Advertisement

                       நினைவுகள்  20

 

“வாசுதேவ் பேசிவிட்டு சென்றவுடன், வெற்றிக்கு நான் செய்யப்போவது மிகபெரிய தவறு போல் தோன்றியது… ஆனால் திடீரென்று மீனலோக்‌ஷ்னி எங்கிருந்து வந்தாள்…, அவளை நான் கடைசியாக பார்த்தது ஹோட்டலில் தான், அதற்கடுத்து மீனா என்கிட்ட பேசவும் இல்லை, போன் செய்யவில்லை, மெசேஜ் செய்யவில்லை, என்னை மறந்து வேறு ஒருவனை மணந்திருப்பாள் என நினைத்தேன்,ஆனால் அதற்க்கு எதிர் மாறாக அவளுக்கு, நினைவில்லாமல் இருப்பாள் என கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை, மீனாவின் நிலைமைக்கு இந்த நான்கு பேர் காரணமென்றால், என் தம்பி கொலைக்கு இவர்கள் தான் காரணமாக இருக்க கூடுமோ, இப்போ என்ன செய்வது, வாசுதேவ் கொடுத்து போன இந்த ஃபைலை படிப்பதா, இல்லை அந்த நான்கு பேரை விசாரிப்பதா…, சிவாகூட கூறினானே…

சக்தியின் கொலைக்கு வாசுகி காரணமில்லையென்று…, தன் நண்பன் மீது கோவம் கொண்டது தவறோ என அவனுக்கு தோன்றியது…, ஒரு பெறு மூச்சுடன் அந்த ஃபைலை கையில் எடுத்தான் வெற்றி…, பார்க்கலாம் என் தம்பி, மற்றும் மீனாவின் நிலைமைக்கு இவர்கள் மட்டும் காரணம் என்று தெரிந்தால் அவர்களுக்கு யாரும் கொடுக்காத அளவிற்க்கு நான் தண்டனை கொடுப்பேன்.. மனதில் நினைத்துகொண்டு அந்த ஃபைலை எடுத்து படிக்க ஆரம்பித்தான்…, படிக்க,படிக்க அவனது மனநிலையில் சொல்லமுடியாத துயரம் அவன் நெஞ்சில் ஏறியது.., ஏன் தான்.. மீனாவை பார்த்தோம், மீனாவை காப்பாற்ற என் தம்பியின் உயிர் போனது, அதில் இருந்த அனைத்தையும் படித்து முடித்த வெற்றி… இனி வாசுகியை பழிவாங்குவது சரியில்லை… என் தம்பியின் கொலைக்கும்,மீனாவின் நிலைக்கு காரணமான அந்த நான்கு பேர் இந்த உலகில் வாழ்வத்ற்க்கு தகுதி இல்லாதவர்கள்… இனி அவர்களின் உயிர் நான் கொடுக்கும் தண்டனையில் போகவேண்டும்… முடிவெடுத்துகொண்டு அதற்கான வேளையில் இரங்கினான்…,’

”வெற்றியின் அலுவலகத்திற்க்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து, அவனுக்குள், வாசுகியை பார்க்கும் ஆவல் அதிகமானது ஆனால் அவளிடம் கடந்த வாழ்க்கையின் உண்மையை கூறி, அதற்கடுத்து அவள் எடுக்கும் முடிவில் தான் இனி எங்கள் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் வாசுகிக்கு எப்படி அவளின் கடந்த காலத்தை சொல்லப்போகிறோம் அதை கேட்டப்பின் அவளின் முடிவு தன்னைவிட்டு பிரிய நேர்ந்தாலும் அதை ஏற்க்கும் மனநிலை எனக்கு இருக்கவேண்டும். அசோக் மட்டும் கிடைத்துவிட்டால் போதும், அன்று நடந்ததை பற்றி தெளிவாக வெற்றிக்கு புரியவைக்கலாம்… ஒவ்வென்றையும் நினைத்துகொண்டே காரை சாலையில் செலுத்திகொண்டிருந்தான் வாசுதேவ்…”

‘அம்மா வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் ஆனது, வாசுதேவிடம் இருந்து ஒரு மெசெஜ் இல்லை,போன் இல்லை, நான் கூப்பிட்டாலாவது அவன் எடுத்து பேசுவானா… இல்லை பேசமாட்டான… வாசுகி நினைத்துகொண்டிருக்க, ராதாவிடம் இருந்து அழைப்பு வந்தது…, வேகமாக அந்த எடுத்து பார்த்தாள், அழைப்பது தேவ் என நினத்தால், ஆனால் அழைத்தது ராதா…, அழைப்பை எடுத்து பேசினால்… “எப்படி இருக்கீங்க அத்தை, மாமா, எப்படி இருக்கா” எடுத்தவுடன் அவளே பேச ஆரம்பித்தால்… ‘நல்லா இருக்கேன்மா.., மாமாவும் நல்லா இருக்காங்க.., நீ எப்படி இருக்க, அங்க அண்ணா,அண்ணி, எல்லோரும் எப்படி இருக்காங்க…,’.. “நல்லா இருக்காங்க அத்தை…, வசி எப்படி இருக்காங்க அத்தை…”.. ‘ராஜா வீட்டுக்கு வந்தே முன்று நாள் ஆச்சுமா.., உன்னை உங்க வீட்டுல விட்டுட்டு வந்த பின்னாடி நம்ம வீட்டுக்கு வரலைம்மா… வேலை விசயமா.. பாண்டிசேரி போறதா.. அருண் சொல்லி தான் எனக்கு தெரியும், உங்க மாமாக்கிட்ட கேட்டா.. ஆமாம் நான் போகவேண்டியது, ஆனா தேவ் போறேனு சொன்னானு சொல்லுறாரு… வாசுகி… அத்தை கேட்டா கோவப்பட மாட்டயே”… ‘என்ன அத்தை சொல்லுங்க’..  

“உனக்கும், ராஜாவுக்கு எதுவும் பிரச்சனையாம்மா.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்கள…” ராதா கேட்க..

“அத்தை.. ஒரு பிரச்சனையும் இல்லை…, ஏன் அத்தை”

‘இல்லையினா.. சந்தோஷமா…, ராஜா எவ்வளவு கோபம் படுறானோ அந்த அளவுக்கு பாசம்மும் இருக்கும்.., நீங்க சந்தோஷமா இருந்தா எங்களுக்கு வேறென்ன வேண்டும்..,’

“சரிங்க அத்தை…, நான் நாளைக்கே வீட்டுக்கு வரேன் அத்தை”

‘ஏன்மா.. ராஜா தான் நீ ஒருவாரம் தங்கி இருந்துட்டு வரதா சொன்னான்.., அம்மா,அப்பாகூட இருந்துட்டு வாம்மா…, சரியா… அத்தை நாளைக்கு போன் பண்ணுறேன்..’

“ அது… அத்தை…, அவள் சொல்வருவதை கேட்க்காமல் அழைப்பை வைத்துவிட்டார் ராதா” என்கிட்ட சொல்லாமா பாண்டிசேரிக்கு போயிட்டாரு, ஒரு மெசேஜ் செய்தால் என்ன, என்னிடம் எதுவும் சொல்லாமல், அவர் வேலையை பார்க்கிறார்…, அவளுக்கு கண்ணீர் வந்தது…

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே….

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்…….

”வாசு சார்.. அந்த அசோக் பற்றி எங்களுக்கு தெரிஞ்ச வரை அவங்க இப்போ இந்த ஊருல இல்லை சார்… ஆனா அவங்க அப்பா பாண்டிசேரில இருக்குறதா எங்களுக்கு கிடைத்த தகவல் சார், நாங்க அங்க போய் விசாரிச்சு சொல்லுறோம் சார்.. இதை உங்ககிட்ட தெரிவிக்க தான், இப்போ உங்களை மீட் பண்ணோம்…., சார் நாங்க இப்போ அங்கதான் கிளம்புறோம்”

‘வேண்டாம்.., பாண்டிச்சேரிக்கு நான் கிளம்புறேன் அசோக் அப்பா இருக்கும் அட்ரெஸ் மட்டும் என்கிட்ட கொடுங்க நான் அங்க போறேன்..நீங்க அசோக் இருக்குற இடத்தை மட்டும் இன்னும் ஒரு நாளுக்குள்ள கண்டுபிடிச்சு சொல்லனும்… இனியும் தாமதிச்சா யார் உயிர் போகுனும் சொல்ல முடியாது அதுக்கு தான்…நீங்க அசோக்க தேடுங்க…, நான் அசோக் அப்பாவ நேருல பார்த்து பேசுறேன்..’

“சரிங்க சார்..நாங்க கிளம்புறோம்”

‘ம்ம்..ஓகே’  

அந்த மையிருட்டில் யாரும் கண்டுபிடிக்காத அளவுக்கு, நால்வரை கயிறால் கட்டி போட்டு, ஒரு நிமிடமும் நிறுத்தாமல் அடித்துகொண்டிருந்தனர்.. வெற்றியின் அடியாட்கள்…, அந்த நால்வரின் வலியும்,வேதனையின் சத்ததை தனக்கு பிடித்த பாடல் கேட்பது போல் அந்த சத்ததை கேட்டுக் கொண்டிருந்தான் வெற்றி…,

“அய்யோ… அம்மா… சார் வலிக்குது எங்களை விட்டுருங்க.., சார் என்னால அடி தாங்குற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்லை சார்… என்னை அடிக்காதேங்க சார்…” கோகுல் வாயில் வடிந்த இரத்ததுடன் கெஞ்ச..

‘சார்… இப்படி அடிக்குறதுக்கு பதில ஒரேடியா எங்களை கொன்னுடுங்க சார் ஒரே வலியா தாங்குறோம்…’ சபரி கெஞ்ச

”எதுக்கு அடிக்குறேங்கனு சொல்லிட்டு அடிங்க எங்கமேல என்ன தவறு இருக்குனு நாங்களும் தெரிஞ்கிறோம்.. சார்..ராம் அடிக்கும் காரணத்தை கேட்க..

‘இனி அடித்தால் அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பாலா.., இவர்களின் நிலைமையை பார்த்தும் மனம் இரங்காமல் இருக்கும் வெற்றி ஒரு நொடி தன் அடியாட்களை அடிப்பதை நிறுத்தும்மாறு சைகையில் சொன்னான்…

“என் தம்பிய கொன்னதுக்கு, என் மனசுக்கு பிடிச்ச பொண்ண நீயும் உன் நண்பர்களும் சேர்ந்து என்ன பண்ணுனேங்கனு உங்களுக்கு தெரியாதா, அதுக்கு தான் உங்களை இப்படி அடிக்குறேன்…, அடுத்து உங்க நாலு பேருக்கும் உயிர் போற அளவுக்கு ஒரு தண்டனையும் இருக்கும் அதுக்கு இப்போவே தயராகுங்க…, வெற்றி ராம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிமுடித்ததும் சைகையிலே அவர்களை அடிக்குமாறு சொன்னான்..

‘சார் தெரியாம பண்ணிட்டோம் சார்… எங்களைவிட்டுருங்க இதுகெல்லாம் ராம் தான் சார் காரணம்.. அவன் தான் எங்க மூனு பேரையும் தூண்டிவிட்டான்.. அதான் அந்த பொண்ணை கடத்துனோம்… சார் சபரி சொல்ல..’

“எல்லாத்துக்காரணம் அந்த சுந்தரபாண்டி தான் சார்… அவன்  மேல இருக்குற கோவத்துல, அந்த பொண்ண கடத்தினது சார்.. எங்களை விட்டுருங்க சார்..கோகுல் சொல்ல..”

‘இதையெல்லாம் கேட்டுகொண்டே.. அந்த ஃபைலில் படித்ததை நினைத்து பார்த்தான்… வெற்றியும், முதல் முதலாய் மீனலோக்‌ஷ்னியை பார்த்ததையும் அவள் தன்னிடம் பார்த்த நொடியில் காதலை கூறியதும்.. அதறக்கு அவன் தன் தம்பிகளை நினைத்துகொண்டு அவளிடம் காதல் இருந்தும், அதை மறைத்ததும் என ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்த்தான்…’

“என்ன சிவா.. மீட்டிங் இன்னைக்குனு எனக்கு ஞாயபகம் படுத்த மாட்டாயா… இப்போ பாரு மீட்டிங்க்கு நானே தாமதமா போறேன்… இனிமே இப்படி பண்ணதா..”.. ‘வெற்றி… இன்னைக்கு மீட்டிங்க் இருக்குனு உனக்கு வாட்ஸ்ப்ல நேத்தே மெசெஜ் பண்ணிட்டேன்…ஆனா நீ தான் வீட்டுல இருக்கும் போன் பண்ணகூடாது எனக்கு சொல்லிட்ட…அதான் மெசேஜ் செஞ்சேன்… அதைகூட பார்க்கமா என்ன செஞ்ச வெற்றி..’

“சிவா சொன்னபின் தான் போனை எடுத்துப்பார்த்தான் அதில் இன்று மீட்டிங்க் இருக்கு என்றும், அதில் அவன் பேசவேண்டிய குறிப்புகள் சேர்த்து மெசேஜ் செய்திருந்தான் சிவா.. ஆனால் வெற்றி தான் வீட்டில் கதிர்,சக்தியுடன் இருக்கும் போது ஆபீஸ் விசயங்களை ஒதுக்கிவிடுவான்… அதைபோல் தான் நேற்றும் நடந்தது..”

‘சாரிடா சிவா…என்மேல தான் தப்பு, நான் மெசேஜ் பார்க்காம விட்டதுக்கு உன்னை திட்டிட்டேன்… இப்போ நான் மீட்டிங்க்ல பேசவேண்டியது மட்டும் சொல்லு…,’

“இந்தா நீ மீட்டிங்க்ல பேசவேண்டியது எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு.. மீட்டிங்க் முடிஞ்ச பின்னாடி எனக்கு போன் பண்ணு.. நான் ரிசப்ஸன் ஏரியாவுல உனக்காக வெயிட் பண்ணுறேன்… ஓகே”

‘ம்ம்.. சரிடா..’

தொழில் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு பெண்ணின் மனதை ஒரு நிமிடத்தில் வெற்றி பெற்றவன் தான் இவன்… அன்று தான் அவனது மீனலோக்‌ஷினி்யை காணப்போகிறோம் என தெரியாமல் மீட்டிங்கில் அனைவரின் வாழ்த்துகளையும் வாங்கிகொண்டு வெளியில் வந்தான்…,

“ஏய் ஓடாத குட்டி….,சுஜா குட்டி ஓடாத… நில்லு…”

‘அத்தை நீ என்னை பிடிக்கவே முடியாது…, நீ என்கிட்ட தோத்து போயிட்ட அத்தை…நான் தான் வின் பண்ணேன்..’ குட்டி முயல் போல் அங்கு ஓடிகொண்டிருந்த சிறுபெண்ணை, தாய் மடிக்குள் வைத்திருக்கும் கங்காருவை போல் அவளை ஒரே எட்டில் பிடித்து நிறுத்த முயன்ற போது அவர்களுக்கு இடையில் வந்த வெற்றி அவளின் கைகளுக்குள் சிக்கிகொண்டான்…’

“சுஜாவை பிடிக்க போய், இடையில் வந்த வெற்றியின் மீது அழகாக மோதினால் மீனா. வெற்றி செல்போனில் சிவா எங்கு இருக்கிறான் என பேசிகொண்டே வந்ததில், அவன் முன் ஓடிகொண்டிருந்த சுஜாவையும், மீனாவையும் பார்க்க தவறினான்…, மீனாவும் வெற்றி வருவதை கவனிக்காமல் அவன் மீது மோதி,இருவரும் கீழே விழுந்தனர்…, மீனா தரையில் படுத்திருக்க, அவள் மீது வெற்றி இருந்தான்… எல்லாம் இரண்டு நிமிடம் தான்.., சுஜாவின் குரல் அவர்களை இந்த உலகத்திற்க்கு கொண்டுவந்தது…,”

“அத்தை நீ அவுட் ஆகிட்ட…., அதனால எனக்கு ஐஸ் கீரிம் வாங்கிதா… அத்தை”

’சிறுகுழந்தையின் பேச்சினால் நடப்புக்கு வந்தனர் இருவரும்,முதலில் அவன் எழுந்துகொண்டு, அவளின் முழங்கையை பிடித்து எழுந்திரிக்க உதவி செய்தான்…”

‘சாரிங்க.. குழந்தையை பிடிக்க போய் உங்கமேல மோதிட்டேன்.. சாரிங்க,’ மீனாவின் உதடுகள் அவனிடம் மன்னிப்பு கேட்டதோ இல்லையோ அவளின் கண்கள் அவனிடம் அழகாக மன்னிப்பு கேட்டது..அவளின் கண்களில் வெற்றி முழுவது தொலைந்து போனான்…,

“வெற்றியின் கோர்ட்டை சுஜா பிடித்து இழுத்தால், குழந்தை தன்னை அழைப்பதில் நினைவுக்கு வந்தவன்… அந்த சிறு பெண்ணை பார்த்து “என்னம்மா”

‘அங்கில் சாரி, என் அத்தை, என்னை பிடிக்கதா வந்தாங்க, ஆன உங்க மேல மோதிட்டாங்க… அங்கில் சாரி…’ சுஜா தன் இரு காதுகளை பிடித்துகொண்டு சாரி கேட்டாள்..

“குழந்தையின் காதுகளில் கைகளை விலக்கியவன், “நானும் தான் தெரியாம உன் அத்தை மேல மோதிட்டேன்… அதுனால நானும் சாரி குட்டி…,”முதன் முதலாய் ஒரு குழந்தையிடம் மன்னிப்பு கேட்டான்…வெற்றி..

‘குழந்தையை பார்த்து கூப்பிட்டு போங்க… மிஸ்…..’

“மீனா…மீனலோக்‌ஷினி..”அவளின் பெயரை அவனிடம் கூறினால்.

‘ம்ம். ஒகே..’வெற்றி அடுத்து பேசுவதற்க்குள் சிவா.. வந்துவிட்டான்.. “வெற்றி நீ இங்க இருக்கியா… மீட்டிங்க் முடிஞ்சு அரை மணி நேரம் ஆச்சுனு உன்னை அங்க தேடிட்டு இருந்தேன்… வெற்றி” அவர்களை நோக்கி வந்தான்..

“ம்ம்.. போகலாம் சிவா..” வெற்றி கிளம்ப எத்தனித்த நேரம்… மீனா அவனை நிறுத்தினால்..

‘ஒரு நிமிசம்ங்க’

“வெற்றியும்,சிவாவும் அவள் கூப்பிட்டதற்க்காக நின்றனர்..”.. ‘சொல்லுங்க..’

“அது…., அது….., உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்,”

‘என்ன சொல்லனும்’

“உங்களை எனக்கு பிடிச்சுருக்குங்க” அவள் மனதில் ஏற்ப்பட்ட காதலை அவனிடமே சொல்லிவிட்டு, குழந்தை அழைத்துகொண்டு அவனை திரும்பி, திரும்பி பார்த்துகொண்டே சென்றாள்… ஆனால் இவளின் காதலை, கேட்டப்பின் அவள் விழிகளிலே இன்னும் அதிகமாக தொலைந்து போனான் வெற்றி…, சிவாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது…., ஆனால் ஏன் வெற்றி கோவப்படாமல் அமைதியாக இருக்கிறான் என்றதான் புரியவில்லை..”

‘எந்த பெண்ணையும் தன் வாழ்வில் ஏற்க்ககூடாது என நினத்தவன், இன்று மீனாவின் பார்வையால் வெகுவாக ஈர்க்கப்பட்டான்…, பார்த்த நொடியில் காதல் வரும் என பலர் சொல்லிருந்தார்கள், ஆனால் வெற்றிக்கும், மீனாவுக்கும் அந்த நொடியில் காதல் வந்தது கடவுளின் ஆசீர்வாதம் போல இருந்தது…’

“ஏதேதோ நினைவுகளில் இருந்தவனை சிவாவின் அழைப்பு நடப்பிற்க்கு கொண்டு வந்தது… ‘வெற்றி, அந்த பொண்ணு பேரு, மீனலோக்‌ஷினி, அவளுக்கு கூட பிறந்தவன் ஒரு அண்ணன் மட்டும் தான்…,. இன்னொரு விசயமும் இருக்கு வெற்றி…, சிவா சொல்ல… “என்ன” என்பது போல் பார்த்தான்… “எஸ்.கே.எஸ், கம்பெனி பற்றி உனக்கு தெரியுமா… “ம்ம்ம்,தெரியும்” ”தி கிரேட் சர்மிளாவோட” கசின் தான் இந்த பொண்ணு…, நேத்து பார்த்தையே அந்த குழந்தை, அது மிஸஸ்.சர்மிளாசுந்தரபாண்டியோட குழந்தை…, சுந்தரபாண்டியோட தங்கச்சி தான் இந்த மீனலோக்‌ஷினி…., சிவா தான் சேகரித்த மொத்த விசயங்களையும் வெற்றியிடம் சொல்லிமுடித்தான்..” ஆனால் வெற்றிக்கு தான் எந்த முடிவு எடுப்பது எனத்தெரியவில்லை…,

”இன்னைக்கு ஐஸ்கீரிம் இரண்டு சாப்பிட்டுருக்க, எல்லாம் உன் அத்தை கொடுக்குற செல்லம்…, அதனால இது தான் உனக்கு நைட் டின்னர் அந்த குழந்தையின் முன் பச்சரிசி கூழை வைத்தார்… அந்த வீட்டின் இல்லத்தரசி சர்மிளா…”

‘அம்மா, அத்தை தான் என்கிட்ட பெட் வச்சாங்க…, அதுல நான் வின் பண்ணதுக்கு எனக்கு ஐஸ்கிரிம் வாங்கிகொடுத்தாங்க… அவங்களைவிட்டு என்னை பனிஷ் செய்யுறேங்க…,என் செல்ல அம்மால, எனக்கு இந்த கூழ் பிடிக்காது, உரைக்கும் மா…, எனக்கு தோசை சுட்டு தாங்கம்மா…’ குழந்தை, அன்னையிடம் கெஞ்சிகொண்டிருக்க…

“சுஜா…, அம்மா எது செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடனும், பழகிக்கனும், புரியுதா,” ஒரு கண்டிப்புடன் சொல்ல…, அதற்க்குமேல் அந்த குழந்தை பேசாமல் அந்த கூழை சாப்பிட்டது…

‘அப்போ அத்தைக்கும் இந்த பனிஷ்மெண்ட் கொடுக்கனும், ஒகே…”  ‘உன் அத்தைக்கு இன்னைக்கு இது தான் போய் அத்தைய அழைச்சுட்டு வா சுஜா’ சாப்பிட்டு முடித்ததும், தான் மட்டும் அம்மாவிடம் பன்ஷ்மெண்ட் வாங்னும் ஆனா ஐஸ்கீரிம் வாங்கிகொடுத்த அத்தைய சும்மா விடனும், அத்தை உனக்கு சேர்த்து தான் அம்மாகிட்ட பனிஷ்மெண்ட் வாங்கிகொடுத்துருக்கேன்… மனதுக்குள் குதுகலித்துகொண்டு அவளின் அத்தை அழைக்க சென்றால்…

கண்ணோடு கண் சேரும் போது
வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை ஆகும்

வழியில் உன் வழியில் வந்து
நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை

உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை

உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே

உரையாடல் தொடர்ந்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்”

‘மீனாவின் நினைவில் இன்று முதல் முதலாய் வெற்றியை பார்த்ததும், அவளுக்கு அவன் மீது காதல் வந்தது…, அவள் மனதிலும் வெற்றியை பற்றி அவள் அண்ணி சொன்னதை கேட்டு இருக்கிறாள் ஆனால் அவனை இன்று தான் பார்க்கிறாள்…,மனதில் தோன்றிய விருப்பத்தை. வெற்றியிடம் தான்  வெளிப்படையாக சொன்னதும் அவளுக்கு கொஞ்சம் வெக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது… ஆனால் அவளுக்கு அவனுடன் சேர்ந்து வாழப்போகும் அந்த நாட்களை எதிர்ப்பார்த்துகொண்டிருந்தால், இவ்வாறாக அவள் நினைத்துகொண்டிருக்க… அவளின் நினைவை கலைத்தால் சுஜா… “அத்தை, அத்தை…. அம்மா உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க…”

‘சரி குட்டி…, இதோ வரேன்..’

“அத்தை உனக்கு அம்மா ஒரு பனிஷ்மெண்ட் வச்சுருக்காங்க…, போங்க நல்லா அனுபவிங்க..”

‘என்ன குட்டி சொல்லுற…’

“அதை நீங்க அங்க போய் பாருங்க… அத்தை..”

‘இன்னைக்கு மீட்டிங் நல்லபடியா போச்சா… சர்மி…, அடுத்து எப்போ மீட்டிங் போகனும்’ சுந்தர் மீட்டிங் பற்றி கேட்க….

“ம்ம்… நல்லா போச்சுங்க”

‘என்னாச்சுமா… உடம்பு எதுவும் சரியில்லையா…’

“அப்ப்டியெல்லாம் இல்லைங்க…, கம்பெனி,மீட்டிங்னு அழையுறேன்ல அதான், கொஞ்சம் அழுப்பா இருக்கு,”

’வேற ஒண்ணுமில்லையே சர்மி’ சுந்தர் கேட்க..

“இருக்குங்க…, மீனா வரட்டும்…”

‘வா மீனா… இன்னும் சாபிடாம என்ன பண்ணுற…, சர்மி மீனாவுக்கும் சாப்பாடு போடு…,’

” வரேன் அண்ணா…, நீங்க எப்போ வந்தீங்க….,”டேபிளில் அமர்ந்தபடி பேசினால் மீனா..

“இப்போ தான் வந்தேன்…, என்ன மீனா அண்ணிகூட மீட்டிங் போகும் போது எதுவும் நடந்ததா…”

‘அண்ணா…, அப்படி எதுவும் நடக்கலை, ஏன் அண்ணா..’

“மீனா…, நீயும், சுஜாவும் அந்த ஹோட்டல்ல ஓடிபிடிச்சு விளையாடும் போது என ஆரம்பித்து வெற்றியிடம் மோதியதையும், அவனிடம் பேசி, விருப்பத்தை கூறியதையும் ஒன்றும் விடாமல் சொல்லிமுடித்தால் சர்மிளா..,”

‘இதைக்கேட்டு, சுந்தர் அதிர்ந்து தான் போனான்…, “என்ன மீனா…, அவனை நீ விரும்புறீயா… சொல்லுமா..அண்ணி சொல்லுறது எல்லாம் உண்மையா… மீனா சொல்லு… இப்படி ஏன் அமைதியா இருக்க..” சுந்தர் கோவமாக பேச..

“அண்ணா, உண்மைதான்…., அவரை எனக்கு பிடிச்சுருக்கு, அவரை நான் விரும்புறேன்… அண்ணா..” தயக்கத்துடன் சொன்னால்..

‘வேண்டாம் மீனா… அந்த வெற்றி…, உனக்கும், அவனுக்கு ஒத்துப்போகாதுமா…, அவனுக்கு, அவன் தம்பிங்க தான் உலகமே… இதுல உன்னை அவன் ஏத்துக்க மாட்டான் மீனா… வீணா கற்பனை பண்ணிக்காத மீனும்மா…, அண்ணி சொன்னா கேட்கமாட்டீயா…, உனக்கு எது நல்லதுனு நானும் உன் அண்ணாவும் பார்த்து செய்வோம் மீனுமா…,எங்கமேல உனக்கு நம்பிக்கை இல்லையா…’ சர்மி அவளிடம் எடுத்துகூற..

“அண்ணி…, எனக்காக நீங்க அவரைப்பற்றி நல்லா விசாரிங்க அண்ணி, அவரு நல்லவுங்க அண்ணி, நீங்க சொல்லி நான் கேட்காம இருந்திருக்கேனா… ஆனா அவரை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அண்ணி…, என் அம்மா மாதிரி தான நீங்களும், ஏன் அண்ணி அவரை வேண்டானு சொல்லுறேங்க…, அவருக்கும் என்னை பிடிக்கும், அண்ணி…”

‘சர்மி…., நாளைக்கே மீனுக்கு மாப்பிள்ளை பார்க்க, ஆரம்பிக்குற…, எண்ணி ஒரு மாசத்துல அவளுக்கு கல்யாணம்.., நீ வெற்றிய மறந்து தான் ஆகனும் மீனா… என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கனும் நினைச்சா, அண்ணா சொல்லுறதை கேளு…., மீனாவை பார்த்து சொன்னான், சர்மி…, அவளுக்கு சொல்லி புரிய வை…’ சுந்தர் சொல்லிவிட்டு போக.., சர்மிக்கோ ஏன் தான் இவர் முன்னிலையில் வெற்றியை பற்றி ஆரம்பித்தேனோ என இருந்தது…., சர்மிக்கு…

“அண்ணி, அண்ணாகிட்ட சொல்லுங்க அண்ணி…, எனக்கு அவரு ரொம்ப பிடிக்கும் அண்ணி…” சர்மியிடம் அழுதுகொண்டே சொல்ல… ‘சொன்னா புரிஞ்சுக்கோ மீனுமா…, நாளைக்கு அண்ணாகிட்ட நான் பேசுறேன்… ஆனா வெற்றிய பற்றி இல்லை.. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாமுனு… சரியா…,”

’நீங்க யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டீறீங்க…, போங்க…,’ மீனா அழுதுகொண்டே அவளின் அறைக்கு சென்றால்…ஆனால் அடுத்த நாளே அவள் வெற்றியின் அலுவலகத்தில், வெற்றியின் முன் இருந்தால்…

“என்ன வேணும்…, உங்களுக்கு…எதுக்கு என்னை பார்க்கனும் சொன்னீங்க” அவளை பார்த்ததைகூட நினைவில்லாமல் அவன் பேச…

‘உங்களை… எனக்கு பிடிச்சுருக்குனு சொன்னேன்…, ஆனா நீங்க எதுவுமே சொல்லலையே…., என்னை உங்களுக்கு பிடிக்கலையா…., இல்லை…’ அவள் திக்கிதிணறி அவனிடம் பேசினால்.. ஆனால் அவனோ… “நானும் உன்னை பிடிச்சிருக்குனு சொல்லனுமுனு எதிர்ப்பார்க்கிறையா… மீனாலோக்‌ஷினி..” அவன் பதில் எதிர்பார்த்து வந்ததை, வெற்றி சொல்ல…. “ஆமாம்….. இப்போ கேட்கிறேன்… பிடிச்சுருக்கா இல்லையாங்க… சொல்லுங்க…” அவளும் கேட்க..

“அப்போ என்கூட ஒரு நாள் முழுவது இருக்கனும் இருப்பியா…, அப்படி என்கூட ஒரு முழுக்க இருந்தா…, உன்னை என் வாழ்க்கையில சரிபாதியா ஏத்துக்கிறேன்…, ஆனா..வாழ்க்கை முழுவதும் உனக்கு என் காதல் வேணும்னு நினைச்சா அது கிடைக்காது… மீனலோக்‌ஷினி…, இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா…, சொல்லுங்க…, இப்போ நீங்க போகலாம்… மீனலோக்‌ஷினி..” அவன் காதலை அவளிடம் இருந்து முழுதாக மறைத்தான்.. வெற்றி…,

‘அவனின் பதில் முழுதாக அதிர்ந்தாள்…. மீனா.., காதலுடன் அவன் கேட்டுயிருந்தால்.. அவனோடு ஒரு நாள் என்ன…. காலம் முழுவது அவனோடு இருக்க சம்மதம் தான் ஆனால்… மனதில் ஒரு துளி காதல் இல்லாமல் என்னுடன் ஒரு நாள் பொழுதை கழிக்க வருகிறாயா என்பது போல் இருந்தது… அதற்கடுத்தும் அவனது வாழ்க்கையில் இடம் கொடுத்தாலும் உன்மீது காதலே வராது என சொல்பவனிடம் எப்படி காதலை பற்றி பேசமுடியும்…, அப்படி பேசினால் என் காதலை கேலி செய்யகூட தயாரக இருப்பான்.. இதற்க்கு என்ன முடிவு… மீனா மனதில் குமுறிகொண்டிருக்க….’

“என்ன…, யோசிச்சு நல்லா முடிவா சொல்லு, இந்தா இது என் பெர்ஸ்னல் நம்பர்…, முடிவு செஞ்ச பின்னாடி எனக்கு போன் பண்ணு…, எனக்கு வேலை இருக்கு…இப்போ நீ கிளம்பலாம்…”அவளை துரத்தாத குறையாக வெளியில் அனுப்பினான்… வெற்றி….”

‘எந்த விழிகளில் இருந்து அவனது காதலை உணர்ந்தானோ, எந்த விழிகளில் இருந்து அவன் மனதை உணர்ந்தானோ.., விழிகளிலேயே பேசியவளை.., இன்று அந்த விழிகளிலேயே கண்ணீர் வருவதை காணாமுடியாமல் தன்னையே திட்டிகொண்டான்…, இப்படி பேச வைத்த அவளது அண்ணியை நினைத்துகொண்டான்..’

“சர்மிளா… வெற்றியை தனியே சந்தித்து…, “என் பொண்ணு, அதாவது என் நாத்தனார்…, உங்களை விரும்புறதை உங்ககிட்ட சொன்னதும், அதுக்கு  உங்க கண்கள் பதில் சொன்னதும்…, எனக்கு நல்லா தெரியும் வெற்றி…, ஆனா உங்க குடும்பத்துல, என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் செஞ்சுகொடுக்க எனக்கு விருப்பம் இல்லை வெற்றி…, அவள் மனசு ஒரு குழந்தைக்கு சமம்…, நீங்க… தொழில்,தொழில்னு ஓடிட்டு இருப்பேங்க… அதுல ஏற்படுற கோவம் அவமேலையும் ஏற்ப்பட்டா.., அதை தாங்குற அளவுக்கு அவ மனசு இல்லை…, அதுவும் இல்லாம.., இது நாள் வரை அவமேல நாங்க கோவப்பட்டது இல்லை, கோவப்படுற மாதிரி அவளும் நடந்துக்க மாட்டா…, ஆனா. உங்களுக்கு அப்படி இல்லையே…, தம்பிக்கிட்டயே  கண்டிப்பா இருக்குற நீங்க என் பொண்ணயும் அப்படி நடத்த மாட்டேங்கனு என்ன ஆதாரம்…, அவளுக்கு, அவ அண்ணா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு…, ஆனா மீனாவுக்கு இது தெரியும்…, இன்னைக்கு உங்களை பார்க்க உங்க ஆபீஸ்க்கு மீனா வருவா.., அவளுக்கு புரியுற மாதிரி நீங்க எடுத்து சொல்லி புரிய வையுங்க வெற்றி…, சர்மிளா சொல்லிவிட்டு செல்ல…, மீனாவும் சரியாக வந்தாள்… வெற்றியை பார்ப்பதர்க்கு…, இதையெல்லாம் நினைத்துப்பார்த்துகொண்டிருந்த வெற்றியின் கண்களில் காதலை தானே நிராகரித்த வலி தெரிந்தது… ”

“வெற்றியின் அலுவலகத்திவிட்டு வெளியே வந்த மீனாவை சிவா பார்த்துவிட்டான்…, அவளை நோக்கி சென்று…, அவளிடம் பேசினான்… “என்னமா… வெற்றிய பார்த்துட்டு வருகிறாயா…, அவன் காதலை உன்னிடம் சொல்லிவிட்டானா…, உனக்கும் மகிழ்ச்சி தானே…,ம்மா..” சிவா மீனாவிடம் போட்டு உடைக்க… மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை… ‘என்ன சொல்லுறீங்கண்ணா… அவரு என்னை விரும்புறா…’

“ஆமாம்.. உன்னிடம் சொல்லதான் உன் வீட்டுக்கு போவதாக கூறினான் வெற்றி…, ஆனா…, என்கிட்ட உன்னை விரும்புறதா அவன் சொல்லலை, நான் தன் கண்டுபிடித்து அவனிடம் போட்டு வாங்கினேன்…, பின் தான் அவனுக்கு எடுத்து சொல்லி.., காதலை உன்னிடம் சொல்லவேண்டும் என்று வெற்றியின் காதலை பற்றி முழுதாக சொல்லிமுடித்தான் சிவா…”

‘ரொம்ப நன்றிணா…, என்னை பார்த்து, என்கிட்ட பேசுனதை அவர்கிட்ட சொல்லாதேங்க அண்ணா…., நானே அவர்கிட்ட பேசிகிறேன்…, அதுவரை இப்போ நடந்தை சொல்லாதீங்க…., அண்ணா…,ப்ளீஸ்ண்ணா..’மீனா சிவாவிடம் கெஞ்ச…., ”சரிம்மா…, சொல்லமாட்டேன்…,” சிவாவும் சொல்லிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தான்…

”டேய் இப்போ வந்துட்டு போனாளே அந்த பொண்ணு…, அவ தான், சுந்தரபாண்டியோட தங்கச்சி…, அவ அண்ணன் நம்ம என்னை எப்படி அசிங்கப்படுத்தினான்… அதுக்கு அவனோட தங்கச்சிய பழிவாங்கனும் அப்போ தான்… என்க்கு நிம்மதியா இருக்கும்… டேய்  நான் போடுற பிளான்ல அந்த சுந்தரபாண்டி துடிக்கனும் டா….,கோகுல் அவ, வெற்றிக்கிட்ட என்ன பேசிட்டு போனானு… கொஞ்சம் விசாரி…,டேய் சபரி…. நம்ம பிளான் நடக்குற இடத்தை நீ பார்த்து வை, பாலா.. அந்த பொண்ணு எங்க போறா, வரானு பாரு அப்போ தான் அவளை தூக்க சரியா இருக்கும்…,” ஆளுக்கு ஒவ்வொரு வேலை பிரித்துகொடுத்தான்…, அந்த ராம்…..

’நான்…, உங்க கூட ஒருநாள் முழுக்க இருக்கா, தயார்..’மீனா, வெற்றியிடம் சொல்ல…,

“வாசுதேவ், அசோக்கின் அப்பாவை பார்த்தான்…அவர் கூறிய விசயங்கள் அவனுக்கு கொஞ்சம் அதிர்வாக தான் இருந்தது…., அந்த நிமிடம் அவனுக்கு, அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது…,”

 

                        உன்நினைவுகள் தொடரும்…..

Advertisement