Advertisement

                  நினைவுகள் 15

 

”நான்,சரண்,தேவ் நாங்க மூனு பேரும்..ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்…எங்களுக்குள்ள எந்த ஒளிவும் மறைவும் இல்லை..என் காதல தவிர..ஆனா தேவ் ஒரு பொண்ண பார்க்க எங்கள முதல் தடவை அன்னைக்கு கூட்டிட்டு போனான் ஆனா அந்த பொண்ணு அங்க இல்லை….அதுகடுத்து ஒரு நாள்……….

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ..’ வாசுகியின் போன் அலற….

“ஹலோ”

‘ஹாய்..ஐயம்..தேவ்..

“தேவ்…அப்படி யாரும் எனக்கு தெரியாதே”

‘ஹே……….ஜுனியர்’என அவனுக்கு நினைவு படுத்தினான்.

“ஓ..ஓ..சொல்லுங்க சீனியர்…உங்க நம்பெர் பேர் போட்டு சேவ் பண்ணிருந்தேன் நீங்க வேற நம்பெர்ல இருந்து கூப்பிடுறேங்க.”

‘என் போன் சார்ஜ் இல்லை….அதான் என் ஃப்ர்ண்ட் போன்ல இருந்து உனக்கு கூப்பிட்டேன்..சரி எங்க இருக்க’

“ஓ……ஓகே….நான் கிளாஸ்ல இருக்கேன்…ஏன்”

‘உன் ஃப்ரண்ட் வந்துருக்காங்களா’

“அவ இல்லைமா நான் எப்படி காலேஜ் வருவேன்…அவளும் வந்திருக்கா”

‘அப்போ…இன்னைக்கு ஈவ்னிங் காஃபி ஷாப்ல மீட் பண்ணனும்,அந்த பொண்ண, நீ கூப்பிட்டு வா’

“என்னது”என அலறியபடி எழுந்து நின்றாள்.

‘என்னடி..என்னாச்சு’ என்று கலை கேட்க….

“ஒண்ணுமில்லை..டி கொஞ்சம் பேசிட்டுவரேன்”என கூறிக்கொண்டு கிளாஸைவிட்டு வெளியே வந்தால்.

‘என்ன சீனியர்…எதுக்கு காஃபி ஷாப் வரனும்,நானும், அவளும்’

“சொல்லுறதை செய்….மறக்காம அந்த பொண்ண கூப்பிட்டு வா….சரியா நான் வைக்குரேன்…பை”என போனை கட் பண்ணினான்.

‘எதுக்கு வரச்சொல்லுறான்…புரியலயே…பேசாம அவகிட்ட சொல்லிடுவோமா…இல்லை வேணாம்…’என்று அவளே தனக்குதானே பேசிகொண்டால்.

“இப்படி நின்னு பேசுறதுக்கு…அதோ அங்க இருக்குற பிள்ளையார் முன்னாடி நின்னு பேசுனா உன்னை யாரும் பைத்தியமுனு நினைக்க மாட்டாங்க சிஸ்டர்”என்றான் அசோக்..

‘ஹான்…ஹாய் அண்ணா..என்ன இந்த பக்கம்’

“சும்மா…ஃப்ரண்ட பார்க்க வந்தேன்..ஆனா பாவம் எனக்கு தெரிஞ்ச பொண்ணு தனியா புலம்பிட்டு இருக்குறத பார்த்த பாவமா இருக்கேனு…அதான் கொஞ்சம் தெளிவுப்படுத்திட்டு போகலாம் வந்தேன்”

‘அதெல்லம் ஒண்ணுமில்லை….சீனியர் ஒருத்தவங்க கால் பண்ணிருந்தாங்க அதான் பேசிட்டு இருந்தேன்’

“சரி..அதுக்கும்…நீ புலம்புறதுக்கும் என்ன சம்மந்தம்”

‘சக்தி வந்திருக்காங்களா’

“நான் ஒரு கேள்வி கேட்டா…நீ ஒரு கேள்வி கேக்குற”

‘அய்யோ..நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க’

“ம்ம்..வந்திருக்கான்…ஏன்”

‘அப்போ அவங்கள கூப்பிட்டுட்டு நீங்க…ஈவ்னிங்..காஃபி ஷாப் வந்திடுங்க.’

“எதுக்கு சிஸ்டர்”

‘அதை அங்க வந்து தெரிஞ்க்கோங்க…மறக்காமா சக்தியும்,நீங்களும்..ம்ம் சரியா’

“சரி”

’ஆனா நீங்களா கூப்பிட்டு வரமாதிரி இருக்கனும்…நான் சொன்னேன்னு சொல்லாதேங்க’

“சரி..கூப்பிட்டு வரேன்”என அவன் கிளம்பி சென்றான்.

‘எதுக்கு தேவ் இங்க அழைச்சுட்டு வந்திருக்க.’என்று கதிரும்,சரணும் கேட்க.

“இன்னைக்கு…கதிருக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு சரண்”

‘என்னடா..இன்னைக்கு உனக்கு பிறந்தநாளா’கதிரை பார்த்து சரண் வினாவ.

“டேய் என் பெர்த்டே வரதுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கு”

‘அப்புறம் என்ன சப்ரைஸ்…தேவ்’ சரண் கேட்க.

“இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே பார்க்க போற”என அவன் கூறிமுடிக்க….வாசுகியும்,கலையும் உள்ளே வந்தனர்.

‘எதுக்குடி இங்க கூப்பிட்டு வந்திருக்க..உனக்கு காஃபி குடிக்க வேற காஃபி ஷாப் இல்லையா’என்று கலை வாசுகியை கேட்க்.

“இதை காலேஜ்ல இருந்து கேட்டுட்டு வர்ர…இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியபோகுது..என்னை கேள்விகேட்க்காம வாயேன்டி”

‘ம்ம்..அப்படி என்னதான் இந்த காஃபி ஷாப்ல இருக்கு என அவள் யோசனையுடன் வந்தவள்…ஒரு இடத்தில் அவள் கண்கள் நிலைகுத்தி நின்றது’

“இந்த சீனியர் எங்க இருக்கான்” என வாசுகி தேடிக்கொண்டிருக்க…இடது பக்கம் இருந்து அவன் கையை ஆடியபடி இவளுக்கு அங்கு இருப்பதை காட்டினான்…………..”ஓகே அங்க இருக்காங்க…வா கலை போகலாம் என அவள் கையை பிடித்து இழுத்தால்”

’நான் வரலை வாசு…நீ மட்டும் போயிட்டு வா…அங்க எல்லோரும் இருக்காங்க’என்று நழுவ பார்க்க.

“எதுக்கு வரலை..ஒழுங்கா வா..உனக்காக தான் அவங்க வெயிட் பண்ணுறாங்க”

‘ஹுகும் நான் வரலை’

“வா கலை…என்னனு கேட்டுட்டு போயிடலாம்”என அவளை கெஞ்சி அழைத்து சென்றால்.

‘ஹாய்..சீனியர்’என்று அழைத்தால் வாசுகி.

“பேசிக்கொண்டிடியிருந்த தேவ்,கதிர்,சரண் ஒரே நேரத்தில் திரும்பினர்…. “ஹாய்….வாங்க..வாங்க கலை சிஸ்டர்…..என் பேர் தேவ்… இவன். சரண்…  “ஹாய் அண்ணா”……

இவன்… கதிர் “ஹாய் அண்ணா”………நாங்க மூனுபேரும் ஒரே காலேஜ்ல படிக்குறோம்”வாங்க உக்கர்ந்து பேசலாம்..என அவர்களை அமரவைத்தான்.

“ஹாய் சிஸ்டர்ஸ்”சரண் வாசுவையும்,கலையை வரவேற்க.

‘கதிரோ சிலையென அமர்ந்திருந்தான்….கலையை பார்த்தபின்’

“எதுக்கு வரச்சொன்னேங்க சீனியர்” வாசு கேட்க.

‘அது…நான் பேசக்கூடாது..ரெண்டு பேருக்குள்ள நடந்த சண்டை அதை அவங்களே பேசிக்கட்டும்…நாம எல்லோரும் அங்க இருப்போம்”என கலை,கதிரை தவிர மற்ற மூவரும் எழுந்தனர்.

”ஹே வாசு…நில்லு டி” என்று வாசுவின் கையை பிடித்து நிற்க வைத்தால்.

‘ஆனால்…தேவ்வோ…வாசுவின் மற்றொரு கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.

“இதையெல்லம் காஃபி ஷாப்பில் உள்ளே வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி”

‘சக்தி..வா காஃபி ஷாப் போகலாம்’

“எதுக்கு”

‘சும்மா…காஃபி ஷாப் போகனும் தோனுச்சு வாயேன்’

“சரி…கொஞ்சம் எழுதுறது இருக்கு…முடிச்சுட்டு போகலாம்”

‘இல்லை…இப்போவே போகலாம்’

“சரி வா” என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே நுலையும் போது கதிர்,கலையை தவிர மற்ற மூவரும் எழுந்து வெளிய செல்ல நின்றனர்…இதை அசோக்.சக்தி..பார்த்துகொண்டே வந்தனர்…ஆனால் சக்திக்கு வாசுவின் கையை பிடித்தபடி நின்ற தேவ்வை பார்த்ததும் சக்திக்கு ஒருவித பொறாமை குணம் தலைதூக்க… “டேய் சக்தி..அங்க இருக்குறது உன் அண்ணா கதிர் தானே” என்று அவன் சிந்தனையை கலைக்க..அசோக் சொன்னதை கேட்டு அங்கு பார்த்தான்..அங்கே கதிரும்..கலையும் எதிர் எதிர் பக்கதில் அமர்ந்திருந்தனர்.

’சக்தியை பார்த்ததும்..தேவ்வின் கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு சக்தியை நோக்கி நடந்தாள்…வாசு.. “இவங்க தான் அந்த சீனியரோட ஃப்ரண்ட்..கதிர் அண்ணா..சக்தி”என அவனிடம் சொல்ல..அவனோ “அவங்க என் அண்ணா வாசுகி..அவங்க தான் உன் ஃப்ரண்ட காதலிக்குறாங்க”என அவன் சொல்ல.

“ஓ அப்படியா…எனக்கு தெரியாது..சக்தி.. அந்த சீனியர் தான் எங்களை வரச்சொன்னாங்க..அதான்..நீயும் அவங்களை பார்க்கனும் சொன்னேல அதுக்குதான் அசோக்கிட்ட சொல்லிவிட்டேன் உன்னையும் இந்த காஃபி ஷாப் கூப்பிட்டுவாங்கனு….தாங்க்ஸ் அசோக்”

‘தேவ்வின் கையில் இருந்து அவள் கையை உருவிக்கொண்டு சக்தியை நோக்கி போவதை பார்த்த தேவ்வும்,சரணும்…வித்தியாசமாக பார்த்தனர்… “என்ன தேவ் அந்த பொண்ணு சக்திகிட்ட பேசிட்டு இருக்கா”

‘தெரியலை சரண்…ஆனா கதிரோட, அண்ணாவுக்கு இந்த விசயம் தெரியகூடாது..முக்கியமா சக்தி அவன் அண்ணாக்கிட்ட சொல்லக்கூடாது’

“அந்த பொண்ணு வர்ரா தேவ்… “நீ சக்திகிட்ட பேசுவியா”

‘ம்ம்,ஆமா…ஏன்????

“சும்மா கேட்டேன்..அவன் எதுக்கு இங்க வந்திருக்கான்… “நான் தான் வரச்சொன்னே சீனியர்..சக்தியோட அண்ணாதான் கதிருனு எனக்கு இப்போதான் தெரியும்….அதான் பேசிட்டு இருந்தேன்”

‘நீ எல்லாமே சொல்லிட்டயா…இல்லைலேல’தேவ் கேட்க.

“அவங்களுக்கே எல்லாம் தெரியுமாம்..சீனியர்”

’ஓ….ஓ அப்போ சரி’….. “சரண் நாமா கதிர்கிட்ட இதை பேசிக்கலாம் விடு’

“சரிடா”

‘இன்னும் நம்ம காதலை ஏத்துக்க மனசு வரலையா..வாணி” என அவனே முதலில் ஆரம்பித்தான்.

“ஆமாம்”

‘ஏன்’

“ஏன்னா….எனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு..போதுமா”என கலை கண்ணீரை துடைத்தபடி கூறினால்.

‘என்ன சொல்லுற…எப்போ இதெல்லாம் நடந்துச்சு’

“இப்போதான் ரீசெண்டா நடந்துச்சு….வாசுக்கு தெரியாது”

‘என்னை மறந்துட்டு எப்படி நீ…எங்கேஜ்மெண்ட்க்கு சம்மதிச்ச’

“உங்களை நினைச்சாதானே மறக்குறதுக்கு”

’உன்னகெல்லாம்…இப்படி சொன்னா புரியாது டி….என அவள் அசந்த நேரம் பார்த்து கலையை ஒரு இழுப்பில் அருகில் கொண்டுவந்தான்… “இங்கபாரு டி எவன் வந்தாலும் நீ எனக்கு மட்டுதான்…உன்னை எப்படி என் வழிக்கு கொண்டுவரேனு பாரு…இனி என்கூட மட்டும்தான் நீ பேசனும், பழகனும்… நீ என்னை விரும்புறத எப்படி வெளிகொண்டு வரதுனு எனக்கு தெரியும்…உன்னை பார்த்த முதலும் சரி…இப்பவும் சரி நீ எனக்கு மட்டும் தான்..அதை யாரலும் மாத்தமுடியாது….உன் கல்யாணம் எப்படி நடக்குதுனு நான் பார்க்குறேன்….அதே மாதிரி என் கல்யாணம் உன்கூடதான் ஞாயபகம் வச்சுக்கோ…என அவளை எந்த வேகத்தில் இழுத்தானோ அதே வேகத்தில் தள்ளிவிட்டு சென்றான்….

“கலையோ அவன் இழுத்த வேகத்தில் பயந்துகொண்டு….அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளும்…அவள்ளுள் ஒரு உந்துதல் இப்பொழுதே அவனிடம் என் காதலே நீதான் என்று சொல்லிவிடலாமா…என்று….ஆனால் அவன் கூறிய கடைசி வார்த்தை அவளுக்கு ஒரு தைரியத்தை வரவைத்தது….இனி என்ன ஆனாலும் என் கதிர் எனக்குதான்..என்ற முடிவுடன் அவள், அவன் முகம் பார்த்து பேச நினைக்க கதிர் அவளை தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.

’வேகமாக வெளியவந்த கதிர்… “வாங்கடா நாமா போகலாம்”என அவர்களை அழைத்தான்.. “என்ன கதிர் சிஸ்டர்கிட்ட பேசிட்டயா…சமதானம் பண்ணிட்டயா”என்று தேவ் கேட்க..

“ஆமா இந்த பொண்ணுங்களுக்கு பசங்க வழிய போய்..செல்லமே..தங்கமே கொஞ்சினாதான் சமதானம் ஆவாங்க”

‘என்னடா சொல்லுற…..சிஸ்டர் எங்கடா…..என சரண் கேட்க…… ‘அவ உள்ளதான் இருக்குறா என்னை பயித்தியம் பிடிக்க வைக்குறாடா…என அவன் சொல்லிக்கொண்டிருக்க…வாசு,கலையை தேடி சென்றாள்…… ‘டேய் ஒண்ணும் புரியல’என தேவ் கேட்க.

“அவளுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிருச்சான்..என்னை மறந்துட்டு வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட போறாலாம்…என்னை சுத்தமா மறந்துட்டாலம் தேவ்….என் மனசு அவளுக்கு புரியவேயில்லை” சரண்….என கண்ணீரை துடைத்தபடி கூறினான்.

’டேய் இதுகெல்லாம் ஏன்டா ஃபீல் பண்ணுற…..சிஸ்டர்க்கு ஏதாவது ஃப்ரப்லமா இருக்கும்டா……ஃபர்ஸ் நீ உன் காதல் மேல நம்பிக்கை வை அதுக்கடுத்து எல்லாம் நல்லதாவே நடக்கும்….என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது வாசுவும்,கலையும் வெளியே வந்தனர்’

“கலையை பார்த்ததும்,தேவ்…சிஸ்டர் அவன் பண்ணதுக்கு நான் சாரி கேட்டுகிறேன்…ஆனா நீங்க மட்டும் கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க… இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை……இதுக்குமேல உங்க இஷ்டம்….பார்த்து கூப்பிட்டு போ வாசுகி”என்றான்.

‘ம்ம் சரி சீனியர்….வரோம்’

“போகும் போது,கலை கதிரை பார்க்க….அவனோ,அவளை பார்க்காமல் சரணிடம் பேசிக்கொண்டுயிருந்தான்…அவளோ அவனை பார்த்துகொண்டே சென்றால்…. “டேய் சிஸ்டர் போயிட்டாங்க”என சரண் சொன்னவுடன்…அவள் சென்ற திசையை பார்த்தான்…. “இப்போ மட்டும் எதுக்கு அங்க பார்க்குற” தேவ் கேட்க….. “என்ன இருந்தாலும் அவ என் காதலிடா” கதிர் சொல்ல… “ம்ம்ம்….சரி கொஞ்ச நாள் வெயிட் பண்ணு….சிஸ்டர் வந்து உன்கிட்ட பேசுவாங்க சரியா வா போகலாம்”என மூவரும் கிளம்பினர்….

’கலை அவள் காதலின் கதைகளை வாசுவிடம் வரும்வழியில் சொல்லிக்கொண்டே வந்தாள்…. “கதிருக்கு காதல் கடிதம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று.அவள் தினமும் எழுதும் டைரியில் இன்று நடந்ததை எழுதி வைத்ததை அவள் அம்மா பார்த்துவிட்டு….தன் அண்ணனிடம், கலையின் டைரியில் எழுதுனதை காட்டி அவள் காதலிக்கு அந்த பையன்(கதிர்) கண்டிக்குமாறு சொன்னாள்….ஆனால் அவள் அண்ணனோ வெறும் கண்டிப்போடு நிறுத்தாமல்..அவனை அடித்துவிட்டு பிரின்ஸ்பாலிடம் அவனை ஸ்கூலைவிட்டு நீக்குமாறு அவர்கூற…..ப்ரின்ஸ்பால் அவன் படிப்பில்,விளையாட்டில்,என அனைத்து போட்டிகளிலும் முதல் வந்த மாணவன் இதை செய்திருப்பான் என அவர் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை……ஆனால் அவன் ஃப்ளஸ்டூ பரிட்ச்சை காரணமாக..அவனை வார்ன் செய்து அனுப்பி வைத்தார்..ஆனால்..அவன் கலை இப்படி செய்திருக்கமாட்டால் என நம்பினான்…அவன் பள்ளி படிப்பு முடிந்ததும் அவளை இறுதியாக பார்த்து செல்லலாம் என நினைக்கையில் அவள் அன்று முழுவது பள்ளிக்கு வரவில்லை….ஏமாற்றத்துடன் அவன் திரும்பி சென்றான்..அவளை காணாமலே’

”அவளுக்கு பள்ளி படிப்பு முடிந்த்தும்…அவளை கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்…அங்கயே அவளுக்கும்,அவள்…அத்தை மகனுக்கும் கல்யாணம் பேசி முடித்தனர் ஆனால் அவளுக்கு தெரியாமல்……காலேஜ் முதல் வருடம் சென்றபின் சொல்லலாம் என நினத்தனர்…ஆனால் அவளுக்கு அவள் தந்தை கூறியபின் தான் எல்லாம் விசயமும் தெரிந்தது…அவள் மாமா அவளை ஸ்கூலில் விடவரும்பொழுது எதற்கு ஃபிரின்ஸ்பால் அறையை அவளிடம் விசாரித்தார் என்பதையும் அவள் அன்னையின் மூலம் தெரிந்துகொண்டால்…ஆனால் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால்….”எப்படியும் கதிர் எனக்குதான் என்று உறுதியுடன் இருந்தால்”.

‘பேசியதையை நினத்துகொண்டே படுத்திருந்த வசு திடீரென்று..தேவ்வை நினைக்க ஆரம்பித்தால்….”முதல் முறை அவனை திட்டியது ….. அடுத்து….அவனிடம் எக்ஸாம்க்கு ஹெல்ப் பண்ணது….ஃப்ரண்ட் லவ்க்கு இப்போ சப்போர்ட் பண்ணறது….ம்ம்ம் விட்டா இவனே அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவச்சுருவான்…..ஹாஹா.என அவள் தனியே சிரித்துகொண்டிருக்க… அவள் அன்னையோ “என்ன வசும்மா…எதை நினைச்சு சிரிச்சுட்டு இருக்குற”என யசோதா கேட்க…..

“ஒண்ணுமில்லைமா…….அப்பா வந்துட்டாங்களா…. “இல்லைமா அப்பாக்கு முக்கியமான மீட்டிங் இருக்காம் அதனால வா நாம சாப்பிடலாம்…உனக்கு நாளைக்கு காலேஜ் இருக்குல”……ஆமா ம்மா,அப்பா வரட்டும்…சேர்ந்து சாப்பிடலாம் அம்மா”…….சரி வசும்மா…

’ச்சே அம்மாக்கு மட்டும் இன்னைக்கு நடந்த்து தெரிஞ்சு நான் அவ்ளோதான்….”சீனியர் எதோ சொன்னாங்களே…ஃப்ரீயா இருந்த உன்கிட்ட பேசனும்….என்னவா இருக்கும்”என யோசித்து பார்த்தவள்…. அவனிடமே கேட்டுவிடலாம்….என அவனுக்கு மெசேஜ் செய்தாள்.. “சீனியர்,என்கிட்ட ஒண்ணும் சொல்லனும் சொன்னேங்கள என்ன விசயம்”என டைப் செய்து அனுப்பினாள்’

”வாசுகி தேவ்வின் டைரியில் ‘கதிர் காதலை சேர்த்து வைப்பதற்க்காக ….அன்று காஃபி ஷாப்பில் நடந்ததை படித்துகொண்டிருந்தாள்….அடுத்த பக்கம் திருப்பினால் ஆனால் அடுத்த பக்கம் முழுவதும் வெள்ளை தாளாவே இருந்தது……எதுவும் எழுதவில்லை…..அவளும் அந்த டைரியை மறுபடியும் திருப்பி திருப்பி பார்த்தாள்..ஆனால் அவர்கள் காஃபி ஷாப்பில் நடந்த்து மட்டும் எழுதிருந்தது….வேற எதுவும் இல்லை… “என்ன அதுகடுத்து எழுதவே இல்லை..கதிர் லவ் சேர்த்து வச்சாங்களா இல்லையா..தேவ் லவ் என்னாச்சு…..சக்தி வேற வாசுகிய விரும்புறானா இல்லையானு தெரியலை…அய்யோ இப்படி பாதில்ல விட்டா எப்படி..மீதிய எப்படி நான் படிக்குறது”என அந்த அறை முழுவதும் மற்றொரு டைரி இருக்கா என்று தேடித்தேடி  பார்த்தாள்….ஆனால் கிடைக்கவில்லை…..

’என்னாச்சு டாக்டர்…..என் பையனுக்கு… இப்போ எப்படி இருக்கு’என நந்தன் வாசுவின் உடல்நலனை விசாரிக்க….. “நத்திங் நந்தன்..ஹீஸ் வில் ஃபீ ஆல்ரைட்..ஆனா எமோஸ்னல் ஆகவிடாம பார்த்துகோங்க…இப்போ நீங்க போய் பார்க்கலாம் நந்தன்”என டாக்டர் சொன்னதும் அவருக்கு நிம்மதியாய் இருந்தது’

“நந்தன் வாசுவை பார்க்க உள்ளே சென்றார்…. “ராஜா இப்போ எப்படி இருக்கு.. “ம்ம்..ஃபீல் பெட்டர் ப்பா”…. “விணுக்கு என்னாச்சுப்பா… சொல்லுங்க”என அவன் கேட்க..

’சொல்லுறேன் ராஜா…ஆனா உன்னால அதை தாங்க முடியாது ராஜா…விணுவும்,ஒரு பொண்ணும் காதலிச்சாங்க….ஆனா கடைசில அந்த பொண்ணுக்கு நடந்த ஆக்ஸிடண்ட்ல அவன் இதயத்தை..அவன் விரும்புன பொண்ணுக்கே கொடுத்துட்டான்…. “புரியல ப்பா…இதயத்தை கொடுத்தானா”……என அதிர்ச்சியுடன் கேட்க…

“ஆமாம் ராஜா….அன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி ‘நந்தன் வீடு முழுவதும் அலங்காரம் செய்து…அனைவரும் வந்தமயம் இருந்தனர்…விணு மட்டும் ஏதோ ஒரு பொருளை தொலைத்தது போல் காணப்பட்டான்…. “மல்லிகாமா இந்த பூஜை பொருள் எல்லாம் எடுத்து வைச்சுட்டேங்களா..ஐயர் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திருவாங்க….அப்புறம் எல்லாருக்கும் கொடுக்க ஸ்வீட் பாக்ஸ் ரெடி பண்ணிடுங்க….என ராதா ஒவ்வொரு வேலையாய் செய்துகொண்டிருக்க…தேவ்வை தாண்டிபோகும் போதுதான் அவனை கவனித்தார்…. “என்ன தேவ்….ஏன் இப்படி உக்கர்ந்திருக்க….ட்ரெஸ் மாத்திட்டுவாப்பா..பூஜைக்கு நேரம் ஆச்சுப்பா…..”என அவனை பார்த்து பேச.. ‘சரிம்மா…இதோ ரெடி ஆகிட்டுவரேன்’..தேவ்..என ராதா அழைக்க… “சொல்லுங்கம்மா…” .. என்று ராதாவை பார்க்க…. ‘முகம் ஏன் சோர்வா இருக்கு உனக்கு’

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா…நான் நல்லா இருக்கேன்”என சமாளித்துகொண்டு சென்றான்..

‘அவன் ட்ரெஸ் மாற்றிவிட்டு கீழே வந்தான்….. “தேவ் என்னாச்சுப்பா…..ஏன் ஒருமாதிரி இருக்க” உடம்பு எதுவும் சரியில்லையா எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு தேவ் சரியா…அம்மா கவலைபடுற தேவ்..”என நந்தன் கேட்க

“அதெல்லாம் இல்லைப்பா..என அவன் தந்தையிடம் பேசிக்கொண்டிருக்க ..அப்பொழுது அவனுக்கு போன்கால் வந்தது… ப்பா ஒரு நிமிசம் என தள்ளி சென்று பேச ஆரம்பித்தான்…..அதற்கு பின் யாரிடமும் எதுவும் கூறாமல் அவன் வீட்டைவிட்டு வெளியே சென்றதும் யாருக்கும் தெரியாது..அவன் திரும்ப வந்தது உயிரில்லாமல் வெறும் சடலமாக வீட்டின் முன்  அவனை வைத்தது…எல்லாம் இன்னும் நினைக்கும் போது கனவு மாதிரி இருக்கு….வாசு.எல்லாம் காரியமும் முடிஞ் பின்னாடி தான் பார்த்தேன் அவன் போஸ்ட்மார்டன் ரீப்போர்ட் பார்த்த போதுதான் அவன் ஆக்ஸிடண்ட்ல அவன் இறந்து போகலன்னு…அவன் காதலிச்ச பொண்ணுக்கே அவன் இதயத்தை உயிரோட கொடுத்து இருக்கானு…..நான் அந்த ஹாஸ்பிட்டல போய் விசாரிச்சேன் ஆன அந்த பொண்ணு டிஸ்டார்ச் ஆகி ஒருவாரம் ஆகுதுனு சொன்னாங்க…அதுகடுத்து நான் அந்த பொண்ண பத்தி எல்லா இடத்திலயும் விசாரிக்க சொன்னேன் ஆனா அந்த பொண்ண பத்தி எதுவும் எனக்கு தெரியல…என்ற பொய் கூறினார்..

“நடந்த்தை முழுவதும் கேட்ட வாசுதேவ்..  ‘இதை எப்படிப்பா என்கிட்ட இருந்து மறைக்க முடிஞ்சது உங்கனாள……..அதுவும் என் உயிரே என் தம்பிதான்…….அவனுக்கு சின்னதான் அடிபட்டாலும் உங்களவிட நாந்தான் அதிகமா துடிப்பேன்….ஆனா அவன் உயிரோட இதயத்தை அந்த பொண்ணுக்கு கொடுத்து இருக்கான்….அவனுக்கு எப்படி வலிச்சுயிருக்கும் .. அய்யோ”என கதறி அழுதான்…..

‘வேணாம் ராஜா…அழுகாத…..இப்போ உன் உடம்புதான் எனக்கு முக்கியம்…ராஜா’என அவனை தேற்றினார்

“சார்…..அவங்களுக்கு இன்ஜெக்ஸ்ன் போடனும்…அவருக்கு ரெஸ்ட் வேணும் சார்…..”என செவிலியர் வந்து கூற….

‘தேவ்…உன் உடம்புதான் முக்கியம்.இன்னும் வாசுகிக்கு உனக்கு இப்படியானது தெரியாது ராஜா…நீ ரெஸ்ட் எடு….நான் டாக்டர பார்த்துட்டு வரேன்’ என அவர் சொல்லிக்கொண்டு போக..

“இவனோ..அவர் சொல்லியதை காதில் வாங்காமல்…..தம்பியின் காதலியை எப்படி கண்டுபிடிக்க என யோசிக்க ஆரம்பித்தான்..செவிலியர் ஊசி போட்டதை உணராமல் இருந்தான்”

 

                                      உன் நினைவுகள் தொடரும்…………

 

Advertisement