Advertisement

அத்தியாயம் 29:

காதலுக்கு கண்ணில்லை என்னும் பழமொழியை

பொய்பித்து அதற்கு கண்ணோடு சேர்த்து உயிரும்

உண்டு என உணர்த்தும் வகையில் இதோ

உன் மேல் நான் கொண்ட காதல் உயிர் கொண்டு

துடிக்கிறது நம் குழந்தையாய் என் வயிற்றில்!

சஜன் அதிர்ந்து நின்றது ஒரு சில மணித்துளிகள் தான் அடுத்த நொடி தியா அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ் மருத்துவமனை நோக்கி விரைந்தான். காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் மனமோ தான் தந்தையானதை நினைத்து சிலிர்த்து போக, உள்ளத்தில் ஒரு வித இதமான உணர்வு உருவாகி அதுவே  அவனது நாடி நரம்பெங்கும் ஓடி இத்தனை நாள் உயிரற்று கிடந்த வாழ்விற்கு புத்துயிர் கிடைத்தது போல் தோன்றியது. சஜன் இவ்வாறு உணர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஒரு பெண் தன்னை முழுமையாக உணர்வது தாய்மையில் என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு சற்றும் குறையாதது ஆணுக்கு ஏற்படும் தந்தையுணர்வு.

மருத்துவமனையை அடைந்த சஜன் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே செல்ல, அங்கு காரிடாரில் அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த தந்தையை கண்டவன் விரைந்து அவர் அருகில் சென்றான்.

“என்னப்பா வெளிய நின்னுட்டு இருக்கீங்க தியா எங்க?” என்று கேட்க,

“தலையில அடிபட்டு இருக்குல காயம் கொஞ்சம் ஆழமா ஆகியிருக்கு அதான் ஸ்டிச்சஸ் போட்டுட்டு இருக்காங்க” என்று சொல்ல,

“என்னது அடிபட்டிருக்கா? ஆனா அப்பா போன்ல வேறல சொன்னாங்க இல்லை நான் தான் தவறா கேட்டுட்டேனா? ச்ச அதுக்கு வாய்ப்பில்லை அப்படி சொன்ன மாதிரி தான் இருந்திச்சு” என்று மனதிற்குள் ஆராய்ந்து கொண்டிருந்தவனின் தோள்களை பிடித்து தட்ட,

“என்ன நடந்தது எப்படி அடிபட்டுதுப்பா” என்று கேட்க,

“காலையில கோவிலுக்கு போறதுக்கு கிளம்புனா போல உங்கம்மா சாப்பிட சொல்லியும் வேண்டாம் அத்தை போயிட்டு வந்து சாப்பிடுறேனு சொல்லிட்டு போயிருக்கா அங்க கோவில்ல பிராகரத்தை சுத்தி வரும் போது மயக்கம் வந்து விழுந்திருக்கா அப்போ கீழே கிடந்த கல் ஆழமா குத்தி இருக்கு ஒரு அம்மா தான் அவளை ஹாஸ்பிட்டல் சேர்த்திட்டு போன் பண்ணி சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா அவ கன்சீவ் ஆகியிருக்கதா டாக்டர் சொன்னாங்க” என்று நடந்ததை சஜனிடம் விவரிக்க,

“ரொம்ப அடியாப்பா?” என்று கேட்டவனின் குரலில் அக்கறையுடன் கூடிய கவலை வழிந்தோட, அவனது அக்கறை கண்டு மனம் மகிழ்ந்தவர்,

“தம்பி பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லைடா ரிலாக்ஸ்” சஜன் தியாவை குறித்து கவலைப்படுகிறானே என்று ஆறுதல் கூற,

“ம்ம் ஓகே அப்பா” என்று மனம் பதில் சொன்னாலும் கண்களோ அறையின் கதவுகளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

அதற்குள் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “தையல் போட்டாச்சு அனஸ்திஸ்யா குடுத்ததால கொஞ்சம் மயக்கமா இருக்காங்க. காலையில இருந்து எதுவும் சாப்பிடலை போல ஃபை மினிட்ஸ் கழிச்சு சாப்பிட எதாவது குடுத்துட்டு நான் எழுதியிருக்க டேப்ளட் கொடுங்க “என்று எழுதியிருந்த பிரிஸ்க்ரிப்ஷனை கொடுக்க,

அதை வாங்கிய சிவப்பிரகாசம் “சஜன் நீ போய் தியாவை பாரு நானும் அம்மாவும் கேன்டீன்ல எதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றோம்” என்று சொல்ல,

“நீங்க இருங்கப்பா நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்ல,

“இருக்கட்டும் டா நீ இரு நான் அப்படியே மருந்தையும் வாங்கிட்டு பில் பே பண்ணிட்டு வந்திடுறேன்” என்றுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் உள்ளே சென்றவன் நெற்றியின் ஓரத்தில் கட்டு போடப்பட்டு படுத்திருந்த தியாவை பார்த்தவன் மனதில் மெல்லிய சலனம்.

அது எதனால்? ஏன்? என்றெல்லாம் அவன் ஆராய விரும்பவில்லை இந்த நொடி அவனுக்கு புதிதாய் தெரிந்தது. அவள் அருகில் சென்று அமர்ந்தவனின் கைகள் அவனை அறியாமலேயே தானாக நீண்டு அவளது காயத்தை வருட, சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது ஸ்பரிசம் பட்டதும் இமைகளை திறக்க முயன்றவளுக்கு தையல் போட்ட இடத்தில் சுருக்கென வலியெடுக்க “அம்மா” முனகியதும் சட்டென்று கைகளை எடுத்தவன் அவள் விழிப்பதற்காய் காத்திருந்தான்.

கண்களை திறந்தவளின் பார்வையில் சஜனின் பிம்பம் விழ சந்தோஷத்தில் “சஜூ” என்று வாய்க்குள்ளேயே முணு முணுத்தவள் அவனை கண்டு மெலிதாய் புன்னகைக்க,

அவளது புன்னகையை சட்டை செய்யாது “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? காலையில சாப்பிட்டு போறதுக்கென்ன? உன் பின்னாடியே வந்து ஒரு ஆள் ஊட்டி விடணுமா?” என்று கோபம் கொள்ள,

“இவனுக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் தான் வரும். இவன் வயிற்றுல இருக்கும் போது அத்தை மிளகாய் நிறைய சாப்பிட்டுருப்பாங்களோ வாயை திறந்து பேசினாலே கார நெடி தாங்கலைப்பா” என்று மனதிற்குள் சொல்லி கொள்ள,

“என்ன கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதா? அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வீட்டுக்கு வந்தா கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ண முடியுதா? பண்றதெல்லாம் வேண்டாத வேலை” என்று சத்தம் போட,

“நான் குழந்தை உண்டாகியிருக்கதை மாமா இவன்கிட்ட சொல்லாமலா இருந்திருப்பாங்க இவன்கிட்ட அந்த சந்தோஷம் துளி கூட இல்லையே என் மேல தான் பாசம் இல்லை அவனோட குழந்தை மேல கூட இல்லையா?” என்று வெம்பியவள் அழக் கூட தெம்பில்லாமல் மௌனமாய் அமர்ந்திருக்க,

சிவப்பிரகாசமும் கயல் விழியும் உள்ளே வர சஜன் அமைதியாகி விட “என்னம்மா தியா இப்போ வலி எப்படி இருக்கு” என்று கேட்க,

“பரவாயில்லை மாமா” என்று சொல்ல, “கயல் இந்த சாப்பாடை தியாக்கு கொடு” என்று வாங்கி வந்த உணவு பார்சலை நீட்ட,

அதை வாங்க தியா கை நீட்ட, “நீ இரும்மா அத்தை ஊட்டி விடுறேன்” என்றபடி உணவை கொடுக்க, தியா ஒரக்கண்ணால் சஜனை பார்க்க, சஜனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக வீடு வந்து சேர முதல் வேலையாக பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை வணங்கிய கயல்விழி குங்குமத்தை எடுத்து தியாவின் நெற்றியில் வைத்தவர் “ரொம்ப சந்தோஷம்டா இந்த வீட்டுக்கு கூடிய சீக்கிரமே பேரனோ பேத்தியோ வரப்போறாங்க” என்று அவளை அணைத்து முத்தமிட்டவர் “நீ போய் ரெஸ்ட் எடுமா” என்று அறைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சந்தோஷமான செய்தி தியா வீட்டிற்கும் தெரிவிக்கப்பட அதை கேட்டதுமே தாமோதரனும் அருணும் தியாவை பார்த்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள சஜன் வீட்டிற்கு வந்தனர்.

“வாங்க சம்மந்தி இப்போ தான் உங்களுக்கு வர வழி தெரிஞ்சுதா? வாப்பா அருண்” என்று அவர்களை வரவேற்றவர்கள் சஜன் தியா யார் வந்திருக்கானு பாருங்க என்று குரல் கொடுக்க, சஜனும் தியாவும் கீழே வந்தனர்.

தந்தயை கண்டதும் குஷியானவள் ஓடி சென்று அவரை கட்டிக் கொள்ள “தியா குட்டி நான் தாத்தா ஆகிட்டேனு கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

அருண் சஜன் கைகுலுக்கி “கங்க்ராட்ஸ் சஜன்” என்று சொல்லி அவனை அணைத்து கொள்ள, சஜனும் “தேங்க்ஸ் அருண்” என்று அவனும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.தந்தையின் அருகில் நின்றிருந்த தங்கையை அருண் கேலி பார்வை பார்க்க, அதில் வெட்கப்பட்டவள் “டேய் அருண் ஐஸ்கிரீம்” என்று கோபம் கொண்டு அதற்கு நேர்மாறாக அவனது தோள் சாய்ந்தாள்.

“இனிமே அருண் ஐஸ்கிரீம்னு சொன்ன என் மருமகனை விட்டு உன்னை அடிப்பேன் பார்த்துக்கோ” என்று எச்சரித்தவன் “நீயே ஒரு பேபி உனக்கொரு பேபியா?” என்று கண்கலங்க கூறி அவளது தலையை வருடினான்.

இவர்களின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த சஜன் மனதிற்குள் புன்னகைத்துக் கொள்ள, வெளியில் இயல்பாக இருப்பதை போல் காட்டிக் கொண்டான்.

சிறிது நேரம் இருந்துவிட்டு அவர்களும் கிளம்பிவிட, அன்று முழுதும் சஜனின் பார்வை தியாவை சுற்றியே இருந்த்து. அதை அவள் அறியாதவாறு பார்த்துக் கொண்டான். இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த தியா அங்கிருந்த ஷோபாவில் படுத்து கொள்ள, ஆயத்தமாக அதை கண்ட சஜன் “இங்க படுக்க வேண்டாம் அங்க பெட்ல போய் படு” என்று சொல்ல,

அதை கண்டு ஆச்சர்யமானவள் “இல்லை இங்” என்று ஆரம்பித்தவள் சஜனின் முகத்தில் தோன்றிய கடுமையில் வாயை மூடியவள் ஒன்றும் சொல்லாது வேகமாக சென்று கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்த பின் அவளருகில் அமர்ந்தவன் அவளையே சற்று நேரம் உற்று நோக்க, தன்னுள் எழுந்த ஆசையை அடக்க மனமில்லாது அவள் வயிற்றில் மெல்ல கை வைத்தான். குழந்தையையே தொடுவது போல் ஒரு பிரம்மை தோன்ற, அந்த உணர்வில் உறைந்து போனான். தியா சற்றே நெளிந்து கொடுக்க, சட்டென்று எழுந்தவன் கட்டிலின் மறு ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டான்.

காலை வேலை பரபரப்பில் இருந்த இளாவின் தொலைப்பேசி ஒலிக்க, அதை எடுத்து பார்த்தவனின் முகம் ஆச்சர்யத்தோடு கூடிய சந்தோஷத்தை பிரதிபலிக்க அதையே குரலும் உள்வாங்கி கொள்ள, “அம்மா” என்றான்.

அந்த ஒற்றை வார்த்தை சாலாவை சற்று அசைத்தே பார்த்தது. அவன் குரலில் தெரிந்த ஏக்கம், தாய் தன்னை நிராகரித்ததன் வலியை உணர்ந்தவர் என் பிள்ளை என்னை இவ்வளவு தேடி இருக்கிறானே என்று பெருமை கொண்டாலும், அவனது வேதனை அவருக்கும் வருத்தத்தையே அளித்தது.

“அம்மா எப்படி இருக்கீங்கம்மா?” என்று கேட்க,

“ம் இருக்கேன் நீ எப்படிப்பா இருக்க” என்று தன் மகனின் நலத்தை விசாரிக்க,

“அம்மா இன்னும் என் மேல உங்களுக்கு கோபம் போகலையா?” என்று கேட்க,

அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாதவராய் “ இல்லை இளா உன் மேல கோபம் இல்லை வருத்தம் தான் எனக்குனு இருக்கது நீயும் அனுவும் தான் உங்ககிட்ட கோபப்பட்டுகிட்டு நான் யார்கிட்ட போவேன்” என்று சொல்ல,

“உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் என்னை மன்னிச்சுடுங்கம்மா” என்று கூறியவனின் குரல் உடைந்தது போல் இருக்க,

“விடு கண்ணு நடந்தது நடந்து போச்சு என் மருமகளே உன்னை மன்னிச்சுட்டா அப்படினும் போது இதுல நான் புதுசா சொல்ல என்ன இருக்கு. சரி முக்கியமான ஒரு விஷயம் உங்கிட்ட சொல்ல தான் கூப்பிட்டேன்”

“என்னம்மா சொல்லுங்க?” என்றவனிடம், “இந்த மாதம் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ல அதான் உன்னையும் மருமகளையும் கூப்பிடலாம்னு போன் செய்தேன்” என்று சொல்ல,

“என்று போக வேண்டும்’ என்று தேதியை கேட்டுக் கொண்டவன் “ நாளை மறுநாள் சரிம்மா வந்திடுறேன்” என்று கூற,

“என்னது வந்திடுறியா? தனுஷாவையும் கூட்டிட்டு வரணும் புரிஞ்சுதா?” என்று சொல்ல,

“அப்போ உங்க மருமக தான் மகனை விட முக்கியம் அப்படி தானே?’ என்று கேட்க, அவனது பேச்சில் இருந்த கேலியை உணர்ந்தவராய் “ஆமா அதுல என்ன சந்தேகம் உனக்கு?” என்று சொல்ல,

“சரி நீங்களே உங்க மருமகள்கிட்ட பேசி கூப்பிட்டுக்கோங்க” என்று சொல்லிவிட,

“நீ முதல்ல போனை வைடா அப்போ தான நானும் என் மருமகளும் பேச முடியும்” என்று சொல்ல “ம்ம்ம் நடக்கட்டும்” என்று போனை வைத்தவன் “உஃஃஃப்” எப்பிடியோ அம்மாவை வச்சு விஷயத்தை சொல்ல வச்சாச்சு நான் சொல்லிருந்தேன் வீம்புக்கு வரலைனு சொன்னாலும் சொல்லிருப்பா” என்று முணு முணுத்துவிட்டு வேலையை கவனிக்க நகர்ந்தான்.

 

ஒரு அரைமணி நேரம் கழித்து தனுஷா இளாவை அழைக்க “ஹலோ செழியன்” என்று சொல்ல,

பேர் சொல்லி கூப்பிடுறதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று முணு முணுத்தவன் “சொல்லு” என்று ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொள்ள,

திமிர் பிடிச்சவன் பேசுறதை பாரு “சொல்லு” என்று அவன் சொன்னதை கேலிக்குரலில் மனதிற்குள் சொல்லி பார்த்தவள் “அத்தை போன் பண்ணியிருந்தாங்க” என்று கூற,

“சரி” என்று அவன் சொல்ல, இவன் என்ன மணிரத்னம் ரசிகனா ஒரு வார்த்தையில் தான் பதில் சொல்வானோ என்று முனக,

அதை கேட்டு விட்ட இளாவோ மனதிற்க்குள் “மணிரத்னம் ரசிகன் இல்லடி உன்னோட ரசிகன் நான் இதை நான் சொன்னேனு வை தைய்யா தக்கானு குதிப்ப விலகி போக போக தானே மேடம் நெருங்கி வர்றிங்க வாடி வா உனக்கு இருக்கு” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அமைதியா இருக்க,

“என்னைக்கு நாம கிளம்பணும்னு சொல்லுங்க டிக்கெட் நான் புக் பண்ணிடுறேன்” என்று கேட்க,

“நாளைக்கு ஈவ்னிங் தனி தனி சீட் புக் பண்ணு” என்று குரலில் உறுதியோடு சொன்னவனின் இதழ் அதற்கு மாறாய் புன்னகைக்க,

“தனி தனியா? உடம்பெல்லாம் திமிரு” என்று சத்தமாய் முணு முணுத்தவள் “சரி” என்று பற்களை கடித்துக் கொண்டே கூறி வைத்து விட்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அசதியிலும் வலி குறைய எடுத்துக் கொண்ட மாத்திரையாலும் அசந்து தூங்கிய தியா அப்போது தான் கண் விழிக்க சஜன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“அய்யோ நேரமாயிடுச்சா?” என்று பதட்டத்துடன் எழுந்த தியாவிற்கு தலை கிறு கிறுக்க தள்ளாடியவளை பார்த்தவன் அவளருகில் வந்தவன் மெத்தையில் அமர வைத்து “ஹே அப்படி என்ன அவசரம் உனக்கு? மெதுவா எழுந்திருக்க வேண்டியது தான” என்று அவளை கடிந்து கொள்ள,

அவனையே விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு “என்ன” என்பது போல் புருவம் உயர்த்த, ஒன்றும் இல்லை என்றவாறு தலையாட்டினாள்.

“இப்போ வலி எப்படி இருக்கு” என்று கேட்க, காயம் பட்ட இடத்தை வருடியவள் “லேசா இருக்கு” என்று சொல்ல,

“சாமியை விழுந்து கூம்பிடுவாங்கனு தெரியும் இப்படி விழுந்து கும்பிடுவாங்கனு நேற்று தான் தெரியும்” என்று இதழ்க்கிடையில் உண்டான புன்னகையோடு சொல்ல, அவன் சொல்லியதை கேட்டதும் அவளுக்கும் தன்னை நினைத்தே சிரிப்பு வர புன்னகைத்தாள்.

“எனக்கு லேட் ஆகிடுச்சு நான் கிளம்புறேன் டேக் கேர்” என்றவாறு கிளம்பி சென்றான்.

அவளுடன் சகஜமாய் அவன் உரையாடியது அவளுக்கு சந்தோஷமாய் இருந்தாலும் குழந்தையை பற்றி அவன் எதுவும் சொல்லாதது மனதில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அலுவலகம் சென்ற சஜன் வந்த்தும் முதல் வேலையாக வினோத்தை அழைக்க, “வினோத் கம் டு மை ரூம்” என்று சொல்ல,

“இதோ வர்றேன் சார்” என்று இன்டர்காமை வைத்தவன் “இன்னைக்கு என்ன வெடி காத்திருக்கோ” என்றவாறு சஜனின் அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவன் தன் பார்வையில் நம்பிக்கை இல்லாது மீண்டும் கண்களை தேய்த்துவிட்டு கொண்டு பார்க்க, அப்போதும் சஜனின் புன்னகை முகம் மாறவில்லை.

“என்ன விஷயம் சார் கூப்பிட்டீங்க” என்று கேட்க, “உட்கார் வினோத்” என்று சொல்ல அடுத்த அதிர்ச்சி வினோத்திற்கு.

“தேங்க்யூ சார்” என்றபடி அமர்ந்தவன் சஜனின் முகத்தை உலக அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்து வைக்க, “என்ன வினோத் ஏன் அப்படி பார்க்குற” என்று கேட்டதும்,

“அது வந்து இன்னைக்கு நீங்க ரொம்ப ஹேப்பியா இருக்கிறது போல இருக்கு அதான்” என்று தயங்கி தயங்கி சொல்ல,

“அவ்வளவு வெளிப்படையா தெரியுதா? எஸ் யூ ஆர் ரைட் மேன் ஐ ம் ஃப்லீங் லைக் ஃப்ளையிங்” என்று சொல்ல,

அவனது சந்தோஷம் வினோத்தையும் தொற்றி கொள்ள “என்ன விஷயம் சார் சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல” என்றதும்,

“மை வொய்ஃப் இஸ் ப்ரக்னன்ட்” என்று சொன்ன போது முகத்தில் தெரிந்த ஜொலிப்பு அவன் கண்களில் பிரதிபலிக்க, “கங்க்ராட்ஸ் சார்” என்று சஜனுக்கு கை கொடுக்க,

“தேங்க்ஸ் வினோத்” என்றுவிட்டு ஸ்வீட்ஸ் ஆர்டர் பண்ணி எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடுங்க என்று சொல்ல, “இப்போவே செய்துடுறேன் சார் அதை விட வேற என்ன வேலை” என்றவாறு சென்றான் வினோத்.

அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சந்தோஷமான செய்தி தெரிவிக்கப்பட அனைவரும் சஜனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க, அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட சஜனை கண்டவர்களின் மனதும் நிறைந்திருந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய தனு ரெப்ரெஷ் செய்து விட்டு, குடிப்பதற்காக காபியை கலந்தவள் அதை எடுத்துக் கொண்டு டிவி முன் அமர்ந்து குடித்து கொண்டிருக்க, தொலைப்பேசி ஒலித்தது. வெண்பா தான் அழைத்திருந்தாள்.

“ஹே தனு எப்படி இருக்கடி” என்று கேட்க, “நான் நல்லா இருக்கேன்டி நீ எப்படி இருக்க மேடம் செம பிஸியோ?” என்றதும்

“நல்லா இருக்கேன் பிஸிலாம் இல்லைடி ஏன் அப்படி கேட்குற?”

“பின்ன என்னடி சன்டே கால் பண்ணினேன் ரிங் போய்ட்டே இருந்துது எடுக்கவே இல்லை சரி கால் லிஸ்ட் பார்த்துட்டு கூப்பிடுவனு பார்த்தா அதுவும் இல்லை அதான் கேட்டேன்”

“அதுவா சன்டே வினோ கூட படத்துக்கு போயிருந்தேன்டி அப்புறம் உன்னை கூப்பிடணும்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன் ஹி ஹி” என்று சமாளிக்க,

“மறப்படி மறப்ப இப்போலாம் உன் கண்ணுக்கு என்னையெல்லாம் தெரியுமா?” என்று கேட்க,

“ஹேய் அதை விடுடி முதல்ல உன் கதைக்கு வா” என்று கேட்க,

“என் கதையா? என்ன சொல்ற டி நீ எனக்கு புரியலையே?” என்று சொல்ல,

“அடியேய் மக்கு தியா குட் நியூஸ் சொல்லிட்டா நீ எப்போ சொல்ல போற” என்று கேட்க,

“அட நீ வேற ஏன் டி எரியுற அடுப்புல விறகை திணிக்குற” என்று சலித்துக் கொள்ள,

“என்னடி இந்த சலிப்பு சலிக்குற இன்னும் உன் ஆள் முறுக்கிட்டு தான் இருக்காறா?” என்று கேட்க,

“ஆமா டி ஓவரா தான் முறுக்குறான்”

“அப்போ காக்கி சட்டை கலர் சட்டையா மாறலைனு சொல்லு” என்று வெண்பா கேட்க,

“கலர் சட்டையா மாறாட்டாலும் பரவாயில்லை காவி சட்டையா மாறாம இருந்த சரி” என்று சிரிக்க,

“அது உன் கையில தான் இருக்கு சரிடி அப்புறம் பேசுறேன்” என்று வைத்து விட,

“ஓகே வெண் “என்று விட்டு குடித்து முடித்த காபி கப்பை எடுத்து கொண்டு திரும்பியவள் அங்கு நின்றிருந்த இளாவைக் கண்டு திடுக்கிட, அவனது கூர்மையான பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவள்,

நிமிடத்தில் சுதாரித்து பின் ஒன்றும் அறியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அவனை தாண்டி கிச்சனுக்குள் நுழைய முற்பட்ட நொடி, அவளை இழுத்து சுவரோடு சாய்த்து இரு கைகளால் அணை போட்டிருந்தான் இளா.

 

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement