Advertisement

அத்தியாயம் 18

 

நீயென்றால் நானாக  

நானேன்றால் நீயாக

மாறும் தருணத்தில்

பற்றும் காதல் தீ!!!!!

 

அவள் பார்வையை கண்டவன் “ப்ச் நீயும் நர்ஸ் தான? பர்ஸ்ட் எய்ட் யாரு பண்ணா என்ன? என்னை டாக்டர்னு நினைச்சிக்கோ”, என்றான்.

 

அதற்கு பின்னும் அவன் சொன்னதை செய்யவில்லை என்றால் அலட்டல் மாதிரி இருக்கும் என்பதால் சேலையை முட்டு வரை தூக்கினாள். அவன் முன்னே இப்படி காலை காட்டுவது கூச்சமாக இருந்தது.

 

அவனோ எதையும் யோசிக்காமல் மருந்தை எடுத்து அவள் கணுக்காலில் தசைகளில் மசாஜ் செய்ய ஆரம்பித்தான். அவன் அழுத்தம் கூட்ட கூட்ட அவளுக்கு வலித்தது.

 

“அத்தான் வலிக்குது”

 

“முதல் நாளே ஓட கூடாது சத்யா. பர்ஸ்ட் நடக்கணும். அப்புறம் கொஞ்சம் வேகம் வைக்கணும். ஒரே நாள்ல இப்படி பண்ண கூடாது. கொஞ்சம் வலிக்கும். அப்பறம் சரியாகிரும். பொறுத்துக்கோ”, என்று சொல்லி விட்டு தன் வேலையை செய்தான்.

 

மருந்தை போட்டு முடித்து கடைசியாக அதை நீவி விட ஆரம்பித்ததும் வலியால் துடித்தவள் “ ஆ அம்மா”, என்று கத்தி அவன் சட்டை காலரை பற்றி கொண்டாள்.

 

அப்போது தான் அவள் மீது அவன் கவனமும் சென்றது. அவள் நெருக்கம் அவனை பாதித்தது.

 

முட்டுக்கு மேல சற்று தெரிந்த அவள் வெண்ணிற தொடையில் அவன் பார்வை பதிந்தது. அவனை அறியாமலே அவள் உதட்டில் அவன் பார்வை படிந்தது.

 

வலியில் துடித்தவள் கண்களை மூடி அதை அடக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் வலியை குறைக்க நினைத்தானா? இல்லை, அவள் பலா சுளை போல இருந்த அவள் உதடுகள் அவனை ஈர்த்ததா? எதுவென்று அனுமானிக்க முடியாமல் அடுத்த நிமிடம் அவள் இதழ் நோக்கி குனிந்தவன் அவள் இதழ்களை சிறை செய்தான்.

 

ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்த சத்யாவின் கண்கள் அந்த முத்தத்தில் மறுபடியும் மூடி கொண்டது. அவன் தன்னை தொட்டு பேசவே அதிக ஆசை அவளுக்கு இருக்கும் போது அவன் தந்த இதழ் முத்தத்தை மறுப்பாளா என்ன?

 

அவள் கைகள் அவளை அறியாமலே அவன் கழுத்தை இறுக்கி பிடித்தது. அவள் இணக்கத்தை கண்டவன் அவள் உதடுகளை விட்டு விலகவே இல்லை.

 

அப்போது அவனுடைய போன் சத்தம் கேட்டதும் தான் அவளை விட்டு விலகினான். அவளோ கண்களை இறுக மூடிய படியே அமர்ந்திருந்தாள். “இப்போது எப்படி அவன் முகத்தை பார்ப்பது?” என்று நினைத்தாள் சத்யா.

 

அவளுடைய எதிர்ப்பின்மை அவன் கவனத்தில் வரவே இல்லை.

“என்ன காரியம் செஞ்சிட்ட டா? அவ உன்னை பத்தி என்ன நினைப்பா?”, என்று எண்ணி கொண்ட விஷ்ணுவும் தன்னுடைய போனை எடுத்தான்.

 

புவனா தான் சாப்பிட அழைத்தாள். “இதோ வரேன் மா”, என்றவன் போனை வைத்து விட்டு “உனக்கு மேல கொண்டு வர சொல்றேன் சத்யா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அவன் இதழ் தீண்டிய தன் இதழை விரலால் தொட்டாள் சத்யா. அதில் இருந்த ஈரம் சற்று முன்பு நடந்த நிகழ்வை எடுத்து கூறியதில் அவள் வயிற்றில் ஒரு இன்ப அவஸ்தை உருவானது.

 

வழக்கம் போல அவளுக்கு உணவு எடுத்து வந்து கொடுத்த விஷ்ணுவோ “நான் ஏன் இப்படி தப்பு தப்பா பண்றேன்?”, என்று சுய அலசலில் விடை கிடைக்காமல் சோர்ந்து போனான்.

 

அடுத்த நாள் அவளுக்கு காலில் வலி இருப்பது தெரிந்தாலும் “மருந்து போட்டுக்கோ சத்யா”, என்று சொல்லி தப்பித்து கொண்டான். “மறுபடி அவ கிட்ட போனா அவ்வளவு தான்”, என்று எண்ணி கொண்டான். இரண்டு நாளில் அவளால் சாதாரணமாக நடக்க முடிந்தது.

 

அதன் பின் வாழ்க்கை சாதாரணமாக சென்றது.  ஒரு நாள் அதிகமாக மழை பெய்தது. “இன்னும் அத்தானை காணுமே”, என்று நினைத்த சத்யா, கோயிலுக்கு போன போது பெய்த மழையை நினைத்து கொண்டாள். அவள் உதடுகள் மலர்ந்தது.

 

“பிராடு அத்தான் மனசுல வேற பொண்ணு இருக்கும் போது எனக்கும் நூல் விடுறார்”, என்று நினைத்து சிரித்தவள் மணியை பார்த்தாள்.

 

வழக்கத்தை விட அதிக நேரம் ஆகி விட்டதால் சிறிது பதட்டம் வந்தது. போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அதுவா டவர் இல்லை என்று சொன்னது.

 

அதிக நேரம் ஆனதால் டிரைவரை காரை எடுக்க சொல்லி கிளம்பி விட்டாள். மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

 

கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருந்தவன் “அப்பாடி ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆகிட்டு. இப்ப தான் நிம்மதி”, என்று நினைத்து கொண்டே அதை அணைத்து விட்டு திரும்பியவன் திகைத்தான்.

 

அங்கே முழுக்க நனைந்த கோழி போல் நடுங்கி கொண்டு அதே நேரம் அவனை முறைத்த படியே நின்றாள் சத்யா.

 

அவளை  அந்த கோலத்தில் எதிர் பார்க்காதவன் திகைத்து “ஏய் சத்யா என்ன இது? அதுவும் இங்க?”, என்று கேட்டான். அவள் தன்னை தேடியது ஒரு வித இன்பத்தை கொடுத்தது.

 

“மணி எத்தனைன்னு தெரியுமா? நான் பயந்துட்டேன். போன் போகல. அதான் வந்தேன். போங்க அத்தான்”

 

“வேலை இருந்துச்சு டா. அதான் நான் மட்டும் கிளம்பல. மழை பெய்றதுனால டவர் இருந்துருக்காது”, என்று சொல்லி கொண்டே அவள் அருகே வந்தவன் அவள் கையை பற்றி கொண்டு “சாரி”, என்றான்.

 

தன்னை அவள் தேடி வந்தது ஒரு மயக்கம் என்றால், அவளின் தோற்றம் அவனுக்குள் மோகத்தை உண்டு பண்ணியது. அவன் முகத்தில் என்ன உணர்ந்தாளோ அவன் கையை விடுவித்தவள் “வாங்க வீட்டுக்கு போகலாம்”, என்று திரும்பினாள். அவள் கையை பிடித்து இழுத்தான் விஷ்ணு.

 

அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது பூமாலையாக விழுந்தாள் சத்யா. தன் மேல் விழுந்தவளை அவன் கரங்கள் சுற்றி வளைத்தன.

 

சத்யாவின் உடலில் ரசாயன மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உடல் சூடேற அவன் அணைப்பிற்குள் அடங்க அவள் உடல் விரும்புவதை கண்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

விஷ்ணுவின் இதழ்கள் அவள் இதழ்கள் மீது படிந்தது. சத்யா தோய்ந்து போய் அவன் கரங்களுக்குள் அடங்கினாள். விஷ்ணுவோ ஆவலுடன் அவளை தழுவிகொண்டான்.

 

மெல்ல அவன் கரங்கள் முன்னேறின. அப்போது சத்யாவிற்கு இன்னும் தான் யார் என்ற உண்மையை அவனுக்கு சொல்ல வில்லை என்று நினைவில் வந்தது.

 

அவனை விட்டு விலகினாள். அழகான தருணத்தில் அவள் விலகி சென்றது அவனை கோப படுத்தியது.

 

“ஏய் சத்யா கிட்ட வா”, என்று போதையில் உளறுவதை போல சொன்னான் விஷ்ணு.

 

“வேண்டாம்”, என்று பின்னே சென்றாள் சத்யா.

 

“இவ்வளவு நேரம் என் கைக்குள்ள தான இருந்த? சத்யா ப்ளீஸ் கிட்ட வா”

 

“அத்தான், நீங்க வேற பொண்ணை விரும்புறீங்க? அதை மறந்துராதீங்க”

 

“இப்ப எதுக்கு அதை ஞாபக படுத்துற?”, என்று கேட்டவனின் குரலில் எரிச்சல் அப்பட்டமாக இருந்தது. அவளை நெருங்கினான். அவளோ பதட்டத்துடன் பின்னே சென்றாள். மழை நேரம் இருவர் மனதையும் மயக்கியது.

 

அவனிடம் இருந்து விலகி சென்றவள், கால் வழுக்கி கீழே விழ பார்த்தாள். அவன் கரம் அவள் இடுப்பை பற்றி அவளை கீழே விழாமல் செய்தது. இடையில் பதிந்த கை மேலும் அழுந்தியது.

 

“அத்தான் ப்ளீஸ் விடுங்க. என்னோட மனசுல வேற ஒருத்தர் இருக்கார்”, என்று பலவீனமாக மறுத்தாள்.

 

“உன் மனசுல வேற ஒருத்தர் இருந்துருக்கலாம். ஆனா இப்ப இந்த நிமிஷம் உன் கண்ணுல நான் காதலை பாக்குறேன் டி. நம்ம காதலிச்ச ரெண்டு பேருமே நம்மளோட கடந்த காலம். அவங்களை மறந்துட்டு நாம வாழலாம்”

 

“உங்க மேல காதல் எல்லாம் இல்லை.ப்ளீஸ் விடுங்க ”

 

“சரி இனிமே வந்துரும்”

 

“ப்ச் விளையாடாதீங்க. நான் இங்க வந்துருக்கவே கூடாது”

 

“என்னை தேடி வரது, உனக்கு அவ்வளவு கஷ்டமா சத்யா?”

 

“ஆமா”, என்று அவள் சொன்னதும் அப்படியே அவளை தள்ளி விட்டான் விஷ்ணு.

 

கீழே விழுந்து கிடந்தாள் சத்யா.

 

“என்னை பாத்தா உனக்கு ராட்சசனாட்டம் இருக்கா? மனசுல நிம்மதி இல்லாம இருக்கேன் டி. நீயும் ஏன் என்னை இந்த பாடு படுத்துற? மனசுல இன்னொருத்தி இருக்கான்னு சொல்லிக்கிட்டு திரியுறேன். இன்னும் சொல்ல போனா அவ கூட ஒரு நாள் வாழ்ந்துருக்கேன் சத்யா. ஆனா உன் பின்னாடியும் என் மனசு போகுது. உன்னை பாக்கும் போது என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை.  சில நேரம் ரெண்டு பொண்ணுங்களை விரும்புற நான் எப்படி நல்லவனா இருக்க முடியும்? என்னை எங்க அம்மா அப்பா நல்லாத்தானே வளத்துருக்காங்க? அப்புறம் ஏன் என் குணம் இப்படி போகுதுன்னு எரிச்சலா வருது? பாக்குற எல்லா பொண்ணுங்க மேலயும் காதல் எனக்கு வருமான்னு என்னை நினைச்சே கேவலமா இருக்கு. சாரி உன்கிட்ட நடந்து கிட்டது தப்பு தான். என்னை மன்னிச்சிரு.  இப்ப எல்லாம் வேற எதுவுமே ஞாபகம் வராம உன்னோட ஞாபகம் தான் வருது. உன்னை இறுக்கமா கட்டிக்கணும் போல இருக்கு. ப்ச் நான் ஏன் இப்படி இருக்கேனு எனக்கே என் மேல கோபம் வருது”, என்று வாய் விட்டே புலம்பினான் விஷ்ணு.

 

இத்தனை நாள் மனதில் இருந்த புழுக்கம் இன்று வார்த்தையாக வெளியே வந்தது. அவனுடைய வார்த்தைகளில் வெளிப்பட்ட தாகம் அவளை அவனுக்குள் ஒண்டிக்கொள்ள தூண்டியது.

 

“பொறு சத்யா அவன் கிட்ட இன்னும் உண்மை சொல்லலை. முதல்ல அதை சொல்லணும்”, என்று மனதுக்குள் முடிவெடுத்த சத்யா பின் அது முடியாமல் “உங்க மனசுல இருந்து அந்த பொண்ணு போகட்டும். அதுக்கப்புறம் நாம சேர்ந்து வாழலாம்”, என்றாள்..

 

“உன்னோட மனசுல இருந்து அவன் போயிருவானா? நீ அவனை மறந்துருவியா?”, என்று கண்கள் மின்ன கேட்டான் விஷ்ணு.

 

அவனை ஒரு பார்வை பார்த்தவள் “நான் வேற ஒருத்தனை விரும்புறேன். அவன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான். அவன் நினைவுல வாழுறேன்னு சொன்னது எல்லாம் பொய். நான் யாரையும் காதலிக்கலை“, என்று அவள் சொன்னதும் அவன் முகம் பூவாக மலர்ந்தது.

 

“ஏய் நிஜமாவா சொல்ற?”

 

“ஆமா , உங்களுக்கு மனைவியா ஆகுற வரை நான் யாரையும் காதலிக்கலை. எனக்கு என் புருஷனான உங்களை தவிர வேற யார் மேலயும் காதல் வராது. உங்களை கல்யாணம் பண்ணுனதுல இருந்து இப்ப வரை நீங்க மட்டும் தான் அத்தான் என் மனசுல இருக்கீங்க?”

 

“நீ எதுக்காக அப்ப என்னை கல்யாணம் செஞ்ச?”

 

“நான் அத்தைக்காக கல்யாணம் செஞ்சேன்”

 

“என்னது அம்மாக்காகவா?”

 

“ஆமா அவங்களுக்கு நீங்க டெல்லி போன அப்புறம் அவங்களை  விட்டு தூரமா போயிருவீங்களோனு பயம். அவங்களுக்காக திட்டம் போட்டு தான் உங்களை கல்யாணம் செஞ்சேன்? அப்பறம் அந்த சட்டையை  அடிக்கடி நீங்க தொட்டு பாக்குறதை பாத்துருக்கேன். அந்த சட்டைக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு தோணுச்சு. அது எப்படி என்னை கல்யாணம் பண்ணிட்டு நீங்க அவளை நினைக்கலாம்னு கோபத்துல தான் அதை துவைச்சேன். நீங்க முன்னாடி வேற பொண்ணை விரும்புனது எல்லாம் பெருசே இல்லை. ஆனா இப்பவும் அவளை நினைக்கிறது தான் பிடிக்கலை. நீங்க மட்டும் தான் என் மனசுல இருக்கீங்க. அதே மாதிரி நான் மட்டும் எப்ப உங்க மனசுல இருக்கேனோ, அப்ப நாம சேந்து வாழலாம். வாங்க போகலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

மனதில் இருந்த கொஞ்ச பாரம் இறங்கியது போல உணர்ந்தான் விஷ்ணு. மனதில் இருந்த தாபம் அடங்காமல் போனாலும் ஒரு உற்சாகம் மனதில் குடியேறியது.

 

அவள் வந்த காரை வீட்டுக்கு அனுப்பியவன் தன்னுடனே அவளை அழைத்து சென்றான். அதன் பின் அவன் அவளை நெருங்குவதே இல்லை. ஆனால் கண்களால் தன்னுடைய காதலை அவளுக்கு உணர்த்தினான். அவனை கடந்து போகும் போது அவள் தான் தவித்து போனாள்.

 

இப்போது அவன் மனதில் இருப்பது அவள் மட்டுமே. எப்போதும் அவள் நினைவே அவனை ஆட்கொண்டது. மனதில் இருந்த காதலி எல்லாம் தூர போனார்கள். எப்போதாவது அது நினைவில் வரும் போது குற்றவுணர்ச்சி அவனை வாட்டியதும் உண்மை.

 

அவர்கள் டெல்லிக்கு வந்து இன்றோடு ஒரு மாதம் மேலே ஆகி இருந்தது. இடையில் காவ்யாவின் கல்யாணத்துக்கு அவளை அழைத்து சென்றவன் ஊருக்கு அனைவரையும் பார்க்க அழைத்து சென்றான்.

 

மீண்டும் டெல்லி வந்ததும் வழக்கம் போல அவர்கள் நாட்கள் சென்றது.

காலையில் எழுந்து கிளம்பி அவளிடம் சொல்லி விட்டு ஆபிஸ் கிளம்பினான் விஷ்ணு.

 

அங்கே அவனுக்கு ஒரு கடிதம் காத்திருந்தது. மொட்டை கடிதம் போல அல்லாமல் அதே நேரம் அனுப்புனர் முகவரி இன்றி இருந்தது அந்த கடிதம்.

 

“யாரா இருக்கும்?”, என்று நினைத்து கொண்டே அதை படிக்க ஆரம்பித்தான் விஷ்ணு.

 

“அன்பான விஷ்ணு”, என்று ஆரம்பித்து ஹிந்தியில் எழுத பட்டிருந்தது. அது அந்த பெண்ணிடம் இருந்து வந்திருக்கிறது என்று புரிந்ததும் மனதில் சந்தோசம் தோன்றாமல் ஒரு பதட்டம் மட்டுமே உருவானது.

 

அதில் “உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று கேள்வி பட்டேன். வாழ்த்துக்கள். உங்கள் மனைவியுடன் சந்தோசமாக வாழுங்கள். முகம் தெரியாத என் முகம் தெரியாமலே போகட்டும். காலம் பல மாற்றங்களை கொண்டு வரும். இப்போது தாங்கள் இன்னொரு பெண்ணின் கணவர். இப்போதும் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்வது தவறு. அடுத்த ஜென்மத்தில் ஒன்று சேருவோம்”, என்று முடித்திருந்தாள்.

 

ஒரே நேரத்தில் நிம்மதியும் கொஞ்சம் குற்றவுணர்வும் வந்தது. தன்னையே வெறுத்தான் விஷ்ணு.

 

சத்யாவை தவிர இன்னொரு பெண் தன் வாழ்வில் இல்லை என்றும் நினைத்து இனித்தது மனது.  மனதில் இருந்த பாரம் கொஞ்சம் விலகியது. சந்தோசத்துடன் வீட்டுக்கு செல்ல கிளம்பும் போது “என்ன சார் உங்க முகத்துல இன்னைக்கு பல்ப் எரியுது?”,  என்று கேட்ட படியே வந்தாள் ரம்யா.

 

“ஏய் ரம்ஸ் கிண்டல் பண்ணாத. சரி நீ வேலையை பாத்துக்கோ. நான் வீட்டுக்கு போறேன்”, என்று சிரித்தான் விஷ்ணு

 

“எம் டி சார் வீட்டுக்கு போகணும்னு துடிக்கிறார். சரி இல்லையே”

 

“ஏய் அதெல்லாம் நீ அலெக்ஸை கல்யாணம் பண்ண அப்புறம் புரிஞ்சிக்குவ”

 

“ஆமா கல்யாணம் பண்ணிட்டாலும். உலகத்தையே பேசுறான் அந்த மரமண்டை. ஆனா காதலை பத்தி மட்டும் வாயவே திறக்க மாட்டிக்கான். அம்மா வேற கல்யாணத்தை பத்தி பேசிட்டே இருக்காங்க”

 

“ஏய் பீல் பண்ணாத டா, நான் பாத்துக்குறேன்”

 

“சரி விஷ்ணு நீ கிளம்பு”

 

“ஹ்ம்ம் அப்புறம் நான் ஒரு விசயம் சொல்லலாம்னு நினைச்சேன். சத்யாக்கு ஹிந்தி சொல்லி கொடுக்கணும். என்ன பண்ணலாம்?”, என்று அவன்  கேட்டதும் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தாள் ரம்யா.

 

“என்ன இப்படி பாக்குற நீ?”

 

“பின்ன நீ காமெடி பண்ணா பாக்க மாட்டாங்களா? அவ சூப்பரா ஹிந்தி பேசுவா”

 

“ஏய் நிஜமாவா?”

 

“கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகுது. இன்னும் அவளை பத்தி தெரிஞ்சிக்கலையா ? பேசவே செய்யாம ஒரே லவ்ஸ் தான் போ”

 

“இல்லை மா. அவ சென்னை தாண்டி எங்கயும் போனதில்லைன்னு நினைச்சேன்”

 

“நல்லா கேட்ட போ. அவ டெல்லிக்கு எல்லாம் நிறைய டைம் வந்துருக்கா விஷ்ணு. அவளுக்கு ஹிந்தி நல்லாவே தெரியும்”

 

“ஹ்ம்ம் சரி. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி வெளியே வந்தான். காரில் ஏறி ஸ்டார்ட் செய்தவன் போக்குவரத்தில் கலந்தான்.

 

“அவளுக்கு எதாவது வாங்கி கொடு டா”, என்று குரல் கொடுத்தது மனசாட்சி.

 

மனம் முழுவதும் சந்தோசத்துடன் ஒரு நகை கடை முன்பு காரை நிறுத்தியவன் அவளுக்காக ஒரு நகை செட்டைதேர்வு செய்தான்.

 

“கண்டிப்பா அவ நகையை பாத்து அலற தான் செய்வா. ஆனா எனக்கு வேற என்ன கிப்ட் கொடுக்கன்னு தெரியலையே”, என்று யோசித்த படி அதை வாங்கி கொண்டு வெளியே வந்தவனை யாரோ “சார்”, என்று அழைக்கும் குரலில் திரும்பி பார்த்தான்.

 

அங்கே அந்த ஹோட்டலின் சர்வர் நின்றான்.

Advertisement