Advertisement

அத்தியாயம் 34:

என் வாழ்வெனும் வெற்றுக் காகிதத்தில்

உன் வருகை எனும் வண்ணம் தீட்டி

இதோ உயிர் பெற்று விட்டது காதல் ஓவியம்

என் மனதில் என்றுமே அழியா பொக்கிஷமாக!

கதவை திறந்த அருண் அங்கு நின்றிருந்த சஜனை பார்த்து “ஹலோ சஜன் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் வாங்க வாங்க” என்று அழைக்க சிறு புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் சஜன். தாமோதரனும் “வாங்க மாப்பிள்ளை” என்று அவனை வரவேற்க, தியாவோ அவனை கண்டு திரு திருவென முழித்து வைத்தாள்.

அவளை கண்ட தாமோதரன் “என்ன தியா குட்டி மாப்பிள்ளை வந்திருக்கார் அவரை வாங்கனு கூட கேட்காம நிற்குற” என்று சொல்ல,

“என்னது இவ குட்டியா? ஹம்ம் பண்றது எல்லாம் கேடி வேலை ஆனா முகத்தை பார்த்தா பச்சை புள்ளை மாதிரி தான் இருக்கு” என்று முணு முணுத்துக் கொண்டிருக்க, “வாங்க” என்று சொல்லிவிட்டு தந்தையின் அருகில் நின்று கொண்டாள்.

“அட அட என்ன ஒரு வரவேற்பு” என்று மனதிற்குள் முனகியவனை “உட்காருங்க” என்று அருண் சொன்னதும், அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, “வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என்று தாமோதரன் அழைத்ததும், அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். தியா சாப்பிடாமல் இருப்பதை கண்டு யோசனையாய் பார்வையை செலுத்திய சஜனின் எண்ணத்தை புரிந்து கொண்ட தாமோதரன் “நான் இருக்கும் போது ஊட்டி விட்டா தான் சாப்பிடுவா நீங்க சாப்பிடுங்க” என்று சொல்ல,

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்ததும் சஜன் தியாவின் அறைக்கு செல்ல, மெத்தையில் அமர்ந்திருந்த தியாவின் அருகில் சென்றவன் “சாரி தியா காலையில ரொம்ப கோபப்பட்டுட்டேன் ஆனா அதுக்கு நான் மட்டும் காரணம் இல்லை நீயும் தான்” என்று சொன்னவனை, “நானா?” என்று புருவம் உயர்த்த, அவளது கேள்வியை புரிந்து கொண்டவன் “நீயும் அப்படி வார்த்தையை விட்டுருக்க கூடாது அதான் கோபம் வந்திடுச்சு” என்றான்.

“கோபம் வந்தா என்ன வேணும்னாலும் பேசுவானா?” என்று முறுக்கி கொண்டவள் “எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லிவிட்டு கீழே பெட்ஷீட்டை விரிக்க,

“ஹேய் என்ன கீழே படுக்க போறியா?” என்று சஜன் கேள்வி கேட்க,

“படுக்க போறேன் இல்லை படுக்க போறிங்க இது என் ரூம் நான் ஏன் கீழே படுக்கணும்” என்று சொல்ல,

“அதெல்லாம் முடியாது என்னை என்ன என் வொய்ஃப் மாதிரி மக்குனு நினைச்சியா நான் பெட்ல தான் படுப்பேன் முடியாதுனு சொன்னனா என் மாமனார் கூட போய் படுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு கதவு நோக்கி நகர,

என் வொய்ஃப் என்று அவன் சொன்னது உள்ளுக்குள் தித்தித்தாலும் அதை வெளிக்காட்டாது “ ஆமா நான் உங்க பொண்டாட்டினு இப்போ தான் தெரியுதா? வீட்டை விட்டு போக சொல்லும் போது தெரியலையா? என்று கடு கடுத்துவிட்டு, “அய்யோ அப்பாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க” என்று நினைத்தவள், “இங்கேயே படுத்து தொலைங்க” என்று விட்டு தான் கீழே படுக்க ஆயத்தமானாள்.

“நீயும் மேலேயே படு இல்லனா என் மா..” என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவள் மேலே ஏறி படுத்து போர்வையை தலை வரை போர்த்திக் கொள்ள, அதை கண்டு புன்னகைத்தவன் தானும் அவளருகில் படுத்துக் கொண்டான்.

அவள் தூங்கும் வரை காத்திருந்தவன், “நான் பேச வந்தா உனக்கு தூக்கம் வருதா? இரு இரு காலையில உனக்கு ஒரு ஷாக் குடுக்குறேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டபடி

“பார்த்தியாடா உங்க அம்மாவுக்கு இருக்க குசும்பை நீ சீக்கிரம் அப்பாகிட்ட வந்திடு அப்புறம் இருக்கு உங்க அம்மாவுக்கு கச்சேரி” என்று தன் குழந்தையுடன் பேசிக் கொண்டே வயிற்றில் இதழ் பதிக்க,

அவனது இதழ் பட்டதும் ஏற்பட்ட சிலிர்ப்பில் உறக்கத்திலும் “சஜூ” என்று முனங்கிய தியாவை கண்டவனின் மனம் சந்தோஷத்தில் பொங்க அவள் உறக்கம் கலையாதவாறு மெலிதாக அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இளாவிற்கு அடிபட்டதை கேள்விபட்டதும் தனுஷா அடித்து பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்த போது இளா தூங்கியிருந்தான். அவன் அருகில் விஷ்வா அமர்ந்திருப்பது பட “அண்ணா என்ன ஆச்சு எப்படி இவருக்கு அடிபட்டுது” என்று கேட்க,

“சிஸ்டர் பதட்டப்படாதீங்க பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டான் வேற ஒண்ணும் இல்லை”

“இவ்வளவு அடிபட்டிருக்கு நீங்க ஒன்ணும் இல்லைனு சொல்றிங்க” என்று அவனது தலையிலும் கதையிலும் இருந்த கட்டை பார்த்துக் கொண்டே கேட்க,

“கையிலையும் தலையிலையும் கொஞ்சம் அடி பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க. பெயின் கில்லர் போட்டுருக்கதால தூங்குறான். நான் தான் இங்க இருக்கேன்ல நீங்க ஏன் இந்த நைட்ல தனியா வந்தீங்க காலையில வந்திருக்கலாமே”

“அவருக்கு அடிபட்டிருக்குனு தெரிஞ்ச பிறகு நான் எப்படிண்ணா அங்கே நிம்மதியா இருக்க முடியும். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல,

“பரவாயில்லை சிஸ்டர் நான் இருக்குறேன்” என்றவனிடம் “ஒண்ணும் ப்ராப்ளம் இல்லண்ணா எதுவும் உதவினா நான் உங்களுக்கு கால் பண்றேன்” என்று அவனை போக சொன்னாள்.

“மச்சான் சொன்னது கரெக்ட் இவங்க அவனை லவ் பண்றாங்க” என்று மனதிற்குள் நினைத்தபடி “சரிம்மா எதுனாலும் என்னை கூப்பிடு வர்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

விஷ்வா கிளம்பியதும் இளாவின் அருகில் சென்று அமர்ந்தவள் அவனது உச்சி முதல் பாதம் வரை ஒரு முறை ஆராய்ந்தவள் தலையில் போடப்பட்டிருந்த கட்டை தாண்டியும் தெரிந்த ரத்த கசிவு அவளை கலங்க செய்தது. கண்களில் கண்ணீர் குளம் கட்ட, அவனது தலையை கோதி விட்டவள், சிறிது நேரம் அவனருகிலேயே இருந்துவிட்டு அங்கு கேர் டேக்கர் படுப்பதற்காக போடப்பட்டிருந்த பெஞ்சில் படுத்துக் கொண்டு இளாவையே பார்த்துக் கொண்டிருந்தவளை நித்ரா தேவி தழுவிக் கொண்டாள்.

இளாவிற்கு நேற்று அடிபட்டதன் வலி இன்று அதிகமாக தெரிய முகத்தை சுளித்தவாறு கண்களை திறக்க, தனது பெட்டிற்கு இரண்டடி தள்ளி கிடந்த பெஞ்சில் படுத்திருந்த தனுஷாவை கண்டவன் “எப்போ வந்தா? நைட்டே வந்திருப்பா போல அசந்து வேற தூங்குறா?” என்று நினைத்தவாறு எழுந்து அமர முயற்சிக்க,

அவனது அசைவில் ஸ்டீல் கட்டில் சத்தம் எழுப்ப, அதை கேட்டு என்னவோ எதோவென்று அவசர அவசரமாக தனு எழுந்து அமர, “ஹேய் மெதுவா எழுந்திரு ஒண்ணுமில்லை ஜஸ்ட் எழுந்து உட்கார ட்ரை பண்றேன்” என்று சொல்ல,

“இருங்க செழியன் நான் ஹெல்ப் பண்றேன்” என்றபடி அவனை நெருங்க முயற்சிக்க,

“இல்லை வேண்டாம் நானே எழுந்துக்குறேன்” என்று அவளை தடுத்து விட்டு எழ முயன்ற நேரம் விஷ்வா உள்ளே நுழைந்தான். “ஹேய் என்னடா பண்ற இரு நான் வர்றேன்” என்று இளாவின் முதுகில் கை குடுத்து அவனை சாய்ந்தவாறு அமர வைத்தான்.

இதையெல்லாம் பார்த்து இளாவை முறைத்துக் கொண்டிருந்த தனு “நான் ஹெல்ப் பண்றேனு சொல்லும் போது வேண்டாம் அப்படினு சீன் போட்டுட்டு இப்போ மட்டும் ஒண்ணும் சொல்லாம இருக்கான் இன்னைக்கு ஏன் இப்படி பண்றான்னு அவன்கிட்ட கேட்டே தீரணும்” என்று காத்துக் கொண்டிருந்தாள் தனுஷா.

இருவருக்கும் உணவை வாங்கி வந்த விஷ்வா அதை தனுவிடம் கொடுக்க அப்போது தான் தண்ணீர் இல்லாததை கவனித்தவன் “சிஸ்டர் வாட்டர் பாட்டில் வாங்க மறந்துட்டேன் நீங்க சாப்பிட்டுட்டு இருங்க நான் கேன்டீன்ல போய் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டு சென்றான்.

உணவு பார்சலை பிரித்து அதில் இருந்த இட்லியை பிட்டு கையில் எடுக்க போனவளின் அடுத்த செய்கையை யூகித்த இளா “அதை கொடு நான் சாப்பிட்டுக்குறேன் நீயும் சாப்பிடு” என்றதும் அவ்வளவு நேரம் இழுத்து வைத்த பொறுமை காற்றில் பறக்க,

“உங்களுக்கு இப்போ என்ன தான் வேணும் நானும் அப்போதிருந்து பார்த்துட்டே இருக்கேன் என்னை விலக்கிட்டே இருக்கீங்க. இப்படி கஷ்டப்படுத்த தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா? சொல்லுங்க”

எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவனை கண்டு மேலும் கோபம் கொண்டவள், “எப்போதும் சொல்வீங்களே என்னை புரிஞ்சுக்காம பேசுற அப்படினு இப்போ நீங்க மட்டும் என்ன பண்றிங்க என்னை புரிஞ்சுக்காம தான் இந்த மாதிரி என்னை விலக்கி வச்சு கஷ்டப்படுத்துறிங்க” என்று ஆதங்கம் மேலிட பேச

“நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கலை இன்னைக்கு உன்னோட கவனிப்பை ஏத்துகிட்டு சந்தோஷப்படுவேன் நாளைக்கு நீ அது நான் உடம்பு சரியில்லாததால தான் பார்த்துக்கிட்டேன் நீங்க தான் தப்பா நினைச்சுட்டீங்கனு சொல்லுவ எதுக்கு வம்பு” என்று அவள் கல்லூரியில் காதலை சொல்ல வரும் போது நட்பாக தான் பழகினேன் என்று சொன்னதை வைத்து குத்தலாக பேச,

அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட தனு “இப்போ நான் என் வாயை திறந்து சொல்லணும் அப்படி தானே சரி கேட்டுக்கோங்க ஆமா நான் உங்களை லவ் பண்றேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ போதுமா?” என்று சொல்ல,

தனுஷா வாயை திறந்து மனதில் இருப்பதை சொல்லுவாள் என எதிர்பார்க்காத இளா வாயடைத்து இருக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உணவை எடுத்து அவன் வாயில் திணிக்க அவனும் மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டான்.

தனுவை பார்த்துக் கொண்டே அவள் தந்த உணவை சாப்பிட்ட இளா வீசிய பார்வையின் வீரியத்தை தாங்க இயலாது கன்னம் சிவந்தவள் அவனது முகத்தை ஏறிட்டு பார்க்காமல் குனிந்து வண்ணமே அவனுக்கு உணவை கொடுத்து கொண்டிருந்தாள்.

அவளை சீண்டும் எண்ணத்துடன் வாயில் உணவை வைத்த அவளது விரலை உதட்டால் பற்றிக் கொண்டு விடாமல் வம்பு செய்ய, சூடான காற்று விரல்களில் பட்டு அவளை இம்சிக்க “செழியன்” என்று முணு முணுத்துக் கொண்டு நெளிந்து கொடுக்க,

இளாவோ லாலிபாப்பை சாப்பிடும் குழந்தையை போல அவளது விரல்களை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான். அந்த நேரம் விஷ்வா கதவை திறக்கும் சத்தம் கேட்க சட்டென்று அவளின் விரல்களுக்கு விடுதலை அளித்தான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் சஜனுக்கு முன்பே விழித்த தியா தன் கடமைகளை முடித்துவிட்டு கீழே சென்று வழக்கம் போல் தன் தந்தையின் மடியில் படுத்துக் கொள்ள, “இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியேடா குட்டி” என்று அவளது தலை கோதி விட்ட தாமோதரனின் மனதில் வருத்தத்திற்கு பதில் சந்தோஷமே நிரம்பி வழிந்தது.

வழக்கமாக வேலைக்கு வரும் பெண்மணி காபியை கலந்து கையில் கொடுக்க அதை குடித்து முடித்தவளிடம் “குட்டி! அப்படியே மாப்பிள்ளைக்கும் கொண்டு போய் கொடு. . .” என்று சொல்ல,

“ம்ம் சரிப்பா கொண்டு போறேன்” என்று விட்டு காபி கப்பை எடுத்துக் கொண்டு அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் வெட்கப்பட்டு திரும்பி நின்று கொண்டாள்.

கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே அது தியா தான் என்று அறிந்து கொண்ட சஜன் குளித்துவிட்டு இடுப்பில் கட்டியிருந்த துண்டுடன் ஒய்யாரமாய் கட்டிலில் அமர்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டிருந்தான். அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் வெட்கம் மேலிட நின்ற தியா “ஏன் இப்படி நிற்குறிங்க ட்ரெஸை போட வேண்டியது தான?”என்று கேட்க,

“எனக்கு சல்வார், சாரி கட்டுற பழக்கமெல்லாம் இல்லைமா?” என்று நக்கலாக சொல்ல,

என்ன சொல்கிறான் என்று ஒரு நிமிடம் முழித்தவளுக்கு அவன் சொல்லியதன் சராம்சம் சற்று தாமதமாக புரிய,

“நேற்று என் அப்பா பண்ணின கலாட்டால உன்னை கூட்டிட்டு போக அப்படியே வந்துட்டேன் வேற ட்ரெஸ் கொண்டு வரலை” என்றான்.

வேக வேகமாய் அவளது கப்போர்டை திறந்து அன்று ஷாப்பிங் காம்ப்ளெக்ஷில் சஜன் தேர்ந்தெடுத்த உடையை எடுத்து அவனிடம் நீட்ட, ஒரு புன் சிரிப்புடன் வாங்கி கொண்டு அதை அணிந்து கொள்ள, கொண்டு வந்த காபி கப்பை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு வெளியே செல்ல முயன்றவளை “தியா ஒரு நிமிஷம்” என்றான்.

அவளருகில் சென்று “நான் நல்லா யோசிச்சுட்டேன் தியா நீ சொல்றது தான் எனக்கு சரினுபடுது நாம செப்பரெட் ஆகிடலாம்” என்ற குண்டை தூக்கி போட, சட்டென்று நிமிர்ந்தவள் “என்னது” என்றதொரு அதிர்ச்சியான பார்வையை அவன் மேல் வீசினாள்.

“உனக்கு ஓகே தான” என்று அவன் கேட்க, “முடியாது எனக்கு ஓகே இல்லை” என்று நிஷ்டூரமாக மறுத்தவளை கண்டு சஜன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“நானா சொல்லலை தியா நீ சொன்னதை நல்லா யோசிச்சு பார்த்துட்டு தான் சொல்றேன்” என்று சஜன் சொல்ல,

“மக்கு பையன் யோசிச்சானாம் உன் யோசனையில் தீயை கொளுத்த” என்று மனதிற்குள் முணு முணுக்க,

“சொல்லு ஓகே தான நீ சொன்னதுக்கு பிறகு தான் நெக்ஸ்ட் பண்ண வேண்டியதை பார்க்க முடியும்” என்று தன் நிலையில் விடாப்பிடியாக இருக்க,

பதிலேதும் கூறாமல் அமைதியாய் இருந்தவளிடம், “ஏன் முடியாது நீ சொன்ன ஆஃப்ஷன் தான அப்புறம் என்ன ப்ராப்ளம்?” என்று நிதனாமாய் வினவியவனிடம், “முடியாது முடியாது” என்று கிட்ட தட்ட கத்தினாள் தியா “அதான் ஏன்னு கேட்குறேன்” என்று சஜனும் அசராமல் கேட்டான்.

“ஏன்னா நான் உங்களை தான் லவ் பண்றேன்” என்று சொல்லிவிட்டு முகத்தை தன் கைகளில் புதைத்து அழுதவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான் சஜன்.

சற்று அவளது அழுகை மட்டுப்பட்டதும் தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளது தோள்களில் தனது கைகளை மாலையாக கோர்த்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“நான் உங்களை” என்று தொடங்கியவளின் இதழில் விரல் வைத்து தடுத்தவன் “நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் எல்லாம் எனக்கு தெரியும்” என்று அவளை பார்த்து கண் சிமிட்ட, அதில் வெட்கப்பட்டு சிவந்தவளின் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியவன், அவளின் கன்னத்தை நேற்று கோபத்தில் பிடித்ததில் சிவந்திருந்த இடத்தை கையால் வருடியவன் “வலிக்குதா?” என்று கேட்க,

இந்த காதல் பார்வைக்கும், அன்பு மொழிகளுக்கு தானே ஏங்கினாள் இன்று அது தன் கையில் கிடைத்து விட்டதை எண்ணியவளின் கண்கள் கலங்க, “இல்லை வலிக்கலை” என்று தியா சொல்ல,

“இல்லை நீ பொய் சொல்ற உனக்கு வலிக்குதுனு எனக்கு தெரியும் “

“பொய்யெல்லாம் சொல்லலை நிஜமாகவே எனக்கு வலிக்கலை” அவன் வருத்தப்படுகிறானோ என்று நினைத்து சொல்ல “உனக்கு வலிக்குது இரு நான் மருந்து போடுறேன்” என்று சொல்லியவன் தியா என்னவென்று உணரும் முன்பே கன்னத்தில் இதழ் பதித்திருந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“தேய் சாக்கியை குடுதா எனிக்கி”  “முதியாது போ” வீட்டில் இருந்த வாண்டுகளின் செல்ல சிணுங்கல்கள் அந்த மாலை நேரத்தை ரம்மியமாக்கி கொண்டிருக்க,

“சித்தி அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களாம். எல்லாம் ரெடி தான? வேற எதுவும் வாங்கணும்னா சொல்லுங்க” என்றபடி கிச்சனில் இருந்த ஹேமாவிடம் கேட்டான் சுரேஷ்.

தன் கணவனை பறிகொடுத்த ஹேமாவிற்கு அவரது அக்கா வீடு தான் தோள் கொடுத்தது. அக்கா வீட்டிற்கு அருகிலேயே குடி வந்தவருக்கு தான் செய்து வந்திருந்த அரசு சத்துணவு கணக்காளர் வேலை கை கொடுக்க, ஒரே மகளான வெண்பாவை கஷ்டம் தெரியாமல் வளர்த்தார். காலத்தின் ஓட்டத்தில் அக்கா, அத்தானின் வாழ்வு முடிந்த அளவு ஓடி இறுதியில் நிரந்தர ஓய்வுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள, அக்காவின் மகன் சுரேஷ் ஹேமாவிற்கு மூத்த மகனாகி போனான்.

“எல்லாம் ரெடி தான் சுரேஷ் இந்த வெண்பா ரெடியாகிட்டாளானு ரம்யாகிட்ட கேளு. ரெடியாகுறேன் ரூம்க்குள்ள போய் ரெண்டு மணி நேரம் ஆகுது” என்று சொல்ல, இதோ பார்க்குறேன் சித்தி என்று சொல்லி விட்டு “ஹேய் ரம்ஸ்” என்று மனைவியை அழைத்தவாறு அங்கிருந்து நகன்றான்.

ஆமாங்க நீங்க நினைச்சது சரி தான் இன்னைக்கு வெண்பாவை நம்ம வினோ வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வர்றாங்க. கண்ணாடி முன் நின்றிருந்த வெண்பாவை பார்த்து அவளின் அண்ணி ரம்யா “போதும் வெண்பா அப்புறம் உன் அழகுல மயங்கி வினோத் இங்கேயே இருந்திடுறேனு சொல்லிற போறாரு” என்று சொல்லி சிரிக்க,

வினோத் பெயரை கேட்டதும் கன்னம் ரோஜாவாக சிவந்து போக “போங்க அண்ணி” என்று வெட்கப்பட்டு கூறியவளிடம் “இப்படி வெட்கப்பட்டா வினோத் இங்கே டேரா போடப் போறது கன்பாஃர்ம்” என்று சொல்ல, வெண்பாவும் நாணத்துடன் கூடிய புன்னகை செய்தாள்.

அதற்குள் கார் வரும் சத்தம் கேட்டதும் “வந்துட்டாங்க போல நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்று விட்டு வெளியேறிய ரம்யா தன் கணவனுடன் சேர்ந்து நின்று கொண்டாள். வினோத்தின் அப்பா அம்மா அக்கா மற்றும் அவளுடைய இரு குழந்தைகள் வந்திருந்தனர் அனைவரையும் வரவேற்று உபசரிக்க, வினோத்தின் பார்வையோ வெண்பாவை தான் தேடிக் கொண்டிருந்தது.

பெரியவர்கள் அமர்ந்து கொள்ள குழந்தைகளோ புது நட்பை உருவாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். வெண்பாவை அழைத்து வர வினோத் அவள் மேலிருந்து கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க, வெண்பாவோ தலை குனிந்து வண்ணமே அங்கு வந்து அமர்ந்தாள்.

அவள் தன்னை ஏறிட்டு பார்க்காமல் இருப்பது வினோத்திற்கு ஏமாற்றமாக இருக்க அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான். வினோத்தின் அக்கா வெண்பாவிடம் பேசிக் கொண்டிருக்க, அதற்கு பதில் அளித்து கொண்டிருந்தவளை நினைத்து “ஒரு டைம் என்னை பார்த்தா தான் என்னவாம்” என்று முணு முணுத்துவிட்டு “பாரு பாரு” என்று டெலிபதியை வினோத் டெஸ்ட் செய்து கொண்டிருக்க, அது வெண்பாவிற்கு கேட்டதோ என்னவோ சட்டென்று நிமிர்ந்து வினோத்தை பார்க்க அவனோ அவளை பார்த்து அழகாய் கண் சிமிட்டினான்.

அதன் பின் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள, வினோத்தும் வெண்பாவும் கண்களால் கவிதை படித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஓரமாக விளையாடிக் கொண்டிருந்த வினோத்தின் அக்கா குழந்தைகளில் ஒன்று அப்போது தான் ஏதோ நியாபகம் வந்தவளாய் வேகமாக ஓடி வந்து வெண்பாவின் அருகில் சென்று அவளது புடவையை பிடித்து இழுத்தது.

அதில் தன்னுணர்வு பெற்றவள் வினோத்திடம் இருந்த பார்வையை திருப்பி “என்ன குட்டி” என்று குழந்தையிடம் கேட்க, “இங்க வாங்க” என்று அவளின் உயர்த்திற்கு இழுக்க, வெண்பாவும் முட்டி போட்டு குழந்தையின் முன்பு அமர “எங்க மாமா ஒண்ணு குடுக்க சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு ‘பச்’ என்று அவளது கன்னத்தில் தன் பிஞ்சு இதழை பதித்துவிட்டு ஓடியது. வெட்கம் மேலிட வினோவை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்ணில் தெரிந்த காதலில் வெண்பாவின் உடல் முழுதும் சிலிர்த்து போனது.   

 

Advertisement