Advertisement

அத்தியாயம் 4

 

காரிருளில்

வெண்பனியென

பளிச்சென்று புன்னகை

பூக்கும் நிலவில்

உன் திருமுகம்!!!!!!

 

“என்னோட லைப்ல அவனை தவிர வேற யாரும் இல்லை. அதே மாதிரி அவன் லைப்ல நான் மட்டும் தான் இருக்கணும்”, என்று உறுதியுடன் முடிவெடுத்த பின்னர் தான் மதுவால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

 

நேரம் போகாமல் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தாள் மது. வாசலில் அமர்ந்திருந்த மல்லிகா அருகில் சென்று அமர்ந்தாள். “என்ன மது, காபி வேணுமா டா?”, என்று கேட்டாள் மல்லிகா.

 

“வேண்டாம் மா. என்ன இங்க உக்காந்துருக்கீங்க? அப்பா எங்க?”

 

“வெளிய போய்ட்டு இன்னும் வரலை டா”, என்று மல்லிகா சொல்லி கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வந்தாள் மங்கை.

 

அவளை பார்த்ததும் “என்ன மங்கை ஏதோ யோசனையில் இருக்குற?”, என்று கேட்டாள்  மல்லிகா.

 

அவர்கள் பேச ஆரம்பித்ததும் ஒரு புன்னகையோடு உள்ளே சென்று விட்டாள் மது.

 

“அதை ஏன் மதினி கேக்கீங்க? எல்லாம் எங்க வீட்டுக்காரர்னால தான்?” , என்றாள் மங்கை.

 

“ஏன் முருகன் என்ன பண்ணான்? எங்க காணும்?”

 

“காலைலே போனாரு. இப்ப இருட்டிட்டு. இன்னும் காணும்”

 

“எங்க தான் போனான்?”

 

“தாலுகா ஆபிஸ்க்கு இந்த கவிதாவுக்கு ஒரு செர்டிபிகேட் வாங்க போனாரு. இன்னும் காணும். எங்க தண்ணி அடிச்சிட்டு விழுந்து கிடக்காரோ?”

 

“ச்சே ச்சே அப்படி எல்லாம் நடக்காது மங்கை. அங்க வேலை முடிய நேரம் ஆகிருச்சோ என்னவோ? வி.எ. ஓ, தாசில்தார் எல்லாரையும் பாக்கணும்ல?”

 

“ஹ்ம்ம் வி எ. ஓ தம்பி எல்லாம் உடனே கை எழுத்தை போட்டுரும். தாசில்தார் வேற ஊர் காரர். அவரு தான் போட காலம் கடத்துவார்”

 

“அப்படியா? சரி இப்ப இருக்குற நம்ம வி. எ. ஓ யாரு?”, என்று மல்லிகா கேட்டதும் வரும் பதிலுக்காக காதை தீட்டி கொண்டு அவர்கள் பேச்சை உள்ளே இருந்து கேட்டாள் மதுமிதா.

 

“நம்ம பூங்காவனம் அக்காவோட பையன் தான் மதினி”, என்றாள் மங்கை.

 

 “நீ…. நீ என்ன சொன்ன? யாரை சொல்ற? அந்த பையனா?

 

“ஆமா மதினி, செழியன் தம்பி தான் வி. எ. ஓ”

 

“ஓ”

 

“அருமையான தம்பி. குனிஞ்ச தலை நிமிராது. எந்த வம்பு தும்புக்கும் போகாது. ஊருக்கே நல்லது செய்யும்”

 

 

“அப்படியா? அவங்களை பத்தி எனக்கு ரொம்ப தெரியாது மங்கை. ”

 

 “நீங்க தான் இங்க இல்லையே. பூங்காவனம் அக்காவும் தங்கராசு மச்சானும் தங்கமானவங்க”

 

“ஹ்ம்ம் ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்களே?”

 

“ஆமாங்க அண்ணி. பெரியவ சுடரை பக்கத்து ஊருல தான் கட்டி கொடுத்திருக்கு. ஒரு வயசுல குழந்தை இருக்கு. சின்னவ நம்ம கவிதா கூட தான் படிக்கிறா”

 

“அந்த பையன் தான் மூத்தவனா? கல்யாணம் பண்ணலையா?”

 

 “செழியன் தம்பி தான் மூத்தது. அதுக்கு கல்யாணம் பத்தி ஒன்னும் பேசலை. ஆனா என்ன கவலை? அவனுக்கு தான் அவனோட அத்தை பொண்ணு வள்ளி ரெடியா இருக்காளே? அவளும் காலேஜ் முடிச்சிருக்கா. கூடிய சீக்கிரம் கல்யாணம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்”, என்று மங்கை சொன்னதும் உள்ளே கேட்டு கொண்டிருந்த மதுவுக்கு எரிச்சல் வந்தது.

 

தன்னுடைய அறைக்கு சென்றவளுக்கு “யாரு அந்த வள்ளி?”, என்று யோசனையாக இருந்தது. அவள் அடுத்த நாளே வள்ளியை சந்திக்கும் வாய்ப்பு வரும் என்று தெரியாமல் செழியனின் நினைப்பில் தூங்கி போனாள்.

 

அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த தன் அக்காவின் கணவர் சேகரை கண்டு புருவம் உயர்த்தினார் தங்கராசு.

 

“என்ன டா இது? காலங்காத்தால என் அக்கா புருஷன் வீட்டு வாசல்ல நிக்காரு. என்ன வில்லங்கமோ?”, என்று நினைத்து கொண்டு “வாங்க மச்சான்”, என்று தங்கராசு அழைக்கும் போதே அவருடைய அக்கா சரசுவும் வந்து விட்டார்.

 

“வாங்க அண்ணா, வாங்க மதினி என்ன வாசல்லே நின்னுட்டிங்க. உள்ளாரா வாங்க”, என்று சொன்ன பூங்காவனத்துக்கும் அவர்களை பார்த்து குழப்பம் வந்தது.

 

இளஞ்செழியன் இன்று சீக்கிரமே கிளம்பி விட்டதால் அவன் வீட்டில் இல்லை. வளர்மதி ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தாள். தலையில் ரிப்பனை முடிந்த படியே “வாங்க மாமா, வாங்க அத்தை”, என்றாள்.

 

இருவருக்கும் காபி

கொடுக்கும் வரை அவர்களும் எதுவும் பேச வில்லை. சரசு தான் மெதுவாக பேச்செடுத்தாள்.

 

“இல்லை தம்பி வள்ளிக்கு இருபத்தி ரெண்டு வயசாகுது. அவ வயசுல உள்ளவுகளுக்கு எல்லாம் கல்யாணம் நடந்துட்டு. அதான் இந்த வருஷமே அவளுக்கும் பண்ணலாம்னு இருக்கோம்”

 

“நல்ல விஷயம் தான அக்கா. அவளும் படிப்பை முடிச்சிட்டா. அடுத்து கல்யாணம் தான? தாராளமா செய்யலாம்”, என்றார் தங்கராசு.

 

அதை பத்தி தான் உன்கிட்ட பேச வந்தேன் தம்பி. உன் மச்சான் என்ன சொல்றார்னா நம்ம செழியனுக்கும் முடிக்கிற வயசு தான? இப்பவே பண்ணி வச்சா நல்லா இருக்கும்ன்னு”, என்று சரசு சொன்னதும்  உள்ளுக்குள் வெகுண்டாள் வளர்மதி.

 

பூங்காவனமும் தங்கராசுவும் திகைத்தார்கள். இப்படி பேச்சு வரும் என்று தெரியும் தான். ஆனால் பிடிகொடுக்காமல் இருக்கும் மகனை வைத்து கொண்டு அவர்களும் என்ன செய்வார்கள்?

 

போதா குறைக்கு வளர் வேறு குழந்தை ஊனமா பிறக்கும் என்று பீதியை கிளப்பி இருந்தாள்.

 

“என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? பூவு நீயும் பேசாமல் நிக்குற?”, என்று கேட்டாள் சரசு.

 

“இல்லை மதினி செழியன் என்ன சொல்லுவானோனு தான்”

 

“அட இது பெரிய விஷயமா? பேசுற விசயத்துல பேசுனா எல்லாம் சரியா போகும். நேத்து ஜோசியர் போய் பாத்தோம். மூணு மாசத்துக்குள்ள அவளுக்கு கல்யாணத்தை முடிக்கலைன்னா அப்புறம் மூணு வருசத்துக்கு கல்யாணம் முடியாதாம். அதான் ராசு உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வந்தோம்”, என்றார் சேகர்.

 

 அப்போதும் அவர்கள் அமைதியாக இருக்கவே “நிலைமை கை மீறி போயிருச்சு தம்பி. இப்ப என் மக உசுரு உன் கைல”, என்றாள் சரசு.

 

“என்ன அக்கா சொல்ற?”, என்று கேட்டார் தங்கராசு.

 

“ஆமா தம்பி நேத்து இந்த மனுஷன் ஜாதகம் பாத்துட்டு வந்து மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னதுக்கு வள்ளி வேண்டாம்னு சொன்னா. நான் கோபத்துல ரெண்டு இழுப்பு இழுத்துட்டேன். அந்த கழுதை விஷ பாட்டிலை கையில எடுத்துட்டா. அத்தானை தான் கட்டிப்பேன். இல்லைன்னா செத்துருவேன்னு சொல்றா”

 

“என்ன மதினி சொல்றீங்க, நம்ம வள்ளியா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“ஆமா பூவு. அதான் இப்படி விடியுரப்பவே வந்தோம். இப்ப என் மக உசுரு உன் மகன் கைல தான் இருக்கு”, என்று சொல்லி வராத கண்ணீரை துடைத்து கொண்டாள் சரசு.

 

“மாமா அவ சும்மா பூச்சாண்டி காட்டுவா. நீங்க பெருசா எடுத்துக்காதீங்க. அதெல்லாம் சாக மாட்டா. நீங்க எங்க அண்ணணனை விட்டுட்டு வேற மாப்பிள்ளை பாருங்க?”, என்று இடையில் புகுந்து வளர் சொன்னதும் அனைவரும் அவளை திட்ட ஆரம்பித்தார்கள்.

 

“வாயை மூடு வளர். வயசுக்கு தகுந்த மாதிரி பேசு”, என்றாள் பூங்காவனம்.

 

“உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம் பாப்பா. வள்ளி செத்துருவேன்னு சொல்லிருக்கான்னு கலங்கி போய் இருக்கோம். நீ இப்படி பேசுற?”, என்றார் தங்கராசு.

 

“அவ சின்ன பிள்ளை தம்பி. அவளை விடு. இப்ப எங்களுக்கு எங்க பொண்ணு நினைச்சு தான் கவலையா இருக்கு. ஒத்தை பிள்ளையை பெத்து வச்சு இப்படி காவு கொடுக்கவா?”, என்று முந்தானையில் மூக்கை சீந்தி அழுதாள் சரசு.

 

“செழியனை வர சொல்லு ராசு. அவன் கிட்டயே பேசுவோம்”, என்று சேகர் சொன்னதும் அவனுக்கு போன் செய்த தங்கராசு உடனே வீட்டுக்கு வர சொன்னார்.

 

அவனும் “வரேன் பா”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.

 

“ஐயோ இப்படி எல்லாரும் என் அண்ணன் வாழ்க்கையை பந்தாடுறாங்களே. அந்த வள்ளி திட்டம் தீட்டி தான் அனுப்பியிருக்கா. இதை விட கூடாது”, என்று நினைத்த வளர் “அம்மா அண்ணனுக்கு வள்ளி வேண்டாம் மா. அவளுக்கு வேற மாப்பிள்ளை பாப்போம்”, என்று வாதாடினாள்.

 

“நீ சும்மா இரு. ஒரு உசுரு போக நாம காரணமா இருக்க கூடாது. செழியன் நாங்க சொன்னா கேப்பான் மதினி. நாம அவங்களுக்கே கல்யாணம் செஞ்சு வைப்போம்”, என்றாள் பூங்காவனம்.

 

“ஆமாக்கா  பூவு சொல்றது தான் சரி. இந்த வள்ளி இவ்வளவு தீவிரமா இருக்கான்னா நாம முடிச்சு வச்சிரலாம். அதுக்கப்புறம் ஆண்டவன் பாடு”, என்றார் தங்கராசு.

 

“இவங்க எல்லாரும் அண்ணனை பிளாக்மெயில் பண்ண போறாங்க. அண்ணன் பாவம். இதை தடுத்து நிறுத்தணும். இப்ப மட்டும் இல்ல. ஒரேடியா நிறுத்தணும். இனி வள்ளி என் அண்ணன் வாழ்க்கைல வரவே கூடாது. அவனுக்கு தர்ம சங்கடமான நிலை வரவே கூடாது. என்ன செய்யலாம்”, என்று தீவிரமாக யோசித்த வளரின் கண்ணில் பட்டது செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்து.

 

“என் அண்ணனுக்காக இதை நான் செஞ்சே ஆகணும். இதை விட்டா என்னால அண்ணன் வாழ்க்கையை காப்பாத்த முடியாது”, என்று முடிவு எடுத்தவள் “அண்ணனுக்கு வள்ளியை கட்டி வைக்க கூடாது. அம்மா ப்ளீஸ் மா. மாமா அத்தை அவளுக்கு வேற பையன் பாருங்க”, என்று கடைசி முறையாக கெஞ்சி பார்த்தாள்.

 

“முடியாது. இந்த கல்யாணம் நடக்கட்டும். நீ சும்மா இரு வளர்”, என்று பூங்காவனம் சொன்னதும் “அம்மா ப்ளீஸ் மா. அவ செத்தா சாகுறா. அண்ணனை விட்டுருங்க மா”, என்றாள் வளர்.

 

அவள் அப்படி சொன்னதும் அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் தங்கராசு. கன்னத்தை பிடித்து கொண்டு நின்றவள் பாவமாக அவரை பார்த்தாள்.

 

“நானும் சின்ன பிள்ளைன்னு பொறுமையா இருந்தா நீ அதிகமா பேசுற. வாயை மூடிட்டு பள்ளி கூடத்துக்கு கிளம்புற வேலையை பாரு. இல்லைன்னா அடி பிச்சிருவேன்”, என்று தங்கராசு சொன்னதும் “எவளுக்காகவோ என்னையே அடிச்சிடீங்கள்ல? நீங்களே அப்படி இருக்கும் போது நானும் என் அண்ணனுக்காக எதையும் செய்வேன். என் உயிரை கொடுத்தாவது என் அண்ணன் வாழ்க்கையை காப்பாத்துவேன். வீட்ல ஒரு சாவு விழுந்தா எப்படி கல்யாணம் பண்ணுவீங்க. அவ சும்மா மிரட்டுனா. நான் உண்மையிலே என் அண்ணனுக்காக சாகுறேன்”, என்றவள் அவர்களே எதிர்பார்க்காத நேரம் அந்த மருந்தை எடுத்து குடித்து விட்டாள்

 

அதிர்ந்து போய் இருந்தவர்கள் அவள் அருகே ஓடி அதை பிடுங்கி தூர வீசினார்கள். வளர் இப்படி செய்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. “அடியே என்ன காரியம் பண்ணிட்ட?”, என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள் பூங்காவனம்.

 

அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் செயலற்று நின்றார் தங்கராசு. சரசுவும் சேகரும் கூட இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. அவள் முழு பாட்டிலையும் குடிக்க வில்லை தான். ஆனால் உள்ளே போயிருந்த மருந்தின் அளவு கொஞ்சம் அதிகம் என்பதால் அவள் வாயில் இருந்து நுரை வர ஆரம்பித்திருந்தது.

 

“ எனக்கு என் அண்ணனோட வாழ்க்கை தான் முக்கியம். அவனுக்கு பிடிக்காத எதையும் நீங்க செய்ய கூடாது”, என்று சொன்னவளின் கண்கள் சொருக ஆரம்பித்திருந்தது.

 

உள்ளே வந்த செழியன் கண்டது கண்கள் சொருகிய நிலையில் கிடந்த தன் பாசமிகு தங்கையை தான். “பாப்பா என்ன ஆச்சு? என்ன ஆச்சு அவளுக்கு?”, என்று அலறி கொண்டே அவள் அருகில் சென்றான்.

 

“வள்ளியை உனக்கு கட்டி வைக்க கூடாதுன்னு பூச்சி மருந்தை குடிச்சிட்டா பா”, என்றாள் பூங்காவனம்.

 

அடுத்த நிமிடம் அவளை கைகளில் அள்ளியவன் “அப்பா நான் இவளை ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போறேன். மங்கை அக்கா வீட்டுக்கு பக்கத்து வீடு டாக்டர் வீடு தான? உடனே அவங்களை கூட்டிட்டு ஹாஸ்ப்பிட்டலுக்கு வாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

 பூங்காவனம் அவன் பின்னே சென்றாள். தங்கராசு நேராக போய் நின்றது வாசுதேவன் வீட்டின் முன்பு தான். திறந்து கிடந்த கதவை வெளியே இருந்து தட்டினார்.

 

ஹாலில் இருந்த வாசுதேவன் எட்டி பார்த்தார். பதட்டத்துடன் நின்ற தங்கராசு கண்ணில் பட்டதும் “இவரா ?”, என்று ஒரு நிமிடம் நினைத்தாலும் அவர் பதட்டம் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த அவர் அருகில் சென்றார்.

 

“ஐயா டாக்டர் இருக்காங்களா? உடனே வர சொல்லுங்களேன். என் பொண்ணு மருந்தை குடிச்சிட்டு பேச்சு மூச்சு இல்லாம இருக்கா”, என்று சொன்ன தங்கராசுவின் கண்கள் கலங்கியது.

 

அவரிடம் அடுத்து விசாரணை செய்து நேரத்தை வீணாக கழிக்காமல்  அடுத்த நிமிடம் “மது மா, சீக்கிரம் கீழே வா”, என்று பதட்டத்துடன் அழைத்தார்.

 

“அப்பா இப்படி கூப்பிட மாட்டாரே”, என்று எண்ணி கொண்டு அப்போது தான் குளித்து முடித்து பாவாடை சட்டையுடன் சேலை கட்ட நின்றாள்.

 

அவர் கூப்பிட்ட கூச்சலில் மல்லிகா என்னவென்று விசாரிக்க “மதுவை உடனே கூட்டிட்டு வா. ஆஸ்பத்திரிக்கு போனும். எமர்ஜென்சி ”, என்றார் வாசுதேவன்.

 

பதட்டத்துடன் நின்ற தங்கராசுவை பார்த்த மல்லிகா கலக்கத்துடன் மாடி படியில் ஏறினாள். கிட்ட தட்ட ஓடினாள்.

 

தந்தை கூப்பிட்டதில் பதட்டத்துடன் இருந்த மது சேலையை அவசர அவசரமாக கட்ட முயன்றாள்.

 

“மது மா யாருக்கோ சீரியஸ் போல டா. சீக்கிரம் வா மா”, என்றாள் மல்லிகா.

 

“இதோ மா”, என்றவள் அவசர கோலமாக சேலையை கட்டி விட்டு தலையில் கட்டி இருந்த துண்டை கூட அவிழ்க்காமல் ஓடினாள். கீழே நின்ற தங்கராசுவை பார்த்ததும் அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

 

“அவனுக்கு எதாவது இருக்குமோ?”, என்று நினைத்தவள் தன்னை

Advertisement