“சரிதான் மா” என்றவர் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்காமல் கொடைக்கானலை பற்றி பேசிக் கொண்டே இருவரும் கோயில் வந்து சேர்ந்தனர்…
கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பிறகு., அங்கு கொடுக்கும் இலை பிரசாதத்தை வாங்கிக் கொண்டு., (பிரசாதம் என்பது இலையில் சந்தனம்., திருநீறு வைத்து கொடுப்பார்கள்) கோயிலை சுற்றி விட்டு அங்கிருந்த ஒரு மரத்தின் வேரில் அமர்ந்தாள்., அருகில் இருந்த திண்டில் தாத்தா அமர்ந்தார்..,
சற்று நேரம் கழித்து தாத்தாவிடம் “தாத்தா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க., கார்ல வரும் போது நீங்க யோசிச்சிட்டு இருக்கும் போதே புரிஞ்சிடுச்சு.., என்ன விஷயம்”., என்று கேட்டாள்.
“நீ வந்தது இங்கே யாருக்கும் தெரியாது., உங்க பெரியப்பா வீட்ட தவிர., ஜெ. கே வீட்டிலும் நாங்க எதுவும் சொல்லல.., சாதாரணமா கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம்., அப்படிங்கிற மாதிரி பேசிட்டு வந்துட்டோம்.., அவங்க வீட்டுல கார்த்தி தாத்தாவும் பாட்டியும் மட்டும் தான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.., மத்தபடி வீட்ல எல்லாரும் அமைதியா இருக்காங்க., நாங்க போகும் போது அசோக் சொன்ன மாதிரி கார்த்தி வீட்டிலேயே இல்லை., வீட்டில் யாருக்கும் கல்யாணத்தில் இஷ்டம் இல்லனு தோணுது.., ஆனால் தாத்தாவும் பாட்டியும் இஷ்டப்பட்டதால., உங்க பெரியம்மாவோட அண்ணமார் எல்லாம் அமைதியா இருக்காங்க.., சரி தங்கச்சி பிள்ளைய வேண்டாம் ன்னு., சொல்லக்கூடாது அப்படிங்கிறதுல மட்டும் தான் சம்மதிச்சி இருப்பாங்க போல.., மத்தபடி., யாருக்கும் ரொம்ப பெரிய சந்தோஷமெல்லாம் அங்க இருக்கிற மாதிரி தெரியல.., திவ்யா எங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கிட்டா.., சரி நாம கண்டுக்க கூடாது ன்னு., விட்டுடோம்., எங்ககிட்ட அந்த பிள்ளை இதுவரைக்கும் எதுவும் பேசல., நாங்க சாதாரணமா வாங்கிட்டு வந்ததெல்லாம் கொடுத்துட்டு பார்த்துட்டு வந்தோம்.., அவ்வளவுதான். ரெண்டு வீட்டுக்கும் நாம கொடைக்கானலில் இருந்து கொண்டு வந்த பழம்., காய்., எல்லாம் கொடுத்துட்டு பாத்துட்டு வந்தாச்சு., நம்ம செய்ய வேண்டியது செஞ்சாச்சு., நீ கல்யாணத்த ஆளோட ஆளா., வந்து கலந்துகிட்டு வந்துரு., எதைப் பற்றியும் கேட்காதே”.., என்று தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார்.
“தாத்தா நிச்சயதார்த்தம் பெரிப்பா வீட்டுல வச்சு., நான் எப்படி வர முடியும். நான் வரமாட்டேன்”., என்று சொன்னாள்.
“அப்ப இப்ப நீ வரலையா”.., என்றார்.
தாத்தா பாட்டி வீட்ல இருக்கிறேன்., வேற ஒன்னும் இல்ல வந்துட்டேன், அதனால் கல்யாணத்திற்க்கு கோயிலுக்கு வர்றேன்., கோயிலில் வச்சு கல்யாணம் முடிஞ்சா., மண்டபத்தில் ரீசப்ஸன்., மத்தபடி ஒன்னும் இல்ல தாத்தா பார்த்துக்கலாம்”.., என்று சொன்னாள்.
“சரிமா உன்னை நான் இதுக்கு மேல கட்டாயப்படுத்தல”., என்று சொல்ல “சரி” தாத்தா என்று பேசிக் கொண்டிருந்தாள்.
“சரி மா., அப்புறம் இன்னொரு விஷயம் பேசணும்” என்றவர் சரண்யாவை பார்த்த படி அமைதியாக.,
“சொல்லுங்க தாத்தா”., என்றாள்
” நல்ல நல்ல இடமா வருது., பார்க்கலாம்னு நினைக்கிறோம்., உன் அப்பாவும் அம்மாவும் சம்மதிச்சிட்டாங்க., உங்க அப்பா பாட்டி, தாத்தாட்ட யும் பேசினோம்., அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்., மேற்கொண்டு பேசலாம், அப்படிங்கற ஐடியா இருக்கு., இங்க எல்லாம் முடிச்சிட்டு அவங்க பத்து நாள் கழிச்சு தான் உங்க அப்பாவும் அம்மாவும் திண்டுக்கல் வருவாங்க., வரும் போது இங்கே பெரியவங்களும் வர்றோம் ன்னு சொல்லியிருக்காங்க.., அவங்க வந்ததுக்கப்புறம் நம்ம அலையன்ஸ் பத்தி பேசலாம்., அப்படின்னு ., உங்க அப்பா சொல்லி இருக்காரு., நீ என்னடா சொல்ற., உன்கிட்ட சம்மதம் வாங்கினதுக்கு அப்பறம் மத்தது ஆரம்பிக்கணும்னு உங்கப்பா சொன்னார்” என்று சொன்னார்.
“என் ட்ட எதுக்கு கேக்கணும்., நான் தான் உங்க ட்ட நேத்தே சொல்லிட்டேன்ல., உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல தாத்தா., பாருங்க” என்று சொன்னாள்.
“உன்மனசுல ஏதும் எண்ணம் இருக்கா., மா” என்று கேட்டார்.
“அப்படி எல்லாம் இல்ல தாத்தா” என்று சொல்லும் போது அவள் அறியாமல் ஒரு சிறு வலி வந்து சென்றது., என்னவோ உண்மை தான்., அது என்ன என்று அவளால் புரிந்து கொள்ள முடியாத போது அவள் எங்கிருந்து சொல்வாள்., அது என்னவென்று..,
“ஒரு அலையன்ஸ் அப்பா ஒர்க் பண்ற இடத்தில இருந்தே பாத்து இருக்காங்க., ஆனா சிங்கப்பூர், அங்க போய் நீ போக மாட்ட அப்படிங்கிறதால்ல வேண்டாம் ன்னு யோசிச்சு இருக்காங்க., நீ சரின்னா அதை கூட பார்க்கலாம் ன்னு உங்க அப்பாக்கு ஒரு எண்ணம் இருக்கு… அப்புறம் கொடைக்கானலில் ஒருத்தங்க கேட்டாங்க., நம்ம எஸ்டேட்டுக்கு இரண்டு எஸ்டேட் தள்ளி உள்ளவங்க தான்., பையன் இங்க இல்ல., யூ கே ல வொர்க் பண்றான்., உன்ன கல்யாணம் பண்ணிகிட்டா கூட கூட்டிட்டு போற மாதிரி இருக்கும்., அதுவும் பாரின் ன்னு தான்., அது தான் யோசிக்கிறேன்., உனக்கு சரி னா., சரி பார்க்கலாம், அப்படிங்கற ஒரு எண்ணமும் இருந்துச்சு..
உனக்குத்தான் பாரின் பிடிக்காதே அதுதான் யோசிச்சிட்டு இருக்கோம்., நீ எந்த இடத்திற்கு ஒகே சொன்னாலும் எங்களுக்கு சந்தோஷம் தான்” என்று சொன்னார்.
” எனக்கு ஒன்னும் இல்ல தாத்தா., நீங்க எல்லாம் சேர்ந்து பாருங்க., நீங்களே முடிவு பண்ணுங்க” என்று சொல்லி கொண்டிருந்தாள்.
“அது மட்டுமில்லாமல் திண்டுக்கல்ல உங்க சின்ன தாத்தா இருக்காரே.., என்று சொல்லி திண்டுக்கல் தாத்தா தன் தம்பியைப் பற்றி சொன்னார். அவன் மகளை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க உறவு இடத்துல ஒரு பையன் தான்., உனக்கு முறை தான் வரும் அவங்களும் கேக்குறாங்க.., அந்த பையன் இங்கதான் இருக்காங்க., தஞ்சாவூர் பக்கம், இனி எந்த மாப்பிள்ளை பாக்கலாம்னு சொல்லு., அந்த மாப்பிள்ளை பார்ப்போம்” என்று சொன்னார்.
“ஐயோ தாத்தா., இதெல்லாம் எதுக்கு என்கிட்ட கேக்குறீங்க., நீங்க பாருங்க எனக்கு அதைப்பற்றி எல்லாம் ஒன்னுமில்ல”., என்று சொன்னவள் கிளம்பு முன் மறுபடியும் சாமி முன் போய் நின்றாள்..
அவர் தாத்தா வரிசையாக மாப்பிள்ளை களைப்பற்றி அடுக்கவும்., அவள் அறியாமல் ஒரு உதறல் எடுத்தது, எனவே தான் கடவுள் முன் போய் நின்றாள்., ‘நான் சின்ன வயசிலே உங்க கிட்ட வந்து இருக்கேன்., என்னோட 15 வயசு வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் நான் வரும் போதெல்லாம் தவறாமல் உன்ன வந்து பார்த்து இருக்கேன்., இந்த ஏழு வருஷமா இந்த பக்கம் வரவும் இல்லை., இங்க உன் இடத்துக்கு வரவும் இல்லை., ஆனால் நான் மனசுல உன்ன நினைச்சேன்., உங்கிட்ட தான் என் மனசு கஷ்டத்தை சொன்னேன்., உனக்கும் தெரியும்., இப்ப சொல்லு நான் என்ன செய்யணும்.., எனக்கு எது நல்லது நினைக்கிறாயோ., அதை நீயே நடத்து’., என்று சொல்லி ஐயப்பனிடம் தன் மனம் பாரங்களை இறக்கி வைத்தாள். ‘நீ யாரை செலக்ட் பண்றியோ., நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்., அதுதான் நீ எனக்கு தேர்ந்தெடுக்கிற வாழ்க்கையா இருக்கும்னு நம்புறேன்., என் மனசுல என்னை அறியாமல் ஏதோ ஒரு வலி., ஏதோ ஒரு சலனம் இருந்துகிட்டே இருக்கு., அது என்ன னு ஒன்னும் புரியல., என்ன பண்ணனும் தெரியல., அதையும் நீ தான் எனக்கு மாத்தி தரணும்., என் வாழ்க்கையே நீ தான் சரி பண்ணிக் கொடுக்கணும்’ என்ற வேண்டுதலோடு அங்கிருந்து கிளம்பினாள்.
அங்கிருந்து கிளம்பவும் தாத்தா பேசத் தொடங்கினார். “பாப்பா உனக்கு கோபம் இல்லையே டா.., கல்யாணம் பேசுவதில்” என்று கேட்டார்.
“என்ன தாத்தா நீங்க, நான் என்ன சொன்னேன். எனக்கு எந்த கோபமும் இல்லை. நீங்க எல்லாம் கல்யாண விஷயத்தை சிம்பாலிக்கா சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்னு, எனக்கு கொஞ்ச நாளாவே தோனிட்டு தான் இருந்துச்சு., நீங்க பாருங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”., என்று சொன்னவள்.
தாத்தாவிடம் பழைய கதைகளை தோண்டித் துருவ தொடங்கினாள். “ஏன் தாத்தா இந்த ஊர்ல பொண்ணு பாத்துட்டு., அப்புறம் எப்படி தாத்தா திருச்சில போய் கல்யாணம் பண்ணுனீங்க” என்று கேட்டாள்.
“இத உன் ஆச்சிய பக்கத்துல வச்சி கேட்டனே., எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்துருக்கும்”.., என்றார்.
“அதனால தான் இப்ப கேட்டேன்”., என்றாள்.
தாத்தா சிரித்துக்கொண்டே “வாலு பொண்ணு” என்றார்.
கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில் தாத்தா., தாத்தா., பலாப்பழம் என்றாள்.
“நம்ம தோட்டத்தில் இல்லாத பழமா” என்றார்.
“கொடைக்கானல்ல நம்ம தோட்டத்துல இருக்கற பலாப் பழத்தை விட இன்னும் டேஸ்டா இருக்கும்., நிறுத்தி வாங்கலாம் தாத்தா” என்று சொன்னவள் காரை பலாப்பழம் இருக்கும் இடத்தில் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினாள்.
அவர்கள் தனித்தனியாக எடுத்து வைத்து விற்றுக் கொண்டிருக்கும் பலாச்சுளை எப்போதும் போல தாத்தா வாங்கி கொடுத்தார். அங்கு வைத்தே சாப்பிட்டு விட்டு வரும் வழியில் இருக்கும் பண்டங்களை எல்லாம் சிறு சிறு கடைகளை கூட விடாமல் தேன்மிட்டாய் போன்ற சிறுவயதில் வாங்கி மிட்டாய்களை எல்லாம் வரும் வழியாக அங்கே இருந்த பெட்டிக்கடையில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே வந்தாள்.,
” நீ வாங்கி சாப்பிட்டு வர்றத பாட்டி பார்த்தா., உன்ன சத்தம் போடுவா” என்று சொன்னார்.
“உங்களுக்கு ஒரு சாக்லேட் தாரேன், தாத்தா., நானும் சொல்ல மாட்டேன்., நீங்க சாப்பிட்டீங்க ன்னு., நீங்களும் சொல்லக்கூடாது., ஆனால் உங்களுக்கு சுகர் ஏறினா பாட்டி கண்டுபிடிச்சுடுவாங்க., அதையும் பார்த்துக்கோங்க., என்று சொன்னாள்.
இருவரும் பேசி சிரித்துக் கொண்டே வந்தனர். இவளின் சிரிப்புக்கு நேர்மாறாக அங்கு வீட்டில் ஒரு களேபரம் நடந்து கொண்டிருந்தது….