Advertisement

           நினைவுகள் 14

 

காலையில் எழுந்ததும் தேவ் மனதில் ஒருவித சஞ்சலமாக “ஏன் எனக்கு இன்னைக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு,என்ன நடந்தாலும் இன்னைக்கு டாடிக்கிட்ட அந்த ரீப்போர்ட் பத்தி கேட்க்கனும்”என ஒரு முடிவோடு ஆபிஷ் கிளம்பினான்.

“சுகி,டிபன் ரெடியா”என கேட்டபடி கீழே வந்தான்.

“இதோ ரெடி வசி,வாங்க எடுத்து வைக்கிறேன்”

“அம்மா எங்க,அப்பா எங்க”

“அத்தை,கோவிலுக்கு போயிருக்காங்க,மாமா இன்னைக்கு காலையில தான் வந்தாங்கனு அத்தை சொன்னாங்க,ஆன இன்னும் கீழ வரலை வசி”என்றாள்.

“ஓ சரி,நான் ஆபிஸ் கிளம்புறேன் பை”என அவளை கட்டியணைத்துவிட்டு விடைபெற்றான்.

“ம்ம் பார்த்து போயிட்டுவாங்க”என அவளும் கூறினாள் .

“கலையோ,அன்னைக்கு சக்தி வாசுகிட்ட பேசிட்டு போன பின்னாடி அதுகடுத்து அவரோட அண்ணா கதிர் என்கிட்ட வந்து சக்தி என்ன பேசுனாங்கனு விசாரிச்சாங்க, “ஹே கலைவாணி நில்லு”என அவளை நிறுத்தினான்.

“யாரு நீங்க,எதுக்கு,என்னை கூப்பிட்டீங்க”

“உண்மையில உனக்கு என்னை தெரியலையா,இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறியா”

’இல்லை எனக்கு உங்கள தெரியல’

“அப்படியா,அப்போ டென்த் படிக்கிறப்போ நீ எனக்கு லவ் லெட்டர் கொடுத்து ஞாயபகம் இல்லை,அப்போ நான் அதை வாங்கிட்டு அடுத்த நாள் உன்கிட்ட நான் பேச வந்தப்போ நீ என்னை உன் மாமாகிட்ட என்னை அடிவாங்கவிட்டது,உனக்கு ஞாயபகம் இல்லை” என அவளை சந்தித்த நாளை நினைவுப்படுத்தினான்.

‘இல்லை எனக்கு ஞாயபகம் இல்லை’என்று திக்கித்திணறி அவனிடம் கூறினால்.

“அவனோ அவள் கண்களை உற்று பார்த்தான்,அதில் இன்னும் அவனுக்கான காதல் இருக்கிறதா”என்று.ஆனால் அவளோ அதை அவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருப்பதை அவள் உள்ளம் சத்தமில்லாமல் கண்ணீர் வடித்த்து”

’சரி, நீங்க போங்க கலைவாணி’என அவளுக்கு வழிவிட்டான்.

“அவளோ,அவனை கடந்து செல்லும் போது ஓரக்கண்ணால் அவனை பார்த்துக்கொண்டு கடந்து சென்றால்”இதை அறியாமல் அவன் மனது மிகவும் துடித்தது.

‘என்ன வேல் இங்க இருக்குற,சிஸ்டர்கிட்ட லவ் சொல்லிட்டய’என்று கேட்டுகொண்டு வந்தான் விஷ்ணு, “இல்லைடா,அவளுக்கு என்னை அடையாளமே தெரியலை அப்ப்டி இருக்கும் போது எப்படி அவகிட்ட லவ் சொல்ல சொல்லுறா”.

”உன் மேல காதல் இல்லாமயா அந்த பொண்ணு உன்னை திரும்பி பார்த்துட்டு போரா”என அவனுக்கு எடுத்து கூறினான்.

‘என்ன சொல்லுற தேவ்,அவ என்னை திரும்பி பார்த்துட்டு போனாள,என அவன்,அவளை பார்ப்பதற்க்குள் அவள் சென்றுவிட்டால்.

“டேய் உண்மைய சொல்லு,அவ என்னை பார்த்தால,இல்லை நீயா சொல்லுறீயா”என்று அவனை கழுத்தில் கையை வைத்து நெறித்துகொண்டு கேட்டான்.

‘ஹே வேல்,உண்மை தான்,வேணும்னா அந்த பொண்ணோட ஃப்ரண்ட்கிட்ட நீ பேசிப்பாரு வேல்’என அவன் கையை எடுத்துவிட்டு கூரினான்.

“சரி பார்க்கலாம் தேவ்,எங்க சரண் ஆளவே கானோம்”

’அவனுக்கு எதோ பிராஜெக்ட் பத்தி,ஹச்.ஓ.டி அஹ பார்க்க போயிருக்கான்,அதான் உன்னையும் கூப்பிட்டு போகலாம் வந்தேன்,ஆனா இங்க வேறமாதிரி போகுதே’என்று அவனை ஒருமாதிரி பார்த்துகொண்டே சொன்னான்.

“நீ நினைக்கிற மாதிரி இங்க ஒன்னும் நடக்கலை தேவ்,சும்மா அவளுக்கு என்னை தெரியுமானு கேட்டுட்டு இருந்தேன் அதான்,சரி வா போகலாம்”என இருவரும் பேசிக்கொண்டு சென்றுவிட்டனர்.ஆனால் இவர்கள் பேசியதை ஒருவர் கேட்டுவிட்டார்.

’இங்கோ,வசு அந்த டைரியை எடுத்துகொண்டு யாருமில்லாத் மொட்டைமாடி அறையில் அமர்ந்து விட்ட இடத்தில் படிக்க ஆரம்பித்தால், “விஷ்ணுக்காக கேண்டினில் காத்திருந்தால்,வாசுகியும்,கலையும்”

‘என்ன டி இன்னுமா அந்த அண்ணா வராங்க,மணி இப்போ ஆறு வீட்டுக்கு வேற போகணும் டி வாசு’

“வந்துடுவாங்க கலை,இன்னும் பத்துநிமிசம் வெயிட் பண்ணலாம்,அவங்க வரலையினா நாம கிளம்பலாம் கலை சரியா,அதுவரை இந்தா உன்னக்கு பிடிச்ச பானிபூரி சாப்பிடு”

‘அடிபாவி அப்போ இருந்து அதை தவிர வேற எதுவும் உன் கண்ணுக்கு தெரியலையா இல்லை,வாங்கி தரக்கூடாதுனு முடிவுல இருக்கியா டி’

”ச்சே என்ன கலை உனகில்லாமலா உனக்கு என்னவேணும் சொல்லு,அண்ணே என் ஃபிரண்ட்க்கு என்னகேட்டாலும் கொடுங்க,என அவள் சொல்லிகொண்டு இருக்கும் போது, “ம்ம் அப்பிடியே,என்னை மாவாட்ட சொல்லுவாங்கா அதையும் செஞ்சுட்டுவறேன்”

‘சூப்பர் டி,உனக்கு தான் சமையல் நல்லா செய்வ,அண்ணா இவளுக்கு சமையல் உங்களவிட நல்லா செய்வா உங்க அசிஸ்டண்ட்டா செர்த்துகோங்க ஆனா சம்பளம் கொஞ்சம் அதிகம் கொடுக்கனுமா அண்ணா’என்று அவளை வம்பிழுத்துகொண்டு இருந்தால்.

“வேணாம் வாசுகி,ஏற்கனவே ஆள் அதிகம் இருக்கு,வேணா காஃபி கப்புகளை கழுவ ஆள் இல்லை,அதுக்கு மட்டும் நீ வாம்மா,சம்பளம் நாளுக்கு அம்பது ரூபா சரியா”என்று அவரும் செர்ந்து கேலிசெய்தார்.

’அண்ணா நீங்களும் இவகூட செர்ந்து என்னை கலாய்க்குறேங்களா,இனி உங்க கேண்டின்ல நான் சாப்பிடமாட்டேன்’

”சரி சரி,கோவப்படாத வா போகலாம்”என்று அவளை அழைத்துகொண்டு கிளம்பினால்,

’அந்த அண்ணாவுக்காக காத்திருந்த இப்போ போகலாம் சொல்லுற’

“எங்க,அவனைத்தான் இன்னும் காணாமே,உனக்கு வீட்டுக்கு போக நேரம் ஆச்சு அதான்,அதுவும் இல்லமா அவன் எங்க போகபோறான் இதே காலேஜ்ல தான இருப்பான் அப்போ பார்த்துகலாம் வா”

‘டே எங்க கூப்பிட்டு போற,அதுவும் இவ்ளோ வேகமா’

“சீக்கிரம் வா வேல்,அவ போயிடபோரா”

‘யாருடா,எந்த பொண்ணு,எங்க போரா’என சரணும் கேட்க.

“அங்க, போய் நீங்களே தெரிஞ்சுக்குவேங்க”என்று சரணையும்,கதிரையும் அழைத்து இல்லை இல்லை இழுத்துகொண்டு சென்றான்.

’ஆனால்,எவ்ளவு வேகமாகவும் சென்றாலும்,அங்கு அவன் சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை,ஏன் கேண்டின் ஊழியர்கூட அனைத்தயும் ஒதுங்கவைத்துகொண்டு இருந்தார்’

“ஏன் தம்பி,எதாவது வேணுமா”என கேண்டின் ஊழியர் இவன் வந்த வேகத்தை பார்த்து கேட்க.

‘இல்லைனா,இங்க ரெண்டு பேர் இருந்தாங்களா’என அவரிடம் கேட்க.

”ஆமாம் தம்பி,ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்க இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போனாங்க”

’சீட்……..ச்சே..அவ போயிட்டா’என அவன் அருகில் இருந்த சேரை தள்ளிவிட, “டேய் தேவ்,இப்பாவாச்சும் சொல்லுடா,யாரு அந்த பொண்ணு”

‘அதான் அவ கிளம்பிட்டாளே,இனி எங்க அவளை பார்க்குறது’ என அவளை சந்தித்த்தில் இருந்து,இன்று அவள் தன்னை கேண்டினில் சந்திப்பதாகவும்,அதானால் அவள் காத்திருப்பதாகவும், கூறிமுடித்தான்.

“அடப்பாவி,அந்த பொண்ணுக்காக பிரஜெக்ட் வேலையா கிளம்பினவன பிடிச்சு இழுத்துட்டு வந்து உன் காதல் காவியத்த சொல்ல இதுவா நேரம்,போடா”என்று சரண் தேவ் மீது பொய் கொவம் கொள்ள.

“கதிரோ,சரிடா…ஆனா அந்த பொண்ணு பேர் தெரியுமா,இல்லை அதுவும் இப்போ தெரிஞ்சுக்க இன்னைக்கு அந்த பொண்ண மீட் பண்ண வந்தியா”

‘அவ பேர்,வாசுகினு நினைக்கிறேன்,ஆனா அவளை இன்னைக்கு பார்த்து பேசனும்,உங்களுக்கும் இண்ட்ரொ கொடுக்கலாம் நினச்சேன்,அதான் அதுவும் இல்லாமா கதிர்க்கு தெரிஞ்ச பொண்ணும் இருந்தது’என அவனை கேலிசெய்யும் பார்வையில் பார்த்துகொண்டே சரணிடமும்,கதிரிடமும் சொன்னான்.

“கதிர்க்கு தெரிந்த பொண்ணு”என்று சொன்னதும்,இன்று காலையில் சந்தித்த கலையை சொல்லுகிறானோ என தேவ்வை பார்த்தான் கதிர். அவன் கண்கள் ஆமாம் என சொன்னதும்,அவனுள் ஒருவித மகிழ்ச்சி தொற்றிகொண்ட்து.

‘கதிர்,உனக்கு தெரிஞ்ச பொண்ணு யாருடா,அதுவும் இந்த காலேஜ்ல இருக்குறா’என்று சரண் கேட்க.

“என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் சரண்”வேற்றென்னும் இல்லை”என அவனிடம் கூரினான்.

‘சரி இப்போவாது நாம போகலாமா இல்லை இன்னும் அந்த பொண்ணுக்காக காலையில வரை வெயிட் பண்ணபோரையா தேவ்’என்று சரண் கேட்க.

“ம்ம் போகலாம் டா”என மூவரும் கேண்டினைவிட்டு பேசிகொண்டு வெளியவந்தனர்.

‘என் தேவதையை சந்தித்த மூன்றாம் நாள்’

“அன்று கேண்டினில் அவனுக்காக காத்திருந்து வராமல் போனதை நினைத்து அவள் கொஞ்சம் சோகமாக இருந்தால் ஆனால் ஒரு வார இடைவெளிக்கு பின் அவனே வழிய சென்று அவளை சந்தித்து பேசியது அவளுக்கு இறைக்கை இல்லா பறவைப்போல் வானில் பறந்தால்”

‘கலை உன்னை மேடம் வரச்சொன்னாங்க’என வகுப்பு தோழி ஒருத்தி கூரிவிட்டு செல்ல சரிப்பா,  “வாசு,நீ இங்க கிளாஸ்ல வெயிட் பண்ணு,நான் பார்த்துட்டுவறேன்”

“சரி டி சீக்கிரம் வா”

’என்ன மேடம்,கேண்டின்ல எனக்காக காத்திருந்தேங்க போல’என அவள் பின்னாடி இருந்து குரல் வந்தை அறிந்து திரும்பி பார்த்தால்,அங்கு தேவ் அவளை பார்த்து சிரித்துகொண்டு நின்றிருந்தான்.

“ஆமாம் ஜுனியர்,ஏன் நீங்க வரல,எவ்ளோ நேரம், நானும்,என் ஃபிரண்டும் வெயிட் பண்ணுறது அதான் கிளம்பிட்டேன்,நீங்க வந்தீங்களா கேண்டீனுக்கு”

‘ம்ம் வந்தேன் ஆன நீ இல்லை,அப்படியே நானும் கிளம்பிடேன்’என தனது நண்பர்களும் வந்ததை கூறி,அதில் கதிரின் காதலி உன் தோழி’என்றும் கூறிமுடித்தான்.

“எனக்கு ஒரு ஃபிரண்ட் மட்டும் தான்,அதுவும் கலை ஒருத்திதான்,அவளுக்கு காதலே பிடிக்காது,அப்படி இருக்கும் போது உங்க ஃபிரண்ட் எப்படி லவ் பண்ணுறாங்க”

‘அதை உன் ஃபிரண்ட்கிட்ட கேளு,சரி எதுக்கு என்னை மீட் பண்ணணும் சொன்ன’

“ஜுனியர்,நீங்க எனக்கு உதவி செஞ்சதுக்கு,அதான் டீரிட் வைக்க கூப்பிட்டேன்,வேற ஒண்ணுமில்லை”

’சரி நான் உன்கிட்ட ஒண்ணும் சொல்லனும்,எப்போ பிரீயா இருப்பேனு சொல்லு அப்போ மெதுவா பேசலாம்’

“இப்போவும் நான் ஃப்ரியாதான் இருக்கேன் ஜுனியர்,சொல்லுங்க என்ன விஷயம்”என அவள் கேட்க்கும் போது எதிரில் இருந்து ஒரு மாணவன் வந்து தேவ்விடம் “அண்ணா உங்கள கதிர் அண்ணா தேடிட்டு இருந்தாங்க”என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

‘ஜுனியர் உங்களை போய்,அண்ணானு சொல்லிட்டு போரான் என் கிளாஸ் மெட்,நீங்க காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் தானே அப்புறம் ஏன்’

“ம்ம் அதை அந்த பையன்கிட்டயே கேளு,நான் கிளம்புறேன்,மறக்காம ஃப்ரியா இருந்தா இந்த நம்பர்க்கு கால் பண்ணு,பை”என அவளிடம் அவனுடைய போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றான்.

‘ஏன் அந்த ஜுனியர அண்ணானு சொன்ன,அவன் ஃப்ர்ஸ்ட் இயர் தானே’என அவள் கிளாஸ்மெட்டிடம் கேட்க, “வாசுகி அந்த அண்ணா,ஜுனியர் இல்லை சீனியர்,நம்மளவிட மூணு வருசம் மூத்தவங்க,இதே காலேஜ்ல தான் யூஜி கோர்ஸ் முடிச்சாங்க,இப்பவும் இதே காலேஜ்ல தான் பிஜி கோர்ஸ் பண்ணறாங்க’என்று அவனை பற்றி கூறினான்.

“அவளோ அதை கேட்டு,ஓ அதான் பையன் நான் ஜுனியர்னு கூப்பிடும் போதெல்லாம் ஒண்ணும் சொல்லாம போறான்,ஆனா ஏன் என்கிட்ட அவன் சீனியர்னு சொல்லலா சம்த்திங் ராங்”என அவள் தனக்குதானே பேசிகொண்டால்

‘என்ன உனக்குள்ளயே பேசிட்டு இருக்குற’என வந்தான் சக்தி…

“என்ன ஆச்சர்யம்,நீங்களே வழியவந்து பேசுறேங்க,மழை வரப்போகுது,எங்க தள்ளுங்க பார்க்கலாம் மழை வருதானு”என்று அவனை ஒதுக்கிவிட்டு அந்த வரண்டாவில் இருந்து வானத்தை பர்த்தால்.

‘இன்னைக்கு மழையெல்லாம் வராது,இன்னைக்கு முழுவதும் வெயில் மட்டும் நூறூ டிகிரிக்கு மேல இருக்கு,பார்த்தான் தெரியல’

“அது எனக்கும் தெரியும்,ஆனா நீங்க வந்து பேசி இருக்கேங்கள அதான்,என்ன திடிர்னு இந்த பக்கம்”

‘சும்மா,உன்னை பார்க்க வந்தேன்’

“என்னை பார்க்க,அதுவும் என் கிளாஸ்க்கு வந்து இருகேங்க,என்ன விஷயம்”

‘உன் ஃபிரண்ட் கலைவாணிய என் அண்ணா விரும்புறான்,இது அந்த பொண்ணுக்கு தெரியாது ஆனா அந்த பொண்ணு எப்படினு உன்கிட்ட கேட்க வந்தேன்’

”இன்னும் எத்தனை பேர்டா அவளை லவ் பண்ண கிளம்பிருக்கேங்க”

‘என்ன சொல்லுர,இதுக்கு முன்னாடி யாரு அந்த பொண்ண விரும்பிருக்கா’

“அதையென் கேட்க்குர,உனக்கு முன்னாடி ஒரு சீனியர்,வந்து என் ஃபிரண்ட் உன் ஃபிரண்ட் அஹ விரும்புறானு சொல்லிட்டு போறான், இப்போ நீ வந்து உங்க அண்ணா லவ் பண்ணுறாங்கனு சொல்லுர”என்று விஷ்ணு வந்ததை கூரினால்.

’யாரு எனக்கு காட்டமுடியுமா’

“பிஜி பண்ணுறாங்கனு என் கிளாஸ்மெட் சொன்னா,ஆனா பேர் தெரியாது”

‘சரி நெக்ஸ்ட் டைம் அவனை பார்த்தா என்கிட்ட சொல்லு,நான் போயிட்டுவறேன்’

“ஒகே,பை”

’என்னடி இங்க இன்னும் யோசனை பண்ணிட்டு இருக்குற” என்றுகலை வந்து அவளை கேட்டால்.

“நீ யாரை லவ் பண்ணுற கலை,அதுவும் என்கிட்ட மறைக்கிற அளவுக்கு????சொல்லு”என வாசு கேட்க.

’கலையோ திகைத்து நின்றாள், “வாசு  நான்…நான் லவ் யாரை லவ் பண்ணுறேன்னு நீ நினக்கிற,என்ன சொல்லுற” (மனதில்,இவளுக்கு எப்படி தெரியும் நான் கதிர லவ் பண்ணறது)

“ம்ம்,உன்னை லவ் விரும்புறவங்க ஒன்னுக்கு ரெண்டு பேர்”என தேவ்வின் தோழனும்,கதிரின் தம்பியும் வந்ததை கூறிமுடித்தால்.

‘ப்பூ…. இவ்ளோ தானா,நான் கூட பயந்துட்டேன்’(நல்லவேளை கதிர லவ் பண்ணறது இவளுக்கு தெரியாது) யாரோ என்னமோ சொன்னா உடனே நம்பிடுவியா’

“உன்னை அப்படி நினைப்பேனா,நீதான் குடும்ப குத்துவிளக்காச்சே உன்னை ஒருத்தேன் லவ் பண்ணறான அவன் எவ்ளோ பெரிய தியாகம் செஞ்சுருக்கனும் அதுக்கு அவன்,கலக்கபோவது யாருல வர்ர அரந்தாங்கி நிஷாவ லவ் பண்ணிருக்கலாம்”என வாசு கலையை கேலிசெய்தால்.

‘என்னது,என்னை லவ் பண்ணறவன் தியாகம் செஞ்சுருக்கனுமா,அதுவும் அவன் என்னை லவ் பண்ணறதுக்கு பதிலா அறந்தாங்கி நிஷாவ லவ் பண்ணிருக்கனுமா,உன்னை’என்று அவளை அடிக்க துரத்தினால்.

”இப்படியாக என் தேவதையை சந்தித்த நாள் அழகாக சென்றது,என் காதலும் அவளிடம் சொல்லும் நாட்களுக்காக நானும் காத்திருந்தேன், அவளும் என்னை விரும்புவாள்,என நினத்துருக்க விதி என் வாழ்க்கையை மாற்ற இடையில் சக்தி வரவழைத்து அழகாக விளையாட தொடங்கியது”

‘அருண் அப்பா ஆபீஸ் வந்துட்டாங்களா’என தேவ் கேட்க.

“எஸ் சார்,சார் வந்து அரைமணி நேரம் ஆச்சு”

‘ஓகே,நான் அவரை மீட் ப்ண்ணனும் அதான் கேட்டேன், நீங்க போகலாம்’என அவனை அனுப்பி வைத்துவிட்டு அந்த ரீப்போர்ட்டை எடுத்துகொண்டு நந்தனின் அறைக்கு சென்றான்.

“மெதுவாக நாக் செய்துவிட்டு உள்ளே நுலைந்தான் தேவ், “என்ன தேவ் ரெண்டு நாளா என்னை கேட்டதா அம்மா சொன்னா என்ன விஷயம்,எதவது கம்பெனி டீலிங்கா தேவ்”என ராதா கூரியதை தவிர்த்துவிட்டு அவரே மாற்றி கூறினார்.

‘அதெல்லம் என் திறமையில உங்களுக்கு சந்தேகம் வேணாம் டாடி, விணு ஆக்சிடெண்ட்ல இறந்ததா சொன்னேங்க ஆனா அவனுக்கு எந்தவித ஆக்சிடெண்ட் நடக்கலை,அதுவுமில்லாம அவன் யாருக்கோ அவன் உயிரோட இருக்கும் போது அவன் இதயத்தை கொடுத்து இருக்கான்’என வரிசையாய் கேள்வியை முன்வைத்தான்.

“இதை கேட்ட,நந்தன் அதிர்ச்சியாய் அவனை பார்த்தார்” ‘சொல்லுங்க டாடி,என்ன நடந்த்து என் விணுக்கு’என தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

‘தேவ் நீ இவ்ளோ எமோஸ்னல் ஆக்கூடாது,இல்லையினா உனக்கு ஆபத்து ராஜா’என முதல்முறையாய் அவனை செல்லமாக அழைத்து அவனை சமாதானம் செய்தார்.

“போதும் உங்க சமாதானம்,இப்போ சொல்ல போறீங்களா,இல்லை இன்னும் எத்தனை நாள் என்கிட்ட இருந்து மறைப்பேங்க”என்று அவன் முன் இருந்த பொருளை தூக்கி போட்டு உடைத்தான்.

‘வாசுதேவ் நான் சொல்லுறத கேளுப்பா’என சொல்லிக்கொண்டிருக்கும் போது அவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது.அதை பார்த்த நந்தன் பதறிக்கொண்டு வேணாம் வாசு சொல்லுறத கேளு ராஜா,உனக்கு என்ன உண்மைதானா தெரியனும் நான் சொல்லுறேன் இங்க பாரு ராஜா உனக்கு மூக்கில இருந்து ரத்தம் வருதுப்பா”என அவர் அவனிடம் நெருங்க.

‘கிட்ட வராதேங்க டாடி,நீங்க சொல்லுங்க,இந்த வாசுகிராமன் யாரு டாடி இந்த ரீப்போர்ட் யாருது,இதுலையும் ஹார்ட் ஆப்ரேஷ்ன் நடந்ததுருக்குனு இதுல இருக்கு’சொல்லுங்க டாடி’என்று அவன் வாசுகியின் ரீப்போர்ட்டையும் சேர்த்து அந்த டேபில் மீது போட்டான் அந்த பைலை.

“நந்தன் மொத்தமாக அதிர்ந்துவிட்டார்,எப்படி தேவ்விர்க்கு வாசுகியின் ரீப்போர்ட் கையில் கிடைத்தது என்று,அதுவும் இல்லாமல் இந்த நேரத்தில் எல்லாம் உண்மைகளையும் தேவ்விடம் கூறினால்,அனைவருக்கும் பிரச்சனை ஆகிவிடும்,என்ன செய்வது”என்று தெரியாமல் அவர் இருக்க, “தேவ்வின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்க்காமல் வழிந்துகொண்டு இருந்தது.

’சரிப்பா ராஜா நான் சொல்லுறேன் இப்போ உன் உடம்பு தான் எனக்கு முக்கியம்,ராஜா’அவனை கெஞ்ச………அவனோ “எனக்கு என் விணுவ பத்தி தெரியனும் சொல்லுங்க,எனக்கு என்ன ஆனாலும் பராவாயில்லை ஆனா என் விணுவ கொன்னது யாரு,சொல்லுங்க’என கேட்டுகொண்டே அவன் மயங்கி சரிய…அவனை கையில் குழந்தை போல் தாங்கினார் நந்தன்.

“உன்னை முதல் முதலா குழந்தையா கையில ஏந்திய போது,இருந்த சந்தோஷம்,இன்று அவர் முன் ரத்தத்துடன் மயங்கி இருக்கும் வாசுதேவ்வை பார்க்க அவர்க்கு விணுவை இழந்தது தான் நினைவுக்கு வந்தது.

’கடவுளே,எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை,போதும் ஏற்கனவே என் பிள்ளையை இழந்து,என் குடும்பம் முக்கியமா என் வாசுதேவ் பட்ட கஷ்டம் போது,இவன் வாழுற வயசு,வேண்டாம் இதுக்குமேல அவனுக்கு எந்த உண்மை தெரியகூடாதுனு நினைச்சேனோ அதை அவனுக்கு எப்படியே தெரிஞ்சு போச்சு’என அவர் புலம்பிக்கொண்டு இருக்கும் போது அருண் எதர்ச்சியாக உள்ளே நுலைந்தான்.

“சார்,தேவ் சார்க்கு என்னாச்சு,ஏன் இப்படி மயங்கி விழுந்திருகாரு”என கேட்டுகொண்டே அவனை தூக்கினான்.

“பேசுறதுக்கு நேரம் இல்லை அருண்,வேகமா ஹாஸ்பிட்டல் போகனும்,வா”என தேவ்வை காரின் பின்னாடி வைத்துவிட்டு அவன் அருகில் நந்தன் அமர்ந்துகொண்டார்,அருண் காரை ஓட்டிகொண்டு ஹாஸ்பிட்டல் சென்றனர்.

’வணி,கதவ திறந்து போட்டு அப்படி யாருகிட்ட பேசிட்டு இருக்குற’என்று பேசிகொண்டு வந்தான்,கதிர். “அங்கு இருந்த அர்ஜுனை பார்த்ததும் யாரிவன்”என்ற பாவனையில் கலையை பார்க்க அவளோ அவனையும்,அர்ஜுனையும் மாறிமாறி பார்த்தால்.

”ஹாய், நான் அர்ஜுன்,சரண் ஃப்ரண்ட்”என அவனின் நண்பர்கள் பற்றியும்,சரணுக்கும் தனக்குமான நட்பை பத்தியும் கூறினான்.

‘சொல்லுங்க கதிர் அதுகடுத்து என்ன நடந்துச்சு’என்று கேட்க ஆரம்பித்தான்.

 

                                   

                                     உன்நினைவுகள் தொடரும்…………

 

Advertisement