Advertisement

                நினைவுகள் 19

 

“சார் நீங்க கேட்ட எல்லா டீடைல்ஸும் இந்த ஃபைல்ல இருக்கு…..அந்த அசோக் ஃபைல் மட்டும் இன்னும் ரெடியாகலை சார்…அவங்க ஃபேமிலி இப்போ எங்க இருக்காங்கனு தேடிட்டு இருக்கோம் சார்…. ரெண்டு நாள்ல டீட்டைல்ஸ் கேதர் பண்ணிட்டு உங்களை தேடி வரோம் சார்…..”வாசுதேவ்வின் கையில் வெற்றியின்….குடும்பம் பற்றியும், அதில் அவனை பற்றி ஆதி முதல் அந்தம் வரை அந்த ஃபைலில் அடங்கியுள்ளது…..ஃபைலையே பார்த்து கொண்டிருந்த வாசுதேவ் அதை திறந்து படிக்காமல்… ஃபைலை எடுத்து கொண்டு வெற்றியின் அலுவலகத்திற்க்கு சென்றான்….

‘சிவா…, அந்த எம்,கே.வி…கம்பெனியோட டீலர்சிப் என்னாச்சு….எல்லாம் நால்லாதானே போயிட்டுயிருக்கு,…..’

“எல்லாம் நல்லா போகுது வெற்றி…எந்த ப்ரச்சனையும், இல்லை….ஆனா வாட்சுதேவ் கம்பெனியோட பாட்னர்சிப்ல நாம ப்ராடெக் எல்லாம், மார்க்கெட்ல நல்ல வரவேற்பு கிடைக்குது….வெற்றி…,இதுனால நம்ம கம்பெனிக்கு அறுபது சதவீதம் பங்கு கிடைச்சுருக்கு…..வெற்றி….” சிவா அலுவலகத்தின் கணக்கு வழக்குகளை சொல்லிகொண்டிருக்க…. வெற்றிக்கோ வாசுதேவ் என சொன்னதும்….வெற்றியின் முகம் கொஞ்சம் மாறியது…

‘என்ன வெற்றி…வாசுதேவ்வோட பெயரை கேட்டதும்..அமைதியாகிட்ட…., ஏன்’

“உனக்கு தெரியாத,….அந்த வாசுதேவ்வோட மனைவி, வாசுகிய கொல்ல என்ன பண்ணலானு யோசிச்சுட்டு இருக்கேன்…..”

‘வெற்றி… நான் ஒன்னு சொல்லுறேன், அதை கேட்ப்பயா…’

“என்ன சிவா..”

‘எனக்கென்னமோ….அந்த பொண்ணுதான் உன் தம்பி, சக்திய கொலை செய்யலைனு தோனுது.’

“எப்படி சொல்லுற…சிவா…., சக்தி இறந்து போன அன்னைக்கு, கடைசியா அந்த பொண்ணு வாசுகிய பார்த்து பேசியிருக்கான்….சிவா…அதைவிட என்ன ஆதாரம் வேணும் உனக்கு….”

‘வெற்றி….. சக்தி, வாசுகிய பார்த்துட்டு வரும்போது தான் இறந்துருக்கான்….. ஆனா  வாசுகிக்கும்….சக்திய பார்த்துட்டு வந்த பின்னாடிதான் ஆக்ஸிடன் நடந்துருக்கு….இதுல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு வெற்றி…..’

“என்ன சந்தேகம்…என் தம்பிய கொன்னது…வாசுகி இல்லை…வேற யாரோ என் தம்பிய கொன்னு இருக்காங்கனா….”

‘அப்படி கூட இருக்கலாம்……நான் சக்தி படிச்ச காலேஜ்ல விசாரிச்சேன்…. சக்தியும், வாசுகியும்….ஒரு நல்ல நண்பர்கள் போலதான் பழகிட்டு இருந்தாங்க….., அதே காலேஜ்ல படிச்ச…விஷ்ணுன்ற பையன்கூட காதல் இருந்ததாம்…ஆனா….அவன் காதல வெளிய சொல்லிக்காமலே இறந்துட்டான் அந்த பையன்…… சக்தியோட நெருங்கிய நண்பன் அசோக் மட்டும் தான்… அவன் எங்க இருக்கானு நமக்கு தெரியல……அவனை கண்டுபிடிச்சா அன்னைக்கு என்ன நடந்ததுனு நம்மகு தெரிய வாய்ப்பிருக்கு வெற்றி….’

“சரி…. எப்படி அசோக்கு அன்னைக்கு நடந்தது தெரியுமுனு சொல்லுற…..சக்தி, அந்த நாள்ல அசோக்க பார்க்கமாகூட இருந்திருக்கலாம் இல்லையா…… என் தம்பிய கொன்னது அந்த வாசுகி தான் , அவளை கொல்லாம விடமாட்டேன்…. சிவா…. “வெற்றி வாசுகிதான் சக்தியை கொலை செய்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்….

‘பொறுமையா இருக்கலாம் வெற்றி…… எனக்கு ரெண்டு நாள் டைம் கொடு அதுகுள்ள, சக்தி கொலைக்கு யாரு காரணமுனு நான் கண்டுபிடிக்குறேன்….., ‘

“நீ ஏன் சிவா…. அந்த பொண்ண காப்பாத்தற…. வாசுகி உனக்கு சொந்தமா, பந்தமா…., வாசுகிமேல அக்கறையா இருக்க….”

’என் மனசுல பட்டத, சொல்லுறேன்….வெற்றி…, நீ நல்லவன் வெற்றி…., அநியாயமா….ஒரு பொண்ண கொலைசெய்யற அளவுக்கு, நீ போகமாட்ட வெற்றி…., என்னுடைய நண்பன் என்னைக்கும் தப்பான வழியில போயிடக்கூடாது வெற்றி….., தொழில்ல சாதிச்ச நீ…., தவறான முடிவு எடுத்துறக்கூடாதுனு ஒரு எண்ணம் தான் வெற்றி….இதுக்குமேல உன் இஷ்டம், இனி…ஆபீஸ் விசயத்தை தவிர வேற எதுவும் உன்கிட்ட பேசமாட்டேன்…வெற்றி…நான் கிளம்புறேன்.’ தன் நண்பனே தன்னை சந்தேகம் படுவதை எந்த நண்பனும் பொறுத்துக்கொள்ளமாட்டான்….., சிவா….. விசாரித்ததை வைத்துதான் வாசுகி கொலை செய்யவில்லை என்றானே தவிர… அவள் மீதுள்ள… அக்கறையினால் அல்ல…. இதை வெற்றி புரிந்துகொள்ளாதது…. ஏன்???  

“வெற்றிய மீட் பண்ணனும்…..”

‘நீங்க….,’

“வாசுதேவ்,”

‘ஒன் மினிட் சார்…’ வெற்றிக்கு போன் செய்து…அவனிடம், வாசுதேவ் வந்திருப்பதை பற்றி கூறினால்….. அந்த பக்கம் என்ன சொன்னானோ அதை கேட்டு, இவனிடம் சொன்னால்..

“சார், உங்களை வரச்சொன்னாங்க சார்… நீங்க போகலாம்..”

‘ஒகே…தாங்க்யூ’

“கதவை மெதுவாக நாக் செய்துவிட்டு….உள்ளே நுழைந்தான் வாசுதேவ்…”

‘வாங்க, வாசு…எப்படி இருக்கேங்க, என்ன சாப்பிடுறேங்க…டிரிங்ஸ், காஃபி, எனித்திங்….’

“ஐயம் ஃபைன், வெற்றி, நீங்க…., நோ தாங்க்ஸ் வெற்றி”

‘ஐயம் குட், என்ன விசயம் வாசு??….நம்மளோட பாட்னர்சிப் நல்லா போகுது, மார்க்கெட்ல நல்ல வரவேற்பு…எங்க புரடெக்ட்ஸ்க்கு,…..உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்…..உங்க மூலமா எங்க கம்பெனிக்கு லாபம் அதிகமா கிடைக்குது, வாசு…..உங்களுக்கும் இந்த முறை….லாபம் முதலவிட அதிகமா இருக்குமே…’

‘ம்ம்….லாபம் அதிகமா கிடைச்சிருக்கு, ஆனா நான், கம்பெனி விசயமா பேச வரலை…வெற்றி ….கொஞ்சம் பர்ஸ்னல உங்ககிட்ட பேசனும், பேசலாமா…’ நேரடியாக விசயத்திற்க்கு வந்தான்…

“சொல்லுங்க….வாசு… என்ன விசயம்”

‘இந்த போட்டோல இருக்குறது….உங்க தம்பி, கதிரா…’

“ஆமா…வாசு,  என்னோட ரெண்டாவது தம்பி காதல் கல்யாணம்  பண்ணிகிட்டான், காலேஜ் படிக்கும் போதே…..அதுகடுத்து அவனை நான் வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டேன்….என்னோட மூனாவது தம்பி இறந்த பின்னாடிதான் அவனை வீட்டுல மறுபடியும் சேர்த்தேன்,…. இப்போ தொழில் விசயமா ஊருக்கு போயிருக்கான்….எதுக்கு கேக்குறேங்க…”கடைசியாய் கதிர் ஊருக்கு போனதை பற்றி பொய் கூறினான்….

‘உங்க தம்பி, என் மேரேஜ் அன்னைக்கு, நீங்க என் மனைவிய கொலை செய்யபோறேங்கனு என்னை நேருல பார்த்துட்டு சொல்லிட்டு போனாங்க…. அப்போ நான் அதை பெரிய விசயமா எடுத்துக்கலை….,.. நேற்று என் தம்பி ரூம்க்கு எதற்ச்சியா போனே அப்போ தான்…இந்த போட்டோ கிடைச்சது….. சொல்லுங்க வெற்றி, எதுக்கு என் மனைவிய கொலை செய்யனும் நினைக்குறேங்க…. ’ நேரடியாக கேட்டான்…

”வெற்றி முகம் ஒரு நொடி திகைத்தாலும், வாசுவிடம் காரணத்தை கூற ஆரம்பித்தான்……….என் தம்பி….என்னோட குழந்தை… என் வாழ்க்கையே என் தம்பிங்க தான்……., எனக்கு கதிரவிட, சக்திமேல தான் பாசம் அதிகம்….. ஆனா கடைசில அவனுக்கு கொல்லிவைக்ககூட முடியாத அளவுக்கு அவனை கொடூரமா கொன்னது உன் மனைவி வாசுகி…..,”.. ‘அதுக்கு தான் நீங்க என் கம்பெனியோட டீலிங் வச்சுகிட்டேங்க,….  என் மனைவிய அந்த திருக்கிட்ட கடத்த சொன்னதும் நீங்க தான்….’ சரியா வெற்றி….. “உன் மனைவிய கடத்த சொன்னது நான் தான் ஆனா அவன் கடைசில அவளை தப்பிக்கவிட்டுட்டான், ஆமாம், வாசு உன்னையும், உன் மனைவியையும் பழிவாங்க தான் உன் கம்பெனியோட டீலிங் வச்சிகிட்டேன்…..இன்னொன்னும் சொல்லுறேன்… உன் மனைவி வாசுகிய உன் கண்ணுமுன்னாடியே கொலை செய்யலை…..என் தம்பிக்கு நான் அண்ணன் இல்லை….வாசுதேவ்…” வெற்றி, வாசுதேவ்விடம் சவால் விட்டான்…..

‘வெற்றி…. உன் தம்பி சக்தி…இறந்ததுக்கு காரணம்….என் மனைவி வாசுகி இல்லைனு நான் உறுதியா சொல்லமுடியும்,…..காரணம்….இதோ இந்த ஃபைல்ல உங்க குடும்பத்தை பற்றி என் ஆளுங்க சேகரிச்ச விசயம்…. இதுல இருக்கு….. சின்ன வயசுல யாரையும் எதிர் பாக்கம உங்க திறைமையினால தொழில் உலகத்துல இவ்வளவு கம்பெனிஸ் உருவாக்குன நீங்க, வி.கே,எஸ். கம்பெனியோட டீலீங் வச்சுக்க எத்தனை கம்பெனிஸ் நான், நீனு,… போட்டி போட்டுகிட்டு… முந்துறாங்க….அந்த அளவுக்கு பேரும், புகழும், உங்களுக்கு இருக்கு, இப்போ உங்க தம்பி சக்தி பேருல ஆரம்பிச்சு கடந்த ரெண்டு வருசமா நடத்திகிட்டு வர்ர சக்தி ஹோம்ஸ்… ஆதரவற்றங்களுக்கும், விதைவை பெண்களுக்கும், உங்க தம்பி வயதினருக்கும், நீங்க கொடுக்குற அன்பும், அரவணைக்குற தந்தையாவும் இருக்குறேங்க….. இப்படி இருக்குற நீங்க உங்க தம்பி சக்திய கொன்னது… என் மனைவிதானு தவறா நினைக்குறேங்க…… உங்க தம்பி இறந்ததுக்கு என் மனைவி காரணம் இல்லை…..’ வெற்றியை பற்றி அனைத்தையும் கூறி…அவன் தம்பி சக்தியின் பெயரில் நடத்தும் இல்லம் அவ்வளவாக யாருக்கும் தெரியாத போது இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்க ஆரம்பித்தான் வெற்றி……கடைசியாக…..ச்கதியின் இறப்பிற்க்கு வாசுகி இல்லைனு எதை வைத்து சொல்லுகின்றான்…

“உங்க மனைவி வாசுகிய காப்பாற்ற இது என்ன புது கதை சொல்லுறேங்க வாசு….”

‘புது கதை இல்லை…வெற்றி….பழைய கதை தான்….. இதோ இந்த ஃபைல்ல உங்கள பற்றியும் சேகரிச்ச விசயம் இருக்கு….. மீனலோக்‌ஷினி… நினைவு இருக்கா….’ வாசு அந்த பெயரை சொன்னதும்… வெற்றிக்கு….அவனின் கடந்த காலம் நியாபகம் வந்தது….  எப்படி மறக்கமுடியும்….அவள் என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி போல் அல்லவா…..அதை எப்படி மறக்க முடியும்…. முடியவே முடியாது…. அவளை மறந்தால் என் கண்களே இல்லை என்று அர்த்தம்…. ஆனால் அவளுக்கு, என் தம்பிக்கும் என்ன சம்மந்தம்…அது தான் புரியவில்லை….. என்ன சொல்கிறான் இந்த வாசுதேவ்…… ‘ என்ன வெற்றி….. மீனலோக்‌ஷினி பெயரை கேட்டதும் இப்படி அதிர்ச்சியா இருக்கேங்க….. என்னடா…. உங்க காதலிய பற்றி நான் சொன்னது அதிர்ச்சியா இருக்கா வெற்றி….’

“என்… என்ன சொல்லுற வாசு……… மீனாவுக்கும், என் தம்பிக்கு என்ன சம்மந்தம்… என் குடும்பத்தை பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாதே, அப்படி இருக்க….. இதில் எப்படி மீனா உள்ளே வந்தால்….”

‘மீனலோக்‌ஷினி…..மறக்க முடியுமா உங்களால….என்ன வெற்றி…..’

“வாசு… என்னடி….இப்படி அமைதியா இருக்குற…. நீ வந்ததும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்….. நீ என்னடான…..அமைதியா இருக்க…. அண்ணாவவிட்டுட்டு இருக்க முடியலையா….சொல்லு டி…..”… மலர், வாசுகியின் அமைதியை பார்த்து கேட்க….. “இல்லை டி…..”… ‘எதையோ மறைக்கிற…. பார்த்துகிறேன்…. சரி சாப்பிட வா… அத்தை உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாங்க….. வா.. சேர்ந்து சாப்பிடலாம்…’ வாசுகியை அழைத்து சென்றால்….

‘வசும்மா…உனக்கு பிடிச்ச.. எல்லாம் ஐயிட்டமும் செஞ்சுருக்கோம்…., சாப்பிடு… வா …. மலர்… இலக்கியன் எங்க…. அவனையும், மாமாக்களையும் அழைச்சுட்டு வா சாப்பிட…’ ஜானகியும், யசோவும் கூற…. “ சரிங்க அத்தை….”…

’அனைவரும்… ஒன்றாக அமர்ந்து வாசுகியிடம் பேசிகொண்டே சாப்பிட்டனர்… ராமனுக்கோ….நேற்று நடந்ததை, வாசுகிக்கு தெரிந்திருக்குமோ…. அப்படி தெரிந்திருந்தால் இன்நேரம்….. வாசுகியே என்னிடம் கேட்டுயிருப்பாளே….. இல்லை, வாசுதேவ்வே அனைவரின் முன் நடந்தை கூறியிருப்பானே….. வசும்மா ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றால்…. எதுவோ சரியில்லை அவர்களுக்குள்…. அவர் நினைத்துகொண்டிருக்க….. ‘என்னங்க சாப்பிடாம வசும்மவா பார்த்திட்டு இருக்கேங்க…. சாப்பிட்டு உங்க பொண்ணுகிட்ட பேசுங்க…..’ யசோ அவரின் நினைவை கலைத்தார்….

“அக்கா… வசும்மா இத்தனை நாளா வீட்டுக்கு வரலையில்லையா அதான்   இப்போ வசும்மா பக்கத்துல இருக்குறாலா, இல்லையானும் பார்த்துகிட்டே இருக்காங்க மாமா…. என்ன மாமா..” ஜானகி… ராமனை கேலிசெய்தார்…

‘பின்ன இருக்காதா ஜானு….அவர் பொண்ணாச்சே…வசும்மா….அதான்…. ஜானு…, பொண்ணு புருசன் வீட்டுக்கு போனப்பின்னாடி நான் அழுதேனோ இல்லையோ உன் மாமா…அன்னைக்கு இரவு முழுக்க அழுதிட்டு இருந்தாரு….’ யசோவும் சேர்ந்து கிண்டல் செய்ய….. ‘ஜானகி…. நானாச்சும்…இரவு முழுவது வசும்மாவா நினைச்சு ஃபீல் பண்ணே…..ஆனா உன் அக்கா இருக்காளே….. தினமும் வசும்மா நினைச்சு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டா…. வசும்மாவ பார்த்துட்டு வரலாம் வாங்க, வாங்கனு, என்னைப்போட்டு பாடுபத்திட்டா…. இதுக்கு நான் பரவாயில்லை என்ன ஜானகி’ யசோ செய்ததை அவர்களிடம் சொன்னார்…. ‘ என்னை கேலி செய்யலைனா உங்களுக்கு தூக்கம் வரதே….. சாப்பிடுங்க..’ அனைவரும் பேசிகொண்டே சாப்பிட்டனர்….. ஆனால் அவர்களின் பேச்சை காதில் வாங்கமால் அமைதியா சாப்பிட்டு எழுந்தால் வாசுகி..

“அத்தை…. வாசு வந்ததில இருந்து அமைதியா இருக்கா… அவளை வெளிய கூப்பிட்டு போயிட்டு வரலாம…..”

‘ஆமாம் மலர்… என்னாச்சு அவளுக்கு…. நீ எதுவும் அவகிட்ட கேட்டயா…. என்ன சொன்னா’

“எதுவும் பேசல அத்தை…. நீங்க வேணா வாசுகிட்ட கேளுங்க அத்தை… உங்ககிட்ட அவ சொன்னாலும் சொல்லலாம்…. வாசுகிட்ட பேசிப்பாருங்க அத்தை…”.. ‘ம்க்கும்…..என்கிட்ட சொல்லிட்டு தான் மறுவேளை பார்ப்பா…. யசோ அக்கா நீங்க கேட்டுப்பாருங்க….’ “ சரி நான் பேசுறேன்…. மலர், நீயும்..இலக்கியனும் இன்னைக்கு ஃப்ரியா இருந்தேங்கனா அவளை கூப்பிட்டு வெளியப்போயிட்டுவாங்க… சரியா…. தம்பிக்கு இன்னைக்கு எதுவும் முக்கிய வேளை இருக்கானு கேளும்மா….’.. “சரிங்க அத்தை..”

‘என்னங்க இன்னைக்கு வெளிய போகனும்…. எதுவும் முக்கியமான வேளை இருக்கா…. உங்களுக்கு…. ரூம்க்குள் நுழைந்தவுடன் மலர் கேட்க….. “இல்லைமா இன்னைக்கு வெறும் ஒபி மட்டும் பார்க்கனும்… எதுக்கு கேட்க்குற.. விழி”.. ‘நானும் ,வாசுவும் வெளிய போகனும்…. அத்தை உங்களை துணைக்கு கூப்பிட்டு போகச்சொன்னாங்க… அதான் ஃப்ரியானு கேட்டேன்…..போகலாம….’ “சரி நான் லீவ் சொல்லிட்டுவரேன்…வாசுவ ரெடியா இருக்க சொல்லு…”.. ‘ ஒகேங்க வாசுகிட்ட ரெடியாக சொல்லிட்டு வரேன்…..’… “எங்க போகலானு வாசுகிட்ட கேளும்மா…. அவளுக்கு பிடிச்ச இடம் என்னனு கேட்டு வா….”.. ‘உங்க தங்கச்சிக்கு எங்க ஜிகர்தண்டா கொடுத்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டா…. இதுல அவளுக்கு பிடிச்ச இடத்தை கேட்டா…. ஊருல இருக்குற எல்லாம் ஹோட்டலையும் சொல்லுவா…. இதை எதுக்கு அவகிட்ட கேட்டுகிட்டு…. நானே சொல்லுறேன்… அவளுக்கு பிடிச்ச இடத்தை…’… “என்ன உனக்கு நீயே பேசிட்டு இருக்க…”.. ‘இல்லை… ஒண்ணுமில்லை…. வசுகிட்ட எந்த இடம் சொல்லாலமுனு யோசிக்கிறேன்….’… “ நான் கேட்டது… வசுக்கு பிடிச்ச இடம்….. உனக்கு பிடிச்ச இடம் எனக்கு தெரியும்…. போ.. போய் வசுவ ரெடியாக சொல்லு….”…. ‘ பாருடா… டாக்டருக்கு எனக்கு பிடிச்ச இடமெல்லாம் தெரியுமா…. பார்க்கலாம்…. அடுத்த மாசம் என் பிறந்த நாளுக்கு எங்க கூப்பிட்டு போறாருனு…. அன்னைக்கு இருக்கு உங்களுக்கு…..’ மனதுக்குள்ளே பேசிக்கொண்டால்… “இன்னுமா நீ போகலை…”… ‘இதோ போறேங்க….’ மலர் வாசுகியை பார்க்க அவள் அறைக்கு போனால்…

“வாசுகி… எங்கோ வெறித்து பார்த்துகொண்டிருந்தால், அவள் அருகில் சென்று, வாசுகியை அழைத்தால்… ‘வசு….டி… வாசு…. மலர் அவளை தொட்டு அழைத்துக்கொண்டிருந்தால்…..ஆனால் அவள் எதுக்கும் அசைந்து கொடுக்கவில்லை…. என்னாச்சு இவளுக்கு…. கூப்பிட்டுட்டு இருக்கேன் எங்கயோ பார்த்துட்டு இருக்கா…. என்ன செய்யலாம்… ம்ம்ம்… இப்போ பாரு….  “ வாங்க அண்ணா….இன்னைக்கு காலையில தானே வாசுவ இங்க விட்டு போனேங்க அதுக்குள்ள என்ன திடீர்னு…. வந்திருக்கேங்க…” அவளின் கணிப்பு பொய்யாகமல்…. வாசுகி… கனவில் இருந்து வெளிவந்தால்… ‘ வசி…. வந்திருக்காரா… எங்க மலர்…. அவரு…. வசி… வந்துட்டேங்களா…’ வாசுகி அந்த அறை முழுவதும் தேடிப்பார்த்தால்…..’.. “ஹே வாசு… அண்ணா வந்திருக்காங்கனு பொய் சொன்னே…. அதுக்கே…. இப்படி..தேடுற…. அப்போ அண்ணா உண்மையில இப்போ வந்தா… அவங்க கூடவே கிளம்பி போயிருவ போலவே….” மலர், வாசுதேவ் வைத்து பொய் சொன்னதும், வாசுகிக்கு… கவலையாகிவிட்டது….. பொய் என்றது…. வாசுகி சோர்ந்து போனால்…. அதை மலர் பார்த்ததும்…. ‘சாரி டி… பொய் சொன்னதுக்கு…… வந்ததுல இருந்து அமைதியா இருக்க… அதான் உன்னை வெளிய கூப்பிட்டு போக அத்தை சொன்னாங்க அதான் உன்னை ரெடியாக சொல்ல வந்தேன்…. ஆனா நீ எங்கயோ வெறிச்சு பார்த்துட்டு இருந்த… அதான் அண்ணா வந்திருக்கங்கனு பொய் சொன்னே….’.. “இனியும்… நாம் இப்படி இருந்தால்… அவருக்கும், எனக்கும் சண்டைனு நினைப்பாங்க….. நார்மலா இருக்கனும்… அப்போ தான் எதுவும் நினைக்க மாட்டாங்க….வாசுகி மனதி நினைத்துகொண்டு…. மலரிடம் வெளிய போகலாம் நான் ரெடியாகுறேன்… மலர்..” வாசுகி… வெளிய போகலாம் என்று சொன்னவுடன்…. மலர்… ‘ இப்போ தான் எங்க வாசு பழைய படி பேசுறா சரி நானும் ரெடியாகனும்… சீக்கிரம் கிளம்பு….’…  வாசு தன் மாற்றத்தை யாரும் அறியக்கூடாது… என நினைத்துகொண்டால்…

’கடற்கரை….  அலையில் கால் நனைத்து…. சிறு குழந்தைகள், முதல் கொண்டு, காதலர்கள் வரை அனைவரும் கவலைகள் மறந்து….. அந்த அலைகளோடு… விளையாடிக்கொண்டிருந்தனர்…. அதில்… மலரும் அலைகளை, ரசித்து விளையாடிக்கொண்டிருந்தால்….. “என்னங்க….வாங்க…, ஏய் வாசு… வடி… உனக்குதான் கடல் அலைனா ரொம்ப பிடிக்குமே… வா… மலர் இருவரையும் கைபிடித்து இழுத்து சென்று அவர்களை  கடல் அலையின் நனையவிட்டால்… “ஹே மலர்… போதும், டி….மலர், நீரை கையில் எடுத்து வாசுகியின் மேல் தெளித்து விளையாடினால்….”. இலக்கியனையும் விடவில்லை மலர்….’ ஒரு கட்டதில் அலைகளில் இருந்து வாசு கரைக்கு வந்துவிட…., மலரும், இலக்கியனும் ஒன்றாக அலைகளில் கால்களை நனைத்தனர்…. அவர்களை பார்த்ததும்… வாசுகிக்கு…. வசியின் நினைவு வந்தது….. அவரும் இங்க என்கூட இருந்திருந்தா… நானும்… அவங்களை போல… கடல் அலையில என் வசியோட நின்றுருப்பேன்…. வாசுகி, வாசுதேவ்வின் நினைவில் இருக்க…. அவள் கண்களை  ஒருவர்….. அழுத்தி மூடிகொண்டு…. ”வாசு… நான் யாருனு கண்டுபிடி..” வாசுகி தன்னை யார் என கண்டுபிடிப்பாளா….

” ஹே யாரு…. எனக்கு தெரியலை நீங்க யாருனு.. தெரியலை ஃபீளீஸ் கை எடுங்க…..மலர், அண்ணா…” வாசுகி பக்கட்தில் இருக்கும் அவர்களை அழைக்க… ‘கண்களில் இருந்து கையை எடுத்து… வாசுகியை அவள் பக்கம் திருப்பினால் கலை…… “வாசு… நான் தான் கலை…., என்னை தெரியலையா… நாம ரெண்டு பேரும் ஒன்னா காலேஜ் படிச்சோம் நியபகம் இல்லையா… வாசு…” கலை வாசுகியிடம் கேட்டுகொண்டிருக்க…. அதை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்த கதிர்…. அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்…. இங்கு வாசுகியோ…. ‘ நீங்க யாருனு எனக்கு தெரியலை…..சாரி… காலேஜ்ல நான் உங்க கூட படிச்சேனா…. இல்லை…. என்கூட படிச்சது…. என் ஃப்ரண்ட் கண்ணனும், மலரும் தான் என்கூட படிச்சாங்க… நீங்க வேற யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கேங்க….’ வாசுகி சொல்ல…. “ இல்லை வாசு… நான் ஃப்ரண்ட்…. கலைவாணி…. பக்கத்தில் வந்து நின்ற கதிரை பார்த்ததும், இதோ கதிர்… நியாபகம் இருக்கா… எனக்கும், கதிர்க்கும் ரீஜிஸ்ட்டர் மேரேஜ்க்கு நீ கூட இருந்த டி….., நீ, கதிர், சரண், விஷ்… கலை விஷ்ணுவின் பெயர் சொல்லுப்போகும் பொழுது…. கதிர்…. கலையின் கையை பிடித்துகொண்டான்… கலையோ அவனை ஏன்?? எனப்பார்க்க… அவனோ வேண்டாம் என தலையசைத்தான்…..” …. ‘சாரி… நீங்க யாருனு எனக்கு தெரியலை…. உங்க மேரேஜ்க்கு நான் இருந்தேனா…. நீங்க என்ன சொல்லுறேங்கனு எனக்கு தெரியலை…’ வாசு, கலையையும், கதிரையும், தெரியவில்லை… எனக்கூறியதும்… கலைக்கு அழுகை வந்துவிட்டது…. “கதிர் இவளுக்கு நான் யாருனு தெரியலைனு சொல்லுறா… என்னனு கேளுங்க கதிர்…”.. கலை, கதிரிடம் பேசிகொண்டிருந்த பொழுது… மலரும் இலக்கியனும்… வாசு யாரிடமோ பேசிகொண்டிப்பது… கண்ணில் பட்டது….. அதை பார்த்ததும் அவர்களின் அருகில் சென்றனர்…

“என்ன வாசு உனக்கு தெரிஞ்சவங்களா…. இவங்க…” மலர் வாசுவிடம் கேட்க… ‘ ம்கும்… இவங்க யாருனு எனக்கு தெரியலை… என்கிட்ட, நானும், இவங்களும் காலேஜ்ல ஒன்னா படிச்சோனு சொல்லுறாங்க… ஆனா, நாம மூனு பேரும் தான் ஒரே காலேஜ்ல படிச்சோம்…….இவங்க கல்யாணத்துக்கு கூட நான் இருந்தேனு சொல்லுறாங்க மலர்….’… மலர், கலையையும், கதிரையும் பார்க்க… “சாரி.. இலக்கியன்…. என் மனைவி… அவளோட ஃப்ரண்ட்னு நினச்சு… உங்க தங்கச்சிக்கிட்ட பேசிட்டாங்க… கலை… இந்த பொண்ணு இல்லைமா… அந்த பொண்ணு வேற…. வா போகலாம்…”.. கலையை சமாதானம் செய்து அழைத்து செல்லும் போது…” ‘என் பேரு எப்படி உங்களுக்கு தெரியும்….’… இலக்கியன் கதிரை பார்த்து கேட்க…. “வாசுதேவ்… அவங்களுக்கு என்னை தெரியும், உங்க ரெண்டு பேரோட மேரேஜ்க்கு நான் வந்திருக்கேன்… அப்போ தான் உங்களை பற்றி அவங்க சொன்னாங்க….” கதிர் இலக்கியனிடம் சொல்லிச்சென்றான்… ஆனால் வாசுகி…. கலை… தன்னிடம் ஒரே கல்லூரியில் படித்தவள் எனக்கூறியதும் அவளது மூளை யோசனைக்கு தாவியது… வாசுகியின் முகத்தை பார்த்த மலர்… இவளை இப்படியே விட்டா… இன்னைக்கு முழுவதும் இப்ப வந்துட்டு போனவங்களை பற்றி யோசிக்க ஆரம்பிச்சுருவா…. விடக்கூடாது… “வசு… வா… அலையில ஆட்டம் போட்டதுக்கும் நல்லா பசிக்குது… நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிட போகலாம்… என்னங்க வாங்க… போகலாம்… “ வசுவின் யோசனையை கலைத்து…. அவளை அழைத்து சென்றால் மலர்…

‘என்ன கதிர், வாசுக்கு என்ன தெரியலைனு சொல்லுறா…. என்ன தெரியாத மாதிரி நடிக்கிறாலா, இல்லை… உண்மையில அவளுக்கு என்னை தெரியலையா….’.. “ வாசுகிக்கு எல்லாம் மறந்துருச்சு…. வணி…. அவளுக்கு பழைய விசயங்கள் ஞாயபகம் இல்லை…. எனக்கு முன்னாடியே தெரியும்….”.. ‘ உங்களுக்கு முன்னாடி தெரியுமா அவளுக்கு கடந்த காலம் நினவு இல்லைனு… எப்போ தெரியும்…’.. “வாசுகிக்கும், விஷ்ணுவோட அண்ணாவுக்கும் கல்யாணம் ஆகும் போது…. அவங்களோட… நிச்சயதார்த்தம் அன்னைக்கு வாசுதேவ்கிட்ட, வெற்றிய பற்றி சொல்லபோனே…., ஆனா வாசுதேவ் என்னை மீறி என் சுகிய யாரும், எதுவும் செய்யமுடியாதுனு சொல்லி… இனிமே… நானே பார்த்துகிறேன்.. சொன்னாங்க… அதுகடுத்து, வாசுதேவ்…. என்னை வாசுகிக்கு இண்ட்ரோ கொடுக்கும் போது… என்னை யாருனு கேட்டாங்க… அப்போவே எனக்கு தெரியும்… அவளுக்கு பழைய ஞாயபகம் இல்லைனு…….”. ‘என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையே கதிர்…’ “சொன்னா நீ வருத்தப்படுவ…. அதான்…’.. “கலையை சந்தோஷமாக கடற்கரைக்கு அழைத்து வந்தவன்….அழைத்து வந்த இடத்தில்… வசுவை பார்த்ததும்… அவளை நோக்கி சென்றால்.… காலேஜில் படிக்கும் போது செய்யும் குறும்புத்தனத்தை….. இன்று வாசுகியை நேரில் பார்த்ததும் அவளுக்கு சந்தோஷத்தில் வசுவின் கண்களை பொத்தி அவளுக்கு சப்ரைஸ் கொடுக்க நினைத்தவள்… தன்னை யாரென்று தெரியவில்லை என சொன்னதும் கலைக்கு மனது சங்கடமாகிப்போனது….. கதிர் அவளுக்கு பழைய நினைவு இல்லை எனக்கூறினாலும்…. சமாதானம் ஆகவில்லை… கலை…’

“வெற்றி…. மீனலோக்‌ஷினி…. வேற யாருமில்லை… சுந்தரபாண்டி ஐ.பி.எஸ். அவரோட ஒரே தங்கச்சி தான்… இந்த மீனலோக்‌ஷினி….. இப்போ அந்த பொண்ணு எந்த நிலைமையில இருக்கானு தெரியுமா….?????  ‘சுந்தரபாண்டி… ஐ.பி.எஸ்.. நான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா பார்த்ததில்லை… அவளுக்கு என்னாச்சு… வாசு…. சொல்லு… அவ எங்க இருக்கா ஏன் இத்தனை வருசமா என் கண்முன்னாடி வரமா இருக்கா…. சொல்லு வாசு…’

“இப்போ அந்த பொண்ணு.. அவளை அறியாமலேயே இருக்கா…. அவளுக்கு தான் யாருனு தெரியாத நிலையில இருக்க காரணம்…. உங்க ஆபீஸ் புரடெக்ஸன் டீம்ல இருக்குற… ராம்குமார்,பாலா,சபரிஸ்,கோகுல்.. இவங்க தான் உங்க மீனலோக்‌ஷினி நிலைமைக்கு காரணம்…. இதுக்கு மேல நான் சொன்னதை உங்களால நம்பமுடியலைனா…. இந்தாங்க… இந்த ஃபைல்ல.. அதுக்கான ஆதாரம் இருக்கு….. இதை பார்த்த பின்னாடியும்… உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா….என் சுகி உயிர்க்கு பதில் என் உயிரை எடுத்துக்கோங்க வெற்றி…. நான் வரேன்….” வாசுதேவ்… தன்னால் முடிந்த அளவுக்கு சுகியை காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தான்….. ஆனால் இன்னும்.. அவனுக்கு ஒரு ஆதாரம், அசோக் பற்றி தனக்கு தெரிந்துவிட்டால்… சக்தியின் இறப்புக்கு யார் காரணம் என தெரிந்துவிடும்…..”

 

                                            உன்நினைவுகள் தொடரும்……..

 

Advertisement