Advertisement

                நினைவுகள் 9

 

அந்த அழகான காலைப்பொழுதில் சூரியன் மெல்ல அவர்களின் அறையில் பரவியது,முதலில் வசுவின் முகத்தில் அந்த சூரிய ஒளி விழுந்தது,அந்த வெளிச்சத்தில் கண்ணை சுருக்கிக்கொண்டு எழுந்தால்,ஆனால் அவள் அருகில் தேவ் இல்லை,.

அவள் யோசனையில் “எங்க போய்ட்டான்,இவன் ஒரு வேளை ஆபிஸ்க்கு எழுந்து கிளம்புற பழக்கத்துல ஆபிஸ்க்கு போய்ட்டனோ,இருக்கும் அவன் பிஸ்னஸ்மேனாச்சே பின்ன எப்படி இருப்பான்,என்று அவள்பாட்டிருக்கு  யோசித்துக்கொண்டே குளியலறைக்கு சென்று குளித்து முடித்தால்.

அப்பொழுதுதான் அவள் நினைவில் மாற்று உடை எடுத்து வரவில்லை என்று நினைவு வந்தது…..ச்சே இதை மறந்துட்டோமே,இப்போ என்ன பண்ணுறது ஹ்ம்ம் என்று நினைத்துகொண்டு வெளியில் யாராவது இருக்குறாங்களா என்று எட்டி பார்த்தால் ஆனா யாரும் இல்லை முடிவு செய்து வெளியில் வந்தால்.

அவளுக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே வந்தால்

“ஆசை தீர பேசவேண்டும் வரவா வரவா

நாலுபேருக்கு ஓசைகேட்கும் மெதுவா மெதுவா

கண்மையங்கும் நீ வர வர,

பெண்மையங்கும் நீ தொட தொட “ என்று பாடிக்கொண்டு தன் உடை எடுத்துகொண்டு உள்ளே உடை மாற்றும் அறையில் நுழைந்து உடை மாற்றிக்கொண்டு வந்தால்.

கண்ணாடியின் முன் அமர்ந்து தலை முடியை  உலர்த்தி,வகிடு எடுத்து சீவி,அலங்காரம் செய்துகொண்டால்,நெற்றி நடுவில் பொட்டு வைத்து எழும்போது அவள் அருகில் குங்குமம் இருப்பதை பார்த்தல், அப்பொழுதுதான் தனக்கு கல்யாணம் ஆனது நினைவில் வந்தது “இதை எப்டி மறந்தோம் என்று அதை கையில் எடுத்து மோதிரவிரலில் குங்குமத்தை எடுத்து வகிட்டின் நடுவில் அழகாக வைத்தால், குங்குமத்தை வைத்ததும் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

“உன் நெற்றியில இப்போ நான் வைச்ச குங்குமம் என்னைக்கும் அழியாது” என்று மீண்டும் அவள் நினைவில் யாரோ கூறியது போல உணர்வு…

“அவள் அப்பிடியே தலையில் கை வைத்துக்கொண்டு யாரு சொன்னங்க” என்று யோசிக்கும் போது கதவு திறந்துகொண்டு தேவ் வந்தான்.

“வாவ் சுகி எவ்ளோ அழகாக இருக்க, இந்த சேலை உனக்கு நல்லா இருக்கு,ஆமா நீ எட்டு மணிக்கு குறையாம எழுந்திரிக்கமாட்டேனு அத்தை சொன்னாங்களே ஆனா நீ ஏழு மணிக்கு எழுந்து ரெடி ஆகிட்ட”

திடிரென்று அவன் பேசியதை கேட்டு திரும்பி பார்த்தால்,முதலில் அவளின் சேலையை பற்றிகூரியதும் கொஞ்சம் வெட்கம் வந்தது,அடுத்து அவன் “அவளின் தாமதமாக எழும் வழக்கத்தை கூறியதும் அவனை முறைத்து பார்த்தால்”

“நான் எட்டு மணிவரை தூங்குரத நீங்க தினமும் வந்து பார்த்தமாதிரி சொல்லுறேங்க”

“இதெல்லாம் பார்த்தான் சொல்லனுமா என்ன,உன் முகத்த பார்த்தே சொல்லுவேன்”

‘எங்க இன்னும் என்னை பத்தி சார் என்னன்னா தெரிஞ்சுவச்சுஇருகேங்க சொல்லுங்க பாப்போம்’

“ஹ்ம்ம், உனக்கு சப்பாத்தி பிடிக்கும்,கடவுள் ராமன் சீதா பிடிக்கும்,லாங் சுடிதார் பத்துக்குமேல உங்கிட்ட இருக்கு,டெடி பொம்மைனா இஷ்டம்,ஆனா அத்தை வாங்கி கொடுக்கல,தமிழ் பாடல் எல்லாமே உனக்கு பிடிக்கும் அதில் “கண்ணனே நீ வர காத்திருந்தேன்”பாட்டு உனக்கு ரொம்ப பிடிக்கும், என ஒவ்வொன்றையும் கூறினான், இதெல்லாம் அவள் கண்களை விரித்து கொஞ்சம் அதிர்ச்சியாகவும் கேட்டுக்கொண்டு இருந்தால்.

‘தேவ்  கூறிமுடித்ததும் “என்ன எல்லாம் சரியா சொன்னேனா”என்று அவனின் ஒரு புருவத்தை அழகாக ஏற்றி இறக்கி கேட்டான்.

“வசு ஹ்ம்ம் “இதெல்லாம் என் யசோ அம்மாகிட்ட கேட்டுஇருப்பேங்க,இல்லையினா என் அண்ணா சொல்லி இருப்பாங்க, யாருகிட்ட கதை சொல்லுறேங்க,எனக்கு மூணு வயசுல காது குத்திட்டாங்க வசீ,அதானால நீங்க கொஞ்சம் தள்ளி இருங்க”

‘அப்படியா ஆனா உனக்கு நாலு வயசுல காது குத்தினதா கேள்விபட்டேன்’என்றான்.

“உங்களுக்கு எப்படி தெரியும்”

‘நான் சொன்னேலா உன்னைபத்தி  எனக்கு எல்லாம் தெரியும் சுகி’

“வசு பேசவருபோது அவர்களது அறையில் உள்ள போன் அலறியது,தேவ் அதை எடுத்து காதில் வைத்தான் “சொல்லுங்க மா,வசு ரெடி மா,ஓ வந்துட்டாங்களா, இதோ வரோம்மா”என்று பேசி முடித்து வைத்தான்.

“சுகி கீழ எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, வா போகலாம்”என்று அவளை அழைத்துகொண்டு சென்றான்.

‘வசீ,என்னைபத்தி உங்களுக்கு என்ன தெரியும் கேட்டேன் சொல்லவே இல்லை,என்று அவர்களின் அறையில் இருந்து வெளியேறிய படி கேட்டாள்’

“இதெல்லாம் நாம தனியா இருக்கும்போது பேசலாம்,இப்போ அதை பத்தி அப்புறம் பேசலாம் ஹ்ம்ம் சரியா”என்று “அவனின்” அறையை கடக்கும் போது அவளது இதயம் ஒரு நிமிடம் வேகமாக துடித்தது, தேவ் பேசிக்கொண்டே வந்தான்,ஆனால் அவளுக்கு இதயம் துடிப்பின் வேகம் கொஞ்சம் அடங்கி இருந்தது, தேவ் பேசிக்கொண்டு திரும்பி பார்த்து “என்ன சுகி என்னாச்சு”என்று கேட்டுகொண்டே மாடிபடியின் அருகில் வந்ததும், அவளின் தோளில் மெதுவாக அணைத்து அழைத்து வந்தான், கீழே இருந்த அனைவரும்,தேவ்,வசவும் வருவதை பார்த்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நினைத்துகொண்டனர்.

“ஒண்ணுமில்ல வசீ,கொஞ்சம் தலை சுத்திருச்சு அவ்ளோதான்,என்று வசு கூற”

“மச்சான் நாங்க எல்லோரும் இங்கதான் இருக்கோம், நீயும் மேல இருந்து வந்து ரொம்ப நேரமாச்சு,தங்கச்சிய கொஞ்சம் விட்டேனா நல்லா இருக்கும்”என்று அருண் கேலி செய்ய.

‘நீ எப்போ வந்த,அதுவும் என் கல்யாணத்துக்கு வராத நீ என்கிட்டே பேசாத’என்று கொஞ்சம் கோவம் கொண்டான்.

“நீ கல்யாணத்துல பிஸியா இருந்த,அப்போ புது ப்ரொஜெக்ட் விஷயமா நான்தான் பெங்களூர் போகவேண்டியதா இருந்தது, அதனால உன் கல்யாணத்தை அட்டென் பண்ண முடியல,அதான் இப்போ வந்துட்டேனே”

‘ஆமால சாரி டா உனக்கு ரொம்ப வேலை கொடுத்துட்டேன்,எப்படி போச்சு பெங்களூர் ல நம்ம ப்ரொஜெக்ட்’

“எல்லாம் சக்சஸ் டா,எப்படி இருக்கேங்க வாசுகி”என்று அவளிடம் கேட்டான்,

“நல்லா இருக்கேன் அண்ணா,பேர் சொல்லி கூப்பிட வேண்டாம்,அண்ணா தங்கச்சினே சொல்லி கூப்பிடுங்க”என்று அவளும் இலாவைபோல அருணையும் அண்ணா என்று அழைத்தால்.

“ஓகே மா,இந்தாங்க என் கல்யாண பரிசு”

“நமக்குள்ள என்ன பரிசு,அருண்”என்று இருவரும் வாங்கிகொண்டனர்.

“சரி வாங்க எல்லோரும் சாப்பிடலாம்,வசுமா இங்க வா”என்று அழைத்துகொண்டு சமையல் அறைக்கு சென்றார்.

“இன்னைக்கு முதல் நாள்,அதனால உன் கையலா ஒரு இனிப்பு செய்யணும்,அது எதுவா இருந்தாலும் சரி நான் வெளிய இருக்கேன் நீ செஞ்சு கொண்டு வா”என்று அவளை அறையில்விட்டு சென்றார்.

“வசுவோ,என்ன ஸ்வீட் செய்யலாம்,என்று யோசிக்க,நமக்கு தெரிஞ்சதெல்லாம், கேசரி மட்டுதான் அதை இவங்க சாப்பிட்டு இருக்க மாட்டங்க,நாம அதை செய்யலாம் என முடிவுடன் கேசரி செய்து முடித்து எடுத்து வந்தால்.வசு ஸ்வீட்டை எடுத்து வந்து டேபிள் மீது வைத்து, ராதாவும் வசுவும் பரிமாறினார்கள்,தேவ் மட்டும் இவளுக்கு சமைக்க தெரியுமா என்று யோசித்துக்கொண்டே சாபிட்டான்,

நந்தன் “மருமகளே கேசரி சூப்பர் ஆனா நெய் இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்”

அருண் “தங்கச்சி கேசரி சும்மா அள்ளுது போ, கடையிலகூட இப்படி பண்ணமாட்டாங்க.

“தேவ்,சாப்பிட்டு முடித்து ஒரு பதிலும் சொல்லவில்லை,வசு எதிர் பார்த்தது அவனின் பதிலுக்காக,அவனை தவிர மற்றவர்கள் சாப்பிட்டு பாராட்டினர்”

ஆனால் அவனோ ஒரு வார்த்தை கூறவில்லை,

“ராதா “வசுமா நீ சாப்பிடு என்று தேவ்க்கு அருகில் அமர வைத்தனர்”

“அவளுக்கும் முதலில் கேசரி,வைத்தார் அவளும் அதை எடுத்து சாப்பிட்டு பார்த்தால்,ஆனால் அவளுக்கு நானா இதை செய்தேன் என்று இருந்தது.ஏன்னெறால் அவ்வளவு சுவையாக இருந்தது.

“நல்லா இருக்கு அப்புறம் ஏன் வசீ ஒன்னும் சொல்ல மாட்றாங்க”என்று தனக்குதானே கூறிக்கொண்டு சாப்பிட்டால்.

ஜானகி வீட்டில் காலை ஐந்து மணிக்கே பூஜை மணி சத்தம் கேட்டு ஜானகியும்,யசோவும் எழுந்து வந்தனர்.

“அங்கு மலர் சாமி படத்திருக்கு ஆரத்தி காட்டி, பூக்களை தூவி சாமிகும்பிட்டு கொண்டு இருந்தால்”

இரு அத்தைமார்களும் அதை மகிழ்ச்சியுடன் பார்த்துகொண்டு இருந்தனர்.

“அவள் பூஜை முடித்து திருப்பி பார்த்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினால்,என்ன மலர் சீக்கிரம் எழுந்திருச்சுட்ட”என்று என்று ஜானகி கேட்டார்.

‘அத்தை எப்பவும் அம்மா வீட்டில இந்த நேரத்துக்கு எழுந்துக்குவேன், பால் காய்ச்சி காபி போட்டுட்டேன் அத்தை,இதோ எடுத்துட்டு வரேன்’என்று சமையல் அறைக்கு சென்று எடுத்து வந்து கொடுத்தாள்.

“இங்க கொடுமா,நாங்க காபி எடுத்துக்கிறோம், நீ இலாவுக்கு எடுத்துட்டு போ”என்று அனுப்பி வைத்தார்.

“நல்ல பொண்ணுக்கா,நம்ம இலக்கியன் மனசுக்கு ஏத்த பொண்ணு”

‘ஆமா ஜானு,அவன் குணத்துக்கு இந்த பொண்ணுதான் சரியான ஆளு’

மலர் இலாவிற்கு காபி எடுத்துகொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள். இன்னும் இலா எழுந்திரிக்கவில்லை,அவளோ எப்படி எழுப்புவது என்று யோசித்துக்கொண்டு அவனி அருகில் அமர்ந்தால்.

‘என்னங்க,என்னங்க என்று அவனின் முதுகில் கை வைத்து எழுப்பினால்,ஆனால் அவனிடம் ஒரு அசைவும் இல்லை,மலரோ என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து திரும்பும்போது அவளின் இடது கையை பிடித்து இழுத்து அவனின் பக்கத்தில் படுக்கவைத்தான்.

“நீங்க முளிச்சு இருக்கீங்களா,அப்புறம் ஏன் நான் எழுப்புனப்போ எழுந்திரிக்கல”என்று கேட்டாள்.

‘நீ, நம்ம ரூம் கதவ திறக்கும்போது முழிச்சுட்டேன்,சும்மா நீ எப்படி என்னை எழுப்புவேணு பார்த்தேன்,என்று இருவரும் எழுந்து அமர்ந்துகொண்டு காபி அருந்தினர்,காபி கொஞ்சம் பரவாயில்லை விழி இன்னும் கொஞ்சம் சுகர் வேணும்,

‘நான் சுகர் எடுத்துட்டு வரலைங்க’ என்று அவள் கூற நானே எடுத்துக்கிறேன் என்று அவளின் காபியை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு,என்னங்க என்று கேட்க விடாமல்,அவளின் இதழை தன் இதழ் கொண்டு அவனுக்கு தேவையான சுகரை எடுத்துவிட்டு அவளை விட்டான்.

“இப்படி குளிக்காமா, என்னை அழுக்காக்கிட்டேங்க ச்சு போங்க,நான் போய் டிபன் பண்ணனும் நீங்க குளிக்க போங்க என்று அவனிடம் இருந்து தப்பித்து போனால்”

“ஏய் விழி நில்லு”என்று அவன் அவளை பிடிப்பதற்குள் அவள் வெளியில் சென்றுவிட்டால்.

இப்படியாக இரு ஜோடிகளும் மறுவீடு,விருந்து என்று ஒவ்வெரு நாளும் குடும்பத்துடனும்,தங்களது இணைகளுடனும் சந்தோஷமாக இருந்தனர்.

தேவ்,கல்யாணம் முடிந்து முதல் நாள் ஆபிஸ்க்கு கிளம்பினான்,கீழே வசுவும்,ராதாவும் சமையல் அறையில் அவர்களுக்கான உணவு தயார்படுத்திக்கொண்டு இருந்தனர்.

“அத்தை இந்த டிஸ் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்த்து சொல்லுங்க,என்று ஒரு கிண்ணத்தில் ராஜ்மா குருமாவை கொடுத்தாள், ‘எப்படி இருக்கு அத்தை’.

“ஹ்ம்ம் சூப்பர் வசுமா,என் வீட்டுகாரருக்கு ரொம்ப பிடிக்கும்,

‘தேங்க்ஸ் அத்தை,நான் எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிளா வைச்சுட்டு வரேன்’என்று ஒவ்வெரு அயிட்டத்தையும் அழகாக அடுக்கி வைத்தால்.

“சுகி,சுகி இங்க கொஞ்சம் வாமா”என்று தேவ் அழைத்தான்.

ராதா “என்னனு போய் பாருமா,முக்கியமான பைல் தேடுவான்’

‘சரிங்க அத்தை இதோ போறேன்’என்று அவர்களின் அறைக்கு சென்றாள்.

“அங்கு எல்லா ட்ராவில் உள்ள பைல் எல்லாமே கீழே சிதறிக்கிடந்தது,ஆனால் அவனோ மும்ரமாக டையை அவசரமாக கட்டிக்கொண்டு இருந்தான்”

‘என்ன வசீ ரூம்ம இப்படியா போட்டு வைப்பேங்க,என்று சொல்லிக்கொண்டு அவள் ஒதுங்க வைத்தால்,ஆனால் அவனோ அவளின் கையை பிடித்து “அதெல்லாம் நான் ஆபிஸ் போன பின்னாடி பார்த்துக்கலாம் இப்போ எனக்கு டை கட்டிவிட்டு,இன்னைக்கு முக்கியமான பிரசண்டேசன் இருக்கு  கையில் பைலை வைத்து பார்த்துகொண்டு இருந்தான்,டையை அவளிடம் கொடுத்தான்,அவளோ ‘அவனின் உயரத்துக்கு கொஞ்சம் எம்பி அவனுக்கு டை கட்டிவிட முயற்சி செய்தால்,

“வசீ கொஞ்சம் ட்ரெசிங் டேபிளா உக்காருங்க,எனக்கு எட்டல”என்று அவனை உக்காரவைத்து டை கட்டிவிட்டு கொண்டு இருக்கும் போது அவன் பைலின் அடுத்த பக்கத்தை திருப்பு போது அவள் கட்டி இருந்த சேலையில் இடுப்பு பகுதி நன்றாக தெரிந்தது அதை அவன் எதார்த்தமாக பார்க்க,இவளோ டை கட்டிவிட்டு அவனின் தோள் பட்டையில் உள்ள சுருக்கத்தை சரி செய்தால்,”ஹ்ம்ம் பர்பெக்ட்”என்று சொல்லி திரும்புபோது அவளின் இடையை பிடித்து அருகில் இழுத்தான், ‘அவளோ என்ன என்று உணர்வதற்குள் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முதல் முத்தை பதித்தான்’

“டை கட்டிவிட்ட உனக்கு எந்த பரிசும் வேணாமா” என்று முத்தகொடுத்து விட்டு அவளிடமே கேட்டான்.

அவளோ, திடீர் முத்தத்தில் உறைந்து நின்றால்.ஆனால் தேவ்வோ ‘அவளை உலுக்கி,என்ன பரிசு ஓகே வா’என்று கேட்டான்.

“வசுவோ “கொஞ்சம் அதிர்சியில் இருந்து வெளிவந்து அவனை பார்த்தால்”

‘என்ன அமைதியா இருக்க,பிடிக்கலையா’என்று வினவினான்.

“வசுவோ,அமைதியா இருந்தால்”

‘கேக்குறேன்ல பதில் சொல்லு சுகி’கொஞ்சம் கோபமாக கேட்டான்

“ஒன்றும் பேசாமல் இருந்தால்”

‘என் தப்புதான்,உன் அனுமதி இல்லாம உனக்கு கிஸ் பண்ணதுக்கு சாரி’என்று கோவமாக அவளை தாண்டி கோர்ட்டை எடுத்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

“அவளோ மனதில் “எனக்கு ஏன் இப்படி தோணுது அதுவும் வசீ கிட்டவந்தாலே யாரோ வரமாதிரி இருக்கு,அவருகிட்ட நல்ல பழகணும் நினைக்குறேன் ஆனா முடியல” என்று கொஞ்சம் கவலைகொண்டால்.

‘அம்மா ,அம்மா, நான் ஆபிஸ் கிளம்புறேன், என்று தேவ் கூறிக்கொண்டு வாசல் வந்தான்.ராதவோ “தேவ் நில்லுப்பா,சாப்பிட்டு போ”

“இல்லை மா,இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு டாட் எங்க”

‘அவரு கிளம்பிட்டு இருக்காரு தேவ்,வசு எங்க உன்கூடதான இருந்தா, என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போது ‘அத்தை அவங்க எவ்ளோ சொன்னாலும்,வேலை இருக்கு நான் கிளம்புறேன்னு சொல்லுறாரு அத்தை என்னனு கேளுங்க’என்றபடி வந்தால்.

‘தேவ்வோ,மேல இருக்கும் போது ஒரு வார்த்தை பேசல இப்போ நான் சாப்பிடலைன்னு கவலைப்படுறா’என்று மனதில் திட்டிக்கொண்டு இருந்தான்.

“தேவ்,வேலை இருக்கத்தான் செய்யும்,அதுக்காக சாப்பிடமா போனா உடம்பு என்னாகும் வா சாப்பிட்டு போ,வசுமா வந்து அவனுக்கு சாப்பாடு எடுத்து வை,நான் தேவ் அப்பாவ கூப்பிட்டு வரேன்,என்றார்.

“தேவ், டேபிளில் அமர்ந்ததும் அவனே எடுத்து போட்டுகொண்டான்,அவள் செய்த ராஜ்மா குருமாவை,எடுத்து அவன் தட்டில் வைக்கும் பொழுது அவன் தடுத்துவிட்டான், ‘என் மேல கோவத்தை சாப்பாட்டு மேல காட்டாதேங்க வசீ’ ‘ என்று அவன் தட்டில் வைத்தல்.

“எந்தவித பேச்சும் இன்றி சாப்பிட்டு முடித்தான், தேவ் காரை ஸ்டார்ட் செய்யும் போது அவன் அருகில் வந்து,என் மேல உள்ள கோபத்தை ஆபிஸ் ல காட்டாதேங்க, “ஆல் தி பெஸ்ட் வசீ” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்,அவள் போவதை பார்த்து  மனதில் என் கோபம் அவளை எதுவரை தாக்கி இருப்பதை உணர்ந்தான் தேவ்.

“சரண் எப்போ திரும்பி வர,அடுத்த மீட்டிங் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அட்டென் பண்ணனும்,என தேவ் அவனை போனில் அழைத்து கேட்டான்.

‘தேவ் அடுத்த மீடிங்க்கு கண்டிப்பா நான் அங்க இருப்பேன் இன்னும் டூ டேஸ்ல நான் வந்துடுவேன் தேவ், ஹே மேன் உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு கேள்விபட்டேன் கங்க்ராஸ் தேவ் சீக்கிரம் உன்னையும்,உன் மனைவியையும் மீட் பண்ண வரேன் தேவ் என்றான்.

“தேங்க்ஸ் சரண்,ஓகே டா”என்று அவனும் பதிலுக்கு பேசிமுடித்தான்.

சிவா “வெற்றி,இந்த டெண்டர்ல தேவ்வும் போட்டி போடுறான்,நாம எப்படி அவனை ஜெய்க்க முடியும்”என்று கேட்க.

சிவா, இந்த டெண்டர் எனக்கு முக்கியமில்ல,ஆனா நான் தேவ் அஹ சந்திக்கபோற அந்தநாள எதிர் பார்க்குறேன்,சிவா அவன் முன்னாடியே வாசுகிய கொல்லனும்,அதுதான் எனக்கு வேணும்.

“வெற்றி,நான் அதுக்கான ஏற்பாடு பண்ணுறேன் ஆனா, எப்போ எப்படின்னு நீதான் சொல்லணும்”

‘அவள கொல்லுறதுக்கு நேரம் காலம் தேவை இல்லை சிவா,ஆகஸ்ட் 9 அந்த தேதில அவள நான் என் கையால கொல்லுவேன்’சிவா அதுனால கொஞ்சம் சீக்கிரமா வேலைய ஆரம்பிக்கணும்’என்று இவர்கள் திட்டம் போட,அங்கு கதிர் அவளை எந்த வழியில் காப்பாற்றலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.

“கதிரின் தோளில் கை வைத்து திருப்பினால் அவனின் அன்பு மனைவி காதலின் தேவதை,கலைவாணி, “என்ன கதிர் இன்னும் என்ன யோசனை வாங்க சாப்பிடலாம்,என்று அழைத்தல்.

‘நீ சாப்பிட்டயா கலை’

“இல்லை கதிர்,நீ சாப்பிடாம நான் மட்டும் எப்படி”

‘ஏய், இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்புக்கு என்ன ஆகுறது,உள்ள இருக்குற என் பாப்பாவுக்கு என்ன ஆகும்,வா சாப்பிடலாம்”என்று அவளை அழைத்து சென்றான்.

“இப்படி நேரம் கடந்து சாப்பிடகூடாது கலை,டாக்டர் என்ன சொன்னாங்கனு உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன்,என்று அவளிடம் பேசிக்கொண்டே ஊட்டிவிட்டான்,அவன் கையில் இருக்கும் சாப்பாட்டு தட்டை வாங்கி அவனுக்கு ஊட்டிவிட்டால்,நீயும் காலையில இருந்து சாப்பிட்டல கதிர்”,என்று அவளும் அவனுக்கு தாயானால்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலா கதிர்”

‘என்ன கலை சொல்லணும்’

“ஏன் யோசனையா இருந்தேங்கனு கேட்டேன்,நீங்க ஒன்னும் சொல்லலா”

‘என்னனு சொல்லுறது கலை,உன்னையும் என்னையும் சேர்த்து வச்ச வசுவ  எப்படி காப்பத்துறதுனு தெரியல,அதுக்குமேல தேவ் எப்படி இறந்து போனான்னு எனக்கு தெரியல கலை,இப்போ சொல்லு என் யோசனைக்கான பதில’என்று அவளிடமே கேட்டான்.

“நான் அன்னைக்கு சொன்னேன்ல,உங்க அண்ணா ஒரு திட்டம் போட்டு இருக்காங்கனு”

‘என் அண்ணனா பத்தி எனக்கு தெரியும்,கலை ஆனா அவன் இப்போ வேற திட்டம் போட்டு இருப்பான் கலை’.

“இப்போ என்ன பண்ணுறது கதிர்”

‘நீ எதையும் யோசிக்காமா,நிம்மதியா தூங்கு’ என்று அவளை மெத்தையில் படுக்க வைத்து அருகில் அவன் அமர்ந்து அவளின் தலையை தடவிகொடுத்து அவளை உறங்க வைத்தான்.

‘கதிரின் நினைவோ கடந்தகாலத்திற்கு ‘ஹெலோ மிஸ்டர் இங்க வாங்க’ என்று கதிரும் அவனின் தோழனும் நடந்து சென்றவர்களை அழைத்தால்.

“எங்கள எதுக்கு கூப்பிடேங்க சிஸ்டர்”என்று கதிர் அமைதியாக கேட்க.

‘ஹ்ம்ம் இதோ இவ (கலை) உங்கள ரெண்டு வருஷமா லவ் பண்ணுற,இப்போ இங்கேயே தாலிக்கட்டுங்க என்று ஒரு மஞ்சள் கயிறை எடுத்து அவன் கையில் திணித்தால்.

“கதிரோ ‘ஒரு நிமிடம் திகைத்து,பின் “சரிங்க சிஸ்டர் நான் தாலிக்கட்ட ரெடி பொண்ணு ரெடியா”என்று கலையை பார்த்து ஒருமாதிரியாக கேட்டான்”

‘கலையோ திருதிருவென முழித்துகொண்டு வசுவையும்,கதிரையும் பார்த்துகொண்டு இருந்தால்,ஆனால் வசு “ஹே மாப்பிளை ரெடி,எங்க பொண்ணும் ரெடி” என்று கலையை கை பிடித்து முன் நிறுத்தினால்.

கதிர் ஒவ்வெரு அடியாக அவளை பார்த்து எடுத்து வைத்தான்,ஆனால் கலை பின்னாடியே சென்றாள்.

சரியாக அவளின் அருகில் சென்றவுடன்,கலை “கதிர் வாசுதான் உங்களை கூப்பிட்டு தாலி கட்டவைக்குறேனு சொன்னனா உங்களுக்கும் நாம எடுத்த உறுதி மறந்துடுச்சுல”என்று அவனிடம் கூறினால்.

‘கதிரோ அவளையும்,தாலியையும் மாறி மேரி பார்த்து வசுவின் கையில் கொடுத்து வேகமாக சென்றுவிட்டான்’

உன்னை அப்படி கொல்லனும் டி எருமை,பாவம் கதிர் அண்ணா என்று கதிரை பார்க்க சென்றாள்.

“சாரிண்ணா,என்னால உங்களுக்கு மனக்கஷ்டம்,கலையும் ,நீங்களும் எடுத்த உறுதி எனக்கும் தெரியும் ஆனா அவளுக்கு வேற இடத்துல இருந்து மாப்பிள்ளை பார்க்க வரங்கானு இப்போ சொல்லிட்டு இருந்தா அதை கேட்டு எனக்கு கோபம் வந்திருச்சு அதான் இப்படி பண்ணே,சாரிண்ணா,என்று கதிரிடம் மன்னிப்பு கேட்டால்.

“இட்ஸ் ஓகே வாசு,அவளும் என்ன பண்ணுவா விடு,உண்மையில அவள பொண்ணு கேட்டு வந்திருக்கங்களா”

‘ஆமாம் அண்ணா,என்று கலையை அவள் அப்பாவின் அக்கா மகனிற்கு கொடுப்பதாய் பேச்சுவார்த்தை போய்கொண்டு இருந்தது’ ஆனால் கலைக்கு இதில் துளிக்கூட விருப்பம் இல்லை,அவளுக்கு எப்பவும் அவளின் கதிர்தான்,என்று நினைவில் நிறுத்திகொண்டால்’

“கொஞ்சம் அவளை பத்திரமா பார்த்துக்கோ வாசு”

‘சரிண்ணா போயிட்டு வரேன்’என்று அவள் அந்த பக்கம் சென்றதும், “டேய் கதிர் இங்கதான் இருக்கியா” என்று வந்தான் தேவ்.

‘கதிர் நான் உன்னை அதிகமா விரும்புறேன்’ என்று அவனின் பழைய நினைவில் இருந்து வெளிக்கொண்டு வந்தால் கலை.

“நானும் உன்னை அதிகமா காதலிக்கிறேன் டி கலை”என்று அவனும் அவளை மெதுவாக அணைத்து படுத்துகொண்டான்.

‘ரொம்ப ஓவர் அஹ பண்ணுற வசீ,இன்னைக்கு வீட்டுக்கு வருவேல அப்போ உனக்கு நான் பார்த்து பார்த்து பண்ணுன ரசகுல்லா தரமாட்டேன்,என்று அவனின் புகைப்படத்தை பார்த்து அவனை திட்டிக்கொண்டு இருந்தால்’

அப்பொழுது அவளின் கைபேசிக்கு அழைப்பு வந்தது, “ஹலோ,யாரு பேசுறா”..

“*****ஹோச்பிட்டல் இருந்து பேசுறோம்,தேவ்க்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு கொஞ்சம் சீக்கிரம் வாங்க”என்று யாரோ கூறினார்கள்.

“அவளின் கையில் இருந்த போன் நழுவி விழ”அங்கு அவள் இல்லை.

“அம்மா, அம்மா கொஞ்சம் தண்ணிர் கொடுங்க”என்று தேவ் ராதாவை அழைத்தான்.

“என்ன ராஜா வசு இங்கதானே இருந்தா அவளை கூபிட வேண்டியதுதானே”

‘அம்மா இப்போ உங்க மருமகளா கூப்பிடாததுதான் பிரச்சனையா’என்று சொல்லிக்கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

“அங்கு அவளின் போன் கீழே விழுந்து கிடந்தது, ‘இப்படி போன் அஹ கீழ போட்டுட்டு இவ எங்க போனா’என்று அவளை அழைத்து பார்த்தான், அவளோ வரவேயில்லை,எங்க போனா,என்று வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு தன் அன்னையிடம் விசாரித்தான்.

“என்ன சொல்லுற ராஜா,வசு வீட்டில இல்லையா”என்று அதிர்யடைந்தார்.

“என்ன வசுவ காணாம”என்று அங்கு வந்த ராமனும்,யசோவும் திகைத்தனர்.

“மயக்கம் தெளிந்த வசு ‘யாரு நீங்க என்னை எதுக்கு இப்படி கட்டி போட்டு வச்சு இருக்கேங்க’

“ஏன்னா நீ சாக போற மிஸ்ஸஸ்.வாசுகிவாசுதேவ்”என்று கூறிக்கொண்டு வெளியே வந்தான் ஒருவன்…

 

                                   உன்நினைவுகள் தொடரும்……

 

Advertisement