Advertisement

                நினைவுகள் 21

 

”உனக்கென்ன பைத்தியமா… மீனலோக்‌ஷ்னி நான் தான் சொன்னேல எனக்கு உன் மேல காதல் இல்லைனு ஏன் புரிஞ்சுக்காம இப்படி ஹோட்டல் வரை  வந்திருக்க…, எப்பவும் உன்மேல எனக்கு காதல் வராது மீனலோக்‌ஷ்னி, அப்படியே வந்தாலும் அதை உன்கிட்ட சொல்லவும் மாட்டேன் ஏன்னா எனக்கு என் தம்பிங்க தான் முக்கியம், நீ என் வாழ்க்கையில வந்தா என் தம்பிங்களை நான் இழந்துருவேன்… அதுனால தான் இவ்ளோ வருசம் வரையும் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காம இருக்கேன்… சொன்னா புரிஞ்சுக்கோ மீனலோக்‌ஷ்னி.., எனக்கு என் தம்பிங்க வாழ்க்கை தான் முக்கியம், உன்னைவிட என் தம்பிங்க தான் முக்கியம், இதுக்குமேல என்னை   உண்மையா காதலிக்குறதா இருந்தா உன் அண்ணா,அண்ணி பார்க்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ…, அப்படி நீ செஞ்சா என்னை உண்மையா காதலிக்குறேனு நான் நினைச்சுகிறேன்… சரியா…, குட் பாய்..” அவளிடம் இருந்து தன் காதலை மொத்தமாக மறைத்துகொண்டு சென்றான் வெற்றி.

”என்னங்க நில்லுங்க,” அவனை நிறுத்தி அவன் முன் வந்தால்…, அப்படி என் அண்ணா, அண்ணி பார்க்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணா என் காதல் உண்மையினு நீங்க நம்புவீங்களா…,”அவனின் கண்களை பார்த்துகேட்டால் மீனா.. ‘ஆமாம்’ அவன் தலையசைத்து பதில் சொன்னான்…. “அப்போ சரி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா.,. என் கண்ணை பார்த்து சொல்லுங்க என்மேல விருப்பம் இல்லைனு சொல்லுங்க, என்மேல உங்களுக்கு காதல் இல்லைனு சொல்லுங்க நான் நீங்க சொல்லுறதை கேக்குறேன்” அவனுக்கு பெரிய சோதனை வைத்தாள் மீனலோக்‌ஷ்னி.

‘வெற்றியோ அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், வெற்றி, மீனாவின் மீது கொண்ட காதலாலும், அவளின் அண்ணி கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் அவன், மீனாவை நன்றாக வாழவைக்க முடியுமா??, இல்லை அவளிடம் இப்பொழுதே தன் முழு காதலை சொல்லிவிடலாம, வெற்றி யோசிக்க…., மீனாவின் அண்ணி கடைசியாக சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது… “எங்களால கொடுக்குற சந்தோஷத்தை, அவளுக்கு நீங்க கொடுக்கமுடியாது, அவளோட குழந்தை மனசை நீங்க கொஞ்சமா காயப்படுத்துனாலும், அவளுக்கு கண்ணீர் தான் வரும், ஆனா நாங்க அவள் கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்து பார்த்து இல்லை, அப்படி வளர்த்த பொண்ணு” சர்மிளா கூறியது. “அவளை தன் அருகில் இழுத்து, எந்த விழிகளால் அவனது காதல் உணரப்பட்டதோ, எந்த விழிகளால் அவனது உள்ளத்திலும் இடம் பெற்றாலோ, எந்த விழிகளால் அவனது ஆண்மை உணர்ந்தானோ, அந்த விழிகளை பார்த்து “எனக்கு, உன்மேல காதல் இல்லை மீனலோக்‌ஷ்னி…, உன்மேல விருப்பமும் இல்லை.., இது தான் உண்மை புரிஞ்சுக்கோ..”  அவளிடம் தன் மனதை இப்போவும் மறைத்தான் வெற்றி, பின்னாளில் அவனே அவளுக்கு முழுதாய் மாறப்போகிறான் என அவன் அறியவில்லை, அப்படி அறிந்திருந்தால் இன்றே அவளிடம் தன் காதலை சொல்லிருப்பான்.’

”எதையோ இழந்த உணர்வு அவளுக்கு, சிவா மீனாவிடம், வெற்றியின் காதலை சொன்னவுடன், அவளுக்கு வானத்தில் பறக்காத குறையாக. துள்ளிக் குதித்துகொண்டு வீட்டுக்கு சென்றால்.., அவளின் மகிழ்ச்சியை பார்த்த சுஜாக்குட்டியும் அவளுடன் சேர்ந்து, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது…, அன்று இரவே…, வெற்றிக்கு, அழைத்து பேசினால்.. “முக்கியமான ஃபைலை பார்த்துகொண்டிருந்த வெற்றிக்கு அழைப்பு வந்தது, அதில் புது எண்ணாக இருப்பதை பார்த்த வெற்றி, எடுத்து பேச ஆரம்பித்தான்”…

‘ஹலோ…, வெற்றி பேசுறேன், யார் நீங்க??’

“நான் தான்ங்க…, மீனா..மீனலோக்‌ஷ்னி பேசுறேன்”

‘அவனுக்கோ, கொஞ்சம் அதிர்வாக இருந்தது, அதை மறைத்துகொண்டு, “ சொல்லுங்க.. மீனலோக்‌ஷ்னி..”

‘நீங்க சொன்னீங்கள…, ஒரு நாள் முழுவதும் உங்ககூட இருக்க சொன்னீங்கள.. அதுக்கு நான் ரெடிங்க…, எந்த ஹோட்டல்னு சொல்லுங்க… நான் வரேன்,’ அவள் சொன்னதும், அந்த பக்கம்… வெற்றிக்கு.

“கொஞ்சம், நஞ்சம் அதிர்ச்சி இல்லை, அவன் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தேவிட்டான்…, இவளுக்கு சமமாக பேசினால் அதற்க்கும் மேல இவள் செல்வாள், பொறுமையாக அவளிடம் “சரி,” நாளைக்கு  இந்த ஹோட்டலில் காத்திருப்பதாக அவளிடம் சொல்லிவிட்டு அழைப்பை அணைத்துவிட்டான்.”

‘அவளுக்கோ நாளை அவனிடம் சண்டை போட்டாவது காதலை சொல்ல வைக்கவேண்டும். அவள் கனவுகாண…, இன்று நடந்தது வேறாக இருக்கிறது.., அவனைப்பற்றி சிந்தித்துகொண்டு சாலையின் ஓரமாக நடந்துகொண்டிருந்தாள் மீனா..,’

“வெற்றியின், அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் அந்த நால்வரில்  ஒருவன், இவளையே பின் தொடர்ந்து, அவளை பற்றி கூறினான்,.. இரண்டு நாட்கள் அவளும், வெற்றியும் ஏன் சந்தித்து கொண்டார்கள், அவர்களுக்குள் என்ன நடந்தது என, கோகுல், ராமிடம் சொல்லிகொண்டிருக்க, பாலா மீனாவை பின் தொடர்ந்து செல்வதையும், அவள் இப்பொழுது தனியாக இருப்பதை சொன்னான் பாலா, சபரி, ராமின் பிளனால் ஒரு இடத்தை பார்த்து வைத்தான். அங்கு தான் மீனாவை கடத்தி வைக்க சரியாக இருக்கும் சபரி சொல்ல, மீனாவின் தனிமையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு, மீனாவை கடத்திவிட்டார்கள்….”

‘பாண்டிச்சேரியில் அசோக்கின் தந்தையின் முன் அமர்ந்திருந்தான், வாசுதேவ்.. “உங்களையும் என் அப்பா இடத்தில வச்சு தான் பார்க்குறேன் அங்கில், நான் எதுக்கு இங்க வந்தேனு ஆரம்பம் முதல் இப்போ நடந்தது, நடக்குறதை வரை சொல்லிமுடிச்சுட்டேன் அங்கில்…, தம்பிக்கு, வாசுகிக்கும் எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சுனு அசோக்கு மட்டும் தான் தெரியும் ஏன்னா, அவன் தான் என் தம்பிகூடவே இருந்திருக்கான் அங்கில் சொல்லுங்க அசோக் எங்க இருக்கானு” அசோக்கின் தந்தையின் காலில் விழுகாத குறையாக கெஞ்சிகொண்டிருந்தான்…,’

”நீங்க சொல்லுறது எனக்கு புரியுது தம்பி, ஆன என் மகன் எங்க இருக்கானு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாதுப்பா, ஏன்னா அவன் என்னைவிட்டு பிரிஞ்சு போய் மூனு வருசம் ஆச்சுப்பா, அவன் என்கிட்ட பேசியே பல வருசம் ஆச்சுப்பா, அப்படி இருக்கும் போது, அசோக் பற்றி என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்,” அவர் சொல்ல..

“என்ன சொல்லுறீங்க அங்கில், அசோக், பிரிஞ்சு போயிட்டான, பேசி பல வருசம் ஆச்சா, புரியிரமாதிரி சொல்லுங்க அங்கில்”

‘அசோக் ஒரு நாள் என்கிட்ட வந்து, நான் இந்த ஊருல இருக்க விருப்பம் இல்லைனு சொன்னான், நானும் என்னனு கேட்டேன், ஆனா அவன் பதில் சொல்லாம, அடுத்த நாளே சொல்லாம,கொல்லாம ஊரவிட்டே போயிட்டான், என் மகன்.அன்னைக்கு தான் அசோக் என்கிட்ட பல வருசம் கழிச்சு பேசுனான் தம்பி, அதுகடுத்து அவன் எங்க போனான், எங்க இருக்கானு தெரியாதுப்பா’

“ஏன், அசோக் உங்ககிட்ட பேசுறது இல்லை அங்கில்”

‘என் மனைவி இறந்ததுக்கு நான் தான் காரணம், அவன் நினைக்கிறான்ப்பா, அதுனால தான் அவன் என்கிட்ட பேசுறது இல்லை, ஆனா என் மனைவி இறந்ததுக்கு காரணம் அவளோட மனழுத்தம் தான்…, மனழுத்தம் அதிகமாகி அவளே தற்கொலை பண்ணிக்கிட்டா, என் மனைவி தற்கொலைக்கு நான் தான் காரணம்னு எல்லோர் பேச்சையும் கேட்டு என்மேல உள்ள கோவத்துல அவன் பேசலைப்பா,…’ அவர் விளக்கம் தர…

“சரிங்க அங்கில், அசோக் பற்றி உங்களுக்கு எதாவது தகவல் கிடைச்சா எனக்கு இந்த நம்பர்க்கு போன் பண்ணுங்க நான் கிளம்புறேன்..” அவன் கிளம்பும் போது வாசுதேவுக்கு போன் வந்தது…

‘சொல்லுங்க’

“சார், அசோக் இருக்குற இடத்தை கண்டுபிச்சுட்டொம்..”

‘எங்க இருக்காங்க’

“சார்,பெங்களூர்ல இருக்குறாங்க…,”

‘ஒகே, அப்போ நீங்க அவங்களை உங்க பாதுகாப்புல இருக்கட்டும்,’அவன் சொல்லவருவதை புரிந்துகொண்ட அவர்கள்

“ஒகே சார்”

’மலர்…, இன்னும் ஏன் எழுந்திரிக்காம இருக்க…, கீழ அம்மா,பெரியம்மா எல்லோரும் உன்னை கேக்குறாங்க…, உனக்கு இன்னும் தூக்கம் போகலையா’ இலக்கியன் மலரை, எழுப்பிகொண்டிருந்தான்…

“என்னங்க…, எழுந்தா மயக்கமா இருக்கு, ஏன்னு தெரியலை, நேற்றில் இருந்து தலைசுத்துங்க…, என்னால எழுந்திரிக்க முடியலைங்க….,” மலர், இலக்கியனிடம் முனங்கிகொண்டே சொல்ல…, அவனுக்கு கொஞ்சம் பதற்றமாக அவளிடம் “என்னாச்சுமா…, விழி… என்ன பண்ணுதுடா..” அவளை கேட்க…,  “என்னங்க இது, இப்போ தானே சொன்னேன்,”.. ‘ சரி நான் அம்மா,பெரியம்மாவ கூப்பிடுறேன்… இரும்மா’ அவளைவிட்டு விட்டு கீழே சென்றான்..

‘கீழே சென்றவன், அவன் அன்னையிடமும்,பெரியம்மாவிடமும், மலரின் நிலையைசொல்லி அவர்களை அழைத்து வந்தான்…, “மலர் என்ன பண்ணுதும்மா…, தலைசுத்துறது எப்போ இருந்து இருக்கு, “ யசோ மலரிடம் கேட்க.. “அத்தை, நேத்திருந்த்து இருக்குங்க அத்தை… இப்போ சுத்தமா எழுந்திருக்க முடியல” மலர் சொல்ல… யசோவிற்கும், ஜானகிக்கும் புரிந்துவிட்டது…, யசோ, ஜானகியிடம், கிருஷ்ணனை அழைத்து வரச்சொன்னார்.., அவரும் அழைத்து வந்தார்…

“அம்மா, என்னாச்சும்மா.., அவளுக்கு என்னாச்சும்மா, பெரியம்மா நீங்களாவது சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு, இப்போ எதுக்கு அப்பாவ அழைச்சு வரேங்க… சொல்லுங்கம்ம..” இருவரையும் கேட்டுகேட்டு சோர்ந்துவிட்டான்.. ‘டேய் இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா இரு, அதுகடுத்து உன்கிட்ட சொல்லுறோம்…, அதுவரை இங்க அமைதியா உக்காரு..’ அவனை சோபாவில் அமர்த்திவிட்டு, கிருஷ்ணனை அழைத்துகொண்டு உள்ளே நுழைந்ததனர்..

‘கிருஷ்ணன்.., மலரை முழுதாக பரிசோதித்துவிட்டு உறுதி செய்தார்.., மூவரும் அமைதியாக வெளியே வந்தனர்…, அவர்களின் அமைதியை பார்த்ததும் அவனுக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது… “என்னப்பா ஏன் நீங்களும் அமைதியா இருக்கீங்க…, சொல்லுங்க.. அவளுக்கு என்னாச்சு”

‘நீ அப்பாவாக போற… இலக்கியன்.., உன் மனைவி, அம்மாவாக போறாடா’ கிருஷ்ணன் சொல்ல…, இலக்கியனுக்கு புரிய கொஞ்சம் தாமதமானது…  “என்னப்பா சொல்லுறீங்க…., நான்…, நான்… அப்பா…, அய்யோ.. தள்ளுங்கப்பா,” அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்றான் இலக்கியன்…, மலரை கண்டது, அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது…, வெக்கப்பட்டுகொண்டு மலர் அமர்ந்திருக்க… இலக்கியன் அவள் அருகில் அமர்ந்து “சந்தோஷமா இருக்கேன் விழி, ஒரு பொண்ணு தான் அவளுடைய கணவன முழு ஆண் மகனா இந்த நேரத்துல உணரவைக்கிறா..,அதே மாதிரி  நீயும் என்னை உணர வச்சுட்ட…, தாங்க்ஸ் விழி”.. இலக்கியன் அவளை கட்டியணைத்துக்கொள்ள.., அதற்க்கு பின் நாமா அங்க இருந்தா… நல்லா இருக்காது.

‘மலரின் விசயம் கேட்டு வாசுகி அவளுக்கு வாழ்த்துக்கூறினால்,ராமனும் மலருக்கு ஆசீர்வாதம் செய்தார்.  ஜான்கி, மலரின் தாய்,தந்தைக்கு இந்த விசயத்தை சொன்னார், அவர்களும் மகிழ்ச்சியில் மலரை பார்க்க கிளம்பினர். பின் யசொ, மலரை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும் என இலக்கியனிடம் சொன்னார்.., அவனும், வாசுகியை, மலரின் துணைக்கு அழைத்து வந்தான்.., அவன் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு.. ஆனால் அங்கு வாசுகிக்கு தெரியாத உண்மை அனைத்து அவளுக்கு தெரிந்து போனது கடவுளின் செயலோ…

“எல்லாம் நார்மலா இருக்கு இலக்கியன், உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கு, என்ர்ஜிக்காக பழம்,ட்ரை ப்ருட்ஸ் எடுத்துக்கோங்க…, இனிப்பு அதிகம் சேர்க்கவேண்டாம் மிஸஸ்.இலக்கியன், அடுத்து எப்போ வரனும் எழுதிக்கேன், ரெஸ்ட் எடுக்கனும் ஒரு மூனு மாசத்துக்கு, கடினமான வேலையை செய்யக்கூடாது மலர்.., அப்பறம்.. இலக்கியனுக்கு தெரியாததா.. என்ன இலக்கியன்… அந்த மகப்பேறு மருத்துவர் இலக்கியனை பார்த்து சொல்ல அவனுக்கு புரிந்துவிட்டது, ஆனால் மலருக்கு என்ன சொல்கிறார் இவர்.. புரியாமல் முழித்துகொண்டிருந்தால்”

‘மலரின் துணைக்காக வந்த வாசுகி, இலக்கியனையும், மலரையும் உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தால், அந்த பக்கம் இரு மருத்துவர்கள் தங்களுக்குள் பேசிகொண்டே வந்தபொழுது, ஒரு மருத்துவர் மட்டும் வாசுகியை பார்த்து அவருக்குள் யோசித்துக்கொண்டிருந்தார்.. “இந்த பொண்ணு எங்கயோ பாத்திருக்கேன்…, எங்கே.. என அவர் யோசிக்க…, சட்டென்று அவருக்கு நினைவுக்கு வந்தது…, அவளுக்கு இதயம் கொடுத்த விஷ்ணுவை ஞாயபகம் வந்தது…, அந்த பையனோட மனைவிதான இந்த பொண்ணு, அவர் யோசித்துகொண்டே அவள் அருகில் வந்தார்..,.,

‘வாசுதேவ்வின் நினைவிலேயே இருந்தவள், தன் முன் ஒருவர் நிற்க்கிறார் என அறிந்ததும், நிமிர்ந்து பார்த்தால்…’

“எப்படி இருக்கமா.. நீ..”

‘நான்.. நல்லா இருக்கேன், நீங்க யாரு..உங்களுக்கு எப்படி என்னை தெரியும்’

“அவர் பதில் சொல்வதற்க்குள், அந்த மருத்துவர் அருகில் இருந்த மற்றொரு மருத்துவர்.. “டாக்டர்.. இந்த பொண்ணு, கிருஷ்ணன் டாக்டரோட பொண்ணு,” அவர் சொல்ல..

‘இல்லை, உங்க அப்பா பேரு, ராமன் தானேம்மா’ அந்த மருத்துவர் சொல்ல..

“அவரும் என் அப்பா தான்.., ஏன் கேக்குறேங்க..”

“உன்னை என்னால மறக்க முடியாதும்மா.. அப்படி பட்ட சூழ்நிலையில நான் உன்னை சந்திச்சுயிருக்கேன்மா.., அவர் சொல்லிகொண்டே அவளது நெற்றியிலும், கழுத்திலும் கல்யாணம் ஆனதற்க்கு அடையாளமாய் தாலியும், குங்கும் இருக்க… “உனக்கு கல்யாணம் ஆகிருச்சாம்மா’ அவ்ர் கேட்க..”

“ம்ம்.. எனக்கு கல்யாணம் முடிஞ்சு.., அஞ்சு மாசம் ஆகுது,… நீங்க யாருனு சொல்லலை.., எப்போ நாம சந்திச்சோம்… எனக்கு அப்படி உங்களை பார்த்ததா ஞாயபகம் இல்லை” அவள் யோசித்துகொண்டே பேச..

‘நீ எப்போ ஃப்ரீயா இருப்பேனு சொல்லுமா.., அன்னைக்கு நாமா சந்திச்சு பேசலாம்.. எனக்கு இப்போ வேலை இருக்கும்.., இது என்னோட அட்ரெஸ்ம்மா… மறக்காம என்னை வந்து பாரும்மா…, உன் ஹஸ்பண்ட் யாரும்மா..”

‘ம்ம்… சரி.., நாளைக்கே வரேன் அங்கில்..,, அவரு.. வாசுதேவ் க்ரூப் ஆஃப் கம்பெனியோட எம்.டி அங்கில், இதோ இவங்க தான் என் கணவர்.. அவள் செல்போனில் அவனின் போட்டோவை காட்டினால்…’

“அவருக்கு வாசுதேவ்வின் கம்பெனி என்றதும் கொஞ்சம் புரிந்தது, ஆனால் வாசுகி, வாசுதேவ்வின் போட்டோவை காட்டியதும், அதை அவர் பார்த்ததும் அவருக்கு திகைத்துவிட்டார்…,”

‘இவங்க தான் என் கணவர்.. அங்கில்’ அவள் சொல்லிகொண்டே அவரின் முகத்தை பார்க்க.., அவரோ.. அவளிடம் “ இவன் விஷ்ணு தேவ் ஆச்சே, இவன் இறந்து இரண்டு வருசம் ஆச்சு” அவர் வாயிலிருந்து வார்த்தை வந்துவிட.., அவளுக்கோ…, இல்லை அங்கில் இவரு பேர் வாசுதேவ், நீங்க சொல்லுறது அவரோட தம்பியா இருக்கும்.., வாசுகி சொல்ல.., அப்பொழுது தான் அவருக்கு புரிந்தது…, அதை அவளிடம் சொல்லாமல் தன்னை நாளை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். என் சொல்லிவிட்டு சென்றார்..

“வாசுகிக்கு, அந்த மருத்துவர் வாசுதேவ்வின் போட்டோவை பார்த்து, விஷ்ணு தேவ் என சொன்னதும், அவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.., ராதவிடம் கேட்டபொழுது.., விஷ்ணு இறப்பை பற்றி பாதி சொல்லாமல் விட்டது, அடுத்து வாசுதேவ்விடம் கேட்டப்போது தம்பியின் நினைவால் தானும் கவலைப்படுவதும் அவளுக்கு நினைவு வந்தது…., இன்னொன்றும் வாசுகிக்கு நினைவு வந்தது.. அன்று கடற்கரையில் கலை வந்து “ நீயும் ,அண்ணாவும்” அவள் சொல்வதற்க்குள்.., இடையில் தடுத்தது கதிர் எனவும் ஞாயபகம் வந்தது… அந்த மருத்துவரை பின் தொடர்ந்து போவதற்க்குள் இலக்கியனும்,மலரும் வந்துவிட்டனர்…”

‘போகலாம வாசு… செக்கப் எல்லாம் முடிஞ்சது.. மலரை அழைச்சுட்டு வா நான் கார் ஸ்ட்டார்ட் செஞ்சு வைக்குறேன்..,” இலக்கியன் முன்னே சென்றான்..

“வாசு.., பாப்பா நல்லா இருக்காம், நல்லா சாப்பிட சொன்னாங்க…, மலர் டாட்டர் சொல்லியதை அச்சுப்பிசுங்காமல் வாசுகியிடம் சொல்லிமுடித்தால், ஆனால் வாசுகி கேட்டாலா இல்லையா என்று அவளது முகத்தை பார்க்காமல் பேசிகொண்டே வந்தாள் மலர்…” வாசுகிக்கு எல்லாம் உண்மையும் தெரிந்தால் வாசுதேவ்வுடன் அவளது வாழ்க்கை பயணத்தை தொடர்வாளா ??

‘யாரு நீங்க என்னை எதுக்கு இங்க அழைச்சுட்டு வந்திருக்கேங்க,,,.. பிளீஸ் சொல்லுங்க…,’

“நான் தான் அசோக் உங்களை அழைச்சுட்டு வரசொன்னே,..” அந்த அறையில் நுழைந்துகொண்டு பேசினான் வாசுதேவ்…”

‘அவனை பார்த்த அசோக், “தேவ்” வாய்விட்டு சொல்லிவிட..’

“நான் தேவ் தான், ஆனா நீங்க நினைக்குற விஷ்ணுதேவ் இல்லை, நான் வாசுதேவ், விஷ்ணுதேவ்வோட அண்ணன்” வாசுதேவ் சொல்ல..

‘அசோக்கின் கண்களால், நம்பமுடியவில்லை…, அவன் முன்னால் இருப்பது விஷ்ணுதேவ் போல் தோன்றியது…,

“அசோக், உங்ககிட்ட, எனக்கு முக்கியமான தகவல் வேண்டும், அதுக்கு தான் உங்களை இங்க அழைச்சுட்டு வரச்சொன்னே…,”

“என்ன தகவல்,”

‘தேவ்வுக்கும்,வாசுகிக்கும் எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு, சொல்லுங்க அசோக்’ அவனின் பதிலால் காத்திருந்தான் வாசுதேவ்..

“அசோக்கோ, தேவ்வுக்கும், வாசுகிக்கும், ஆக்ஸிடண்ட் ஆகலை,”

‘சக்தியையும்,ஒரு பொண்ணையும் கொன்னது அந்த நாலு பேரு தான். அவங்க இரண்டு பேரையும் காப்பாத்த வந்த வாசுகியை அடிச்சுப்போட்டாங்க, வாசுகி உயிர் போற நிலையில் தேவ் தான், அவன் இதயத்தை கொடுத்து காப்பாத்துனான் வாசுகியை.. அன்று நடந்த நிகழ்விற்க்கு பயணமானான் அசோக்…’

“தேவ், வாசுகி இருவருக்கும் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்டமா காலேஜ்ல இருக்க பழகிட்டாங்க…., அதிலையும் தேவ், வாசுகிய மறாந்துட்டான இல்லை, மறந்த மாதிரி நடிக்கிறானானு தெரியாமா சக்தி குழம்பிட்டான். அப்போ தான் வாசுகிக்கு ஒரு சீனியர் லவ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சான்… முதல வாசுகி அதை பெரிசா கண்டுகாணாம இருந்தா, ஆன அடுத்து அவன், வாசுகிக்கு கிஃப்ட் வாங்கிட்டு வந்து அவளுக்கு பிரப்போஸ் பண்ணனது வாசுகிக்கு பிடிக்காம இருந்தது.., வாசுகிட்ட அந்த அப்படி நடக்குறானு எங்களுக்கு தெரிஞ்சதும் கண்டிச்சோம், ஆனா அந்த சீனியர் வாசுகி தனியா இருக்கும் போது அதிகமா லவ் டார்ச்சர் கொடுத்தான், ஒரு நாள் வாசுகிட்ட தப்பா பிகேவ் பண்ணும் போது தேவ் தான் அந்த சீனியரை அடிச்சு, புரட்டு எடுத்துட்டான்…, அந்த சீனியரை அடிச்சது பெரிய விசயமா மாறி ஹச்.ஓ.டி, வரை போயிருச்சு.

“எதுக்கு விஷ்ணு, உன்னோட சீனியர அடிச்சுருக்க, இதுக்கு என்ன காரணம் சொல்லு விஷ்ணு” ஆசிரியர் கேட்க.

‘அவன், என்ன பண்ணானு தெரியுமா, சார்.. அவன்… வாசுகிட்ட தப்பா பிகேவ் பண்ணா அதுக்கு தான் அடிச்சேன் சார்..’

“அவன், அப்படி பண்ணிருந்த என்கிட்ட அழைச்சுட்டு வந்திருக்கனும், அது இல்லாம..,தேவையில்லாமா அவனை அடிச்சிருக்க, அப்படி என்ன அந்த பொண்ணுமேல அவ்வளவு காதலா,…, அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்தா உனகென்ன…, அந்த பொண்ணு என்ன உனக்கு பொண்டாட்டியா, சொல்லுப்பா,” அவர் பேச…

‘ஆமாம் என் மனைவி தான்,’  வாசுகியின் பையில் உள்ள தாளியை எடுத்து அனைவரும் கண்மூடி திறப்பதற்க்குள் அருகில் நின்றிருந்த வாசுகியின்  கழுத்தில் தாலிகட்டினான்..,” என்ன சொன்னீங்க என் காதலியானும், பொண்டாட்டியானும் கேட்டீங்கள…, இப்போ பார்த்தீங்களா.., என் மனைவிகிட்ட தப்ப நடந்துக்க பார்த்த இவனை இப்போவே போலீஸ்ல பிடிச்சுகொடுக்கனும், இப்போ நீங்களா, போலீஸ்க்கு போன் போடுறீங்களா இல்லை, ஸ்டூடண்ட் பவர் என்னனு நாங்க காட்டவா..,’ விஷ்ணு.. அங்கிருந்த மாணவர்களை பார்த்து.

“ஃப்ரண்ட்ஸ்.., உங்க தங்க்ச்சிக்கோ, இல்லை, காதலிக்கோ இப்படி பட்ட நிலைமை ஏற்ப்பட்டா, இப்படி தான் வேடிக்கை பார்ப்பேங்களா… சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்… தேவ் கத்தி பேச…,”

‘அங்கிருந்த மாணவர்கள் அனைவரும், “கால் தி போலீஸ், சார்… போலீஸ்க்கு போன் பண்ணுங்க, அந்த சீனியர் மேல நான் கம்ளைண்ட் கொடுக்குறேன் தேவ் அண்ணா.., ஒரு பெண் முன்னே வர…,(மீனலோக்‌ஷ்னி).. அதை பார்த்த மற்றவர்களும்,  நானும், நானும் கம்ப்ளைண்ட் கொடுக்குறேன் தேவ் என அனைவரும் அவன் மீது புகார் கொடுக்க முன் வந்தனர்…’

“இது போதுமா…, சார்.. இப்போ நீங்க…” தேவ் ஆரம்பிக்க, அந்த ஆசிரியர் போலீஸ்க்கு அழைத்தார்…

“போலீஸ் ஆபீஸர் சுந்தரபாண்டி, நேரடியாக அவர்களின் கல்லூரிக்கு வந்து அந்த மாணவன் யார்,யாரிடம் தவறாக நடந்துகொண்டான் என்பதையும், வாசுகியிடமும் அதை வாக்குமூலமாக பெற்றுகொண்டு அந்த சீனியர் மாணவனை கைது செய்து அழைத்து சென்றது…, இதையெல்லாம், குரோதத்துடன் பார்த்துகொண்டே அந்த போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்தான் அவன் கண்ணில்,  பழிவாங்கும் வெறியுடன் தேவ், மற்றும், இரு பெண்களை பார்த்தான்”

‘,சக்தி, அசோக், அனைவரும் வாசுகியை சுற்றி இருந்தனர். ”அசோக், அவ கழுத்துல இருக்குற தாலிய கழட்டிகொடுக்க சொல்லு” விஷ்ணு சொல்ல…, அங்கிருந்தவர்கள் அனைவரும் அவனை அதிர்வுடன் பார்க்க, வாசுகி மட்டும் அவன் அருகில் சென்று, “என் கழுத்துல ஏறின தாலி இரங்கனுமுனா ஒன்னு நீ இறந்து போகனும்,  தாலி கட்டுன நீயே என் கழுத்துல இருந்து எடுக்கனும் இது ரெண்டுல எது நீ செய்யுறேனு சொல்லு அப்போ உன் முன்னாடி நானே நிக்குறேன்.” அசோக் நான் கிளம்புறேன்.

“அவள் சொன்ன வார்த்தை பழிக்கபோவது தெரியாமல், அவனிடம் இப்பொழுதும் கோவப்பட்டுகொண்டு, அவனை பார்க்காமல் சென்றால்.., சக்தியும், அசோக்கும், விஷ்ணுவை பார்க்க, அப்பொழுது தான் விசயம் கேள்விப்பட்டு, சரணும், கதிரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விசயத்தை கூறியதும், சரண் கோவத்துடன், ஏன் தேவ், இப்பவும் அந்த பொண்ணு மனசை காயப்படுத்துற…, கேட்க, விஷ்ணு கோவத்துடன் “ஏன்னா அவ என் அண்ணோட காதலிடா…, அப்படி இருக்கும் போது, எப்படி என்னால கோவப்படமுடியாம இருக்க முடியும், சொல்லு, சரணின் சட்டையை பிடித்து சொன்னான் விஷ்ணு,… “என்ன சொல்லுற தேவ்”

“ஆமா, என் அண்ணா, காதலிக்குற பொண்ணு தான் வாசுகி, அது தெரியாம நான் அவளை காதலிச்சுட்டேன், வாசுகிய என் அண்ணா எவ்வளோவு காதலிக்குறானு தெரியுமா, இங்க பாரு…, வாசுதேவ்வின் கபோர்ட்டில் ப்ரேம் செய்த போட்டோவில், ஒரு கடையில் வாசுகி கிஃபிட் பொருளை எடுப்பது போல் இருந்தது, அதை கலர் போட்டோவை போல் செட் செய்து வைத்திருந்தான் வாசுதேவ், அவன்  ஊருக்கு செல்லும் போது அந்த போட்டோவை மறந்துவிட்டான், ”

‘இந்த போட்டோ எப்படி உனக்கு கிடைச்சது, தேவ்”

“நான் வாசுகிட்ட காதல சொல்ல காலேஜ்க்கு கிளம்பும் போது, என் அப்பா வாசுதேவ் கபோர்ட்ல ஃபைல் இருக்குனு சொல்லி எடுக்க போகும் போதான் அவன் மறைச்சு வச்சுருந்த இந்த போட்டோவ பார்த்தேன், அந்த போட்டோ பின்னாடி, “மை ஃபர்ஸ்ட் லவ் இன் சுகி”னு எழுதி இருந்தது, நான் போய் என் வாசுக்கு துரோகம் பண்ணமுடியாதுனு, வாசுகிய விட்டு விலக ஆரம்பிச்சேன், என் காதலையும் அவகிட்ட இருந்து மறைச்சுட்டேன்…,”

‘உன் அண்ணா புரிஞ்சுபாங்க டா, ஆனா வாசுகிக்கு நீ இல்லைனா, அவ கவலைப்படுவா, தேவ்…, வாசுகிய ஏத்துக்கோடா…” சக்தி, அசோக்,சரண், கதிர் கெஞ்ச…

“வாசுகி இல்லாம நான்கூட இருந்திருவேன், ஆனா வாசுக்கு, வாசுகி இல்லாம இந்த உலகமே இல்லைடா, அவன் முதல் ஆசைப்பட்ட விசயமே வாசுகி தான், அப்படி இருக்க, எப்படி டா நான் வாசுகிய ஏத்துக்க முடியும், அவளுக்கு ஒன்னுனா நான் என்னவேனா செய்வேன், ஆனா வாசு, வசுகிக்கு ஒன்னுனா, அதுக்கு காரணமானவங்களை, ஒருவழி பண்ணிடுவான்,அவளுக்காக உயிர் கொடுக்ககூட தயங்காதவன் என் அண்ணா வாசு… அவன் காதல் பெரிசா, இல்லை என் காதல் பெரிசா சொல்லு” அவர்களிடமே கேட்க. நால்வரும் அமைதியாக இருந்தனர்.

“சரி, உன் அண்ணா காதலுக்காக அவகழுத்துல கட்டுன தாலிய எதுக்கு கேக்குற, இப்படி கேக்குறதுக்கு பதிலா, அவ கழுத்துல அந்த தாலியே கட்டிருக்கவேணாமே, இப்போ அவளை இந்த சூழ்நிலைக்கு கொண்டு வந்தது நீ தான் தேவ்…,” சக்தி குறை கூற…

‘வாசுகி இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும், நான் இதே தான் செஞ்சிருப்பேன், சக்தி…,” அவன் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டான்..

’ஆனா, அடுத்த நாளே, தேவ் அவனோட உயிர் கொடுத்து வாசுகியை காப்பாத்துவானு எங்களுக்கு தெரியாது, அன்னைகு தான் சக்திக்கு கடைசி நாளுனு எனக்கு தெரியாது, அப்படி தெரிஞ்சிருந்தா என் சக்தியையும், வாசுகியையும், பார்க்காம இருந்திருப்பேன்,..”

கிருஷ்ணஜெயந்தி அன்று:

“ஹாய், அசோக் அண்ணா,, சக்தி எங்க உங்ககூட, வரலையா”

’ எனக்கும் அவனுக்கும், காஃபி ஆடர் பண்ணிட்டு இருக்கான், இதோ வாங்கிட்டு வரான்…, ஆமா நீ என்ன இந்தப்பக்கம்,

“இன்னைக்கு, கிருஷ்ணஜெயந்தி, கலையை பார்த்துட்டு, அவளை வீட்டுக்கு வரசொல்லிட்டு வரலானு நினச்சு கிளம்பினேன் ஆனா வர்ர வழியில உங்களை பார்த்தது, அப்படியே இங்க வந்துட்டேன்,  அவள் பேசிகொண்டிருக்கும் போது காஃபியை டேபிளில் வைத்த படி அமர்ந்தான் சக்தி.”

‘ வா, வாசுகி, உனக்கும், காஃபி ஆடர் பண்ணுறேன், இரு… அவன் எழுந்திரிக்க, வேண்டாம், சக்தி… இப்போ கிளம்பிருவேன்…, அப்புறம் என்ன சொன்னாங்க அவங்க, நான் கிளம்பினதுக்கு பின்னாடி, உங்ககிட்ட..”

‘யாரு, தேவ் எதுவும் சொல்லலையே, ஏன் கேக்குற??’

‘சும்மா தான்…, கட்டுன தாலிய அப்படியே இவரு கேட்ட உடனே கொடுத்தா நான் அவர காதலிக்குறது இல்லைனு ஆகாது, அங்கயே ரெண்டு அறை கொடுத்துருப்பேன், நீங்க எல்லாம் இருக்கீங்கனு தான்.., பார்த்தேன்.., அவள் பேசிகொண்டு இருக்கும் போது அவர்களை கடந்து வேகமாக ஒரு ஆம்னி வேன் சென்றது…, அதை பார்த்த வாசுகி.. “இவங்க கார் ஓட்டலைனு யார் அழுதா.. இப்படி வேகமா போறாங்க…”… அவள் சொல்லிகொண்டிருக்க, சக்தி அவனது போனை எடுத்து அவளிடம், காட்டினான்…, அதில் விஷ்ணு தாலி கட்டும் போது எந்த மாணவனோ அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்திருந்தான்… அதை, சக்திக்கு அனுப்பிருந்தான்…, அதை பார்த்த வாசுகி “ எவன் இந்த போட்டோ எடுத்தான் சக்தி,” அவள் கோவப்பட…,

‘ஏன் போட்டோ பிக்ச்சர் நல்லா விழுகலையா,” அவளின் மனநிலை சரியாக குறித்துகொண்டு கேட்டான்…, “ ஆமா., இங்க பாரு நான் அழுத முகமா இருக்கேன் கொஞ்சமாச்சும், பட்டி,டிங்கரிங் பார்த்து மாடுலேஸன் பண்ணிருக்கலாம்..,” அவள் போட்டோகூட ஒழுங்க விழுகவில்லையே என வருத்ததுடன் சொல்ல…’

“அது வாசுகி, அங்க என்ன நடந்துச்சுனா…” அசோக் சொல்ல வருவதை, சக்தி, கண்ணசைவினால்…, வேண்டாம் எனத்தடுத்தான்… “என்ன அசோக் அண்ணா.. என்ன சொல்லவந்தீங்க”.. ‘அதெல்லாம் ஒன்னுமில்லை, வாசுகி, போட்டோ கடையில கொடுத்தா, மாடுலேஸன் செஞ்சு கொடுப்பாங்க… அதை சொல்லவந்தேன்..,  அவன் வேறென்றை சொல்லி பேச்சை மாற்றிவிட்டான்..”

‘சரி.. நான் கிளம்புறேன்.., அம்மா, தேடுவாங்க…,வரேன் சக்தி, வரேன் அசோக் அண்ணா.. “விடைபெற்றுகொண்டு சாலையின் ஓரம் நடந்துகொண்டிருந்தாள்.. பழைய குடோனை கடந்து செல்லும் போது தான் அவளுக்கு ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது…,.. அந்த சத்தம் கேட்டவுடன் அவள் நின்றிவிட்டால்.., அவள் நின்ற பொழுது அந்த சத்தம் கேக்கவில்லை.., மறுபடியும் அவள் நடக்கும் போது மீண்டும் ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது, இப்பொழுது வாசுகி, அந்த குடோவுனை நோக்கி சென்றால்…, அந்த குடோவுன் கதவில் இருந்த துளையின் வழியே…, பார்த்தாள்.. அங்கு ஒரு பெண்ணை கடத்தி, தூணில் கட்டிகொண்டிருந்த ஒருவனை பார்த்தாள்…, வாசுகிக்கு திகைப்பாக இருந்தது, இருந்தும், அந்த பெண்ணை காப்பாற்ற தன் ஒருத்தியால் முடியாது என அடுத்த நிமிடம், சக்திக்கும், அசோக்கும் போன் செய்து அவள் இருக்கும் இடத்திற்க்கு வரசெய்தால்…,’

‘அவர்கள் இருவரும் வந்த பின், நடந்தை சொல்லி, அந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும், சக்தியிடம் சொன்னால்…,  சக்தியும், அசோக்கும், குடோவுனில் உள்ள மாற்று வழியின் மூலம் உள்ளே நுழைந்தார்கள்.., வாசுகி.. விஷ்ணுக்கு போன் செய்தாள்…, அப்பொழுது தான், விஷ்ணு, உடை மாற்றிகொண்டு கீழே, நந்தனிடம் பேசிகொண்டிருந்தான்.., அவரிடம் பேசிகொண்டிருந்த போது தான் வாசுகி அவனை அழைத்து  “விணு, ஒரு பொண்ண, யாரோ கடத்திட்டு வந்திருக்காங்க, அந்த பொண்ண காப்பாத்தனும், நீயும்,” அவனை, அவள் இருக்கும் இடத்திற்க்கு வரச்சொன்னால்.. விஷ்ணுவும், “நான் வரேன்…, எதுவும் தப்பா நடக்காது.. சரியா” அழைப்பை துண்டித்துவிட்டு, நந்தனிடம் சொல்லிவிட்டு வாசுகி இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.’

“வெற்றியிடம் பேசிவிட்டு, தனியாக நடந்து வந்த மீனலோக்‌ஷ்னியை, பார்த்த அந்த நால்வரும், அவள் கண்ணிமைக்கையில் கடத்திவிட்டனர்…, அவளோ பயத்தில் “யாரு நீங்க எதுக்கு என்னை கடத்துனீங்க…, “ அவள் கேட்க… ‘உன்னால என் தம்பி அசிங்கப்பட்டான்,உன் அண்ணனால நான் அசிங்கப்பட்டேன்…, என்ன புரியலையா..” அவர்கள் கல்லூரியில் நடந்ததை சொன்னவன், அதற்க்கு பின், அந்த சீனியர் மாணவனை ஜாமினில் விடுவிக்க கோரி, மனுவுடன் வந்திருந்த ராமையும் சேர்த்து அவமானப்படுத்தியதையும் அவளிடம் சொன்னான்..”

‘தப்பு செஞ்சா, தண்டனை கிடைக்கனும், அது தான் உன் தம்பிக்கு கிடைச்சுருக்கு.., அவள் பேச… “என் தம்பிக்கு மட்டும் தண்டனை கிடைச்சா பத்தாது, உனக்கும் அந்த தண்டனை கிடைக்கனும்” அவளை ஒருமாதிரியாக பார்த்துகொண்டே பேச…, மீனாலோக்‌ஷ்னிக்கு உடலே கூசியது…’

“அந்த நால்வரும், மீனாவை பாடாய் படுத்தி எடுத்தனர்…, சுய நினைவை இழந்த மீனாவை, அந்த குடோவுனில் கட்டிவைத்தனர்.., அவளுக்கோ நிற்க்கும் திரண் இன்றி.., கொஞ்சம் கொஞ்சமாய், நினைவை இழந்தால்…, அந்த நேரத்தில் தான், சக்தியும்,அசோக்கும், அவளை காப்பாற்ற போக, அவர்கள் பார்த்துவிட்ட கோகுல், சக்தியையும் அசோக்கையும், அடிக்க, அதை பார்த்துவிட்ட, வாசுகி அவர்களை காப்பாற்ற போனால்..”

‘அசோக்கின் தலையில்,பாலா அடித்துவிட.., அவன் மயக்க நிலைக்கு சென்றான்..,  சபரி.. சக்தியை சுத்தியல் கொண்டு தலையில் அடிக்க போக, இடையில் வந்து அந்த அடியை வாங்கிகொண்டால்.., அதை பார்த்த சக்தி, சபரியை வெறியுடன் அடிக்க தொடங்கினான்…, அதை பார்த்த ராம்.., சக்தியை கத்தியால் சரமாரியாக குத்தினான்.., தலையில் வாங்கிய அடியை தாங்கிகொண்டு, சக்தியை, காப்பத்த அந்த வலியிலும், அவனை நோக்கி அடியெடுத்து வைக்க…, வாசுகியின், நெஞ்சில் மிகபெரிய சுத்தியலால் அடித்தான் கோகுல்.., அந்த வலியில், வாசுகியின் இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் இழக்க துடங்கியது…, அந்த நேரத்தில் தான், விஷ்ணு, சுந்தரபாண்டியோடு வந்தான்…, அங்கிருந்த காட்சியை பார்த்த சுந்தர்..,, கடத்தப்பட்டிருப்பது தனது தங்கை எனத்தெரிந்ததும்.., அதிர்சியானான்.., விஷ்ணுவோ, வாசுகியின் நிலையை பார்த்து கதறினான்…, தலையில் அடிவாங்கிய அசோக் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டனர் காவலர்கள்…, போலீஸ் சத்தம் கேட்டது, அந்த நால்வரும் தப்பி ஓடிவிட்டனர்..,’

“பின், சக்தி கத்திகுத்தால்.. சம்பவ இடத்திலேயே உயிர்விட்டு இருந்தான், வாசுகியை தூக்கிகொண்டு விஷ்ணு, மருத்துவமனைக்கு சென்றுவிட்டான், அதற்கடுத்து, வாசுகியின் நிலைமை மோசமாக இருப்பத்தானல், தேவ் அவனது இதயத்தை அவளுக்கு கொடுத்தையையும், சக்தியின் இறப்பிற்க்கு வாசுகி தான் காரணம் என்று, வெற்றி நினைப்பதையும், காப்பாற்ற போன அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது மட்டும் எனக்கு தெரியவில்லை, இப்படியெல்லாம் நடக்குனு எங்களுக்கு தெரியாது…, ஆனா விஷ்ணு ஆப்ரேஸன் தியேட்டர்க்குள்ள போகும் போது என்கிட்ட சொன்ன விசயம், எக்காரணத்தைகொண்டும் ”நான்,வாசுகிக்கு உயிர் கொடுக்குற விசயத்தை, யாருக்கும் சொல்லகூடாது.. என்கிட்ட சத்தியம் வாங்கிட்டான்..” அதுக்கு தான் என் அப்பாகிட்ட இருந்து பிரிஞ்சு வந்துட்டேன்.., அவர்கிட்ட பேசியும் பலவருசமாச்சு,  வாசுகினால் தான் சக்தி இறந்தானு அவங்க அண்ணாகிட்ட, சக்தி பின்னாடி அவனை வேவு பார்க்குற ஆளு, அங்க என்ன நடந்தனு தெரியாம, அந்த குடோவுனல வாசுகி இருந்ததுக்கு ஆதாரமா அவளோட போன் இருந்ததை பார்த்து அவங்க, வெற்றிகிட்ட சக்திய கொன்னது வாசுகி தானு சொல்லிட்டாங்க,… எப்படியும் இந்த உண்மை யாருக்கும் தெரிஞ்சாலும், என்னை தேடி வருவாங்கனு தான், நான் பெங்களூர் வந்திட்டேன்.., ஆனா இப்போ தேவ்வோட அண்ணாவே தேடி வருவாங்கனு எனக்கு தெரியாது…” அசோக் சொல்லிமுடிக்கவும், அங்கு வெற்றி அந்த ஃபைலில் படித்தை நினைத்து முடிக்கவும் சரியாக இருந்தது…

”வெற்றி, அந்த நால்வரின் ஆண்மையும் பறித்தான், உயிர்போகும் வலியைவிட அந்த வலி மிகபெரியது என மற்றவர் சொல்ல கேட்டிருக்கும் அவர்களுக்கு இன்று அதே வலியை உணர்ந்தனர்…, அது மட்டும் இல்லாமல், அவர்களின்…,உயிரைகொடிக்கும், கொடிய விசத்தினையும் அவர்களுக்குள் ஊசியின் மூலம் செலுத்தி, அந்த நால்வரையும், வெளியே தூக்கிவீசி சென்றான்…., அவர்களை கொன்ற ஆதாரத்தை அழித்தான் சிவா”

முழு உண்மையை சொல்லிமுடித்த அந்த மருத்துவர்.., அவர் டேபிள் ட்ராவில் வைத்திருந்த.., தாலியை வாசுகியின் முன் காட்டினார்… “அந்த பையனோட இதயத்தை உங்களுக்கு வச்ச பின்னாடி, அந்த பையனோட உடம்ப நாங்க தான் போஸ்ட்மார்டம் செஞ்சோம், அப்போ அந்த பையன் கையில இந்த தாலி இருந்தது.., நான் தான் அந்த தாலியை எடுத்து வச்சிருந்தேன்.., எப்படியும், ஒரு நாள் அந்த பையனை தேடி நீ வருவனு நினைச்சேன், ஆனா.. இந்த மாதிரிசூழ்நிலையில பார்ப்பேனு நான் நினைக்கலம்மா..,”  வாசுக்கிக்கு சொல்லிகொண்டிருந்தார் அந்த மருத்துவர்… ஆனால் வாசுகி.., தனக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை மறந்த நிலையில் தான் வசியிடம் வாழ்ந்துகொண்டிருப்பதை நினைத்து அவளுக்கு உடல் கூசியது…

“இப்போகூட உனக்கு எல்லாம் விசயமும் தெரிஞ்சுருக்கு தான் உன்னை பார்க்க வரச்சொன்னேன் ஆனா…, உனக்கு எந்த விசயமும் தெரியாதுனு எனக்கு தெரியலைம்மா.., நடந்ததை மறந்துட்டும்,உன் ஹஸ்பண்ட்கிட்ட மறைச்சுட்டும் வாழப்பழகிக்கோம்மா.., என் பொண்ணா இருந்தா…, அவளுக்கும் இந்த மாதிரி தான் புரிய வச்சுருப்பேன்.., உன்னையும் என் மகளா தான் பார்க்குறேன்ம்மா… நடந்ததை மறக்க பழகு..” அவர் சொல்லிவிட்டு செல்ல.., வாசுகியோ.., அந்த மருத்துவர் சொன்னதையே நினைத்துகொண்டு…, வாசுதேவ்வின் வீட்டுக்கு சென்றால்..”

’வாசுதேவ்வின் வீட்டுக்கு சென்றதும், விஷ்ணுதேவ்வின் அறைக்கு தான் முதலில் சென்றால்…, அங்கு இருந்த விஷ்ணுவும்,வாசுவும் சேர்ந்து எடுத்த போட்டோவை வெறித்து பார்த்தாள்….,வாசுகி வீட்டுக்கு வந்தது தெரியாமல்.. வாசுதேவ்வின் நான்கு நாட்கள் பயணம் தந்த அழுப்பில், அவன் அறைக்கு செல்லாமல்.. விஷ்ணுவின் அறைக்கு சென்றான்…’

“பயணக்களைப்பில், விஷ்ணுவின் அறைக்கு செல்ல, அங்கு வாசுகி நின்றிருப்பதையும், அவள் கையில் வாசுதேவ்,விஷ்ணுதேவின் இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடத்தை பார்ப்பதை பார்த்த, வாசுதேவ்…, திகைத்து நின்றான்.., அவன் வரும் ஓசையை கூட உணராத நிலையில் அந்த போட்டோவை பார்த்திருந்தாள்.., வாசுகி…, அருகில் சென்று அவளின் தோளில் கை வைத்தது தான் தாமதம்.., வாசுதேவ்வை கட்டிகொண்டு அழுக ஆரம்பித்தால்.. வாசுகி…”

‘என்னை மன்னிச்சுருங்க வசி, விஷ்ணுவோட இழப்புக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்.., அதுவும் இல்லாமா.., உங்களுக்கு நான் இரண்டாவது மனைவியாகிட்டேன்… வசி.., இந்த விசயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.., நான் உங்களை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன்…, என்னால தான் விஷ்ணுவோட உயிர் போச்சு வசி.., உங்க தம்பியை கொன்னது நான் தான்… வசி…, நீங்க என்னை தண்டனை கொடுக்குறேங்களோ அதை நான் ஏத்துகிறேன் வசி..” வாசுகி அழுதுகொண்டே சொன்னவற்றையில் வாசுதேவ்விற்க்கு, எப்படி இவளுக்கு உண்மை தெரிந்தது..,  என நினைத்தான்.. ஆனால் அவள் பேசியதை முழுதும் கேட்டவுடன் தான் பாதி விசயம் தெரிந்திருக்கிறது என புரிந்துகொண்டான்…. மீதி உண்மையை சொல்லாமல் விடுவது நல்லது என அவன் நினைக்க.., “எனக்கு என் கடந்த காலம் வேணாம் வசி… இந்த நிகழ்காலம் நீங்க மட்டும் தான் எனக்கு வேணும்.. வசி…. வாசுகி அவனை கட்டிகொண்டு அழுகுக…’

“வாசுதேவ்வோ…,”.எனக்கு என் தம்பி வேணும் சுகி, அவனை நான் மறுபடியும் உயிரோட பார்க்கனும், சின்ன வயசுல இருந்து அவனை நான் தான் பார்த்து பார்த்து வளர்த்துருக்கேன், அவனுக்கு நான் பாதுக்காப்பா இருந்திருக்கேன்.. அப்பாகிட்ட நான் கோவமா பேசுறப்போ எல்லாம், என்னை சமாதானம் படுத்த எங்க இருந்தாலும் வருவான், ஒவ்வொரு வருசம் கிருஷ்ணஜெயந்திக்கு, அவனுக்கு நான் தான் கிருஷ்ணன் வேசம் போட்டுவிடுவேன், அப்படி பாசமா வளர்த்த என் தம்பி இப்போ உயிரோட இல்லை சுகி, அவனை இழந்த இழப்புக்கு என் அம்மா, அப்பா, துடிச்சதைவிட நான் தான் அதிகமா துடிச்சுருக்கேன்…, அந்த இழப்ப ஈடுசெய்ய, என் தம்பி மறுபடியும் பிறந்து வரனும், அது தான் எனக்கு வேணும், என் தம்பிய கொடுப்பியா சுகி உயிரோட..,, வாசுதேவ் கேட்க..,”

“வாசுகியோ, கண்டிப்பா என்னால முடியும் வசி.., மறுபடியும் உங்க தம்பி இந்த ஜென்மத்துல உயிரோட வருவாரானு தெரியாது, ஆனா என்க்கு குழந்தையா உங்க தம்பி தான் பிறப்பாங்க…, என்னை அம்மானு, வாய் நிறை அழைக்கவும், உங்களை, அப்பானு சொல்லவும், உங்க தம்பி என் குழந்தையா இந்த பூமில ஜனிப்பாங்க.., வசி.., உங்களுக்காக இதைகூட செய்யமாட்டேனா.., வசி..,” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்தால்….”

”மூன்று வருடம் கழித்து”

‘பாப்பாவ நான் தான் குளிக்க வப்பேன் ஆச்சி, அவ என் பொண்டாட்டி.., அவளை நீங்க தொடுறது எனக்கு பிடிக்கலை…,’

“டேய், செல்லம், பாப்பா குட்டி பொண்ணுடா…, அவளை எப்படி நீ குளிக்க வைக்க முடியும், கொடுடா என் செல்லம்ல..,” யசோ, கெஞ்சிகொடிருக்க…

“ஆச்சி, அவ என் பொண்டாட்டி.., நீங்க யாரும் தொடகூடாது,” காலையில் இருந்து அழும்பு செய்துகொண்டிருந்தான்.., வாசுதேவ்,வாசுகியின் புதல்வன் நவநீதகிருஷ்ணதேவ்”

‘டேய் உனக்கு யாருட இப்படி எல்லாம் சொல்லிகொடுத்தது..,’ வாசுகி கேட்க.. கண்ணன் மாமா தான் சொல்லிகொடுத்தாங்க அம்மா.” அவன் போட்டுகொடுக்க…

“அவனை” பல்லை கடித்துகொண்டே.. கண்ணன தேடினால்..

’வாசுகி, வாசுவிடம் சொன்ன மாதிரியே, எண்ணி பத்தே மாததில் விஷ்ணுவை போல் குழந்தையை பெற்றெடுத்தால் வாசுகி, வாசுதேவ்வுக்கு அவனது தம்பியே மீண்டு ஜென்மம் எடுத்து வந்தது போல் இருந்தது…, அவனுக்கு..

“வாசுகி குழந்தை பெற்றெடுத்து, வாசுதேவ்விடம் சொன்ன வார்த்தையை காப்பாற்றினால்…, குழந்தையோடு செலவிடும் நேரம் வாசுதேவ்வுக்கு அதிகமானது, வாசுகியை கண்டுகொள்ளாமல் ஆபீஸ்விட்டு வந்ததும்,  அவனது உலகம் எல்லாமே நவநீதன் தான்…, வாசுகியை சுத்த்மாய் மறந்திவிட்டான்.., இதனால் வாசுகி மிகவும் கவலைகொண்டால்…, அதை பார்த்த ராதா.., வாசுதேவ்வின் மனநிலை எடுத்துகூறினார்…, அடுத்த நொடியே அவளும் மாறிவிட்டால்… ஆனால் அவளது முகம் அவனிடம் காட்டிகொடுத்துவிட்டது..”

‘டேய் எருமை, எதுக்குடா என்மகனையும் உன்னை மாதிரி பேச வைக்குற.., உனக்கு அறிவு இல்லையா..’ அவளது திட்டுகளை, இந்த் காதில் வாங்கி, அந்த காதில் விட்டுக்கொண்டிருந்தான் கண்ணன்…’

“உன்கெல்லாம், நான் திட்டுனா காதுல விழாது, இரு அனிக்காவ வரச்சொல்லுறேன்.., வாசுகி போனை எடுக்க…”

“அடிப்பாவி, என்னை, அந்த ராட்சசிகிட்ட மாட்டிவிட எத்தனை நாளை பிளான் போட்டுஇருந்த…, அம்மா,தாயே… உன்கிட்ட கூட நான் அடிவாங்குவேன் ஆனா, அந்த ஃப்ரான்ஸ் பிங்கர்சிப்ஸ்கிட்ட என்னால அடிவாங்கமுடியாது, இதுலையும் அவ என்னை அவ ஊரு பாஷையில திட்டுறது எனக்கு மிகபெரிய காலக்கொடுமை…, வாசு… தெரியாம.., உன் மகனுக்கு சொல்லிகொடுத்துட்டேன்…, ஆளைவிடும்மா.. பங்ஷ்னுக்கு நேரம் ஆச்சு எங்க என் மக…”

‘அவளை குளிக்க வைக்குறது, நான் தானு சண்டை போடுறான், என் மகன்.. போய் அவனை சமாதானம் படுத்து, எல்லோரும் வந்திருவாங்க.. நான் போய் அவங்களை வரவேற்கனும்… போ… போ..’ கண்ணனை விரட்டினால்..

“கண்ணனின் அண்ணன் மகளிற்க்கு பிறந்த நாள், அதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம், வாங்க நாமளும் அவங்களை வரவேற்க்கலாம்…, இங்க பாருடா நம்ம வெற்றியும், மீனலோக்‌ஷ்னியும் வந்திருக்காங்க…, அடேயப்ப, கதிர்,கலையும் வந்திருக்காங்க அவங்க குழந்தையோட…, அடுத்து யாரு,, வாரே வா… சரண் அவனோட புது மனைவியோட வந்திருக்கான்…, அர்ஜுனும் வந்திருக்கான் அவன் மனவியோட…,.. இலக்கியன், மலரும் கூட அவங்க குழந்தையோட வந்திருக்காங்க.., ஆனா.., நம்ம ஹீரோ மட்டும் மிஸ்ஸிங்க்…”

‘வெற்றி, மீனாவை நேரில் பார்த்து உடைந்துவிட்டான், அவளை எப்படியாவது சுயநினைவிற்க்கு கொண்டு வருவதற்க்காக அவன் மிகவும் பாடுபட்டு விட்டான்…., ஒருவழியாக அவளும் சுயநினைவுக்கு வந்தாள்.., ஆனால் வெற்றியின் நினைவு மட்டுமே அவளுக்கு இருந்தது.., அவளது அண்ணன், அண்ணி, சுஜாவைகூட மறந்திருந்தால்…, வெற்றியும், அவளுக்கு ஒவ்வொரு நினைவை கொண்டுவர முயற்சி செய்தான் ஆனால் முடியவில்லை…, வெற்றியின் காதலும், ஒரு நல்ல நாளில் மீனாவை திருமணம் செய்துகொண்டான்…. சக்தியின் பெயரில் நடத்து, சக்தியின் ஆதரவற்றோர் இல்லத்தில், மிகவும் சிறப்பாக நடந்தது திருமணம்.’

“அசோக்கும், தனது தந்தையுடன் சேர்ந்து தொழிலில் பங்கு எடுத்துகொண்டு, அதை நன்றாக நடத்தியும் வருகிறான், அவனுக்கு விரைவில் திருமணம் நடக்க பெண் தேடும் படலம் நடக்கிறது”

“வாசுகியும்,கடந்த காலங்களை தெரிந்துகொள்ள விரும்பவில்ல என தெரிந்ததும், சரண், கதிர், கலை, மூவரும் அவளுக்கு நிகழ்கால நண்பர்கள் ஆனார்கள்…,”

‘இவர்கள் அனைவரும், கண்ணனின், அண்ணன் பலராமன்,பார்கவியோட பொண்ணு பிறந்த நாளுக்கு வந்திருக்காங்க…, (என்னடா இவ கதைய இப்படி கொண்டு போறானு நினைக்காதேங்க… இடையில காணாம போன கண்ணன் குடும்பத்தை எதுக்கு இழுக்குறானு… பின்னாடி சொல்லுறேன் வாசகர்களே , அண்ட் வாசகிகளே…’)

“ஹீரோ வந்துடாரு…, இனி அங்க பார்க்கலாம்…”

‘உங்க மகன்.. அந்த பொண்ண.. குளிக்க வைக்குறதுக்குள்ள என்ன படுத்தினானு தெரியுமா.. அவள் புகார் வாசிக்க.., வாசுதேவ்வோ.. வெகு சிரத்தையாக மகனை கொஞ்சிகொண்டிருந்தான்.., அவள் பேசுவதை கேட்காமல்…’

“வாசு… விழாவ ஆரம்பிக்கலாம்.., எல்லோரும் வந்துட்டாங்க.., அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க…, வாங்கண்ணா… நீங்களும்..” பாரதி அழைத்து போக அனைவரின் வாழ்த்தில் அந்த குழந்தை மகிழ்ச்சியடைந்த அந்த தருணத்தையும், அனைவரின் மகிழ்ச்சியையும் புகைப்படம் எடுத்து கொண்டனர் இனிதே அந்த விழா முடிவடைந்தது… “

‘அவர்களின் அறையில்…, தலையணைக்கு உறை போட்டுகொண்டிருந்த வாசுகியை பின்னிருந்து அணைத்தான்… வாசுதேவ்…அவன் அணைத்திருந்த கையில் கண்ணீர் துளி விழ…., அவளை திருப்பி, அவளது முகத்தை ஏந்தினான்..’

“ரொம்ப நாள் ஆச்சு.. வசி… நீங்க என்னை கட்டியணைச்சு ரொம்ப நாள்…, ஆச்சு.. அவன் கண்களை பார்த்து சொல்ல…, எனக்கு மனசு இருக்கு சுகி.., உன்னை நானும், என்னை நீயும் முழுசா ஏத்துக்கனும் தான் இந்த மூனு வருசம் பிரிவை உனக்கும், எனக்கும் கொடுத்ததுக்கும்,…,.என் காதலும், உன் காதலும்… கொஞ்ச நாள் பிரிஞ்சு இருந்தா தான் நல்லதுனு உன்னைவிட்டு பிரிஞ்சு  இருந்தேன் சுகி…, ஆனா இன்னைக்கு… என்னால முடியல.., ஏன்னு தெரியுமா…, இந்த நாள் தான் உன்னை நான் முதல் முதலா… பார்த்தது..,”என் நினைவு முழுக்க நீ மட்டும் தான் இருந்த அப்போவும், இப்போவும், என் காதலோட நினைவு நான் இறக்கும் போதும், அதே நேரம், உன் நினைவோடும், உன் காதலோடும், நான் விழிமூடனும் சுகி…,” அவனின் காதல் கதையையும்,கவிதையையும், சொல்லிகொண்டே…., அவளுக்கு அந்த கதையை அவன் காதலால் சொல்லிகொடுத்தான்… அவளும், அந்த கதையை அழகாக கேட்டுகொண்டால்…”

“ஒவ்வொரு ஆணின் பின்னும், பெண்ணின் பின்னும் ஒரு காதல் இருந்தாலும் அதை நிகழ்காலத்திற்க்கு கொண்டுவராமல் பார்த்துகொண்டால் அவர்களது வாழ்க்கை…, உலகத்திலேயே.. உயர்ந்தது…வாசுகியின் காதலும் இதில் அடக்கம், என்றாலும்.. வாசுதேவ் கடந்தகாலங்களை மறைத்ததும் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லாதாக இருந்தது…, இது போல் என்றும் வாழ்க்கையில் காதலுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்று நான் கடவுளை வாழ்த்தி விடைபெறுகிறேன்…

 

                        சுபம்….

(சாரி மக்களே…, சொல்ல வந்த விசயத்தை மறந்துட்டேன்…, இடையில் காணாமல் போன கண்ணன் குடும்பத்தையும், “தேடும் கண் பார்வை”யில் சந்திக்கிறேன்…, நீங்களும் சந்திக்கலாம்… மக்களே…)

 

                          

 

Advertisement