“ஓ… இதுதான் மேட்டரா? அர்ஜுன் சார் நம்பர் வாங்கித்தரவா? மதுகிட்டப் உன் லவ் பற்றிப் பேசாத. அவர்கிட்ட நேராப் பேசு, அப்பா யெஸ் சொன்னா மதுவும் யெஸ் சொல்லிடுவா… முக்கியமா மதுகிட்ட ஃபோன்ல இதைப்பற்றி பேசவே பேசாத… இன்னும் எல்லா ஃபோன்லயும் ப்ளாக் பண்ற ஆப்ஷன் இருக்கு மச்சி. சாம்சங்காரன் கடைசியா லான்ச் பண்ண ஃபோன்லக்கூட ப்ளாக் ஆப்ஷன் இருக்கு.”
“ப்ளாக் பண்ணி விளையாட நாங்க இன்னும் சின்னப் பசங்களாடா? மனசுல இருக்கிறதை பளிச்சுன்னு முகத்துக்கு நேரா சொல்ற வயசு வந்திருச்சு ரெண்டு பேருக்கும். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூன்னு சொல்றது சப்ப மேட்டர். ‘Hello Good Morning, I am fine, How Are You?’ என்று கேட்குறது மாதிரிதான் ‘I Love You’ சொல்றதும் விவேக். சப்ப மேட்டர்.”
“ஓ… நீ சொல்லிட்டியா? நீ மதுகிட்ட “அந்த” குட்மார்னிங் சொல்லிட்டியா?” என்று விவேக் கேட்டபோது ஆர்யா முகத்தை திருப்பிக்கொண்டான்.
“என்னடா? பதிலே சொல்ல மாட்டிக்குற? நீ தானப்பா சொன்ன அந்த குட் மார்னிங் சொல்றது சப்ப மேட்டர்னு… அந்த சப்பை மேட்டரைச் சொன்னியா இல்லையா?”
“ப்ச்…”
“என்னடா?”
“சொதப்பிட்டேன் மச்சி.”
“அது தெரியும்.”
“??”
“அதான் உன் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே. சொதப்பிட்டன்னு புரியிது. எங்க எப்படின்னு சொல்லு. ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பார்க்குறேன்.” என்று நண்பனாய் பொறுப்பாய் விவேக் கேட்டபோது அவனது கைபேசி அவனை அழைத்தது.
மதர் காலிங் என்று திரையில் தோன்றியதும் அழைப்பை ஏற்று,
“அம்மா சொல்லுங்க.” என்றான் விவேக்.
மறுமுனையில் விவேக்கின் அன்னை அவனிடம் ஏதோ பேசினார்.
“இன்னும் ஒரு வருஷம் போகட்டும்மா. 24 தான ஆகுது…”
“நம்ம ஜோசியர் சொன்னார்ப்பா. 25க்குள்ள முடிக்கணுமாம். இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ல?”- வவிவேக்கின் அன்னை.
“சரி, கொடுக்கிறது கொடுத்த, நாலு மூலையிலும் நாலு கேமரா இருக்கும் லிஃப்ட்டுக்குள்ளயா வச்சிக் கொடுப்ப? அதான் பொண்ணு கோச்சிக்கிச்சு. அதான் பெங்களூரில தடுக்கி விழுந்தா ஃப்ளேம் ஆஃப் த பாரஸ்ட் மரம் இருக்குல? அந்த மரத்துக்கடியில வச்சிக் கொடுத்திருக்கலாம்ல? சரி இப்ப என்ன தான் சொல்றா மது?”
“கிஸ் பண்ணதும் ஒரே அழுகை மச்சி… அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சமாதானம் ஆனா… இப்ப ஒரு மாசம் டைம் கேட்குறா மச்சி.”
“எதுக்கு ஒரு மாசம் கேட்குறா? அநியாயமாத் தெரியல…”
“அதான மச்சி. எவ்வளவு பெரிய அநியாயம்… இதுலாம் டூ மச்சா இல்ல?”
“ஒரு மாசம் கழிச்சி நோன்னு சொல்றதை ஒரு நிமிஷத்துல சொல்லலாம்ல… இதுலாம் டூ மச் தான் டா.”
“என்னது? நோ சொல்வாளா?”
“200 பெர்சென்ட். நோ தான் டா சொல்வா. ஸ்கூல்ல அம்மா வேணாம்னு சொன்னாங்க, காலேஜ்ல அப்பா வேணாம்னு சொன்னாங்க, இப்ப அமெரிக்கா உன்னை வேணாம்னு சொல்லப்போகுது… ஹா… ஹா…”
“போடா அங்குட்டு. நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேண்டாம். நானே பார்த்துக்குறேன்.”
“சரி… சரி கோவிக்காத மச்சி. பொண்ணுங்க குறைஞ்சது பத்து நாள் டைம் கேட்குறாங்க டா. நானும் நிறைய பசங்க சொல்லி கேள்விபட்டிருக்கேன். மதுவுக்கு எதுக்காம் ஒரு மாசம் டைம் வேணும்? எனக்கும் இந்த லாஜிக் புரியல மச்சி… ஏன் பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு ஓகே சொல்லவே இத்தனை நாள் டைம் எடுத்துக்கிறாங்க?”
“ஹி… ஹி… காமெடியா இல்ல… நமக்குத் தெரியாத பொண்ணுங்க சமாச்சாரமா? எத்தனை படத்துல எத்தனை பொண்ணுங்க பார்த்திருப்போம்…”
“எனக்கு எதிரியே வேணாம்டா… இப்படி நீ அவகிட்டப் பேசினாப் போதும். ஒரே நாள்ல பதிலைச் சொல்லிடுவா… நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க சார். நான் என்னோட வேலையை பார்த்துக்குறேன்…”
“கோசிக்காத மச்சி… மது சும்மா சொல்றா டா. பொண்ணுங்களுக்கு பசங்களை பயமுறுத்துறதுல பயங்கர கிக் மச்சி. They play games with our hearts machi… பசங்களை நாள் கணக்கா சுத்தவிடுறதுல அவுங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷம்.” – நகத்தைக் கடித்துக்கொண்டே படுதீவிரமாக விவேக்.
“இல்லப்பா… பொண்ணுங்க மனசுக்குள்ள சில டெஸ்ட் வச்சிப்பார்ப்பாங்களாம் டா. இந்த பையன் நல்லவனா, இவன் நம்மள நல்லா வச்சிப்பானா, இவன் கேரக்டர் என்ன? அப்படின்னு…”
“ஓ… “
“மதுவும் நாங்க ஸ்கூல்ல மீட் பண்ணதுல இருந்து காலேஜ் வரை என்னைப் பத்தின விஷயங்களை யோசிச்சிப் பார்த்து டெஸ்ட் வச்சிட்டுத்தான் சொல்வாளாம் டா. எல்லாத்துலயும் நான் பாஸ்ஸாகணுமாம் டா.”
“ஓ…”
“கண்ணும் கண்ணும் காதலிச்சா பத்தாது, மூளையும் காதலிக்கணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்னு மது சொல்றா டா. அவ அதுக்கு ஒரு நல்ல பேர் சொன்னாளே… ம்… ஞாபகம் வந்திடுச்சு… “லிட்மஸ் டெஸ்ட்”, இது தான் மது அந்த டெஸ்ட்டுக்கு வச்சிருக்கும் பேரு மச்சி. லிட்மஸ் பேப்பரின் சாயம் வெளுப்பதுபோல மனுஷங்க குணம் வெளுக்குதா இல்லையான்னு அவ சோதிச்சிப் பார்க்கணுமாம்.”
“விவேக்… என்னடா தலையில கைவச்சி ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க?”- ஆர்யா.
“நீ சொன்ன விஷயம் அப்படி மச்சி.”
“நான் என்ன சொன்னேன்? பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு முன்னே பசங்க கேரக்டர் பத்தி மனசுக்குள்ள டெஸ்ட் வப்பாங்கன்னு மது சொன்னா. அதைத்தானடா நான் உன்கிட்ட சொன்னேன்? எனக்கு நீ உதவி செய்வன்னு பார்த்தா… நீயே இப்படி உட்கார்ந்திருக்க…”
“அங்கதான மச்சி இடிக்குது? இரு வர்றேன்.” என்றவன் வேகமாக தனது கைபேசியை எடுத்து தனது அன்னைக்கு அழைத்தான்.
அன்னையுடன் பேசிவிட்டு வந்தவன் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆர்யாவிடம்,
“பொண்ணு பார்க்கச் சொல்லிட்டேன் மச்சி, இத்தனை நாள் என்னை ஏன் எந்தப் பொண்ணும் லவ் பண்ணலங்கிற விஷயம் கிரிஸ்டல் கிளியரா தெரிஞ்ச பிறகும் வெயிட் பண்றது பெரிய மிஸ்டேக் மச்சி. எந்தப் பொண்ணும் எவ்வளவு ஈசியா டெஸ்ட் வச்சாலும் நான் பாஸ் பண்ணப் போறது இல்ல.”
“டேய்…” என்று குபீர்ரென்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆர்யாவிடம்,
“நிஜமா டா ஆர்யா. எந்த ஒரு பொண்ணும் எவ்வளவு ஈசியா குவஸ்டின் பேப்பர் செட் பண்ணாலும் நான் அதை பாஸ் பண்ணப்போறதில்ல… பொண்ணுங்க என்னோட கேரக்டருக்கு லிட்மஸ் டெஸ்ட் வச்சா… லிட்மஸ் பேபர்ரே கிழிஞ்சிடும் மச்சி…”
“விவேக்… என்னால முடியல டா…” என்று சிரித்துக்கொண்டே இருந்த ஆர்யாவிடம்,
“நீ வேற மூளையால ஸைட் அடிக்கணும்னு மது சொன்னான்னு சொல்ற… அதெல்லாம் என் விஷயத்துல நடக்கிற காரியமாடா? நாம் இருவர் நமக்கு ஒருவர்ங்கிற இல்லற வாழ்க்கைய எதுக்கு மச்சி சிக்கலாக்கணும்? மூளை, லிட்மஸ் டெஸ்ட் அது இதுன்னு சொல்லி எதுக்கு இல்லற வாழ்க்கையை சிக்கலாக்கணும்?” என்றான் விவேக்.
“ஹா…ஹா…”
“நான் பேசப் பேச நிறுத்தாம சிரிக்கிற? அப்பவே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்… ஆனா பாவம் போனா போகுதுன்னு சொல்லாம விடலாம்னு நினைச்சா… நீ என்னை வம்பிழுத்திழுத்துட்டே இருக்க??”
“ஹா… ஹா… என்கிட்ட நீ என்ன விஷயம் மச்சி சொல்லணும்?”
“ஆர்யா வேணா… நீ தாங்க மாட்ட… உன்னை மன்னிச்சி விட்டுருறேன்… பொழச்சிப்போ… சிரிக்க மட்டும் செய்யாத.”
“திரும்பத் திரும்ப சிரிக்கிற? இருடா இரு…” என்ற விவேக் உள்ளறைக்குள் வேகமாக நுழைந்து ஆர்யாவின் கப்போர்ட்களை உருட்டினான். வெளியே வந்தவன், “மச்சி உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் தான இது?”
“ஆமா டா.”- விவேக் கையில் இருந்த சிகப்பு நிற பென் டிரைவ்வைப் பார்த்து அலறலாய் ஆர்யா.
“ரெட் கலர் பென் டிரைவ் என் கையில இருக்கு… ப்ளூ கலர் பென்டிரைவ் எங்க?” – நக்கலாய் விவேக்.
“ஓ… மை கடவுளே…”
“ஹா… ஹா… மதுகிட்ட எந்தக் கலர் பென் டிரைவ் கொடுத்த மச்சி?”