Advertisement

 

 

திகைத்து போய் விஷ்ணுவை பார்த்தாள் சத்யா. அவனோ “நான் இனியும் சாப்பாடை திருட்டு தனமா உனக்கு கொடுக்கணுமா?”, என்று எண்ணி கொண்டு “அப்படி எல்லாம் வேண்டாம் மா. அவளுக்கு பிடிச்ச சாப்பாடை அவ சாப்பிடட்டும். நீங்க கைட் மட்டும் பண்ணுங்க. டாக்டரே என்ன சாப்பிடணும் சாப்பிட கூடாதுனு சொல்லிருக்காங்க”, என்றான்.

 

“டாக்டர்”, என்று சொன்னதால் சமாதானமானாள் புவனா. சத்யா அவனை உயிரை உருகும் காதல் பார்வை பார்த்தாள். அடுத்த நிமிடம் “அவள் ரெஸ்ட் எடுக்கணும் மா”, என்று அவளை தள்ளி கொண்டு அவளை அறைக்கு கூட்டி சென்றவன் அவளை ஓய்வெடுக்க தான் விட்டிருப்பானா?

 

“அத்தான் மெதுவா உள்ள பாப்பா இருக்கு”, என்று அவன் வேகத்துக்கு தடை போட்டாள் சத்யா.

 

“அப்பாவால்  பிள்ளைக்கு எதுவும் ஆகாது டி. நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? நான் இத்தனை வருஷம் கிடைக்காத மொத்த சந்தோஷத்தையும் நீ என் வாழ்க்கைல வந்த பிறகு தான் அனுபவிக்கிறேன். இப்பவும் உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு விலகுறேன்”, என்று சொன்ன அவனை இறுக்கி அனைத்தவள் “என்னை நீங்க கொன்னா கூட நான் சந்தோசமா சாவேன்”, என்று சொல்லி அவன் காதல் வேட்கையை அதிக படுத்தினாள்.

 

“இப்படி எல்லாம் ஏத்தி விட்டா நீ தான் அனுபவிக்கனும்”, என்று சொன்னவன் அவள் உடல் நிலை கருதி வேகம் குறைத்தான்.

 

அவளுக்கு ஐந்து மாதம் இருக்கும் போதே அவளை காண ஊரில் இருந்து அனைவரும் வந்து விட்டார்கள். விஷ்ணு டிக்கட் போட்டான் என்றால் அவர்களை பொறுப்பாக அருள் அழைத்து வந்தான்.

 

அவனுக்கும் அவள் ஆளை காண வேண்டுமே.  அவர்களை வா என்று ஒரு வார்த்தை கூட சொல்லாத புவனாவும் பிரதாப்பும் அவர்களை போ என்றும் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. தேன்மொழி வர முடியாததால் செந்திலும் இங்கு வரவில்லை.

 

டெல்லி வந்ததும் யாரிடமும் சொல்லாமல் அருள் மாயமாய் மறைந்தது வேறு கதை .

 

இரண்டு வாரம் அங்கு இருந்தார்கள். வடிவு மகளுக்கு பிடித்ததை செய்து கொடுத்தாள். பிரதாப் மற்றும் புவனா ஒதுங்கியே இருந்தார்கள்.

 

அன்னலட்சுமியும் அவர்களிடம் எதுவும் பேச வில்லை. அதற்கு மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சி தான் காரணம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பணத்துக்காக தான் அவள் குழந்தை பெற்று கொடுத்தது.

 

இப்போது அதை சொந்தம் கொண்டாடுவது தவறென்று அவளுக்கும் பட்டது. அதனால் தர்மசங்கடத்துடன் ஒதுங்கியே இருந்தாள்.

 

மனைவியை பூ போல் தாங்கும் விஷ்ணுவை கண்டு “அவளை பாத்துக்க நாங்க யாருமே வேண்டாம். அவ புருஷனே பாத்துக்குவான்”, என்று சொல்லி விட்டு அவர்களும் ஊருக்கு சென்று விட்டார்கள்.

 

அடுத்த இரண்டு மாதத்தில் அவளை ஊருக்கு அழைத்து சென்றான் விஷ்ணு அவள் வேண்டுகோளின் படி. அவளை விட்டு விட்டு வர முடியாமல் அவன் அங்கேயே இருந்து வழக்கம் போல ரம்யாவையே ஆபிஸை பார்த்து கொள்ள சொன்னது தனி கதை.

 

அவளின் புது கணவனும் காதலனுமான அலெக்ஸ் விஷ்ணுவை மனதிற்குள் மட்டுமல்லாமல் நேரடியாகவே திட்டி தீர்த்தான். “நீ என்ன சொன்னாலும் பரவால்ல. நீ ஆபிஸ்க்கு வந்து கூட உன் பொண்டாட்டியை கொஞ்சிக்கோ. யாரும் கேக்க மாட்டாங்க. ஆனா அவளுக்கு மட்டும் லீவ் கிடையாது. நான் வந்த அப்புறம் எத்தனை மாசம் வேணாலும் உன் பொண்டாட்டி லீவ் எடுத்துக்கட்டும். பாரின்க்கு நானே ஹனிமூன் ரெண்டு பேரையும் அனுப்பி வைக்கிறேன்”, என்று சொல்லி மேலும் வெறுப்பேத்தினான் விஷ்ணு.

 

 வேறு வழி இல்லாமல் ஆபிஸ்க்கு வந்து அவன் காதல் பார்வை வீசும் போது ரம்யா தான் மேலும் தவித்து போனாள்.

 

சில நாட்கள் கழித்து டாக்டர் சொன்ன நாளுக்கு முன்பாகவே அவளை மதுரையில் உள்ள பெரிய மருத்துவ மனையில் சேர்த்தான் விஷ்ணு. ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் சத்யா.

  

“உள்ள வந்து சத்யாவை பாக்கலாமா சிஸ்டர்?”, என்று கேட்டான் விஷ்ணு.

 

அவள் அனுமதி  கொடுத்ததும் மனைவியை காண சென்றான்.

 

தளர்வாக படுத்திருந்த மனைவியை பார்த்தவனுக்கு அந்த நேரத்திலும் அவள் அழகாக இருப்பது போல இருந்தது. எந்த ஆபரணமும் இல்லாமல் ஹாஸ்ப்பிட்டல் உடையிலும் தேவதையாக தெரிந்தாள்.

 

சோர்வாக இருந்த அவள் கண்கள் அவனை கண்டதும் மின்னியது.

 

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் வாசலை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் உதடுகளை சிறை செய்தான். அந்த முத்தம் அவளுக்கு பெரிய பலத்தை கொடுத்தது.

 

அன்னம் கையில் இருந்த குழந்தையை தன் கையில் வாங்கி கொண்டவன் மனைவியிடம் காண்பித்து பூரித்து போனான்.

 

அப்பா என்று தெரிந்தது போல் அவன் முகத்தை கண்டு சிரித்தது குழந்தை. அதில் மெய்மறந்து போனான் விஷ்ணு.

 

இரண்டு நாளில் வீட்டுக்கு சென்றதும் புவனாவும் பிரதாப்பும் வேறு வழி இல்லாமல் குழந்தையை காண இங்கு வந்தார்கள். செந்தில் தான் அவர்களை அழைக்க கார் எடுத்து கொண்டு சென்றான்.

 

வீட்டுக்கு வந்ததும் அவர்களை வாய் நிறைய புன்னகையோடு வரவேற்றார்கள் அன்னலட்சுமியும் ஆறுமுகமும். அவர்கள் டெல்லி வந்த போது தங்கள் நடந்து கொண்ட முறை நினைவில் ஆடி ஒரு குற்ற உணர்வை தந்தது.

 

குழந்தையை கண்டு அவர்களுக்கும் பூரிப்பு தான். உள்ளே சத்யா அருகில் அமர்ந்து புவனாவும் பிரதாப்பும் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கும் போது அங்கு எதையோ எடுக்க வந்த தேன்மொழி அவர்களை தொல்லை செய்யாமல் திரும்பி விட எண்ணினாள்.

 

ஆனால் அவள் கையில் இருந்த சங்கமித்ரா சிணுங்கி தங்கள் இருப்பை காட்டி கொடுத்து விட்டாள். குழந்தையின் சத்தத்தில் திரும்பிய புவனாவும் பிரதாப்பும் தேன்மொழியை கண்டு அதிர்ந்து விட்டார்கள். ஒரு சங்கடமான பார்வையை அவர்களை நோக்கி வீசி விட்டு அங்கிருந்து வந்து விட்டாள் தேன்மொழி.

 

“அவளும் உங்க பொண்ணு தான் மாமா ”, என்று எல்லா உண்மையையும் சொன்னாள் சத்யா. அதை கேட்டு அவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது. அதுவும் தேன்மொழியும் அவர்களை “அம்மா, அப்பா”, என்று அழைத்ததும் அவள் குழந்தையை “இதுவும் உங்க பேத்தி தான்”, என்று கொடுத்ததும் அவர்களுக்கு புதிதாக பிறந்தது போல இருந்தது.

 

இரண்டு குழந்தைகளையும் கைகளை அள்ளி கொண்டவர்களுக்கு பணமெல்லாம் கால் தூசி என்ற எண்ணம் வந்தது.

 

“சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு சத்யா. நீங்க எல்லாருமே அங்க வரணும். அது உங்க பையன் வீடு”, என்று ஆறுமுகம் மற்றும் அன்னத்தை பார்த்து சொன்னவர்கள் “இந்த அம்மா அப்பாவை பாக்க வருவா தான மா?”, என்று தேன்மொழியை கேட்கும் போது அவர்கள் கண்கள் கலங்கியது.

 

“கண்டிப்பா  வருவேன். என்னோட அம்மா அப்பா வீட்டுக்கு நான் வராம இருப்பேனா? என் அத்தான் கூட்டிட்டு போகலைன்னா உண்டு இல்லைன்னு ஆக்கிற மாட்டேனா?”, என்று செந்திலையும் வம்பிழுத்தாள்.

 

நாட்கள் அழகாக சென்றது. சத்யாவும் விஷ்ணுவும் சித்தார்த்தை டெல்லிக்கு கூட்டி செல்லும் போது ஆறுமுகம் மற்றும் வடிவையும் அழைத்து சென்று விட்டார்கள்.

 

இப்போது அவர்களை சினேகமாக ஏற்று கொண்டார்கள் புவனாவும் பிரதாப்பும்.

 

“உங்களுக்கு இங்க இருக்க தர்ம சங்கடமா இருக்காமா? வேற வீடு பாக்கவா?”, என்று கேட்ட விஷ்ணுவிடம் “இல்லை பா. புவனா எங்களை நல்லா பாத்துக்குறா. கொஞ்சம் மனஸ்தாபம் வந்தா கூட நானே உன்கிட்ட சொல்லுவேன். நீ கவலை படாதே”, என்று அன்னலட்சுமி சொன்னதும் அவனும் நிம்மதியாக உணர்ந்தான்.

 

அதன் பின் விஷ்ணுவை அழைத்து அருளின் காதல் பற்றி அலெக்சிடம் பேச சொன்னாள் அன்னலட்சுமி. அதன் பின் அவர்கள் திருமணமும் உறுதி செய்ய பட்டது.

 

கல்யாணம் முடிந்து ஜான்சி சென்னைக்கு வேலை செய்வது என்று முடிவானது.சித்தார்த்துக்கு ஒரு வருட பிறந்த நாளை கொண்டாடி முடித்ததும் விஷ்ணுவை அழைத்த பிரதாப் “எனக்கு ரெஸ்ட் வேணும் டா. நான் என் பேரனை ரொம்ப மிஸ் பண்றேன். ப்ளீஸ் எல்லாத்தையும் நீ பாத்துக்கோ”, என்றார்.

 

“நானா?”, என்று விழி பிதுங்கியவனை காப்பது போல அங்கு காட்சி அளித்தாள் சத்யா.

 

“மாமா நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க? அவர் அவரோட பீல்டுல வளர்ந்துட்டு வரார். அவர் வளரட்டும். அவருக்கும் அது தான் பிடிச்சிருக்கு. ப்ளீஸ்” என்றாள்.

 

“சரி உன்னோட வீட்டுக்காரனை நான் தொல்லை செய்ய கூடாதுன்னா எல்லா வேலையையும் நீ பாத்துக்கோ.  நீ சொத்து மேல ஆசை பட மாட்ட தெரியும். அதான் உங்க அத்தை உன்னை பத்தி பெருமை பேசியே என்னை கொல்லுறாளே. ஆனாலும் எல்லாத்தையும் உன் பேர்ல எழுதி வைக்கிறேன். நீ பொறுப்பை கைல எடுத்துக்கோ சத்யா”, என்று குண்டை தூக்கி போட்டார்.

 

பாவமாக அவனை பார்த்து விழித்தாள் சத்யா. “அவ செய்வா பா. நீங்க சொத்தை எல்லாம் மாத்த வேண்டாம். உங்க பேர்லே இருக்கட்டும். உங்களுக்கு அப்புறம் சித்தார்த்துக்கும் மித்ராக்கும் அந்த சொத்து போகும். சத்யா மேனேஜ்மேண்ட் பாத்துக்குவா”, என்று சொன்னதும் எல்லாரும் நிம்மதியானார்கள்.

 

மகனின் பொறுப்பான பதிலை கேட்டு அன்னலட்சுமிக்கு பெருமையாக இருந்தது.

 

“நான் சித்துவை பாக்கணுமே” என்று சத்யா சமாளிக்க பார்த்தாலும் “அவனை பாத்துக்க நாங்க நாலு பேர் இருக்கோம்”, என்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்தார்கள்.

 

பார்த்தவுடன் அவன் மேல் மையல் கொண்டு அவனுடைய பிரமாண்டம் அவனை நெருங்க விடாமல் செய்த போது மனதில் பற்றிய காதல் தீயை அணைக்க முடியாமல் தன்னையே அவனுக்கு கொடுத்து, காதலை அவனுக்கு உணர்த்தியவள் எந்த சிக்கலையும் அவனுக்கு கொடுக்காமல் இயல்பாக அவன் மனைவியானவள், இப்போது அவன் வாழ்க்கை லட்சியத்துக்காக அவனுடைய பொறுப்புகளை சுமக்க மாட்டாளா என்ன?

 

இரவு அவன் நெஞ்சில் மஞ்சம் கொண்டிருந்த சத்யா முழு காதலுடன் அவனை பார்த்து புன்னகைத்தாள். மனம் முழுவதும் சந்தோசம் மற்றும் ததும்பி கொண்டிருந்த விஷ்ணுவும் அவளை பார்த்து புன்னகைத்தான்.

 

“இவ காதல் கிடைக்க நான் என்ன தவம் செஞ்சேனோ?”, என்று எண்ணி கொண்டவனின் கைகள் அவளை இறுக்கி கொண்டது.

 

அவளும் அவனுக்குள்ளுக்கே புதைந்து போனாள். ஆதரவாக அனைத்திருந்தவன் கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட ஆரம்பிக்க அவள் தேகம் அவன் தொடுகையில் உருகியது.

 

காதல் தீ இருவருக்குள்ளும் பற்றியது!!!!!!!!!

 

முற்றும்.

 

கதை முடிந்தது பிரண்ட்ஸ். இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்ததா?

 

Advertisement