Advertisement

அத்தியாயம் 35:

சிதறிப் போன கண்ணாடி துண்டுகள்

வேண்டுமானால் ஒட்டாமல் போகலாம்

சில்லு சில்லாய் என்னுள் சிதறிக் கிடைக்கும்

உன் நினைவுகள் தான் என் உயிரை உடலோடு

ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறது!

“என்னடா சொல்ற? எப்போ நடந்துச்சு? அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா? “

“ . . . . . . .”

“நைட் ஃபுல்லா தனியாவா ஹாஸ்பிட்டல்ல இருந்த? அட்லீஸ்ட் அண்ணன்கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல? என்ன பொண்ணுமா நீ”

“. . . . . .”

“சரி சரிம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் அண்ணனும் வர்றோம்” என்றுவிட்டு தொலைப்பேசியை அணைத்தவர் அருணை தேடி அவனது அறைக்கு சென்றார்.

“தம்பி” என்று அழைத்தபடி அவனின் அறைக்கதவை தட்ட, “திறந்து தான்ப்பா இருக்கு உள்ளே வாங்க” என்ற அருணின் குரலை கேட்டதும் உள்ளே நுழைந்தார் தாமோதரன்.

“தனும்மா பேசுனாப்பா?” என்று சொன்னவரின் முகத்தில் கவலை தெரிய,

“என்னப்பா என்ன விஷயம் உங்க முகமே சரியில்லை” என்று கேட்க,

“மாப்பிள்ளை தம்பிக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம் **** ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க கிளம்புப்பா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுவோம்”

“ரொம்ப அடியா? டாக்டர் என்ன சொன்னாங்களாம் தனுகிட்ட கேட்டீங்களா?” என்று கேட்க,

“பயப்படுற அளவு ஒண்ணும் இல்லையாம் கை எலும்புல ஃப்ராக்ச்சர் ஆகியிருக்கு. நான் கேட்டதுக்கு நீ ஒண்ணும் சொல்லலையேப்பா?”

“என்ன?” என்பது போல் புருவம் உயர்த்த, “போய் பார்த்துட்டு வரலாம்னு சொன்னேன்ல” என்று தாமோதரன் சொல்ல,

“நா நான் எப்படிப்பா?” என்று அருண் தடுமாறினான்.

“அருண் இது ரொம்ப தப்பு. என்ன இருந்தாலும் அவர்  இந்த வீட்டு மாப்பிள்ளை நாம போய் பார்க்குறது தான் முறை” என்று சொல்ல,

“இவ்வளவு நடந்த பிறகு நான் எப்படி ப்ச்ச் நீங்க மட்டும் போய் பார்த்துட்டு வாங்க நான் தனுகிட்ட போன் பண்ணி கேட்டுக்குறேன்”

“என்னப்பா நீ போன் பண்ணி கேட்குறதுக்கு அவர் மூணாவது மனுஷன் இல்லை நம்ம தனுவோட வீட்டுக்காரர். இவ்வளவு நடந்துருச்சுனு நீ எதை சொல்ற நடந்த தனு கல்யாணத்தை தான? ஏன் எனக்குமே வருத்தம் இருக்கத்தான் செய்தது இல்லைனு மறுக்கலை ஆனா இப்போ தோணலை ஏன் தெரியுமா? “

அருண் என்ன சொல்ல வருகிறார் என்று அவரையே உற்று நோக்க தாமோதரன் தொடர்ந்தார் “கல்யாணமாகி இவ்வளவு நாள் ஆகியிடுச்சு தனு வருத்தப்பட்டு ஒரு நாளும் நம்ம வீட்டுக்கு வரலை இதுலேயே தெரியலையா அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிச்சுருக்குனு. எதிர்ப்பார்க்காத நேரத்துல நடந்ததால ஆரம்பத்துல அவ கொஞ்சம் கோபத்துல இருந்திருக்கலாம் அதுக்கு பிறகு அவ தெளிஞ்சுட்டானு தான் எனக்கு தோணுது. மாப்பிள்ளையும் நல்ல குணம் உள்ளவர் தான் ஏதோ நம்ம தனு மேல இருக்க அன்புல அப்படி அதிரடியா நடந்திருக்கார் அதுவும் எங்க நம்ம தனுவை கல்யாணம் பண்ண முடியாம போயிடுமோனு பயத்துல தான் செஞ்சுருப்பாரே தவிர எந்த தப்பான எண்ணத்திலேயும் இருக்காதுனு தான் என் கணிப்பு”

“நீ ஒரு பொண்ணை நேசிக்குறேனு வை அந்த பொண்ணை வேறு யாரும் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு உன்னால விட்டு கொடுக்க முடியுமா? அதுக்குனு கடத்திட்டு போனது சரினு சொல்லலை. ஆனா அதே சமயம் தனு தப்பானவர் கைக்கு போயிடலைனு தான் சொல்ல வர்றேன்” என்று அருணுக்கு புரிய வைக்க முயற்சிக்க,

அவனின் அமைதியை கண்டவர் “தனு வாழ்க்கை மேல அக்கறை இருந்தா என் கூட வா?” என்று விட்டு தனதறைக்கு உடை மாற்ற சென்றார் தாமோதரன்.

உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த தாமோதரனின் கண்ணில், சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டபடி நின்று கொண்டிருந்த அருண் தென்பட மனதிற்குள் திருப்தி அடைந்தவர் சஜனிடம் இதை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று நினைத்தவர் அங்கு வந்த தியாவிடம் விஷயத்தை கூறிவிட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.

“வினோத் ஐ வில் நாட் கம் டுடே சோ டேக் கேர் எவ்ரி திங்க். டோன்ட் டிஸ்டர்ப் மீ இஃப் நத்திங் இம்பார்டென்ட் காட் இட்” என்று பேசிக் கொண்டே வந்தவன், அவனுக்கான காலை உணவை டேபிளில் எடுத்து வைத்தபடி இருந்த தியாவை கண்டு, “ஹே டாலி என்ன பண்ற” என்றபடி அவளருகில் வந்தான் சஜன்.

அவனது செல்லமான அழைப்பை ரசித்தபடி, “பார்த்தா தெரியலையா? உங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சுட்டு இருக்கேன்” என்று சொல்ல,

“தெரியலையே டாலி நீ பக்கத்துல இருக்கும் போது வேற எதுவும் எனக்கு தெரியமாட்டேங்குது”

அவனது பதிலில் மனம் மகிழ “அய்யோடா போதும் போதும் உட்காருங்க சாப்பிடலாம்” என்று அவனை அமர சொல்லி இருவருக்குமான உணவை பரிமாற தொடங்க,

“கொஞ்சம் ரொமேன்டிக்கா பேசலாம்னு பார்த்தா உனக்கு பொறுக்காதே” என்று முறைத்தவன் சாப்பிட தொடங்க, தியா நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடி இருந்தாள்.

உணவை முடித்துக் கொண்ட சஜன் ஹாலில் இருந்த ஷோபாவில் வந்து அமர்ந்தான். பாத்திரங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தியாவும் அவனருகில் வந்து அமர , அப்போது தான் நியாபகம் வந்தவனாய் “ஆமா மாமா அருண் யாரையும் காணோம் எங்க போயிட்டாங்க?” என்று கேட்க,

இப்போ தான் நல்லபடியா பேசிட்டு இருக்கான் இந்த நேரத்துல அத்தானைப் பற்றி சொல்லி கோபப்பட்டுட்டா என்ன பண்றது என்று யோசித்த வண்ணம் அமைதியாக இருக்க,

“உன்கிட்ட தான் கேட்குறேன் எல்லாரும் எங்க போனாங்க?” என்று கேட்க,

“அது அது வந்து” என்று இழுக்க, “இன்னும் நீ இந்த வந்து போய்னு இழுக்குறதை விடலையா டாலி” என்று கேட்டதும்,

இளாவிற்கு அடிப்பட்டிருப்பதாகவும் அவனை பார்க்க போயிருப்பாதாக கூற “ஓஹோ” என்று ஒரு நொடி தியா கூறியதை உள்வாங்கியவன் மறு கணமே “அப்போ வீட்டுல நாம மட்டும் தான் இருக்கோமா?”

“ஆமா” என்று தியா தலையாட்ட, அவளது கை பிடித்து “அப்போ சீக்கிரம் வா நம்ம ரூம்க்கு போகலாம்” என்று இழுக்க,

அவனுடன் எழுந்தவள் “எதுக்கு இப்படி இழுக்குறிங்க? அப்படி என்ன அவசரம்” என்று கேட்க,

“என்ன டாலி இப்படி சொல்லிட்ட? நாம செய்ய வேண்டிய வேலை இன்னும் எவ்வளோ இருக்கு நீ என்னடானா எதுக்கு அவசரம்னு கேட்குற இவ்வளோ நாள் நாம பிரிஞ்சு இருந்தது போதாதா? இதுக்கு மேல் ஒரு நிமிஷம் என்னால பொறுக்க முடியாது” என்று சஜன் சொல்ல,

அதை வேறு விதமாக புரிந்து கொண்ட தியா “ஹய்யோ அதுக்குனு இப்போவா? அதுவும் பகலிலேயே வேண்டாமே நைட்” என்று மென்று முழுங்க,

“என்னாச்சு உனக்கு பேசுறதுக்கு பகலா இருந்தா என்ன? பேசக்கூடாதா?” என்று சஜன் கேட்க,

“என்னது பேசணுமா? அதுக்கா கூப்பிட்டீங்க” என்று மெல்லிய குரலில் கேட்க,

அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட சஜன் “ஹே வெயிட் வெயிட் நான் கூப்பிட்டது இருக்கட்டும் நீ என்ன நினைச்ச?” என்று இதழோரம் தோன்றிய புன்னகையோடு கேட்க,

தான் எதை நினைத்தோம் என்று யோசித்த தியாவின் முகம் ரத்தம் நிறம் பூசிக் கொள்ள, உதடுகளை கடித்தபடி நின்றிருந்தவளை கண்ட சஜனுக்கு அவளை அள்ளியெடுத்து அணைக்கும் வேகம் பிறந்தது.

அவளை கேலி செய்யும் எண்ணத்துடன் “சொல்லு டாலி என்ன நினைச்ச? அதையே செயல்படுத்திடலாம்” என்று கேட்டு கண்சிமிட்ட,

அவனது பதிலில் வெட்கப்பட்டவள் “போங்க சஜூ நான் போறேன்” என்றபடி ஏறிய இரண்டு படிகளை இறங்க முயற்சித்தவளை தடுத்தவன் “இனி உன்னை என்னைவிட்டு போக விடுற எண்ணம் கொஞ்சம் கூட எனக்கு இல்லை” என்றபடி அவளை கைகளில் ஏந்தியவன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடி கழுத்தை கட்டிக் கொண்டவளை மெல்ல படுக்கையில் கிடத்த அப்போதும் கண்களை திறக்காமல் மோன நிலையில் லயித்திருந்தவளின் கன்னம் தட்டி “ஹலோ மேடம் எழுந்திருங்க அப்புறம் தூங்கலாம்” என்ற சஜனின் குரலில் சட்டென்று விழி மலர்த்தி பார்க்க அவனது கண்களில் தெரிந்த குறும்பை கண்டவள் அவனை முறைத்தபடி கட்டிலில் இருந்து எழ முயற்சித்தாள்.

“டாலி ஜோக்ஸ் அபார்ட் நான் உங்கிட்ட மனசு விட்டு பேசணும்” என்ற சஜனின் குரல் அவளை கட்டிப் போட, என்ன சொல்ல போகிறான் என்றபடி அவனது கண்களையே உற்று நோக்கி கொண்டிருந்தாள் தியா.

“நான் தனுஷாவை முதல்ல பெசன்ட் நகர் சிக்னல்ல தான் பார்த்தேன்” என்று சொல்ல தொடங்க,

“வேண்டாம் சஜூ நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் பழசையெல்லாம் மறந்துடலாம்” என்று கூற,

“இல்லை டாலி இனி என் லைஃப்ல உனக்கு தெரியாம எதுவும் இருக்க வேண்டாம்னு நான் நினைக்குறேன் ப்ளீஸ்” என சஜன் சொன்னதும் “சரி” என்பதாய் சிறு தலையாட்டலை அவனுக்கு சம்மதமாய் தர, “தனுஷாவை சந்தித்தது முதல் பெண் பார்க்க வந்தது வரை அனைத்தையும் கூறியவன் அன்னைக்கு உங்க வீட்டுல அந்த பாட்டை கேட்கும் போது எனக்குள்ள அப்படி ஒரு பரவசமா இருந்துச்சு அது நீ பாடுனதுனு எனக்கு இப்போ தான் தெரியும்”

“உங்களுக்கு எப்படி” என்று கேட்க ஆரம்பித்தவளை “முதல்ல நான் சொல்லி முடிச்சுக்குறேன்” என்றுவிட்டு,

அதுக்கு பிறகு இளா கல்யாணம் பண்ணிக்கிட்டானு தெரிஞ்ச பிறகு எனக்கு ஏற்பட்ட வலி, ஏமாற்றம் இதையெல்லாம் தாங்க முடியாம இருந்த நேரம் என்னை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதம் சொன்னதும் அதை உன் மேல காமிச்சேன். என்னை போல தான் நீயும் இந்த கல்யாணத்துல மாட்டிகிட்டுனு மூளைக்கு எட்டுனாலும் எங்கே அதையே சாக்கா வச்சு உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திடுமோனு உன்னை வார்த்தையால காயப்படுத்தினேன். என்றவன் அதன் பின் தனுவும் இளாவும் தன்னை சந்தித்து பேசியதை கூறியவன்

“அன்னைக்கே என் மனசு உன்னை மனைவியா ஏத்துக்கிட்டு இருந்திருக்கு அதான் நான் அப்படி சொல்லிருக்கேன்.ஆனாலும் எல்லோரும் என்னை ஏமாத்தி என் வாழ்க்கையை பந்தாடிட்டாங்களேனு ஒரு கோபம் அதுல தான் குடிச்சுட்டு அப்படி நடந்துகிட்டேன்” என்றதும்,

அன்று நடந்த நிகழ்வு அவள் மனதில் காட்சி படமாக ஓட , தியாவின் உதடு துடித்தது. அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சஜன் “ஹேய் டாலி அது என்ன எப்போ பாரு உன் லிப்ஸ் துடிக்குது” என்றபடி அவளது இதழ்களை விரலால் வருடியவன்,

“அப்போ நான் அடிக்கடி அதோட துடிப்பை நிறுத்துற வேலையை செய்ய வேண்டி இருக்கும் போலயே” என்று கிரக்கமான குரலில் கூற,

“அய்யோ ஏன் இப்படி பேசுறிங்க” என்றபடி தியா அவனது தோளில் சாய்ந்து கொள்ள,

“பேச வேண்டாமா? சரி முதல்ல சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுட்டு செயல்லயே காமிச்சுடுறேன்” என்றவன் “கொஞ்ச கொஞ்சமா என் மனசு உன் பக்கம் சாய ஆரம்பிச்சிடுச்சு ஆனா அதை நான் எப்போ உணர்ந்தேன் தெரியுமா? நான் யாரு உங்களுக்குனு கேட்ட பாரு? அன்னைக்கு அப்படி ஒரு கோபம் எனக்கு வந்துச்சு மூணாவது மனுஷங்க மாதிரி எப்படி நீ என்கிட்ட கேட்கலாம்னு? விஷ்வாவிடம் பேசியதையும் மறைக்காமல் கூறியவன், “சரி மனசுல இருக்கதை சொல்லலாம்னு வந்தா மேடம் பரதநாட்டியமே ஆடிட்டீங்க. வீட்டை விட்டு ஒரு கோபத்துல போக சொல்லிட்டேன் அப்படியிருந்தும் சொன்னா உடனே போயிடுவாளா? முடியாதுனு சொல்ல மாட்டாளானு தான் நினைச்சேன். பத்தாத்துக்கு எங்க அப்பா அம்மா வேற என்னை பெரிய கொடுமைக்காரன் ரேஞ்சுக்கு பேசினாங்க அப்புறம் தான் நீ என்னை லவ் பண்ணது எனக்கு தெரிய வந்திச்சு உடனே பறந்து வந்துட்டேன்” என்றான் சஜன்.

“அப்போவே உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன் நான் உங்களை விரும்புனது எப்படி தெரியும்” என்று கேட்க,

“அதான் என்னை பத்தி உருகி உருகி எழுதிருக்கியே உன் டைரியில” என்று சொல்லி கண்ணடிக்க,

“டேய் ஃப்ராடு என் டைரியை திருட்டுத்தனமா எடுத்து படிச்சுருக்க ஹம்ம்” என்று அவனது நெஞ்சில் அடிக்க,

“என்னது டேயா? சரி போனா போகுது என் டாலி குட்டி எப்படினாலும் கூப்பிடலாம்” என்று சொல்ல,

“திருட்டுத்தனாம படிச்சுட்டு இப்போ டாலி குட்டி டோலி குட்டினா சொல்ற உன்னை” என்று அடிக்க ஓங்கியவளின் கை பிடித்து தடுத்தவன்,

உன் டைரியை பார்த்தது என் கண்ணு, படிச்சது என் வாய் அதுக்கு தண்டனை கொடு வாங்கிக்குறேன் அதை விட்டுட்டு என் பஞ்சு போல இருக்க நெஞ்சுல ஏன் டாலி குத்துற” என்ற சஜனை முறைத்துக் கொண்டெ,

“வாயை காட்டுங்க ரெண்டு போடுறேன்” என்று தியா சொல்ல,

“உனக்கு எதுக்கு சிரமம் அதை நான் பார்த்துக்குறேன்” என்றுவிட்டு அவளை இழுத்து இதழோடு இதழ் பதித்தான். அவள் அவன் மீது சுமத்திய ஒரு குற்றத்திற்கு பல தண்டனைகளை பெற்றுக் கொண்டான்.

இதழொற்றல் யுத்தமாக மாறத் தொடங்கிய நேரம் சஜனின் தொ(ல்)லைப்பேசி ஒலியடித்து இம்சிக்க, “ம்ப்ச்” என்ற சலிப்போடு அதை எடுத்து பார்க்க கயல்விழி தான் அழைத்திருந்தார்.

“சஜன் எங்க தான்டா போன? நைட் போனவன் இன்னும் ஆளை காணோம். உன்னை நாங்க கேள்வி கேட்க கூடதா? அப்படி என்னடா கோபம் சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு” என்று பட படவென பேச,

“அம்மா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் உங்க மருமக கூட தான் இருக்கேன். கூட்டிட்டு வா வானு சொல்ல வேண்டியது வந்தா எங்க போன்னு திட்ட வேண்டியது இது நல்லா இல்லை சொல்லிட்டேன்”

“சஜன் நிஜமாவ சொல்ற? அதை சொல்லிட்டு போறதுக்கு என்னடா நாங்க பயந்து போயிட்டோம் வீட்டுக்கு வா என் மருமகளை விட்டு உனக்கு ரெண்டு அடி போட சொல்றேன்” என்று மகன் மருமகளை அழைத்து வர சென்றிருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் அவனை செல்லமாக மிரட்ட,

“இப்போவே நான் பண்ணினதுக்கு வாய்லயே அடிக்குறாமா? என்னனு கேளுங்க” என்று சொல்லிக் கொண்டே தியாவை பார்த்து சிரிக்க,  

“அய்யோ என்ன சொல்றிங்க அத்தைகிட்ட கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம” என முணு முணுத்தவள் அவனது கையில் கிள்ளி வைக்க,

“ஆஆ அம்மா” என்று சத்தம் கயல்விழிக்கு கேட்க, “அப்படியே இன்னும் ரெண்டு அடி நான் போட சொன்னேனு சொல்லு என் மருமககிட்ட” என்றவர் அவர்கள் எப்போது வருகிறார்கள் என கேட்டு விட்டு வைத்து விட,

“எதுக்கு கிள்ளுன இப்போ?” என்றவனிடம் “அத்தைகிட்ட போய் என்ன சொல்றிங்க உங்களை கிள்ளாம? கொஞ்சுவாங்களா?”

“கொஞ்சிக்கோம்மா நானெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேன் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்” என்று சொல்லிக் கொண்டே “எங்க அம்மா இன்னும் ரெண்டு அடி உங்கிட்ட வாங்கிக்க சொன்னாங்க? எப்படி நீ கொடுக்குறியா இல்லை நானே” என்று விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தான் சஜன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மருத்துவமனைக்கு வந்துவிட்டாலும் ஒரு வித தயக்கத்துடனேயே தந்தையின் பின் வந்த அருண், இளா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைய, அவர்களை எதிர்ப்பார்க்காத இளாவோ “ வாங்க” என அழைத்துவிட்டு “இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது” என்று நினைத்தபடி இருக்க,

“இப்போ எப்படி இருக்கு மாப்பிள்ளை? பார்த்து வண்டி ஓட்டக் கூடாதா?” என்று கேட்க,

“கையில மட்டும் வலி இருக்கு” என்று சொல்ல, அந்நேரம் உள்ளே நுழைந்து தனு “வாங்கப்பா வா அண்ணா” என்று கேன்டீனில் இருந்து பிளாஸ்கில் வாங்கி வந்திருந்த பாலை தம்ளரில் ஊற்றி இளாவிடம் கொடுத்து விட்டு தந்தைக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கொரு கப்பில் கொடுக்க, “எதுக்கும்மா இப்போ தான் வீட்டுல சாப்பிட்டு வந்தோம்” என்று சொல்ல,

“சின்ன கப் தானே குடிங்க” என்று இளா சொல்ல, அதற்கு மேலும் மறுக்காமல் இருவரும் குடித்துக் கொண்டிருக்க,

“நேத்தே தெரிஞ்சிருந்தா வந்திருப்போம் தனு இன்னைக்கு காலையில தான் போன் பண்ணி சொன்னா?” என்று விட,

“எல்லாம் இவ வேலை தானா?”என்று மனதிற்குள் முனகி கொண்டவன் “அதுக்கென்ன மாமா பரவாயில்லை இப்போ நீங்க வந்ததே சந்தோஷம்” என்றுவிட்டு தனுவை முறைத்துக் கொண்டே இருக்க,

“அம்மாக்கு தெரியுமா? சொல்லிட்டீங்களா?”என்று தாமோதரன் கேட்க,

“இல்” என்று சொல்ல தொடங்கிய இளாவை முந்திக் கொண்டு “சொல்லிட்டேன்ப்பா இந்நேரம் கிளம்பிருப்பாங்க” என்று சொல்லிவிட்டு இளாவின் முகத்தை பார்க்க, அவனோ வெளிப்படையாகவே முறைத்துக் கொண்டிருந்தான்.

அதை கண்டு கெஞ்சல் பார்வை தனு பார்க்க “சொல்ல வேண்டாம்னு சொல்லியும் பண்ணி வச்சுருக்க வேலையை பாரு இதுல கெஞ்சல் வேற உனக்கு இருக்குடி” என்று நினைத்து கொண்டான்.

தங்கையின் கெஞ்சல் இளாவின் முறைப்பு இவையனத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அருணின் மனதிற்குள் ஒரு வித நெருடல் தோன்ற அவர்களுக்குள் என்ன பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணி கவலைப்பட தொடங்கினான்.

சிறிது நேரம் இருந்துவிட்டு அவர்கள் கிளம்ப, அருண் “டேக் கேர்” என்று ஒற்றை வார்த்தையில் அவனின் நலத்தில் இருக்கும் அக்கறையை காட்டிவிட்டு சென்றான்.

அவர்கள் சென்றதும் தனுவிடம் “ஏன்டி என் பக்கத்துலேயே தான இருந்த அப்புறம் எப்படிடி உங்க வீட்டுக்கும் அம்மாக்கும் சொன்ன?” என்று கேட்க,

“நீங்க பாத்ரூம் போன கேப்ல சொல்லிட்டேன்” என்று அசடு வழிய “உன்னை” என்று ஆரம்பித்த நேரம் உள்ளே வந்த விஷ்வா “டேய் ஸ்கேன் ரிப்போர்ட் வந்திடுச்சு ஒரு ப்ராப்ளமும் இல்லை கைக்கு மட்டும் பதினைந்து நாள் கழிச்சு வந்து ட்ரெஸ்ஸிங் பண்ணிக்க சொல்லிட்டாங்க”

“சரிடா எப்போ டிஸ்சார்ஜ்னு பண்ணிக்கலாம்னு கேட்டியா? இந்த ஹாஸ்பிட்டல் அட்மாஸ்ஃபியர் எனக்கு சுத்தமா பிடிக்கலைடா” என்று சொல்ல,

“டாக்டர் வருவாங்களாம் அவங்ககிட்ட கேட்டுட்டு கிளம்பலாம்னு சொன்னாங்க மேக்ஸிமம் ஈவ்னிங் டிஸ்ஜார்ஜ் ஆகிடலாம் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு கார் எடுத்துட்டு வர்றேன் வீட்டுக்கு போயிடலாம். பார்த்துக்கோங்க சிஸ்டர் வர்றேன் மச்சான்” என்று சொல்லிவிட்டு விஷ்வா கிளம்பிவிட,

“அம்மாகிட்ட ஏன்டி சொன்ன? அதான் அடுத்த மாதம் இங்கே வரத்தானே போறாங்க அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்னு போன் பண்ணி சொன்ன” என்று பற்களை கடிக்க,

“நானா ஒண்ணும் சொல்லலை காலையில போன் பண்ணினாங்க அந்த நேரம் பார்த்து நர்ஸ் வந்து ஸ்கேன் பண்றதுக்கான பணத்தை கட்டிடுங்கனு வந்து நிற்குறாங்க அதை கேட்டதும் யாருக்கு என்னாச்சுனு பதட்ட பட ஆரம்பிச்சுட்டாங்க என்ன சொல்றதுனு தெரியாம லைட்டா கையில அடினு சொன்னேன் உடனே இன்னைக்கே கிளம்பி வர்றோம்னு சொல்லி போனை வச்சுட்டாங்க நான் என்ன பண்ணட்டும்” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள,

“ஒண்ணும் தெரியாத பாப்பா இவ ஏன்டி எதாவாது ஒரு பொய் சொல்லி சமாளிக்க தெரியாதா உனக்கு” என்றவனை, “ஒண்ணும் தெரியாதுனு தெரியுதுல அப்போ சொல்லி கொடுங்க கேட்டுக்குறேன் இப்போ இந்த மாத்திரையை போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி அவனது கையில் திணிக்க, “அடங்கமாட்டடி நீ” என்று முணு முணுத்தவன் அவள் தந்த மாத்திரைகளை போட்டு விட்டு சிறிது நேரம் கண்ணயர்ந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மாலை நான்கு மணி அளவில் தாமோதரனிடம் சொல்லிக் கொண்டு சஜனும் தியாவும் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். காரில் ஏறியது முதல் ஏதோ யோசனையிலேயே இருந்தாள் தியா. வேறு ஒன்றும் இல்லை தனுஷாவை பற்றி தான். அவளை பார்க்க வேண்டும் என்று தோன்ற, இளாவிற்கு அடிபட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்டிப்பாக போய் சென்று நலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் அதை சஜனிடம் எப்படி சொல்வது அப்படியே சொன்னாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வானோ? காலையில் சொல்லும் போதே “ஓ” என்ற ஒற்றை எழுத்தோடு முடித்துக் கொண்டான் என்று யோசனையிலேயே அமைதியாக வர,

“என்ன டாலி யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்க,

“உங்களுக்கு ***** ஹாஸ்பிட்டல் தெரியுமா?”

“தெரியும் ஏன் கேட்குற? உடம்புக்கு ஏதும் பண்ணுதா டாலி” என்று சற்றே பதட்டமாக வினவ,

“இல்லை அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா கேட்டேன்” என்றுவிட,

“நிஜமா தான சொல்ற? ஒண்ணுமில்லைனா அந்த ஹாஸ்பிட்டல் பத்தி ஏன் கேட்ட?” என்றதும்,

“அது அங்க தான் அத்தானை அட்மிட் பண்ணிருக்காங்க அந்த ஹாஸ்பிட்டல் கூட நாம போற வழியில தான் இருக்குனு அப்பா சொன்னாங்க அதான் கேட்டேன்” என்று சொல்லிவிட்டு அவனது முகம் பார்க்க தைரியம் இல்லாது ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க,

அவளது செய்கையில் மெலிதாய் புன்னகைத்தவன் “சரி சரி எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு மார்ஜின் ஃப்ரீக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம் சரியா?” என்று கேட்கவும் “ஹப்பாடா நல்ல வேளை கோபப்படலை” என்று எண்ணியபடி “சரி சஜூ” என்றுவிட, தனக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு காரை கிளப்பியவன் நேராக இளா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வாசலில் சென்று நிறுத்தினான்.

கார் நின்றதும் தான் சுற்றுப் புறத்தை உணர்ந்த தியாவின் கண்களில் அந்த மருத்துவமனையின் பெயர் பலகை பட சட்டென்று திரும்பி சஜனை பார்க்க, அவனோ அவளை கண்டு புன்னகைத்து கண்சிமிட்ட “சஜூ” என்று மகிழ்ச்சியில் கூவியவள் பட்டென்று அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

ஆம் மகிழ்ச்சி தான் மனதில் வருத்தமும் கோபமும் இருந்தாலும் தனக்காக தன் விருப்பத்திற்காக அக்காவையும் அத்தானையும் பார்க்க அழைத்து வந்துவிட்டானே!

“ஆமா உன் சஜூ தான்” உள்ளே போலாமா? இல்லை இப்படியே கொஞ்சிட்டு இருக்கலாமா? என்று சஜன் கேட்க,

“போகலாம்” என்றபடி கதவை திறந்து இறங்க, “டாலி இதை பிடி” என்றபடி பழங்கள் அடங்கிய பையை அவளிடம் தந்து விட்டு “நீ முன்னாடி போ நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்ல, “சரி” என்பதாய் தலையாட்டி விட்டு, உள்ளே சென்றாள்.

உள்ளே நுழைந்த தியாவை கண்ட தனு “ ஹே தியா குட்டி வா”

“அத்தான் எப்படி இருக்கு இப்போ” என்று இளாவின் நலம் விசாரிக்க,

“ம்ம் இப்போ ஓகே தியா. நீ எப்படி இருக்க? உன் பையன் என்ன சொல்றான்?”

“நல்லா இருக்கேன் அது என்ன பையன்னு சொல்றிங்க? ஏன் பொண்ணா இருக்க கூடாதா?”

“எனக்கு என்னவோ உனக்கு பையன்னு தான் தோணுது” என்று சொல்ல,

“தியா தனியாவா வந்த? அப்படினா அப்பா வரும் போதே கூட வந்திருக்கலாம்ல” என்றாள் தனு.

“இல்லைக்கா அவங்களும் வந்திருக்காங்க கார் பார்க் பண்ணிட்டு வர்றேனு போயிருக்காங்க” என்று சொல்ல, தனு இளா இருவருக்கும் அதிர்ச்சி தான் சஜன் வந்திருக்கிறானா என்று கண்களால் பேசிக் கொண்டு இருக்க, “அடடா ஹாஸ்பிட்டல்லயும் ரொமேன்ஸா?”

“ஏன் ஹாஸ்பிட்டல்ல ரொமென்ஸ் பண்ண கூடாதுனு ரூல்ஸ் எதுவும் இருக்கா என்ன?” என்று இளா கேட்க,

அந்த நேரம் விஷ்வா “அவன் அடங்க மாட்டான்மா” என்றபடி வர “இவன் யார்” என்றதொரு பார்வையை வீச அதை அறிந்து கொண்ட விஷ்வா தன்னை பற்றி அறிமுகம் செய்தவன் இளாவிடம் “என்னடா கிளம்பலாமா?” என்றதும்,

தனு “அண்ணா பில் கொண்டு வந்து தர்றேனு சொன்னாங்க செட்டில் பண்ணிட்டு கிளம்ப வேண்டியது தான்” என்று சொல்லி முடிக்கவும், மருத்துவமனை ஊழியர் பில் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாய் இருக்க,

“நான் போய் பே பண்ணிட்டு வந்திடுறேன்” என்றபடி எழுந்த தனுவுடன் நானும் வர்றேன் தனு என்று தியாவும் அவளுடன் இணைந்து கொண்டாள்.

அவர்கள் சென்றதும் “மச்சி அந்த சீதாராம் தான்டா உன்னை ஆக்சிடென்ட் பண்ணிருக்கான்”

“எனக்கும் அந்த டவுட் இருந்திச்சுடா. நீ எப்படி இவ்வளோ கன்பாஃர்ம்டா சொல்ற?”

“என்ன நடந்தாலும் வீடியோ எடுத்து வாட்ஸ் –அப் ல போட்டு விடறதை ஒரு வேலையாவே பண்ணிட்டு இருக்காங்கடா கொஞ்ச பேர் அது தான் இப்போ நமக்கு ஹெல்ப் ஆகியிருக்கு. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல இருக்க பையன் அன்னைக்கு உனக்கு நடந்த ஆக்ஸிடென்ட் எதார்த்தமாக ரெக்கார்ட் பண்ணிருக்கான் இன்னைக்கு தான் எங்கிட்ட வந்து கொடுத்தான் பாரு” என்று தனது மொபைலில் இருந்த வீடியோவை காட்ட,

அதில் குறிப்பிட்ட இடைவெளியில் நின்றிருந்த கார் இளா விஷ்வா வீட்டில் இருந்து கிளம்ப தொடங்கியதும் வேகமாக வந்து இளாவை இடித்து தூக்கியது மீண்டும் ரிவர்சில் வந்து இடிக்க முயற்சி செய்தது அதற்குள் கூட்டம் கூடியதும் அங்கிருந்து கிளம்பியது என அனைத்தும் தெளிவாய் படமாக்கப்பட்டிருந்தது.

“என்ன வேலையெல்லாம் பண்ணியிருக்கான் அந்த சீதாராம் அவன் செய்த தப்புக்கெல்லாம் தண்டனை கிடைக்கணும்டா நான் இன்னைக்கு ஹையர் ஆஃபிசியல் பார்த்து பேசப் போறேன்” என்று விஷ்வா சொல்லி கொண்டிருந்த நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, இருவரும் அமைதியாகி விட உள்ளே நுழைந்தான் சஜன்.

“ஹே சஜன் வாடா வா” என்று விஷ்வா வரவேற்க, இளாவும் “வா சஜன்” என்றான்.

இருவருக்கும் பொதுவாய் தலையசைத்தவன் விஷ்வாவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, “ஹவ் டூ யூ ஃபீல் நவ்” என்று சஜன் கேட்க,

“நவ் ஃபீலீங் பெட்டர் சஜன்” என்று இளா சொல்ல அதன் பின் என்ன கேட்பது என்ன பேசுவது என இருவருக்கும் தெரியாமல் மௌனமாய் இருக்க, இருவருக்கும் சேர்த்து விஷ்வாவே பேசி தள்ளினான்.

இளா டிஸ்சார்ஜ் ஆக, இவர்களை வீட்டில் விட்டு விட்டு விஷ்வாவும் கிளம்பிவிட, “சின்னு எனக்கு ஹாஸ்பிட்டல் ஸ்மெல் என் மேலயே சுத்திட்டு இருக்க மாதிரி இருக்கு நான் குளிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லியவனிடம்,

“ஒரு நிமிஷம்” என்றவள், கையில் நீர் படாமல் இருக்க அதை சுற்றி பாலிதீன் பை கொண்டு கவர் செய்து விட்டு “இப்போ போங்க”

குளித்துவிட்டு வந்தவனுக்கு உடைமாற்ற உதவி செய்து விட்டு நகரப் போனவளை தடுத்தவன் “எங்க ஓடுற” என்று கேட்க,

“உங்களுக்கு அடிபட்டிருச்சுனு கேட்டதும் போட்டது போட்டபடி வந்துட்டேன் அதெல்லாம் க்ளீன் பண்ணணும். அத்தை அனு எல்லாம் வந்திடுவாங்க நைட் டின்னர் ரெடி பண்ணனும்” என்று அடுக்கி கொண்டே போக,

“உன் வேலைகளை கரெக்டா செய்ய போற அப்படி தானே?”

“ஆமா வேலை இருந்தா பார்த்து தானே ஆகணும் அதை ஒதுக்க முடியாதே” அவன் எதற்கு கேட்கிறான் என்று தெரியாமல் தத்துவம் பேசி வைக்க,

“அப்போ ஓகே எனக்கும் ஒரு வேலை இருக்கு?” என்று சொல்ல,

“என்ன” என்பது போல் புருவம் உயர்த்த “ஒண்ணும் தெரியாத பாப்பாக்கு  நிறைய சொல்லிக் கொடுக்குற வேலை இருக்கு” என்றுவிட்டு அவளை பார்த்து கண்சிமிட்ட,

“சொல்லி குடுப்பீங்க குடுப்பீங்க” என்று அவனிடம் அலவம் காட்ட,

“அதை தான் நானும் சொல்றேன் சொல்லி குடுக்குறேனு” என்று அவளது இடையை ஒரு கையால் வளைக்க, தனுவும் அவனுடன் ஒன்றி நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

காலிங் பெல் சத்தத்தில் இயல்புக்கு வந்த தனு அவனின் பிடியில் இருந்து விலகி சென்று கதவை திறக்க, சாலாவும் அனுவும் நின்றிருந்தனர்.

“வாங்க அத்தை வா அனு” என்று வரவேற்க, “நல்லாருக்கியாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சாலா அங்கு நின்றிருந்த இளாவைக் கண்டதும் கண்கள் கலங்க “கண்ணா” என்ற அழைப்பை தவிர வேறு வார்த்தைகள் பேசாது கைகள் அவனது முகத்தை வருட,

“அம்மா ஒண்ணும் இல்லைமா சின்ன அடி தான்” அவரை சமாதானப்படுத்த முயல,

“ஏன்டா கண்ணா வண்டியில பார்த்து போக கூடாதா? எப்படி அடிபட்டிருக்கு நீ சின்ன அடினு சொல்ற” என்று கேட்க,

“ஸ்லிப் ஆயிடுச்சும்மா சரி அதை விடுங்க முதல்ல ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிட்டுட்டு பொறுமையா பேசலாம்” என்று அவரை கெஞ்சி கொஞ்சி அறைக்குள் அனுப்பி வைத்தான்.

நாட்கள் காட்டாற்று வெள்ளமாய் ஓட, தனுஷா எடுத்திருந்த மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து விட, இளாவை எப்படி கவனிப்பது என கவலையாக இருந்தவளிடம் தான் பார்த்துக் கொள்ளுவதாக சாலா கூறிவிட, வேலைக்கு சென்றாள் தனுஷா.

ஆண்டு இறுதி என்பதால் ஆடிட்டிங் வொர்க் பெண்டெடுக்க, வீட்டிற்கு தாமதமாக வர இளாவுடன் கழிக்க வேண்டிய பொழுதுகளை வேலைப்பளுவும் ,தூக்கமும் தின்று தீர்த்தது.

அனு மட்டும் கோவைக்கு சென்று ஹரீஷின் உதவியால் வீட்டு சாமான்களை பேக் செய்து சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தாள். சென்னையில் செட்டில் ஆகிவிட, இன்னும் இரண்டு நாளில் அனுவிற்கு ட்ரைனிங்கில் சேர வேண்டும்.

உடைகள் வாங்க வேண்டி இருக்க, சாலாவிடம் சொல்லி விட்டு, ஹாஸ்டலில் தங்கியிருந்த தன் தோழி ஜெனியை அழைத்துக் கொண்டு இருவருமாக அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஷிற்கு சென்றார்கள்.

தேவையான உடைகளையும், இன்ன பிற பொருள்களையும் வாங்கி கொண்டு அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தனர். சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு வெளியே வர, “அனன் கையில ரெடி கேஷ் இல்லை நான் ஏடி. எம் போயிட்டு வந்திடுறேன் நீ இங்கேயே வெயிட் பண்ணு” என்று சொல்ல,

“இங்க எங்கடி இருக்கு உனக்கு எவ்வளோ வேணும்னு சொல்லு நான் என்கிட்ட இருக்கதை தர்றேன் நீ பிறகு உனக்கு முடியும் போது கொடு” என்றாள்.

“ஹே இல்லடி பஃர்ஸ்ட் ஃப்ளோர் கார்னர்ல பார்த்தேன். என்கிட்ட இல்லைனா உன்கிட்ட வாங்கிக்கலாம் அக்கௌன்ட்ல இருக்கும் போது எதுக்குடி எப்படினாலும் நான் எடுத்து தான் ஆகணும் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் “என்று விட்டு ஷாப்பிங்க் பேக்குகளை அனுவிடம் தந்துவிட்டு போக,

பேக்குகள் கைகளுக்குள் பத்தாமல் கையிலிருந்து நழுவ, கீழே விழப் போனதை பிடித்தன இரு வலிய கரங்கள் அதை கைகளில் அடக்கியபடி “தேங்க்ஸ்” என்று சொல்லியபடி நிமிர்ந்தவளின் பார்வை வட்ட்த்திற்குள் நின்றிருந்தான் அருண்.

ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழையும் போதே அனுவை பார்த்துவிட்டவன் அவளை தனியே சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்க ஜெனி அங்கிருந்து நகர்ந்ததும் அருகில் வந்து விட்டான்.

அவனை கடந்து செல்ல முற்பட “அனு ஒரு நிமிஷம் உங்கிட்ட பேசணும்” என்று சொல்ல,

நின்று அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ஓ இன்னும் பேசுறதுக்கு விஷயம் இருக்கா? “ என்று கேட்க,

“ஏன்டி இப்படி எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாத மாதிரி பேசுற”

“நானா? அப்படி பேசுறேன் என்னை நீங்க பேச வைக்குறிங்க வேண்டாம் இனி எது பேசுனாலும் அது தப்பா தான் போகும் ஜெனி வந்திடுவா நீங்க கிளம்புங்க”

“என்கிட்ட நீ பேச வரும் போதெல்லாம் உன்னை காயப்படுத்தினது தப்பு தான் இல்லைனு சொல்லலை என்னோட நிலையில இருந்து யோசிச்சு பாரு அந்த நேரத்துல நான் வேற எப்படி ரியாக்ட் பண்ணனும்னு நினைக்குற?” என்று கேட்க,

“இப்போ இவ்வளோ பேசுற நீங்க அன்னைக்கு என்னோட நிலையில இருந்து ஏன் யோசிச்சு பார்க்கலை?” என்று எதிர் கேள்வி ஒன்றை அவனிடம் திருப்பி விட,

“இங்க பாரு மாத்தி மாத்தி இப்படி பேசிட்டு இருந்தா இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே வராது இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்ற? வெளிப்படையா சொன்னாதானே எனக்கும் தெரியும்”

“நான் எதிர்பார்க்குறதெல்லாம் ஒரே ஒரு விஷயம் அது என்னனு புரிஞ்சு அதை நீங்க சொல்ற அடுத்த நிமிஷம் இந்த ஜென்மத்துக்கு உங்களை என்னை விட்டு பிரிக்க முடியாதபடி இறுக்கமாக கட்டிப்பேன்” என்று மனதிற்குள் நினைத்தபடி அனு நின்றிருக்க,

அதற்குள் அங்கு வந்த ஜெனி “ஹாய் அருண் சார் எப்படி இருக்கீங்க” என்று சிறிது நேரம் பேசிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப, கலங்கிய கண்களை மறைத்தபடி போகும் அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.

செனோரீட்டா வருவாள்.

Advertisement