காவியத் தலைவன் – முன்கதை சுருக்கம்

(ஏற்கனவே கதையை வாசிச்சவங்களுக்கு குட்டி refresh க்காக தான் இந்த சுருக்கம். சும்மா டம்மி ஹிண்ட் மாதிரி இருக்கும். கதை வாசிக்காம இதை படிக்காதீங்க. இதுல ரொம்ப ரொம்ப மேலோட்டமா இருக்கிறதால எதுவும் புரியாது)

ஆதீஸ்வரன் ஆளுங்கட்சி MP. அவன் தம்பி சத்யேந்திரன் (mba student) கனிகாங்கிற பெண்ணை காதலிப்பான். ஆனா ஆதி அவனுக்காக பூஜிதாங்கிற பொண்ணை ஏற்கனவே பார்த்து வெச்சிருப்பான். அதுக்கு சத்யா சம்மதமும் சொல்லி இருந்தவன், கனிகாவை பார்த்ததும் அவளோட ஏமாத்துல மயங்கி அவளை காதலிக்க தொடங்கிடுவான்.

ஆதீஸ்வரனோட அரசியல் எதிரி பிரதாபன். அவன் செய்த ஏமாற்று வேலைகள் இவன் மூலம் தெரிய வந்து அவனை கட்சியில இருந்து நீக்கியிருப்பார்கள். அதனால் கோபத்தில் இருக்கும் பிரதாபன் தன் மகள் கனிகா (ஊருக்கு தெரியாத மனைவியின் மகள்) மூலம் ஆதியை நெருங்க திட்டம் போட்டிருக்க, அவளால் சத்யாவை மட்டுமே நெருங்கியிருக்க முடியும்.

சரி தம்பியையாவது மயக்கு என்று அப்பா சொல்லியிருப்பார்.

கனிகாவுடைய அப்பா பிரதாபன், மகளை ஒரு முறை சந்திக்க வருகையில் தாராகேஸ்வரி என்ற ஒரு பெண்ணை பார்க்கிறார். அவள் அம்மா, அப்பா இல்லாத பெண். வெளிநாடு சென்று படிக்க போகும் வரை பாதுகாப்பாக இருக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறாள் என மகள் பேச்சுவாக்கில் சொல்ல, அந்த பெண் யாரென பிரதாபன் விசாரித்தபோது,

ஆதியின் பெற்றோரை கொன்ற ஏழுமலையின் மகள் என புரிகிறது. ஒரு திட்டம் தீட்டி, சத்யா மூலம் ஆதி வீட்டில் அவன் ஊரில் இல்லாத நேரம் அந்த பெண்ணை தங்க வைத்து அவன் பெயரை கெடுக்கவோ இல்லை அந்த பெண்ணையே கட்டி வைக்கவோ திட்டம் போடுகிறான்.

எந்த திட்டம் நடந்தாலும் பிரதாபனுக்கு பழி வாங்கிய திருப்தி தான்.

ஆதி அந்த பெண் யாரென தெரிந்து கொண்டே திருமணம் செய்து கொள்கிறான். அவனுக்கு அவளை பிடிக்கும். பெற்றோர் இறப்புக்கு நியாயம் செய்ய வேண்டி அவளை மறந்து வாழ்ந்திருப்பான்.

இத்தனை வருடத்தில் அவளை மறக்க முடியாதது ஒருபுறம், அவளுடைய அப்பா செய்ததுக்கு அவள் என்ன செய்வாள் என்கிற நிதர்சனம் மறுபுறம், மகள் நம்மிடம் இருந்தால் ஏழுமலை தேடி வருவார் அவரை ஏதாவது வகையில் தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணம் மறுபுறம் என தாராகேஸ்வரியை திருமணம் செய்து கொள்வான். பிரதான காரணம் அவனுள் வேரூன்றி இருக்கும் காதல் தான்.

தாரா மறைந்து வாழ காரணம் அவளுடைய தோழி அலக்கியாவின் உயிரை காப்பாற்றுவதற்காகத்தான்.

தாராவிற்கு திருமணம் என்றதும் பயம். ஆனால், அவள் மறுக்க வாய்ப்பே இல்லாமல் திருமணம் நடந்திருக்கும்.

இவ்வளவு உயரிய பதவியில் இருப்பவர் எந்த நம்பிக்கையில் தன்னை திருமணம் செய்து கொண்டார் என ஆச்சரியமாக இருக்கும்.

அவனது நேர்மை, குணம் எல்லாம் புரிந்து அவனை அவளுக்கு பிடிக்க ஆரம்பிக்கும்.

வீரராகவன், ஆதியோட தாய் தந்தை மறைவுக்கு பிறகு அவர்கள் குடும்பத்துக்கு பெருமளவில் உதவி செய்த ஆதீஸ்வரனின் தந்தையின் நண்பன். அவர்மீது ஆதிக்கு நிறைய நன்மதிப்பு இருந்தது.

அவரும் இவன் இருக்கும் அரசியில் கட்சியில் தான் இருப்பார். நல்ல பெயரும் செல்வாக்கும் இருக்கும். ஆனால், அரசியல் பதவியில் நிற்க விருப்பம் இல்லாமல் கட்சியில் மட்டும் இருப்பார். சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு இந்துஜா, பூஜிதா என இரு பெண்கள். இருவரும் வெவ்வேறு குணம். இந்துஜா மிகவும் பிடிவாதம், வீம்பு. அவளுக்கு ஆதியை மணக்க விருப்பம். அவன் பிடிகொடுத்திருக்க மாட்டான். போர்ஜரி செய்து கலெக்டர் வேலை வாங்கி அந்த பதவிக்கும் நியாயம் செய்யாமல் நடந்து அவளின் செயல்கள் எல்லாம் அம்பலமாகி அவளால் அவளின் தந்தைக்கு பெரும் கெட்டபெயர் வந்திருக்கும்.

மாட்டிய பிறகும் திருந்த மாட்டாள். வீரா மாமாவுக்காக கூட ஆதி இந்துஜா விஷயத்துல உதவி இருக்க மாட்டான். அவ செஞ்ச எல்லா வேலையும் ஏற்கனவே நிரூபிச்சாச்சு இனி நாம உதவி செய்ய போனா நம்ம பேரும் கெடும்ன்னு சொல்லி வீராவையும் ஒன்னும் செய்ய விட மாட்டான்.

இந்துஜாவுக்கு ஆதி மேல ரொம்ப கோபமா இருக்கும்.

சமயம் கிடைக்கிறப்ப வன்மத்தை கொட்ட காத்திட்டு இருப்பா.

ஆதி நாட்டுல நடக்கிற பெரிய தவறு ஒன்னை கண்டுபிடிக்கும் பொறுப்புல இருப்பான். அதனால பெரும்பாலும் ஊரிலேயே இருக்க மாட்டான். இந்த சமயத்துல தம்பி காதல் விவகாரம் அவனுக்கு பெரும் தலைவலியா இருக்கும். கனிகா பத்தி விசாரிச்சதுல நல்லவிதமா தகவல்கள் வரலை.

தம்பி சின்ன வயசுல அம்மா, அப்பா இறந்த அப்பறம் ரொம்பவும் பயந்த சுபாவமா மாறிடுவான். அவனுக்கு அதுக்கு முன்ன நடந்த நிகழ்வுகள் எல்லாமே ஒரு அதிர்ச்சி மூலம் பெரும்பாலும் மறந்து போன நிலை. இப்ப வரை அவன் எமோஷனலி ரொம்ப வீக்கான பெர்சன் தான். அவனால கண்டிப்பா கனிகா ஏமாத்தினா தாங்கிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, மனைவி தாராகிட்ட கனிகா எடுத்துகிட்ட ஒரு சிகிச்சை பத்தி விசாரிக்கிறான். (ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி).

ஒரு மருத்துவரா இதை அவ வெளியில் சொல்லக்கூடாது. ஆனா அவ சொன்னா மட்டும் தான் தம்பிக்கு புரிய வைக்க முடியும். அவ மறுக்க ஆதிக்கு கோபம் வருது. ரெண்டு பேருக்கும் அதனால மனஸ்தாபம் வந்திருக்கும்.

ஆதிக்கு தன் வீட்டுக்கு சர்ச் பண்ண வந்த விவேக் அப்படிங்கிற அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பழக்கம் ஆகியிருப்பார். அவர் மூலம் கனிகா பத்தின தகவல் கிடைக்குது. அவ பிரதாபனோட இல்லீகல் பொண்ணுன்னு.

இந்த ஆதாரத்தை தம்பிக்கு காட்டலாம்ன்னு ஆதி நினைக்கிறப்ப, அதுக்குள்ள சத்யா ரொம்ப டிபரஸ் ஆகி ஆக்சிடெண்ட் பண்ணியிருப்பான்.

MP தம்பி ஆக்சிடெண்ட் அப்படிங்கிற விஷயம் வெளிய போனா பெரிய பிரச்சினைன்னு யாருக்கும் தெரியாம பார்த்துப்பான். வீரராகவன், இந்துஜாவுக்கு விஷயம் கசிஞ்சிருக்கும். இந்துஜா இதை பயன்படுத்தி தாராகேஸ்வரிக்கு கூப்பிட்டு நீ பெயரளவுக்கு மட்டும் தான் மனைவி. அதுதான் சத்யாவுக்கு அடி பட்டதை ஆதி உன்கிட்ட சொல்லலைன்னு சொல்லுவா. அவளுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருந்தாலும் தாரா மனசளவுல தளர்ந்து போயிருப்பா.

கணவன் ஆதியும் தம்பி விஷயத்துல இவ உதவி செய்யாததால தான் இந்த நிலைமைன்னு மனைவி மேல கோபத்துல இருப்பான்.

சத்யாவுக்கு குணம் ஆனதும் விவேக் சேகரிச்ச தகவல்கள் மூலம் கனிகா தவறானவன்னு தெரிய வரும். அண்ணன் நம்ம காதலை பிரிச்சுட்டார்ன்னு தப்பா நினைச்சுட்டோமே அப்படின்னு குற்றவுணர்வுல அண்ணனைபேஸ் பண்ண முடியாம கஷ்டப்படுவான். காதல் தோல்வி அந்த frustration ல இருந்து மீண்டு வர ஆதி தம்பிக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி இருப்பான். அங்கேயும் சத்யா எதுவும் பேசாம இறுகி தான் இருப்பான்.

ஓரளவு உடல் குணமாகி வெளிய போன இடத்துல பூஜிதாவை பார்ப்பான். அவ இவனை தெரிஞ்ச போல காட்டிக்க மாட்டா. அவ பப்ளிக் ஈவண்ட்ஸ் எல்லாம் அரேஞ் செய்வா. அப்படி நோட்டீஸ் தரும்போது ஏதும் பிரச்சினை வந்தா பொய்யா ஒரு பேரை சொல்லி, சத்யா நம்பர் தந்துட்டு வந்துட்டு இருப்பா. அது சத்யாவுக்கு இப்ப அவளை பார்த்தபோது தெரிஞ்சுடும்.

ஆதி திரிபுராவுல வேலை விஷயமா இருக்கும் சமயம், இங்கே தாராவுக்கு உடம்பு சரியில்லாம நடு ராத்திரி ஹாஸ்பிடல் போய் இருப்பாங்க. அதை கேள்விப்பட்டு ராத்திரயோட ராத்திரியா சென்னைக்கு வரவன் கையில அடி பட்டு, காய்ச்சல் அதிகமாகி ஹாஸ்பிடல் ல இருக்கும் மனைவியை பார்க்கிறான்.

அவளை நம்ம கவனிக்கவே இல்லைன்னு ரொம்ப குற்றவுணர்வா போயிடுது. அவகிட்ட சமாதானம் பேசறான். அவ பிடிகொடுக்க மறுப்பா. இப்பவும் அவனுக்கு அவகிட்ட சில விவரங்கள் தேவைப்படும். ஆனா விசாரணை செஞ்சா அவளோட மறுபடியும் மனஸ்தாபம் வரும்ன்னு அமைதியா இருக்கிறதா சொல்லறான்.

அவ திட்ட, அவன் தான் டிடக்டிவ் ஆக படிச்சிருக்கிறதை சொல்லறான்.

இதுவரை போட்ட முடிச்சுகள்:

  • தாரகேஸ்வரி ஏன் கேரளா பொண்ணு மாதிரி இருக்கணும்? அவளோட தோழி அலக்கியா யாரு? அவளுக்கு என்ன பிரச்சினை? அவளை காப்பாத்த இவ ஏன் மறைஞ்சு வாழணும்?

  • இன்ஸ்பெக்டர் விவேக் ஏன் ஆதீஸ்வரன், சத்யேந்திரன் மேல பாசமா இருக்கணும்? ஆதியும் ஏன் அவன்கிட்ட தடுமாறி நிக்கிறான்?

  • தாராவோட அப்பா ஏழுமலை ஏன் ஆதியோட அப்பா, அம்மாவை கொன்னிருக்கணும்?

  • சத்யேந்திரன் எந்த காரணத்துக்காக கொஞ்சம் பயந்த சுபாவமா இருக்கான்? அவனுக்கு என்ன பிரச்சினை?

  • ஆதீஸ்வரன் எதை கண்டுபிடிக்க நிறைய ஊர்ல சுத்திட்டே இருக்கான்?

  • ஆதீஸ்வரன் இப்ப தாரா கிட்ட என்ன விசாரிக்க நினைப்பான்?

இதுக்கான பதில் எல்லாம் போக போக கிடைக்கும். உங்கள் காத்திருப்புக்கு நன்றி! இன்றிலிருந்து தொடர்ந்து கதையோடு பயணிக்கலாம்.