Advertisement

 

மாயவனின் மலர்க்கொடியாள்-2

 

விளம்பரத்தைப் பார்த்த மறுநாளே தோழியின் திருமணம் திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் எனக் கூறி கிளம்பி விட்டாள் மலர்க்கொடி.அதற்கே தாம் தூம் எனக் குதித்தார் பொன்னையா.தற்சமயம் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என கண்டிப்பாகக் கூறிவிட்டார்.ஆனால் அத்தை சிவகாமியை தாஜா செய்து அவர் மூலம் தந்தையை சரிகட்டி விட்டாள் அவள்.அங்கு சென்ற பின் கடிதம் மூலம் சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள்.அவள் சென்றது மதுரையில் இருந்த தோழி சித்ராவின் வீட்டிற்கு.

 

இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

படிப்பு முடிந்த பின் சித்ரா திருமணமாகி மதுரையிலிருந்த கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.அதன் பிறகு இருவரும் போன் தொடர்பில் இருந்தனர்.தோழியின் மனம் தெரிந்தவள் சித்ரா.அதனால் அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாள்.

 

இளங்கலைப் பட்டத்தோடு யு.பி.எஸ்.ஸி தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தாள் மலர்க்கொடி.அதனால் அவள் விண்ணப்பம் இந்திய ராணுவ அகாடமியால்(என்.டி.ஏ) ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

 

அதன் பிறகு நடந்த நான்கு நாள் நேர்முகத் தேர்விலும் தேறி என்.டி.ஏ. கேடிட்(ராணுவ பயிற்சி மாணவி) ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டாள் மலர்க்கொடி.

 

இனி வரும் இரண்டு வருடமும்(நிஜத்தில் ஒரு வருடம் தான் நம்ம கதை ஓடனும்மில்ல) கொடைக்கானலில் உள்ள அகாடமியில் பயிற்சி பெற வேண்டும்.

 

மறுநாள் காலை கொடைக்கானல் செல்வதற்கு தன் உடைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் மலர்க்கொடி.அப்போது அங்கே வந்த சித்ரா ஏதோ சொல்லத் தயங்குபவள் போல மலரின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அதை உணர்ந்தவள் போல்,

 

“சித்து!என்ன சொல்ல வந்தியோ அத தயங்காம சொல்லு…”

 

“மலர்…! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே…உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… உங்க மாமா காணாம போயி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு…அப்படி ஒண்ணும் விவரம் தெரியாத வயசுல அவர் போகலை… திரும்பி வரதா இருந்தா இத்தனை நாள்ல வந்திருக்கலாம்…ஆனா அவர் வரவேயில்லை…அப்படி இருக்கும் போது நீ அவருக்காக ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை விட்டுட்டு இந்த ஆபத்தான வேலைல சேரணுமா?நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு”

 

அவள் கூறியதை அதுவரை பொறுமையாகக் கேட்ட மலர் முகத்தில் தோன்றிய சிறு சிரிப்போடு சித்ராவின் அருகில் வந்தாள்.

 

“சித்ரா!மாமா வேண்ணும்ன்னு வீட்டை விட்டு போகலை…அவர் செய்யாத தப்பை செஞ்சார்ன்னு சொல்லி அவர வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தப்புன்னு அப்பா திட்டினதுனால தான் அவர் மனசு நொந்து போயிட்டார்… அப்படியும் போகும் முன்னாடி அத்தையும் தன்னோட வர சொன்னாரு… அத்தை தான் அண்ணனை விட்டு எங்கேயும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க…. அதனால்தான் மகன விட அண்ணன் தான் பெரிசான்னு கோவிச்சிக்கிட்டு யாருக்கும் சொல்லாம போயிட்டாரு….ஆனா அவர் கோபம் வைராக்கியம் எல்லாம் ஒரு நாள் சரியாகும் அப்ப அவர் கண்டிப்பா திரும்பி வருவார்…அது வரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன்… இந்த மலர் என்னிக்கு இருந்தாலும் மாயவனுக்கு தான்….”

 

தன் தோழியின் குணம் தெரிந்தவளாதலால் சித்ரா மேலே எதையும் சொல்லவில்லை.அவள் எண்ணப்படியே அவளின் மாயவன் அவளிடம் சீக்கிரமே வந்து சேர வேண்டும் என மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.அவள் வேண்டுதல் பலிக்குமா?

 

கொடைக்கானலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது அந்த பஸ்.காலைக் காற்று முகத்தில் வீச அந்த பயணத்தை ரசித்தாள் மலர்க்கொடி.மூன்றரை மணி பயணத்தை அவள் முடிக்கும் முன் நாம் அவள் பயிற்சி பெறப் போகும் அகாடமியியை சுற்றிப் பார்த்து விடுவோம்.

 

வெண்பஞ்சு மேகம் மலைமுகட்டை முத்தமிட்டு செல்லும் வட்டக்கல்லிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காட்டுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்தது கொடைக்கானல் மிலிட்டரி அகாடமி.

 

இந்திய எல்லைகளில் தன் உயிரை பணையம் வைத்து போராடும் வீரர்களில் பலர் இந்த அகாடமியில் பயிற்சி பெற்றவரே.அகாடெமியின் பிரின்சிபால் பிரிகேடியர் சந்திரசேகர்.மாணவர்களின் சிம்மசொப்பனம்.அவர் பெயரைக் கூறினாலே அனைவரும் நடுநடுங்குவர்.சட்டம் ஒழுங்கை மீறியவருக்கு கடுமையான தண்டனை வழங்குவார்.ஆனால் அதே சமயம் தன் மாணவர்களை தன் மக்கள் போல நேசித்தார்(அவுங்களுக்கு தெரியாம தான்…தெரிஞ்சா தலையில ஏறிடமாடங்களா நம்ம பசங்க).

 

பன்னிரெண்டு மணி அளவில் அகாடமிக்கு வந்து சேர்ந்து விட்டாள் மலர்க்கொடி.அவளின் ஆவணங்களை சரிபார்த்து அவளுக்கு அறையும் வழங்கப்பட்டது.தன் பெட்டியோடு அந்த அறை வாயிலுக்கு வந்தவள் சாத்தியிருந்த கதவை தட்டினாள்.கதவை திறந்த பெண் ஜீன்ஸ் டீ சர்ட் என நாகரீக உடையில் இருந்தாள்.இவளைப் பார்த்த கண்களில் நட்பு தெரிந்தது.

 

“ஹாய் நான் மலர்க்கொடி…ரூம் நம்பர் டிவன்டின்னு சொன்னாங்க…”

 

“ஓ…ஐம் நேஹா…யூவர் ரூம் மெட்…உள்ள வாங்க..”என கை நீட்டினாள்.

 

“ஹாய்..”என அவளோடு கைக் குலுக்கியவள் உள்ளே சென்றாள்.

 

நட்பு மலர்வதற்கு சில மணித்துளிகளே போதும் என்ற போது சந்தித்து ஒரு மணி நேரத்திற்குள் இருவரும் வாடி போடி அளவிற்கு நெருங்கியிருந்தனர் என்பதில் வியப்பில்லை.மலர் சிறிது பிரஷ் அப் ஆனப் பின் இருவரும் கேன்டீன் சென்றனர்.பேசி சிரித்தபடியே இருவரும் சாப்பிட்ட போது திடிரென நேஹா பேச்சை நிறுத்தியதைக் கண்டு அவளை நிமிர்ந்து பார்த்த மலர் அவள் தன் பின்னே யாரையோப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

 

‘யார பாத்து இப்படி முறைக்குறா?’என மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.அங்கே சிறிது தூரத்திலிருந்த டேபிளில் அமர்ந்திருந்த  இளைஞன் ஒருவன் நேஹாவைப் பார்த்து தன் சிரிப்பை அடக்க பாடுபடுவது மலருக்கு நன்றாகப் புரிந்தது.திரும்பி பார்த்தபோது நேஹா தன் உணவை மறந்து அவனையே முறைத்திருந்தாள்.

 

“நேஹா!நேஹாா!”என அவள் கையில் தட்டினாள்.

 

“ம்….மலர்ர்…. ஏதாவது சொன்னியா?”

 

“ம்…. சொன்னேன் சொரக்காய்க்கு உப்பில்லேன்னு….எதுக்குடி அவனையே அப்படி முறைச்சு பாக்கற?”

 

“பின்ன அந்த ரோக் பாத்து சிரிக்க சொல்றியா…. டர்ட்டி டாக்…அவனை பார்த்தாலே இரிடேட் ஆகுது…”

 

“அப்படி என்னதான்டி ஆச்சு?”

 

“ரூம்க்கு போயி சொல்றேன்… போலாம் வா”என்று மலரின் கையைப் பிடித்து இழுத்தபடி சென்றாள் நேஹா.அவர்கள் அவன் அமர்ந்திருந்த டேபிளைத் தாண்டி செல்லும் போது அவன் நேஹாவிடம்,

 

“இப்பவாது லேடிஸ் ஹாஸ்டல் எதுன்னு பாத்து போங்க மேடம்”என்றான் நக்கலாக.

 

“யூ….யூ….நான் சென்ஸ்,இடியட்,கண்ட்ரி பூரூட்..”என அவனை சரமாரியாக திட்டத் தொடங்க…

 

“தமிழ்…தமிழ்ல….நேத்திக்கே  சொல்லிறிக்கேன் திட்றதா இருந்தா தமிழ்ல திட்டு…பீட்டர் விடாதேன்னு”

 

“டேய்…!”

 

சண்டை வலுத்துவிடும் முன் மலர் அவளை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.ரூமிற்கு வந்த பின்னும் ஆங்கிலத்தில் சகட்டுமேனிக்கு அவனைத் திட்டித் தீர்த்தாள் அவள்.டம்பளரில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து அவள் கையில் திணித்தாள்.

 

“இத மொதல்லக் குடி… அப்புறம் நேத்திக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு”என்றாள் மலர்.

———————————-

 

நேற்று காலை நேஹா அகாடமியில் சேர்ந்து அவளுக்கு ரூம் கொடுத்த போது ஹாஸ்டல் எங்கேயிருக்கிறது என்று அவள் கேட்டதற்கு அந்த பணியாளர் நேராக சென்று இரண்டாவது வலதுபுறத்தில் செல்லுமாறு கூறினார்.அவர் கூறியது போல் சென்ற போதே ஒரு கையில் பெட்டியும் மறுகையில் மொபைலை வைத்துக் கொண்டு அதை நோண்ட ஆரம்பித்து விட்டாள்.மெசேஜிற்கு ரிப்லே செய்யும் ஆர்வத்தில் வலது புறம் செல்வதற்கு பதில் இடதுபுறம் சென்று மேலே இருந்த போர்டையும் படிக்காமல் நேராக சென்று இருபதாம் எண் அறைக்கு சென்று பெட்டியை ஒரு ஓரமாக வைத்தவள் அங்கிருந்த கட்டிலில் படுத்தவாறு மீண்டும் மெசேஜில் முழுகிவிட்டாள்.

 

திடுமென அறையிலிருந்த கதவு படாரென திறந்ததும் திடுக்கிட்டு எழுந்த நேஹா அங்கே டவலொன்றை மட்டும் இடுப்பில் சுத்திக் கொண்டு சொட்ட சொட்ட நனைந்த கோலத்தில் நின்றிருந்த இளைஞனைக் கண்டு

 

“ஆ……….ஆ………”

 

எனக் கூவினாள்.

 

அவனும் அவளைக் கண்டு

 

“ஆ….இல்ல!……ஐயோ!”

 

எனக் கத்தியவன் அவள் அலறல் தொடரவும் வேகமாக வந்து அவள் வாயைப் பொத்தினான்.பொத்தியக் கையை தட்டிவிட்ட நேஹா

 

“யூ ஸ்கௌன்டரல்..இடியட்… லேடீஸ் ரூம்ல உனக்கென்ன வேலை….கெட் அவுட் ஃப்ரம் ஹியர்”

 

“ஏய் நிறுத்து உன் பீட்டர….என் ரூம்ல வந்து ஒக்காந்துகிட்டு என்னையே வெளிய போக சொல்றியா!நீ போ வெளியே…”

 

“யூ…யூ…திஸ் இஸ் மை ரூம்….யூ கெட் அவுட்….நான் சென்ஸ்”

 

“அம்பளங்க ஹாஸ்டல்குள்ள வந்திட்டு உன் ரூம்ன்னு இங்கிலிபீசுல திட்றியா!போ வெளியே”

 

“திஸ் இஸ் ரூம் நம்பர் டெவென்டி…ஸோ திஸ் இஸ் மை ரூம்…இப்ப போறியா…இல்ல கம்பெளைண்ட் பண்ணட்டுமா”

 

“வாம்மா ராசாத்தி!பூகாரு பண்ணுவீங்களா…பூகாரு…வா…. நானும் சொல்றேன்… ஆம்பளங்க ஹாஸ்டலுக்கு வந்து இந்த பொண்ணு கலாட்டா பண்ணுதுன்னு”

 

“லை…..இது லேடீஸ் ஹாஸ்டல்…வேணுன்னா போயி போர்ட் பாரு….கன்ட்ரீ ப்ருட்”

 

“தமிழ்… தமிழ்…தமிழ்ல…பேசு… இந்த ஜீவாட்ட பீட்டரு விட்ட வகுந்துடுவேன்… கொஞ்ச நேரம் வெளியே போயி நில்லு…”

 

“வொய்..ம்… எதுக்கு.. போகனும்..நோ…இது என் ரூம் நா ஏன் போனும்?”

 

“போகமாட்டியா! அப்படின்னா சரி….நா துணி மாத்தரத கண் குளுர பாரு”

என்றவன் தன் டவலில் கை வைக்கவும்

 

“நோ!…ஸ்டாப் ஸ்டாப்….நா போறேன்..

 

ஐந்து நிமிடத்தில் உடை மாற்றி வந்தவன் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலின் வெளியே வந்து அதன் போர்ட்டைக் காட்டினான்.அதை பார்த்து பேந்த பேந்த விழித்தாள் நேஹா.ஏனென்றால் நிஜமாகவே அது ஆண்கள் ஹாஸ்டல் தான்.அதுவரை இருந்த கெத்து மறைந்து உள்ளே போன குரலில்

 

“சாரி…ம்….பை மிஸ்டேக்…ம்… தெரியாம நடந்திடுச்சு”என்றபடி உள்ளே சென்று தன் பெட்டியை எடுத்து வந்தாள்.அவள் அங்கிருந்து அகலும் முன்

 

“இனிமேயாவது கண்ணை பிடரில வைக்காம பாத்து நிதானமா போ…என்னை மாதிரி எல்லாரும் பாவம்ன்னு விட மாட்டாங்க…சரியா”

 

“யூ…யூ…..”

 

அவன் சிரிக்கவும் அவனை கோபத்தோடு முறைத்தபடி தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.

 

——————————————–

 

அவள் கூறிய கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் மலர்க்கொடி.அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.அதில் கடுப்பான நேஹா

 

“மலர்… உனக்கு கூட என்னை பார்த்தா காமெடியா இருக்கா?ஏதோ பை மிஸ்டேக் அங்கே போயிட்டேன்… அதுக்கு அவ்ளோ லெக்சர் குடுக்கறான் டர்டி ஃபெலோ..”

 

“சாரி…சாரி… இனிமே சிரிக்கலே…. நீயும் போனை பாத்துக்கிட்டே போகறத விட்டுடு…”

 

அப்போது வெளியே இருந்த மைக்கில் அறிவிப்பு கேட்டது.

 

“கேடிட்ஸ் எல்லாரும் உடனே அசெம்பிளி ஹாலில் ஆஜராக வேண்டும்”

 

“எதுக்கு கூப்பிடறாங்க?”

 

“தெரியலையே…கம் லெட்ஸ் கோ”

 

என்றபடி இருவரும் அசெம்பிளி ஹாலுக்கு வந்த போது அந்த ஹால் மாணவர்களால் நிரம்பி இருந்தது.நேர் எதிரே இருந்த சிறிய ஸ்டேஜில் பிரிகேடியர் சந்திரசேகர்(இனிமே பி.ஸி) நின்றிருந்தார்.அனைவரும் வந்ததை உறுதி செய்தவர்

 

“மை டியர் கேடிட்ஸ்! வெல்கம் டூ திஸ் மிலிட்டரி அகாடமி.உங்க எல்லாருக்கும் நாளையில் இருந்து பயிற்சி தொடங்குகிறது.நாள் செல்ல செல்ல பயிற்சிகள் கடினமாகிக் கொண்டே போகும்.இந்த இரண்டு வருடமும் உங்களுக்கு பயிற்சி அளிக்க போகும் ஃபெக்யூலிட்டி மெம்பர்ஸ உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்.”

 

என்றபடி கீழே நிற்கும் நான்கு பேரை மேடைக்கு அழைத்தார்.அவர்களில் முதலில் வந்தவர் முரட்டு மீசையும் கடுமையான கண்களோடு வாட்டசாட்டமாக இருந்தார்.முதல் பார்வையிலேயே ஈவு இரக்கமற்ற மனிதர் என்பது தெளிவாகத் தெரிந்தது.அவரை கைக் காட்டி

 

“இவர் மேஜர் சதீஷ்… ட்ரைனிங் கேமண்டர்…அடுத்து கேப்டன் குணாளன் கொரில்லா வார்ஃபேர் கேமண்டர்….. நெக்ஸ்ட் தீபா எக்ஸஸைஸ் டிரைனர்….அண்ட் திஸ் இஸ் கேப்டன் ஆதித்யா ஸ்ட்ராஜிடி அண்ட் கம்யூனிகேஷன் டீச்சர் கம் டிரைனிங் ஆபிஸர்…தட் சால்….நாளைலேந்து க்ளாஸஸ் அண்ட் டிரைனிங் ஆரம்பிக்குது….டிஸிப்லீன் ரொம்ப முக்கியம்…அத மீறியவங்க கடுமையா தண்டிக்கப் படுவாங்க…ஸோ ஆல் தி பெஸ்ட் ஃபார் யூர் டிரைனிங்… டிஸ்மிஸ்…

 

கடைசியாக அவர் சொன்னது அரைகுறையாகத் தான் அவர்கள் காதில் விழுந்தது.ஏனென்றால் கேப்டன் ஆதித்யா அறிமுகம் செய்யப்பட்ட பின் அனைவரும் திகைத்து நின்று விட்டனர்… முக்கியமாக மாணவிகள்.

 

கேப்டன் ஆதித்யா ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக மாநிறத்தில் காந்த கண்களோடு பார்த்தவர் பார்த்தபடி மயங்கி நிற்கும் ஆணழகனாக இருந்தான்.பி.ஸியின் பேச்சு முடிந்து அவர் சென்ற பின் மாணவிகள் ஒருவருக்கொருவர் அவனைப் பற்றி பேசிக் கொண்டனர்.நேஹா கூட

 

“வாவ் வாட் ய ஹேண்ட்சம் மேன்”என்றாள்.

 

“ஷ்….நேஹா…அவரு நம்ப டீச்சர்..அவரையே சைட் அடிக்கிறியா?”

 

“ஸோ வாட்….ஹி இஸ் டேஷிங் “

 

எல்லோரும் அகன்ற பின் ஆதித்யாவை இறுக அணைத்துக் கொண்டான் குணாளன்.

 

“ஆதி!பாத்து எவ்ளோ நாள் ஆச்சு!ஐ ரியலி மிஸ் யூ மேன்….”

 

“நானும் தான்டா குணா….மூணு வருஷம் ஆயிடுச்சுயில்ல நாம சேர்ந்து ட்யூடி பாத்து…ம்…”

 

“பேச நிறையா இருக்கு விஷயம்…வா ரூமுக்கு போய் பேசலாம்…”

 

என்றபடி இருவரும் ஆதியின் அறைக்கு சென்றனர்.

 

நாளையிலிருந்து அவர்கள் எல்லோரின் வாழ்வும் பல விதத்தில் மாறப் போவதை அவர்கள் யாருமே அறியவில்லை.

 

Advertisement