Advertisement

 

                           நினைவுகள் 3

 

ராமாகிருஷ்ணன் தங்கம் ,கற்பகம் வீட்டிருக்கு வந்திருந்தார்.

தங்கம் “வாங்க வாங்க கிருஷ்ணன் எப்படி இருக்கேங்க தங்கச்சி,வசு,தம்பி, எப்படி இருகாங்க”.என்று அனைவரைபற்றியும் நலம் விசாரித்தார்.

ராமாகிருஷ்ணன் “எல்லோரும் நல்லா இருக்காங்க நீங்க எப்படி இருக்கேங்க,எங்க தங்கச்சியும் ,மலரும் வீட்ல இல்லையா”.என்று கேட்டார்.

தங்கம் “உங்க தங்கையும்,மலரும் கோவிலுக்கு போய்இருக்காங்க இப்போ வந்துடுவாங்க”என்றார்.

கிருஷ்ணன் “உங்ககிட்ட ஒன்னுகேக்கனும் தங்கம்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

தங்கம் “சொல்லுங்க கிருஷ்ணன்”

கிருஷ்ணன் “உங்க பொண்ணு மலர்விழி அஹ என் பையனுக்கு கொடுபேங்களா தங்கம்”என்று நேரடியாக கேட்டார்.

தங்கம் ஒருநொடி திகைத்து போன்னார்.

தங்கம் “என்ன சொல்லுறேங்க கிருஷ்ணன் என் பொண்ண,உங்க பையனுக்கா”என்று அதிர்ந்தார்.

கிருஷ்ணன் “உங்ககிட்ட வெளிப்படையாவே சொல்லுறேன் தங்கம், என் பையன் உங்க பொண்ண அஹ விரும்புறான், ஆனா இதுவரைக்கும் அவன், என்கிட்டயும், உங்க பொண்ணுகிட்டையும் சொல்லாமல் அவன் மனசுக்குள்ளேயே வச்சுகிட்டான்.ஆனா எனக்கு ரெண்டுநாள் முன்னாடிதான் தெரிஞ்சது”.என்று தங்கத்திடம் அவனின் காதலை கூறிமுடித்தார்.

தங்கம் “எங்களுக்கு குழந்தையில்லைனு,போகாத கோவில் இல்லை, ஏறாத ஹோஸ்பிட்டல் இல்லை,உங்ககிட்ட என் பிரச்சனைய சொல்லி எவ்வளோ நாள் நான் வருத்தப்பட்டுஇருக்கேன்,நீங்க, நல்ல ஹோஷ்பிடல்ல அஹ என் மனைவிக்கு மருத்துவம் பார்க்கவச்சு இப்போ எனக்கு ஒரு குழந்தை இருக்குனா அதுக்கு நீங்க செய்த உதவிதான் கிருஷ்ணன்” என்று கண்ணீருடன் கூறினார்.

கிருஷ்ணன் “எனக்கு ஒரு தங்கை இருந்தா செய்யமாட்டேனா, கற்பகமும் எனக்கு ஒரு தங்கைதான் அதை புரிஞ்சுகோங்க”என்றார்.

தங்கம் “ஆமா சம்மந்தி இனிமே சொல்லமாட்டேன்,”என்று இந்த கல்யாணத்திருக்கு எனக்கு சம்மதம் நேரடியாக கூறினார்.

கிருஷ்ணன் “மலர்கிட்டையும்,தங்கச்சிகிட்டயும் ஒரு வார்த்தை கேளுங்க சம்மந்தி”என்றார்.

அப்பொழுது “என்ன அண்ணா நீங்க உங்கவீட்டு பொண்ண கூட்டிட்டு போக எங்ககிட்ட சம்மதம் கேக்குறேங்க”என்றபடி கற்பகமும்,மலரும், வந்தனர்.

கிருஷ்ணனும்,தங்கமும் திடுக்கிட்டனர்.

கற்பகம் “மலரு போய் உன் மாமானாருக்கு நல்லா ஸாட்ராங்கா காபி போட்டு வா”என்று மலரை உள்ளே அனுப்பிவைத்தார்.

கற்பகம் “அண்ணா நீங்க என் கூடபிறந்த பிறப்பாதான் நினைக்குறேன்,நீங்கதான் என் குடும்பம் தழைக்க காரணமே,அதுக்கு உங்களுக்கு நாங்க ரொம்ப கடமைபட்டிருக்கோம் அண்ணா, தாராளமாக என் பொண்ண இல்லஇல்ல,உங்க வீட்டு பொண்ண கூட்டிட்டு போங்க,ஏங்க நான் சொல்லுறது சரிதானா”என்று கிருஷ்ணனிடம் ஆரம்பித்து கணவரிடம் முடித்தார்.

தங்கம் “நீ சொல்லுறதும் சரிதான் கற்பகம்”என்று மனைவியின் சொல்லைஆதரித்தார்.

கிருஷ்ணன் “நீங்க எல்லாம் ஒத்துகிட்டேங்க,ஆனா மலர்கிட்டயும் ஒரு வார்த்தை கேளுங்க சம்மந்தி”என்றார்.

தங்கம் “எங்க வளர்ப்பு தப்பாகாது சம்மந்தி, என் பொண்ணு எங்க பேச்சைதான் கேட்பா”என்று பெருமையுடன் கூறினார்.

கற்பகம் “அண்ணா உங்களுக்கு இப்போ மலர் சம்மதம் வேணும் அவ்ளோவுதான,இருங்க”என்று மலரை அழைத்தார்.

“மலரு,கண்ணு மலரு இங்க வாடா”என்று கற்பகம் அழைத்தார்

தங்கமும்,கற்பகமும் ஒரு சேர மலரிடம் இலக்கியனை மணம்முடிக்க சம்மதம் கேட்டனர்.

கிருஷ்ணன் “மலர், என் பையன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா மா” என்று அவர் பங்குக்கு கேட்டார்.

மலர் “எனக்கு சம்மதம் மாமா” என்று கிருஷ்ணனிடம் கூறினால்.

கற்பகம் “பாருங்க அண்ணா உங்ககிட்டயே சம்மதம் சொல்லிட்டா என் பொண்ணு இப்போ சந்தோஷம் தானே” என்று தங்கள் வளர்ப்பில் பெருமை கொண்டனர்.

கிருஷ்ணன் “ரொம்ப சந்தோஷம் சமந்தி,ஒரு முகூர்த்த நாள் பார்த்து பொண்ணு பார்க்க வரோம்” என்று கூறி விடைபெற்றார்.

கற்பகம் “அண்ணா அண்ணிக்கு இதுல சம்மதமா”என்று வினவினார்.

கிருஷ்ணன் “உங்க அண்ணிதான்மா இந்த கல்யாணத்தை பத்தி பேச சொன்னது”என்றார்.

“ரொம்ப சந்தோஷம் அண்ணா” என்றார் கற்பகம்.

“அப்புறம் நான் கிளம்புறேன் சம்மந்தி” என்று மகனின் காதலை நிறைவேறியா மகிழ்ச்சியில் கிருஷ்ணன் கிளம்பினார்.

“ஜானகி ,ஜானகி” என்று அழைத்துக்கொண்டே கிருஷ்ணனன் வீட்டிற்குள் வந்தார்.

ஜானகி “என்னங்க இவ்வளோ சந்தோஷமா வரேங்க,தங்கம் அண்ணா வீட்டுல ஒத்துக்கிட்டங்களா,மலர நம்ம பையனுக்கு கொடுக்க சம்மதம் சொல்லிட்டங்களா”என்று ஆர்வமுடன் கேட்டார்.

கிருஷ்ணன் “ஆமாம் ஜானகி நம்ம பையனுக்கு மலர கொடுக்க சம்மதம் சொல்லிட்டாங்க,இப்போ சந்தோஷமா”என்று மனைவிடம் கூறினார்.

ஜானகி “ரொம்ப சந்தோஷமா இருக்குங்க”என்று ஜானகி மகிழ்ந்தார்.

“சீக்கிரம் ஒரு நல்ல நாள் பாருங்க நாமா போய் பொண்ணுபார்க்க போகலாம்”என்று ஜானகி கிருஷ்ணனிடம் கூறினார்.

“ம்ம் பார்க்கலாம் ஜானகி” என்று மனைவியின் மகிழ்ச்சியில் கலந்துகொண்டார்.

“கிருஷ்ணனும் ,ஜானகியும் சேர்ந்து இலக்கியனிடமும்,வசுவிடமும் கல்யாணத்தை பற்றி கூறினார்கள்”   

“இலக்கியனும் ,வசுவும் முதலில் அதிர்ந்தனர்.”

“பின் வசு சுதாரித்து,வீடே அதிர சிரிக்க ஆரம்பித்தால்”

வசு “பல்லிக்கு பயப்புடுற இந்த ஒல்லிகுச்சிக்கு கல்யாணமா ஓ மை காட்”என்று இலக்கியனை கேலி செய்தால்.

இலக்கியனோ “அத புழுக்கு பயப்புடுற நீ சொல்லக்கூடாது”என்று அவளை வாரினான்.

வசு “இருடா அண்ணா உனக்கு இருக்கு,சோடாபுட்டிகிட்ட சொல்லி உன்னை டார்ச்சர் பண்ணவைக்களா” என்று இலக்கியனிடம் சண்டையிட தொடங்கினால்.

ஜானகி “வசு இனிமே மலர அப்படி சொல்லக்கூடாது” என்று வசுவை அடக்கினார்.

வசு “என்ன உன் மருகளுக்கு சப்போர்ட்டா” என்றாள்.

ஜானகி “மருமக இல்லை என் இன்னொரு பொண்ணு”என்றார்.

வசு “மருமகள் வந்துட்டா என்னை மறந்துடுவேங்க போலவே” என்று ஜானகியிடம் வம்பிழுத்தால்.

கிருஷ்ணன் “என்ன வசுமா உனக்கு மலர் அண்ணியா வரதுக்கு இஸ்டம் இல்லையா”என்றார் கொஞ்சம் பயத்துடன்.

வசு “ என்னப்பா நீங்க,நான் சும்மா அண்ணாவா கிண்டல் பண்ணுனேன்பா,மலர் என் ப்ரிண்ட்,அவள் எனக்கு அண்ணியாவும், நம்ம வீட்டுக்கு மருமகளாவும் வரதுக்கு நாமா தான் கொடுத்து வச்சிருக்கணும்”.என்று மகிழ்ச்சியில் கூறினாள்.

வசு “அண்ணா வாழ்த்துகள்”என்றாள்.

இலக்கியன் “தேங்க்ஸ் வசுமா” என்றான்.

“அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தானர்,இலக்கியனின் திருமணத்தை எதிர்நோக்கி,இலக்கியனோ அவன் காதல் கைகூடியதில் வானத்தில் சிறகில்லாமல் பரந்துகொண்டுஇருந்தான்”.

கற்பகம் “மலரு உனக்கு இலக்கியன் தம்பிய பிடிச்சிருக்கா”என்றார் தன் மகளின் முடிவை தாங்கள் எடுதற்க்காக.

மலர் “என்ன மா, நீங்க என்னசொன்னாலும் நான் செய்யுவேன், கேட்டுப்பேன் அப்புறம் என்னமா இப்படி ஒரு கேள்வி”

கற்பகம் “உன்கிட்ட கேக்காம முடிவை சொல்லிட்டோமும், அதான் மலரு மனசுல வேற எதுவும் இருந்தா சொல்லுமா”

மலர் “என்கிட்டே கேட்டுயிருந்தான் நான் வருத்தப்பட்டு இருப்பேன்மா”என்றுகூறி தாயை கட்டிஅணைத்தாள்.

தங்கம் “நம்ம பொண்ணு கற்பகம் வளர்ப்பு என்னைக்குமே சேடை போகாது”என்று பெருமைகொண்டனர்.

கற்பகம் “ஆமாங்க,அண்ணனும் ,அண்ணியும் மட்டும் இல்லையினா நமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருக்காது”

தங்கம் “ஆமாம் கற்பகம்,நாம எப்பவுமே கிருஷ்ணனுக்கும், ஜானகிக்கும்தான் கடைமைபட்டிருகோம்”என்றார்.

கற்பகம் “மூணு தேதி சொல்லி இருக்காங்க அதுல ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயார்த்தம் வச்சுக்கலாம்ங்க”

தங்கம் “சரி கற்பகம்” என்று மகளின் நிச்சயார்த்தம் விழாவை சிறப்பிக்க தயாராகினர்.

ராதா “தேவ்,இன்னைக்கு ஈவ்னிங் ப்ரீயா இருப்பியா ராஜா” என்று ஆபீஸ்க்கு தயாராகி கீழே வந்த தேவ்விடம் கேட்டார்.

தேவ் “எதுக்கு மா”

ராதா “இன்னைக்கு நீயும்,அப்பாவும்,என்கூடகோவிலுக்கு வரணும் தேவ்” என்று மகனிடம் கூறினார்.

“தேவ் ஒரு நொடி யோசித்தான்”.

ராதா “எனக்கா தேவ் “என்றார்.

தேவ் “சரி மா உங்ககூட கோவிலுக்கு வரேன்” என்று அம்மாவின் ஆசைக்கு சம்மதித்தான்.

ராதா “ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு தேவ்”

தேவ் “ம்ம் சரிமா”

நந்தன் “ராதா நானும் தேவ்கூட ஆபிஸ் கிளம்புறேன்” என்றார்.

ராதா “பார்த்து போயிட்டுவாங்க”என்று வாசல்வரை சென்று மகனையும்,கணவரையும் வழியனுப்பிவைத்தார்.

தேவ் “அருண் இந்த கம்பெனி டீல்லதான் நாம வேணாம் சொல்லிட்டோமே அப்புறம் ஏன் இன்னும் இந்த பைல் அஹ வச்சுஇருக்கேங்க,இந்தாங்க இதை உடனே அனுப்பிவிடுங்க இந்த டீல் நமக்கு வேணாம் அருண்”என்று அருணிடம் கோபமாக கூறினான்.

நந்தன் “ஏன் தேவ் அந்த கம்பெனி டாப் டென்ல இருக்கு, அவங்ககிட்ட நாம டீல் வச்சுகிட்டா நமக்குதான் லாபம் தேவ் ஏன் வேணாம் சொல்லுற” என்று கேட்டார்.

தேவ் “வேணாம் பா அந்த கம்பெனி ப்ரோடேக்ல கலப்படம் பண்ணுறாங்க இனி அந்த கம்பெனியோட டீல் நமக்கு வேணாம்பா” என்று தந்தையிடமும்,அருணிடம் கூறினான்.

அருண் “ஓகே சார் நானே நேருல போய் ரீட்டன் பண்ணிட்டுவரேன் சார்”என்றான்.

தேவ் “ஹ்ம்ம் ஓகே,அருண் ஈவ்னிங் நீங்க என் வீட்டுக்கு வந்துடுங்க அம்மா கோவிலுக்கு போகணும் சொன்னாங்க அதனால நீயும் எங்ககூட வரணும்”என்று அவனையும் அழைத்தான்.

அருண் “சார் குடும்பமா போறேங்க நான் எதுக்கு சார்”என்று தயங்கினான்.

நந்தன் “என்ன அருண்,நீயும் எனக்கு ஒரு பையன்தான் அதனால நீயும் வர சரியா” என்று அன்பு கட்டளையிட்டார்.

அருண் “ஓகே சார் வரேன்” என்று கூறினான்.

தேவ் “அருண் புது ப்ரொஜெக்ட் வந்திருக்கு அதனால இன்டர்வியூ வைக்கணும்,மொத்தம் ஆறு கேண்டிடைஸ் வேணும்,அது என்னனு பாருங்க, கொஞ்சம் சீக்கிரம் இண்டர்வியூ முடிச்சு வேலைய ஆரம்பிக்கணும் அருண் ஓகே”என்றான்.

அருண் “ஓகே சார் டூ டேஸ்ல முடிச்சுடுறேன் சார்”.

தேவ் “ஓகே அருண்”

பின் நந்தன்,தேவ்,அருண்,மூவரும் புது ப்ரோஜெக்ட்டை பற்றி பேசினார்கள்,அதில் என்னமாதிரியான புதுமைகளை செயலாம் என்று விவாதித்தனர்.

நந்தன் “தேவ் நான் கிளம்புறேன்,மறக்காம அருணை கூட்டிட்டு வந்துடு சரியா”என்று கூறிக்கொண்டு கிளம்பினார்.

தேவ் “இருங்க பா நான் ட்ராப் பண்ணுறேன்”

நந்தன் “வேணாம் தேவ் நானே போய்கிறேன்”

நந்தன் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு   ஹோஷ்பிட்டலியிருந்து போன் வந்தது.

“ஹலோ ******* ஹோச்பிட்டல் சார்”

நந்தன் “சொல்லுங்க,என்ன விஷயம்”

“சார்,உங்க ஹெல்த் செக்கப் ரிப்போர்ட் ரெடி சார்,இப்போ டாக்டர் உங்கள பார்க்கணும் சொல்லுறாங்க சார் வரமுடியுமா”என்று செவிலி அறிவித்தார்.

நந்தன் “வரேன் சிஸ்டர்”

“நந்தன் மனதில் என் ஹெல்த் பத்தி ராதவுக்கோ ,தேவக்கோ, தெரியக்கூடாது”

நந்தன் பிரபல ********மருத்துவமனையில் காரை நிறுத்தினார்.

ஒரு செவிலியிடம் தன் வருகையும்,டாக்டர்அஹ பார்க்க அனுமதி கேட்டார்.

செவிலியோ “ஒரு நிமிஷம் சார்” என்று டாக்டரிடம் அனுமதி கேட்டு,பதில் அளித்தார்.

“ஓகே சார், இதோ சார் அஹ வரசொல்லுறேன் சார்” என்று பேசிமுடித்தார்.

“சார் நீங்க போகலாம்”

நந்தன் “மே கமின் டாக்டர்’என்று அனுமதிக்கேட்டு நுழைந்தார்.

“எஸ் கமின்” என்று ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

நந்தன் “நீங்க கிருஷ்ணா தானே என்றார்.

கிருஷ்ணன் “ஆமா,நீ, ஹே நந்து எப்படி இருக்க” என்றி பாலிய நண்பனை உற்சாகமாய் வரவேற்றார்.

“எப்படி இருக்க கிருஷ்ணா,உன் மனைவி ஜானகி எப்படி இருக்கா, உனக்கு பசங்ககூட இருகாங்களா,அவங்க எப்படி இருக்காங்க அவங்க”என்று பேச இடம் கொடுக்காமல் நந்தன் பேசினார்.

கிருஷ்ணன் “மெதுவா நந்து,எல்லாரும் நல்லாஇருக்காங்க,நீ எப்படி இருக்க,ராதா மா எப்படி இருக்காங்க,உன் பசங்க என்ன பண்ணுறாங்க”என்று இருவரும் உலகம் மறந்து, பழைய நினைவுகளை பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது இலக்கியன் உள்ளே நுழைந்தான்.

“சாரி பா பேசன்ட் அஹ பார்த்துட்டு இருகேங்களா”,என்று வந்தான்.

கிருஷ்ணன் “வா இலா,இவன்தான் என் முதல் பையன் இலக்கியன்” என்று நந்தனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

நந்தன் “நல்லா இருக்கியா தம்பி”

இலா “ நல்ல இருக்கேன் அங்கிள்,நீங்க”

நந்தன் “உன் அப்பா பார்த்துட்டேல இனி எனக்கு சந்தோஷம் தான்” என்று மகிழ்ச்சியில் கூறினார்.

கிருஷ்ணன் “எனக்கு ஒரு பொண்ணு இருக்கா நந்து,அவ இப்போதான் படிப்ப முடிச்சா அவளும் அவ பிரிண்ட்சும் சேர்ந்து வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருகாங்க,அப்புறம் உன் வீட்டு முகவரி கொடு நந்து என் பையனுக்கு நிச்சயார்த்தம் வச்சு இருக்கேன் அதுக்கு உன் குடும்பத்தை நானும் ,என் மனைவியும் நேருல வந்து அழைக்கணும்”என்று கூறினார்.

நந்தன் “கண்டிப்பா கிருஷ்ணா,என்று அவரின் விசிடிங் எடுத்து கொடுத்தார்”.

நந்தன் “உன் பொண்ணு இப்போதான் படிப்பு முடிச்சாளா”

கிருஷ்ணன் “ஆமாம் நந்து ஏன் கேக்குற”

நந்தன் “என் கம்பெனி ல வேக்கேன்ட் இருக்கு கிருஷ்ணா உன்கிட்ட  இந்த கம்பெனி அட்ரஸ் தரேன் போகசொல்லு அவங்க பிரிண்ட்சும் இந்த கம்பெனி இண்டர்வ்யூல கலந்துக்க சொல்லு”.என்றார்.

கிருஷ்ணன் “கண்டிப்பா சொல்லுறேன் நந்து”

கிருஷ்ணன் “இலா,முக்கியமான விஷயம் பேசுறது இருந்தா அப்புறம் பேசலாம் சரியா”என்று மகனை வெளியில் அனுப்பினார்.

கிருஷ்ணன் “இது உன் ரிப்போர்ட் அஹ “என்று அவரின் ரிப்போர்ட் எடுத்து காட்டினார்.

நந்து “ஆமம் கிருஷ்ணா,எனக்கு வந்தது 1st அட்டாக்,இது எனக்கு மட்டும்தான் தெரியும்”.

கிருஷ்ணன் “என்ன நந்து இதேமாதிரி இன்னொரு அட்டாக் வந்த உன் உயிருக்கே ஆபத்து”என்று அதிர்ச்சியுடன் சொன்னார்.

நந்து “தெரியும் கிருஷ்ணா”என்று ஆதி முதல் அந்தம் வரை தன் கடந்தகாலங்களை சொல்லிமுடித்தார்.

கிருஷ்ணன் “என்ன சொல்லுற நந்து,தேவ் உயிரோட இல்லையா” என்றார்.

நந்து “ஆமாம் கிருஷ்ணா” என் பையன் இருந்திருந்தா இந்நேரம் அவனுக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்திருப்பேன்”என்று கண்ணீருடன் கூறினார்.

கிருஷ்ணன் “நந்து கண்ட்ரோல் பண்ணிக்கோ,உடம்புக்கு எதுவும் ஆகபோகுது”என்று ஆறுதல் கூறினார்.

நந்து “எனக்கு ஒரு ஆசைதான் கிருஷ்ணா,என் மூத்த பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்,ஆனா அவன் பிடிகுடுக்களா” என்று வருத்தத்தை சொன்னார்.

கிருஷ்ணன் “நந்து எல்லாம் நல்லபடியா நடக்கும் அந்த ஆண்டவன் உனக்கு துணை இருப்பார்”என்றார்.

நந்து “சரி கிருஷ்ணா நான் கிளம்புறேன் இன்னொரு நாள் செக் பண்ணிக்கிறேன்,என் மனைவி கோவிலுக்கு போகணும் சொன்னா இப்போவே நேரம் ஆகிடுச்சு, உங்கிட்ட சொன்னது அந்த கடவுள்கிட்ட சொன்னமாதிரி ஒரு சின்ன ஆறுதால இருக்கு கிருஷ்ணா நான் போயிட்டுவரேன்”என்று கிளம்பினார்.

கிருஷ்ணன் “ம்ம் போயிட்டு வா நந்து நல்லதே நடக்கும்”.

சரண் தன் அலமாரியில் இருக்கும் பைல்ஸ் ,போட்டோ,சட்ரிப்பிகட் முதல் கொண்டு இழுத்துபோட்டு ஒருபொருளை தேடிக்கொண்டு இருந்தான், ஒன்றும் கிடைக்கவில்லை,.

“ச்சே என்ன இது எங்க போச்சு,இங்கதான வச்சு இருந்தேன்.”

“அவன் தேடிக்கொண்டு இருக்கும்பொழுது தேவ்விடம்இருந்து சரணுக்கு போன் வந்தது”

தேவ் “சரண் எங்க இருக்க உன்னை பார்க்கணும் ப்ரீயா இருக்கியா” என்றான்.

சரண் “நெவெர் தேவ் நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் நானே பிரீயாகிட்டு உன்னை வந்து பார்க்குறேன் ஓகே”என்று அவன் சொல்லவருவதை கேட்டகாமல் போனை வைத்தான்.

“மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குணமகளே வா வா” என்று வசுவும் ,கண்ணனும் மலரை கேலிசெய்தனர்,

மலர் “என்ன வசு இப்படி கிண்டல் பண்ணுற” என்று கொஞ்சம் வெட்கம் கொண்டாள்.

வசு “வெட்கம் மட்டும் படாதடி பார்க்க சகிக்கல”

கண்ணன் “ப்பா… மலர் நீ என்னவேனாலும் பண்ணு ஆனா வெட்கம் மட்டும் வேணாம் மலர்” என்று அவன் பங்குக்கு கேலிசெய்தான்.

மலர் “என்னங்கடா கூப்பிட்டுவச்சு கலாய்கிறேன்களா உங்கள” என்று வசுவையும்,கண்ணனையும் அடிக்க துரத்தினால்.

வசுவும் ,கண்ணனும் அந்த park அஹ சுற்றி ஓடினர்.

மூச்சு வாங்கிகொண்டு மூவரும் அமர்ந்தனர், மலர் இதுக்குமேல என்னால ஓடமுடியாது விடுடி என்று வசு அமர்ந்தாள்.

வசு “மலர் நீ எனக்கு அண்ணியா வரதுக்கு நானும் என் குடும்பமும் தான் கொடுத்து வச்சுஇருக்கணும்,என்று கட்டியணைத்து சந்தோசத்தை வெளிபடுத்தினாள்.

கண்ணன் “இலா அண்ணா ரொம்ப நல்லவர் மலர் அவர நல்லா, பார்த்துக்கோ சரியா”.என்று வராத கண்ணீரை துடைத்துதான்.

மலர் “உங்க அண்ணாவ என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிறேன் போதுமா”என்றாள்.

(இப்படியாக அரட்டை அடிதிண்டு இருந்தனர்)

கண்ணன் “மறந்துட்டேன் பாரு மலர் ,வசு,நந்தன் கம்பெனி ல இண்டர்வியூ ஆட்ஸ் பார்த்தேன்,அதுக்கு நாம போகலாமா மலர் நீ வருவியா இல்லை இலா அண்ணாகிட்ட கேக்கணுமா.

வசு “வாவ் சூப்பர் கன்னுகுட்டி எப்போ இண்டர்வ்யூ,கண்டிப்பா அந்த இண்டர்வ்யூல நாம செலக்ட் ஆகணும்.

மலர் “தெரியல கண்ணா அவங்ககிட்ட கேக்கணுமா,என் அம்மா அப்பாகிட்ட கேக்குறேன் கண்ணா”.என்றாள்.

வசு “இண்டர்வ்யூ தான அட்டென் பண்ணபோறோம் மலர் அப்புறம் என்ன அம்மாகிட்டயும்,அப்பாகிட்டயும் சொல்லு ஓகே”

மலர் “சரி டி வாங்க கிளம்பலாம்”

“என்னது கிளம்பலாம மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு ஒழுங்கா ஜிகர்தண்டா வாங்கிதா”என்று மலரை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரென்ட்க்கு அழைத்து சென்றாள்.

மலர் “அடிப்பாவி இதுக்குதான் வாட்ஸ்ப்பல மெசேஜ்க்குமேல மெசேஜ் பண்ணியா,இது இதுதெரியாம நானே வழியவந்து சிக்கிருக்கேனா,ஓ மை காட்”என்று புலம்பிக்கொண்டே அவர்களுடன் சென்றாள்.

ராதா “தேவ் கிளம்பிட்டாய ராஜா” என்று கோவிலுக்கு செல்வதற்காக காத்துக்கொண்டுஇருந்தார்கள்.

தேவ் “இதோ வந்துட்டேன் மா”என்று கீழ் இறங்கிவந்தான்.

ராதா “அருண் வரலைய தேவ்”

தேவ் “இல்லைமா அவனுக்கு முக்கியமான வேலையின்னு சொல்லிட்டு போனா”என்னும் போது தேவ்விருக்கு அருணிடம் இருந்து அழைப்பு அழைப்பு வந்தது.

தேவ் “ஓகே அருண்,நான் அம்மாகிட சொல்லிடுறேன்”என்று அன்னையிடம் அருண் வரமுடியாத காரணத்தை கூறினான்.

ராதா “அந்த பையனும் என்ன பண்ணுவான்,வேலை வேலையின்னு அலையுறான்.”என்றார்.

(பிறகு மூவரும் கோவில்லுக்கு புறப்பட்டனர்.)

“நந்தன்,ராதா,தேவ் மூவரும் சேர்ந்து சாய்பாபாகோவிலுக்கு சென்றனர்”

ஜானகி”வசு வாடி சாய்பாபா கோவிலுக்கு போயிட்டு வராலம்”என்று மகளை அழைத்தார்.

வசு “கோவில் போர் மா, வா ஷாப்பிங் போகலாம்”என்றால்.

ஜானகி “ஏன் டி,நான் கோவிலுக்கு கூப்பிட்ட, நீ ஷாப்பிங் கூப்பிடுற, உன்னை எல்லாம் எவன் கட்டிக்கிட்டு பாடுபடபோரனோ அவன் நிலைமை ரொம்ப கஷ்டம்”என்று வரப்போகும் மருமகனின் நிலையை எண்ணி போலியாக வருத்தம் கொண்டார்.

வாசு “அம்மா என்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு கொடுத்துவச்சுஇருக்கணும்” என்று பதில் பேசினால்.

ஜானகி “அத அப்போ பார்த்துக்கலாம்,இப்போ கிளம்பி வா”என்றார்.

“இவளை கூட்டிட்டு கோவிலுக்கு போறதுக்குள்ள என் பொறுமையா ரொம்ப சோதிக்கிற”என்று பெருமூச்சு விட்டார்.

“சாய்பாபா சந்நிதானத்தில்”

ராதா “குடும்பமா கோவிலுக்கு வரணும் என் ஆசை அதான்,  உன்னையும் ,உன் அப்பாவையும் கூட்டிட்டு வந்தேன்”என்றார்.

தேவ் “சாரி மா, இனிமே வாரத்திருக்கு ஒருமுறை வரலாம்” என்று அன்னையின் ஆசையை இனியாவது அறியவேண்டும் என்று நினைத்துகொண்டான்.

“கோவிலை சுற்றி வந்தபோது எதிரே ஜானகியும்,வசுவும் வந்துகொண்டு இருந்தனர்”

வசு “அம்மா அங்க பிரசாதம் தரங்க இருங்க வாங்கிட்டு வரேன்என்று ஓட்டினால்”

ஜானகி “ஏ வசு இரு டி பிரகாரத்தை சுத்திட்டு வரலாம்”என்று அவளை நிறுத்துவதற்குள் ஓடிவிட்டாள்.

“இவளை ஏன்தான் கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன்னு இருக்கு பிரசாதத்தை பார்த்துடனே வாங்க போயிருவா என்று வசுவை திட்டிக்கொண்டு திரும்ப எதிரே ராதா நின்றுகொண்டு இருந்தார்”

ராதா ஜானகியை பார்த்துவிட்டார்.

ராதா “ஏங்க அங்க வரது ஜானகிதானே”என்று கணவரிடம் காட்டினார்.

நந்தன் “எனக்கு தெரியலையே மா”

ராதா “இருங்க,என்று எதிரே வந்த ஜானகியை நிறுத்தினார்.

ராதா “நீ ஜானகிதான,என்று விசாரித்தார்.

ஜானகி “நீங்க ராதா அண்ணி,எப்படி இருக்கேங்க.என்று சந்தோசத்தில் கையை பற்றினார்.

ராதா “நான் நல்ல இருக்கேன் ஜானகி,நீ எப்படி இருக்க.என்று அவரும் கண்ணீருடன் நலம் விசாரித்தார்.

ராதா “நான் சொன்னேலங்க இது ஜானகினு,பாரு ஜானு உன்னை உன் அண்ணனுக்கு தெரியல,என்று நந்தனிடம் கூறினார்.

ஜானகி “அண்ணா எப்படி இருக்கேங்க,இந்த தம்பி தேவ் தானே,என்று நந்தனின் அருகில் இருக்கும் தேவ் பக்கம் கை நீட்டினார்.

நந்தன் “நான் நல்ல இருக்கேன் ராதா” நீ எப்படி இருக்க,கிருஷ்ணா வந்திருகனா என்று கேட்டார்.

ஜானகி “உங்க நண்பர் ஆச்சே இன்னும் ஹோஷ்பிடல்விட்டு வரல அண்ணா”என்று கூறினார்.

ராதா”ஆமா ஜானு இது என் பையன் தேவ்”

“தேவ் இது ஜானகி என் தோழி” என்று அறிமுகம் செய்துவைத்தார்.

தேவ் “வணக்கம் ஆன்டி எப்படி இருக்கேங்க”கேட்டான்.

ஜானகி “நான் நல்ல இருக்கேன் பா, தேவ் நீ எப்படி இருக்க”

தேவ் “ நல்ல இருக்கேன் ஆன்டி”

அப்பொழுது வசு, கையில் கோவில் பிரசாதம் வைத்துகொண்டு அன்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தால்.

“அம்மா யாருகூட பேசிட்டு இருகாங்க என்று யோசித்துக்கொண்டு வந்தாள்.

“தேவிற்கு ஒரு அழைப்பு வர,அனைவரிடமும் கூறிக்கொண்டு தனியாக போனான்.

வசு “அம்மா இங்க இருக்கீங்களா உங்கள எங்க எல்லாம் தேடுறது” என்று யார் இருக்கிறார்கள் என்று பாராமல் பேசிக்கொண்டு வந்தால்.

ஜானகி “வசு இவங்க ராதா அண்ணி ,நந்தன் அண்ணா, என்று அவர்களை இவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

வசு “வணக்கம் ஆன்டி,அங்கிள்”என்றால்.

ராதா ,நந்தன் “ஜானு உன் பொண்ணா,வணக்கம் வசுமா எப்படி இருக்க” என்று கேட்டார்.

வசு “நல்ல இருக்கேன் ஆன்டி”

இப்படியாக இருதோழிகள் தங்களின் உலகம் மறந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

“அபொழுது தேவ் பேசிவிட்டு தன் தாய் ,தந்தை இருக்குமிடம் நோக்கி வந்துகொண்டு இருந்தான்,அப்போது அவனுக்கு இதயம் முன்பைவிட அதிகமாக துடித்தது”

வசுவிருக்கும் இதயம் துடிக்கஆரம்பித்தது.

தேவ் “என் இதயம் துடிக்குதுனா அப்போ சுகி இங்குதான் இருக்க, எங்க”என்று அவன் தாய்,தந்தை இடத்தை பார்த்தான் அவர்கள் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டுயிருந்தை பார்த்து,அவனின் சுகியை தேடி போனான்.

(டேய் அவ உன் அம்மா அப்பகூட தான் பேசியிட்டு இருக்குறா,)

வசு “எனக்கு ஏன் இன்னைக்கு இதயம் வேகமாக துடிக்குது”என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் நந்தன் ,ராதா இருவரும் விடைபெற்றுகொண்டனர்.

நந்தன்,ராதா “கிளம்பலாம் ராதா,இன்னொரு நாள் வீட்டுக்கு வா ஜானகி இதுதான் என் வீட்டு அட்ரெஸ்”என்று ராதாவும் ஜானகியும் வீட்டு முகவரிகளை மாற்றிகொண்டனர்.

ராதா “போயிட்டு வரேன் வசுமா,நீயும் அம்மாவும் ஒருநாள் வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார்.

வசு “கண்டிப்பா ஆன்டி, பார்த்து போயிட்டுவாங்க அங்கிள்,ஆன்டி” என்று அவளும்,ஜானகியும் விடைபெற்றனர்.

ஜானகி “சரி ராதா அண்ணி போயிட்டு வரோம்,அண்ணா நாங்க வரோம்,தேவ்கிட்ட சொல்லிடுங்க”என்று கிளம்பினர்.

தேவ், எங்கு தேடியும் அவனின் சுகி காணவில்லை,ச்சே இப்பவும் நான் அவளை மிஸ் பண்ணிட்டேன்,என்று மனதை தேற்றிக்கொண்டு அவனின் அன்னையையும் ,தந்தையையும் இருக்குமிடம் வந்தான்.

ராதா “எங்க தேவ் போன,ஜானகி இப்போதான் கிளம்பினா உன்கிட்ட சொல்ல சொன்னா,அப்புறம் அவ பொண்ணும் வந்திருந்தா,அதோ அங்க போறாங்க பாரு” என்று அவனிடம் அவர்கள் போகும் திசையை காண்பித்தார்.

“தேவ் பார்பதற்குள் அவர்கள் சென்றுவிட்டனர்”

தேவ் “எங்க மா”

ராதா “டேய் அவங்க போயிட்டுடாங்க,சரி விடு ஜானகி அட்ரெஸ் இருக்கு இன்னொரு டைம் நாமெல்லாம் அவங்க வீட்டுக்கு போகலாம்”என்றார்.

தேவ் மனதில் “இப்போ உன்னை மிஸ் பண்ணலாம் சுகி ஆனா நம்ம வாழ்க்கைய நாம ரெண்டுபேரும் மிஸ் பண்ணக்கூடாது,சீக்கிரம் என் கண்முன்னாடி வந்துடு சுகி இனியும் நாம சேராம இருந்தா உனக்கு நல்லது இல்லை சுகிமா பிளிஸ் வந்துடு சுகி” என்று கோவிலை விட்டு வெளியேறும் ஒரு நொடி அந்த சாய்பாபா முகத்தை பார்த்து வேண்டிகொண்டான்.

தேவ்விடம் வந்து சுகி சேருவாளா ?????

 

                             உன்நினைவுகள் தொடரும்……..

Advertisement