வானம் நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே விடியுமேபூமி உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சோழலுமே சோழலுமே…
அந்தி பகல் எது ஒன்ன
மறந்தாலேஅத்தனையும் பேச
பத்தலையே நாளே
அவள் தூக்கம் கலையும் போது., அவன் முழித்திருந்தாலும்., அவளிடம் காட்டிக் கொள்ளாத படி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.
தூக்கம் கலைந்து அவள் எழுந்து வாக்கிங் செல்லலாம் என்று நினைத்த போது தான்., அவன் கையணைப்பில் அவளும் அவனை அணைத்தபடி., அவன் மார்பில் முகம் புதைத்து படுத்து இருப்பதை உணர்ந்தவளுக்கு., ஒருபுறம் வெட்கமாக வந்தாலும், அவனுடைய இறுகிய அணைப்பு இடையில் விழித்து இருப்பானோ என்று தோன்றியது., இருந்தாலும் எதுவும் கண்டு கொள்ளாமல் மெதுவாக அவனை விட்டு விலக போகும் போது., அவன் “இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இரு” என்று கேட்டான்.
அவளும் சற்று நேரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக படுத்திருக்க., அவன் மார்பில் வைத்திருந்த அவள் தலையை இன்னும் அழுத்தி பிடித்துக் கொண்டான். சற்று நேரம் அப்படியே இருந்தவள் பின்பு மெதுவாக அவனிடம் “வாக்கிங் போகலாம் வரீங்களா” என்று கேட்டாள்.
“போகலாம்” என்று பேசிய படி எழுந்து ரெப்பிரஷ் செய்து உடை மாற்றி கொண்டு இருவரும் பேசிக் கொண்டே அவர்கள் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தை சுற்றி வந்தனர்., அதன் பின்பு ரிச்சார்ட் பக்கமாக சென்ற அவர்கள்., அங்கு மேனேஜர் காலையிலேயே எழுந்து கணக்கு புத்தகத்தோடு இருப்பதை பார்த்தவள் “என்ன சார்” என்று கேட்டாள்.
எப்பவும் இதுதான் வழக்கமாக இருக்கும்., காலையில் வாக்கிங் போயிட்டு அப்படியே வந்து பார்த்து விட்டு போவாள். இப்போ “இதுவரைக்கு உள்ள கணக்கை ஏற்கனவே டெய்லி அனுப்பி இருந்தீங்க தானே”., என்றாள்.
“இருந்தாலும் நீங்க ஒரு முறை பார்த்துட்டா நல்லாயிருக்குமே” என்றார்.
“ஒரு முறை பார்த்துட்டு போயிடலாம் உட்காருங்க” என்று சொல்லி அவனையும் அமரவைத்து அவனுக்கும் சேர்த்து அங்குள்ள வேலையை கொடுத்தாள். அதன் பிறகு அங்கு ரிசார்ட்டில் இருந்து டீ சூடாக வர இருவரும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
மெதுவாக கை கோர்த்தபடி இருவரும் அடிமேல் அடி வைத்த படி மெதுவாக நடக்க.,
சரண்யா தான்., “கல்யாணம் பேசும் போது நீங்களும் என் ட்ட பேசனும் ன்னு சொன்னீங்க”., என்றாள்.
“நீயும் பேசனும் சொன்னதா ஞாபகம்”., என்றான்.
“ம்ம்ம்.. எனக்கு மனசு முழுக்க குழப்பம், என் மனசுல என்ன ஒடுச்சின்னு எனக்கே புரியாத சூழல்., கல்யாணத்திற்கு நான் ரெடி இல்லை., அதேநேரம் உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும்., அப்புறம் திவ்யா டாமினேஷன் தெரியும்., கல்யாணம் பண்ணினாலும் டாமினேட் பண்ணுவாளோ ன்ற பயம்., இதெல்லாம் தான் உங்க ட்ட பேசனும் ன்னு தோனுச்சி., ஆனால் அதெல்லாம் இப்ப தெளிவாகிருச்சி”., என்றாள்., நேற்று இரவு தான் தெளிவு வந்ததை நினைத்த படி.,
அவனும் அவள் கையை அழுத்தமாக பிடித்தபடி., எனக்கு நீ சம்மதிக்க மாட்டீயோ ன்னு யோசிச்சேன்., அப்படி இல்லை னா உன் ட்ட இப்ப சொன்ன எல்லாத்தையும் சொல்லனும் ன்னு நினைச்சேன்”., என்றான்.
“போதும் நான் சொன்னது தான்., அதில் மாற்றமே இல்ல”., என்றாள்.
அங்கு அப்போதுதான் பிள்ளைகள் நிற்க., அவர்களுக்கு அங்கு இருக்கும் சமையல் செய்யும் அம்மா அனைவருக்கும் டீ காபி என அவர்களுக்குத் தேவையான படி கலந்து கொடுத்துக் கொண்டிருந்தார்., இவர்கள் இருவரும் அங்கு குடித்துவிட்டு வந்து விட்டதால் வேண்டாம் என்று சொன்னார்கள்.
அதன் பிறகு சாதாரண பேச்சுவார்த்தையில் ஓடியது., இன்று எங்கெல்லாம் சுற்றப் போகலாம் என்று பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருந்தனர்..
அதன்பிறகு பிள்ளைகளின் யோசனைப்படி பிள்ளைகள் அடுக்கிக் கொண்டே போக.., ஒவ்வொரு இடமாக பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு., காலை உணவை மட்டும் முடித்துக் கொண்டு கிளம்பலாம்.,என்று பேசிக்கொண்டார்கள்.
ஏனெனில் மதியம் சுற்றிவிட்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது., வரும் வழியில் இடையில் எங்கேயாவது உணவை பார்த்துக்கொள்ளலாம்., உணவுக்காக இங்கு வந்து விட்டு திருப்பி போவது என்றால் நேரமாகி விடும்.., அதனால் சுற்ற வேண்டியவற்றை எல்லாம் சுற்றி விட்டு மெதுவாக வரலாம் என்று சொன்னதால்.., சமையல் செய்யும் அம்மாவிடம் “மதிய உணவு வேண்டாம் இரவு பார்த்துக் கொள்ளலாம்., ஒருவேளை மாலை நேரம் இங்கு வருவதாக இருந்தால் உங்களுக்கு போன் பண்ற மா.., அப்போ நீங்க ஏதாவது ஸ்னாக்ஸ் மாதிரி செஞ்சு டீ யோடு கொடுங்க., மத்தியானத்துக்கு எதுவும் வேண்டாம்” என்று சொல்லியபடி கிளம்ப தயாராகினர்…..
அனைவரும் கிளம்பி பில்லர் ராக்., குணா கேவ் என்று பார்த்துவிட்டு நிற்கும் போது தான் பில்லர் ராக் அருகில் வைத்து., பிள்ளைகள் எல்லாம் விளையாடிக் கொண்டு அங்கு சுட்டு விற்கும் சோளத்தை வாங்கி அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க…, அவனுக்கு வேண்டாம் என்று சொல்லி விட., இவள் மட்டும் பிள்ளைகளோடு சேர்ந்து ஒரு சோளத்தை வாங்கி கடித்துக் கொண்டு பிள்ளைகள் வேடிக்கை பார்ப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.,
ஏற்கனவே எல்லாம் பார்த்த இடம் என்பதால் இங்கு அதிகமாக வரும் பழக்கம் கிடையாது.., இன்று பிள்ளைகளுக்காக வர போய் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவளிடம் தோளோடு உரசியபடி அவள் தோளில் கையை போட்டு அவளை சேர்த்து பிடித்தபடி அருகில் வந்து நிற்கவும்., மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.., அவன் கண்ணில் தெரிந்தது என்னவென்று தெரியாமல் “என்ன” என்று கேட்டாள்.
“நேத்து நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொன்னேன்”., என்று சொன்னான்.,
“ஆமா சொன்னீங்க., இப்ப என்ன”., என்று கேட்டாள்.
“உனக்கு யாரா இருக்கும்னு ஒரு கெஸ்ஸிங் கூட இல்லையா”., என்று கேட்டான்.
“நான் தான் உங்ககிட்ட நேத்து சொன்னேன்ல., எனக்கு பொறாமை வந்து விடக்கூடாது வேண்டாம் அப்படின்னு.., சொன்னேன் இல்ல”., என்று சொன்னாள்.
சிரித்தபடி “என்னோட ஒன்பது வருஷ காதல் யாருன்னு கேட்க மாட்டியா”.., என்று அவனும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
இவளும் “ஒன்பது வருஷமா” என்றாள்.
“ஆமா படிக்கும் போது ரெண்டு வருஷம்., காலேஜ் தேட் இயர்.,போர்த் இயர்., ரெண்டு வருஷமா., அப்புறம் ஏழு வருஷம்” என்று சொன்னான்.
இவன் முகத்தையே பார்த்துக் கொண்டு “நிஜமா புரியல., நீங்க சொல்றது., கடைசி வருஷம் னு சொன்னீங்க., என்றாள்.
“அது மனசுல காதல் தான் கன்பார்ம் ஆனது., ஆனால் அதுக்கு முன்னாடியே எனக்கு தோணுச்சு” என்றான்.
அவனையே பார்த்தப்படி நிற்க அவனோ நிதானமாக “பொண்டாட்டி உன்ன தாண்டி., ஒன்பது வருஷமா லவ் பண்ணேன்., அதை சொல்றதுக்கு வந்து தான் யாருன்னு கேளு ன்னு சொல்றேனே ஒரு வார்த்தை அது யாருன்னு கேக்குறியா”.., என்று சொன்னான்.
ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆக அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் கையிலிருந்த சோளத்தை வாங்கி அவன் சாப்பிட தொடங்கும் போதும் அவள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
” சாப்பிடும் போது பார்க்காத வயிறு வலிக்கும்” என்று சொன்னான். அவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். “என்ன ஆச்சு” என்று அவன் சிரித்தபடியே கேட்டான்.
“சிரிக்காதீங்க கோபம் வருது” என்று சொன்னாள். அதற்கு அவன் “என்ன கோவம் அம்மணிக்கு” என்று கேட்டான்.
“நிஜமா ஒன்பது வருஷமா” என்று கேட்டாள்.
” உன்னை முதன் முதலில் சாயா ன்னு கூப்பிட்டது., உன்னை நான் விரும்புறேன் அப்படின்னு தெரிஞ்ச, அந்த நிமிஷத்தில் தான்., உனக்கான பெயரை நான் செலக்ட் பண்ணினேன். எல்லாரும் சரண்யா ன்னு கூப்பிட்டா., நீ எனக்கு தனியா இருக்கணும் அப்படின்னு தோணுச்சு”.., என்றான்.
அதிர்ச்சியாக இவள் அவனை நிமிர்ந்து பார்க்க., “என்ன” என்று கேட்டான்.,
“இல்ல நானும் இதே மாதிரி தான் யோசிச்சேன்., உங்களை பேர் சொல்லி கூப்பிடனும் ன்னு முடிவு பண்ணின போது” என்று சொன்னாள்.
“நீயும் என்னை லவ் பண்ண அப்படித்தானே”.,என்றான்.
“இல்ல அதுக்கு பேரு லவ்வா., என்னன்னு தெரியாது, ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லும் போது..,
அவன் சொன்னான் “எனக்கு தெரியும் உனக்கு என்ன புடிக்கும் ன்னு., நம்ம ரெண்டு பேருக்கும் தான் மேரேஜ் அப்படின்னு பிக்ஸ் பண்ற அந்த நிமிஷத்துக்கு முன்னாடி.., நான் கண்டுபிடிச்ச ஒரு விஷயம்”., என்று சொன்னான்.
இவளோ “எப்படி தெரியும்., எப்படி கண்டு பிடிச்சீங்க”., என்று கேட்டாள்.
நீ கோயிலுக்கு போய்ட்டு வந்து அந்தப் புள்ளைங்க விளையாடுவதை பார்த்து அங்கே நின்ன இல்ல., உங்க பாட்டி வீட்டு பக்கம்., அப்போ இங்க அத்தை வீட்டில் வைத்து சண்டை நடந்துக்கிட்டு இருந்துச்சு., அப்போ உன் செல்லுல போன் அடிச்சது., நான் உன்னை பார்த்து டென்த் படிக்கும் போது., நான் உனக்கு சொல்ற பாட்டு கரிசக்காட்டு பெண்ணே அந்த பாட்டு ஞாபகம் இருக்கா.., நீ அடிக்கடி அந்த பாட்டு தான் பாடிட்டு சுத்துவ.., அந்த நேரத்துல நான் ஒன்னு சொல்லுவேன் கரிச காடு இல்ல., இது செம்மண் காடு… நீ அப்படி சொல்லி பாடு., ஆள் இங்க இருத்தாக்க சொல்லலாம் ன்னு., அப்ப நீ செல்லுவ எனக்கு கரிசக்காடு தான்., என்று சொல்லி பாடுவ.., என்றான்.
” இல்ல அந்த பாட்டு வந்த சமயம்., இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்., ஆனால் அந்த பாட்டை கேட்கும் போது கண்டிப்பா உங்க ஞாபகம் வரும்.., ஏன்னா நான் அந்த பாட்டை படும் போது நீங்க சொல்லுவீங்க ல ஆனாலும் நான் அப்படித்தான் பாடுவேன் எனக்கு ஞாபகம் இருக்கு., என் அவனை கண்டாயா அப்படின்னு சொல்லும் போது., என்னை தானே கேட்ட அப்படின்னு., நீங்க சொல்லி இருக்கீங்க”., என்றாள்.
“எப்ப சொன்னேன் ஞாபகம் படுத்தி பாரு” என்று சொன்னான்.
நான் டென்த் லீவுக்கு வந்து இருக்கும் போது சொன்னீங்க., வந்த மறுநாள் தோட்டத்தில வச்சு சொன்னீங்க”., என்று சொன்னாள்.
“நீ சின்ன பிள்ளை., படிக்கிற புள்ளை மனச கெடுக்க கூடாது ன்னு., தான் நான் சொல்லல.., ஆனா அதுக்கு அடுத்தடுத்து நீ வந்து இருந்தா.., கண்டிப்பா உன் கிட்ட சொல்லி இருப்பேன்., கண்டிப்பா ஸ்கூல் படிக்கும்போது சொல்லி இருக்க மாட்டேன்., நீ காலேஜ் படிக்கும் போது சொல்லியிருப்பேன்., அதுவரைக்கும் எப்படியும் மனசுக்குள்ள தான் வச்சு இருப்பேன்.., ஆனா அட்லீஸ்ட் உன்னை பார்க்கேன் அப்படிங்கற ஒரு சந்தோஷமாவது இருந்திருக்கும்., ஏழு வருஷம் பாக்கணும் தோணவே இல்ல, இல்ல உனக்கு”., என்றான்.
கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தவள். “எனக்கு நேத்து நைட்டு வரைக்கும் தெரியவே இல்லையே., நான் உங்கள தான் விரும்பினேன் ன்னு., எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.., உங்களை அடிக்கடி நினைச்சேன்., ஆனா அதுக்கு பேரு சத்தியமா லவ் அப்படிங்கற மாதிரிலாம் நான் பீல் பண்ணல.., எனக்கு அதுதான் லவ்வா அப்படிங்கறது எல்லாம் தெரியாது., நான் பிரண்ட்ஸ் ட்ட நிறைய பேசினதில்ல.., மனசு விட்டு பேச ஆளும் கிடையாது., ஒரு வேளை கூட பிறந்த அக்கா தங்கச்சி., அண்ணன் தம்பி., இருந்திருந்தா இல்ல திவ்யா என்கிட்ட நல்லா பேசுறவளா இருந்திருந்தா.., கூட நான் சொல்லி இருப்பேனோ என்னவோ”., என்றாள்.
“நேத்து நைட்டு தான் அம்மணிக்கு புரிஞ்சதா., இதுதான் லவ்வுன்னு” என்று அவனை அழுத்தி கேட்டான்.
“ஃபர்ஸ்ட் ஒன்னும் தெரியல., நீங்க தூக்கத்தில் கைபோட்டு. இங்கேயே இருக்கட்டும் அப்படினு சொல்லும் போது எனக்கு உங்கள வேண்டான்னு சொல்ல மனசு வரலை., சோ நீங்க மேல கை போட்டத ஒன்னும் சொல்ல முடியாம அமைதியா இருந்தேன்”., ஆனால் இடையில் என்று சொல்லி தூக்கம் கலைந்த பிறகு அவள் யோசனையை அவனிடம் சொன்னாள்.
அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்னை புடிச்சிருக்கு அப்படித்தானே” என்று கேட்டான். அவளும் சிரித்தபடி தலையாட்டினான் அதற்குள் பிள்ளைகளெல்லாம் வர இருவரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்…