Advertisement

                நினைவுகள் 11

 

இந்த சாரீலா எது கட்டலாம்,இது எப்படி இருக்கு,இது, என ஒவ்வொன்றையும் தன்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தால்,எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

பின் சுடிதார் அணியலாம்,என்று அவள் அண்ணன் வாங்கிகொடுத்த சுடிதார் ஒன்றை அணிந்து தேவ்வுடன், இன்று பேசபோகும் நொடிக்காக காத்துக்கொண்டு இருந்தால்.

அத்தை,அத்தை என அழைத்துகொண்டு கீழே வந்தால், வசு.

என்ன வசுமா, ஏதாவது வேணுமா.

“அத்தை நானும்,அவரும் வெளிய கிளம்புறோம்,அதை உங்ககிட்ட சொல்லத்தான் வந்தேன்”

ரொம்ப சந்தோசம் வசுமா,ராஜாக்கு இப்போவாச்சும் உன்னை வெளிய கூட்டிட்டு போகணும்னு தோணுச்சே,நல்லபடியா போயிட்டு வாங்க.

“சரிங்க அத்தை”என அவள் ராதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது தேவ் வந்தான்.வந்தவன் ராதாவின் அருகில் இருக்கும் வசுவை பார்க்காமல்,தன் தந்தையை பற்றிகேட்டுகொண்டு இருந்தான்.

அம்மா, “அப்பா எங்க”

“அப்பா இன்னும் வீட்டுக்கு வரலையே தேவ்”

அவரு ஆபிஸ்லையும் இல்லையே,எங்க போனாங்க டாட்,என்று அவரின் கைபேசிக்கு அழைத்து பார்த்தான்,ஆனால் போன் ரீங் போய்கொண்டே இருந்ததை தவிர எடுக்கவில்லை.

‘அம்மா,அப்பா போன் எடுக்கலை’

‘அப்பாவுக்கு முக்கியமான வேலை எதுவும் இருக்கோ என்னமோ,இப்போ அவரு வர்ற நேரம்தான்,தேவ் ஏன் ராஜா ஒருமாதிரி இருக்க’

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா,சரி அப்பா வந்தா என்கிட்டே சொல்லுங்க அவருகிட்ட முக்கியாமான விஷயம் பேசணும் நான் ரூம்க்கு போறேன்” என்று அவன் அன்னையிடம் கூறிவிட்டு படியேறினான்.

‘வந்தவன் உன்னை கவனிக்காம ரூம்க்கு போயிட்டான்,போ வசுமா அவனுக்கு சூடா காபி எடுத்துட்டு போ’என்று அவளை அனுப்பிவைத்தார்.

‘வசு அவனுக்கு காபி எடுத்துகொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள் அங்கு தேவ் உடை மாற்றிவிட்டு பால்கேனியில் நின்று ஏதோ ஒன்றை சிந்தித்துக்கொண்டு இருந்தான்,இவள் வருவதைக்கூட அறியாமல்.

வசீ,என்று அழைத்தால்.ஆனால் அவனிடம் பதில் இல்லை,மறுபடியும் அழைத்தால் அதற்கும் பதில் இல்லை.

‘காபியை அருகில் உள்ள டேபிளில் வைத்துவிட்டு அவனை தொட்டு திருப்பினால்,அவன் கண்கள் கலங்கிஇருந்ததை பார்த்து “என்ன வசீ என்னாச்சு எதுக்கு இப்போ உங்க கண்ணு கலங்கி இருக்கு”என்று பதைபதைப்புடன் கேட்டால்.

“அவனோ,ஒருநோடிகூட தாமதிக்காமல் அவளை இறுக்கியணைத்து தன் மனதில் உள்ளதை சொல்ல தயாரானான்”

‘என் தேவ்,சுகி அவன் இல்லாம இந்தவீடு நல்லாவேயில்லை, யாருக்கிட்டயும் ஈசியா மனசுவிட்டு பேசமாட்டான்,மத்தவங்களுக்கு ஒண்ணுனா உதவிசெய்ய வருவான்,என்கிட்டே எப்பவும் அம்மா மடிக்கு சண்டை போட்டுவான்,அவன் என் குழந்தை மாதிரி சுகி,அப்படிபட்டவன்,உயிரோடு இருக்குபோது யாருக்கோ அவன் இதயத்தை கொடுத்து இருக்கான்’

‘வசீ,யாரு இந்த தேவ், வசீ…அவருக்காக ஏன் நீங்க அழுகுறேங்க,அவரு உங்க சொந்தமா’என்று அவனிடம் கேட்டாள்.

“சொந்தத்தவிட அவன் எனக்கு உயிர் சுகி,என்று அவனின் தம்பியை பற்றி கூற ஆரம்பித்தான்”.

“நந்தகுமரன்,ராதா ,இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் முடித்தவர்கள்,திருமணம் முடிந்து ஐந்து வருசமாக குழந்தை இல்லை என்று வருந்தினார் ராதா”

‘கிருஷ்ணஜெயந்தியில் மனமுருகி வேண்டினாரோ என்னவோ அந்த பரந்தாமனே அவரின் வயிற்றில் உருவானார்’

‘பூஜை எல்லாம் முடிந்த பின் பிரசாதம் கொடுக்கும் பொழுது அவருக்கு தலை சுற்றி கீழே விழுந்தார்,அதை பார்த்த குமரன் அவரை அறைக்கு அழைத்து சென்று,படுக்க வைத்தார்.

அங்கு வந்திருந்த ஒரு வயதான பெண்மணி ராதாவின் நாடியை பிடித்து பார்த்து குமரனிடம் “எல்லாம் நல்ல விஷயம் தான் குமரா,நீ அப்பா ஆகா போற,உன் பொண்டாட்டி மாசமா இருக்குறா,எல்லாம் அந்த கிருஷ்ணனோட செயல் தான்”என்று இருவரையும் வாழ்த்தி சென்றார்கள்.

“குமரன்,ராதாவை அழைத்து சென்று மருத்தவரிடம் உறுதி செய்துகொண்டார்,அன்று முதல் ராதாவை எந்த வேலையும் செய்யவிடவில்லை,ஒவ்வொரு மாதம் செக்கப்பிருக்கும் அவரை அழைத்துகொண்டு சென்றார்.அப்படி இருக்கும் பொழுதுதான் டாக்டர் அவர்களுக்கு மற்றொன்று மகிழ்ச்சியான செய்தியையும் கூறினார்,

“குமரன் உங்களுக்கு இன்னொரு சந்தோசமான செய்தி”

‘என்ன டாக்டர்’

“நீங்க ரெண்டு குழந்தைக்கு அப்பாவாக போறேங்க”

‘ரெண்டு குழந்தையினா,புரியாத பாவனையில் இருந்த முகம்,ராதாவின் முகத்தை பார்த்த குமரன்,அவரின் வயிற்றையும் பார்த்து புரிந்துகொண்டார்’

“என்ன குமரன் இப்போ புரிஞ்சதா,உங்களுக்கு ரெட்டை குழந்தை பிறக்கபோகுது,அதனால முன்னவிட இப்போதான் அவங்களை ரொம்ப ஜாக்கிரத்தையா பார்த்துக்கணும்”என்று சில அறிவுரைகளும்,மருந்துகளும், எழுதிகொடுத்தார்”இப்படியாக மகிழ்ச்சியில் சென்றுகொண்டு இருந்தது.

ஒன்பதாம் மாதம் இறுதியில்,ராதாவுக்கு வலி ஏற்பட,குமரன் பதட்டத்துடன் அவரை ஹோஸ்பிட்டேல் அழைத்துசெல்லும் வழியில் அவர்கள் சென்ற கார் நின்றுவிட்டது,வலியில் ராதா துடித்துக்கொண்டு இருக்க,குமரன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பாதையில் சென்றுகொண்டு இருந்த வாகனத்தை நிறுத்தினார், “சார் என் மனைவிக்கு பிரசவ வலி வந்துட்டுச்சு உதவி கேட்கத்தான் உங்க காரை நிறுத்தினேன்,கொஞ்சம் உதவி செய்யமுடியுமா”என்று ராமனிடம் உதவிக்கேட்டார்.

‘எங்க உங்க மனைவி,அவங்கள என் காருக்கு கூப்பிட்டு வாங்க, பக்கத்துலதான் என் தம்பி ஹோஸ்பிட்டேல் இருக்கு, வாங்க’என்று உடனடியாக செயல்பட்டர்.

“ராமனும், காரை அதிவேகத்தில் செலுத்தி ஹோஸ்பிட்டேலில் சேர்த்தார்,அங்கு உள்ளவர்கள் ராமனை தெரியும் என்பாதால் ராதாவுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது”

‘தன் அண்ணன் ஹோஸ்பிட்டேல் வந்திருக்கிறார் என்று செவிலியர் கூரிச்சென்றதால்,அவர்களை காண அங்கு வந்தார், “அண்ணா நீங்க எங்க இங்க” என்று நந்தனை கவனிக்காமல்,ராமனிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

“அது கிருஷ்ணா,நான் ஏர்போர்ட்க்கு போற வழியில இவரோட மனைவிக்கு பிரசவ வலி வந்துட்டுச்சு அவங்க கார் ரிப்பேர் ஆகிடுச்சு,அதான் என் காருல கூட்டிட்டு வந்தேன்”என்று நந்தனை அறிமுகபடுத்தினார்.

‘உங்க மனைவிக்கு ஒன்னும் ஆகாது நந்தன்,உங்க குழந்தையும், மனைவியும் நல்லபடியா திரும்பி வருவாங்க’என்று சொல்லும்போது பிரசவஅறையில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டது.

“குழந்தைகளை தனித்தனியாக இருதுண்டுகளில் வைத்து எடுத்துவந்தனர்,செவியர்கள்”

‘சார் உங்களுக்கு ரெட்டைகுழந்தை பிறந்திருக்கு,அதுவும் ஆண்குழந்தை பிறந்திருக்கு. சார் வாழ்த்துகள்’என்று செவிலியரும்,மருத்துவரும் வாழ்த்திசென்றனர்.

‘அடடே ஆண்குழந்தை பிறந்திருக்கு வாழ்த்துகள் என்று ராமனும், கிருஷ்ணனும் வாழ்த்தினார்கள்’

“நீங்க மட்டும் இல்லையினா என் மனைவி,குழந்தைய நான் உயிரோட பாத்திருக்க முடியாது,ரொம்ப நன்றி சார்”என்று கையெடுத்து கும்பிட போனார்.

‘அதை தடுத்து, “எப்படியோ உங்க மனைவியையும்,குழந்தைகளையும் உங்ககிட்ட பத்திரம்மா கொண்டுவந்து சேர்த்துட்டேன் அதுவே எனக்கு போதும்’என கூறினார்.

“எனக்கு இன்னொரு உதவி செய்யுறேங்களா”என்று ராமனிடம் கேட்டார் நந்தன்.

‘என்ன வேணும்’

“என் ரெண்டு குழந்தைக்கு நீங்களே பேர் வையுங்க”

‘ராமனோ “அவரிடம் இருந்த இரு குழந்தைகளையும் பார்த்து,ஒரேநேரத்தில் அந்த குழந்தைகளுக்கு “வாசுதேவ்,விஷ்ணுதேவ்”என்று பெயரிட்டார்.

“ரொம்ப நல்ல பேரு,நன்றி சார்”என்று கூற.

‘அப்போ நாங்க கிளம்புறோம்,சார்,தங்கச்சி கண்ணுமுழிச்சா கேட்டேன்னு சொல்லுங்க’

“சரிங்க சார்,உங்க பேரு”

‘என் பேர் ராமன்,இது என் தம்பி ராமகிருஷ்ணன்’

“என் பேர் நந்தன்”என்று அறிமுகம்செய்து கொண்டு கிளம்பினர்.

“குழந்தை வளர வளர அவர்களின் குணமும் வளர்ந்தது அதில் வாசுவின் குணம் கோபமும்,அதிரடியில் இருந்தது,அதற்க்கு எதிராக விஷ்ணுவின் குணம்,யாராக இருந்தாலும் அன்பு,அரவணைப்பு,மற்றவருக்கு உதவி செய்வது என அவனின் குணம் இருந்தது. அவர்களின் ஸ்கூல்,படிப்பு என இருவரும் முதல் இடத்தில் இருந்தார்கள்,வாசுக்கு விஷ்ணு என்றால் அதிக பாசம் அவன் மீது சிறு காயம் ஏற்பட்டாலும் அதை மிகைபடுத்தி அனைவரையும் கலங்க செய்துவிடுவான்,ராதா விஷுணுவைவிட வாசுவை நினைத்துதான் மிகவும் கவலைக்கொள்வார்,கல்லூரியில் மேற்படிப்புக்கு அடி எடுத்து வைக்கும் பொழுதான் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது ஆம் வாசுவை, கல்லூரி படிப்பு லண்டனிலும் விஷ்ணுவின் படிப்பு சென்னையிலும் முடிவானது இதை தெரிந்துகொண்ட வாசு வீட்டில் உள்ள பொருளை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக்கொண்டு இருந்தான்.

‘யாருகேட்டு நீங்க என்னை வெளிநாட்டுல படிக்க அட்மிசன் போட்டேங்க நான் எப்படி என் விஷ்ணுவா விட்டுட்டு போவேன்,என்னால அங்க போய் படிக்க முடியாது’

“நீ அங்க போய்தான் படிக்கணும் வாசு”என்றபடி வந்தார் நந்தன்.

‘என்னால போக முடியாது,என்ன பண்ணுவேங்க டாடி,நானும் சென்னையில படிக்குறேன்’என்றான்.

“நீ இன்னும் ஒருவாரத்துக்குள்ள லண்டன் கிளம்புற இதுதான் இந்த அப்பாவோட முடிவு”என்று அவனிடம் சொல்லிவிட்டு போனார்.

‘வாசு அப்பா எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்குதான் இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு இப்படினுறதுக்குள்ள போயிடும்,நானும் நீயும் தினமும் வீடியோ சாட் பண்ணலாம்,சரியா…அப்பா உண்கையில இந்த கம்பெனிய ஒப்படைக்கத்தான் உன்னை லண்டன் அனுப்புறாரு புரிஞ்சுகோ வாசு என் வாசு அண்ணா கண்டிப்பா என் பேச்ச கேப்பாங்கன்னு நான் நம்புறேன்’என்று அவனிடம் சொல்வதை சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

“என்ன தேவ் உன் அண்ணனா சம்மதிச்சுடான”

‘நீங்க பண்ணுறது கொஞ்சம்கூட சரியில்ல மா அண்ணாவா இப்போ உடனே வெளிநாடு அனுப்ப என்ன காரணம்’

“உன் அண்ணா கோபத்தை குறைக்கத்தான்”என்றபடி வந்தார் நந்தன்.

‘அண்ணா சும்மா எல்லாம் கோபம் படலையே,அவங்க முன்னாடி ஒரு தப்பு நடந்தா கோபம்படுறது தப்பிலையே பா’

“அந்த கோபம் எதிரிக்கு சாதகமாக முடியகூடாது தேவ்,இவன் கோபம் படுறது நம்ம கம்பெனிக்கு நல்லதில்ல தேவ் அதான் அவன மேல் படிப்புக்கு வெளிநாடு அனுப்புறேன், எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு ஆனா அவனுக்கு ஒரு நல்லது நடக்கணும் அதான் அவனை லண்டன் அனுப்புறேன் இனி இதை பத்தி பேசகூடாது”என்று அத்துடன் முடிந்தது என இரவு உணவுக்கு சென்றார்.

‘வாசு உனக்கு இந்த சார்ட் நல்ல இருக்கும் இதுக்கு மேட்சா கோர்ட் எடுங்க என்று அந்த ஷாப்பிங் மாலில் பிரபல துணிக்கடையில் நின்று தன் அண்ணனுக்காக ஒவ்வொரு உடையையும் பார்த்து பார்த்து எடுத்துகொடுத்தான் விஷ்ணு.

‘வாசு இந்தா இந்த ட்ரெஸ் ட்ரை பண்ணு,இதை நீ ஊருக்கு கிளம்பும்போது போட்டு போகணும்,போ போட்டு வா’என்று அவனை ட்ரையல் ரூம்க்கு அனுப்பிவைத்தான்.

“தன் தம்பி கொடுத்த ட்ரெஸ்ஸை எடுத்துகொண்டு ட்ரையல் ரூம் முன் நின்றிருந்தான் அப்பொழுது “ஏ கலை எப்படி இருக்கு இந்த ட்ரெஸ்”என்றபடி ட்ரையல் ரூம் கதவை திறந்தாள்,ஆனால் கலைக்கு பதில் வேறு ஒருவன்(வாசு) நின்றிருந்ததால்,அவள் கண்கள் விரிந்து,பின் சுருங்கி அவள் கண்கள் கலையை தேடிக்கொண்டு இருந்தது,ஆனால் அவனோ அவள் தோழியின் பெயரை கூறிக்கொண்டு கதவை திறந்து அவன் முன் அவள் உடுத்தி இருந்த உடையை காட்டி எப்படி இருக்கு என்று கேட்டவுடன் அவள் உடையலகிலும்,விழி அழகிலும் அதிர்ந்து நின்றவன்தான் விஷ்ணு அவனை தட்டி அழைத்ததும்தான் உணர்வு வந்தது.

“என்ன வாசு ட்ரெஸ் போட்டு பார்க்கமா அப்படியே நின்றிருக்க,என்னாச்சு உனக்கு”என்று அவன் கேட்டபோதுதான் அவளை தேடி பார்த்தான்.

“விஷ்ணு அவளை பார்த்தியா,அவ இங்கதான் இருந்தா”என்று அந்த ட்ரையல் ரூமை சுற்றி பார்த்து அவளை தேடினான்.

‘என்ன தேடுற வாசு,எந்த பொண்ணா பார்த்தியனு கேட்குற,எங்க இருந்தா’

“இங்கதான் டா இப்போதான்,”எப்படி இருக்குனு அவ போட்டு இருந்த ட்ரெஸ்ஸ என்கிட்டே காட்டுனா டா”என்று அவளை பாரத்தை கூறிக்கொண்டு இருந்தான்.

‘எனக்கு தெரியல வாசு ஒருவேளை அந்த பொண்ணு போயிருகாலம்,சரி டைம் ஆகுது அம்மா போன் பண்ணிட்டு இருக்காங்க வா போகலாம்’என்று அவனை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.

“எங்க போன கலை,நான் போட்டு உன்கிட்ட ட்ரெஸ்ஸ கட்டலாம் இருந்தேன் ஆனா அங்க உனக்கு பதிலா வேற ஒருத்தன் இருந்தான்”என்று அங்கு நடந்தை சொல்லிமுடித்தாள்.

‘சாரி டி வாசு உங்க அண்ணா,அதான் என் ஆளு கூப்பிட்டு இருந்தாங்க அதான் பேசிகிட்டே அப்படியே அங்க இருந்து இங்க வந்தேன்”என்று அவள் கூற.

“ஹ்ம்ம் என்ன சொல்லுறாங்க உங்க ஆளு”

‘என்ன சொல்லுவாங்க எப்பவும் போல,கல்யாணம் இப்போ பண்ணிக்கலாம் சொல்லுறாங்க’

“அப்போ சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப்போறேங்க”

ஒருவன் மனதை கலைத்ததை அறியாமல்,இன்னொருவன் மனதில் காதலாக போகிறாள் என்பதையும் அறியாமல் அவள் தோழியிடம் பேசிக்கொண்டு சென்றாள்.

“ராஜா அம்மா உனக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சு இருக்கேன்,அப்புறம் ட்ரெஸ் எல்ல்லாம் அந்த பேக்ல இருக்கு இதுல அங்க போய் சமைக்க சின்ன சின்னதா பொடிவகை வச்சு இருக்கேன்,பார்த்து இரு ராஜா”என்று வாசுவின் லண்டன் பயணத்திருக்கு தேவையானவற்றை எடுத்து வைத்தனர் ராதாவும் விஷ்ணுவும்.

“வாசு அங்க போன உடனே எனக்கு போன் பண்ணனும்,மறக்காம நான் சொன்னத வாங்கிட்டு வரணும்,அப்புறம் இந்தா இது என்னோட கிப்ட்” என்று அவனிடம் அதிக விலைமதிப்புடைய பேனாவை பரிசளித்தான்.

‘தேங்க்ஸ் விஷ்ணு’

“ஏர்போர்ட்டில் எல்லாம் வேலையும் முடிந்து,வாசு தன் அன்னையை பார்த்து “போயிட்டு வரேன்மா” “போயிட்டு வரேன் விஷ்ணு”என்று இருவரிடம் கூறியவன்,நந்தனிடம் “போயிட்டுவரேன்”என்று மட்டு சொல்லி விமானத்தில் பறந்தான் அவள் நினைவுடன்.

ஆனால் அவன் திரும்பி வரும்போது அவனின் இரு உயிர்களில் ஒன்று அவனை விட்டு செல்லபோவதை அறியாமல் லண்டனிற்கு சென்றான்.

“அப்பா அண்ணா கோபத்துல இருக்கான்,நீங்க எதுவும் பீல் பண்ணதேங்க, கோபத்துல இருந்தாலும் உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பிருகான்”என்று நந்தனை தேற்றினான்.

“தெரியும் தேவ் அதுனாலதான்,நானும் கோபமா இருக்குறமாதிரி அவன் முன்னாடி காட்டினேன்,அவன் திரும்பி வரும்போது என்மேல இருக்குற கோவம் போயிடும்”அவருக்கு அவரே ஆறுதல் கூரிகொண்டார்.

“அன்னைக்கு என் தம்பிய விட்டு பிரிஞ்சவன்தான் நான் திரும்பி வரும்போது அவன் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டானு என் அப்பா சொன்னங்க,அப்போ நான் எப்படி துடிச்சேனு தெரியுமா,இன்னும் என்னால அவன் இறந்தத ஏத்துக்க முடியல சுகி”என்று அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு அழுதான்.

‘வசீ அவங்க கடவுளா இருந்து நம்மல பாத்துட்டு இருப்பாங்க,அழதேங்க வசீ’என்று அவனின் முதுகை தடவிகொடுத்து ஆறுதல் சொன்னால்.

“அவள் அவனை எவ்ளோவோ முயன்றும் ஆறுதல் படுத்தமுடியாவில்லை, அவனோ மீண்டு மீண்டும் அவளிடம் விஷுணுவை பற்றியே புலம்பிதவித்தான்”

‘அவ்ளோ எப்படி அவனின் புலம்பலை நிறுத்துவது என்று தெரியாமல் அவனை அணைத்துக்கொண்டே படுக்கையில் அமர வைத்தால்,ஆனால் அவனோ  சுகி எனக்கு அவன் ஞாபகமாவே இருக்கு முடியல டி’ என்று அவளை விடாமல் அணைத்து இருந்தான்.

‘வசுவோ அவனின் முகத்தை நிமிர்த்தி அவனின் இதழோடு தன் இதழ் சேர்த்து முத்தமிட்டு அவனின் புலம்பலை நிறுத்தினால்,தேவ்வோ தம்பியின் நினைவில் இருந்தவனுக்கு மனைவின் இதழ் முத்தம் விஷ்ணுவின் நினைவை மறக்கசெய்தது.

“வசு தன் இதழை பிரிக்க நினைக்க,அவனோ மீண்டும் அவளை நாடினான்,இதழ் முத்தத்தில் ஆரம்பித்த இவர்களின் ஆறுதல் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது,வசு எந்தவித எதிர்ப்பும் காட்டாவில்லை,தேவ் அவளை விடியும்வரை விடவில்லை,ஒவ்வொரு நொடியும் அவளை நாடினான்,ஒரு சமயத்தில் வசு அழுதுவிட்டால், வலி தாங்கமுடியாமல், சூரியன் உதித்தபின்தான் இருவரும் உறங்கினர்.

“முதலில் முழித்தது தேவ்தான்,தன் அருகில் உடலை குறுக்கிக்கொண்டு படுத்து இருந்த வசுவை கண்டு நேற்று நடந்ததை நினைத்து பார்த்தான்” ‘என் மனசுள்ள இருக்குறத உன்கிட்ட சொல்லிட்டுதான் நாம நம்ம உறவை ஆரம்பிக்கணும் நினைச்சேன் ஆனா எதிலோ ஆரம்பிச்சு எங்கயோ முடிஞ்சுடுச்சு’என உறங்கும் அவளிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“அவளின் கண்களின் கண்ணீர் தடங்களை பார்த்தபின்தான் அவளை எவ்ளோ கஷ்டபடுத்தி இருந்தான் என்பதை அறிந்துகொண்டான்” ‘சாரி டி சுகி உன்னை கஷ்டபடுத்திட்டேன்’என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு குளியல் அறைக்கு சென்றான்.

“வெற்றி இன்னைக்கு அந்த தேவ்வோட மீட்டிங் அரேன்ஜ் பண்ணிருக்கேன்,நீதானே அந்த வாசுகியோட புருஷன பார்க்கணும் சொன்ன,அதான் அவனோட உனக்கு மீட்டிங் அரேன்ஜ் பண்ணிருக்கேன்”

‘வாவ் சிவா,எனக்கு எவ்ளோவு பெரிய மகிழ்ச்சிய கொடுத்து இருக்குற அதுக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்,இன்னைக்கு இருக்கு அவனுக்கு,எத்தன மணிக்கு மீட்டிங் சிவா’

“எட்டு மணிக்கு வெற்றி”

“ஐம் வெயிட் போர் யூ தேவ்”சொல்லிக்கொண்டு அவனைக்காணா தயரானான்.

“எங்கோ தனது செல்போன் சத்தம் கேட்பது போல் இருந்தது,படுகையில் இருந்துகொண்டே தனது செல்போனை தேடி எடுத்து அதை அட்டென் செய்து காதில் வைத்தால், “என்ன மேடம் இன்னும் உங்களுக்கு தூக்கம் போகலையா”என்று ஆபிஸ் வந்து வசுக்கு போன் செய்தான்.

‘ஆனால் வசுவோ,நீங்க எங்க என்னை தூங்கவிட்டேங்க,இன்னும் விடியல வசீ அதான் தூங்கிட்டு இருக்கேன் ஆமா நீங்க எங்க இருந்து போன் பண்ணுறேங்க,கீழ இருக்கேங்களா,இருங்க நான் வரேன்’என்று எழுந்தால் தூங்கிகொண்டு.

“ஹலோ மேடம் நான் எழுந்து ஆபிஸ்க்கு வந்தாச்சு,இப்போ மணி ரெண்டு,விடிஞ்சு எட்டு மணி நேரம் ஆச்சு,அம்மா நீ இன்னும் எழுந்துக்கலைன்னு சொன்னாங்க அதான் போன் போட்டேன் எழுந்து,குளிச்சுட்டு லஞ்ச் சாப்பிட போ சரியா”என்றான்.

‘என்னது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சா அய்யோ என்ன வசீ என்னை நீங்க எழுந்துக்கும் போது எழுப்பிவிட்டு இருக்கலாம்,போச்சு அத்தை திட்டபோறாங்க’

“அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க நீ கீழே போ சரியா,நான் அப்புறமேல் உனக்கு போன் பண்ணுறேன்”

‘சரிங்க வசீ’

“அருண் டாடிய பார்த்தேங்களா”

‘தேவ்,சார் முக்கியமான வேலை இருக்குனு டெல்லி போயிருக்காங்க உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க’

“எப்போ போனாங்க”

“இன்னைக்கு காலையில ஏழு மணிக்குதான்”

‘அப்போ எப்போ திரும்பி வருவாங்க டாடி’

“ரெண்டு நாள் ஆகும் தேவ்”

‘ஓகே அருண்’

“சொல்லுங்க மிசஸ்,கதிர்,உங்களுக்கும் வாசுகிக்கும் என்ன சம்மந்தம்,எப்படி தேவ் இறந்தான்,நீங்க சொல்லுற பதில்ல தான் ரெண்டுபேரோட வாழ்க்கை அடங்கி இருக்கு சொல்லுங்க”என்று அர்ஜுன் கலைவாணியிடம் அவர்களின் கடந்த காலங்களை கேட்க.

“ஹலோ மிஸ்டர்.வெற்றி வெல்கம் இன் தேவ் குருப் ஒப் கம்பெனி”என்று வரவேற்றான் வாசுதேவ்.

‘தாங்க்யு மிஸ்டர் வாசுதேவ்’என்று அவனை முழுதாய் பார்த்தான். வெற்றியின் மனதில் “உன்னை பழிவாங்கதான் உன் கம்பெனியோட டீலிங் வச்சுக்க போறேன் இது தெரியாம இருக்கான்”என்று நினைத்துகொண்டான்.

‘ஆனால் தேவ்வோ,உன்னை வச்சுதான் நான் விளையாட்டை ஆரம்பிக்கபோறேன் வெற்றி’என்று அவனும் நினைத்துகொண்டான்.

“வசுமா, சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கணுமா உன் புருஷன் என்கிட்டே சொல்லிருகான்”என்று வசுவின் முகத்தை பார்த்து புரிந்துகொண்ட ராதா அவளை கேலி செய்தார்.

“அத்தை நீங்களுமா நேத்து அவங்க,தம்பிய நினைச்சு கவலைப்பட்டாரு அதான் நானும் தூங்கல”என்று அவள் எதார்த்தமாக கூற,ராதாவோ திகைத்தார்.

“அத்தை அவருக்கு தம்பி இருக்காங்கனு என்கிட்டே சொல்லவே இல்லை,உங்களுக்கு ரெண்டு பசங்களா”என்று அவரை கேட்டால்.

‘ராதாவோ அவள் கூறிய தம்பி என்ற சொல்லில் நிலைத்து இருந்தது’

 

                                உன்நினைவுகள் தொடரும்…………

 

Advertisement