Advertisement

அத்தியாயம் 19

 

வெட்ட வெளி

புல்வெளியில் உன்னுடன்

கை கோர்த்து

உலாவும் தருணங்களில்

பற்றும் காதல் தீ!!!!!

 

“ஏய் எதுக்கு இப்படி ஷாக் ஆகுற? என்னைக்கு இருந்தாலும் இது நடக்கும்னு நமக்கு தெரியும் தான? என்னை லவ் பண்ண பொண்ணு எனக்கு கிடைச்சிட்டா. அப்ப நீ விலகணும் தான?”

 

“என்னது கிடைச்சிட்டாளா?”

 

“ஆமா கிடைச்சிட்டா. பாத்து பேசிட்டோம். எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான். அதானே எப்படி என்னை பத்தி அவளுக்கு தெரியும்னு யோசிச்சேன். கூடவே இருந்து தான் என்னை லவ் பண்ணிருக்கா. நாளைக்கு உன்கிட்ட அவளை காட்டுறேன். ஆமா நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற? ஓ வீட்டை விட்டு போகணும்னு பீல் பன்றியா? அப்படி எல்லாம் உன்னை விட்டுருவேனா? நம்ம ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கே, அந்த பங்களாவை உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். டாக்குமெண்ட் வீட்ல இருக்கு. நீ ஹாஸ்ப்பிட்டல்லே ஒர்க் பண்ணு. மேனேஜ்மேண்ட் பாத்துக்கிட்டாலும் சந்தோசம் தான்”, என்று அவள் தலையில் இடியை தூக்கி போட்டான். கண்களில் நீர் வர இருந்தாள் சத்யா.

 

“என் லவ்வர் கிடைச்சிட்டான்னு ஆனந்த கண்ணீரா சத்யா? ப்ச் எனக்கும் உன்னை நினைச்சா கவலையா தான் இருக்கு. உன்னோட மனசுலயும் சலனத்தை உண்டு பண்ணிட்டேன்ல? உன் மனசுல ஆசையை உண்டு பண்ணிட்டேன். ஆனா மனசுல நீ இருந்தாலும் அவ கூட வாழ்ந்துட்டேனே சத்யா? என்ன பண்ண? பேசாம நான் உனக்கு மாப்பிள்ளை பாக்கவா? நான் மட்டும் என் தேவதை கூட வாழும் போது நீ தனியா இருந்தா நல்லா இருக்குமா?”

 

“போதும் நிறுத்துங்க. பேச வேண்டியதை பேசிட்டீங்கல்ல? போங்க இங்க இருந்து”, என்று கத்தியே விட்டாள்.

 

“இப்ப கூட நான் தான் அந்த பொண்ணுன்னு சொல்றாளா பாரு”, என்று எண்ணி கொண்டு “சரி சத்யா கீழ போறேன் . நீ வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு சுற்றி இருந்த இருட்டு சூனியமாக தெரிந்தது. அதிர்ச்சியில் அவள் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

 

“யாரோ ஒரு பொண்ணு நான் தான்னு வந்துருக்காளே. விஷ்ணுவும் நம்பிட்டானே. இப்ப நான் தான் அவன்னு எப்படி சொல்ல முடியும்? நான் தான்னு விளக்கம் கொடுத்து அவர் நம்பலைன்னா? அதை நிரூபிக்கிற நிலைமை வந்தா என்னோட காதலுக்கு அது அசிங்கமாச்சே. கடவுளே தப்பு பண்ணிட்டேனா? இப்ப நான் என்ன செய்யணும்? அவரை எப்படி விட்டு கொடுக்க முடியும்? அன்னைக்கு நைட் என்கூட தான் இருந்தீங்கன்னு நானே போய் எப்படி சொல்ல முடியும்?”, என்று தேம்பி தேம்பி அழுதாள்.

 

கீழே போன விஷ்ணுவுக்கு சிரிப்பாக வந்தது. அவள் ஏமாற்றியதுக்கு அவளை தவிக்க விட்டது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 

உடனே மேலே வந்தவன் “நேரம் ஆச்சு, லாயரை பாக்க போகணும் வா,” என்றான்.

 

கண்ணீரை மறைத்தவள் “எனக்கு வீட்டுக்கு போகணும்”, என்றாள்.

 

“சரி நாளைக்கு லாயரை பாப்போம். வீட்டுக்கு போகலாம்”, என்று அவன் சொன்னதும் அவனுடன் வந்தவள் காரில் ஏறி கொண்டாள்.

 

வீடு வரும் வரை இருவரும் பேச வில்லை. வீட்டுக்கு வந்ததும் அறைக்குள் செல்லாமல் மொட்டை மாடிக்கு வந்து அமர்ந்து விட்டாள் சத்யா.

 

அறைக்குள் வந்தவனோ நேராக குளிக்க சென்றான். வெளியே வந்தவனிடம் “பாவம் டா அவ. அன்னைக்கு யாருன்னு தெரியாத பொண்ணை நினைச்சு நீ எப்படி துடிச்சு? இப்ப சத்யாவும் இப்படி தான துடிப்பா? அவளுக்கு வலி கொடுக்காத”, என்று மனசாட்சி சொன்னதும் மேலே சென்றான்.

 

அங்கே இருளில் கால்களை கட்டி கொண்டு முகம் புதைத்து இருந்த அவள் தோற்றம் கண்டு அவனுக்கு உருகியே விட்டது.

 

“இவளின் காதல் கிடைக்க என்ன தவம் செஞ்சேன் நான்? அவ கண்ணீர் எனக்கானதல்லவா?”, என்று எண்ணி கொண்டு அவள் அருகில் சென்றவன் அவள் தோளை தொட்டான்.

 

“அவனுடைய சொத்தை விட்டு போக முடியாம அழுறேன்னு ஒரு வார்த்தை சொன்னால் என்னால் தாங்க முடியாது”, என்று நினைத்தவள் தன் கண்ணீரை அவனுக்கு காட்ட கூடாது என்று நினைத்து அவள் நிமிரவே இல்லை.

 

“சத்யா என்னை பாரு”, என்று அழுத்தமாக அழைத்தான் விஷ்ணு.

 

“நாளைக்கு லாயரை பாப்போம். என்னை கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ்”, என்று கண்ணீரை மறைத்த படி பேச முயன்றாள்.

 

“அது எப்படி டி உயிருக்கு உயிரா என்னை விரும்புற என் பொண்டாட்டியை நான் தனியா விடுவேன்?”, என்று விஷ்ணு சொன்னதும் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் புன்னகையை கண்டு குழம்பினாள்.

 

“இவன் இப்ப என்ன சொன்னான்? என் காதுல விழுந்தது உண்மையா?”, என்று சிந்தித்தாள் சத்யா.

 

“என்ன  குண்டு கண்ணை வச்சு முழிக்கிற? நான் வேணும்னு பிளான் பண்ணி, கல்யாணம் பண்ணி, மொத்த காதலையும் என் காலடில கொட்டுற என்னோட முகம் தெரியாத காதலி நீ தான்னு எனக்கு தெரியும்”

 

“அத்தான்”, என்று சொன்னவளின்  கண்கள் விரிந்தன. அவள் அருகே அமர்ந்து அவள் முகத்தை கைகளில் தாங்கியவன் “ஒண்ணுமே சொல்லாம கமுக்கமா இருந்துருக்கல்ல?”, என்று கேட்டு சிரித்தான்.

 

அவளோ அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே இல்லை.

 

“அன்னைக்கு என்ன நடந்தது? நானா தான் உன் கிட்ட வந்தேனா? இப்படி உன்னை கட்டி பிடிச்சேனா? இப்படி உன் கழுத்து வளைவில் முகம் புதைச்சேனா?”, என்று கேட்டு கொண்டே அவன் சொன்னதை செய்தான்.

 

அதிர்ச்சியில் மேலும் விரிந்த அவள் கண்களை பார்த்தவன் அவள் இமைகளில் இதழ்களை பதித்தான். அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் “இப்படி எல்லாம் செஞ்சேனா?”, என்று கேட்டான். மூச்சு விட மறந்து போனாள் சத்யா.

 

அவனோ “இவ்வளவு பண்ணுனேன்னா, உன்னோட உதட்டுலயும் முத்தம் கொடுத்துருப்பேனே”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சிறை செய்தான்.

 

அதிர்ச்சியில் உறைந்தவள் அவன் முத்தத்தில் கரைந்தாள். இத்தனை நாள் அடங்காத ஆசை, அவள் தூண்டி விட்ட தாபம் என்று அனைத்தையும் அந்த முத்தத்தில் கரைத்து கொண்டிருந்தான் விஷ்ணு.

 

முத்தமிட்டே மூச்சு திணற வைத்தவன் மீது சாய்ந்தவள் அவன் முதுகை சுற்றி கைகளை படர விட்டு கொண்டாள். தன் வீடு வந்து சேர்ந்த நிம்மதி அவளிடத்தில்.

 

அதில் மேலும் அவளுடன் இழைந்தவன் அவள் இடையை இறுக்கி பிடித்தான். வெற்றிடையில் பதிந்த கை சிறிது சிறிதாக ஆங்காங்கே அலைந்து அவளுக்கு நடுக்கத்தை கொடுத்தது. அவன் கைகள் அவளை உணர முன்னேறின.

 

சுற்றிலும் இருந்த இருட்டு, மயக்கத்தை தரும் தென்றல், சத்தமில்லாத அமைதி, அவளுடனான தனிமை, அவளுடைய நெகிழ்வு, அவள் தேகத்தின் மென்மை என்று அனைத்தும் அவன் ஆண்மைக்கு தீனி போட அவளை அப்படியே தரையில் சரித்தவன் அவள் மீது பரவி படர்ந்தான்.

 

ஏற்கனவே அவன் தொடுகையில் சிவந்து சிலிர்ப்பவள் இன்று மொத்த காதலையும் தன் மீது காட்டும் அவனிடம் இருந்து விலகி இருப்பாளா என்ன?

 

“என்ன வேணா செய்து கொள்?”, என்று தன்னையே எழுதி கொடுத்தவள் போல் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்.

 

அது மட்டுமல்லாமல் அவனுடைய செய்கையில் மயங்கி கரைந்து அவனுக்குள்ளே காணாமல் போகவும் விளைந்தாள். அவன் கொடுக்கும் சுகமான வலிகளை கூட ஆழ்ந்து அனுபவித்தாள்.

 

உதட்டையே பிச்சு  தின்பவன் போல முத்தத்தை கொடுத்தே அவளை திணறடித்தான் விஷ்ணு. அவனுக்கு குறையாத ஆவல் அவளுக்கும் இருக்கு என்பதை அவள் உதடுகளின் அசைவிலே அவனும் உணர்ந்து கொண்டான்.

 

அது மட்டுமல்லாமல் அவன் முதுகில் உணர்ச்சி வேகத்தில் அழுந்தும் அவள் கைகளின் பாஷை கூட புரிந்து கொண்டான்  விஷ்ணு.

 

மெதுவாக அவளுடைய நெற்றி, கன்னம், மூக்கு, உதடு, கழுத்து என்று முன்னேறிய அவன் உதடுகள் அவள் மார்பில் தஞ்சம் அடைந்தது. மார்பில் முகம் புதைத்தவன் இருவருக்கும் இடையில் இருக்கும் உடை என்னும் தடையை விலக்க நினைத்தான்.

 

அவளோ அவனை மேலும் தனக்குள்ளே புதைத்து விடுவது போல இறுக்கி கொண்டாள். இப்போது விஷ்ணு மூச்சு முட்டி போனான்.

 

அப்போது கரடியாய் அவன் செல்போன் இசை எழுப்பியது. அழகான தருணத்தில் வந்த அழைப்பு அவனை எரிச்சல் கொள்ள வைத்தது.

 

“மிச்சத்தை போன் பேசிட்டு கன்டினியூ பண்றேன்”, என்று சொல்லி அவளை சிவக்க செய்தவன் அவள் மீதிருந்து விலகி, சுவரில் சாய்ந்து அமர்ந்து போனை எடுத்தான்.

 

சத்யாவும் எழுந்து அவன் அருகே அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து அவன் கைகளுக்குள் தன் கையை பிணைத்து கொண்டாள்.

 

அவளை சிரிப்புடன் பார்த்தவன் அன்னலட்சுமியின் அழைப்பை ஏற்றான். மொத்த சந்தோஷத்தையும் குரலில் தேக்கி “அம்மா”, என்று அழைத்தவனை கண்டு உருகிய அன்னலட்சுமி “ராசா தூங்கலையா பா?”, என்றாள்.

 

“இல்லை மா நேரம் ஆகும். அதுவும் இன்னைக்கு தூங்குவேனான்னே டவுட்”,, என்று சொல்லி சத்யாவை பார்த்து கண்ணடித்தான். அவள் முகம் குங்குமமாக சிவந்தது.

 

போனை ஸ்பீக்கரில் போட்டவன் அவள் முக வடிவை விரலால் அளந்தான். அவளோ இறுக்கி கண்களை மூடி கொண்டாள்.

 

“விஷ்ணு கண்ணு தூங்காம எல்லாம் இருக்க கூடாது ராசா. அப்புறம் உடம்பு என்னத்துக்கு ஆகுறது. காலா காலத்துல தூங்கணும். சாப்பிட்டியா ராசா?”

 

“சாப்பிட்டேன் மா. நானும் உங்க மருமகளும் வெளிய போனோம்”

 

“அப்படியா ராசா? சந்தோசமா இருக்கு கண்ணு. பிள்ளை சந்தோசமாமா இருக்காளா?”

 

“ஹ்ம்ம் ஆமா மா. இந்த உலகத்துல சந்தோசமா இருக்குறது யாருனு கேட்டா உங்க மருமகளா தான் இருக்கும். மாடில உக்காந்து அவ கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்”, என்று சொன்ன அவன் விரல்கள்  அவள் கழுத்தில் இருந்து கீழ் நோக்கி கோடிழுத்தது.

 

அவன் கையை இறுக்கி பிடித்து தடுக்க முயன்றாள் சத்யா. அவர்கள் காதல் லீலைகளை அறியாமல் “மனசு விட்டு பேசுனாலே எல்லாம் சரியா போகும். ரொம்ப நேரம் மாடில உக்காந்து பேசாத ராசா. பனி பெய்யும். கீழே ரூம்ல போய் பேசுங்க”, என்றாள் அன்னலட்சுமி.

 

“ஆமா மா நானும் அதை தான் நினைச்சிட்டு இருக்கேன். ரூமுக்கு போய் பேசலாமா சத்யா?”, என்று சிரித்தான் விஷ்ணு.

 

அவளோ ரூமுக்கு போய் என்ன பேசுவான் என்று தெரிந்ததால் சிவந்த முகத்தை அவன் மார்பிலே மறைத்து கொண்டாள்.

 

இவர்களின் காதல் சேட்டையை அறியாமல் “சத்யா கிட்ட போனை கொடு ராசா”, என்றாள் அன்னலட்சுமி.

 

“இதோ கொடுக்குறேன் மா”, என்றவன் அவளிடம் போனை கொடுத்து விட்டு அவள் மடியில் படுத்து விட்டான்.

 

அவன் தலை முடியை கலைத்தவாறே “எப்படி இருக்க அத்தம்மா ஒழுங்கா சாப்பிடுறியா? மாத்திரை எல்லாம் போடுறியா?”, என்று கேட்டாள் சத்யா.

 

“என்னை நான் பாத்துக்கிடுவேன் கண்ணு. எனக்கென்ன குறை? உன் மாமா இப்ப எல்லாம் என்னை நல்லா பாத்துகிறார். என்ன இவ்வளவு பெரிய வீட்ல நீங்க எல்லாம் இல்லையேன்னு தான் கவலையா இருக்கு. அதை விடு. சீக்கிரம் நல்ல செய்து சொல்லுடா. நம்ம தேனு நாள் தள்ளி இருக்குன்னு சொன்னா. நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு செந்திலை கூட்டிட்டு போக சொல்லணும். நீயும் சீக்கிரம் சொல்லணும் என்ன?”

 

“அப்படியா அத்தம்மா? ரொம்ப சந்தோசம். நான் நாளைக்கு அவ கிட்ட பேசுறேன்”

 

“சரி குட்டி. நீ சந்தோசமா இருக்கியா கண்ணு”

 

அதே நேரம் அவனோ  அவள் வயிற்றின் மீதிருந்த சேலையை விளக்கினான். அவனை சேட்டைகளை தாங்க முடியாமல் உதடுகளை கடித்து உணர்வுகளை அடக்கினாள் சத்யா. அவள் வயிற்றில் இதழ் பதித்தான் விஷ்ணு.

 

“ப்ச்”, என்று அவள் உதடுகள் ஆர்சேபனை தெரிவித்தது.

 

“என்ன மா ச்? சந்தோசமா இல்லையா?”, என்று பதட்டத்துடன் கேட்டாள் அன்னலட்சுமி.

 

அவனை கிள்ளிய சத்யா “ரொம்ப சந்தோசா இருக்கேன் அத்தம்மா”, என்றாள்.

 

“ச் ன்னு சொன்னியா பயந்துட்டேன். என்ன கண்ணு பனி பெய்யுதா? சீக்கிரம் தம்பியை கூட்டிட்டு கீழ போ”

 

“ஹ்ம்ம் சரி அத்தம்மா. நீ உடம்பை பாத்துக்கோ. நாளைக்கு போன் பண்றேன்”

 

“சரி கண்ணு தம்பிகிட்ட சொல்லு. வைக்கிறேன் “, என்று அவள் வைத்ததும் “அத்தான் சும்மா இருங்க கூச்சமா இருக்கு. ஒரு நிமிசத்துல அத்தை கிட்ட மாட்டி விட பாத்தீங்களே” என்றாள்.

 

“நான் என்ன செஞ்சேன்?”, என்று பச்சை பிள்ளையாக கேட்டவனின் உதடுகள் அவள் வயிற்றில் ஊர்ந்தது.

 

“ஸ்ஸ்ஸ் ஆ கூசுது விடுங்க”

 

“ஏண்டி இப்படி செஞ்ச?”

 

“நான் என்ன செஞ்சேனாம்?”

 

“திருட்டு தனமா என்னையே கொள்ளை அடிச்சு காதல்னு சொல்லி ஒரு தீயை பத்த வச்சு…. நேரா வந்து நின்னுருக்கலாம்ல?”

 

“நேரா வந்து நின்னப்ப மட்டும் என் அழகுல அப்படியே மயங்கி விழுந்துட்டீங்களா? அத்தை பொண்ணா முன்னாடி நின்னப்ப யாரோ மாதிரி விலகி தான இருந்தீங்க? அப்புறம் நேரா வந்து சொன்னா ஏத்துக்கிட்டு இருப்பீங்களா?”

 

“ஏத்துக்கிட்டு இருப்பேனான்னு தெரியலை. அத்தை பொண்ணுன்னு உரிமையா வந்து நின்னாலும் எனக்கு நீ அந்நியம் தான டி? உன்னை எப்படி உரிமையா பாக்க முடியும்? ஆனா உன் அழகுல மயங்கலைன்னு சொல்லாத கல்யாண மேடைக்கு உன்னை கூட்டிட்டு வரும் போதே நான் பிளாட் ஆகிட்டேன்”

 

“அப்படியா?”

 

“அப்படியா வா? என்னோட கோபமே அது தான். மனசுல ஒரு பொண்ணு இருக்க? நிஜத்துல உன் மேல என் மனசு மயங்குச்சுன்னா அது என்னையே அசிங்க படுத்துற மாதிரி தான? பாக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் மயங்குற கேவலமான ஆளா ஆகிட்டேனோன்னு அசிங்கமா இருந்துச்சு. இன்னும் எனக்கு உறுத்திட்டே தான் இருக்குது சத்யா”

 

“அது அப்படி இல்லை அத்தான். பொண்டாட்டின்னா எல்லாருக்குமே உரிமை வரும். அந்த உரிமை கண்டிப்பா காதலா மாறும். அது தப்பு இல்லை. இயற்கை”

 

“அப்ப என் மனசுல இருந்த முகம் தெரியாத உன் மேல இருந்த காதல் பொய்ன்னு சொல்றியா?”

 

“பொய்ன்னு சொல்லலை. ஆனா கல்யாணம் அப்புறம் நீங்க அந்த காதலை நினைச்சது குறைஞ்சிருக்கும். நாளடைவில் அது இன்னும் குறைஞ்சு காணாமலே போயிருக்கும்”

 

“அப்ப முகம் தெரியாத பொண்ணு கிடைக்கலைன்னா கண்டிப்பா அவளை மறந்து உன் கூட வாழ்ந்துருப்பேன்னு சொல்றியா?”

 

“ஹ்ம்ம் அது தான் இயற்கைன்னு சொல்றேன். அன்னைக்கு என் கூட வாழ தயாரா இருந்தீங்க. மறந்துராதீங்க. ஆனா அப்புறம்  உங்களுக்குள்ள குற்ற உணர்ச்சி இருந்துட்டே இருக்கும். அதனால தான் உங்களை தடுத்தேன்”

 

“அப்பவே உண்மையை சொல்லிருக்கலாம்ல டி?”

 

அடுத்த வாரம் உங்க பிறந்த நாள் வருது. அப்ப சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே கண்டு புடிச்சிடீங்க ? எப்படி?”

 

“அந்த சர்வர் பாத்தேன். ரம்யா உனக்கு ஹிந்தி தெரியும்னு சொன்னா. டெல்லிக்கு வந்திருக்கன்னு சொன்னா. ஏன் இன்னைக்கு லெட்டர் அனுப்புன?”

 

“சும்மா, ஒரு சுவாரஸ்யமே இல்லாம லைப் போச்சு. அதான் லெட்டர் எழுதினேன். பேட் எனக்கே ரீவிட் அடிச்சிடீங்க. போங்க”

 

“ஆனா நான்  ரொம்ப சந்தோசமா இருக்கேன். ரெண்டு பேரும் வேற வேற அப்படிங்குற குழப்பம் இல்லாம ஒரே ஆள்னு நிம்மதியா இருக்கு. இவ்வளவு வேலை பாத்துருக்க. ஏன்?”

 

“காதல்”

 

“எப்ப இருந்து?”

 

“ஹ்ம்ம்”, என்று யோசித்த படியே மண்டையை தட்டினாள். அந்த விரலை பிடித்தவன் தன்னுடைய உதட்டருகில் கொண்டு சென்று தன் உதட்டின் மீது வைத்தான்.

 

“இப்படி பண்ணா எப்படி சொல்றதாம். சரி சரி முறைக்காதீங்க. சொல்றேன்”, என்று தன்னுடைய காதல் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினாள்.

 

Advertisement