Advertisement

 

அத்தியாயம் 20

 

அடுத்து வந்த நாட்கள் அழகானதாக சென்றது. தினமும் சீக்கிரம் எழுந்து பூஜைக்கு பாட்டியுடன் சென்று விடுவாள் அபர்ணா.

 

காலை ஒன்பது மணிக்கு எழுந்து சாப்பிட்டு விட்டு விஜியின் தம்பியுடன் ஊரை சுற்றி பார்க்க சென்று விடுவான் நரேன்.  விஜியிடம் இரண்டு நாள் சரியாக பேசாமல் இருந்தவன் தான் செய்த தப்பை சரி செய்ய எண்ணி அவள் இருக்கும் போதே, “எதுக்குமா எங்க கல்யாணத்துல யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு நாத்தனார் முடிச்சு போட்டா? நம்ம விஜியை போட வச்சிருக்கலாம்ல?”, என்று கேட்டான்.

 

அவன் தங்கை என்ற உறவு முறையில் கேட்ட இந்த கேள்வியை பார்த்து விஜி முகம் கூம்பி போனது. அபர்ணா முகம் மலர்ந்து போனது. பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மடக்கி மற்ற மூன்று விரல்களையும் நீட்டி  அவனை பார்த்து சூப்பர் என்று கை காட்டினாள் அபர்ணா.

 

“விஜி, உனக்கு முறை பொண்ணு டா. அப்புறம் எப்படி அவளை உன் தங்கச்சியா சபையில் நிற்க வைக்க முடியும்?”, என்று கேட்டாள் சிவகாமி.

 

“என்னமா இது? எனக்கு அப்புவை தவிர மித்த எல்லாரும் அக்கா, தங்கச்சி தான். அப்புறம் என்ன?”, என்று கேட்டான் நரேன்.

 

கண்ணில் துளிர்த்த கண்ணீரை மறைத்த படி அங்கிருந்து சென்று விட்டாள் விஜி. அதை பார்த்து நரேனுக்கும், அபர்ணாவுக்கும்  கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இதுவும் சரியே என்று தான் தோன்றியது.

 

“நீயும் அபர்ணாவும் இன்னொரு தரம் கல்யாணம் பண்ணுங்க. நான் அவளையே நாத்தனார் முடிச்சு போட சொல்றேன் என்ன?”, என்று சிரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் சிவகாமி.

 

“இப்ப அவளை நோகடிச்சிட்டேனா அப்பு?”, என்று கேட்டான் நரேன்.

 

“ரெண்டு நாள்ல சரியாகிருவா டா”, என்று புன்னகைத்தாள் அபர்ணா. கோயில் திருவிழா அன்று  சாம கோடைக்கு அனைவரும் கோயிலில் இருந்தார்கள். சாமியாட்டத்தை பார்த்து கொண்டிருந்தான் நரேன். அதை பார்ப்பதுக்கு வேடிக்கையாக இருந்தது அவனுக்கு. இடை இடையே பாட்டு கச்சேரி வேறு நடந்தது. அதுவும் பன்னிரண்டு மணியானதும் சாமி வேட்டைக்கு போன பிறகு பாட்டி திகில் கதைகளை கூறி கொண்டு இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

 

அடுத்த நாள் எப்போது புலரும் என்று எண்ணமிட்டு படியே தன் அருகே இருந்த அபர்ணாவை பார்த்தான்.

 

ஆகாய வண்ண பட்டு புடவையில் அழகாக இருந்தாள் அபர்ணா. அவளிடம் இருந்து பார்வையை விலக்கியவன் சுற்றி இருந்தவற்றில் கவனத்தை செலுத்தினான்.

 

அதன் பின் ஒரு மணி போல் சாமி வேட்டைக்கு சென்று விட்டு வந்து ஊருக்கும் மக்களுக்கும் சாமியாடி, குறி சொல்லி என்று மணி நான்கை நெருங்கி விட்டது. முளைப்பாரி எடுப்பவர்களை வர சொல்லி அதை தூக்கி கொண்டு சாமி ஊர்வலம் ஆரம்பித்ததும் அதன் பின்னே அவர்களும் சென்று முடிவில் கோயிலில் வந்து இறக்க வேண்டும். அதற்கு அழைக்க பட்டதும் அபர்ணாவுடன் சிவகாமி எழுந்து சென்றாள்.

 

அந்த நேரத்தில் இடையில் நிறுத்த பட்டிருந்த பாட்டு கச்சேரி நடத்த பட்டது. அதன் பின்னே ஊரை சுற்றி சாமி ஊர்வலம் முடிந்து முளைப்பாரி கோயிலில் இறக்க பட்டு அதை சுற்றி அனைத்து பெண்களும் கும்மி அடித்தார்கள். செய்ய தெரியாமல் அவர்களை தொடர்ந்து அபர்ணாவும் செய்து கொண்டிருந்தாள். பின் அவர்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்து பூஜாரி விரதத்தை முடித்து வைத்தார்.

 

சாமியை வணங்கி எழுந்த அபர்ணாவுக்கு நிறைவாக இருந்தது. அதன் பின் சிவகாமியும், அபர்ணாவும் வந்த பிறகு  அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

 

சிவப்பிரகாசம் கால் வலி சரியாகாததால் வீட்டில் தான் இருந்தார். இவர்கள் கதவை தட்டியதும் அரை தூக்கத்தில் வந்து கதவை திறந்து விட்டு மறுபடியும் தூங்க சென்று விட்டார்.

 

சிவகாமி, அவர் பின்னே சென்று விட்டாள். பாட்டி அவளுடைய அறைக்கு செல்லும் போது பின்னாடியே சென்ற அபர்ணா நரேனை திரும்பி பார்த்தாள்.

 

ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த ஏக்கத்துடன் அவளையே பார்த்து கொண்டு நின்றான் நரேன். அவனை பார்த்து புன்னகைத்தவள் “நீ மேல போ. நான் வரேன்”, என்று சைகை செய்தாள்.

 

வாயெல்லாம் பல்லாக அங்கிருந்து சென்றான் நரேன்.

 

அவனை தனியே காண அபர்ணாவுக்கும் ஆவலாக இருந்தது. ஆனால் பாட்டி என்ன நினைப்பாளோ என்று கவலையாக இருந்தது.

 

அறைக்குள்ளே சென்றதும் படுக்க ஆயத்தமான பாட்டி, “இன்னும் விடிய நேரம் இருக்கே அப்பு. மணி அஞ்சறை தான் ஆகுது.  நீ நரேன் கூட வேணா போய் பேசிகிட்டு இரு. உங்க ரெண்டு பேரோட கண்ணுலயும் தூக்கமே தெரியலை. அவன் உன்கிட்ட தனியா பேசணும்னு நினைக்கிறான் போல. இத்தனை நாள்ல அவனை நீ புரிஞ்சிருப்பன்னு நினைக்கிறேன். போ மா. இனி எல்லாம் நல்ல படியா நடக்கும்”, என்று அனுப்பினாள்.

 

“பாட்டி”, என்று இழுத்தாள் அபர்ணா. “பேசிகிட்டு இருக்க தான் அப்பு அனுப்புறேன். மித்த படி எதுவும் நடக்க கூடாது. இன்னைக்கு நைட் தான் நல்ல நேரம் இருக்காம். அது வரை இத்தனை நாள் இருந்த மாதிரியே இரு”

 

“ஹ்ம்ம் சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு அவனை காண சென்றாள். அவள் மனது முழுவதும் எதிர்பார்பால் நிறைந்திருந்தது. அடிவயிற்றில் எதுவோ ஊர்வது போன்ற உணர்வை அனுபவித்தாள். மாடி படி ஏறி அந்த அறைக்கு முன்னே சென்றதும் அவள் கால்கள் பின்னி கொண்டன.

 

அவள் வரவையே எதிர்பார்த்து கொண்டிருந்த நரேனும் அவள் வாசலில் நிற்பதை பார்த்து சிரித்து விட்டு அவள் அருகே சென்று அவள் கையை பற்றி இழுத்தான். அதில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் அபர்ணா.

 

அவளுடைய தோள் வளைவில் முகம் புதைத்தவன் கையை மட்டும் நீட்டி அறையை தாள் போட்டான். பின் அவளிடம் இருந்து விலகி அவள் முகம் பார்த்தான். அவளோ கீழே குனிந்திருந்தாள். ஒரு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளுடைய நுணுக்கமான உணர்வுகள் ஓடும் அவள் முகத்தையே ரசித்தான்.

 

அவள் இடுப்பில் வைத்திருந்த இரண்டு கைகளையும் எடுத்து அவளுடைய கன்னத்தில் வைத்தவன் அவள் கண்களையே பார்த்தான்.

 

“எதுக்கு டா இப்படி பாக்குற? எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்று சிணுங்களாக கூறினாள் அபர்ணா.

 

அவள் சிணுங்களில் சின்னா பின்னமான நரேன், “என் பொண்டாட்டியை நான் எப்படி வேணும்னாலும் பாப்பேன்”, என்றான்.

 

“இப்ப உனக்கு என்னை பொண்டாட்டியா பாக்க தோணிடுச்சோ?”

 

“ஹ்ம்ம், ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே தோனிட்டு”

 

“பொண்டாட்டியா மட்டும் தான் பாக்க தோணுச்சா? லவ்வரா இல்லையா?”

 

“ஏய், அப்பு குட்டி, உன்னை லவ்வும் பண்றேன் டி”

 

“பொய், அப்படியே உண்மையா இருந்தாலும் பொண்டாட்டின்னு தான லவ் வந்திருக்கு? இல்லைன்னா வந்திருக்காதுல்ல? கடைசி வரை நான் உனக்கு பிரண்ட் தான?”

 

“பொண்டாட்டியா ஆன அப்புறம் லவ் பண்றது தப்பு இல்லை டி செல்லம். ஆனா எனக்கு நீ பொண்டாட்டி அப்படிங்குறதுனால மட்டும் லவ் வரலை. அதுக்கு முன்னாடியே இருந்துருக்கு. அந்த காதலை நான் உணர்ந்தது வேணும்னா இப்பவா இருக்கலாம். ஆனா முன்னாடி இருந்தே என் அடிமனசுல நீ தான் இருந்திருக்க தெரியுமா?”

 

“எப்படி சொல்ற?”

 

“எப்படின்னா? எப்படி சொல்ல? சரி இங்க வா. இப்படி உக்காரு. சொல்றேன்”, என்று சொல்லி விட்டு கட்டிலில் அவளை அமர வைத்து விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்.

 

“அன்னைக்கு லவ் பண்றேன்னு தான் பொசுக்குன்னு சொல்லிட்ட. இப்பவாது டீட்டைலா சொல்லுடா”, என்றாள் அபர்ணா.

 

“என்னது டீட்டைலா வா? அப்படி பேசிட்டே இருந்தா மத்த விசயம் எல்லாம் எப்படி ஆரம்பிக்கிறது?”

 

“அந்த விஷயமெல்லாம் இப்ப ஆரம்பிக்க கூடாதாம்”

 

“என்னது? என்ன டி மறுபடியும் குண்டை தூக்கி போடுற? இன்னும் விரதம் கிரதம்னு எதாவது செஞ்சு வைக்க போறியா?”

 

“இல்லை டா, பாட்டி இன்னைக்கு நைட் தான் நல்ல நேரம் இருக்குன்னு சொன்னாங்க”, என்று சிறு கூச்சத்துடன் சொன்னாள் அபர்ணா.

 

“இந்த சகுனி கிழவியை பாரேன். என்கூட தான இருந்துச்சு? அப்புறம் எப்படி நல்ல நாள் பாக்க போச்சு. ஐயோ சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது போல”

 

“சும்மா புலம்பாத டா. இன்னைக்கு மட்டும் தான? நீ எப்படி என்னை லவ் பன்னன்னு பேசிட்டே இரு. நைட் வந்துரும்”

 

“வேற வழி? பேசிதான ஆகணும்.  நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருந்தது சுத்தமான நட்பு அப்படிங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை அப்பு. உன்னை நான் எப்பவுமே தப்பான  பார்வை பாத்தது கிடையாது. சின்ன வயசுல இருந்து நீ அழகா இருக்கன்னு ஒரு வார்த்தைல சொல்லிருவேன். ஆனா அதுக்கு மேல உன்னை ரசிச்சது இல்லை”

 

“ஏன் டா, நான் ரசிக்கிற மாதிரி இல்லையா?”

 

“லூசு, வயசு வேகத்துல பசங்க ரசிக்கிறது கழுத்துக்கு கீழேயா தான் இருக்கும். அப்படி உன்னை ரசிக்க சொல்றியா?”

 

“ச்சி, போடா, நீ இப்படி எல்லாம் பேசுவியா நரேன்?”

 

“என்ன ச்சி, நான் உண்மையை தான் சொன்னேன்? நான் இப்படி தான் அப்பு. அப்புறம் இப்படி எல்லாம் பேசுவேனாவா? எல்லா பசங்களும் சான்ஸ் கிடைக்குற வரை தான் அமைதியா இருப்பாங்க. கிடைச்சிட்டா கலக்கிற மாட்டாங்க. அதுவும் இந்த ராகுல் பையன் என்னை பாத்து ஆம்பளையானு எல்லாம் கேட்டுட்டான் டி”

 

“என்னது???”

 

“ஆமா டி அப்பு. எனக்கு ரொமான்ஸ் ஹார்மோன் எல்லாம் சரியா வேலை செய்யலைன்னு சொல்றான். அதெல்லாம் செமையா வேலை செய்யும்.  நீ என்னோட அப்புன்னு தோணுன அதே நேரம் உன்னை தப்பா பாக்க கூடாதுனு தான் எனக்கு தோணுச்சு. அதுவே எனக்கு மைண்ட்ல பிக்ஸ் ஆகிருச்சு. ஆனா உன்னை விட்டுட்டு எதாவது டூர், மேட்ச், புராஜெக்ட் விஷயம்னு பிரிஞ்சு போகும் போது நீ இல்லாம தவிச்சிருக்கேன். எது சாப்பிட்டாலும் உன்கூட ஷேர் பண்ணி சாப்பிட தான் தோணும். எங்க போனாலும் உன்னை எப்ப பாப்பேன்னு தான் எனக்கு இருக்கும். அம்மா, அப்பாவை விட உன்னை தான் டி அதிகமா தேடுவேன். நீ பப்ளின்னு சொன்னதுக்கு உன்னை விரட்டி விரட்டி அடிச்சாலும் எனக்கு அது பிடிக்க தான் செய்யும். உன் முடியை பிடிச்சு இழுத்து சண்டை போடுறது, உன் சாப்பாட்டை பிடுங்கி சாப்பிடுறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்”

 

….

 

“அதுவும் உனக்கு காச்சல் எதுவும் வந்தா உன்னை நான் தான் பாத்துக்கணும்னு நினைப்பேன். நீ என்னையே சார்ந்து இருக்குறது எனக்கு பிடிக்கும். ரொம்ப டயர்டா இருக்குடா நரேன்னு என் தோள்ல சாயும் போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா? சாப்பாடு கூட நான் தான் உனக்கு ஊட்டணும்னு நினைப்பேன். எங்க போனாலும் உனக்கு வாங்கிட்டு தான் எனக்கே வாங்குவேன். யாராவது உன்னை லவ் பண்றேனான்னு கேப்பாங்க. நான் இல்லைன்னு தான் சொல்லுவேன். உடனே அவனுங்க உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லுவாங்களா? எனக்கு செம கோபம் வரும். அடி பிச்சிருவேன். இந்த விசயத்தை நீ அன்னைக்கு சென்னைல இருந்து கோப பட்டு போன அப்புறம் யோசிச்சேன். இந்த பொறாமை லவ்ல மட்டும் தான வரும்னு புரிஞ்சது”

 

“பிரண்ட்ஷிப்ல உனக்கு பொறாமை வந்து அவனுங்களை அடிச்சியோ என்னவோ?

 

“பிரண்ட்ஷிப்ல பொறாமை வராது டி அப்பு. பிரண்ட்ஷிப்னா நீ உனக்கு பிடிச்சவன் கூட வாழணும்னு தான் தோணும். உன்னை எவனும் பாக்க கூடாதுனு தோணாது. நீ என்னோட அப்பு. உன்னை யாரும் பாக்க கூடாது. நீ எனக்கு மட்டுமே சொந்தம். என்கிட்ட மட்டும் தான் குளோசா இருக்கணும். இப்படி எல்லாம் தோணுன எனக்கு இது லவ்னு தோணவே இல்லை. அப்புறம் கோப பட்டு நீ அன்னைக்கு ஊருக்கு வந்தப்ப தான் ராகுல் கிட்ட எல்லாம் சொன்னேனா? அவன் தான் என்னை யோசிக்க வச்சான். எனக்கு உன் மேல இருக்குறதுக்கு காதல் தான்னு நான் உணர்ந்துட்டேன் அப்பு”

 

“ம்ம்”

 

“என்ன ம்ம்? சரி நீ எதுக்கு அன்னைக்கு கோப பட்டு வந்த? நாம எவ்வளவு சண்டை போட்டாலும் நீ என்னை விட்டு போக மாட்ட தான அப்பு? அன்னைக்கு உன்னை ரொம்ப ஹுர்ட் பண்ணிட்டேனா?”

 

“ஹ்ம்ம், ஆமா டா. நீ பண்ணதுக்கு கோப படாம என்ன செய்ய? சரி கோபத்துல இருந்தவளை சமாதான படுத்த வருவ வருவன்னு பாத்துட்டு இருந்தா நீ கிளம்பி போயிட்ட. அதான் நரேன் கிளம்பி வந்துட்டேன்”

 

“சாரி மா. எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருந்தது. அதான் உனக்கு சாப்பாடு, எனக்கு பீரும் வாங்க போயிருந்தோம். வந்து பாத்தா உன்னை காணும். கஷ்டமா போச்சு தெரியுமா?”

 

“ஆட தெரியாதவன் தெருக்கோணல்ன்னு சொன்னானாம். அதே மாதிரி இருக்கு உன் கதை. மூளை இல்லாத நீ எப்படி டா யோசிப்ப”

 

“ஏய், என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது? எனக்கு மூளையில்லைன்னு சொல்ற? உனக்கு தான் டி மூளையே இல்லை”

 

“சரி அப்படியே வச்சிக்கோ. நீ அதிமுக்கியமா அப்படி என்ன யோசிச்சன்னு சொல்லு பாப்போம்”

 

“அது அது வந்து….”

 

“என்னடா மூளைக்காரா? சொல்லு. என்ன யோசிக்கிறதுக்காக நீ பீர் வாங்க  போன?”

 

“ஒரு பெரிய குழப்பத்துல தான் டி அன்னைக்கு நான் உன் டான்ஸ் ஸ்கூலுக்கே வந்தேன். அங்க அவனை பாத்ததும் சரி கடுப்பாகிருச்சு. அவன் நல்லவன் இல்லை அப்பு”

 

“சாரி டா, நீ சொன்னா நான் எப்பவுமே கேட்டுக்குவேன். ஆனா அன்னைக்கு நடந்ததுக்கு  உன்கிட்ட சாரி சொல்லணும். முந்துன நாள் நீ என்னை கடுப்பேத்துனதுனால அந்த ஆள் விசயத்துல நானும் பிடிவாதமா நடந்துக்கிட்டேன்”

 

“ப்ச், விடு டி. முந்துன நாள் உன்னை ரொம்ப நோகடிச்சிட்டேனா?”

 

“ஹ்ம்ம்”

 

“சாரி டி. எனக்கு சத்தியமா உன் வாசனை பிடிச்சிருக்கு டி. என் மனசை அமைதி படுத்துது”

 

“தெரியுது. சரி இதுல என்ன குழப்பம் உனக்கு? இதுல நீ எதை யோசிக்கணும்னு நினைச்ச?”

 

“அன்னைக்கு உன் நெஞ்சுல சாஞ்சு வாசம் பிடிச்சேனா?”

 

“அதையே சொல்லாத டா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு”

 

“ஹா ஹா, முழுசா இன்னைக்கே பேசிறலாம். அப்புறம் என்ன மாதிரியா இருந்தாலும் நான் பாத்துக்குறேன்”

 

“ம்ம், வழியாத. சொல்லு”

 

“அப்படி உன் மேல சாஞ்சு வாசம் பிடிக்கும் போது, கொஞ்ச நேரத்துல எனக்கு சரியாகிருச்சு. ஆனா உன்னை விட்டு பிரிய தான் மனசு வரலை. அங்க முகம் புதைச்சிருக்கும் போது, எனக்கு உன்னோட டிரெஸ் இடைஞ்சலா தோணுச்சு. அப்ப தான் நான் ஒரு ஆண் அப்படிங்குற உணர்வே எனக்கு வந்தது டி. நீ எனக்கு வேறு விதமா தெரிய ஆரம்பிச்ச. நீ அன்னைக்கு என்னை தடுக்கமா இருந்திருந்தா என்னனென்னவோ செஞ்சிருப்பேன். நீ என்னை தடுத்தது எனக்கு ஏமாற்றம் தான்”

 

“அட பாவி, நீ மோப்பம் பிடிக்கிறேன்னு நினைச்சு தான் டா தடுத்தேன்”

 

“தெரியாம செஞ்ச தப்புக்கு உன்னை மன்னிச்சிறேன் அப்பு. பொழைச்சு போ”, என்று சிரித்தான் நரேன்.

 

“நீ என்னை மன்னிக்கிறியா? கொன்னுருவேன் கொன்னு. அப்படி விலகினா உனக்கு இழுத்து வச்சு கட்டி பிடிக்க தெரியாதா டா? இடியட்”

 

“சரி சரி விடு அறியா பிள்ளை, தெரியா தனமா தப்பு பண்ணிட்டேன், பச்சை மண்ணு டி”

 

“யாரு, நீயா பச்சை மண்ணு? அப்படி தள்ளி  விட்டும் அடுத்த நாள் என் ரூம்க்கு தான வந்த? அப்ப கூட என்னை பிரிஞ்சு இருக்க முடியாம வந்தேன்னு சொல்லுவன்னு நினைச்சேன் தெரியுமா?”

 

“ஹ்ம்ம், அதுக்கு  காரணம் அன்னைக்கே சொன்னேன்ல? ஆனா அப்பவும்  கொஞ்ச நேரத்துலே நான் சரியாகிட்டேன். அதுக்கப்புறம்  நீ தூங்கிட்டு இருந்தியா? அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு  அமைதியா தூங்கிட்டேன். ஆனா காலைல எந்திச்சு திட்டிட்ட?”

 

“திட்டாம? அப்பவும் மோப்பம் பிடிக்க வந்தேன்னு  சொன்னா கடுப்பு ஏறுமா ஏறாத்தா?”

 

“இப்ப  புரியுது டி. ஆனா அன்னைக்கே  எனக்கு மனசுக்குள்ள குழப்பம் வந்துட்டு. உன்கிட்ட தெளிவா  இப்படி இப்படின்னு சொல்லி உன்கிட்ட ஐடியா கேக்கணும்னு நினைச்சேன்”

 

“இப்படி இப்படின்னா “

 

“சொன்னா வல்கரா  இருக்கும் பரவால்லயா?”

 

“வேண்டாம்  வேண்டாம் விட்டுரு”

 

“கேட்டுட்டல்ல  அப்பு? நான் சொல்லுவேன்.  நான் உன்கிட்ட என்ன சொல்ல வந்தேன் தெரியுமா? எனக்கு என் பொண்டாட்டியை, என் அப்புவை  ரொம்ப பிடிச்சிருக்கு. வாசனை முகர அவ மேல சாஞ்சாலும் அதுக்கப்புறம் எனக்கு அவ வேணும்னு  தோணுது. அவளோட மென்மையை உணரணும்னு தோணுது. இடைஞ்சலா இருக்குற டிரெஸ்ஸை கிழிக்கணும்னு தோணுது. இருக்கா இல்லையானு தெரியாம இருக்குற உன்னோட இடுப்பை வளைச்சு கட்டு பிடிக்கணும்னு தோணுது. உன் உடம்புல என் உதடு படாத இடமே இருக்க கூடாதுன்னு தோணுது. இது தப்பா  சரியான்னு தான் உன்கிட்ட கேக்க அன்னைக்கு ஆவலா வந்தேன் டி. ஆனா அந்த நாய் இடையில் வந்து மூடவுட் பண்ணிட்டான்”

 

“ச்சி  போடா “, என்று வெட்க பட்டாள் அபர்ணா.

 

“என்ன போடா? இன்னும்  உன்னை விட்டு போறாதாவே  இல்லை”, என்று சொல்லி கொண்டே  அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

 

அவன் மீது  விழுந்தவள் அவனுடைய  தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“என் மேல உனக்கு காதலே இல்லைன்னு நினைச்சு பாட்டி கிட்ட புலம்புனேன் டா. ஆனா பாட்டி தான் இல்லை அவன் உன்னை லவ் பண்றான். இப்ப உன்னை பின்னாடியே தொடுத்துகிட்டு வருவான் பாருன்னு சொன்னாங்க. எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும் நீ என்னை தேடி வரணும்னு எனக்கு அசையா இருந்தது தெரியுமா?”

 

ஓ, பாட்டி எல்லாத்தையும் கண்டு பிடிச்சிரும். அதான் அன்னைக்கு என்னை அப்படி சந்தோசமா பாத்தியா அப்பு?”

 

“ஆமா டா, அதுவும் உன் கண்ணுல இருந்த காதலை பாத்து எனக்கு சந்தோசமா இருந்தது. ஆனாலும் வேணும்ன்னு கண்டுக்காம இருந்தேன். நீயும் என் பக்கத்துல வந்தியா? ஆனா எதுவுமே செய்யலை. அப்ப  கடுப்பாகிட்டு. இவன் திருந்தவே மாட்டான்னு நினைச்சுக்கிட்டேன்”

 

“ஏய், இல்லை டி. அன்னைக்கு உன்னை அந்த அரைகுறை டிரெஸ்ல பாத்து அப்படியே ஆடி போய்ட்டேன். முழங்கால் தெரியுற வரைக்கும் இருந்த பாவாடை என்னை எப்படி படுத்தி எடுத்துச்சுன்னு தெரியுமா? அதுவும் துணியே இல்லாத  உன்னோட முதுகுல தோள்ல குட்டியா குட்டியா தண்ணீர் துளி இருந்தது. அதை உதட்டால துடைக்க அவ்வளவு ஆவலா இருந்தேன். இருக்குற அந்த பாவாடையும் எப்ப கழறும்னு யோசிச்சிட்டு இருந்தேன். இது வரை உன்னை அப்படி எல்லாம் நினைச்சு  பாத்ததே இல்லை. ஆனா அன்னைக்கு எப்படி எல்லாமோ பாக்கணும்னு தோணுச்சு. அதுக்கு தான் கிட்ட வந்தேன். முதல்ல கிஸ் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா பாட்டி கூப்பிட்டாங்க”

 

“கூப்பிட்டா என்னவாம்? லூசு டா நீ”

 

“அதான் சொல்லிட்டேன்ல, நான் பச்சை மண்ணுன்னு? இப்ப தான் யார் கூப்பிட்டாலும் கண்டுக்க கூடாதுனு எனக்கு நீ சொல்லி கொடுத்துட்டியே? அப்பறம் அன்னைக்கு நைட் எனக்கு என்னன்னவோ ஆகிருச்சு டி. சத்தியமா என்னால தூங்கவே முடியலை. நீ வேணும்னு எனக்கு அவ்வளவு தாகம் இருந்தது. ஆனா நீ என் கையில சிக்கவே இல்லை”

 

“ஆமா, சிக்குனா மட்டும்? போடா. நடுராத்திரில கட்டி புடிச்சு டவ் ஷாம்பு போடுறியான்னு கேட்டவன் தான நீ?

 

“சே, சத்தியமா அன்னைக்கு மோப்பம் பிடிக்க எல்லாம் வரல. ரொமான்ஸ் பண்ண தான் வந்தேன். பண்ணவும் ஆரம்பிச்சேன். டேரக்ட்டா லிப்ஸ்ல முத்தம் கொடுக்க ஒரு மாதிரி இருந்தது. அதனால தான் அப்படி செஞ்சிட்டே வந்தேனா. டக்குனு தோணுனதை சொல்லிட்டேன். நீயும் தப்பா புரிஞ்சிகிட்ட”

 

“ஹ்ம்ம், நீ தொட்டதும் ஒரு மாதிரி சாக் அடிச்ச மாதிரி ஆகி, ரொம்ப எதிர்பார்ப்பு வந்துட்டா. அதனால தான் நீ அப்படி சொன்னதும் டக்குன்னு கோபம் வந்து கீழே தள்ளி விட்டுட்டேன்”

 

“நீ கீழே தள்ளி விட்டதும் என்ன ஆச்சு தெரியுமா டி மங்கி?”

 

“சொல்லு டா டாங்கி?”

 

“விழுந்து எந்திக்கும் போது துண்டு கீழே விழுந்துருக்கு”

 

“ச்சி, நல்லதா போச்சு நான் கோபத்துல போய்ட்டேன். அப்புறம் என்ன ஆச்சு?”

 

“என்ன ஆகும்? அந்த நேரத்துலே அப்பா வெளிய வந்துருக்காரு”

 

“ஐயையோ, அப்ப மாமா பாத்துட்டாரா?”

 

“ம்ம்”

 

“ஹா ஹா, செம சீன். அப்பவே திட்டினாங்களா?”

 

“இல்லை அடுத்த நாள் தான் கிறுக்கு புடிச்சிட்டான்னு கேட்டாங்க”

 

“என்கிட்டே கேட்டுருக்கணும். கிறுக்கு புடிச்சிருச்சுன்னு சொல்லிருப்பேன்”

 

“ஏன் டி?”

 

“பின்ன பன்னிரண்டு மணிக்கு குளிச்சிட்டு வர?”

 

“எல்லாம் உன்னால தான் டி. உன் நினைப்புல தான் குளிச்சிட்டே வந்தேன். அப்புறம் அடுத்த நாள் சாப்பிடும் போது உன்னை கிட்ட உக்கார வச்சு, உன் கையை பிடிச்சிக்கணும்னு நினைச்சேன் தெரியுமா?”

 

“அதை தான் பாத்தேனே? அந்த பிள்ளை காலை போய் சொறிஞ்சு விட்டுட்டு இருக்க? போடா”

 

“சத்தியமா அது உன் காலுன்னு தான் டி நினைச்சேன் அப்பு. அப்படி நடக்கும்னு நானே நினைக்கலை”

 

“சரி விடு. ஆனா பாட்டிக்கு முத்தம் கொடுத்தது தான் செம”

 

“ஏய், உன்னை கொன்னுருவேன் டி. தயவு செஞ்சு அதை மட்டும் நினைவு படுத்தாத அப்பு ப்ளீஸ்”

 

இன்னும் பழைய நிகழ்வுகளை இருவரும் அலசி கொண்டிருந்தார்கள். பேசி பேசியே ஏழு மணியாகி இருந்தது.

 

“நைட் சாமிக்கு வைத்த பொங்கல் தான் காலை சாப்பாடு. அதனால் எல்லாரும் மதியம் வரைக்கும் தூங்கலாம்”, என்று பாட்டி சொல்லி இருந்ததால் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள்.

 

நரேன் மற்றும் அபர்ணா மட்டும் தூக்கத்தை மறந்து கதை பேசி கொண்டிருந்தார்கள்.

 

“சரி டா, இனி பழசை பத்தி எல்லாம் பேச வேண்டாம். இப்ப ஒரே ஒரு முத்தம் தைரியமா கொடு பாப்போம்”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் அபர்ணா.

 

“நீயெல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு ஆகி போச்சே என் நிலைமை. நைட் வரட்டும். நீ என்ன ஆகுறன்னு பாரு. நைட் வர வரைக்கும் உன்னை முத்தம் கொடுத்தே சாகடிக்க போறேன் டி”, என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

அப்போது சரியாக நரேனை போனில் அழைத்தான் ராகுல்.

 

யாரோ என்று கடுப்புடன் நினைத்து கொண்டு அவளை விட்டு விலகி போனை கையில் எடுத்தான் நரேன்.

 

அவனை முறைத்தாள் அபர்ணா. “ப்ச், போன் அடிச்சா எப்படி டி முத்தத்தை கொடுக்க?”, என்று பாவமாய் கேட்டான் நரேன்.

 

“ம்ம், இப்படி தான்”, என்று சொல்லி கொண்டே அந்த போன் காலை கட் செய்து விட்டாள் அபர்ணா.

 

“சூப்பர் டி அப்பு”, என்று சொல்லி விட்டு மறுபடியும் அவள் அருகே வந்தான்.

 

“நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்ல கால் பண்றேன். இவனுக்கு தூக்கமா முக்கியம்? அதுவும் என் போனை கட் பண்ணிட்டு தூங்குறான்”, என்று நினைத்து கொண்டு மறுபடியும் நரேனை அழைத்தான் ராகுல்.

 

இந்த முறையும் அவள் உதட்டருகே வந்ததும் போன் சத்தம் கேட்டு விலகினான் நரேன். ப்ச் என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் அபர்ணா.

 

“இப்ப என்ன செய்ய?”, என்னும் விதமாய் அவளை பார்த்தான் நரேன்.

 

அவனை முறைத்தவள் அவனுடைய போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்.

 

சந்தோஷமாக அவளை நெருங்கினான் நரேன். இந்த முறை நரேனுக்கு அழைக்காமல் அபர்ணா எண்ணுக்கு அழைத்து தொல்லை செய்தான் ராகுல்.

 

“இவன் விட மாட்டான்”, என்று வாய் விட்டே சொல்லி கொண்டு போனை எடுத்து “என்ன டா உனக்கு பிரச்சனை?”, என்று கேட்டாள் அபர்ணா.

 

“அப்பு, நரேன் என்ன செய்றான்? ஒரு முக்கியமான  விஷயம் சொல்ல தான் போன் செஞ்சேன். அவன் கட் பண்ணிட்டு  சுவிட்ச் ஆப் பண்ணிட்டான். கண்டிப்பா ரெண்டு பேரும் வேற வேற ரூம்ல தான இருப்பீங்க? அவன் கிட்ட போனை கொடுகுறியா ப்ளீஸ்?”, என்றான் ராகுல்.

 

“முதல்ல அது என்ன முக்கியமான விஷயம்னு சொல்லு. அப்புறமா அவன் கிட்ட கொடுக்குறேன்”

 

“அதுவா அப்பு? இங்க ஆபிஸ் நாலு நாள் லீவ். அதனால நானும் உங்க ஊருக்கு வருவேன்”

 

“ஓ சந்தோசம், எப்ப கிளம்புற?”

 

“நாளைக்கு காலைல அப்பு?”

 

“எருமை மாடே, விளங்காதவனே. நீயெல்லாம் உறுப்படுவியா டா? உனக்கு மானம், ரோசம், சூடு, சுரணை இல்லைன்னு எனக்கு எப்பவோ தெரியும்? ஆனா கொஞ்சம் கூட அறிவு இல்லைன்னு இப்ப தான் தெரியும். நாளைக்கு வரதுக்கு, இப்பவே போனை பண்ணி உயிரை வாங்கணுமா? பிசாசே”, என்று கத்தினாள் அபர்ணா.

 

“ஏய், அப்பு. கொன்னுருவேன் பாத்துக்கோ. நான் உனக்கு அண்ணன். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற? என் நண்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? எனக்காக பொண்டாட்டின்னு கூட பாக்காம உன்னை டைவர்ஸ் பண்ணிருவான் பாத்துக்கோ”

 

“டேய் டேய், இன்னும் வாழவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே என்ன டா பேசுற? இங்க ஊருக்கு வரணும்னு நினைச்சா, பொட்டி படுக்கை எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பி வர வேண்டியது தான? என்ன கழுதைக்கு டா இந்த நேரத்துல போன் பண்ணி வெறுப்பேத்துற? உனக்கு மூளையே இல்லை மச்சான்”, என்று இடையில் புகுந்து கத்தினான் நரேன்.

 

“டேய் மாப்பிள, நீ அப்பு ரூம்ல என்ன டா செய்ற? பாத்தியா சொல்லவே இல்லை. எனக்கு சந்தோசமா இருக்கு டா. உனக்கு பல்ப் எரிஞ்சிட்டா? கூடிய சீக்கிரம் குவா குவா தானா? இருக்குற சந்தோஷத்துல உன்னை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கணும் போல இருக்கு நரேன்”, என்று சந்தோசமாக சிரித்தான் ராகுல்.

 

“ப்ளீஸ் மச்சான். நீ நாளைக்கு கிளம்பி இங்க வா. வந்து என்னை கட்டி புடிச்சு உன் சந்தோசத்தை எனக்கு காட்டு. ஆனா தயவு செஞ்சு இப்ப போனை வச்சிரு டா. ப்ளீஸ்”, என்று கெஞ்சினான் நரேன்.

 

“என்ன டா? இப்படி சொல்லிட்ட? எனக்கு உன்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு ஆசையா இருக்கு டா. அதான் விடிஞ்சிருச்சே. இன்னுமா அப்பு கூட பேச போற? நாம ரெண்டு பேரும் பேசுவோம் என்ன?”

 

“அடேய், உன்கிட்ட பேசி என்ன டா செய்ய போறேன்? உன் ஆசைல இடி விழ. வை டா போனை”, என்று சொல்லி வைத்து விட்டு போனை வைக்கும் போது அபர்ணா அந்த அறையை விட்டு சென்று கொண்டிருந்தாள்.

 

“அட பாவி காரியத்தையே கெடுத்துட்டானே”, என்று எண்ணி போனை எடுத்து மறுபடியும் ராகுலை அழைத்தவன் கெட்ட வார்த்தையை தவிர அனைத்தையும் பேசி திட்டினான்.

 

“தப்பான நேரத்துல போனை பண்ணி சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டேன் போல?”, என்று நினைத்து கொண்டு இந்த தடவை ராகுல் போனை அணைத்து வைத்து விட்டான்.

 

கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த நரேன் அருகே நைட்டி அணிந்து நின்றாள் அபர்ணா. அவளை பார்த்ததும் அவன் மனமும், முகமும் சேர்ந்தே மலர்ந்தது.

 

“வச்சிட்டானா அந்த பரதேசி?”, என்று கேட்டாள் அபர்ணா.

 

“ம்ம்”, என்ற படியே அவளை இழுத்து கட்டிலில் போட்டான். அவள் மேலே கவிழ்ந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான். “இனி எந்த வித தடங்கலும் வரக்கூடாது”, என்று கடவுளை வேண்டி கொண்டு அவள் உதடுகளை சிறை செய்தான்.

 

அவள் கரங்கள் உயர்ந்து அவன் முதுகில் பயணித்தது. அவன் கரங்களும் அவள் உடம்பில் ஊர்ந்தது. அதில் கிளர்ந்து நெளிந்தவள் “பாட்டி, நைட்டு…..”, என்று இழுத்தாள்.

 

“அதுக்கு தான் நல்ல நேரம் தேவை. இதுக்கு தேவை இல்லை”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு “சோப் வாசனை தூக்குது டி”, என்றான்.

 

அவன் அடுத்து என்ன சோப்பு என்று கூட சொல்லுவான் என்று எண்ணி அவன் தலை முடியை கொத்தாக தூக்கியவள் அவனுடைய உதட்டை பல்லால்  கடித்து அவனை பேசவிடாமல் செய்தாள்.

 

முற்றும்

 

Advertisement