Advertisement

அத்தியாயம் 12

 

நீ வெளியிடும்

மூச்சுகாற்று என்னை

தொடும் தருணம்

வருமென்றால்

மறுபடியும் உயிர்த்தெழுந்து

காதல் செய்வேன் அன்பே!!!!

 

“இப்ப எதுக்கு டி முறைக்கிற?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ரிஷி.

 

“ஏன், அது உனக்கு தெரியாதோ? பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு”, என்று கடுப்புடன் சொன்னாள் வேதா. அவன் பார்வையில் மயங்கும் மனதை கட்டு படுத்த தெரியாமல் வந்தது அந்த கடுப்பு.

 

“ஏன், நான் உன்னை பாக்க கூடாதா?”, என்று புன்னகையுடன் கேட்டான் ரிஷி.

 

“ஆமா”

 

“ஏன்?”

 

“பிடிக்கலை”

 

“அப்படியா?”, என்று கேட்டு கொண்டே அவளை நெருங்கினான் ரிஷி.

 

“இப்ப எதுக்கு கிட்ட வர? வழி அந்த பக்கம்”, என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் வேதா.

 

“அது எனக்கு தெரியும். ஆனா நான் உன்னை பாக்குறது உனக்கு பிடிக்குதா பிடிக்கலையானு உனக்கு புரிய வைக்கணுமே”

 

“ரிஷி வேண்டாம் டா. கிட்ட வராத. உன் மேல நான் கோபமா இருக்கேன்”

 

“அதையும் பாக்கலாமே”, என்று சொல்லி கொண்டே கிட்ட வந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

அவன் அருகாமையை தாங்க முடியாமல் கண்களை இறுக்கி மூடி கொண்டாள் வேதா.

 

“சின்ன வயசுல இருந்து என் கூட இருந்தும் என்னை நீ புரிஞ்சிக்கலையா?”, என்று ரிஷி கேட்ட போதே தன் தவறை உணர்ந்து விட்டாள் வேதா. ஆனால் சும்மா கோபம் இருப்பது போல நடித்தாள். அவன் அருகில் வந்ததும் நடிப்பு என்ன? அனைத்துமே அவளுக்கு மறந்து போனது.

 

அதை அவனும் உணர்ந்து கொண்டு தான் அவளை நெருங்கினான். ஆனாலும் அவள் இன்னும் யோசிக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். அவசரத்தில் எல்லா விசயமும் செய்து விட்டு வருந்துவது தான் வேதா குணம்.

 

இப்போது அவள் கொடுத்த மன்னிப்பும் முழுமனதாக இருக்க வேண்டும். அது அவசரத்தில் வந்ததாக இருக்க கூடாது.

 

நட்பு என்பது வேறு. காதல் என்பது வேறு. நட்புடன் இருக்கும் போது தெரியாத குறைகள் எல்லாம் காதல் என்று வந்தவுடன் தெரியலாம். அதனால் அவள் இன்னும் கொஞ்சம் யோசிப்பது சரியாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.

 

மனதில் இப்படி எல்லாம் நினைத்தாலும் கண் முன்னே கண்களை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனுக்குள்ளே பல விதமான எண்ணங்களை ஏற்படுத்தியது.

 

அவளை அப்படியே அள்ளி கொள்ள மனம் பரபரத்தாலும் தன்னை சமாளித்து கொண்டவன் அவள் உதட்டை நோக்கி குனியாமல் அவள் காதை நோக்கி குனிந்தான்.

 

“நான் என்னோட பிரண்டா நினைச்சு தான் உன்னை பாத்தேன். நீ தப்பா நினைச்சா நான் என்ன செய்றது?”, என்று கிசுக்கிசுப்பான குரலில் அவன் சொன்னதும் படக்கென்று கண்களை திறந்தவள் அவனை சரமாறியாக அடிக்க ஆரம்பித்தாள்.

 

“ஏய் அடிக்காத டி, நீ கேட்டதுக்கு தான பதில் சொன்னேன்? பிரண்டா உன்னை பாக்குறது தப்பு இல்லை தான? அது உனக்கு பிடிக்கவும் செய்யும். அதை தான் சொன்னேன்”, என்று சமாளித்தான்.

 

“போடா பண்ணி”, என்று திட்டியவள் அவனை முறைத்தாள்.

 

“இப்ப எதுக்கு திட்டுற? என்கிட்ட இருந்து வேற எதையாவது எதிர்பாத்தியா?அது கிடைக்கலைன்னு கோபம் வருதோ?”, என்று நக்கலாக கேட்டான் ரிஷி.

 

அது தான் உண்மை. ஆனால் அதை அவனிடம் ஒப்புக்கொள்ளவா முடியும்? சும்மா முறைப்பது போல அவன் கவனத்தை திசை திருப்பினாள் வேதா.

 

அவனும் சீண்டுவதை விட்டு விட்டு சாதாரணமாக “சரி வேதா, நான் கிளம்புறேன். நாளைக்கு பாப்போம்”, என்றான்.

 

“ஹ்ம் சிம் எல்லாம் இனி வாங்கிட்டு இருக்க வேண்டாம். என்கிட்ட இன்னோன்னு  இருக்கு. அதையே உன் மொபைல்ல போட்டுக்கோ”

 

“வாவ் சூப்பர் டி, சரி உன் நம்பரையும் அப்படியே தந்துரு”  

 

“ஹ்ம் நான் மிஸ்ட் கால் கொடுக்குறேன். பாத்து போ. போய்ட்டு போன் பண்ணு”, என்று சொல்லி விட்டு சிம்மையும் எடுத்து கொடுத்தாள்.

 

“நீ நம்பர் அனுப்பினா தான் டி என்னால உனக்கு ஹாஸ்டல் போய்ட்டேன்னு போன் பண்ண முடியும். அதனால இப்ப நீ தான் எனக்கு பண்ணனும். ஓகே செல்லம் பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் அவனை பற்றியே யோசித்து கொண்டே படுக்கையில் படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

 

தன்னுடைய அறைக்கு சென்று போனில்  சிம்மை போட்ட ரிஷியோ அவளுடைய போனுக்காக  காத்திருந்தான்.

 

“எருமை நம்பரை தந்திருந்தா நானே பண்ணிருப்பேன்ல? தூங்கு மூஞ்சி தூங்கிருக்கும்”, என்று திட்டி கொண்டே தன் வேலைகள் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தான் ரிஷி.

 

அவளோ வெகு நாள்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்.

 

இரவு ஏழு மணி போல் எழுந்த வேதாவுக்கு அனைத்தும் கனவு போல இருந்தது. சந்தோசமான மனதுடன் போனை எடுத்தவள் அவனை அழைத்தாள்.

 

“ஏய், தூங்கு மூஞ்சி. இப்ப தான் எந்திச்சியா? விளக்கு வைக்கிற நேரத்துல தூங்குறதுக்கு, அத்தை இங்க இருந்துருக்கணும். நீ தொலைஞ்சிருப்ப”, என்று சிரித்தான் ரிஷி.

 

“ஏண்டா இந்த கொலைவெறி? இங்க இருக்குற வரை தான் சுதந்திரமா இருக்கலாம். என்னனு தெரியல நல்ல தூங்கிட்டேன். நீ ரூம் போய்ட்டியா?”

 

“ஹ்ம் ஆமா டி, அப்பவே வந்துட்டேன்”

 

“சரி அங்க என்ன சாப்பாடு?”

 

“என்னன்னு பாக்கல டி. இனி தான் சாப்பிடணும். இங்க ரூமுக்கே சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. தேவையானப்ப மைக்ரோ அவன்ல சூடு பண்ணி சாப்பிட வேண்டியது தான்”

 

“ரூம்ல மைக்ரோ அவன் இருக்கா?”

 

“ஹ்ம் இருக்கு டி. எல்லா வசதியும்  இருக்கு. ஆனா ஃபீஸ் தான் ஜாஸ்தி”

 

“இங்க உள்ளவங்களுக்கு, அது கம்மியா தான் டா  தெரியும். சரி பணம் வச்சிருக்கியா? வேணுமா?”

 

“அதெல்லாம் வேண்டாம் டி. தேவையானப்ப வாங்கிக்கிறேன். ஆனா ஊரு சுத்த போனா நீ தான் செலவு பண்ணனும்”

 

“என் பர்ஸை காலி பண்ணலைன்னா உனக்கு தூக்கம் வராதே”

 

“ஹா ஹா, நீ சம்பாதிக்கிறதே செலவு பண்ண தான? நாளைக்கு வெளிய போலாமா?”

 

“ஹ்ம்ம் போலாம். கிளாஸ் முடிஞ்ச அப்புறம் உனக்கு கால் பண்றேன்”

 

“சரிங்க டாக்டரே. அப்புறம்  இந்த மூணு மாசமா என் தொல்லை இல்லாம சந்தோசமா இருந்தியா?”

 

“இந்த கேள்விக்கு விடை என்ன தெரியுமா? இத்தனை நாள் நீ என்ன மன நிலைல இருந்தியோ அதே மன நிலையில் தான் டி  நானும் இருந்தேன்”

 

“ஆஹான், அப்படியா?”

 

“ஆமா டி”

 

“நான் ரொம்ப சந்தோசமா இருந்தேனே. அப்ப நீயும் அப்படி தான இருந்துருக்க?”

 

“நீ சந்தோசமா இருக்கிறதை தான் பாத்தேனே? ஒழுங்கா தூங்காம சாப்பிடாம மெலிஞ்சு போய், என் வேதா மாதிரி இல்லாம மாறி போய் இருக்குறதுலே தெரியுது உன்னோட சந்தோசம்”

 

“வெவ்வ வெவ்வ போடா”

 

“ஹா ஹா,  இன்னைக்கு தான் வந்துருக்கேன். போக சொல்ற பாத்தியா?”

 

“நக்கலா? எனக்கு சிரிப்பே வரல”

 

“அப்பாடி எனக்கும் அது தான் வேணும். நீ கொடூரமா சிரிக்கிறதை எவன் பாக்குறது?”

 

“ரிஷி, நான் சிரிக்கிறது கேவலமா இருக்கா?”, என்று சீரியஸான குரலில் கேட்டாள் வேதா.

 

“அடியேய், இதுக்கு நான் பதில் சொல்லுவேன். நீ பிரண்டு அது இதுன்னு வெறுப்பேத்துவ. எனக்கு தேவையா?”

 

“அப்படி என்ன சொல்ல போற ரிஷி? சிரிப்பை பத்தி தான கேட்டேன்?”, என்று குழப்பமாக கேட்டாள் வேதா.

 

“நீ சிரிப்பை பத்தி தான் கேட்ட. ஆனா என் கண் உன் சிரிப்புல இருந்து உன் உதட்டுக்கு போகும் உதட்டுல இருந்து கண்ணுக்கு போகும். கண்ணுல இருந்து முகம் புல்லா போகும். அப்புறம் கழுத்து…….”

 

“டேய், வாயை மூடு. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நாம  பிரண்ட்ஸ். அதனால தேவை இல்லாம பேசாத”

 

“நல்லதா போச்சு வேதா, பிரண்ட் ன்னு  ஞாபக படுத்திட்ட? அடிக்கடி பிரண்ட் பிரண்ட்ன்னு சொல்லிட்டே இரு சரியா”, என்று சொல்லி சிரித்தான் ரிஷி.

 

“உன்னை கொன்னுருவேன் டா பண்ணி”

 

“ஐயையோ, வேண்டாம் மா. நான் கோர்ஸ் முடிக்காம செத்து போனேன்னு வை எங்க அப்பா நான் போனதை விட பணம் போனதை நினைச்சு நொந்துருவாரு”

 

“எருமை, மாமா அப்படி எல்லாம் இல்லை. இரு இன்னைக்கு மாமா கிட்ட  சொல்லி கொடுக்குறேன்”

 

“வேண்டாம் டி செல்லம், அப்படி எல்லாம் செஞ்சிறாத. அவர் அட்வைஸ்னு பேர்ல என்னை சாகடிச்சிருவாரு”

 

“அந்த பயம் இருக்கணும் . சரி டா, நான் நாளைக்கு எங்க போகலாம்னு யோசிச்சுட்டு சொல்றேன்”

 

“ஹ்ம்ம் சரி, அப்படியே கார் புக் பன்னிரு. ட்ரைவர் தான் சுத்தி காட்டணும்”

 

“ஹ்ம்ம் சரி டா, ஹாஸ்டல்ல இத்தனை மணிக்குள்ள போகணும்னு எதாவது இருக்கா?”

 

“இது என்ன நம்ம ஊரா  அப்படி எல்லாம் இருக்க? இன்பார்ம்  பண்ணா போதும். ஏன் கேட்ட? உன் ரூம்லே தங்கிக்க சொல்றியா?”

 

“நீ அதுலே இரு. ஒரே ரூம்ல இருந்தாலும் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. சரி வெட்டி பேச்சு வேண்டாம். சாப்பிட்டு தூங்கு”

 

“ஹ்ம்ம் சரி டி, வீட்டுக்கு போன் பண்ணி பேசு, எல்லாரும் உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க”

 

“ஹ்ம்ம் சரி டா, பை, குட் நைட்”, என்று சொல்லி போனை வைத்தாள் வேதா.

 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. படுக்கையில் இருந்து எழுந்தவன் மணியை பார்த்தான்.  பின் போனை எடுத்து அவளுக்கு “குட் மார்னிங் செல்ல குட்டி”, என்று ஒரு மெஸேஜ் அனுப்பி விட்டு தன்னுடைய வேலையை ஆரம்பித்தான்.

 

மொபைல் சத்தத்தில் கண் விழித்த வேதா அவனுடைய மெஸேஜ் கண்டதும் அந்த நாளையே அழகானதாக உணர்ந்தாள்.

 

அவள் உதடுகளில் புன்னகை வந்து தானாக ஒட்டி கொண்டது.

 

“உனக்கும் இன்றைய நாள் அழகாக இருக்கும். ஆனால் வேதா என்ற பேயால் நீ அவஸ்தை படும் நாள்”, என்று ராசி பலன் போல் டைப் செய்து ஒரு மெஸேஜ் அனுப்பி விட்டு தன்னுடைய வேலையை துவங்கினாள்.

 

குளித்து முடிந்து வந்த ரிஷியோ அவளுடைய மெஸேஜ் பார்த்து, “நீ என்னை கொடுமை செய்தாலும் கூட எனக்கு அது நல்ல நாள் தான். ஆனால் நீ இல்லாத வாழ்வு தான்  வெறுமைடி”, என்று எழுதி, “இப்படிக்கு உன்னுடைய தோழன்”, என்று எழுதி அனுப்பினான் ரிஷி.

 

குளித்து முடித்து வந்தவளோ அதை பார்த்து “பாருடா  நான் பிரண்ட்ன்னு சொல்லிட்டேனாம். அதனால சொல்லி காட்டுறான்”, என்று நினைத்து கொண்டு அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

 

போனை ஆன் செய்து காதில் வைத்தவன் “சொல்லு டெவில்”, என்று சிரித்தான்.

 

“நானா டா பேய்? நீ தான் எருமை, காட்டெருமை, தேவாங்கு, மங்கி”, என்று சிரித்து கொண்டே திட்டினாள் வேதா.

 

புன்னகையுடன் அவள் திட்டுகளை வாங்கி கொண்டவன் ஆழ்ந்த குரலில் “வேதா”, என்று அழைத்தான்.

 

அவன் குரலில் உருகியவள் எப்பவும் போல் மனதுக்குள் “அழகன் டா”, என்று சொல்லி கொண்டு “சொல்லு பக்கி”, என்றாள்.

 

“வாழ்க்கைல சந்தோசம் வரும் போகும். ஆனா இன்னைக்கு இந்த நிமிஷம் சந்தோசமா இருக்குறது யாருன்னு கேட்டா அது நான்னு சொல்லுவேன். உன்கிட்ட பேசுற சந்தோசம், நீ என் கிட்ட இருக்கும் போது வரும் ஆத்ம திருப்தி எதிலயுமே வராது டி”

 

நெகிந்த மனதை அடக்கி கொண்டு “காலைலே மொக்கை போடுற? உனக்கு இன்னைக்கு அடி கன்பார்ம். காலேஜ் கிளம்பலையா?”, என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.

 

“காலேஜ் ஆரம்பிக்க நாள் இருக்கு டி. ஆனா டீட்டெயில்ஸ் எல்லாம் கேக்கணும். ப்ராக்டிகல்ஸ் எப்ப? காலேஜ் டைம் எப்ப? எதெல்லாம் படிக்கணும்னு யோசிக்கணும்”

 

“படிங்க பாஸ் படிங்க படிச்சிகிட்டே இருங்க”

 

“ஏய் பேசாம நீயும் இந்த யூனிவெர்சிட்டிக்கு வாயேன். நீயும் உன் பீல்டு ல எம். எஸ் பண்ணு டி”

 

“அடேய், நீ நாலு நாள் என்னை பட்னியா வேணா இருக்க சொல்லு. ஆனா படிக்க மட்டும் சொல்லாத. நான் பி. ஈ படிச்சதே உனக்காக தான். அதுவே போதும். எப்படியும் எவனையோ கட்டிக்கிட்டு குடும்ப தலைவியா தான் ஆக போறேன். என் தலை முறையை வழி நடத்த படிச்சிருக்கேன். அது போதும். நீயே உன் பேர் பின்னாடி டிகிரியை கூட்டிகிட்டே போ. என்னை ஆள விடு”

 

“எவனையோ கட்டிக்கிட்டு”, என்று அவள் சொல்லியதில் இருந்தே அவள் மனதில் இருந்த கோபம் முழுவதும் மறைய வில்லை என்று உணர்ந்த ரிஷி தன் நினைவை ஒதுக்கி வைத்து விட்டு “படிப்புன்னா  ஓடுவியே? சரி ஆபிஸ் போகலையா?”, என்று கேட்டான்.

 

“போகணும் டா. சரி நீ ஈவினிங் எப்ப வர?”

 

“தெரில டி. காலேஜ் போய் சூழ்நிலையை பாத்துட்டு தான் சொல்லணும்”

 

“சரி டா. மூணு மணிக்கு முன்னாடி வந்தா ஆபிஸ் வந்துரு. அங்க இருந்து போகலாம். மூணு மணிக்கு அப்புறம் வந்தா ஹாஸ்டல் வந்துரு சரியா?”

 

“ஓகே டி, கிளம்பும் போது கால் பண்றேன். பை”

 

“பை எருமை ஆல் தி பெஸ்ட்”, என்று சொல்லி போனை வைத்த வேதா தன்னுடைய ஆபிஸ்க்கு கிளம்ப ஆரம்பித்தாள்.

 

காதல் உயிர்த்தெழும்…..

 

Advertisement