சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்துசான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும்அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, ” நந்தா ……. ” என அழைக்கஅவனிடம் இருந்து பதிலற்றுப் போக மீண்டும் ” டேய் நந்தா…” என அவன் தோளை சற்று உலுக்கினான் கிஷோர், அதில் தன் நினைவில் இருந்து வெளி வந்தவன்,
” ஹான்….. சொல்லு டா….” என கேட்ட கிஷோரின் கையில் இருந்ததைப் பார்த்து, ” வாங்கிட்டு வந்துட்டியா…. சரி குடு” என பேசிக் கொண்டே அவன் கையில் இருந்ததை வாங்க முற்படும் போது கிஷோர் அதை அவனுக்கு தராமல் தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
” நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன டா அவ்வளவு தீவிரமா யோசிச்சுட்டு இருந்த ….. “கேள்வியாகநண்பனை பார்க்க,
” ம்ப்ச்ச்…. ஒன்னும் இல்ல டா. நீ குடு முதல்ல எனக்கு பசிக்குது…. “என அவனிடம் இருந்து ஜீஸை பறிக்க முயன்றான் நந்தன்.
” வர வர நீ சரி இல்ல…. ஏதோ மறைக்குற என்னனு சொல்ல மாட்டேங்குற…. புதுசு புதுசா பண்ணுற சரி இல்ல மச்சான்….” என கூறிய நண்பனை வெற்றுப் பார்வை பார்த்தான் நந்தன்.
“என்னடா லுக்கு விட்டுட்டு இருக்க? கேட்டதுக்கு பதிலே இல்ல….. ” என்ற கிஷோரிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக் கொண்டு மீண்டும் அதே உருவத்தை பார்த்தப்படி“லுக்கு விடுற அளவுக்கு உன் முகம் ஒர்த்து இல்ல மச்சான்….அதுக்கு கூட சில தகுதி இருக்கனும் டா. உன்ன எந்த ஆங்கில்ல(angle)பார்த்தாலும் அந்த குவாலிட்டிஸ் இருக்குற மாதிரி தெரியல…..“தொடர்ந்து ,” இப்ப எதுக்கு என்னை உண்மை எல்லாம் சொல்ல வைக்குற.? என்ன வேண்ணும் உனக்கு?” என சலிப்புடன் கேட்டான் நந்தன்.
“உன் கிட்ட கேட்டேனா…. சொல்லு டா நான் கேட்டேனா….? என் முகம் ஒர்த்தா இல்லையான்னு….???? இல்ல தெரியாமல் தான் கேட்குறேன் என்னை டேமேஜ் பண்ணனும்னா மட்டும் எங்க இருந்தாலும் முதல் ஆளா வந்து நிக்குறியே ஏன்டா இந்த கொலைவெறி உனக்கு? ” என எரிந்து விழுந்தான் கிஷோர்.
நண்பணின் பேச்சில்சகஜ நிலைக்கு வந்த நந்தன்,அவன்புறம் திரும்பிஒரு காலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டும் அமர்ந்து, நாற்காலியின் சாய்வில் இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு வலது கையால் தன் தாடையை தேய்த்தப்படி” அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல உன்னை டேமேஜ் பண்ணனும்னா சும்மா அருவி மாதிரிக் கொட்டுது மச்சான்….” என்று கேலி பேசியவனை,
கிஷோர்,“கவித…. கவித….” என்று கமல் போலவே பேசியவன் ”ஏன்டா அதுக்கு மேல வார்த்தை வரலையா???” என்று சற்று இடைவெளி விட்டு “டேய்……” என கோபமாக பேச தொடங்கியவன்,” வேணாம்….. வலிக்குது….. அழுந்துடுவேன்…..” என வடிவேலு பாணியில் முடிக்க,
” ஹா ஹா ஹா….” என வாய்விட்டு பெரிதாக நந்தன் சிரிக்கும் போது,
“எனக்கு இன்னொரு வேண்ணும் ஃபிளீஸ்….” என கெஞ்சிக் கொண்டு இருந்த அந்த உருவத்தை திரும்பிப் பார்த்த நந்தனின் முகம் மீண்டும் இறுகியது.
தனக்கு கிடைத்த மற்றுமொரு சான்விச்யைருசித்து உண்ணுவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகத்திற்கு முன் ஜீஸை நீட்டி” குடி மச்சான் உனக்கு பயங்கர பசிப் போல, அதான் அந்த குழந்தை சாப்பிடுறத வெறிச்சு வெறிச்சுப் பார்க்குற…. பாவம் அந்த பாப்பா வயிறு வலிக்கும் விட்டுரு டா மச்சான்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கிஷோர் அந்த குழந்தையை பார்த்துச் சொல்லி விட்டு நந்தனைப் பார்க்க,
“இப்ப எதுக்கு டா பாசமா பார்க்குற??? உண்மைய தானே சொன்னேன். அப்ப இருந்து நானும் பார்க்குறேன் நீ அந்த பாப்பா சாப்பிடுறதையே பார்த்துட்டு இருக்க. ” கிஷோர் பேசி முடிக்கும் முன்,
“டேய் நான் அத பார்க்கலை” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டநண்பனை ஒரு விதமாக பார்த்தான் கிஷோர்.
“அப்ப பக்கத்தில் இருக்கும் அந்த குழந்தையோட அம்மாவை பார்த்தியா? ” முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்க,
“டேய் ஏன்டா ….. ஏன்…. ஏன் இப்படி மட்டமா யோசிக்குற? அந்த அளவுக்கு தப்பானவன் இல்ல நான். இதுக்கு மேல நீ ஏதாச்சும் தப்பா பேசுன செத்த டா நீ…” என்று ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்ட,
“அதான் தப்பா கேட்குறேனு தெரியுது இல்ல. அதுக்கு நீயே சரியான விஷயத்தை சொல்லுறது…..” என்றவன் ,” எவ்வளவுதான் நாமளும் போட்டு வாங்க டிரைப் பண்ணுறது? சபாஆஆஆ……. முடியலை…. இதுக்கே மூச்சு வாங்குதே….. ” என புலம்பிக் கொண்டே நண்பனுக்கு வாங்கிய ஜூஸை குடிக்க தொடங்கினான் கிஷோர்.
நண்பனின் செயலைப் பார்த்து தன் நெற்றியில் இடதுகரத்தால் அறைந்து கொண்டவன்கிஷோரிடம் இருந்து ஜூஸை பிடிங்கி அவனை முறைத்துக் கொண்டே குடிக்க ஆரம்பித்தான்….
நந்தனையே சில நொடிகள் பார்த்தவன் மெல்ல அவன் தோளில் கை வைத்து, ” என்ன ஆச்சு டா ஏன் ஒரு மாதிரி இருக்க? நீ நினைச்சது நடக்க போகுது ஆனா அதுக்கான சந்தோஷம் உன் முகத்தில் இல்லையே ஏன்டா? அப்படி என்னடா யோசனை? ” என்ற நண்பனை ஒரு தரம் பார்த்து விட்டு மெல்லிய குரலில்,
“கொசுக்குட்டி டா….” என்றான் நந்தன்….
“என்னடா சொல்ல வர????” என அதிர்ச்சியுடன் தன் நண்பன் கேட்டதை உணர்ந்து,
“இல்ல டா…. அந்த கொசுக்குட்டி பேசுனது தான் மனசுல இருந்து கொடையுது. அந்த கொசுக்குட்டிய நினைச்சாலே அப்படியே வர கோவத்துக்கு…..” என பல்லை கடித்தவன் அவனது அலைபேசி அலறியதில் தன்னை நிதானித்துக் கொண்டான் நந்தன்.
திரையில் தந்தையின் பெயரை பார்த்து தன்னை தானே நொந்துக் கொண்டான், ” இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு ?? ஏன் இப்படி அந்த கொசுக்குட்டிய நினைச்சுட்டே இருக்கேன். அவ பேசுன பேச்சுக்கு அவளை ….. சை… இனி அவள பத்தி நினைக்கவும் கூடாது, தப்பி தவறி கூட பார்க்கவும்கூடாது….. “மனதில் உறுதி பூண்டான்.
கிஷோர், ” நந்தா…. டேய்…. ” நந்தனை உலுக்க அதில் தன்நிலைக்கு வந்து கிஷோரை திரும்பிப் பார்க்க, ” லூசு ஆயிட்டியா டா உன் கொசுக்குட்டியால????” புரியாத பார்வை பார்த்த நந்தனை ” டேய் அப்பா ஃபோன் பண்ணுறாரு பாரு அட்டென் பண்ணி பேசு ” என அவசரப் படுத்த நந்தன் அழைப்பை ஏற்க்கும் முன் கால் (call)கட் ஆகி இருந்தது.
நந்தன், ” சை…..” நெற்றியில் அறைந்து கொண்டவன், தந்தைக்கு அழைக்க போக மீண்டும் அவன் ஃபோன் அலறியது. அழைப்பது தந்தையன தெரிந்ததும் முதல் ரிங்கிலே ஆன் செய்தவன்,” ஹலோ அப்பா….. சொல்லுங்க….“
………..
“இல்லப்பா கிஷோர் கூட பேசிட்டு இருந்தேன் ஃபோன் அடிச்சதை கவனிக்கல சாரிப்பா…. “
……….
” அப்பா….. கூல்…. எல்லாம் கரெக்டா நடக்கும்… நம்புங்க அப்பா…. மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க….“
………
“இல்ல அப்பா…. இன்னும் 15 நிமிசம் இருக்கு…..“
………
“ஓகே அப்பா….. பாய்(bye)…” என ஃபோனை துண்டித்தவன் ஒரு தெளிவுடன் நண்பனின் புறம் திரும்பி, ” அந்த கொசுக்குட்டி பேசுனதைக் கேட்டு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன் இப்ப ஓகே டா…… சரி நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன்…” என கிஷோரிடம் இருந்து விடைபெற இருந்தவனை தடுத்து,
கிஷோர்,” மச்சான்…..எதையும் அவசரப் பட்டு முடிவு எடுக்காத. உன் மனசு என்ன சொல்லுதோ அதையே கேளு…” நண்பனின் மனதை ஓர்அளவுக்கு யூகித்தவன், அவனுக்கான முடிவை அவனே எடுக்க விரும்பினான்.
பின் கிஷோர்,” சரிடா…. நானும் கிளம்புறேன், நாளைக்கு சாய்ந்திரம் ஆபிஸ்ல மீட் பண்ணலாம்….. ஆல் தி பெஸ்ட் டா….“
நண்பனை பார்த்து ஒரு புன்னகையை பதிலாக அளித்தான் நந்தன்.
கிஷோர் சென்றதும் தன் நினைவில் உழன்றவன்,” அந்த கொசுக்குட்டி கண்ணில் என்னமோ இருக்கு……” என முகம் மலர அவளை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தவன் நினைவில் அவளை தாங்கிப் பிடித்தது, தான் கொசுக்குட்டி என்றதும் அவளுக்கு வந்த கோபம், தன்னை தூசாக நினைத்து சரிக்கு சமமாக சண்டைக்கு நின்றது என அனைத்தும் நினைவில் இனிமையாக வலம்வந்தன.
முடிவில் அவள் தன் தோழிகளுடன் பேசியதும் இலவச இணைப்பாக நினைவில் வர முகமும், கை முஷ்டியும் இறுக,” இனி அவ எதிரில் வந்தாலும் கண்டுக்காம போய்றனும்….. அப்படி அவளேவந்து பேசுனாலும் இல்ல இல்ல கத்துனாலும் ரியாக்ட் பண்ணக் கூடாது. ஓவரா பேசுனா ஹிட் அடிச்சு விட்டுற வேண்டியது தான்….” என நினைத்தவன் தான் வந்த வேலையை செயலாற்ற நினைத்தான்….
தவறான புரிதலால் நினைவில் விலகிச் செல்ல நினைக்கும் உறவு விதிவசத்தால் இணையுமோ அல்லாதுநினைவிலும் நிஜத்திலும் இணையாது பிரியுமோ…..?????
………………….
இரவின் தேவதை துயில் கொள்ள மெல்ல தனது குடிலுக்கு செல்லும் வேளை அது…… கதிரவன் தன் பணிக்கு செல்லும் வேளை அது…. மேக கூட்டங்கள் கதிரவனின் கட்டளைகளை ஏற்க ஆயத்தம் ஆகி பாதுகாவலாய்இருக்க தொடங்கிய வேளை அது…..
அந்த அழகிய வேளையாகிய அதிகாலை பொழுதில்…..
” ஏய்… மஹா எந்திரிடி, மணி 6.30 ஆச்சு 8.30 மணிக்கு கோவிலில் இருக்கனும் இன்னும் இப்படி தூங்கிட்டு இருக்க. கும்பகர்ணி…. இப்ப எந்திரிக்க போறியா இல்லையா…. ” என்ன செய்வது என தெரியாமல் முழித்தவர் திடீர் என்று யோசனை வர,” இப்ப நீ எந்திரிக்குறியா இல்ல தண்ணீர் கொண்டு வந்து ஊத்தவா?” என வசந்தா தான் பெற்றெடுத்த சீமாந்திர புத்திரிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டு இருந்தார்.
“அம்மா 5 மினிட்ஸ் பிளீஸ்……” என ராகம் இழுத்தவள் மீண்டும் போர்வைக்குள் சென்று பேசிய 4 வார்த்தையில் கலைந்த தன் தூக்கத்தை தொடர்ந்தாள் மஹா என்னும் மஹஸ்ரீ.
“மஹா….எந்திரி மா…, நேரம் ஆகுது டா கோவிலுக்கு போகனும்ல லீவ் நாள்ல எவ்வளவு நேரம் வேண்ணும்னாலும் தூங்கிக்கோ நான் உன்னை எழுப்பவே மாட்டேன். இப்ப எந்திரிடா செல்லம்….” மிரட்டுவது வேலைக்கு ஆகாது என தெரிந்ததும் கெஞ்ச ஆரம்பித்தார் வசந்தா.
“பெரியம்மா அவளை ஏன் தொல்லைப் பண்ணுறீங்க????? அவ தான் தூங்கிட்டு இருக்கால அப்புறம் ஏன் சும்மா சும்மா எந்திரிடி முந்திரிடினு டிஸ்டர்ப் பண்ணுறீங்க நான் தான் ரெடி ஆயிட்டேனே….. நான் வரேன் பெரியம்மா உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே…. “என அனிதா தான் அணிந்து இருந்த தாவணி பாவாடையில் ஒரு சுற்று சுற்றி காட்டியவளை வசந்தா அடிக்க கை ஓங்கிக் கொண்டு செல்ல,
” இப்ப எதுக்கு அடிதடில இறங்குறீங்க? பிரச்சனைக்கான தீர்வை தானே சொன்னேன்….” என அனிதா அவரிடம் இருந்து தப்பித்து கட்டிலின் மறுபக்கத்திற்கு ஓடினாள்.
“கரெக்டா சொன்ன அனிதா, அம்மா இதுக் கூட நல்ல யோசனையா இருக்கே…… உங்களுக்கு ஓகேயா அம்மா? சித்தி கிட்ட நான் பேசுறேன்….. ” என்று போர்வையை விட்டு வெளி வந்து குதுகலமாய் பேசியவளின் மண்டையில் ஓங்கி ஓர் கொட்டு வைத்தார் வசந்தா.
மஹா கொட்டு வாங்கியதைப் பார்த்த அனிதா கலுக்கென்று சிரிக்க, மஹா உதட்டைப் பிதுக்கி தலையை தேய்த்தப்படி அனிதாவை பார்த்து முறைத்துக் கொண்டே தன் தாயை பாவமாக பார்த்தாள்.
அனிதா, வசந்தாவின் தங்கை சாந்தியின் மகள். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருபவள். அனிதாவின் தந்தை ஒரு விபத்தில் 5வருடங்களுக்கு முன்பு தவறிவிட தங்கையையும், தங்கை மகளையும் தாங்கள் குடி இருக்கும் தெருவிலே தங்கள் வீட்டின் அருகில்தங்களோடுகுடி இருக்கசெய்திருந்தனர்….
பாவமாக பார்த்த மஹாவை, ” ஓவரா பேசாம போய் குளிச்சிட்டு ரெடி ஆகுற வழியப் பாரு, அப்பாவை காலைலே டென்ஷன் பண்ணாத. சீக்கிரம் எந்திரிச்சு போ…..“
சிணுங்கிக் கொண்டே எந்திரித்தவள் கடிகாரத்தைப் பார்க்க அது காட்டிய மணியில், கோபமாக திரும்பி தன் தாயை முறைக்க, “இப்பஎதுக்குடி முறைச்சுட்டு நிக்குற…???” வசந்தா கேள்வியாக பார்க்க,
படுக்கை விரிப்பை மடித்துக் கொண்டு இருந்த வசந்தா,” ஆமா கரெக்டான டைமை சொன்னா உடனே எந்திரிக்குற மாதிரி கோவம் வேற….. 6 மணிக்கு 6.30னு சொன்னாதான் அட்லிஸ்ட் 7 மணிக்கு எந்திரிப்ப…. போடி போ…. ரெடி ஆகுற வழிய பாரு…..” படுக்கையை சரி செய்துமுடித்தவர்.
“ஹே வாலு….. வர வர வாய் அதிகமா நீழுது உனக்கு, நாலு போட்டா சரியா போயிடும், நீயும் வா அவ ரெடி ஆயிட்டு வரட்டும்” என்று மஹாவை எழுப்பி குளியலறைக்குள் அனுப்பி வைத்து விட்டு அனிதா உடன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.
குளித்து முடித்து வெளி வந்தவள் தன் ஃபோனில் பாடலை ஒலிக்க விட்டப்படி தயாரானாள் மஹா….
சிறிது நேரம் கழித்து, மஞ்சள் நிறத்தில் தங்க நிற பாடர்க் கொண்ட ஜூட் வகை பட்டு புடவை அணிந்து முடியை தளர பின்னி காதுக்கு ஜிமிக்கியும் கழுத்தை ஒட்டி ஒரு லஷ்மி ஆன்டிக் நெக்லஸும், கைகளில் மெல்லிய இரு வளையல்கள்என தயார் ஆனவள் தனதறையில் இருந்த ஆளுயுர கண்ணாடியில் தன்னை பார்த்தாள் மஹா.
அப்பொழுது மஹாவிற்கு தன் தந்தை கூறியது நினைவிற்கு வர….
கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டு இருந்தவளின் இதழ்கள் மெல்ல அந்த பெயரை உச்சரித்தது….
“யாதவ்…….“
அப்பொழுது அவளது ஃபோனில்,
பொத்திவச்ச மல்லிகை மொட்டு …..
பூத்துருச்சு வெட்கத்தை விட்டு…..
பேசிப் பேசி ராசி ஆனதே…..
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே…..
ரொம்ப நாள் ஆனதே….
என பாடல் ஒலிக்க,
வெட்கம் கொண்டு சட்டென ஓடிச் சென்று ஃபோனில் ஓடிய பாட்டை நிறுத்தினாள் மஹா…..
கண்ணில் எதிர் பார்ப்புடன் காத்திருக்கும் பெண்ணவள் தன் மன்னவனால் அகம் மகிழ்வாளா?????
………………….
நேரம்: காலை 7.30 மணி
இடம்: ரேடிஸன் பிலு 5 நட்சத்திர விடுதி
வெள்ளை முழுக்கை சட்டை அணிந்து அதை மணிக்கட்டு வரை மடக்கி விட்டு, சில்வர் ரோலெக்ஸ் வாட்ச் அணிந்து, இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி, வலது கையில் ஃபோனை ஆராய்ந்தவாறு அங்கிருந்தரிசெப்ஷன்மேசை மீது சாய்ந்துகொண்டு, வலது காலை குறுக்காக மடக்கி தான் அணிந்து இருந்த பிராண்டெட் ஷூ தாங்கி நிற்க ஸ்டைலாக நின்றிருந்தான்.
“மிஸ்டர். யாதவ்…..” என அந்த 5 நட்சத்திர விடுதியின் ரிசெப்ஷனிஸ்ட் அழைக்க …
“எஸ்……” என தான் அணிந்து இருந்த கூலிங்கிளாஸை கழட்டியவன் ,
“தேங்க்ஸ்…..” என சிறு புன்னகையோடு சாவியை பெற்றுக் கொண்டவன் தன் கூலிங்கிளாஸை அணிந்து கொண்டு ஒரு கையை பேண்டு பாக்கெட்டில் விட்டபடி, இன்னொரு கையில் தன் டிரேலி பேக்கை உருட்டிக் கொண்டு லிப்டினை நோக்கி நடந்தான்.
அறைக்கு வந்தவன் சட்டையின் மேல் பொத்தனை களட்டியப்படி மெத்தையில் விழுந்தான் பொத்தென்று…
மனதில் ஓடிய சஞ்சலத்தை போக்க வழி அறியாது தன் ஃபோனில் இருந்த பெயரை சில நொடிகள் பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் ஃபோனை அணைத்துவிட்டு மல்லாக்க படுத்து தன் இரு கைகளால் தலையை கோதி கொண்டே அப்பெயரை உச்சரித்தான்……