Advertisement

அத்தியாயம் 36:

சிறைப்பட்டு கிடைக்கும் பறவை வேண்டுமானால்

அதில் இருந்து விடுபட நினைக்கலாம்! ஆனால்

உன் கரங்களோடு என் கரங்களை கோர்த்து

சிறைப்பட்டு கிடக்கவே விரும்புகிறது என் மனம்!

இளாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அருணுக்கு ஏனோ மனதிற்கு சற்று நெருடலாகவே இருந்தது. தனு கெஞ்சுவதும் அதற்கு இளா முறைத்ததுமே மீண்டும் மீண்டும் தோன்றி அவனை கவலை அடைய செய்தது.

அதே யோசனையுடனே மருத்துவமனைக்கு சென்றவன் பைக்கை பார்க் செய்துவிட்டு திரும்ப, அப்போது அங்கு வந்து நின்ற ஆட்டோவிலிருந்து வெண்பாவும், அவளது அன்னை ஹேமாவும் இறங்கினார்கள்.

அவர்களை கண்டதும் வேகமாக அருகில் சென்றவன் ஹேமாவின் முகம் சோர்வை பிரதிபலிக்க “வெண்பா அம்மாக்கு என்னாச்சு முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” என்று கேட்க,

“அண்ணா என்னனு தெரியலை திடீர்னு ரொம்ப ஸ்வெட்டிங்கா இருக்கு படபடனு வருதுனு சொல்றாங்க அதான் டாக்ரை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றாள் வெண்பா.

“நீ சொல்றதை வச்சு பார்த்தா ப்ளட் பிரஷர் அதிகமாகியிருக்கும்னு நினைக்குறேன் சரி வா செக் பண்ணிடலாம்” என்று அவரை கைத் தாங்கலாக அழைத்து வந்தவன் அவரை செக் செய்துவிட்டு, “ப்ரஷர் நூற்று எண்பது இருக்கு வெண்பா அம்மா வயசுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம்”

முப்பது வயசுக்கு மேல போனாலே சிக்ஸ் மன்த்க்கு ஒன் டைம் கம்ப்ளீட் செக்கப் பண்ணிக்க சொல்லி எல்லோருக்கும் நாங்க அட்வைஸ் பண்றோம் இதுல எல்லாம் ரிஸ்க் எடுக்க கூடாது வெண்பா இனிமே கவனமா பார்த்துக்கோ என்று விட்டு பிரஷரை குறைக்கும் மாத்திரையை அவரிடம் கொடுத்து ஒரு ஃபைவ் மினிட்ஸ் அப்புறம் செக் பண்ணி பார்ப்போம் என்று அருண் சொல்ல,

சரிண்ணா என்று சொன்னவளிடம் “வெண்பா ஒரு நிமிஷம்” என்று வெளியே அழைத்தான்.

இயல்பாய் ஏற்படும் பதட்டத்துடன் “என்ன அண்ணா அம்மாக்கு வேறேதுவுமா அதுக்கு தான் வெளிய கூப்பிட்டீங்களா?” என்று கேட்க,

“ஹேய் அதெல்லாம் ஒண்ணுமில்லைடா இது வேற தனுவை பத்தி கொஞ்சம் உங்கிட்ட பேசணும்”

“தனுவை பத்தியா? என்ன அண்ணா பேசணும்” என்று கேட்க,

“நாம அம்மாக்கு உடம்பு சரியில்லைனு கூப்பிட்டு வந்திருக்கோம் இவன் என்னடானா அவன் தங்கச்சி பத்தி பேசணும்னு சொல்றானேனு தப்பா நினைக்காதம்மா” என்று சொல்லியவனை இடைமறித்தவள்,

“என்ன பேசுறீங்கண்ணா நான் போய் அப்படி நினைப்பேனா? பேச்சுக்காக அண்ணானு சொல்லலை நிஜமா உணர்ந்து தான் கூப்பிடுறேன் சொல்லுங்க என்ன பேசணும்” என்று சொல்ல,

“இதை பத்தி யார்கிட்ட கேட்குறதுனு யோசிச்சுட்டே வரும் போது நீயும் அந்த நேரம் இங்கே வந்துட்ட தனுக்கும் இளாவிற்கும் இடையே எதும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லும்மா?” என்றான்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லையே அண்ணா ஏன் கேட்குறிங்க?” என்று கேட்க,

ஹாஸ்பிட்டலில் தான் பார்த்ததை அவளிடம் கூற, “இப்போ சொல்லும்மா தனு கெஞ்சுறா அவன் அவளை வெளிப்படையாவே முறைச்சுட்டு இருக்கான் இதை பார்த்துட்டு நான் என்னனு நினைக்குறது” என்று சொல்ல,

“ஹைய்யோ அண்ணா நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை நீங்க தான் தேவையில்லாம கவலைப்படுறிங்க” என்றாள் வெண்பா.

“ஒண்ணுமில்லைனு எப்படி நீ அவ்வளோ உறுதியா சொல்ற?” என்று அருண் கேட்டதும் பதில் சொல்லாது மெலிதாய் புன்னகைக்க,

“என்ன வெண்பா நான் கேட்டுட்டு இருக்கேன் நீ சிரிக்குற?”

“சிரிக்காம என்ன பண்ண சொல்றிங்க அவளுக்கு பிடிச்சவர் கூட கல்யாணம் ஆகியிருக்கும் போது பிரச்சனைனு சொன்னா வேற என்ன அண்ணா பண்றது?” என்றுவிட்டு அப்போது தான் உளறியதை உணர்ந்து கொண்டு நாக்கை கடித்துக் கொள்ள,

“என்ன வெண்பா சொல்ற? கல்யாணத்துக்கு முன்னாடியே தனுக்கு இளாவை பிடிக்குமா? சொல்லும்மா” என்று கேட்க,

இனிமேல் மறைப்பது இயலாத காரியம் என்று புரிய தனு, இளாவின் வாழ்வில் நடந்த தனக்கு தெரிந்தவைகளை அருணிடம் கூறினாள் வெண்பா. அந்நேரம் வெண்பாவை தேடி அவளது அன்னை வெளியே வர, அதன் பின் அவருக்கு டெஸ்ட் செய்து விட்டு மருந்துகளை எழுதி கொடுத்து அனுப்பினான் அருண். வெண்பா கூறிய விஷயங்களையே அசைப் போட்டுக் கொண்டிருந்தவன் தனுவிடம் இதை பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நண்பகல் வேளையில் டி.வி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த தியாவின் தொலைப்பேசி அடிக்க, எடுத்து பார்த்தவளின் முகம் புன்னகையில் விரிய சஜன் தான் அழைத்திருந்தான்.

அதை எடுத்து காதிற்கு கொடுத்தவள் “சஜூ” என்று அழைக்க, “டாலி குட்டி என்ன பண்ற?”

“தனியா உட்கார்ந்திருக்க போரடிச்சுது அதான் டி.வி பார்க்குறேன்” என்று சொல்ல,

“தனியாவா? ஏன் அம்மா வீட்டுல இல்லையா” என்று கேட்க,

“அத்தையும் மாமாவும் இளா அத்தானை பார்க்க போயிருக்காங்க இப்போ வர்ற நேரம் தான் “என்று சொல்ல, அந்த பக்கத்திலிருந்து பதிலேதும் இல்லை போன் அப்போதே கட் ஆகியிருந்தது.

அடுத்த பத்தாவது நிமிடம் உள்ளே வந்த சஜன், கிச்சனில் தியா நின்றிருந்ததை கண்டு அருகில் வந்தவன் பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.

இந்த திடீர் செயலில் அதிர்ந்த தியா “அய்யோ” என்று கத்த “ஹேய் டாலி கத்தாத நான் தான் கூல் கூல்” என்று அவளை தன் அணைப்பில் இருந்து விலக்காமல் சொல்லிக் கொண்டிருக்க,

“தியா என்னாச்சுடா” என்ற கயல்விழியின் குரலில் சட்டென்று அவளை விலக்கி நிறுத்தினான்.

உள்ளே வந்த கயல் அங்கு நின்றிருந்த சஜனை கண்டு “நீ எப்போடா வந்த? அதுவும் இந்த நேரத்துல வந்திருக்க?” என்று கேட்க,

“அது அது ஹாங் ஒரு ஃபைல் இங்கேயே வச்சுட்டு போயிட்டேன் அதை எடுக்க வந்தேன்” என்று ஒருவாறு சமாளிக்க,

அவனது தடுமாறல்களையும், தியாவின் முகத்தையும் ஒரு நொடி மாறி மாறி பார்த்தவருக்கு தன் மகனின் கள்ளத்தனம் புரிந்து போக, “ஃபைல்ல கிச்சன்லயா வச்சுட்டு போயிட்ட” என்று இதழோரம் தோன்றிய புன்னகையோடு கேட்க,

ஒரு முறை கண்களை சுழல விட்டவன் தியா ஜூஸ் தயார் செய்து வைத்திருப்பது கண்ணில் பட “எனக்கு டயர்டா இருந்துச்சு அதான் ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வர சொல்லலாம்னு வந்தேன். உங்கிட்ட ஜூஸ் கேட்டு எவ்வளோ நேரம் ஆகுது மேல கொண்டுவா நான் போய் ஃபைல் எடுத்துட்டு இருக்கேன்” என்று அன்னையிடம் தொடங்கி தியாவிடம் முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட,

“இந்தா தியா இதை கொண்டு போய் அவன்கிட்ட குடு. மாமாவுக்கு நான் போட்டுக்குறேன்” என்று அவளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு புன்னகைத்த கயலின் மனம் நிறைந்து இருந்தது.

அறைக்குள் நுழைந்தவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த சஜன் “என்ன டாலி இப்படி பண்ணிட்ட அம்மா இருக்காங்கனு சொல்லிருக்க கூடாதா?” என்று கேட்க,

“நான் தான் போன்ல பேசும் போது சொன்னேன்ல அவங்க வர்ற நேரம் தானு அதுக்குள்ள நீங்க போனை வச்சுட்டீங்க” என்று அவனை முறைக்க,

“சரி சரி முறைக்காத? அப்பா அம்மா வீட்டுல இல்லைனு சொன்னதும் அவசர அவசரமா கிளம்பி வந்தேன்” என்று சொல்ல,

அவன் எதுக்கு வந்தான் என்று தெரிந்திருந்தாலும் ஒன்றும் தெரியாதது போல் “எதுக்கு வந்தீங்க” என்று கேட்க,

“எதுக்கு வந்தேனு உனக்கு தெரியாது?” என்று அவளை கேள்வி கேட்க, “ம்ஹூம்” என்று தலையை இட வலமாக ஆட்டினாள்.

எதுவும் சொல்லாது அவளது தோளில் முகம் வைத்து இளைப்பாறி கொண்டிருந்தவனிடம் “எதுக்கு வந்தீங்கனு சொல்லாம அமைதியா இருந்தா என்ன நினைக்குறது” என்றதும் “அமைதியா இருக்கேனு யார் சொன்னா யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான்.

“ஓஹோ அப்படி என்ன யோசிக்குறிங்க சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்ல” என்று கேட்க,

“என்னோட மக்கு பொண்டாட்டிக்கு நான் எதுக்கு வந்தேனு வாயல சொல்லலாமா? இல்லை ஆக்ஷன்ல காட்டலாமானு தான் யோசிக்குறேன் நீ என்ன நினைக்குற டாலி” என்று கூறி அவள் முகம் பார்க்க,

“ம்ம்ம்” என்று கன்னத்தில் தட்டி யோசிப்பது போல் பாவனை செய்தவள் “ஆக்ஷனே ஓகே தான்” என்று அவனை  அணைத்துக் கொண்டாள் தியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அருண் தனுஷாவிற்கு அழைக்க “ஹலோ அண்ணா” என்று கேட்டதும்,

“தனும்மா ஃப்ரீயா இருக்கீயா? எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றதும்,

“இப்போ வொர்க் இருக்கு ஈவ்னிங் கொஞ்சம் ஃப்ரீ ஆகிடுவேன் ஏன் அண்ணா எதும் முக்கியமான விஷயமா நான் வேணும்னா லீவ் சொல்லிட்டு வரவா?” என்று கேட்க,

“இல்லடா லீவ்லாம் சொல்ல வேண்டாம் வேணும்னா ஈவ்னிங் ஒன் ஹவர் பெர்மிஷன் போட்டுட்டு ஒரு நாலு மணிக்கு ****** காபி ஷாப்பிற்கு வர்றியா?” என்றதும்,

“சரிண்ணா” என்று வைத்தவள் என்ன விஷயமா இருக்கும் ஒரு வேளை அனுவை பத்தி கேட்க கூப்பிடுறானா? எதுக்கு குழம்பிக்கிட்டு அங்கே போனா தெரிஞ்சிட போகுது என்று வேலையை தொடர்ந்தாள்.

மாலை நான்கு மணிக்கு அருண் சொன்ன அந்த காபி ஷாப்பிற்கு வந்தவள் தனக்கு முன்னரே அங்கு இருந்த அருணை கண்டு “அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும்” என்ற யோசனையுடனே அருகில் வந்தவள் “வந்து ரொம்ப நேரமாச்சா அண்ணா?” என்றபடி அமர்ந்தாள்.

“இப்போ தான் வந்தேன்டா என்ன சாப்பிடுற?” என்று கேட்டு விட்டு இருவருக்கும் ஆர்டர் செய்தான். ஆர்டர் செய்தவைகளை குடித்து முடித்த பிறகும் எதுவும் பேசாமல் இருக்கும் அருணை பார்த்து “என்ன அண்ணா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொல்லிட்டு அமைதியா இருக்க?” என்று கேட்க,

“இவ்வளவு நடந்திருக்கு இந்த அண்ணன்கிட்ட மறச்சுட்டியேம்மா?” என்று சொல்ல, “என்னது மறைச்சேன் எதை பத்தி சொல்ற?”

“இளாவை உனக்கு முன்னாடியே தெரியும்னு அவரை விரும்புறேனு சொல்லவே இல்லையே நான் ஒரு ப்ரெண்டா எல்லா விஷயத்தையும் உன்கிட்ட ஷேர் பண்றேன் தானே? ஏன் அனுகிட்ட ப்ரோப்போஸ் பண்றதுக்கு முன்னாடி உன்கிட்ட தான் நான் என் மனசுல இருக்கதை சொன்னேன் ஆனா நீ என்னை உன் விஷயத்துல விலக்கி தான வச்சுருக்க?” என்று கேட்க,

“அண்ணா உனக்கு இதை வெண்பா சொன்னாளா?” என்று கேட்க,

“யார் சொன்னாங்குறது இருக்கட்டும். என்கிட்ட ஏன் சொல்லாம மறைச்ச? சொல்லுடா இதை சொல்ல முடியாத அளவுக்கு நீ என்னை அந்நியமா நினைச்சுருக்க அப்படி தானே?”

“என்ன பேசுற நீ எனக்கே நான் எப்படி ஃபீல் பண்றேனு புரியாத போது உன்கிட்ட என்னனு நான் சொல்றது நீயே சொல்லு?”

“உனக்கு இளாவை பிடிச்சிருந்தது தான?” என்று அவள் சொல்வது புரியாமல் கேட்க,

“எனக்கு பிடிக்கும் தான் இல்லைனு நான் மறுக்கலை ஆனால் அது லவ்வானு எனக்கு அப்போ தெரியலை அன்னைக்கு என் ப்ரெண்ட்ஸ் என்னை கேலி பண்ணும் போது தான் நான் ஏன் அவன்கிட்ட மட்டும் பேசுனேன் சிரிச்சேனு என்னை நானே கேள்வி கேட்டுகிட்டேன். கூட இருந்த ப்ரெண்ட்ஸே புரிஞ்சுக்காம என்னை ஒரு மாதிரி பேசும் போது இது வெளிய தெரிஞ்சா எல்லாரும் உன்னையும் அப்பாவையும் தான் தப்பா நினைப்பாங்கனு தோணுச்சு. அந்த ஸ்டேஜ்ல என்னால அப்படி தான் யோசிக்க முடிஞ்சுது. அம்மா இறந்துட்ட பிறகு நம்மளை பார்த்துக்கிட்டது அப்பா தான். என்னால அவர் வருத்தப்பட்டுட கூடாதுனு நினைச்சு தான் இதுல இருந்து ஒதுங்கிட்டேன்.

பொண்ணுங்க எப்போதுமே அப்படி தான் அண்ணா எந்த ஒரு விஷயம் செய்யும் போது அதால நம்ம குடும்பத்துக்கு பாதிப்பு இருக்குமானு பார்த்து பார்த்து தான் செய்வாங்க அதுமட்டுமில்லை எனக்கு பிறகு தியா இருக்கா அவளுக்கு நான் வழிகாட்டியா இருக்கணுமே தவிர வழி தவற காரணமாகிட கூடாதுனு உறுதியா இருந்தேன்.

அதுக்குனு காதலிக்குறது மகா தப்பு காதலிக்குற பொண்ணுங்க குடும்பத்தை பார்க்க மாட்டாங்கனு சொல்ல வரலை. ஒரு நேரத்துல காதல் வாழ்க்கையா? குடும்பமானு வரும் போது குடும்பம் தான் முக்கியம்னு முடிவெடுக்க முடியாம? காதலித்தவனை மறக்கவும் முடியாம தவிக்குற எத்தனை பேரை வாழ்க்கையில் பார்க்குறோம். அந்த வேதனையை அனுபவிக்க எனக்கு தைரியம் இல்லண்ணா. நான் இப்படி யோசிக்குறது கட்டுபெட்டித்தனமா உனக்கு தோணலாம் ஆனா எனக்கு இது தப்பா தெரியலை?

வாழ்க்கை ஓட்டத்துல நானும் நடந்ததை மறந்துட்டேனு நினைச்சேன் அதனால தான் வீட்டுல கல்யாணம் பேசும் போது எனக்கு மறுக்க தோணலை. ஆனா அது மனசுல எங்கோ ஒரு ஓரத்துல பதிஞ்சு இருந்திருக்குனு செழியனை மறுபடி பார்த்த போது தான் தெரிஞ்சுக்கிட்டேன்.  அதுக்கு பிறகு நடந்தது உனக்கு தெரியுமே. அப்பா என்னை நினைச்சு வருத்தப்பட கூடாதுன்ற ஒரே காரணத்திற்காக தான் நீ தடுத்தும் கேட்காம நான் செழியன் வீட்டுக்கு போனேன். நாளாக நாளாக அவனை பிடிக்கும்ன்றதை தாண்டி விரும்ப ஆரம்பிச்சுட்டேன். நான் பண்ணின ஒரே தப்பு அன்னைக்கே செழியன்கிட்ட நான் இதை பத்தி தெளிவா பேசியிருக்கலாம் அப்படி பேசாததால தான் என்னையே நினைச்சுட்டு இருந்து அப்படி பண்ணிட்டான்.

ஆனால் இப்போ அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை அப்படி நடந்திருந்தா அவனை மாதிரி ஒரு லைஃப் பார்ட்னரை மிஸ் பண்ணிருப்பேன் அவனோட லவ் தான் திரும்ப என்னை அவன் கூட சேர்த்திருக்கு அதுல எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷம் தான்” என்று சொல்லி முடித்தவளின் முகத்தில் ஆரம்பத்தி இருந்த கலக்கம் நீங்கி இளா மேல் இருக்கும் காதலின் ஒளியே மின்னிக் கொண்டிருந்தது.

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. நான் உங்களுக்கு அண்ணனா இருக்கணும்னு நினைச்சதை விட, அப்பாவா இருந்து உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்னு தான் நினைச்சிருந்தேன். அதான் எங்க உங்க வாழ்க்கை சரியா அமையலையோனு கவலைப்பட்டுகிட்டே இருந்தேன்.  நீ சந்தோஷமா இருக்கேனு சொல்றதே போதும். இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. சாரிடா உன்னை புரிஞ்சுக்காம என்கிட்ட முன்னாடியே சொல்லலைன்ற வருத்தத்துல கேட்டுட்டேன் “என்று அவளது கைகளை ஆதரவாக பிடித்துக் கொள்ள,

அருண் சொன்னதை கேட்டதும் கண்கள் கலங்க “உன்னை எனக்கு தெரியாதா? மனசுகுள்ள வச்சுட்டே இருக்காம நேரடியா கேட்டியே அதுவே போதும். எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குற? சரி நேரமாகிடுச்சு கிளம்பலாமா?”

“சரிடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு போகணும் நீ எப்படி ஆபிஸ் போறியா இல்லை வீட்டுக்கா?” என்று கேட்க,

“இல்லண்ணா வீட்டுக்கு தான்” என்று சொல்ல, ஆட்டோ ஒன்றை பிடித்து அவளை ஏற்றிவிட்டு அருண் தனுவின் வாழ்க்கையை பற்றிய கலக்கம் நீங்க மகிழ்ச்சியான மனநிலையுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பது சற்றே எரிச்சலாக இருக்க, காலார நடந்து சென்று விட்டு வரலாம் என கிளம்பி சென்றிருந்த இளா, வீட்டுக்குள் வர வாசலில் தனுவின் செருப்பை கண்டவன் “சின்னு அதுக்குள்ள வந்துட்டாளா?” என்று நினைத்தபடி உள்ளே நுழைய ஹாலில் சாலா மட்டும் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவன், “என்னம்மா நீங்க மட்டும் உட்கார்ந்திருக்கீங்க எங்க தனுவை காணோம்” என்று கேட்க,

“மேல ரூம்ல இருக்காடா” என்றதும் “என்னடா இது உலக அதிசயமா இருக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும் உங்ககிட்ட பேசிட்டு இருப்பா இன்னைக்கு என்ன ரூம்ல இருக்கா?” என்று கேட்க,

“பாவம்டா வரும் போதே சோர்வா வந்தா? தலை வலிக்குது அத்தை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேனு சொல்லிட்டு போனா காபி போடவானு கேட்டேன் வேண்டாம் கொஞ்ச நேரம் துங்குறேனு சொல்லிட்டு போயிட்டா” என்று விட,

“நான் போய் பார்க்குறேன்” என்று சொல்லி விட்டு மேலே அறைக்குள் வந்தவன் கைகளால் கண்களை மூடியபடி படுத்திருந்தவளின் அருகில் சென்றவன் “சின்னு ரொம்ப தலை வலிக்குதா? டேப்ளட் போடுறியா கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்” என்று சொல்ல,

“தயவு செய்து கொஞ்சம் என்னை தனியா விடுறீங்களா ப்ளீஸ்” என்று தனு சொல்ல,

“ஓகே ஓகே சாரி நீ ரெஸ்ட் எடு” என்று விட்டு வெளியே வந்தவனின் முகம் சற்றே வாடியிருக்க,

அதை கண்ட சாலா “உன் முகம் ஏன்டா ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்டதும்,

“ஏன் உங்க மருமகளுக்கு மட்டும் தான் தலைவலி வரணுமா எனக்கெல்லாம் வரக் கூடாதா?” என்றவனை முறைத்தவர்,

“அவ வேலைக்கு போயிட்டு வர்றா அந்த டென்சன்ல தலைவலி வந்திருக்கு உனக்கென்னடா நல்லா சுத்திட்டு ரெஸ்ட் எடுத்துட்டு தான இருக்க?” என்று சொல்ல,

“வீட்டுல சும்மா இருக்கேனு கிண்டல் பண்றிங்களா? நாளைக்கு நானும் வேலையில ஜாயின் பண்ண போறேன் அதுக்கு பிறகு உங்களை பார்த்துக்குறேன் இப்போ எனக்கு ஒரு கப் காஃபி குடுங்க” என்று கேட்டதும் கொண்டு வந்து தந்தவர் இளாவிடம் பேசிக் கொண்டிருக்க, அனுவும் வந்து சேர்ந்தாள்.

சிறிது நேரம் மூவரும் பேசி பொழுது போக்கி கொண்டிருக்க, சாலா “அனு போய் அண்ணியை சாப்பிட கூப்பிட்டு வா” என்று அனுப்பி வைக்க, இரண்டு நிமிடம் கழித்து வந்த அனு “சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்க” என்று கூற,

“அனு அண்ணனுக்கு சாப்பாடு எடுத்து வை நான் போய் பார்த்துட்டு வர்றேன் ரொம்ப தலைவலி போல” என்று சொல்லிவிட்டு செல்ல போக,

“அம்மா நீங்க இருங்க கொஞ்ச நேரம் படுத்து இருக்கட்டும் நான் ரூம்க்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்குறேன்” என்று இளா சொல்லி விட, ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் தனுவிற்கான உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

அதை டேபிளில் வைத்து விட்டு “சின்னு எழுந்திரு டிஃபன் கொண்டு வந்திருக்கேன் சாப்பிட்டு படு” என்று சொல்ல,

“இல்லை எனக்கு வேண்டாம்” என்றதும்

“கொஞ்சமாவது சாப்பிடு நைட் சாப்பிடாம படுக்க கூடாது”

“வேண்டாம்னா விடுங்களேன் எனக்கு சாப்பிட பிடிக்கலை” என்று சொல்ல,

சற்றே கோபம் ஏற, “என்ன தான் உன் பிரச்சனை சொன்னா தான தெரியும் அப்போதிருந்து பொறுமையா சொல்லிட்டு இருக்கேன் கொஞ்சமாச்சும் மனுஷனை மதிக்குறியா? நீ”

“ஆமா நான் என்ன பண்ணினாலும் உங்களுக்கெல்லாம் தப்பா தான் தெரியும் யாரும் என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க” என்று சொல்ல,

“இப்போ உன்னை யாரு என்ன சொன்னா?  யாரு புரிஞ்சுக்கலை” என்று கேட்க,

இன்று அருணிடம் பேசியதை அவனிடம் கூறியவள், “நீங்க கூட என்னை புரிஞ்சுக்கலை” என்று சொல்ல,

“நான் புரிஞ்சுக்கலையா?” என்ற கேள்வி அவனது கண்களில் தொக்கி நிற்க,

“ஆமா அன்னைக்கு நான் நல்ல பேர் வாங்க தான் எல்லாம் செய்றேனு சொன்னீங்க, அப்போ நான் கெட்டவளா? “என்று கேட்க,

“ஹே சின்னு நீ கெட்டவனு என்னைக்குடி நான் சொன்னேன்”

“நீங்க நேரடியா சொல்லலை ஆனா நல்ல பேர் வாங்க தான் இப்படி பண்றனு சொன்னா அதுக்கு பின்னாடி இருக்க அர்த்தம் இது தானே? இது என் கேரக்டரையே அசிங்கப்படுத்துற மாதிரி தான இருக்கு. என்கிட்ட நீங்க காதலை சொல்ல வந்த போது உங்ககிட்ட என்னோட மனநிலையை சொல்லியிருக்கணும் அது என் தப்பு தான் நான் இல்லைனு சொல்லலை.உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா காதலை உணர்ந்தது இங்க வந்ததுக்கு பிறகு தான். இப்படி ஒரு மனநிலையில இருக்கும் போது நான் வேற எப்படி தான் ரியாக்ட் பண்றது நீங்களே சொல்லுங்க. அதுக்கு பிறகு உங்களை நெருங்கி வரும் போதெல்லாம் நீங்க விலகி போனீங்க. என்னோட காதலை சொன்ன பிறகும் நீங்க விலகி இருக்கதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேனோனு எனக்கு தோணுது. சில நேரம் விலகியே இருந்திடலாமானு கூட தோணுது” என்று சொல்ல,

“விட்டா இப்படியே ஏதாவது பேசிட்டு இருப்ப உன்னை எப்படி டைவர்ட் பண்றதுனு எனக்கு தெரியும்” என்று அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் இளா.

“அய்யோ மூச்சு முட்டுது விடுங்க செழியன்” என்று தனு முணு முணுக்க,

“முடியாது முடியாது கை கொஞ்சம் சரியாகட்டும்னு நான் அமைதியா இருந்தா நீ என் வாழ்க்கைக்கே வேட்டு வச்சுருவ போல இன்னைக்கு உன்னை நான் விடுறதா இல்லை பாப்பாக்கு ஸ்பெஷல் கிளாஸ் சொல்லிக் கொடுத்துற வேண்டியது தான்” என்று சொல்ல,

அவனது பேச்சில் வெட்கப்பட்டவள் “ஒண்ணும் சொல்லிக் குடுக்க வேண்டாம்” என்று சொன்னாலும் அதற்கு மாறாக அவனுடன் ஒன்றி நின்றிருக்க, அவளின் முகம் நிமிர்த்தி, “காக்கி சட்டையை கலர் சட்டையா மாத்திடலாமா?” என்று கேட்க, பதில் சொல்லாது கண்கள் மூடி நின்ற கோலமே அவளின் சம்மதத்தை உணர்த்த, இத்தனை நாள் அடக்கி வைத்த ஆசையும், காதலும் கட்டவிழ அவள் இதழ்களை சிறை செய்தான் இளா.

இதழ் யுத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ மூச்சுக் காற்றுக்காக அவளை தன்னிடம் இருந்து  விலக்கியவன் அவளது கண்களோடு கலக்க முயற்சிக்க, அவன் பார்வையின் வீரியம் தாங்காது “செழியன்” என்று சிணுங்கியவளை கண்டு “அய்யோ கொல்றியேடி” என்று கூறிக் கொண்டே அவளை கைகளில் ஏந்தி அவளை மெத்தையில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்து  முன்னேற, நொடிக்கொரு தரம் அவன் அழைத்த “சின்னு” – வில் உருகியே கரைந்தாள் தனுஷா. அவர்களின் இல்லற வாழ்வு கோலாகலமாக ஆரம்பமானது.

காலையில் காஃபி கப்போடு உள்ளே வந்த தனு இன்னும் எழாமல் தூங்கி கொண்டிருக்கும் இளாவை கண்டு புன்னகைத்தபடி அவனருகில் வந்து “செழியன் நேரமாகுது எழுந்திருக்கலையா?” என்று தோள் தொட்டு எழுப்ப,

“டூ மினிட்ஸ் டி” என்றபடி மீண்டும் போர்வைக்குள் நுழையப் போனவனை கண்டு “எப்படி தூங்குறான் பாரு சரியான தூங்கு மூஞ்சி” என்று முணு முணுக்க,

“இதெல்லாம் அநியாயம் நைட் எங்கடி என்னை தூங்க விட்ட நீ” என்று அவளின் முணு முணுப்புக்கு பதில் கூற,

“ச்சீ பேச்சை பாரு ஒரு பக்கெட் தண்ணீயை கொண்டு வந்து ஊத்த போறேன் அப்புறம் எப்படி எழுந்துக்காம இருக்கனு பார்க்குறேன்” என்று நகர்ந்தவளின் கை பிடித்து இழுக்க அவன் மேலேயே போய் விழுந்தாள் தனுஷா.

“உன்னை எழுந்துக்க சொன்னா என்னையும் இழுத்து போடுற விடு” என்று அவனது பிடியில் இருந்து திமிர,

“ஹேய் சின்னு அது என்ன சில டைம் வாங்க போங்கனு சொல்ற சில டைம் வா போனு சொல்ற புருஷனுக்கு ஒரு மரியாதையே கிடையாதா?” என்று ஒரு பக்கம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாலும் இதழ்களோ கழுத்து வளைவில் புதையல் தேடிக் கொண்டிருந்தது.

“இப்போ விடலை இருக்க கொஞ்ச மரியாதையும் கிடைக்காது” என்று அவனை விலக்க முயற்சிக்க,

“விட முடியாது அன்னைக்கு பாதியில விட்டுப் போன கனவை நனவாக்கணும் அதுமட்டுமில்லை உன் மரியாதை எனக்கு வேணாம் சோ உன்னை விட மாட்டேன்” என்றபடி அவளை இளா தன்னோடு இறுக்கி கொள்ள, அவனது சொல்லுக்கு உடன்பட்டாள் அவனது சின்னு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சூப்பிரண்ட் ஆஃப் போலீஸ் அலுவலகத்தை அடைந்த இளா, அங்கு ஏற்கனவே தனக்காக காத்திருந்த விஷ்வாவின் அருகில் சென்றவன் “என்னடா சார் வந்தாச்சா?” என்று கேட்க,

“உன்னை எப்போ வர சொன்னேன் லேட்டா ஆடி அசைந்து வந்துட்டு சார் வந்தாச்சானு கேட்குற? அவர் வந்து கால் மணி நேரத்துக்கு மேல ஆகுது” என்று சொல்லிவிட்டு இளாவை பார்த்து முறைக்க,

“சரி விடுடா கொஞ்சம் வேலை அதான்” என்ற இளாவிடம் ஏதோ கேட்க வந்தவன் பின் நேரமாவது புரிய, “ஓகே ஒகே வா சீக்கிரம் போய் சாரை பார்த்துட்டு வருவோம்” என்று இளாவை அழைத்துக் கொண்டு, மேலதிகாரியின் அறைக்கு இருவரும் சென்றனர்.

“மே கம் இன் சார்” என்று அவரின் அனுமதி வேண்டி நின்றவர்கள், “யெஸ்” என்ற குரல் கேட்டதும் இருவரும் உள்ளே நுழைய “ப்ளீஸ் பீ சீட்டட்” என்றதும்  இருக்கையில் அமர்ந்தனர்.

“சார் நேத்து நான் சொன்னேன்ல எக்ஸ். மினிஸ்டர் சீதாராம் கேஸ் பத்தி இவர் தான் சார் இன்வெஸ்டிகேட்டிங் ஆபிசர்” என்று விஷ்வா இளாவை சுட்டி காட்டி சொல்ல,

“யெஸ் சார்” என்றுவிட்டு சீதாராம் பற்றி தான் சேகரித்த தகவல்களை அவரிடம் தெளிவாய் விளக்கி கூறியவன் “இது பாதி தான் சார் இன்னும் நிறைய பேர் கம்ப்ளைன்ட் குடுக்காமல் இருக்காங்க எல்லோரையும் அந்த அளவிற்கு மிரட்டி வச்சிருக்கான்.” என்றான் இளா.

இளா கொடுத்த கேஸ் பற்றிய தகவல்களையும் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்வையிட்டவர், “அவனுக்கு அரசியல்ல செல்வாக்கு ரொம்ப அதிகம்” என்று சொல்ல, இளாவும் விஷ்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் பார்வை பரிமாறலில் இருந்த விஷயத்தை அறிந்து கொண்டவராய் “பட் நம்மளோட குட் டைம் இப்போ எலக்ஷன் நேரம் சோ யாரும் அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க இந்த நேரம் அடிச்சா ஒரு ப்ராப்ளமும் வராது” என்றார்.

“சார் அப்போ இன்னைக்கே அரெஸ்ட் வாரன்ட் வாங்கிடலாமா?” என்று விஷ்வா கேட்க,

“நோ விஷ்வா அவன் நேத்தே டெல்லிக்கு போயிட்டான் இன்னைக்கு வாரன்ட் வாங்கினா விஷயம் அவன் காதுக்கு போயிடும் அப்படி மட்டும் தெரிஞ்சுடுச்சு ஹீ மே ப்ளே சம் அதர் கேம். தேர் இஸ் சான்ஸ் பாஃஃர் இட்” என்று சொல்ல, அதில் இருந்த உண்மை தெரிந்தவர்களாய் அமைதி காக்க,

“நாளைக்கு அவன் சென்னை ரீச் ஆனதும் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட இருவரும் அதை அமோதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

வெளியே வந்ததும் “சரிடா இன்னைக்கு ரிப்போர்ட் பண்ணனும் நான் கிளம்புறேன்” என்று புறப்பட முயன்ற இளாவை தடுத்த விஷ்வா,“இரு இரு என்ன அவசரம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றான்.

“என்னடா? என்ன விஷயம்” என்று இளா கேட்க,

“ஹம்ம்ம் நீ வந்ததுமே கேட்கணும்னு நினைச்சேன் நேரமாகிடுச்சு சாரை பார்த்துட்டு வந்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்” என்று சொல்ல,

“ஹேய் பிளேடு போடாதடா என்னனு சொல்லி தொலை” என்றதும்,

“இன்னைக்கு உன்னை சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியுதே அதன் ரகசியம் என்னவோ?” என்றதும்,

நேற்று நடந்ததை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டு “ ஏன் வட்டம் தான் தெரியுதா? இந்த சதுரம் செவ்வகம்லாம் தெரியலை” என்று கேட்க,

“ஓ இது ஜோக்கு நாளைக்கு சிரிக்குறேன்டா. இந்த டாகால்டி வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் மகனே” விஷ்வா கேலி செய்ய,

“ஒண்ணுமில்லைடா நேரமாகுது நான் கிளம்புறேன்” என்று தனது பைக்கில் ஏறி அமர,

“என் பொறுப்பு பாதாம் இருடா நேத்து வரை பழைய சோறு தின்னவன் மாதிரி இருந்த முகம் இன்னைக்கு தலப்பாகட்டு பிரியாணி சாப்பிட்ட மாதிரி பிரகாசமா இருக்கே எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்” என்றதும்,

இளாவின் முகம் புன்னகையில் விரிய, அதை கண்டு விஷ்வாவின் மூளைக்கு இளா முகத்தில் தெரியும் பிரகாசத்திற்கான காரணம் பிடிபட்டு விட அவனை பார்த்து “ம்ம்ம்” என்று கண்ணடிக்க, “போடா” என்றுவிட்டு பைக்கில் பறந்தான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்றைய தின பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அனு, காரிடாரில் நின்று கொண்டிருந்த அருணை கண்டு திகைக்க, வேகமாக அவனருகில் வந்தவள் “எதுக்கு இப்படி வந்து தொந்திரவு கொடுக்குறிங்க?”என்று கேட்க,

“உன்னை தொந்திரவு பண்ண வரலை கொஞ்சம் பேசணும் அதான் வந்திருக்கேன்” என்று சற்று கோபமாக கூற

“எல்லாம் பேசி முடிச்சாச்சு இனி பேசுறதுக்கு எதுவுமே மிச்சம் வைக்கலை நீங்க” என்று சொல்ல,

“ஹே என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க? நான் இறங்கி வந்து பேசுறதால உனக்கு என்னை பார்த்தா இளக்காரமா இருக்கா?”

“நான் உங்களை பேச சொல்லலையே? எதுக்கு வீணா என்கிட்ட பேசி உங்க டைம் வேஸ்ட் பண்றீங்க” என்று கேட்டதும் அருணின் கோபம் எல்லை மீற,

“அப்படியே ஒரு அறை விட்டேன்னா தெரியும். இவ பேச சொல்லலையாம் அது எங்களுக்கு தெரியாது பாரு இன்னும் எவ்வளோ நாள் தான்டி இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்க போற. நான் தான் சொல்றேன்ல அந்த நேரம் இருந்த கோபத்துல பண்ணிட்டேனு அதுக்கு பிறகும் இப்படி பிடிவாதம் பண்ணா நான் என்ன தான்டி செய்யுறது” என்று கேட்டும் அமைதியாய் திரும்பி நின்றிருக்க,

“அப்போ நமக்குள்ள முடிஞ்சு போச்சுனு முடிவே பண்ணிட்டியா?” என்றதற்கும் ஒன்றும் சொல்லாது இருந்தவளை கண்டு, “எனக்கு வர்ற கோபத்துக்கு” என்று ஆரம்பிக்க தொடங்கியவன் “ஹாய் அருண்” என்ற குரலில் தான் சொல்ல தொடங்கியதை நிறுத்திவிட்டு திரும்ப அங்கு இளா நின்றிருந்தான்.

அவனது முகத்தில் இருந்தே தான் பேசிய எதையும் அவன் கவனிக்கவில்லை என்று உணர்ந்தவன் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு “ஹாய்” என்றான்.

“என்ன அருண் இவ்வளோ தூரம் உங்க ப்ரெண்ட் யாரையும் பார்க்க வந்தீங்களா?” என்று கேட்க,

கேள்வியும் கேட்டு தானே பதில் சொல்லிக் கொண்டதை கண்ட அருண் அதையே பிடித்துக் கொண்டு “ஆமா அப்படியே அனுவை பார்த்தேன் அதான் ஜஸ்ட் பேசிட்டு இருந்தேன் ஓகே எனக்கு நேரமாகிடுச்சு கிளம்புறேன்” என்றுவிட்டு அருண் சென்றுவிட,

“அனு கிளம்பலாமா?” என்று கேட்டதும் “சரிண்ணா” என்று கலங்கிய கண்களை இயல்பாக வைத்துக் கொண்டு அவனுடன் செல்ல, இளாவின் மனமோ அவளது “அண்ணா” என்ற அழைப்பை குறிப்பெடுத்துக் கொண்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அறையில் யோசனையாக அமர்ந்திருந்த இளாவை கண்ட தனு “என்ன செழியன் ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,

பதிலேதும் சொல்லாமல் ஏதோ ஒரு நியாபகத்தில் இருந்தவனின் தோளை தட்ட, “ஹாங் என்ன கேட்ட சின்னு?”

“நான் பேசுனது கூட காதில விழாத அளவுக்கு அப்படி என்ன யோசனை உங்களுக்கு?” என்றதும்,

“அனுவை கூப்பிடுறதுக்காக ஹாஸ்பிட்டல் போயிருந்தேன் அங்க உன் அண்ணனும் இருந்தான். ரெண்டு பேரும் ஏதோ தீவிரமான பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு நான் பக்கத்துல போனதும் நார்மலாகிட்டாங்க  அனு கண்ணு வேற கலங்கி இருந்துச்சு அதான் என்னவா இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றதும் என்ன சொல்வது என தெரியாமல் தனு முழித்துக் கொண்டிருக்க

தான் சொல்ல தொடங்கியதிலிருந்து தனுஷாவின் முகத்தில் ஏற்பட்ட கலவையான ரேகைகளை கவனித்துக் கொண்டே இருந்தவன் “சின்னு உனக்கு இதை பத்தி ஏதோ தெரியும்னு தோணுது?” என்று சட்டென்று கேட்டுவிட,

“இல்” என்று சொல்ல வந்தவளை கை நீட்டி தடுத்தவன் “பொய் மட்டும் சொல்லாத? உனக்கு என்ன தெரியுமோ அதை சொல்லு இதை சரி பண்ண தான் கேட்குறேன்” என்று கேட்க,

அவனது விழி வீச்சில் பயப்பந்து உள்ளுக்குள் உருள, அருண், அனுவிற்கு இடையில் நடந்ததை கூறி முடிக்க, இளாவின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

“உங்க அண்ணன் என்ன நினைச்சுட்டு இருக்கான் நான் செய்ததுக்கு என்னை தண்டிக்கவோ இல்லை கேள்வி கேட்கவோ அவனுக்கு முழு உரிமை இருக்கு அதை விட்டுட்டு என் தங்கச்சியை எப்படி அவன் தண்டிக்கலாம்” என்று கோபத்தில் கத்த,

“செழியன் அன்னைக்கு இருந்த சூழ்நிலையில அப்படி நடந்திருப்பானே தவிர மத்தபடி அனுவை காயப்படுத்தணும்னு நினைச்சிருக்க மாட்டான்” என்று தனு சொல்ல,

“அவனுக்கு எப்படி தங்கச்சி மேல பாசமோ அது போல தான் எனக்கும்? அவன் என்ன என் தங்கச்சியை வேண்டாம்னு சொல்றது இப்போ நான் சொல்றேன் என் தங்கச்சிக்கு அவன் வேண்டாம்” என்று விட்டு அனுவின் அறை நோக்கி செல்ல, தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள் தனு.

அனுவின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, அதுவரை அழுது கொண்டிருந்த அனு தன் கண்களை துடைத்து விட்டு “வா அண்ணா” என்று அழைக்க,

“உனக்கும் அருணுக்கும் என்ன பிரச்சனை?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்து விட, “அது அது” என சொல்ல முடியாது தவிப்பாய் இழுத்தவளை ஆதரவாக அணைத்து அவளது தலையை கோதிவிட்டபடி “எனக்கு எல்லாம் தெரியும்” என்றவனை நோக்கி அனு அதிர்ச்சியான பார்வை ஒன்றை வீச,

“அண்ணன் என்ன பண்ணினாலும் உன் நல்லதுக்காக இருக்கும்னு நம்புறியா?” என்று கேட்க,

இப்போது எதற்கு இந்த கேள்வி என்பது போலான பார்வை பார்க்க, “சொல்லுடா நம்பிக்கை இருக்கா? இல்லையா?” என்றான்

“இருக்குடா அண்ணா” என்று சொல்லி கண்களில் நீர் வழிய சொன்னவளின் முகத்தை கையில் ஏந்தியவன் “இந்த அண்ணன் இருக்குற வரை இனி எதுக்கும் நீ கண் கலங்க கூடாது” என்று கூறி விழி நீரை துடைத்தவனின் கண்களும் கலங்கி இருந்தது.

 

செனோரீட்டா வருவாள்.

Advertisement