Advertisement

மாயவனின் மலர்க்கொடியாள்-4

 

தன் கைகளில் இருந்த மங்கையின் அழகில் மெய்மறந்து நின்றிருந்தான் ஆதித்யா.தான் யார் அவள் யார் எங்கே நின்றிருக்கிறோம் என்ற எந்த நினைவும் அவனுக்கில்லை.ஏதோ காலங்காலமாக தேடிய ஒன்று இப்போது தன்னை சேர்ந்தது போல் அவளில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான்.மலர்க்கொடியும் ஏனோ தன்னை மறந்து அவன் விழிகளையேப் பார்த்திருந்தாள்.தன்னையறியாமலே அவள் சிற்றிடையில் இருந்த பிடியை இறுக்கினான்.அவனின் திடீர் அழுத்தத்தில் தன்னிலை அடைந்த மலர் படக்கென அவனிடமிருந்து விலகினாள்.

 

“ஐம் வெரி சாரி சார்…அது க்ளாசுக்கு லேட் ஆயிடுச்சு..அதுனால வேகமா வந்தனா நீங்க வந்தத பாக்கல…சாரி சார்…ரியலி சாரி…”

 

“இட்ஸ் ஓகே….ஃபிரஷர்(fresher)

 

“எஸ் சார்”

 

“நேம்?”

 

“மலர்க்கொடி”

 

“மலர்க்கொடி”என்ற சொல் அவன் இதயம் நுழைந்து உயிர் வரை சென்று தாக்கியது.ஏனோ அந்த பெயர் புதிதாக கேட்பது போலவே இல்லை அவனுக்கு.

 

“சார்…. எனக்கு..கிளாசுக்கு லேட் ஆகுது…நா போகட்டுமா?”

 

என்று தயங்கியவாறே கேட்டாள்.ஏனென்றால் மேஜர் சதீஷைப் போல ஆதியும் சட்டென கோபித்துக் கொண்டு விடுவானோ என்று பயந்தாள்.தன் விசித்திர உணர்வை ஆராய்ந்தபடி இருந்த ஆதி மலரின் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவன்

 

“ஷ்யூர் யு கேன் கோ நவ்”

 

விட்டால் போதும் என அங்கிருந்து விரைந்தாள் மலர்.அவள் சென்ற திசையையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

 

பி.ஸியின் ஆபிஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தத குணாளன் மரம் போல் நின்றிருந்த ஆதியைக் கண்டு அவனருகில் வந்து அவன் தோளைத் தட்டி

 

“என்னாடா ஆதி!இப்படி சிலையா நிற்கற….என்ன விஷயம்?”

 

”   “

 

“ஆதி!… ஆதி!….”

 

”    “

 

“டேய் ஆதிதிதிதி……!”

 

“ஷ்…. டேய் ஏன்டா இப்படி கத்துற… என் காது என்ன செவிடா?”

 

“கேப்படா கேப்ப நா அப்போலேந்து ஆதி ஆதி கூப்பிட்றேன்…நீ என்னடான்னா நின்னுகிட்டே கனவு காண்ற”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு பி.ஸி.பாக்கனும்…நா வரேன் பை..”

 

என அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.

 

‘ஏதோ சரியில்ல…மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்கானே இவன்’என தனக்குள் எண்ணிக் கொண்டான் குணாளன்.

 

அவசர அவசரமாக தன் காலை உணவை முடித்த மலர் கிளாசுக்கு லேட்டானதால் வேகமாக வகுப்பறையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள்.அங்கிருந்த மேஜர் சதீஷ்

 

“கேடிட் மலர்க்கொடி! இந்த ஃபைல்ஸ்யெல்லாம் என் ரூம்ல கொண்டு வை”

 

என்றார் அதிகாரமாக.

 

“சார்… என் கிளாசுக்கு லேட் ஆகுது…”

 

“டூ வாட் ஐ ஸே!சீனியர்ஸ் சொல்ற வேலைய பண்ணறது உங்க ட்யூட்டி…இட்ஸ் மை ஆர்டர்..”

 

அவரோடு சச்சரவு வேண்டாமென அவளும் அவர் கூறியது போல் அதையெல்லாம் கொண்டு போய் வைத்து வந்தாள்.

 

கிளாசில் மாணவர்கள் முதல் கிளாசுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ஆதித்யா.

 

“கேடிட்ஸ் ஐ அம் கேப்டன் ஆதித்யா… உங்க ஸ்டராஜிடி அண்ட் கம்யூனிகேஷன் டீச்சர்.எல்லா கேடிட்ஸும் வந்தாச்சா?”

 

“எக்ஸ்க்யூஸ்மீ சார்!மே ஐ கமீன்”

 

என்ற குரலில் திகைத்து வாயிலை திரும்பிப் பார்த்தான்.அங்கே நின்றிருந்த மலர்க்கொடியைப் பார்த்து  அவன் மனம் மகிழத்தான் செய்தது. ஆனால் ட்யூடியில் அவன் எப்போதுமே கண்டிப்பானவன்.அதனால் எப்போதுமே தன் சொந்த விருப்பு வெறுப்புக்களை தன் கடமைக்கு நடுவில் வர விட மாட்டான்.அதனால் அவளை கண்கள் பருகத் துடித்தாலும் அதை அடக்கியபடி அவளிடம் கண்டிப்புத் தொனியில் பேசினான்.

 

“கேடிட் மலர்க்கொடி! நீங்க (கைக்கடிகாரத்தைப் பார்த்து)டென் மினிட்ஸ் லேட்.ஆர்மில பன்சுவாலிட்டி அண்ட் டிசிப்லின் ரெண்டும் ரொம்ப முக்கியமானது.இனிமே இப்படி பண்ணாதீங்க…கம் இன்”

 

“சாரி சார்”

 

என்றபடி உள்ளே நுழைந்து நேஹாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

நாற்பது நிமிட கிளாஸ் முடிந்த போது அறையில் ஊசி விழுந்தால் கேட்கும் அளவு நிசப்தம் நிலவியது.காரணம் கேப்டன் ஆதித்யாவின் பாடம் நடத்தும் விதம் தான்.அவனின் கம்பீர குரலும் கஷ்டமான விஷயத்தையும் எளிமையாக விளக்கும் விதமும் மாணவர்களை அப்படி கட்டிப் போட்டு வைத்திருந்தது.

 

அவன் அகன்ற மேல்

 

“வாவ் வாட் ய இன்டெலிஜென்ட் மேன்…எவ்ளோ டிஃபிகல்ட் டாப்பிக்க எவ்ளோ சிம்பலா புரியவச்சுட்டார் பாத்தியா”

 

என்றாள் நேஹா மலரிடம்.

 

“ஆமா… ரொம்ப ஸ்மார்ட்”

 

மாலை வகுப்புகள் முடிந்த பின் மாணவர்கள் அவரவருக்கு விருப்பமான விளையாட்டை விளையாட அனுமதிக்கப் பட்டனர்.

 

மலரும் நேஹாவும் கேம்ஸ் ரூமில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.மலருக்கு இந்த ஆட்டம் புதிது.நேஹா விளக்கும் போது புரிந்தது போல் இருந்தாலும் அவள் செக் என்று இட்டதும் மேலே விளையாட முடியாமல் திகைத்தாள்.

 

“ஏய் மேலே எதடி வைக்கனும்… சொல்லேன்”

 

“ம்ஹும்…நீனே கண்டுபிடி….”

 

“ஏய் நெஜமா தெரியலடி…சொல்லுடி…சொல்ல போறியா இல்லையா”

 

அப்போது கேம்ஸ் ரூமைத் தாண்டிக் கொண்டிருந்த ஆதி மலரின் குரலைக் கேட்டு அங்கேயே நின்று பார்த்தான்.மேலே விளையாட முடியாமல் அவள் திணருவதைக் கண்டவன் நிதானமாக வந்து அவள் பின்னே வந்து நின்றான்.அவனைப் பார்த்து திகைத்து நேஹா பேசும் முன் வாயில் விரலை வைத்து இடவலமாக ஆட்டினான்.

 

ஒரு நிமிடம் கேம் போர்டை பார்த்தவன் சிறு புன்னகையோடு மலரின் வலது புறமாக தன் கைகளை நீட்டி காய்களை சரியான இடத்தில் வைத்து நேஹாவின் கிங்கை அடித்து வீழ்த்தினான்.

 

“ஓ…… சூப்பர் சூப்பர்….நா தான் ஜெயிச்சேன்….தேங்க் யூ தேங்க் யூ ஸோ மச்”

 

என்றவள் அது யாரோ சக மாணவர் என நினைத்து அந்த கைகளைப் பிடித்துக் குலுக்கினாள்.

 

“மலர்…ஏய் மலர்…..”

 

என நேஹா பின்னே பார்க்குமாறு ஜாடைக் காட்டினாள்.

 

பிடித்த கை விடாமல் திரும்பி பார்த்த மலர் ஆதித்யாவைக் கண்டு திகைத்து அவன் கையை பட்டென விட்டுவிட்டாள்.

 

“சார்….யூ ஆர் எ ஜீனியஸ்…சூப்பரா கேம எண்ட் பண்ணீங்க…”

 

“ம்ஹும்…. நீங்களும் ஒண்ணும் சாதாரணமில்ல அது மாறி செக் வைக்க ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் வேணும்…நைஸ்…யூ கேரி ஆன்…நா சும்மா விளையாட்ட பாக்க வந்தேன்…பை”

 

மலர் கைகளைப் பிடித்ததால் தாறுமாறாக துடித்த மனதை அடக்க முடியாமல் வேகமாக அங்கிருந்து அகன்றான்.

 

மறுநாள் காலை மாணவர்கள் க்ரவுண்டில் குழுமி இருந்தனர்.அன்றைய தினத்தின் முதல் டாஸ்க் எழுபது கிலோ இருந்த மூட்டையைத் தூக்கி கொண்டு எதிரில் இருந்த நூறு அடி உயரமிருந்த மேட்டில் ஏறி இறங்க வேண்டும்.

 

அந்த உயரத்தையும் அருகில் இருந்த மூட்டையையும் திகிலாகப் பார்த்தாள் நேஹா.அவள் பார்வையை புரிந்துக் கொண்ட ஜீவா பொங்கி வந்த சிரிப்பை எதிரில் அனைவரையும் முறைத்த படி நின்றிருந்த மேஜர் சதீஷை முன்னிட்டு கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.ஒவ்வொருவராக டாஸ்கை செய்து வந்தனர்.மலரும் கஷ்டப்பட்டு எப்படியோ செய்து வந்தாள்.நேஹா கூட ஒரு இடத்தில் தடுமாறி எப்படியோ செய்தாள்.

 

அப்போது அங்கே வந்த ஆதித்யா அந்த மூட்டையைக் கையில் எடுத்துப் பார்த்தான்.அதன் கணம் எப்போதும் விட அதிகமாக இருந்தது.

 

“மேஜர் சதீஷ்!இது என்ன வழக்கத்தை விட பேக் வெயிட் ஜாஸ்தி இருக்கு?”

 

என்றான் மூச்சு வாங்க நின்ற மலரையும் மற்றவரையும் பார்த்து.

 

“கேப்டன்! அகாடமி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் உங்கள விட சீனியரான எனக்கு நல்லாவே தெரியும்… இந்த இயர் கேடிட்ஸ் இந்த மாதிரி கடினமான டாஸ்க செஞ்சா தான் கொஞ்சமாவது இன்ப்பூர்வ் ஆவாங்க…நா பிஸிக்கிட்ட பர்மிஷன் வாங்கியிருக்கேன்…”

 

“ரூல்ஸ்… ரூல்ஸ்…. இப்ப இவங்க வெறும் கேடிட்ஸ்… நீங்க இப்பவே ஆபிஸர் லெவல் டாஸ்க் கொடுக்கிறீங்க….திஸ் இஸ் நாட் ஃபேர்..”

 

“ஷடாப் கேப்டன்..நீ….

 

அப்போது மேலே சென்றிருந்த ஜீவா கால் தடுமாறி மூட்டையோடு கீழே உருண்டான்.நல்லவேளையாக ஒரு இருபது அடி இருந்த போது விழுந்ததால் பெரிதாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தப்பியது.

 

“ஆ…” “நோ”..”ஜீவா!”

 

என்று எல்லோரும் ஜீவாவின் அருகில் சென்றனர்.முதலில் வந்த ஆதித்யா அவனை தலையைத் தூக்கி தன் கால் மேல் தாங்கிக் கொண்டான்.வேகமாக அங்கிருந்து ஓடிய மலர் அவசரத்திற்காக தந்த நீரை பாட்டிலை எடுத்து மூடியை திறந்து ஆதியிடம் கொடுத்தாள்.அதில் சிறு நீரை ஜீவாவின் முகத்தில் தெளித்தவன் சிறிதை அவன் வாயில் புகட்டினான்.

 

“கேடிட்!ஆர் யூ ஆல்ரைட்?”

 

“எஸ் சார்…”என்று அரை நினைவோடு சொன்னான் அவன்.

 

“கேடிட் ஜீவா யூ ஆர் ஃபெயில்ட் இன் தி டாஸ்க்…ஆல் ஆஃப் யூ டிஸ்மிஸ்”

 

என்ற மேஜர் சதீஷின் குரல் அபசுரமாக ஒலித்தது அந்த இடத்தில்.கை முஷ்டி இறுக தன் கோபத்தை முயற்சி செய்து அடக்கினான் ஆதி.

 

இப்போது அதற்கு நேரமில்லை…ஜீவாவை இன்ஃபேரேமிரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. அதுதான் இப்போது முக்கியமானது.ஒரு கையை ஜீவாவின் கால் கீழே விட்டவன் மறுகையை அவனின் முதுகில் கொடுத்து அவனை அனாயாசமாக தூக்கியவன் அகாடமியின் மருத்துவமனையை நோக்கி சென்றான்.

 

மலரோ இப்போது நிகழ்ந்த இந்த நிகழ்வை பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து திகைத்து நின்றாள்.

 

Advertisement