Advertisement

மாயவனின் மலர்க்கொடியாள்-3

குணாளனோடு சிறிது நேரம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்தான் ஆதித்யா.

 

ஆதித்யா சுந்தரம்-சீதா தம்பதியின் ஒரே மகன்.டிகிரி முடிந்த பின் இதே அகாடமியில் பயிற்சி பெற்று மூன்று வருடங்களாக இந்திய எல்லையில் பணியாற்றி பின் இங்கேயே டீசிங் ஸ்டாஃபாக நியமிக்கப்பட்டிருக்கிறான்.அவனின் தந்தை சுந்தரமும் ஆர்மியில் மேஜராக பணியாற்றியவரே.இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த யுத்தத்தில் காலில் குண்டடிப்பட்டதால் சிறிது ஊனமுற்று ஆர்மியில் இருந்து ஓய்வு பெற்றார்.சிறு வயதிலிருந்தே தந்தையின் தேச பக்தியும் வீரத்தையும் பார்த்தே வளர்ந்ததினால் ஆதியும் எல்லோரையும் போல் சாஃட்ப்வேர் வேலை வெளிநாடு செல்வது என போகாமல் தன் உயிரை பணையம் வைத்து நாட்டைக் காக்கும் உன்னத வேலையான ராணுவத்தில் சேர்ந்து விட்டான்.ஆதிக்கு தாய்-தந்தை என்றால் உயிர்.அதிலும் அவனை தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்த தாய் சீதா என்றால் அன்பில் மனம் குழைந்து சின்னஞ்சிறு குழந்தையாகி விடுவான்.அவரின் பேச்சிற்கு அவன் இதுவரை மறுபேச்சு பேசியதில்லை.

 

இப்போதும் அவரை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்த போது அவனின் போன்

           

‘சுற்றும் விழி சுடரே

சுற்றும் விழி சுடரே என்

உலகம் உன்னை சுற்றுதே’

 

என்று பாட திரையில் தாயின் எண்ணைக் காணவும் முகம் புன்னகையில் விரிய எடுத்துக் காதில் வைத்தவன்

 

“அம்மா! எப்படி இருக்கீங்க..கால் வலி பரவாயில்லலயா?….தெரபிஸ்ட்கிட்ட போனீங்களா?மாத்திரையெல்லாம் டைம் டைம்க்கு சாப்பிட்றீங்க தானே?அப்பா எப்படி இருக்காரு?”

 

என கேள்விகளை அடுக்கினான்.

 

“டேய் டேய் ஒவ்வொரு கேள்வியா கேளுடா…. மூச்சு விடாம கேட்டா நா எப்படிடா பதில் சொல்றது”

 

“சரி…சரி… இப்பத்தான் கேள்விய நிறுத்திட்டேனே நீங்க ஒவ்வொன்னா பதில் சொல்லுங்க”

 

“நா நல்ல இருக்கேன்…தெரப்பிஸ்ட்க்கிட்ட போயிட்டு வந்தேன்..இப்போ ரொம்ப இம்ப்ரூவ் ஆகியிருக்குன்னு சொல்றாரு….மாத்திரையெல்லாம் கரெக்டா சாப்பிட்றேன்.. உங்க அப்பாவும் நல்லா இருக்காரு..இப்ப நீ சொல்லு…நீ எப்படி இருக்கே?ஏன் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி வீட்டுக்கு வரல?”

 

“டைமே இல்லமா…அஸ்ஸாம் ட்யூடி முடியருத்துக்கே லேட் ஆயிடுச்சு…நேரா இங்கேயே வந்து ஜாயின் பண்ணிட்டேன்….முதல்ல கிடைக்கற லீவுல வீட்டுக்கு பறந்து வந்திட்றேன் சரியா?”

 

“இல்ல…நீ ஒரு இரண்டு நாளைக்கு வீட்டுக்கு வர முடியாதா?”

 

“இரண்டு நாளைக்கா?எதுக்குமா? ஏதாவது எமெர்ஜென்ஸியா?”

 

“அது..வந்து…அது..நம்ப நிஷா இல்ல அவ இப்ப லீவுக்கு வீட்டுக்கு வராளாம்… அதான் அவள… பொண்ணு பாக்க போகலாமே..ன்..னு”

 

“அம்மா…..!நா உங்களுக்கு நூறு வாட்டி சொல்லிட்டேன்.. அந்த நிஷா எனக்கு சரிவர மாட்டா….அவ மேக்கப்பும் அலட்டலும்….ஐ ஜஸ்ட் காண்ட் டாலரேட் ஹர்…”

 

“கல்யாணம்னு ஒண்ணு ஆயிட்டா அதெல்லாம் சரியாடும்டா கண்ணா!”

 

“அந்த விஷப் பரீட்சைக்கு நா தயார் இல்ல….என் கனவு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒரு குணம் கூட அவகிட்ட இல்ல…ஸோ நீங்க இந்த பேச்சை இப்பவே விட்றுங்க”

 

“உனக்கு கல்யாண வயசு தாண்டி போகுதேடா கண்ணா…அது உனக்கு புரியலையா?”

 

“அம்மா எனக்குன்னு இருக்கறவ இனிமே பொறக்க போறதில்ல….எங்கேயோ எனக்காகவே பிறந்து எனக்காக காத்துகிட்டு தான் இருப்பா…அவள பாக்கற வரைக்கும் நோ மேரேஜ்….ஓகே”

 

“சரிடா…அவ எப்ப கிடைக்கிறாளோ கூட்டிட்டு வா…மறு வார்த்தை பேசாத அவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

 

அவர் போனை வைத்த பின்பு தன் படுக்கையில் படுத்தபடி தன் மனதின் உணர்வுகளை எண்ணிப் பார்த்தான்.அவனின் ஆழ்மனதில் தன்னவள் என அவனையறியாமலேயே ஓர் உருவம் உருவாகியிருந்தது.இதுவரை எந்த பெண்ணும் அந்த உருவத்தோடு பொருந்தி வரவேயில்லை.ஆனால் ஏனோ எப்படியும் அவள் தன்னைத் தேடி வந்து விடுவாள் என்று அவன் நிச்சயமாக நம்பினான்.இன்றும் அவள் நினைவோடு கண்ணயர்ந்தான்.

 

மறுநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் அகெடமியின் பெல் உரத்து ஒலித்து மாணவர்களை எழுப்பியது.கிராமத்தில் சீக்கிரம் விழித்து பழகியவளாததால் மலர் உடனே விழித்துக் கொண்டாள்.ஆனால் நேஹாவோ சீக்கிரம் எழுந்து பழக்கமில்லாதவள்.மலர் குளித்து யூனிஃபார்மில் ரெடியான பின்பும் அவள் எழவேயில்லை.

 

“நேஹா!….நேஹா!எந்திரிடி….லேட்டாயிடுச்சு அந்த மேஜர் சும்மாவே திட்டும்.அதுல லேட் வேற ஆச்சு… அவ்ளோதான்…”

 

அவள் அவ்வளவு நேரம் எழுப்பியும் எந்த பயனும் இல்லாததால் சிறிது யோசித்த மலர் பரபரப்பானக் குரலில்

 

“நேஹா…நேஹா…எந்திரி….மேஜர் சதீஷ் வந்திருக்காரு…எந்திரிடி…”

 

அதுவரை எதற்கும் அசைந்துக் கொடுக்காத நேஹா மேஜர் சதீஷின் பேரைக் கேட்டதும்

 

“ஆ……டெரரர் வந்துட்டாரா….எங்கே..எங்கே….”

 

என்று பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

 

“ஹா…ஹா…இத்தன நேரமா எழுப்பினே…எந்திரிச்சியா… இப்ப பாரு மேஜர் பேர சொன்னதும் அடிப்பிடிச்சி எந்திரிக்கறத…..ஹா…ஹா”

 

“ஏய் காலங்காலைல அந்த டெரரர் நேம சொல்லி என் ப்யூடிஃபுல் ட்ரீம கெடுத்துட்டுயே… உன்னை….”

 

இருவரும் சிறிது டாம் அண்ட் ஜெர்ரி ஆடிய பின் நேஹாவும் குளித்து யூனிஃபார்மில் கிளம்பினாள்.

 

அவர்களின் அன்றைய முதல் பயிற்சிக்காக எல்லோரும் கிராவுண்டுக்கு செல்ல வேண்டும்.மாணவர்களோடு வந்துக் கொண்டிருந்த ஜீவா நேஹாவைப் பார்த்துக் கேலியாக சிரித்தான்.அதைக் கண்டு கோபமுற்ற அவள் நேராக அவன் முன் சென்று நின்றாள்.

 

“ஏய் எதுக்கு என்னைப் பாத்து சிரிச்சே?”

 

என்று கவனமாக ஆங்கிலத்தைத்‌ தவிர்த்துக் கேட்டாள்.

 

“இல்ல ஒரு ஹாஸ்டல் ரூம பாத்து சரியா போகத் தெரியல… இந்த லட்சணத்துல நீயெல்லாம் இந்தியாவ எப்படி காப்பாத்த போற…அத நெனைச்சி தான் சிரிச்சேன்”

 

“யூ…யூ… ஸ்டுபிட் நான்சென்ஸ் இடியட்”

 

கோபத்தில் அவளுக்கு ஆங்கிலம் தான் முதலில் வந்தது.

 

“ம்…ம்….. தமிழ் தமிழ் எங்கிட்ட தமிழ்ல பேசுன்னு எத்தனை தடவை சொல்றது…உன் பீட்டரை மூட்டை கட்டி விமானத்துல அனுப்பு”

 

இருவருக்கும் சண்டை முற்றும் முன் நேஹாவை இழுத்துக் கொண்டு போனாள் மலர்க்கொடி.

 

கிரவுண்டில் எல்லோரும் வரிசையாக நின்றிருந்தனர்.மாணவர்களை ஒரு பார்வைப் பார்த்த மேஜர் சதீஷ்

 

“ம்… இந்த வருஷ பேட்ச் பார்த்தா ஒரு வாரம் கூட தாங்க மாட்டீங்க போல இருக்கு… பாக்கலாம் யாரு நாக் அவுட் ஆகி வீட்டுக்கு போறீங்ன்னு…எஸ்பெஷலி கேர்ள்ஸ்….”

 

“ஐ அப்ஜெக்ட் சார்….ஏன் பெண்களால முடியாது…வே கேன் டூ எனி திங் லைக் மென்….பெண்களால முடியாதுன்னு சொன்ன காலம் மலையேறி போச்சு….இப்ப வீட்டை நடத்துறதலேந்து ராக்கெட்ல சந்திரனுக்கு போற வரைக்கும்..பெண்களால செய்ய முடியாதது எதுவுமே கிடையாது… நாங்க பெஸ்ட் கேடிட்ஸா பாஸ் அவுட் பண்ணிக் காட்றோம்”

 

என தைரியமாக பேசியது வேறு யாரும் இல்லை நம் மலர் தான்.

 

அவளின் பேச்சைக் கேட்டு ஜீவாவும் நேஹாவும் (இதுல மட்டும் ஒத்தும)சூப்பரு என்ற லுக் விட மேஜர் சதீஷ் மட்டும் கனல் கக்கும் விழிகளால் அவளை விழித்துப் பார்த்தார்.அவருக்கு எப்பொழுதுமே தனக்கு எதிர் பேசுபவரை பிடிக்காது.அதிலும் பெண்கள் ராணுவத்திற்கு ஏற்றவர்கள் இல்லை என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.அதனால் முடிந்த வரை கஷ்டமான பரிட்சைகளைக் கொடுத்து அவர்களாகவே அகாடெமியை விட்டு போகுமாறு செய்து விடுவார்.இப்போது மலரையும் அப்படியே செய்வது என மனதிற்குள் தீர்மானம் செய்துக் கொண்டு விட்டார் மலரின் நினைத்ததை எப்பாடுபட்டாவது சாதிக்கும் குணத்தை அறியாமல்.

 

“ஆல் கேடிட்ஸ் ஃபுல் க்ரவுண்ட ஃபிப்டி டைம்ஸ் சுத்துங்க…அண்ட் யூ கேடிட் மலர்க்கொடி சீனியரை எதிர்த்து பேசினதுனால ஹண்ட்ரட் டைம்ஸ் சுத்தனும்… ஸ்டார்ட் நௌ”

 

அவரின் அநியாயம் புரிந்தாலும் மலர் பொறுமைக் காப்பது என முடிவெடுத்தாள்.அவருக்கு செயலில் காட்ட வேண்டும் என தீர்மானித்தாள்.

 

எல்லோரும் தங்கள் ரவுண்ட் முடிந்து காலை உணவிற்கு சென்று விட்டனர்.இவளுக்காக நின்றிருந்த ஜீவாவையும் நேஹாவையும் போகுமாறு மலர் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

 

முடிந்தவரை வேகமாக சுற்றி முடித்த பின் பழக்கமில்லாத கால் வலியோடு க்ளாசிற்கு நேரமாகி விட்டதே என கவலையோடு ஓடியவள் யார் மேலையோ பலமாக மோதிக் கொண்டு விட்டாள்.

 

விழுந்தே விட்டோம் என அவள் பயந்தபோது இரு வலிய கரங்கள் அவள் கீழே விழாமல் அவள் சிற்றிடையை இறுக்கிப் பிடித்திருந்தது.

 

விழவில்லை என்றானதும் கண்களைத் திறந்த மலர்க்கொடி தன்னை விழாமல் பிடித்திருந்தது கேப்டன் ஆதித்யா என்பதைக் கண்டாள்.

 

தான் இதுவரை எந்த ஏந்திழைக்காக காத்திருந்தானோ அவளே உயிர்க் கொண்டு வந்ததைக் கண்டு மனதில் மகிழ்ச்சி பொங்க தன்னை மறந்து அவளையேப் பார்த்திருந்தான்.

 

Advertisement