Advertisement

              நினைவுகள் 12

 

“அத்தை என்னாச்சு,ஏன் இப்படி நிக்குறேங்க”என உலுக்கினாள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை வசும்மா,ஏதோ யோசனை வேற ஒன்னுமில்லை’என்று அவர் சமாளித்தார்,ஆனால் அவ்ளோ விஷ்ணுவை பற்றிகேட்டால்.

“அத்தை உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்காங்கனு என்கிட்டே சொல்லவே இல்லை”

‘ஆமா வசும்மா எனக்கு ரெண்டு பசங்க,ஆனா ஒரு பையான் இப்போ இல்லை,இதை பத்தி தேவ் உன்கிட்ட சொல்லுவான்’என தடுமாறி கூற

“ராதாவின் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்த வசு சாரி அத்தை தெரியாம கேட்டுட்டேன்.

‘அதனால ஒண்ணுமில்லை வசும்மா போ போய் ரெஸ்ட் எடு உன் ரூம்ல,கொஞ்சம் நேரம் கழிச்சு நான் எழுப்பிவிடுறேன் சரியா’

“சரிங்க அத்தை”என்று அவள் மாடியேறினாள்.

‘வசுக்கு, தேவ்வோட தம்பிய பத்தி எதுவும் தெரியக்கூடாது,இதை பத்தி அவருகிட்ட சொல்லணும்’என நந்தனுக்காக காத்திருந்தார்.

இங்கோ “அர்ஜுனிடம்,கலைவாணி அவர்களின் கடந்தாகலங்களை கூறிக்கொண்டு இருந்தால்”

“கேவிகே கல்லூரி”மிகவும் ஆர்ப்பாட்டமாகவும்,உற்சாகமாகவும் இருந்தது, காரணம் முதலாமாண்டு மாணவ,மாணவிகள் வரும் முதல் நாள்,இறுதி ஆண்டு மாணவர்களும்,இரண்டாமாண்டு மாணவர்களும் சேர்ந்து முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்க்குகளை செய்யவேண்டும்,அதாவது ராகிங்.

“பன்னீர் பூக்கள் போல அடி எடுத்துவைத்தனர் மாணவிகள்,அதற்க்கு ஏற்றார் போல ராஜாவின் நடைக்கு ஏற்ப மாணவர்கள் கல்லூரிக்குள் வந்தனர்.

‘ஹே வாசு பயமா இருக்குடி இந்த பசங்களை பார்த்த ஏதோ எங்க ஊரு நாட்டமைங்க மாதிரி மரத்துக்கு ஒரு கும்பல் இருக்காங்க,என்ன, சொம்பு மட்டும் மிஸ்ஸிங் டி, நம்ம கிளாஸ் ரூம் எதுன்னு இங்க யாருகிட்ட கேக்கேணும் தெரியல’

“எனக்கு மட்டும் இங்க இருக்குற எல்லாத்தையும் தெரியுமா,பேசாம வா டி யாராவது ஒரு சில்வண்டு மாட்டாமையா போகும், வாடி”என்று வெளியே தைரியமாகவும்,உள்ளுக்குள் பயந்துகொண்டு இருந்தால்.

‘இவர்கள் இருவரையும் ஒரு கும்பல் பார்த்துகொண்டு இருந்தது,அதை அறியாமல்,வசுவும்,கலையும் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்றுகொண்டுஇருந்தனர்’

“ஹே 1st இயர் கேர்ள்ஸ்,இங்க வாங்க என்று அந்த கும்பல் அழைக்க”

‘ஆனால் அவர்களோ திரும்பி பார்த்து வேறு யாரையோ அழைக்கிறார்கள்,என்று நினைத்துகொண்டு அவர்கள் தங்களுது கிளாஸ் ரூமை தேடி செல்லும் போது,ஹலோ, வெயிட் சுடி,பர்ப்பில் சுடி கேர்ள்ஸ் இங்க வாங்க என்று மறுபடியும் அவர்களை அழைத்தனர்.

“கலையோ ‘ஹே வாசு அவங்க நம்மளைதான் கூப்பிடுறாங்க’என வசுவிடம் சொல்ல”

‘இன்னைக்கு சிக்க போற சில்வண்டு நாமதான் போல வா போகலாம்’என்று அவள் கலையை அழைத்துக்கொண்டு அந்த கும்பலை நோக்கி சென்றனர்..

“என்ன மேடம்ஸ் கூப்பிட்டா திரும்பி பார்த்துட்டு போறேங்க,இங்க நாங்கதான் சீனியர்ஸ், கூப்பிட்டா வரணும் என்ன”என அந்த கும்பலில் இருந்த ஒருவன் கெத்தாக பேசினான்.

‘சாரி அண்ணா நீங்க அந்த க்ரே கலர் சுடிதார் பொண்ண கூப்பிட்டேங்கனு நினைச்சோம் இல்லை கலை, என்று அவள் கலையை துணைக்கு அழைக்க “கலையோ,ஆமா அண்ணா”என ஒத்தூத.

“ம்ம் அங்க யாரும் க்ரே கலர்ல ட்ரெஸ் போடல,நீங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்க ஒரு சாக்கு”

“டேய்,மசமசன்னு பேசாம அவங்களுக்குகான டாஸ்க் என்னனு சொல்லு மச்சி”என ஒருவன் கூற.

“முதல உங்க பேரு என்ன சொல்லுங்க”என கேட்க.

‘என் பேர் கலைவாணிஜெகநாதன்’

‘என் பேர் வாசுகிராமன்’என இருவரும் அவர்களின் பெர்யர்களை சொல்ல.

“கலைவாணி,உனக்குத்தான் முதல் டாஸ்க், என்னனு தெரியுமா அதோ அங்க ஒருத்தன் தனியா உட்கார்ந்து இருக்கான் பாரு அவன்கிட்ட போய் “நீங்க என்னை மட்டும்தான் லவ் பண்ணனும் சொல்லணும்”போ, நீ போய் சொல்லிட்டேனா இனி உன்னை எங்க பார்த்தாலும் நானோ இல்லை மத்த பசங்களோ கிண்டல் பண்ணமாட்டோம்”என்று கூற.

‘அவளோ “சரிணா நான் செய்யுறேன்,எந்த பையன் சொல்லுங்க”

“அதோ கீரின் கலர்ல சர்ட்,சாண்டில் பேன்ட்,போட்டு இருக்கான்ல அவன்தான்”என்று அவளை அனுப்பி வைக்க.

‘கலை, நேராக அவனிடம் சென்று அவனுக்கு பின்னால் நின்று, அவனை “எக்ஸ்கியூஸ் மீ”அவள் அவனை அழைக்க.

“எஸ்”என அவன் திரும்ப.

“இவளோ,சாரிங்க இதை சொல்லலைனா அவங்க என்னைகிண்டல் பண்ணுவாங்க,என்று கூறிவிட்டு “நீங்க என்னை மட்டும்தான் லவ் பண்ணனும்”என சொல்லிவிட்டு சென்றாள்.

“அவனோ,அவள் முதலில் வந்து,தன்னிடம் மன்னிப்பு கேட்டு,அதன் பின் அந்த மாணவர்கள் சொல்வதை செய்துவிட்டு “நீங்க என்னை மட்டும்தான் லவ் பண்ணனும்”என்று அவள் சொல்ல அவனோ உண்மையாகவே அவளை காதலிக்க தொடங்கிவிட்டான் கதிர்வேல்.

‘திரும்பி வந்தவள் அந்த கும்பலிடம், “சொல்லிட்டேன் அண்ணா,நாங்க கிளாஸ்க்கு போகலாமா”என கேட்க.

“ஹலோ மேடம்ஸ்,நீங்க மட்டுதான் டாஸ்க் முடிச்சு இருக்கேங்க உங்க தோழி டாஸ்க் செய்யவேண்டாமா,பொறுங்க அதுக்குள்ள என்ன அவசரம்,ம்ம் அடுத்து நீ, வாசுகி உங்களுக்கு என்ன டாஸ்க்னா “அங்க இருக்கான் பாரு செக்டு சர்ட் போட்டு அந்த மரத்துக்கீழ ரெண்டு பேரோட பேசிட்டு இருக்கான்ல அவன்கிட்ட போய், உங்க அப்பா,அம்மா நல்ல இருக்கங்களான்னு கேட்டு வர்ற, போ போயிட்டு வா.என்று அவளை அனுப்பிவைக்க.

“டேய்,அவனுக்கு அவங்க அம்மா,அப்பா பத்திகேட்டா கோவம் வரும் பாவம்டா அந்த பொண்ணு,வேணாடா வேற டாஸ்க் கூட கொடு”என ஒருவன் சொல்ல.

‘புது பொண்ணுடா அவன் ஒன்னும் செய்யமாட்டான்’

“அவர்கள் பேசியதை கேட்ட கலை, “அச்சோ வாசு மாட்டிகிட்டாலே”

‘வசு,அவன் அருகில் சென்று, அவனிடம் “அம்மா அப்பா நல்ல இருக்காங்களா”என கேட்க.

“டேய் சக்தி உன்னைத் தேடி ஒரு பொண்ணு வராடா”என அவனின் தோழன்,அசோக் சொல்ல.

“என்னை தேடி எந்த பொண்ணு வர்றா”என அவன் அவளை பார்க்க அதற்குள் அவள் அருகில் நின்று அவனின் அன்னை,தந்தையை நலம் விசாரித்ததும்,அவனுக்கு கோவம் வந்துவிட்டது.

‘அவளின் பக்கத்தில் சென்று “உன்னை ராகிங் பண்ணறதால சும்மாவிடுறேன் இல்லையினா நடக்குறதே வேற,அசோக் இவளை முதல இங்க இருந்து போக சொல்லு”என அவன் காத்த’

“அவளோ “சரியான லூசா இருக்கான் அம்மா,அப்பா பத்தி கேட்டா கோவம் படுறான்,இடியட்”என்று அவள் அவனை திட்டுவிட்டு போக.

‘யாரு நான் லூசா,ஆமா நான் லூசுதான்,போடி’

“ஹே போடி, வாடின்னு சொன்ன அடிச்சுடுவேன்”

‘அசோக்,அவளை இங்க இருந்து போக சொல்லு,இல்லையினா இவளை என்ன பண்ணுவேன்னு தெரியாது.

“சிஸ்டர் முதல போங்க, அவன் ரொம்ப கோவக்காரன்”

‘இவளோ இவன்கிட்டேல்லாம் பேச்சுவாங்கனும்னு இருக்கு’என்று அவள் கோபத்துடன் அவள் கிளாஸ்க்கு செல்ல அவளை பின் தொடர்ந்து வந்தால் கலை.

“ஹே வாசு, நில்லு டி”என அவள் கூப்பிட வசுவோ “முதல் அவன்கிட்ட சண்டை போடவேண்டியதாச்சே”என்ற எரிச்சலில் செல்லும் போது எதிரே வந்தவன் மீது மோதிகொண்டால்.

‘ஹே பார்த்து பார்த்து, என அவன் அவளை பிடித்து நிற்க வைத்தான்,ஆனால் அவளோ “அறிவில்லை நான் வரேன்ல உன் கண்ணுக்கு தெரியலையா,இப்படி வந்து இடிக்குற,காலையில இருந்து என்னை டென்சன் பண்ணுறேங்க எல்லாரும்,அங்க என்னடானா ராகிங் பண்ணுறேன்னு என்னை ஒருத்தன்கிட்ட திட்டு வாங்கவைக்குறாங்க, இப்போ என்னடான,நீ வந்து மோதுற,ச்சே இந்த காலேஜுக்கே வந்து சேர்ந்து இருக்க கூடாது”என்று அவள் போக்கில் மோதியவன் மீது கோவபட்டுவிட்டு தானாக பேசிக்கொண்டு சென்றாள்.

ஆனால் மோதியவனோ “அவள் பேசும் அழகில் மயங்கி நின்றான்,அடுத்து அவள் தன்னை திட்டும் போது அவள் உதடுகள் அசைவில் தன்னை அவளுக்குள் தொலைத்தான்,இறுதியில் அவள் இல்லாத உலகம் தனக்கும் இல்லை என்ற நிலைக்கு வந்தவன்” பின்புதான் கவனித்தான் அவள் தன்னை கடந்து சென்றுவிட்டதை.

‘சாரிண்ணா,அவளை ராகிங் பண்ணதுல கோவபட்டுடா,அந்த எரிச்சல உங்ககிட்ட காட்டிட்டா சாரிண்ணா’என யாரோ ஒரு பெண் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை பார்த்து அவளிடம் “இருக்கட்டும் சிஸ்டர்,போங்க அவங்களை சமாதான்படுத்துங்க”என்று சொல்ல அதற்குள் அவனை தேடி வந்தான் கதிர் “தேவ் இங்கதான் இருக்கியா”என்றபடி வந்தான்.

கலையோ “கதிரை பார்த்ததும்,தேவ்விடம் வரேணா”என்று சொல்லிவிட்டு சென்றாள்.

“கதிர்,கலை செல்லும் வழியே பார்த்துகொண்டுயிருந்தான்” அப்பொழுது ‘”சிஸ்டர் போய் அரைமணி நேரம் ஆச்சு வேல்”என தேவ் கேலி செய்ய.

‘கதிர்,தலையை சொறிந்துகொண்டு கொஞ்சமாய் வெட்கப்பட்டான்”

“ஹே அங்க இருந்து கூப்பிட்டு வரேன் உனக்கு காது கேட்கலையா,அப்படி என்ன உனக்கு கோவம்,என்னை தனியா விட்டு வர்ற அளவுக்கு”என்று கலை வசுவை திடிகொண்டுயயிருந்தால்.

“எல்லாம் அவனால வந்துச்சு கலை,என அவள் சென்று அவனிடம் பேசியதை கூற,அதற்கு அவனோ அவளை திட்டி,பதிலுக்கு இவள் சண்டை போட்டு எல்லாத்தையும் கூறி முடித்தாள்”

‘அவன் மேல இருக்குற கோவத்துல நீ இடிச்சவன, நீயே திட்டிட்டு வருவியா’என கலை சொல்ல. அவளோ “என்ன சொல்லுற, நான் இடிச்சேனா,எப்போ,எங்க”என்று அவள் கேட்க.

“ஹ்ம்ம் “யாருமேல உள்ள கோவத்த யாருகிட்ட காமிச்சு இருக்கேன்னு தெரியுமா,பாவம் அந்த அண்ணா, நான்தான் போய் உனக்கு பதிலா சாரி கேட்டேன்”என்று கலை நடந்ததை கூற.

‘ச்சே,நான் இப்படி பண்ணிட்டேனா,சரி அவனை திரும்ப பார்த்தா நான் சாரி கேக்குறேன்’

“ம்ம் சரி”

‘ஒருவாரம் சென்ற நிலையில், கலை உணவு கொண்டு வரவில்லை என்று கேண்டின் சென்று சாப்பிட சென்றனர்’ கலையும்,வசுவும்.

“வசு கலைக்காக காத்திருக்க,அப்போது “ஹாய் சிஸ்டர்”என பேசிக்கொண்டு அவளுக்கு அடுத்த சேரில் உட்கார்ந்தான் அசோக்.

“நீங்க யாரு”

‘1st டே காலேஜ் ராகிங்,உங்களை திட்டுனது’என அவன் அவளுக்கு நினைவுபடுத்த.

“ஓ…….எஸ் ஞாயபகம் வருது,எங்க அந்த லூசு,ஆளக்காணம்”

‘சிறுபுன்னகையுடன் அவன் லூசு இல்லை சிஸ்டர்,நீங்கதான் அவனை பத்தி தெரியாம பேசிட்டேங்க’

“என்ன சொல்லுறேங்க”

‘அவனுக்கு அப்பா,அம்மா இல்லை’

“அச்சோ எனக்கு தெரியாது,ஆனா அதுக்கு ஏன் கோவப்படனும்”

‘அதுதான் பிரச்சனையே,அவனுக்கு அவங்க அம்மா,அப்பாவ பிடிக்காது’

“பிடிக்காதுனா, புரியல”

‘ஹ்ம்ம்,உனக்கு சொன்னா புரியாது,அதை இன்னொரு நாள் சொல்லுறேன்,அவன் கோவப்பட்டது தப்புதான்,ஆனா நீயும் பதிலுக்கு கோவப்பட்டுஇருக்க கூடாது’

“உங்கள நான் வாட,போடானு சொன்னா கோவம் வருமா,வராதா, அதுமாதிரிதான்,என்னை போடின்னு சொன்னா கோவம் வரும்”என அவள் அசோக்கிடம் பேச.

‘சரி,அதுக்கு நான் சாரிகேக்குறேன்,ஓகே’

“நீங்க ஒன்னும் சாரி கேக்கவேணாம்,பேசுனது அவன்,அவன் கேட்கட்டும்”

‘சரிம்மா நான் வரேன்,நீங்க சாப்பிடுங்க’என்று கலை வருவதை பார்த்து கிளம்பினான்.

“ம்ம் பை”

‘என்ன டி,யாரு அவன்’

“அவன், என ஆரம்பித்து அன்று நடந்தை சொல்லி,இன்று அசோக் வந்து பேசியத்தையும் கூறிமுடித்தாள்”.

“அங்கு கலை அர்ஜுனிடம் கடந்தகால நினைவுகளை கூற,இங்கோ வசு தேவ்வின் அறையில் எடுத்த டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தால்”

‘ம்ம்ம்,இன்னைக்கு வசீ வரதுக்குள்ள இந்த டைரியை படிச்சுமுடிச்சுடனும், இல்லையினா நம்மல படிக்கவிடமாட்டாங்க’என்று அவள் துணிக்கு அடியில் வைத்திருந்த டைரியை எடுத்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தால்.

“அந்த டைரியில் “நான் கல்லூரி சென்ற முதல் நாள் இன்று எனது தேவதை என் கண்முன் வரும் நாள் என்று எனக்கு தெரியாது,அது தெரியாமல் நான் கல்லூரிக்கு புறப்பட ஆரம்பித்தேன்”

‘அம்மா,இன்னைக்கு காலேஜ் 1st டே,கிளம்பிட்டேன்,பை’என விஷ்ணு கிளம்பினான்.

‘சரி விணு பார்த்து போயிட்டு வா’

“ம்ம் சரிம்மா,அப்பா போயிட்டு வரேன்”

‘பை தேவ்,ஆல் தி பெஸ்ட்’

“தேங்க்ஸ் அப்பா”

‘தேவ் எங்க டா இருக்க, உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்’

“இதோ கதிர் வந்துட்டு இருக்கேன்,சரண் எங்க வந்துட்டான”

‘நாங்க ரெண்டு பேரும்,இங்கதான் இருக்கோம்டா’

“சரி டா வந்துட்டேன்”

“எங்க கதிர்,தேவ் வந்துட்டானா”என சரண் கேட்க.

‘ம்ம் வரான்’

“சரண்,கதிர்,தேவ்,மூவரும் கல்லூரி தோழர்கள்,இவர்கள் மூவரும் இப்பொழுது மேற்படிப்பிற்க்கும் தாங்கள் படித்த அதே கல்லூரியில் படிக்க செல்கிறனர்,

‘தேவ்,கதிர், நீங்க முன்னாடி போங்க,நான் பிரின்சிபல் சார் அஹ பார்த்துட்டுவரேன்,ஓகே டா,தேவ்வும்,கதிரும்,தங்களது வகுப்பிற்கு சென்றனர்’

“அப்போது கதிருக்கு சரணிடம் இருந்து போன் வந்தது, “கதிர்,உன்கிட்ட என் மார்க்சீட் இருக்கும் அதை எடுத்துட்டு வா”

‘சரிடா வரேன்,தேவ் சரண் கூப்பிடுறான்,இரு வரேன்’

“ம்ம் சரி போயிட்டு வா”

‘கொஞ்சம் நேரம் பொறுத்திருந்த தேவ்,அவர்கள் இருவரும் வராததால் அவனே அவர்களை தேடி வகுப்பை விட்டு வெளியேறினான்,வெளியேறி வரண்டாவில் செல்லும்போதான் “அவன் மீது,ஒரு பெண் மோதி விட்டு அவனை திட்டிவிட்டுசென்றாள்” அவனை இதுவரை யாரும் திட்டியது இல்லை,ஆனால் ஒரு பெண் தன்னை திட்டும் அழகில் அவளையே பார்த்து நின்றான்,எத்தனையோ பெண்களை கடந்தாலும் இந்தப்பெண்னை மட்டும் அப்படி கடந்து செல்ல முடியவில்லையே,என தன் மனதிடம் கேள்விகேட்டான்,அதற்க்கு மனம் கூறிய பதில், “அந்த பெண்ணை நீ காதலிக்க தொடங்கிவிட்டாய்”.

“அவள் செல்வதையே பார்த்துகொண்டு இருந்தவன்,தன் அருகில் கேட்ட குரலில் நினைவுக்கு வந்து திரும்பினான்”

‘கலை அவனிடம் “சீனியர்கள் தங்களை ராகிங் செய்ததையும்,அதானால் கோவம் வந்து அவனை திட்டி சென்றதையும் கூறினால்”

“அன்று நடந்தை விஷ்ணு, அவள் நினைவில் வாங்கிய புது டைரியில் அவளை சந்தித்ததையும்,அவளிடம் வாங்கிய திட்டுகளையும் சேர்த்து எழுதி வைத்தான், முதல் நாள் நடந்ததை எழுதி முடித்ததும் அவளின் நினைவில் “உன்னிடம் வாங்கிய திட்டுகளை

           சேமிக்கின்றேன் உன் நினைவுகளுடன்

           என் நெஞ்சில் காதலாக” என்ற கவிதையுடன் முடித்தான் முதல் பக்கத்தை.

‘அதை படித்த வசு “ம்ம் முதல் சந்திப்பிலே காதல் வந்துடுச்சு,ஆனா அவ திட்டுனதை சேர்த்து கவிதை எழுதிருக்கான் பாரு அங்க நீ நிக்குற”என அவளுக்கு அவளே பேசிக்கொண்டு இருந்தால்.

“என்னங்க எங்க இருக்கேங்க”

‘என்ன ராதா,என்னாச்சுமா’

“இங்க ராஜா, பழையபடி விஷ்ணுவா நினைச்சு,வசுகிட்ட பேசி இருக்கான்”

‘என்ன ராதா சொல்லுற’

“ஆமாங்க உங்களை கேட்டுட்டு இருந்தான்,நீங்க எங்க இருக்கேங்க”

‘நான் வேலை விஷயமா,டெல்லில இருக்கேன் ராதா அதான் உன்கிட்ட சொல்ல முடியல,நான் உடனே கிளம்பிவரேன்’

“சீக்கிரம் வாங்க”

‘சரிமா வரேன்’

“அன்னைக்கு,வாசுகிட்ட அசோக் வந்து பேசினபோதுதான் தெரியும் அவங்க சக்தியோட ப்ரிண்டுன்னு,அதுக்கடுத்து அவளும்,நானும் அவங்களை பார்க்கலை,ஆனா வாசுதான் சக்திய தேடி போனா”

‘வாசு ஏன் தேடி போகணும் சக்திய’என அவளிடம் கேள்விகேட்டான்.

“அது, அன்று கலை, கல்லூரிக்கு வரவில்லை,அதானால் வசு மட்டும் தனியாக கல்லூரி வந்தால்.

‘இந்த கலை லீவ் போட்டாலே,முன்னாடியே என்கிட்டே லீவ் போடுறேன்னு சொல்லி இருந்தா நானும் லீவ் போட்டு இருப்பேன்,இப்போ நான் மட்டும் தனியா கிளாஸ்க்கு போகணும்’என்று புலம்பிக்கொண்டே கல்லூரி கிரவுண்டில் நடந்து செல்லுபோது தான் கவனித்தால் சக்தி தனியாக இருப்பதை.

“தனியா இருக்கான்,போய் பேசலாமா,அன்னைக்கு அசோக் சொன்னதை நினைத்து பார்த்து”சக்தியிடம் பேச சென்றாள்.

‘இதை சரணும்,கதிரும் பார்த்துகொண்டு இருந்தனர்’

“ஹாய்”

‘சக்தி தலையை தூக்கி பார்த்துவிட்டு,அவளை கண்டும்காணாமல் இருந்தான்’

“சாரி,அன்னைக்கு ராகிங் பண்ணாங்க,அவங்கதான் உங்ககிட்ட அந்தாமாதிரி பேச சொன்னாங்க,உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு எப்படி தெரியும்,அதான் சாரி”என்று சக்தியிடம் மன்னிப்பு கேட்டால்.

‘அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்’

“இவ்ளோ பேசுறேன் நீங்க எதுவும் பேச மாட்டீங்களா,நீங்க என்னை திட்டுனேங்க,பதிலுக்கு நானும் உங்களை திட்டுனே,அதுக்குதான் சாரி கேட்டேன்”என பேசிவிட்டு சென்றாள்.

‘அவள் செல்வதை பார்த்து,அசோக் சக்தியிடம் வந்தான், “என்ன சக்தி அந்த பொண்ணு வந்தாளா”

‘ஆமா அதுக்கு என்ன’

“சக்தி ,அந்த பொண்ணு சொல்லுறது உண்மை,அன்னைக்கு நம்ம பசங்க அந்த பொண்ணையும்,அவ ப்ரிண்டையும் ராக் பண்ணதாலதான்,அந்த பொண்ணு வந்து உன்கிட்ட அப்படி பேசினது,உன்னை பத்தி தெரிஞ்சு இருந்தா அந்த பொண்ணு பேசி இருக்குமா சொல்லு,அதுக்கடுத்து அந்த பொண்ணுகிட்ட நான் பேசினேன், என அன்று நடந்தை கூறினான்.

‘இப்போ சொல்லு அந்த பொண்ணு வேணும்னா உன்கிட்ட பேசி இருக்கும்,இப்போ வந்து உன்கிட்ட என்ன பேசினான்னு தெரியாது ஆனா நீ அந்த பொண்ணா திட்டினதுக்கு போய் சாரி கேளு போ’என்று அவனிடம் சொல்லிவிட்டு சென்றான்.

“கதிர்,அந்த பொண்ணு எதுக்கு சக்திகிட்ட பேசிட்டு போறா,சக்திக்குத்தான் பொண்ணுங்களே பிடிக்காது அப்புறம் எதுக்கு அந்த பொண்ணு வந்துட்டு போனா”

‘என்னைக்கேட்டா,போய் சக்திகிட்ட கேளு,எனக்கு எப்படி தெரியும்’

“என்ன டா என்ன கேக்கணும்,யாருகிட்ட”என்றபடி வந்தான் விஷ்ணு.

‘ஒண்ணுமில்லை தேவ்,ஒரு பொண்ணு சக்திகிட்ட பேசிட்டு போறா அதை பத்தி கதிர்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்,வேற ஒண்ணுமில்லை.

“ஏதாவது நோட்ஸ் வாங்க பேசிருப்பா,இதுக்கு ஏன் டா அவன்கிட்ட கேக்குற”

‘சரி வாங்க கிளாஸ் ஆராம்பிக்க போகுது,போகலாம்’என அழைத்து சென்றான் தேவ்.

‘அருண் அந்த வெற்றிய பத்தி விசாரிக்க சொன்னேள,என்னாச்சு’என்று போனில் கேட்டுக்கொண்டு இருந்தான்,சரி அருண் அதை கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க.

“காரில் வரும் வழியில்,அந்த ரிப்போர்ட் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தான்,வாசுதேவ், ரிப்போர்ட் அப்பா கபோர்ட்ல இருந்துச்சு,ஆனா அந்த ரிப்போர்ட் அஹ பத்தி அப்பா என்கிட்டே எதுவும் சொல்லலா,அப்பா கபோர்ட்ல இன்னும் ஏதாவது ஆதாரம் இருந்தா,இதை அப்பகிட்ட கேட்டா சொல்லமாட்டங்க நான்தான் தேடனும்”என யோசித்துக்கொண்டு காரில் வேகமாக வீட்டிக்கு சென்றான்.

“வசு,அந்த டைரியில் அடுத்த பக்கத்தை திருப்பும்போது,கதவை திறந்துகொண்டு வந்தான் தேவ்”

 

                 

                                  உன்நினைவுகள் தொடரும்……..

 

Advertisement