Advertisement

             நினைவுகள் 16

 

”விஷ்ணுவின் அறையில் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தால்….வசு…… ச்சே…கதிர் காதல் சேர்ந்துச்சா…..இல்லையா,…வாசுகி…அவனுக்கு மெசேஜ் பண்ணதுக்கு…அவன் ரீப்ளே பண்ணான…..அய்யோ….அதுகடுத்து என்னாச்சு எப்படி நாமா தெரிஞ்சுருக்கிறது”என விஷ்ணுவின் அறையில் தேடிகொண்டே…இருந்தால்…..ஆனால் அவளுக்கு தேடியது கிடைக்கவில்லை..

‘டிங்..டிங்..’என மெசேஜ் டோன் வர…..சாப்பிடிகொண்டிருந்த விஷ்ணு அவன் செல்போனை பார்க்க……”அம்மு”என அவளின் பெயர் போட்டு பதித்து வைத்திருந்தான்…

“தேவ் சாப்பிடாம என்ன பண்ணுற” என ராதா அவனை அதட்ட.

‘முகியமான மெசேஜ் ம்மா….அதான் பார்த்துட்டு இருந்தேன்….. “சாப்பிட்டு அதுகடுத்து என்ன வேலைனாலும் செய்…ஆனா சாப்பிடும் போது செல் போன் பார்க்காத சரியா…இப்போ சாப்பிடு’ என்றார்.

“சரிம்மா”

’என்ன…. இன்நேரம் மெசேஜ்,பார்த்துருக்கனுமே…………….ஒருவேளை தூங்கிட்டானோ…..சரி எப்படியும் மெசேஜ் பார்த்துட்டு நாளைக்கு பேசுவாங்கள அப்போ பார்த்துகலாம்’என போனை டேபிளில் வைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தால்.

“அவனோ…..வேகமாக சாப்பிட்டு எழுந்தான்….அவள் என்ன மெசேஜ் அனுப்பிருப்பாள் என்று…. “என்கிட்ட என்ன சொல்லனும் சீனியர்…ஃப்ரீயா இருக்கேன்” மெசேஜை திருப்பி,திருப்பி படித்துகொண்டிருந்தான்….

‘என்ன அனுப்பலாம்….ம்ம்ம்….என அவன் யோசித்துகொண்டு இருந்தான்…..இப்போனு பார்த்து ஒண்ணும் வார்த்தை  வரலையே…..அவன் புலம்ப……அவனுக்கு பால் எடுத்து வந்த ராதா…அவன் புலம்புவதை பார்த்து….. “என்ன தேவ்..தனியா பேசிட்டு இருக்கிற”

‘ம்மா…..ஒண்ணுமில்லைம்மா….. “சரி பால் குடிச்சுட்டு தூங்கு’

“சரிம்மா”

‘பால் குடித்துகொண்டே…. “உன்கிட்ட நேருல பேசனும்….அம்மு…என் மனசுல இருக்கிறத….அப்புறம் நிறைய பேசனும் மனசுவிட்டு…..ஈவ்னிங் ஃபார்க்ல உனக்காக வெயிட் பண்ணுவேன் கண்டிப்பா வரனும்’என மெசேஜ் செய்தான்..

“வாசுகியின் செல்போனின் மெசேஜ் டோன் வந்த ஒலியை கேட்ட யசோதா என்னவென்று பார்க்க அவளின் ஃபோனை எடுத்தார்…..அதற்குள் ராமன்  “இங்க என்ன செய்யிற யசோ”………….. ‘வசு ரூம் லைட் எரிஞ்சுட்டு இருந்தது அதை ஆஃப் செய்ய வந்தேன்….அவ ஃபோன்ல இருந்து சத்தம் வந்தது அதான் என்னனு பார்க்க எடுத்தேன்’………. “கலை….இலையினா…பாப்பாவோட ஃப்ரண்ட்ஸ் யாராவது ஃபோன் செய்ஞ்சுருப்பாங்கா….வைச்சுட்டு வாம்மா…தூங்கலாம்”……………..’ ‘சரிங்க’….என அவளது ஃபோனை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு சென்றார்.

’விஷ்ணுவோ………..காலேஜில் அவளுக்காக காத்திருந்தான்…..ஆனால் கலை மட்டும் காலேஜ்க்கு வந்திருந்தால்……அவளிடம் வசுவை பற்றிக்கேட்டான்.. “அவளுக்கு உடம்பு சரி இல்லைணா…அதான் வரலை….எனக்கே அவங்க அப்பா காலேஜ் வந்துதான் சொல்லிட்டு போனாங்கணா”……………..சரிம்மா…

“விஷ்ணுவுக்கு அந்த நாளே ஓடவில்லை….சரணும்..கதிரும் என்னவென்று கேட்டு விசாரித்துவிட்டனர்….ஆனால் அவன் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை………மாலையில் விஷ்ணு பைக் எடுக்கவந்தான்….அவன் பின்னிருந்து ஒரு குரல்……. ‘அங்கில்’என ஒரு குழந்தை அவன் பசட்டையை பிடித்து இழுத்தது……..விஷ்ணு திரும்பி அந்த குழந்தை பார்த்து “ யாரு  பாப்பா நீங்க…யாருகூட வந்தேங்க”என அந்த குழந்தையிடம் கேட்டான்… அந்த குழந்தையோ…. ‘அங்கில்……இந்த ஃகிப்ட் பாக்ஸ…என் அக்கா கொடுக்க சொன்னாங்க’என்று அவனிடம் அந்த ஃகிப்டை கொடுத்துவிட்டு அவன் கன்னதில் முத்தம் ஒன்றை பத்திதுவிட்டு சென்றது அந்த குழந்தை…… “ஏய் பாப்பா…யாரு உங்க அக்கா…சொல்லிட்டு போமா”……என அவன் குழந்தையிடம் கேட்க……அச்சிறுமியோ….. ‘வேகமாக ஓட்டம் பிடித்தால்’..

“யாரா இருக்கும்…இந்த ஃகிப்ட் கொடுத்தது….என சிந்தனயுடன்  அதை பிரித்தான்…….உள்ளே அழகிய வடிவம் கொண்ட கண்ணன்,ராதா சிலை வெண் பளிங்கு கல்லில் செய்த்து போல இருந்தது…………..அதன் கீழே…ஒரு லெட்டரும் இருந்தது…அதை எடுத்து படிக்க ஆரம்பித்தான்……..

’என்ன சீனியர்…..காலேஜ் வரலையினு பயந்துட்டீங்களா…….. அப்பா.. அம்மாகூடா வெளிய போரேன்…அதான் காலேஜ் வரமுடியலை….இன்னைக்கு காலையில தான் உங்க மெசேஜ் பார்த்தேன்..எதுக்கு ஃபார்க் வரனும் சீனியர்…என் அப்பா கொஞ்சம் ஸ்டிரிட் ஆபீஸ்சர்….அதனால நீங்க சொல்ல வந்ததை என்கிட்ட இன்னைக்கு நைட் மெசேஜ்ல சொல்லுங்க……கண்ணன், ராதா சிலை எப்படி இருக்கு…..இது என்னுடைய ஃகிப்ட்…………பார்த்து பத்திரமா வச்சுகோங்க…..என் ஃப்ரண்ட் கலையும்,கதிர் அண்ணவும் இன்னும் ஒருவாரத்துல ஒண்ணு சேர்ந்துடுவாங்க,சேர்த்து வச்சது நீங்க…..அதுகான முதல் ஃகிப்ட் என்னது…ஓகே…பை சீனியர்’ என அந்த லெட்டரில் இருந்த்தை படித்துமுடித்தான்……

‘கலையும்,கதிரிடம் எப்படி பேசுவது எனத்தெரியாமல் ஒவ்வொரு நாளையும் கடத்தினால்….ஆனால் கதிர், அவளை கண்டுகொண்டதாக தெரியவில்லை…இதனிடையே….வாசு….கலையையும்,கதிரையும் சேர்த்து வைத்து ஓட்டிக்கொண்டிருந்தால்’

“சார்….கதிர் தம்பி ஒரு பொண்ண காதலிக்கிறது உண்மைதான்…..இதோ அந்த பொண்ணு போட்டொ….சார் ரெண்டு பேரும் ஒரு காஃபி ஷாப்பில் சந்திச்ச போது எடுத்த போட்டோ…..சார் இதுக்கு சக்தி தம்பியும் உடந்தை சார்….அவரும் அன்னைக்கு காஃபி ஷாப்பில இருந்திருக்காங்க…….கதிர் தம்பிக்கு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் சார்….சரண்,விஷ்ணுதேவ்…..என கதிரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவனை பற்றி விசாரிக்க சொன்னதும்,இப்பொழுது அவன் ஒரு பெண் பின்னாடி சுற்றுவதும்…இது எல்லாம் தெரிந்த சக்தி தன்னிடம் எதுவும் கூறாமல் மறைத்ததும்… அவனுக்கு கோவம் வந்தது……என்ன செய்யலாம் சார்…அந்த பொண்ண தூக்கிடலாமா…….மிரட்டாலாம சார்…என இதை சேகரித்து வந்தவன்…வெற்றியிடம் கேட்டான்.

‘இப்போதைக்கு……………எதுவும் செய்யவேணாம்…..கண்காணிச்சுட்டே இரு….அவங்க எதாவது தப்பா செஞ்சா…பார்த்துகலாம்…அந்த பொண்ணு அட்ரெஸ்..மட்டும் விசாரி’

“சார்…இன்னும் ஒரு விசயம் இருக்கு”

‘என்ன???’

“சக்தியும் ஒரு பொண்ண விரும்புறாங்க  போல சார்…அந்த பொண்ணும்,தம்பி படிக்கிற காலேஜ்ல தான் படிக்கிறாங்க”

‘பார்த்துக்கலாம்…இப்போதைக்கு….கதிர் விசயத்தை பார்ப்போம்’என்றார்.

“அன்று லெட்டரை படித்த பின்…விஷ்ணு,வாசுகிக்கு எந்த மெசேஜும் செய்யவில்லை…..அவளும் ஒவ்வொரு இரவிலும் அவனது மெசேஜ் வருமா என பார்ப்பதையே கடமையாக கொண்டால்…….ஆனால் அவளுக்கு மெசேஜ் வந்தபாடில்லை………….ஒரு நாள் அவனை நேரில் காணும் போது….அவனை வழி மறித்து நின்றால்….. “அன்னைக்கு ஏன் மெசேஜ் செய்யல சீனியர்… உங்க மெசேஜ்க்காக நான் எத்தனை நாள் காத்திருந்தேனு தெரியுமா”என அவள் கேட்க..

‘நீங்க எதுக்கு..என் மெசேஜ்க்கு காத்திருக்கனும்….அன்னைக்கு உன் ஃப்ரண்ட்க்கும்,என் ஃப்ரண்டுக்கும் லவ் ஃப்ரப்லம்…அதனால உன்கிட்ட பேசனும் சொன்னே….ஆனா அவங்களே இப்போ ஒண்ணு சேரப்போறாங்க அப்புறம் என்ன???? நான் உன்கிட்ட பேசனும்…உன் பேர்கூட எனக்கு தெரியாது…..அப்புறம் எதுக்கு எனக்கு ஃகிப்ட் கொடுத்த……எதுக்கு நான் உனக்கு மெசேஜ் பண்ணனும்…சொல்லு…நீ என்னை காதலிக்கிறயா….அப்புறம் எதுக்கு என் மெசேஜுக்கு வெயிட் பண்ணற…இங்க பாரு…காலேஜ்க்கு படிக்க வந்தா அதை மட்டும் செய்….வீணா என் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாத…சரியா…தள்ளு’என அவளை தாண்டி சென்றான் விஷ்ணு..

“அவளோ ஆணி அடித்தார் போல அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தால்…. சக்தி அவளை உலுக்கும் வரை…. “என்ன வாசுகி…இங்க நின்னுட்டு இருக்குற…..அரைமணி நேரமா…என்னச்சு உனக்கு…எனித்திங் ஃப்ரப்லம்”என அவளை கேட்டான்…. ‘நத்திங்……நான் கிளம்புறேன்’என்று அவள் வந்தவழியே திரும்பி சென்றால்.

‘நானா அவகிட்ட அப்படி பேசுனே’ என்னபத்தி எப்படி நினைச்சிருப்பா….. அவள நேருல பார்க்கும் போது என் காதல சொல்லனும் நினைச்சேன்….. ஆனா…அவள என் அண்ணா விரும்புறானே….எப்படி நான் என் காதல சொல்லமுடியும்…..எனக்காக எல்லாமே செஞ்சுருக்கான் அவனுக்காக நான் ஒண்ணுமே செய்யல…..அவன் முதல ஆசைப்பட்டதை நான் எடுத்துகிட்டா அவனுக்கு வலிக்குமே……வாசு காதலிக்கிற பொண்ணு வாசுக்குதான்…. இனிமே அவளை பார்க்கவே கூடாது…என முடிவெடுத்துகொண்டு உறங்கினான்…

காதல் வளர்த்தேன்… 
காதல் வளர்த்தேன்… 
என் உசுருகுள்ள கூடு கட்டி 
காதல் வளர்த்தேன் 

பூவின் முகவரி காற்று அறியுமே 
என்னை உன் மனம் அறியாத… 
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் 
உன்னை பார்த்ததும் பொழியாத… 
பல கோடி பெண்ண்கள் தான்… 
பூமியிலே வாழலாம் 
ஒரு பார்வையால் மனதை 
பரித்து சென்றவள் நீ அடி… 
உனக்கெனவே காத்திருந்தாலே 
கால் அடியில் வேர்கள் முழைக்கும் 
காதலில் வழியும் இன்பம் தானேதானே… 
உனது பேரெழுதி பக்கத்திலே 
எனது பேரை நானும் எழுதி வெச்சேன் 
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் 
மழை விட்டும் நான் நனைஞ்சேன்.. 

”என்ன…எதுக்கு இப்போ வந்து என் முன்னாடி நிக்கிற”

‘கதிர்…..எனக்கும் என் அத்தை பையனுக்கும் கல்யாணம் தேதி முடிவு பண்ணிட்டாங்க’

“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்……..போய் உன் அத்தை பையன கல்யாணம் பண்ணிக்கோ”

‘கதிர் எனக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை,நான் உன்னைதான் காதலிக்கிறேன்’

“என்னது என்னை காதலிக்கிறையா….குட் ஜோக்….அதான் அன்னைக்கு என்னை விரும்பலைனு சொல்லிட்டு போன…இப்போ என்ன உனக்கு ஞானோதயம்”

‘அவளோ,அவனை நன்றாக முறைத்துவிட்டு…அவன் எதிர் பார்க்காத சமயத்தில் பளார் என அறைந்தால்…. “என்ன…..நானும் அப்போ இருந்து என் நிலைமையை சொன்னா உனக்கு வேடிக்கையா இருக்குதா…..இங்க பாரு கதிர்…..இன்னும் உனக்கு ரெண்டு நாள் தான் டைம் அதுக்குள்ள என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் செய்வயோ….இல்ல..என்னை கடத்திட்டு போய் கல்யாணம் செய்வீயோ….இல்லை அதெல்லாம் வேணாம் வா இப்போவே ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிக்கலாம், சொன்னாலும்……. எனக்கு ஓகே தான்,ஒழுங்க என்னை இன்னும் ரெண்டு நாளுக்குள்ள பதில் சொல்லு…… இல்லையினா என் சாவுக்கு காரணம் நீயும்,உன் ஃப்ரண்ட்ஸும் தான்னு எழுதி வைச்சுட்டு செத்துபோவேன்….ஞாயபகம் வச்சுக்கோ…வரேன்” என அவள் சென்றுவிட… “அவனோ கன்னத்தை பிடித்துகொண்டு அவள் பேசியதையே பார்த்துகொண்டிருந்தான்……..இப்போதான் என் ஆளுக்கு மூளை வேலை செஞ்சுருக்கு……அய்யோ ரெண்டு நாள்தான் டைம் கொடுத்திருக்கா…என்ன செய்யலாம்”என யோசனைக்கு தாவினான்.

’வாசுகியோ…அன்று விஷ்ணு பேசியபின்…அவனை நேரில் கண்டால் கூட ஒதுங்கி சென்றுவிடுவாள்….ஆனால் அவள்,அவன் பேசியதில் தன்னை காதலிகின்றான் என புரிந்துகொண்டால்…..அதுவும் ஒரு காரணம்…….வாசு அன்று நடந்தை சக்தியிடம் கூறினால்… “நான் என்ன செய்யட்டும் சக்தி…அவங்க என்ன காதலிச்சா நான் என்ன பண்ணமுடியும்……அவங்க மேல எனக்கு ஒருத்துளி காதல் கூட இல்லை…….அப்புறம் எப்படி சக்தி….நீயே சொல்லு”…….’இங்க பாரு வாசுகி காதல் எப்படி வருமெல்லாம் எனக்கு தெரியாது…ஆனா அவன் காதல் உண்மையானது….ஒரு நல்ல ஃப்ரண்டா சொல்லுரேன் அவன நீ காதலிக்கிறதுல தப்பே இல்லை…..அவன் அப்படி பேசறதுக்கு யாரோ காரணம் வாசுகி…..நான் என்னனு பார்த்து சொல்லுரேன் ஆனா….முடிவு உன் கையில….அவன லவ் பண்ணறதும், பண்ணாததும் உன் இஷ்டம்……….ஒன்னும் மட்டும் சொல்லுறேன் ஹீஸ் லவ் வித் ட்ருலி…………….ஓகே நான் கிளம்புறேன்….நல்லா யோசி ஓகே…பை’என அவனுக்கு தெரிந்த்தை சொல்லிவிட்டு சென்றான்…ஆனால் குழம்பியது இவள்.

”என்னடா இப்போ வந்து கலையை மேரேஜ் பண்ணிக்கனும்….அதுக்கு கெல்ப் பண்ணுங்கனு வந்து நிக்கிற……காலேஜ் முடியல…அதுக்குள்ள எப்படி நீ அந்த கலையை மேரேஜ் செய்யமுடியும்……..உன்கிட்ட இப்போ நிலையான வேலைகூட இல்லைடா கதிர்….சொன்னா புரிஞ்சுக்கோ”என்று சரணும்,விஷ்ணுவும் மாறி,மாறி சொல்லிகொண்டிருந்தனர்.

‘டேய் வேலை இப்போ போனா…..நாளைக்கு வரும்…ஆனா என் கலை…திரும்ப வருவாளா…ஒண்ணு அவ மேரேஜ நிறுத்தனும்….இல்லை அவள நான் மேரேஜ் பண்ணனும்….எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க……’

“உங்க அண்ணகிட்ட பேசிபார்க்கலாம கதிர்…..அவருக்குனா எல்லாம் தெரியும்….அவருகிட்ட பேசுடா”

‘அதுக்கு நீங்க எல்லாம் சேர்ந்து என்னை கொன்னுடுங்க……அண்ணனுக்கு மட்டும் நான் லவ் பண்ணுற விசயம் தெரிஞ்சது என்னை வெளியூர் அனுப்பிருவாங்க….கலையை வேற ஒருத்தனுக்கு என்ன அண்ணனே மேரேஜ் பண்ணி வச்சுடுவாங்கடா….வேற ஐடியா கொடுங்கடா’

“சரிடா…ஓடிப்போக கலை ரெடியா இருக்காளா….மத்த பொண்ணுங்க மாதிரி அம்மா,அப்பாதான் முக்கியம்…நீ வேண்டாம் சொல்லிட போறாங்க”என சரண் அவனை கேலிசெய்ய..

‘அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன் சரண் அண்ணா……இப்போவே எங்க ஓடிபோகலாம் சொன்னா அதுக்கு நான் ரெடிதான்’என்றபடி வந்தால் கலை.

“சாரி சிஸ்டர்…அவனை கிண்டல்தான் பண்ணேன்…..தப்பா எடுத்துக்காதேங்க”

‘ஆனா நான் சீரியஸாதான் சொன்னேன்….இங்க பாரு கதிர்….உனக்கு கொடுத்த ரெண்டு நாள்ல,ஒரு நாள் முடிஞ்சது……..இன்னும் இருப்பத்தினாலு மணி நேரம் தான் உனக்கு டைம்….சீக்கிரம் முடிவு பண்ணு… நான் வரேன்’

“பார்த்தேங்களா நான் சொன்னப்போ நம்புனேங்களா……ஒழுங்க ஐடியா கொடுங்க…..இல்லை அவ எழுதுன லெட்டர்ல உங்க பேரையும் சேர்த்திருக்கா……அவ செத்து போனா நாமா மூனுபேரும் ஜெயிலுக்குதான் போகனும்…..என கதிர் புலம்ப ஆரம்பிக்க……… “நாளைக்கு காலையில கலைக்கும்,உனக்கும் கல்யாணம்”என விஷ்ணு சொல்லிசென்றான்..

‘வாசுகியோ எவ்வளவும் யோசித்தும் அவன் மேல தனக்கு காதல் உள்ளதா என அவனை ஒவ்வொரு முறை சந்தித்தையும் நினைத்து பார்த்தால்…… முதலில் அவனை திட்டியது….அவன் கலை,கதிர் காதலுக்கு உதவியது,அவனுக்கு கண்ணன்,ராதை பொம்மை அனுப்பியது….என ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தால்….கடைசியாகா அவள் அவனை வழிமறைத்து பேசியதும்….அவள் என்ன சொல்லவருகிறால் என கேட்க்காமல் இவனே அனைத்தையும் உலறியது…..இவளுக்கு அவன் மீது உள்ள காதலை வெளிகொண்டு வந்தது….அந்நேரம் பார்த்து….டிவியில்…அவள் மிகவும் ரசித்து கேட்க்கும் பாடல் ஒளிபரப்பானது……

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சிந்திட தோகையை ஏந்திட
யார்ம்ம்ம்ம்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கணணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்”அதையே பார்த்துக்கொண்டிருந்தால்..அப்பொழுது அவளது செல்போன் அழைக்க….அதில் விஷணுவின் நம்பரை பார்த்ததும் அவளுக்குள் ஒருவித அதிர்வு……முதல் அழைப்பு கட்டாகிவிட…அடுத்தும் அவன் அழைக்க…..இதை மிஸ் பண்ணிடாத…வாசு…என அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு அந்த அழைப்பை ஏற்றால்…. “என்ன சீனியர்…திடீர்னு ஃபோன் பண்ணிருகேங்க…எதாவது முக்கியமான விசயமா”எடுத்தவுடனே அவளே பெசினால்… ‘நாளைக்கு கலைக்கும்,கதிர்க்கு….கல்யாணம் நீ காலையில பத்துமணிக்கு ரெடியாகி, கலையை கூப்பிட்டு வரனும்….உன்னால முடியுமா..இல்லை என் ஃப்ரண்ட் கீதாவ நான் கூப்பிட்டுகவா’..என அவன் கேட்க… அவளோ,அவன் முதலில் சொல்லியது உண்மைதானா… இல்லையா..என அவள் உணர்ந்துகொள்ளவே நேரம் எடுத்தது அவளுக்கு…. “என்ன சொல்லுறேங்க….கலைக்கும்,கதிர்க்கும் நாளைக்கும் கல்யாணமா…இது முதல அவங்களுக்கு தெரியுமா…சீனியர்”………… ‘நாளைக்கு கல்யாணத்தை முடிவும் பண்ணதே அவங்க ரெண்டு பேரும்தான்…நீ வரையா இல்லையானு சொல்லு எங்களுக்கு நேரம் இல்லை உன்கிட்ட பேசுறதுக்கு’………..என அவன் எரிச்சலில் பேச…… ‘நான் வரேன் சீனியர்’…அவள் சொல்லியது ஃபோனை வைத்துவிட்டான்…ஆனால் இவளோ “ஹலோ..சீனியர்” என இவள் மட்டும் ஃபோனில் பேசிகொண்டிருந்தால்….. ச்சே வச்சுட்டான்….நாளைக்கு உனக்கு இருக்கு சீனியர்…..என வாசு ஒருமுடிவுடன் அந்த நாளை எதிர்பார்த்தால்.

“சார் நீங்க கேட்ட விபரம் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு…..அவங்க அட்ரெஸும் இந்த ஃபைல்ல இருக்கு…….சார்”என டிடெக்டிவ் ஏஜன்சியை சேர்ந்த ஒருவன் வாசுதேவ்விர்க்கு அவன் கேட்ட விபரத்தை இரண்டு மணி நேரத்தில் கொண்டு வந்துகொடுத்தான்……வாசுவும் அந்த ஃபைலை திறந்து அந்த அட்ரெஸை மட்டும் எடுத்துகொண்டு அந்த பெண்னின் வீட்டிர்க்கு சென்றான்…..அந்த ஃபைலை முழுதாக படித்திருந்தால் அவன் யாரைக்காணப்போகிறோம் எனத்தெரியாமல் அவன் அந்த வீட்டை நோக்கி பயணித்தான்.

“ஹாஸ்பிட்டலில் இருந்து அவன் தந்தைக்கு தெரியாமல் வெளியேறினான்…அவனுக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜன்சியை அனுகி அவன் தம்பியின் விபரம்…கொண்ட அந்த பைலை அந்த ஏஜன்சியிடம் கொடுத்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் இதில் உள்ள உண்மையின் ரகசியம் தெரியவேண்டும்…எனக்கூறி…அவர்களிடம் ஒப்படைத்தான்……அவன் கூறிய இரண்டுமணி நேரத்தில் அவர்களும் அனைத்து விபரம் கொண்ட அந்த பைலை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

‘அந்த அட்ரெஸில் இறங்கி…அந்த வீட்டை நோக்கி நடந்தான்…..அவன் மனதில் இது சுகியோட வீடாச்சே…..சரியானா அட்ரெஸ்க்குதான் வந்திருக்கோமா….இல்லை…மாறி வந்துட்டோமா….என அந்த அட்ரெஸை பார்த்தான்…..அதில் இருந்த முகவரியும்…..இவன் நின்ற வீட்டின் முகவரியும் ஒன்றுதான்…என அதில் இருந்தது……..வாசுதேவ் நின்றிருப்பதை பார்த்த ராமகிருஷ்ணன்…. “வாங்க மாப்பிள்ளை….என்ன அங்கயே நிக்கிறேங்க….. உள்ள வாங்க….ஜானகி இங்க பாரு மாப்பிள்ளை வந்திருக்காங்க…. அண்ணி… இலக்கியன்.. மலர்… இங்க வாங்க மாப்பிள்ளை வந்திருக்காங்க’… என அனைவரையும் அழைத்தார்.

”ஜானகி…வாங்க மாப்பிள்ளை…வாங்க….மச்சான்…வாங்கண்ணா….என அனைவரும் அவனை உள்ளே அழைத்தனர்….ஆனால் அவனோ என்ன நடக்குது இங்க நான் என் தம்பி காதலிச்ச பொண்ண கண்டுபிக்க வந்தா……சுகி வீடுக்கு இந்த அட்ரெஸ்க்கும் என்ன சம்மந்தம்….என அவன் குழம்ப…..மறுபடியும் அந்த ஃபைலை திறந்து முழுதாக படித்துப்பார்த்தான்… அதில் “வாசுகிராமன்”என்றும்…அதைப்பார்த்ததும்,அவனுள் ஒரு அதிர்ச்சி…. அப்போ வாசுகி………என அவன் முழுதும் அதிர்ந்தான்.

’என்ன மாப்பிள்ளை அங்கயே நிக்குறேங்க வாங்க உள்ள….என அவனை அழைத்து சென்று உக்கார வைத்தார்…..மாப்பிள்ளை,மாப்பிள்ளை என அழைத்து அவனை நிகழ்காலத்திற்க்கு கொண்டுவந்தார்….. ‘சாரி மாமா…வேற நினைப்புல இருந்தேன்…..எப்படி இருக்கேங்க….நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்…நீங்க எப்படி இருக்கேங்க….வசும்மா எப்படி இருக்கா… அம்மா, அப்பா எப்படி இருக்காங்க’என ஜானகியும்,கிருஷ்ணனும் கேட்க… “எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை,மாமா”…..ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன் அதான் உங்களை பார்த்திட்டு போகலாம் வந்தேன்…..

“நல்லது மாப்பிள்ளை…..என்ன சாப்பிடுறேங்க….அண்ணா…டீ,காஃபி” என மலர் கேட்க.

‘இருக்கட்டும் மலர்…..ராமன் மாமா இருக்காங்களா….அவங்க எங்க’

“அவரு இப்போதான் பக்கத்தில இருக்குற ஃபார்க்கு போனாங்க….இப்போ வந்திருவாங்க”

‘சரிங்க அத்தை….நான் கிளம்புறேன்…..சுகி வேற எனக்காக காத்திருப்பா… சாப்பிடாம’என ஒரு பொய்யை கூறினான்.. ‘என்ன மாப்பிள்ளை வந்தவுடனே கிளம்புறேங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க”

’இல்லை மாமா….சுகியும்,நானும் சேர்ந்து இன்னைக்கு வெளிய போறதா முடிவு பண்ணோம் இப்போவே டைம் ஆச்சு..மாமா’என அவன் வாசல் வரைவந்தவனை மலர் “வசுவ கேட்டதா சொல்லுங்க அண்ணா…..ஃபோன் போட சொல்லுங்கண்ணா”

‘சரிமா,நான் கிளம்புறேன் அத்தை,மாமா,வரேன் இலக்கியன்’என அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அந்த ஃபார்க்கை நோக்கி சென்றான்.

“என்ன மாமா….இன்னும் எத்தனை கொலை செய்யலாம்….யோசிச்சுட்டு இருக்கேங்களா”என அவரின் நினைவை கலைத்தபடி வந்தான்..வாசுதேவ்…. ‘மாப்பிள்ளை எப்போ வந்தீங்க….நல்லா இருக்கீங்களா…..வசும்மா எப்படி இருக்கா’என அவர் பாசமகளை விசாரிக்க……இவனுக்கோ…பொறுமை பறந்தது…… “உங்களுக்கும்,என் தம்பி விஷ்ணுவுக்கும் என்ன சம்மந்தம்….வாசுகி உங்க பொண்ணா…இல்லை கிருஷ்ணன் மாமா பொண்ணா……என் தம்பிய எதுக்கு கொலை செய்ஞ்சேங்க….சொல்லுங்க”…

‘உங்க தம்பிய கொலை செய்யல……உங்க தம்பியோட உயிர்….என் பொண்ணு வாசுகி உடம்புல முக்கிய பகுதியா இருக்கு….அதுனால தான் என் பொண்ணும் இன்னும் வரை உயிரோட இருக்குறா…….. “என்ன சொல்லுறேங்க….புரியல”

“என் தம்பிக்கு ரெண்டு குழந்தைங்க……முதல் குழந்தை இலக்கியன்…. ரெண்டாவது என் பொண்ணு வாசுகி…..என் தம்பியும்,நானும்….ஒரு வீட்டுலதான் குடி இருந்தோம்…..எனக்கும்,யசோக்கும் குழந்தை இல்லை…அதுக்காக நானும்,யசோவும் வருத்தபடல ஆனா இந்த உலகம் எங்களுக்கு சூட்டுன பட்டம்….குழந்தை இல்லாதவங்க…..இதுனால யசோதான் ரொம்ப கவலைபடுவா…..எங்க வேதனையை பார்த்த என் தம்பியும்,ஜானகியும்…எங்களுக்கு வசுவ தத்துக்கொடுத்தாங்க…..யசோ சந்தோஷப்படுறதவிட நாந்தான் ரொம்ப சந்தொஷமா இருந்தேன்….அவளும் எங்கள வாய் நிறையா அம்மா,அப்பானு அழைக்க ஆரம்பிச்சா….சின்னதுல இருந்தே வசு,கண்ணன்,மலர்..கூடவே இருந்தா..அவங்ககூடவே விளையாடுவா,…என் தம்பிக்கு…வேற இடத்துல போஸ்டிங் போட்டதால அவங்க அங்க மாறி போயிட்டாங்க….அதுனால நாங்க எல்லோரும் வருத்தப்பட்டோம்……..எனக்கும் தொழில் இங்கயே அதிகம் இருக்குறதனால என்னாலையும் என் தம்பிக்கூட போக முடியல…….வசுக்கு ஒவ்வொன்னும் நானும்,என் மனைவியும் பார்த்து பார்த்து செய்வோம்…..அப்படிதான் அவ காலேஜ் வாழ்க்கையிலயும்  முடிவு பண்ணோம்……ஆனா கண்ணன்..மலர் வேற காலேஜ் போகவும்….வசுவும் வேற காலேஜ் போனா…அங்க தான் என் பொண்ணுக்கு வினையே ஆரம்பிச்சது……….

“என்ன நடந்தது”…….

 

                                     உன் நினைவுகள் தொடரும்…………….

 

Advertisement