங்க பேசுனது பிடிச்சிருக்கு. அது மட்டும் இல்லாம என்னோட சிஸ்டர் என்னோட அழகை பாராட்டுனா பிடிக்காம போகுமா? ஆனா வாய் பேசுறதை எல்லாம் குறைக்க முடியாது. என்னோட தனிமையை நான் விரட்டுனதே இப்படி பேசியே நிறைய பிரண்ட்ஸ் பிடிச்ச காரணத்துனால தான். அப்புறம் ரிஷி, நான் அருந்ததியை பாக்குறது உனக்கு எப்படி தெரியும்?”

 

“எனக்கு என்ன? அது அவங்களுக்கே தெரிஞ்சிருக்கும்”, என்று சிரித்தான் ரிஷி.

 

“அந்த அளவுக்கா நான் நடந்துக்குறேன்?”, என்று ஜான் கேட்டதும் “இனி கொஞ்சமா குறைச்சு ஜொள்ளு விடு ஜான்”, என்று சிரித்தாள் வேதா.

 

அவன் அடுத்து “ஜொள்ளுன்னா என்ன?”, என்று  கேட்டு அதுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போது பக்கத்துக்கு வீட்டு அங்கிள் டேவிட் வந்து அறிமுக படுத்தி கொண்டார். அதன் பின் நால்வரும் கிளம்பி வெளியே போனார்கள்.

 

வெளியே சுற்றி பார்க்கும் போது வேதாவின் கைகளை பற்றவும் ரிஷி மறக்க வில்லை. சாப்பிடும் போது “இங்க வச்சு எல்லாம் சாக்லேட் கேக்க கூடாது செல்லம்”, என்று சொல்லி அவளின் முறைப்பை பெற்று கொள்ளவும் மறக்க வில்லை.

 

ஊரை சுற்றி முடித்து விட்டு கடைசியில் ஒரு பார்க்கில் அமர்ந்து நால்வரும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

அப்போது எங்கேயோ பார்த்த படி ஜான் அசையாமல் இருந்தான். அவனை பார்த்த டேவிட் அங்கிள் “ஜான் அது உன் அரு தான?”, என்று கேட்டார்.

 

“என்னது உன் அருவா?”, என்று அதிர்ச்சியோடு திரும்பினான் ரிஷி. வேதாவும் அருந்ததியை பார்க்க ஆவலாக திரும்பினாள்.

 

அங்கே ஒரு மூன்று வயது  குழந்தையை கையில் பிடித்து கொண்டு இவர்களை பார்த்து வந்து கொண்டிருந்தாள் அருந்ததி.

 

ஜானின் இதயம் தான் நின்று நின்று துடித்து கொண்டிருந்தது. அவளுக்கு திருமணம் ஆகி விட்டது போல என்று நினைத்து நொந்தே போனான்.

 

முதல் பார்வையிலே மனதில் ஆழம் வரை சென்ற அவளை இப்படி ஒரு குழந்தையோடு பார்த்தால் அவனும் தான் என்ன செய்வான்?

 

மற்ற மூவரும் அவள் அருகே வந்தவுடன் அவளை பார்த்து சிரித்தார்கள். “ஹாய்”, என்ற படியே வந்த அருந்ததி அவர்கள் அருகே அமர்ந்தாள்.

 

வேதாவையும் டேவிட்டையும் அறிமுக படுத்தி வைத்தான் ரிஷி. அப்போது தான் ஜானை பார்த்தாள் அருந்ததி.

 

அவனோ அந்த குழந்தையை தான் பார்த்து கொண்டிருந்தான். அதை பார்த்தவள் ஒரு நமட்டு சிரிப்புடன் திரும்பி கொண்டாள்.

 

ஜான் முகத்தை வைத்தே வேதாவும் அவனுடைய எண்ணத்தை கண்டு கொண்டாள். அதனால் அருந்ததியிடம் குழந்தையை பற்றி விசாரித்தாள்.

 

“இது ஷீபா, என்னோட அண்ணனோட குழந்தை”, என்று அருந்ததி சொன்னதும் அப்படியே சந்தோஷத்தில் வண்ணமயமாக சிதறி போனான் ஜான்.

 

அடுத்த நொடி அவனே அந்த குழந்தையை தூக்கி மடியில் வைத்து கொண்டான். ஏனோ அந்த நொடியும், அந்த நேரத்தில் ஜானின் முகத்தில் தோன்றிய பாவனைகளும் அவளை அறியாமலே தன்னுடைய இதய பெட்டகத்திற்குள் சேகரித்து வைத்தாள் அருந்ததி.

 

அதன் பின் அரட்டையில் கழிந்தது. டேவிட் அங்கிளும் இவர்களுக்கு சரியாக பேசியதில் நேரம் போனதே தெரிய வில்லை.

 

மறுபடியும் அனைவரும் ஜான் வீட்டுக்கு சென்றார்கள். கூடவே அருந்ததியும்.

 

“நீங்களும் வாங்க”, என்று ஜான் அழைத்ததை விட அவன் கண்களில் இருந்த கெஞ்சல் அவளையும் அங்கே போக தூண்டியது.

 

தான் வந்த காரை திருப்பி அனுப்பி விட்டு அவர்களுடன் சென்றாள் அருந்ததி.

 

தன்னுடைய வீடே ஒளி பெற்றது போல உணர்ந்தான் ஜான். இறக்கை இல்லாமலே பறக்கான் பாரேன்”, என்று ரிஷியின் காதில் உரைத்தாள் வேதா.

 

“ஹ்ம்ம் ஆமா டி. கொஞ்ச நேரம் அவங்க தனியா டைம் ஸ்பென்ட் பண்ணா நல்லா இருக்கும்ல? என்ன செய்யலாம்? நாம கிளம்பலாமா?”, என்று ரிஷி கேட்டதும் “எனக்கு முக்கியமான வேலை இருக்கு ஜான். நாங்க கிளம்புறோம்”, என்றாள் வேதா.

 

“நான் அவங்களை டிராப் பண்றேன்”, என்று எழுந்து கொண்டார் டேவிட்.

 

“நானும் கிளம்புறேன்”, என்று எழுந்து கொண்டாள் அருந்ததி.

 

“ஐயையோ, சொதப்பிட்டே”, என்று நினைத்த ரிஷி “சரி ஜான் நீ அருந்ததியை அவ வீட்ல டிராப் பண்ணு”, என்று அவர்கள் தனியே செல்ல வழி செய்தான்.

 

அவர்கள் மூவரும் கிளம்பியதும் அருந்ததியும் கிளம்பினாள். அப்போது ஷீபா வயிறு பசித்ததில் அழுதாள்.

 

தயங்கி தயங்கி குழந்தைக்கு சாப்பிட கேட்டாள் அருந்ததி.

 

உச்சி குளிர்ந்தது போல அவளை அமர வைத்து விட்டு உள்ளே சென்றான் ஜான்.

 

“அது வேணுமா? இது வேணுமா?”, என்று அவன் கேட்டு கேட்டு சேவகம் செய்ததில் அருந்ததி மனதில் மேலும் இடம் பிடித்தான் ஜான்.

 

பின்னர் அவனுடைய குடும்பத்தை பற்றி விசாரித்தாள். மனதில் பாரம் ஏறி அமர்ந்தது. “அவனுடைய தனிமையை இனி நான் போக்குவேன்”, என்று குரல் கொடுத்த மனசாட்சியை கண்டு திகைத்து போனாள். குழந்தையை சாக்காக வைத்து ஒரு மணி நேரம் கழித்து தான் அவனுடன் காரில் ஏறி கிளம்பினாள்.

 

வாய் ஓயாமல் பேசிய ஜான் பேச்சை ரசித்தது அருந்ததி மட்டுமே. வீட்டு அட்ரஸ் கேட்டு அவளை வீட்டில் விட்டவன் ஏதோ மனைவியை பிரிந்து செல்வது போன்ற மன நிலையில் இருந்தான்.

 

அவளோ அவனை வீட்டுக்குள் அழைத்தாள். “வேண்டாம்”, என்று மறுத்தான் ஜான்.

 

வற்புறுத்தி உள்ளே அழைத்து சென்றவள் தன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தங்கை, அண்ணன், அண்ணி என்று அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

 

ஜானின் வீடு குட்டி பங்களா என்றால் அருந்ததியின் வீடு ஒரு அரண்மனை போலவே இருந்தது. அதில் இருந்தே அவளுடைய செல்வ செழிப்பை கண்டு கொண்டான்.

 

அவனை தன்னுடைய ஸ்டூடன்ட் என்று அறிமுக படுத்தி அவனை திகைக்க செய்தாள் அருந்ததி.

 

“ஐயையோ! என்னை வயசில் சின்ன பையன்னு நினைச்சிருவாங்களோ?”, என்று பயந்து போன ஜான் அவனுடைய குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போதே தான் பல வருஷம் உலகத்தை சுற்றி வீணாக்கி விட்டு படிக்க வந்ததை சொல்லி அவளை விட பெரிய பையன் தான் என்று புரிய வைத்தான்.

 

அவன் தன்னுடைய குடும்பத்தாருடன் பேசுவதை முகம் முழுக்க சந்தோசத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் அருந்ததி.

 

அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பியவனின் கூடவே வெளிய வந்தாள். மெளனமாக அவளிடம் விடை பெற்றான் ஜான்.

 

எதையோ தன்னிடம் சொல்ல வரும் அவன் கண்களை காண முடியாமல் எங்கோ பார்த்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தாள் அருந்ததி.

 

ஏனோ இன்றைய நாள் போல் என்றுமே இருந்ததில்லை என்று தோன்றியது ஜானுக்கு.  மொத்த சந்தோசத்துடன் வீட்டுக்கு வந்தவன் அவனுக்காக காத்திருந்த டேவிட்டை தூக்கி சுற்றினான்.

 

அடுத்து வந்த நாள்கள் எப்போதும் போல நகர்ந்தது. ஜானின் காதலை கண்டு கொள்ளாமல் அருந்ததி நடந்து கொண்டால் என்றால், ரிஷி வாய் விட்டு தன் காதலை சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் அவனை பழி வாங்கினாள் வேதா.

 

இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது. ரிஷியின் இரண்டு வருட படிப்பு முடிந்து ஜானும் அவனும் ப்ராக்டிசை ஆரம்பித்தார்கள். அவர்கள் படிப்புக்கு பக்க பலமாக இருந்தாள் அருந்ததி.

 

தினமும் வேதா போனில் எழுப்பி விடாமல் ரிஷியின் நாள் துவங்காது. அதே போல் அவளிடம் பேசாமல் அந்த நாள் முடியவும் செய்யாது.

 

ஆனால் காதல் என்று அவன் அருகில் சென்றாலோ,  அவனை விலக்கியே நிறுத்தினாள்.

 

அவன் தான் தவித்து போவான். ஏனோ சில நேரங்களில் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற தாபம் தோன்றும். அப்போது அவளின் அருகாமைக்கு அதிகமாக ஏங்குவான் ரிஷி.

 

அதே மன நிலையில் அவளை போனில் அழைப்பான். அவனுடைய மனதின் தாபம் அவனுடைய குரலில் வெளிப்படுமோ என்னவோ? அடுத்த நிமிடம் “முக்கியமான வேலை இருக்கு ரிஷி”, என்று போனை அணைத்து விடுவாள் வேதா.

 

போனை வைத்த வேதாவோ அவனுக்கும் மேலே சோக கடலில் மிதப்பாள். தான் செய்வது அதிக படி என்று அவளுக்கு தோன்றினாலும் அவளால் அவளுடைய காதலை மறுபடியும் ஒப்புக்கொள்ள மனம் வர வில்லை.

 

தன்னுடைய மனதுக்குள் காதலை வைத்து கொண்டவளுக்கு அவனிடம் சொல்ல தான் மனதில்லை.

 

ஒரு நாள் வேதாவிடம் இருந்து காலையில் அவனுக்கு போன் வரவில்லை. காலையில் அவனாகவே எழுந்தவன் அவளை அழைத்தான். அவனுடைய அழைப்பை அவள் ஏற்கவில்லை. குழப்பத்துடன் புருவம் உயர்த்தியவன் குளித்து முடித்து கிளம்பினான் அவளுடைய ரூமுக்கு.

 

அவளுடைய அறையின் முன்பு நின்று கொண்டு கதவை தட்டிய போதும் அவள் வந்து கதவை திறக்க வில்லை. “என்ன ஆச்சோ?”, என்று எண்ணி பதட்டம் வந்தது. இவனே அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்,

 

அங்கே கட்டிலில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் வேதா. “இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே? என்ன ஆச்சு?”, என்று யோசித்தவன் அவள் அருகில் சென்று “வேதா வேதா என்ன டி ஆச்சு?”, என்று கேட்டான்.

 

அவன் குரலில் கண்களை திறந்தவள் மீண்டும் கண்களை  மூடி கொண்டாள். நெற்றியில் கை வைத்த ரிஷி திகைத்து போனான். உடம்பு நெருப்பாய் கொதித்தது.

 

“ஐயையோ! எப்ப காச்சல் வந்ததுன்னு தெரியலையே”, என்று எண்ணி கொண்டவன் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றான்.

 

தேவையான மருந்தை வாங்கி கொண்டு வந்தவன் அவளுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான்.

 

மருந்தை ஊசி வழியே அவளுடைய கைகளில் செலுத்தியவன் பாலை காச்சினான். பின் அவள் அருகே அமர்ந்து அவளை தன்னுடைய தோள்களில் சாய்த்து பருக வைத்தான்.

 

“போதும் டா”, என்று மறுத்தவளை விடாமல் குடிக்க வைத்தவன் அவளை தன்னுடைய தோளில் சாய்த்த படியே “எப்ப டீ காச்சல் வந்துச்சு? எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல?”, என்று கேட்டான்.

 

“உன்கிட்ட பேசிட்டு படுத்தேன் டா. நடு ராத்திரில தான் குளிர் ஜுரம் வந்த மாதிரி இருந்தது. காலைல எந்திக்கவே முடியலை”, என்று தளர்வாக பதில் சொன்னாள்.

 

“பசிக்குதா? எதாவது டிபன் செய்யவா?”

 

“வேண்டாம் டா, பால் குடிச்சேன்ல? சாப்பிடவும் பிடிக்கலை”, என்று சொன்னவள் இன்னும் அவனுடன் ஒன்றினாள். அவனும் ஆறுதலாக அவளை அணைத்து கொண்டான்.

 

அன்று முழுவதும் அவளுடனே இருந்தான் ரிஷி. அவளும் அவனை ஒட்டி கொண்டே தான் இருந்தாள்.

 

இரவு வந்ததும் “ஹாஸ்டல் கிளம்பலையா ரிஷி?”, என்று கேட்டாள் வேதா.

 

அவளை பார்த்து முறைத்தவன் “என்ன விளையாடுறியா? உனக்கும் இன்னும் காச்சல் சரியாகலை. ரெண்டு நாளாவது ரெஸ்ட் எடுக்கணும்? நான் எப்படி உன்னை தனியா விட்டுட்டு போக முடியும்?”, என்று கேட்டான்.

 

“ப்ச், இப்ப பரவால்ல டா, நீயும் காலேஜ் போகணும்ல?”

 

“நான் என்ன படிக்கவா போறேன்? நாளைக்கு சர்ஜரியும் ஒன்னும் இல்லை. பரவால்ல இருக்கேன்”

 

“சொன்னா கேளு ரிஷி. நீ இங்க தங்க வேண்டாம். நீ கிளம்பு”, என்று எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள் வேதா.

 

அவளை முறைத்தவன் “இப்ப எதுக்கு என்னை விரட்டறதுலே குறியா இருக்க?”, என்று கோபமாக கேட்டான்.

 

“தேவை இல்லாம எதுக்கு பேசணும்? போன்னு சொன்னா போயேன்?”

 

“ஏன் வேதா, இங்கயே இருந்தா உன்னை எதாவது செஞ்சிருவேன்னு பய படுறியா? இந்த அளவுக்கு என்னை சீப்பா நினைப்பியா நீ? என் நெஞ்சுல சாஞ்சு நைட் முழுவதும் என்கூட தூங்கிருக்க? அப்ப இருந்த நம்பிக்கை உனக்கு இப்ப இல்லாம போச்சுல்ல? அப்படி நீ வெறுக்குற அளவுக்கு நான் என்ன டீ செஞ்சிட்டேன்? என்னை பாத்தா உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுதா?”, என்று வறண்ட குரலில் கேட்டான் .

 

அவன் குரலில் எரிச்சல் ஆனவள் “லூசா டா நீ? கேனை தனமா பேசுற?”, என்று கேட்டாள்.

 

“என்ன? கேனை தனமாவா?”, என்று யோசித்தவன் அவளையே பார்த்தான்.

 

“என்ன முழிக்கிற? நீ தேவை இல்லாம யோசிச்சா நான் ஒன்னும் செய்ய முடியாது சரியா? உன்னை கட்டி புடிச்சு தூங்குன அப்ப, உன் மேல காதல்னு ஒன்னு இருக்குனு நான் உணரலை. உன்னை கல்யாணம் பண்ணனும்னு கனவு காணலை. ஆனா இப்ப அப்படி இல்லை. எல்லாமே மாறி போயிட்டு. அப்புறம்  உன்னை இங்க இருந்து போக சொன்னதுக்கு காரணம் உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை. என் மேல நம்பிக்கை இல்லாம தான். நீ போக வேண்டாம் இருந்துக்கோ. ஆனா என் கிட்ட மட்டும் வராத”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அவள் சொன்னதை கேட்டு உல்லாசமாக நகைத்தவன் “ஏய், செல்ல குட்டி மாமா மேல அம்புட்டு லவ்வா டீ? விட்டா நீயே என்னை ரேப் பண்ணிருவன்னு தான உனக்கு பயம்?”, என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம் விளக்கெண்ணெய், தேவை இல்லாம பேசுனா கொன்றுவேன்”

 

“உண்மையை தான் உளறிட்டியே? அப்புறம் ஏண்டி நடிக்கிற? வேதா செல்லம் இன்னும் ஒரு நாலு மாசம் தான் டீ. அதுக்கப்புறம் கல்யாணம் முடிஞ்சிரும். நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வச்சிக்கலாம் என்ன?”

 

“என்னது கல்யாணமா? ஹலோ பாஸ், உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு எவன் சொன்னான்? தேவை இல்லாம எதுவும் பேசாம இருந்தா இங்க இரு. இல்லைன்னா போய்கிட்டே இரு. எனக்கு தலை வலிக்குது. நான் தூங்க போறேன்”, என்று சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டாள்.

 

“சரி நான் எங்க தூங்க?”

 

“லூசா டா நீ? இவ்வளவு பெரிய கட்டில் தான் இருக்கே? அப்புறம் லூசு மாதிரி கேள்வி கேக்குற?”

 

“ஹ்ம்ம் லூசா? ஏன் கேக்க மாட்ட? நீ எப்ப எப்படி பேசுவேன்னு யாருக்கு தெரியும்? அந்நியன் மாதிரி நடந்துக்குற? எதுக்கு டா என் கட்டில்ல படுக்கன்னு கேட்டா என்ன செய்றது? சரி சரி முறைக்காத. தூங்கு தூங்கு”, என்று சொல்லி விட்டு அவளருகே படுத்து விட்டான்.

 

ஆனால் அவன் படுத்து சிறிது நேரத்திலே அவன் கைகளுக்குள் தன்னை நுழைத்து அவன் நெஞ்சில் முகம் புதைந்து படுத்து கொண்டாள் வேதா. ரிஷியின் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.

 

பூமாலை என தன் கைகளில் இருந்தவளை அப்படியே இறுக்கி அணைத்து உச்சி முகர்ந்தவன் “இங்க ஒரு மானஸ்தி இருந்தா வேதா, நீ அவளை பாத்தியா?”, என்று கேட்டான்.

 

அவன் முதுகில் கைகளை படர விட்டிருந்த வேதா அவன் இடுப்பில் கிள்ளி வைத்தாள்.

 

“ஏய், லூசா டீ? இப்படி பண்ற? காச்சல் கொஞ்சம் தான் குறைஞ்சிருக்கு. நான் காச்சல் காரினு பாவம் பாத்தா நீ கிள்ளி விளையாடுற?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ரிஷி.

 

அவனுடன் மேலும் ஒன்றியவள் “உன்னை யாரு என்னை காச்சல் காரின்னு பாக்க சொன்னது?”, என்று கேட்டாள்.அவள் குரல் குலைந்தது.

 

“ஓய், அப்ப உடம்பு சரி இல்லைன்னு பாவம் பாக்க வேண்டாமா?”, என்று கேட்டவனின் கைகள் அவள் இடையை தன்னுடன் சேர்த்து இறுக்கியது.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement