Advertisement

அத்தியாயம் 20:

உன் காதல் பூக்களால் எனை

அர்ச்சிப்பாய் என நான் காத்திருக்க

நீயோ வார்த்தை கங்குகளை என் மேல்

வீசினாய் அப்போதும் பாழாய் போன

மனம் உனக்காகவே துடிக்குதடி!

காலை எழுந்தது முதலே மிகவும் உற்சாகமாக இருந்தான் இளா. நேற்று இரவு தனுவிடம் வம்பிழுத்ததை நினைத்து இப்போதும் உதடுகள் புன்னகையில் நெளிய அதே உற்சாகத்தோடு திரும்பி பார்க்க அங்கு தனுவை காணவில்லை.

“ஹம் புருஷனை எழுப்புவோம் காப்பி குடுப்போம்னு இல்லை எப்போடா தப்பிச்சு ஓடுவோம்னே சுத்திட்டு இருக்கிறது. நீ குடுத்து வைச்சது அவ்வளவு தான்டா இளா” என்று தலையை குலுக்கி கொண்டவன் அலுவலகம் செல்ல தயாரானான்.

கிளம்பி வந்தவனின் கண்களில் அப்போதும் தனு தென்படாமல் இருக்க, அவளை தேடி கிட்சனுக்குள் செல்ல, அங்கே காலை உணவு தயாராகி இருக்க “எங்கே போனா” என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தவனின் காதில் ஹாலில் இருந்த குளியலறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்கவும் “ஓ குளிக்கிறாளா” என்றுவிட்டு அவளுக்காய் காத்திருந்தான்.

அந்நேரம் அவனது தொலைப்பேசி ஒலிக்க எடுத்து பார்க்க , அலுவலகத்திலிருந்து தலைமை காவல் அதிகாரி தான் அழைத்திருந்தார். அதை காதிற்க்கு குடுத்தவன் “ம்ம் சொல்லுங்க சண்முகம்” என்று சொல்ல,

“சார் கிளம்பிட்டீங்களா? எட்டு மணிக்கு ரோல் கால் இருக்கு அதுமட்டுமில்லை இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் அதான் சார்க்கு நியாபக படுத்தலாம்னு” என்று சொல்ல,

அய்யோ இதை எப்படி மறந்தேன் என்று நினைத்தவனாய் “இதோ கிளம்பிட்டேன் இன்னும் டென் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்” என்றுவிட்டு சாப்பிட கூட இல்லாமல் கிளம்பி சென்றான்.

இது போன்று உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்ஷனுக்காக வரும் போது இதுவரை பதிவு செய்த குற்றங்களின் விபரங்களையும், அவற்றின் நிலை அதாவது ப்ராக்ரஸ் ஸ்டேட்டஸையும் பார்வையிடுவது வழக்கம்.

சரியான நேரத்திற்கு அலுவலகத்தை அடைந்தவன் இன்று நடக்க போகும் இன்ஷ்பெக்ஷனுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்தவன் தனது அறையில் சென்று அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் உயர் அதிகாரியும் வந்துவிட, அவருக்கு மரியாதை செய்துவிட்டு, ஆவணங்களை அவர் பார்வைக்காய் எடுத்து வைத்தான்.அவர் சரிபார்த்து கிளம்பிய பின் புகார் கொடுக்கவென ஒருவர் வந்தார். வந்தவரின் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தவாறு பயத்தை பிரதிபலித்தது.

அங்கிருந்தவரிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என சொல்ல, இளா ரைட்டரிடம் சொல்லி கம்ப்ளைன்ட் எழுதி வாங்கி கொள்ளுமாறு சொல்லிவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அரக்க பரக்க உள்ளே ஓடி வந்த ரைட்டர் “சார் அவர் எக்ஸ். மினிஸ்டர் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்காரு சார்” என்று பதட்டமாக உரைக்க,

“அதுக்கு என்ன இப்போ? போய் எழுதி வாங்குங்க” என நிதானமாக சொல்ல,

“சார் உங்களுக்கு தெரியாது அவரை பற்றி பதவி தான் எக்ஸ்.மினிஸ்டர் ஆனா ஆளுங்கட்சி மாதிரி செல்வாக்கு அதிகம் சார் எவ்வளவோ தப்பு பண்ணினாலும் இதுவரைக்கும் ஒருத்தர் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்த்து இல்லை” என்று முன்னால் அமைச்சரின் வீர பிராதபங்களை அடுக்கி கொண்டு போக,

“இதுக்கு முன்னாடி அவர்கிட்ட அசிஸ்டன்டா இருந்திங்களா?” என இளா அவரை பார்த்துக் கேள்வி கேட்க,

“இல்ல இல்ல சார்” என்று அவன் எதற்கு அப்படி கேட்கிறான் என்று புரியாமல் வேகமாக தனது மறுப்பை சொல்ல,

“இல்லைல அப்போ போங்க போய் வந்தவர்கிட்ட கம்ப்ளைன்ட் எழுதி வாங்குங்க” என்று சொல்ல, அவர் திரும்ப செல்லும் முன் அழைத்தவன் அப்படியே உங்க எக்ஸ்.மினிஸ்டரை வர சொல்லுங்க என்றுவிட அவரும் தன் உயர் அதிகாரியின் சொல்லிக்கு கட்டுப்பட்டு சென்றுவிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த சஜன் நேற்று வினோத் தந்த ஃபைலை சரிபார்க்காமல் விட்டது நியாபகம் வர, தனது பேக்கில் தேட அங்கு இல்லாமல் போகவே “ஒருவேளை ஆபிஸ்ல இருந்து கொண்டு வந்த மற்ற ஃபைலோட சேர்த்து வச்சுட்டேனோ” என்று நினைத்தபடி, தனது அறையில் இருந்த கஃப்போர்டை திறக்க அது அனைத்தும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது.  

அதிலும் தான் தேடியது கிடைக்காமல் போகவே அப்போது அந்த பக்கமாக வந்த தியாவிடம், “இதை அரேஞ்ச் பண்ணது யாரு” என்று கேட்க,

“போர் அடிச்சுது சரி சும்மா இருக்கோமேனு நான் தான் பண்ணினேன்” என்று சொல்ல,

ஏற்கனவே ஃபைல் கிடைக்காத கடுப்பில் இருந்தவன் “ சும்மா இருக்க முடியலைனா எங்கேயாவது போ அதை விட்டு உனக்கு சம்மந்தமில்லாத என் ஃபைல் ராக் ஏன் டச் பண்ற ம்ம்ம். இப்போ முக்கியமான ஃபைலை காணோம்”அவனது கடுமை அவளை கலங்க செய்ய “இல்லை அது வந்து..”

“ஜஸ்ட் ஸ்டாப் இட் உன்னோட வந்து போய் கதையை கேட்க எனக்கு  நேரமில்லை அது எவ்வளவு முக்கியம்னு தெரியுமா? அனுமதி இல்லாம எதையும் பண்றது இது தான் கடைசியா இருக்கணும் மைன்ட் இட்” என அவள் சொல்ல வருவதை கூட கேட்காமல் பொரிந்து தள்ள, தியாவிற்க்கு அழுகையே வந்துவிட்டது.

அவள் விசும்புவதை கண்டவன் மேலும் எரிச்சலடைந்து “ எப்போ பாரு அழுது ட்ராமா பண்ணிக்கிட்டு ரெடிகுலஸ் “ என்றவன் அவளை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான். இருந்த கோபத்தில் அவளை கல்லூரிக்கு அழைத்து செல்வதை கூட மறந்து சென்றுவிட்டான்.

பாதியிலேயே இறங்கி கொண்டாலும் அந்த ஐந்து நிமிட பயணத்தை இன்று ரசிக்க முடியாது போன தன் நிலையை எண்ணி வருந்தியவளின் முகத்தில் அருளே இல்லை.தன் நிலையை நொந்து கொண்டவாறு கல்லூரிக்கு கிளம்பினாள்.

அலுவலகம் சென்று தன் அறையில் இருந்த கப்போர்டில் தேட ஃபைல் தான் கிடைத்த பாடாக இல்லை.”எங்க போச்சு “ என்று தன் நெற்றியை தேய்த்துக் கொண்டவன் ஆழ மூச்செடுத்து யோசித்து பார்க்க ஒன்றும் புலப்படவில்லை.

உடனே இன்டர்காம் எடுத்தவன் “ வினோத் கொஞ்சம் உடனே என் கேபினுக்கு வா” என்று வைத்துவிட,

“கடவுளே இன்னைக்கு என்ன பூதம் வெளிய வர காத்திக்கிட்டு இருக்கோ” என்று முனகியபடி சஜனின் அறைக்கு சென்றான்.

“எஸ் சார்” என்று கேட்க, “ நேற்று அந்த **** ஃபைல் என்கிட்ட குடுத்தல அது மிஸ் ஆகிடுச்சு” என்று சொல்ல,

“என்ன சொல்றாரு இவரு” என்று நினைத்தவன் “சார்  எப்படி மிஸ் ஆச்சு அது” என்று சொல்ல தொடர்ந்தவனை இடையில் நிறுத்தியவன்,

“ஹே இடியட் எப்படி மிஸ் ஆச்சுனு தெரிஞ்சா இந்நேரம் நான் கண்டுபிடிச்சுருக்க மாட்டேனா” என்று பொரிய,

எல்லாம் எந்நேரம் சொல்ல வர்றதை முழுசா கேட்காம திட்டுறார் அது சரி முதலாளி முயலுக்கு மூன்று கால்னு சொன்னாலும் ஆமா மூன்றாவது கால் அழகா இருக்கும்னு சொல்லி தான் ஆகணும் என்று முணு முணுத்துக் கொண்டவன் “அது இல்ல சார் அந்த ஃபைல் என்கிட்ட தான் இருக்கு”

“என்னது உங்கிட்ட இருக்கா? நீ நேற்று என்கிட்ட தான கொடுத்த அது உங்கிட்ட எப்படி வந்தது” என்று கேட்க,

இவருக்கு என்ன செலெக்டிவ் அம்னீஷியாவா அந்த ஃபைல்ல மிஸ்டேக் இருக்குனு நேற்று அந்த காச்சு காச்சிட்டு இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்குறாரே? வினோத் நீ பாவம்டா அவ்வ்வ்வ்வ் என்றுவிட்டு “சார் அதுல சேஞ்சஸ் பண்ணணும்னு சொன்னதால நான் அதை உங்ககிட்ட இருந்து திருப்பி எடுத்துக்கிட்டேன்” என்று சொன்னது தான் தாமதம்,

“ஏ மேன் அதை சொல்ல மாட்டியா? உன்னால காலையில இருந்து எனக்கு டென்சன் எனக்குனு வந்து சேர்றிங்க பாரு அந்த ஃபைல் இன்னும் ஐந்து நிமிஷத்துல என் டேபிள்ல இருக்கணும் கெட் அவுட்” என்று கத்த, விட்டா போதும்டா சாமி என்று நினைப்பில் ஓடியே விட்டான் வினோத்.

இது தெரியாம இல்லாத ஃபைலை தேடி அவகிட்ட வேற கத்திட்டேனே” என்று நினைத்த நொடி அவளது அழுத முகம் கண்முன் விரிய, “இப்போ வர வர ரொம்ப கோபம் வருதுடா உனக்கு” என தன்னை தானே கடிந்து கொண்டவனுக்கு அவளை இன்று கல்லூரிக்கு விடாதது நியாபகம் வர, அவனது மனசாட்சியோ “ஏன்டா டேய் காலேஜ்லயா விடுவ பக்கத்து பஸ் ஸ்டாப்ல விடுறதுக்கு இவ்வளோ பில்டப்பா” என கேலி செய்ய, அதை ஒதுக்கி தள்ளியவனாய்,

அவளது மொபைலுக்கு கால் செய்ய முதல் ரிங்கிலேயே எடுக்கப்பட “ஹலோ நான் சஜன் பேசுறேன்” என்று சொல்ல,

“ம்ம் சொல்லுங்க” என்று பதில் வந்ததும் “ஈவினிங் வெயிட் பண்ணு நான் உன்னை பிக் பண்ணிக்குறேன்” என்று சொல்ல,

“ம்ம் சரி” என்று அவள் சொன்னதும் “காலையில நடந்ததுக்கு சாரி” என்று வைத்துவிட்டான்.

சஜனிடம் ஒற்றை வார்த்தையில் ஒத்துக் கொண்டாலும் மனமோ டப்பாங் குத்து ஆடிக் கொண்டிருந்தது. எப்போதடா மாலை வரும் என காத்திருக்க தொடங்கினாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கல்லூரியில் நுழைந்த அனுவின் மனம் அருணை தான் தேடியது. என்ன தான் நேற்று அவனிடம் சற்று கோபத்திலும் வருத்தத்திலும் பேசியிருந்தாலும் அவனின் நினைவுகளோ தோண்ட தோண்ட நீர் ஊரும் ஊற்று போல அடி மனதில் பொங்கி கொண்டிருந்தது.

இன்று கால அட்டவணைப்படி அருண் எடுக்கும் வகுப்பு அதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தான்.

அடர் பச்சை நிற முழுக்கை சட்டையும் மணல் நிற கால் சட்டையும் அணிந்து ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் கண்களில் பவர் கிளாசுடன் இருந்தவனின் வயது முப்பத்தைந்திற்க்குள் இருந்தாலும் இருபத்து ஐந்தை தாண்டி மதிக்க முடியாத தோற்றத்துடன் இருந்தான் டாக்டர்.ரிஷி.

அருணை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவளுக்கு புதியவனின் வருகை எரிச்சலை தர,”இந்த நெடுங்கொக்கை யாரு கூப்பிட்டா” என மனதிற்குள் வசை பாடியவள் வகுப்பை கவனிக்காமல் ஏதேதோ யோசனைகளில் உழன்று கொண்டிருந்தாள்.

அவளின் கவனம் இங்கு இல்லை என்பதை கவனித்து விட்டவன் “ஹேய் யூ ப்ளூ சுடி” என்று சொல்ல,

யாரை சொல்கிறான் என அனைவரும் தங்களது உடைகளை ஒரு முறை பார்த்துக் கொள்ள, அப்போதும் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்காமல் அமைதியாய் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் தோளை தட்டிய அவளது தோழி ஜெனி “ஹே அனன் உன்னை தான்டி கூப்பிடுறாங்க” என்று சொல்ல,

என்னையவா? என்ற கேள்வியோடு எழுந்து அவனை காண “கம் ஹியர்” என்றதும் முன்னே சென்றவளை “கெட் அவுட்” என்று சொல்ல, திரு திரு என முழித்துக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தவளை “டோன்ட் யூ ஹியர் மீ ஐ சே கெட் அவுட் ரைட் நவ்” என்று கிட்டதட்ட கர்ஜித்தவனை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவள் சத்தமில்லாமல் வெளியேறினாள்.

வகுப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் அங்கேயே நின்று வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் முன்னால் சென்று நின்றவன் “ வேடிக்கை நல்லா பார்க்குற அதுக்கு தான் வீட்டுல இருந்து கிளம்பி வர்றியா? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க ஹம்ம் படிப்புல கவனம் இல்லை இதுல மேக்கப் போட்டுகிட்டு ஏதோ நாடகத்துல நடிக்க போற மாதிரி கிளம்பி வந்திர வேண்டியது இரிட்டேட்டிங் இடியட்” என்று திட்டிவிட,

கண்களில் நீர் திரள அமைதியாய் நின்று கொண்டிருந்தவளை அங்கு வந்த அருண் கவனித்துவிட, “எதுக்கு கிளாஸ்க்கு வெளிய நின்னு அழுதுட்டு இருக்கா” என்று நினைத்தவன் அவள் அருகில் வந்து “என்ன ஆச்சு” என்று தன்னை மறந்து கேட்டுவிட அதன் பின் தான் நியாபகம் வந்தவனாய் அங்கிருந்து வேகமாய் நகன்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அலுவலகத்திலிருந்து வீட்டிற்க்கு கிளம்பி பாதி தூரம் வந்து கொண்டிருந்த போது தான் இன்று தியாவை வெயிட் செய்ய சொல்லியது நியாபகம் வர, “ஷிட் எப்படி மறந்தேன்” என்று நினைத்தவன் யூ டேர்ன் எடுத்து வண்டியை திருப்பிய நேரம் மணியை பார்க்க நேரம் ஏழை கடந்திருந்தது.

“ச்ச இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பா” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவன் நேராக வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

வீட்டிற்க்கு நுழைந்ததும் சிவப்பிரகாசம் “சஜன் ஏன் இவ்வளோ லேட் வெளிய போறதா இருந்தா ஒரு போன் பண்ணி சொல்ல கூடாதா”

“வந்ததும் வராததுமா உங்க என்க்வரியை ஆரம்பிச்சுட்டீங்களா? “ என்று கேட்க,

அவரோ அவன் பின்னால் பார்த்துவிட்டு “தியா எங்கடா” என்று கேட்க, நெற்றியில் புருவ முடிச்சுகள் விழ “அவ இன்னும் வரலையா?” என்றான்.

“என்னடா நான் உங்கிட்ட கேட்டா நீ திருப்பி என்கிட்ட கேட்குற உங்ககூட இருப்பானு நான் நினைச்சுட்டு இருக்கேன். அப்போதிருந்து உங்களுக்கு போன் பண்றேன். உன்னோடது நாட் ரீச்சபில்னு வந்திச்சு அவளோட்து ஸ்விட்ச் ஆப்னு வருது” என்று அவர் அடுத்து சொல்ல வந்ததை கேட்க சஜன் அங்கு இல்லை.

வண்டியை காலேஜ் நோக்கி செலுத்தியவன் அங்கிருந்த வாட்ச்மேனிடம் கேட்க எல்லோரும் போயிட்டாங்களே சார் என்று சொல்லிவிட,

“எங்க போயிருப்பா? அவங்க அப்பா வீட்டுக்கு போயிருப்பாளோ” என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் தாமோதரனிடம் இருந்து அழைப்பு வர ஹப்பா அங்க தான் இருக்கா போல என்று நிம்மதி அடைந்தவன் “ஹலோ அங்கிள் எப்படி இருக்கீங்க” என்று கேட்க,

“நான் நல்லா இருக்கேன் தம்பி அப்பா அம்மா தியா எல்லாரும் எப்படி இருக்காங்க” என்று நலம் விசாரித்தவர் “இந்த தியா பொண்ணு போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்ககா அதான் உங்களை தொந்திரவு பண்ணிட்டேன்” என்று சொல்ல,

“அப்போ அங்கேயும் போகலையா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் “அங்கிள் நான் ட்ரைவிங்ல இருக்கேன் வீட்டுக்கு போயிட்டு அவளை பேச சொல்றேன்” என்று வைத்துவிட்டு,

“ஒருவேளை வீட்டுக்கு போயிருந்தாலும் போயிருப்பா” என்று நினைத்தவன் வீட்டிற்கு போன் செய்து கன்பார்ம் செய்து கொள்ள,

கயல்விழி “தியாவை பார்த்துட்டியா” என்று கேட்க, நொந்து போனான் சஜன்.

எல்லாரும் தவிக்குறாங்க எங்க போய் தொலைஞ்சா? இப்போ எனக்கிருக்க கோபத்துக்கு கையில கிடைச்சா என்ன செய்வேனு எனக்கே தெரியாது” என்று முனகி கொண்டிருந்தவனின் மனதில் அப்போது தான் காலையில் எங்கேயாவது போய் தொலை என்று திட்டியது நியாபகம் வர ஏதும் தப்பான முடிவு எடுத்திருப்பாளோ என்று யோசிக்க, மனமோ படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிருக்கடா நீ” என குரல் கொடுக்க,

“இவளை எங்கேனு போய் தேடுறது” என முணு முணுத்தவன் வாட்ச்மேனிடம் “சார் கொஞ்சம் உள்ளே போய் செக் பண்ணிக்கட்டுமா?” என்று அனுமதி வாங்கிவிட்டு,

ஒவ்வொரு பிளாக், ரெஸ்ட் ரூம் என தேடி கலைத்தவன் கிரவுண்ட் பக்கம் இருந்த மரத்தின் அடியில் அமர தனக்கு பின்னால் ஏதோ முனகல் சத்தம் வர சட்டென்று எழுந்து மரத்திற்கு பின்னால் செல்ல அங்கு தியா அமர்ந்து தூங்கி கொண்டிருந்தாள்.

கோபத்தில் சிவந்தவன் அவளை பிடித்து உலுக்க, அவளோ “சஜன் சஜன்” முனக அதை கண்டு கொள்ளாதவனாய், மேலும் அவள் கைகளை பிடித்து இழுக்க அதில் திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க தன் முன் சஜன் நிற்பதை கண்டவள் “வந்துட்டீங்களா” என்று புன்னகைக்க,

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் வர லேட் ஆனா வீட்டுக்கு போக தெரியாதா? ம்ம் அங்க எல்லோரும் உன்னை காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க நீ இங்க சொகுசா தூங்கிட்டு இருக்க? உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?”

“இல்லை வந்து நீங்க” என்று இழுக்க, “முதல்ல இந்த வந்து போய்னு இழுக்குறதை விடு கடுப்பா இருக்கு. உன்னை தேடி எங்கெல்லாம் அலைஞ்சுட்டு வர்றேன் தெரியுமா?” என்று சிடு சிடுக்க,

“நீங்க வந்து கூப்பிடுறேனு சொன்னதால காத்திக்கிட்டு இருந்தேன் எப்படி தூங்கினேனு தெரியலை” என தப்பு செய்த சிறு குழந்தையை போன்று இருந்த அவளது முகம் கண்டு இளகியவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்க,

“ஐ ம் சாரி” என்று கண்ணிலிருந்து நீர் வழிய சொல்லிய மறு நொடி அவளை அணைத்திருந்தான் சஜன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காவல் நிலையத்தில் நடந்ததை நினைத்து கோபத்தோடு வீட்டிற்க்கு வந்த இளா தனது அறைக்கு செல்ல,அங்கு பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தனுவை கண்டதும் இருந்த கோபமெல்லாம் துணி வைத்து துடைத்தாற் போல் இருந்த இடம் தெரியாமல் போனது.

வெகு நாட்களுக்கு பிறகு புடவையில் கண்டவன் அவளின் அழகை கண்களால் பருகியவாறு அவள் அருகில் சென்று பின்னால் இருந்து இடையோடு சேர்த்து அணைக்க, முதலில் திடுக்கிட்டவளின் உடல் பின் இறுக தொடங்கியது.

அதை உணராது அவள் தோள்களில் தன் முகத்தை வைத்தவன் அவளது காது மடல்களை உரசியபடி “சின்னு ஐ லவ் யூ சோ மச்” என்றவனின் உதடுகள் கழுத்து வளைவில் புதைய, மேலும் இறுகினாள். அவளது மாற்றத்தை அப்போது தான் உணர்ந்து கொண்டவனின் மனம் அவளின் இறுக்கத்தை கண்டு வேதனை அடைய அவளிடம் இருந்து விலகி செல்ல முற்படும் போது,

அவன் கை பிடித்து தடுக்க ஒரு நிமிடம் மகிழ்ந்தவனாய் அவள் புறம் திரும்ப, “ஏன் விலகி போற இதுக்கு தான அலையுற அப்புறம் எதுக்கு இந்த விலகல் நாடகம்?” என்று கேட்ட அடுத்த நொடி இளா அவளை அறைந்திருந்தான்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement