நினைவுகள் 1௦
என் பொண்ண பார்த்து ரொம்ப நாளாச்சு வா ஜானகி போய் வசுவையும்,மாப்பிளையும் பார்த்துட்டு வரலாமா.என்று ஜானகியிடம் கேட்டுகொண்டுஇருந்தார் யசோ.
“ஆமா அக்கா,அவ இருந்தா இந்நேரம் வாய் ஓயாம பேசிட்டு இருப்பா, இப்போ வீடு வெறிச்சோடி இருக்கு”என அவரும் கவலைகொண்டார்.
“நீங்களும்,மாமாவும் வசுவ பார்த்துட்டு அப்படியே மூணாவது மறுவீட்டுக்கு அழைச்சுட்டு வாங்க,இன்னைக்கு இலக்கியனும்,மலரும் மறுவீட்டு விருந்து முடிச்சு வராங்க,யாரும் இல்லையினா நல்லா இருக்காது அக்கா நீங்க போயிட்டு வாங்க”என்று அவர் கூற.
“சரி ஜானகி,நானும் அவரும் போயிட்டு வரோம்” என யசோதாவும்,ராமனும் வசுவை பார்க்க தேவ்வின் வீட்டிற்கு கிளம்பினர்.
ஆனால் இவர்கள் வருவது அங்கு “தேவ்வுக்கும்,ராதாவுக்கும்” தெரியாது.
“இவர்கள் வீட்டில் நுழையும் போதுதான் தேவ் “அம்மா சுகி எங்கயும் இல்லை அவ போன் கீழ விழுந்து கிடந்துச்சு”என்று ராதாவிடம் கூறினான்.
“வசுக்கு என்னாச்சு மாப்பிள்ளை சொல்லுங்க,வசு எப்படி காணாம போனா”.
“தெரியல,அத்தை….நான் ரூம்ல பார்க்கும் போது அவ போன் கீழ கிடந்துச்சு,இங்கதான் இருப்பான்னு அவளை எல்லாம் இடத்துலையும் தேடினே ஆனா அவளை காணம்”.என்று கண்களின் ஓரம் கண்ணீர் துளி வந்தது நின்றது.
“ராஜா,அப்பாவுக்கு தெரிஞ்ச டிஎஸ்பி இருக்காங்க அவங்ககிட்ட பர்சனலா வசுவ தேட சொன்ன கண்டிப்பா கிடைச்சுட்டுவா போய் அவங்கள பார்த்துட்டு வா”என்றார்.
“ஆமா மாப்பிள்ளை வாங்க போய் பார்த்துட்டு,நாமளும் வசுவ தேடி பாப்போம்”என ராமனும் அவனுடன் சென்றார்.
‘யாரு நீங்க எதுக்கு என்னை கொல்லனும்’என வசு பதிலுக்கு அவனை கேள்விகேட்டால்.
“உன் புருசனுக்கு வேற வேலை இல்லையா,ஏன் என் கம்பெனி பொருள் தரம்யில்லையின்னு சொல்லி என்னோட கம்பெனியா இழுத்து மூடவச்சுட்டான்,இப்போ யாரும் என் கம்பெனி பொருள் வாங்குறது இல்லை,இவன் சும்மா இருக்கமா என்னோட மொத்த கம்பெனியையும் மூட வச்சுட்டான்,அதுக்குதான் அவனை கொல்லனும் நினைச்சேன் ஆனா அவனை கொன்னு எனகென்ன லாபம் வெறும் சந்தோசம் மட்டும்தான் ஆனா உன்மேல உயிரே வச்சுஇருக்கான் உன்னை கொன்னா,உன் நினைப்பில்லயே தினமும் செத்து செத்து போவான்,அதான் உன்னை தூக்கிடோம்”என்றான்.
‘நீ எல்லாம் ஆம்பளையே இல்லை,போயும் போயும் என்கிட்டே வீரத்த காட்டுற,தில்லு இருந்தா என் புருசன்கிட்ட காட்டுடா’என கோபமாக சொன்னால்.
“உன்னயெல்லாம் இதுக்குமேல பேசவிட்டது என் தப்பு,டேய் அந்த கயிற எடுத்துட்டுவாங்கடா இவளை தொங்கவிட்டதான் பேசுறத நிறுத்துவா”என்று வேறு ஒருவனிடம் கயிறை எடுத்துவர சொன்னான்.
அந்த சமையம் ‘வசுவின் கைகள் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது’ ஒருவன் அவளின் கட்டுகளை அவிழ்க்க அதை சாதகமாக எடுத்துக்கொண்ட வசு அவனை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டால்.
“எங்கடா அவ”
‘சார் அந்த பொண்ணு என்னை அடிச்சுட்டு பின்னாடி ஓடி போயிருச்சு சார்’என வலியில் முனங்கிக்கொண்டே சொன்னான்.
“அவளை என்னை செய்யறேன்னு பாரு”என்று அவனும் அவளை துரத்திக்கொண்டு ஓடினான்.
‘வசு எங்கு இருக்கிறோம் என்று உணராத நிலையில் அந்த சாலையில் ஓடிக்கொண்டு இருந்தால்.
“வசு சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும்போது,திரும்பி திரும்பி பார்த்தால் அவன் அவளை துரத்திக்கொண்டு வருவதை உணர்ந்து இன்னும் வேகமாக ஓட்டினால்,ஆனால் அவள் எதிரபார்க்காத சமையத்தில் ஒரு கார் அவளை மோதிவிட்டது,இதை பார்த்த அவன் “என் கையால உன்னை கொல்ல நினச்சா,எப்படியோ நீ செத்தான் அவனை பழிவாங்க முடியும்”என அவன் சந்தோசபட்டான்.
யாரோ ஒரு பெண் ஓடி வருவதை பார்த்தவன் மெதுவாக காரை ஓட்டினான்.ஆனால் அந்த பெண் திரும்பி பார்த்துகொண்டு வந்ததால் இவன் காரில் மோதிவிட்டால்,அவனும் அவளுக்கு அடிபட்டுவிடாதா என்று அவளை தூக்கி ஆராய்ந்தான்,ஆனால் பெரியாதாக காயம் இல்லை என அறிந்து அவளை தூக்கி தன் காரில்,பின்பக்கம் படுக்கவைத்து விரைவாக ஹோஸ்பிட்டல் சென்றான்.
“டோன்ட் வெரி தேவ்,நான் உன் மனைவிய எப்படியும் கண்டிபிடிச்சு கொடுக்குறேன் நீங்களும் ஒரு பக்கம் தேடுங்க,சரியா”என தன் அப்பாவின் நண்பரான மாணிக்கம் தேவ்விருக்கு ஆறுதல் கூறினார்.
“சரிங்க அங்கிள்,நாங்க கிளம்புறோம்”
‘ஓகே தேவ்’
“சார் அந்த பொண்ணு கண்முழிச்சுட்டாங்க,போய் பாருங்க”என்று செவிலியர் கூற, தன் காரில் அடிபட்ட பெண்ணை அருகில் உள்ள மருத்தவமனையில் சேர்த்தான்.
‘அவன் உள்ளே நுழைந்ததும் அவளை பார்த்து அதிர்ச்சியானான், இவ…இவள எங்கயோ பார்த்து இருக்கேன்,எங்க என்று யோசித்துக்கொண்டு அவளுக்கருகில் சென்றான்.
“வசு யாரோ வரும் சத்தம் கேட்டு கண்விழித்தால்”
‘தேங்க்ஸ்ங்க, நீங்கதான் என்னை காப்பாத்துனேங்கன்னு அந்த நர்ஸ் சொன்னாங்க’
“இருக்கட்டும் பரவாயில்லை,நான்தான் சாரி சொல்லணும்,என் காருல உங்களுக்கு அடிப்பட்டனால”
‘உங்ககிட்ட போன் இருந்தா நான் சொல்லுற நம்பார்க்கு போன் பண்ணிகொடுங்க’ என வசு கேட்க.
“சொல்லுங்க போன் பண்ணிதரேன்”
‘வசு,தேவ்வின் நம்பரை சொல்ல,அவனும் அந்த நம்பரை செல்லில் அடித்தான்,அந்த நம்பரை அடிக்க அது வாசுதேவ் என அவன் போனில் காட்டியது,யோசனையுடன் “நீங்க தேவ்க்கு என்னவேணும்”என்று அவளிடம் கேட்டான்.
“உங்களுக்கு தேவ்வ தெரியுமா”
‘அவனும் நானும்,பிஸ்னஸ் ப்ரிண்ட்ஸ்’ நீங்க’என்று அவளிடம் கேட்டான்.
“நான் அவரோட மனைவி,மிசஸ்.வாசுகிவாசுதேவ்”என அவள் கூற.
‘அவனோ அதிர்ச்சியடைந்தான்,என்ன சொல்லுறேங்க தேவ்க்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சா,என கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“ஆமாம் இப்போதான் மூணு வாரம் ஆகும்,நீங்க ஏன் இப்படி ஷாக் ஆகுறேங்க”
‘இல்லைங்க சும்மாதான்…என சமாளித்து,வெளியில் சென்றான்’
“தேவ்க்கு சரணிடம் இருந்து போன் வந்தது,அதை ஏற்கும் மனநிலையில் அவன் இல்லை”
‘தேவ் போன் எடுக்கலங்க,நானே உங்களை வீட்டுல டிராப் பண்ணுறேன் உங்களுக்கு ஓகே வா’
“வசு யோசித்து பார்த்து,சரி என்றால்”
‘காரில் அவன் யோசனையுடன் வந்தான்,எப்படி முடியும் அவனுக்கும்,இவளுக்கும்தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே இப்போ புதுசா ஒரு பிரச்சனை கிளம்பிருக்கே,நான் போட்டோல பார்த்த வாசுகிக்கும்,இப்போ இருக்குற வாசுகிக்கும் நிறையா வேறுபாடுகள் இருக்கு,இதுல எது உண்மை,என்று அவன் யோசித்துகொண்டே வந்தான்.
“எப்படி என் வீட்டுக்கு சரியா வந்தேங்க,என அவன் யோசனை கலைத்தால்”
‘மறுபடியும் ஒரு அதிர்ச்சி,அப்போ உண்மையிலே இவ தேவ் மனைவியா’
“வாங்க உள்ள வந்துட்டு போங்க,என்னை காப்பாத்திகொண்டு வந்து வீட்டுல விட்டுருக்கேங்க வாங்க” என்று அவனை உள்ளே அழைத்தால்.
‘அவனும் சரிஎன்று உள்ளே போனான்’
“அங்கு தேவ்,அவள் வருவதற்குமுன் வீட்டுக்கு வந்தான்,தேவ் அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்ல என்று சோகத்தில் இருந்தான்,அப்பொழுது “வசீ”என வசு அழைத்தால்.
‘திடிரென்று “வசீ” என்றவுடன் ராதா,யசோ,ராமன்,தேவ்,வாசலை பார்த்தனர். அங்கு வசு தலையில் கட்டுடன்,கையில் பிளாஸ்டர்,என அவள் நின்றிருந்தால்.
“சுகி,என அவன் ஓடி வந்து அவளை கட்டியணைத்து”எங்க டி போன, உன்னை காணாம நாங்க எல்லாம் தவிச்சுடோம் சுகி”
“வசுமா எங்க போன,இந்த அம்மா உன்னை காணலேன்னு தவியா தவிச்சுடேன்”
‘ராமனும்,ஒருபக்கம் தன் மகள் கிடைத்துவிட்டால் என சந்தோசத்திலும், இருந்தார்.
“ராதா வசுவின் உடலை ஆராய்ந்தார்,அப்பொழுதுதான் அவளுக்கு அடிபட்டது தெரிந்தது”
“என்ன வசு இதெல்லாம்,எப்படி உனக்கு அடிபட்டுச்சு”என வசுவிடம் கேட்டார்.
‘அதை நான் சொல்லுறேன்,என்று உள்ளே நுழைந்தான்,சரண்’
“சரண் நீயா?? நீ எப்படி என் சுகிய காப்பாத்துன”என்று தேவ் கேட்டான்.
‘தேவ் நான் பாண்டிசேரிலிருந்து வந்துட்டு இருந்தேன் அப்போ எதிர்ல ஒரு பொண்ணு ஓடி வந்துட்டு இருந்து,நான் காரை கொஞ்சம்மெதுவா ஓட்டிட்டு வந்தேன் ஆனா உன் மனைவி திரும்பி பார்த்துட்டு வந்ததுல என் காருல மோதிட்டாங்க,நான் அப்படியே அவங்களை ஹோஷ்பிட்டல் கொண்டுவந்து சேர்த்தேன் அதுக்கடுத்து அவங்க கண்முழிச்சு உனக்கு போன் பண்ணி தரச்சொன்னாங்க அப்போதான் தெரியும் இவங்க உன் மனைவின்னு,ஆனா உன் போன் எடுக்கல,அதான் நானே கொண்டுவந்து உன்வீட்டுல உன் மனைவிய சேர்த்துட்டேன்,என்று விளக்கமாக கூறி முடித்தான்.
‘எப்படியோ அந்த கடவுள் உங்க கண்ணுல என் பொண்ண காட்டி காப்பாத்தவச்சு இருக்கா,ரொம்ப நன்றி தம்பி”என யசோ கூறினார்.
“இருக்கட்டும்,நான் கிளம்புறேன்”
‘ரொம்ப தேங்க்ஸ் டா சரண்’
“தேவ் வாசுகி உண்மையிலே உன் மனைவியா”
“ஏன்டா இப்படி கேக்குற,அவளைத்தான் நான் மூணு வருஷமா காதலிச்சேன்,இப்போ கல்யாணமும் பண்ணி இருக்கேன் இப்படி சந்தேகமா கேக்குற”
‘இல்லை தேவ் எனக்குதான் உனக்கு கல்யாணம் ஆனா விஷயம் தெரியாதே அதான் கேட்டேன்’
“சரிடா நான் கிளம்புறேன்,என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான்”
“சரண் மனதில் இன்னும் நினவு இருக்கிறது,தேவ்வும்,வாசுகியும் கல்யாண கோலத்தில் இருந்ததை”ஆனால் வசு ஏன் இப்படி ஒரு செயல் செய்யவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே காரை ஓட்டினான்.
“ மாப்பிள்ளை,வசு வீட்டுக்கு வந்துட்டா,இங்க நடந்தை யாருகிட்டயும் சொல்லவேணாம்,அண்ணி ரெண்டு பேருக்கும் திர்ஷ்டி சுத்தி போடுங்க,நாங்க இன்னொரு நாள் வந்து மருவீடுக்கு அழைக்க வரோம்”என அவர்களும் கிளம்பினர்.
ராதா “நீங்க வந்தும் எதுவும் சாப்பிடாம போனா நல்லா இருக்காது அண்ணி சாப்பிட்டு போங்க”
“என் பொண்ணு கிடைச்சதில சாப்பிட தோனல அண்ணி இருக்கட்டும்,நாங்க வரோம்,வசுமா உடம்ப பார்த்துக்கோ அம்மா போயிட்டு வரேன்,
‘சரிம்மா’
“உடம்ப பத்திரமா பார்த்துக்கோ வசும்மா”என்று ராமனும் கூறி சென்றார்.
ராதா, “தேவ்,வசுவ கூப்பிட்டு போய் படுக்க வை,நான் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வரேன்”
‘வேணாம் மா சாப்பிட்டு நாங்க ரூம்க்கு போறோம்,என தேவ் அவளை கைத்தாங்கலாக அழைத்து சென்று அவனே அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டான்.
‘சாப்பிட்டு முடித்தவுடன் அவளை அழைத்துகொண்டு அவர்களின் அறையில் நுழைந்தவுடன் அவளை இறுக்கி அணைத்துகொண்டான், அவளும் அவனை ஒரு கை வைத்து மெதுவாக அணைத்துகொண்டால்.
“ஏன் டி இப்படி பண்ண, உன்னை காணாம என்னால எதுவும் செய்ய முடியல,எங்கபோய் உன்னை தேடனு தெரியலை,எங்க போனா சுகி”என்று அவளை அணைத்துக்கொண்டே பேசினான்.
‘திடீர்ன்னு ஒரு போன் வந்துச்சு வசீ,அதுல உங்களுக்கு ஆக்சிடென்ட் சொன்னாங்க அந்த ஒரு நிமிஷம் எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல,அத்தைய தேடி போன்னே,ஆனா அத்தை அவங்க ரூம்ல இல்லை அதான் நானே உங்களை தேடி வரும்போது யாரோ என் முகத்துல எதையோ அடிச்சாங்க அப்படியே நான் மயங்கிட்டேன் வசீ’என்று அதற்க்கு பின் நடந்தையும் கூறினால்.
“அவனை என்ன செய்யறேன்னு பாரு என் சுகிய கலங்க வச்சுட்டான்,டேய் திரு உன்னை விடமாட்டேன்,என் மனைவியை கடத்துன உன்னை என்னை செய்யுறேன்னு பாரு” என்று உடனடியாக மாணிக்கத்திருக்கு போன் செய்து தன் மனைவி கிடைத்தை பற்றியும்,வசுவை கடத்தியவன் மீதும்,இதற்க்கு காராணம் திருமுருகன் பற்றியும் அவனின் மீது கம்பளைன்ட் கொடுத்து உடனடியாக கைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.
‘சரி தேவ் இனி நாங்க பார்த்துக்கிறோம் நீ கவலைப்படாத’என்று கூறினார்.
அவனின் ஒவ்வொரு செயல்களையும் பார்த்த வசு,மனதில் “காலையில் நடந்த சம்பவமும்,இப்போது நடந்தவையும் நினைத்து பார்த்தால்,உங்களை எனக்கு பிடிக்கும் வசீ கூடிய சீக்கிரம் உங்ககிட்ட மனசுவிட்டு பேசணும்”என்று நினைத்துகொண்டால்.
“வா சுகி தூங்கலாம்,நீ ரொம்ப சோர்வா தெரியுற”என அவளை கையணைப்பில் வைத்து உறங்கவைத்தான்.
‘அதிகாலையில் எழுந்த தேவ் “முதலில் பார்த்தது நியூஸ் பேப்பர்தான் அதில் “பிரபல தொழில் முதலீட்டாளர் திருமுருகன் கைதுசெய்யப்பட்டார்”இதை படித்தவுடன் உற்சாகமாய் ஆபிஸ்க்கு கிளம்பினான்.
“அம்மா,அப்போவோட கபோர்ட்ல எஸ்விஎஸ் கம்பெனி பைல் இருக்கு அதை எடுத்துகொடுங்க,இன்னைக்கு அந்த கம்பெனியோட மீட்டிங் இருக்கு”
‘ராஜா நீ போய் எடுத்துக்கோ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு,வசு அந்த பாதம் டப்பா எடு”என சமையலில் மும்மரமகா இருந்தார்.
அவனும் அவனின் தந்தை அறையில் அவர்களின் கபோர்டை திறந்து அந்த பைல்லை எடுக்கும் போது அதற்க்கு அடுத்த பைலும் சேர்ந்து அவன் கையேடு வந்துவிட்டது.
“முதல் பைலில் கவனம் இருந்ததால் அடுத்த பைல் அவன் நினைவிற்கு வரவில்லை,”டைம் ஆகிடுச்சு நாம ஆபிஸ்க்கு போய் மறுபடியும் ரிமைன் பண்ணிக்கலாம்”என நினைத்துகொண்டு அந்த பைலையும் சேர்த்து எடுத்து சென்றுவிட்டான்.
‘அம்மா டிபன் ரெடியா’
“வாங்க சாப்பாடு ரெடி,என வசு எடுத்து வைக்க அவன் வேகமாக சாப்பிட்டு முடித்தான்.
‘ஓகே சுகி போயிட்டுவரேன்,அம்மா நான் போயிட்டுவரேன்’
“அவளோ அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தால்”
“அர்ஜுன் இன்னைக்கு என்னானாலும் நான் தேவ்க்கிட்ட உண்மைய சொல்லபோறேன்”என சரண் அர்ஜுனிடம் கூறினான்.
‘சரண் நான் என்ன நினைக்க்குறேனா ஒன்னு வாசுகி பழைச மறந்திருகனும்,அப்படி இல்லையினா மறைச்சு இருக்கணும்,இந்த ரெண்டுல ஒன்னு கண்டிப்பா இருக்கும்,அதனால நாம வாசுகியா பத்தி நல்லா தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சா தெரியும்,ஆனா வாசுகிக்கு நெருங்கின ப்ரிண்ட்ஸ் யாருனு நாம கண்டுப்பிடிப்போம்,சரியா இப்போ வா போகலாம்.என அவனை அழைத்து சென்றான்.
கதிர் “இன்னைக்கு செக்கப் இருக்குல இன்னும் கிளம்பாம என்ன பண்ணுற வணி”
‘எனக்கு அப்பா,அம்மா நியாபகமா இருக்கு கதிர்,நீ இருந்தாலும், எனக்கும் உனக்கும் முதல் குழந்தை வரபோகுது இதை பார்க்க என் அம்மா,அப்பா இல்லை கதிர் அதான்,என்று அவனின் நெஞ்சில் தலைசாய்த்து கண்ணீர் விட்டால்.
“அவங்க எல்லோரும் நம்மக்கு துணையா இருப்பாங்க வணி,நீ இப்படி பீல் பண்ணா நான் உன்னை நல்லா பார்த்துகலைன்னு நினைப்பாங்க”என அவளை தேற்றி ஐந்தாம் மாதம் செக்கப்பிற்கு அழைத்து சென்றான்.
“வசு நான் பக்கத்துல இருக்குற ராணி வீட்டுக்கு போயிட்டு வரேன்,அவங்க மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கு,போயிட்டு அரைமணி நேரத்துல வந்துடுவேன் அதுவரை நீ பாதுகாப்பா இரு, சரியா”
‘அத்தை நம்ம வீடுக்குள்ள யாரு வரபோறாங்க நான் பத்திராமா இருந்துப்பேன் நீங்க போயிட்டுவாங்க’
ராதா சென்றவுடன் வசுவிருக்கு பொழுதுபோகவில்லை,அதானால் அவள் அறைக்கு செல்லும் வழியில் “அவனின்”அறை பார்த்தவுடன் மனதில் ஒரு மெல்லிய உணர்வு அவளுக்கு.
“மல்லிகா மா இந்த ரூம் சாவி கொடுங்க”
‘இதோ எடுத்துட்டு வரேன்’அவளிடம் சாவியை கொடுத்தவுடன் அந்த அறையின் சாவியை வைத்து திறந்தாள்
“அவளும் அந்த அறையில் நுழைந்தவுடன்,அவள் காதில் “வெல்கம் மை அம்மு”என்று யாரோ கோருவது போல் இருந்தது.
‘அந்த அரை முழுவதும்,ராதாகிருஷ்ணா படங்கள் அழகாக சுவர்களில் இருந்தது,அவளும் ஒவ்வொரு பக்கமும் சுற்றி பார்த்தால்,அவளின் இடதுபக்கம் பால்கேனி பக்கத்தில் உள்ள ரேக்கில் புத்தகம் இருந்தது,அதில் காதல் கதை,கவிதை,என ஆங்கிலத்தில் இருந்தது,
“எல்லாத்தையும் பார்த்தாவள்,அவள் அருகில் இருந்த போட்டோவை பார்க்கவில்லை,கபோர்டை திறந்து பார்த்தால் அதில் எல்லாம் ஆண்கள் உடுத்தும் உடை இருந்தது,மறுபக்கத்தில் பிரிக்கபடாத ஒரு கவர் இருந்தது அதை கையில் எடுத்து பார்த்தால் அதில் மேல் “மை அம்மு”என்று எழுதி இருந்தது.
“வசு,இப்படீல்லாம் லவ் பண்ணுறவன் எங்க இருக்கானு தெரியல,ஹ்ம்ம் கொடுத்தவச்ச பொண்ணு”என சொல்லி அந்த கவரரை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டால்.
‘டிவி ஸ்டான்ட் அருகில் அழகிய காதல்ஜோடி கண்ணாடியில் செய்த சிற்பம் போல இருந்தது,அதை கண்ட வசு இதேபோல் தன்னிடம் உள்ளதோ என அவளின் நினைவு அடுக்கில் தேடினால்,ஆனால் அவளுக்கு நினைவில்லை,அதன் கீழே உள்ள ட்ராவை திறந்தாள்.
“அதில் இரு இதயம் இணைந்து காதல் சொல்வதுபோல் இருந்த டைரியை எடுக்க,அவள் இதயம் முன்பைவிட அதிகமாக துடிக்க ஆரம்பித்தது,இருந்தும் அதை எடுத்து முன்பகுதியை திறந்து படிக்க ஆரம்பித்தால்,அதில் “என் அன்புக்கும்,காதலுக்கும் சொந்தமான என் உயிர் அம்முவிற்கு இந்த அன்பு கள்வன் எழுதுவது”அதுவரை தான் படித்து இருப்பாள் அதற்குள்,சமையல் வேலை செய்யும் மல்லிகா “வசுமா உங்களை சின்ன தம்பி கூப்பிடுறாங்க”என அழைத்து செல்ல வந்தால்.
“இதோ வரேன்”என்று அந்த டைரியை கையோடு எடுத்துகொண்டு அவர்களின் அறைக்கு சென்று அந்த டைரியை வசுவின் துணிக்கு அடியில் வைத்துவிட்டு கீழே சென்றாள்.
“சுகி மாத்திரை போட்டயா,சாப்பிட்டாயா,சரி எனக்கு மீட்டிங் ஆரம்பிக்கபோது அதான் நீ சாப்பிடாயா,இல்லையானு கேட்டேன்,அம்மா எங்க”
‘ம்ம் சாப்பிட்டு இப்போதான் மாத்திரை போட்டேன்,அத்தை வெளிய போயிருகாங்க,இப்போ வந்துடுவாங்க வசீ,
“சரி இன்னைக்கு வெளிய போகலாம்,உன்கிட்ட ஒன்னு சொல்லணும், ரெடியா இரு ஓகே பை சுகி”
‘சரி வசீ,நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்,வெயிட் போர் யூ வசீ பை’
“தேவ் மீட்டிங் ரெடியா,டைம் ஆச்சு”என அருண் அங்கு வந்தான்.
‘ம்ம் போகலாம் அருண் இதோ’என இருவரும் கிளம்பினர்.
“மீட்டிங் ஆரம்பித்து எஸ்விஎஸ் நிறுவனம்,தங்களது தொழில் முறையும், அதன் பொருள்களையும் தெளிவாக விவரித்து,அதன் நன்மைகளையும்,கூறி தேவ் கம்பெனியுடன் சேர்ந்து ஒப்பந்தம் முடிவானது.
“அருண் மீட்டிங் சக்சஸ் அஹ முடிந்ததை டாடிகிட்ட சொல்லிடுங்க அப்புறம் இது அந்த கம்பெனி பைல் இது உங்ககிட்ட இருக்கட்டும்,நான் கிளம்புறேன் அருண்”
‘ஓகே தேவ், சார்கிட்ட சொல்லிடுறேன்,பை”
“வரும் வழியில் எல்லாம் வசுவிடம் எப்படி காதலை சொல்லுவது என யோசித்துக்கொண்டு வந்தான்,அப்பொழுது எதற்சையாக மற்றொரு பைல் இருப்பதை பார்த்து “இது என்ன பைல்,அந்த பைல் கம்பெனி பைல்,இது என்ன”என்று யோசித்துக்கொண்டே திறந்து பார்த்தான்.
‘அதில் “எப்ஜி ஹோஸ்பிட்டேல் இன் சென்னை” என இருந்தது.”யாரோட ரிப்போர்டா இருக்கும் என நினைத்துக்கொண்டே அதன் அடுத்த பக்கத்தை திறந்தான், “விஷ்ணுதேவ்”என்று இருந்தது.அதை பார்த்தவுடன் தேவ் திகைத்து அந்த ரிப்போர்ட்டில் “ஹார்ட் டொனேட்”என ஆங்கிலத்தில் இருந்தது.அதை படித்ததும் அவனின் மூச்சு ஒரு நிமிடம் நின்று வெளியேறியது.
“வேல் எப்ஜி ஹோஸ்பிட்டேல் போங்க” என டிரைவரிடம் கூறினான்.
“அங்கு உள்ள டாக்டரிடம் அவன் கொண்டுவந்த ரிப்போர்டை கொடுத்து அதில் என்ன உள்ளது என்று கேட்டான்.
“அந்த டாக்டர் அந்த ரிப்போர்டை வாங்கி அதை பர்ர்த்து,அவனிடம் “இந்த பையன் யாரோ ஒருத்தவங்களுக்கு இதயம் கொடுத்து இருக்கான்,அதுவும் இந்த பையனுக்கு எந்தவித நோயும் இல்லை,முக்கியமா இந்த இதயமாற்று சிகிச்சைக்கு மனபூர்வமா சம்மதிக்கிறேன்னு இதுல இருக்கு”என தேவ்விடம்அந்த ரிப்போர்ட் பத்தின விவரங்ககளை டாக்டரிடம் அறிந்துகொண்டு சென்றான்.
‘ஆனால் அவன் நினைவில், “ஆக்சிடென்ட்ல தேவ் இறந்துட்டான் வாசு”என்று தேவ்வின் தந்தை சொன்ன நியாபகம்.
“அப்போ டாடி எதுவோ மறைக்குறாங்க”
“அப்போ என் தம்பி ஆக்சிடென்ட்ல சாகல”இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு டாடிக்குதான் தெரியும்.
‘இதுக்கு காரணமானவங்கள நான் சும்மாவிட்டேன்’என தனக்குதானே உறுதி எடுத்துகொண்டான்.
உன்நினைவுகள் தொடரும்……………