Advertisement

                  நினைவுகள் 6

 

“மீட்டிங்க்கு எல்லாம் ரெடி அஹ, என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்”தேவ்

“ஆனால் அங்கு வசு இல்லை,எங்க போயிட்டா”என்று அவள் கேபினில் தேடினான்.

“தேவ் அவன் அறையில் இருந்து வெளியே வந்து,எதிரே வந்த ஒருவனிடம் வசுவை பற்றி கேட்டான்”.

அவனோ “சார் வசு கேண்டின்ல இருந்தாங்க”என்றான்

தேவ் “ஓகே தேங்க்ஸ்”

“அங்கு வசு மலர்,கண்ணனிடம் தேவ்வுடன் மீடிங்க்கு செல்வதை கூறிக்கொண்டு இருந்தால்”

மலர் “பாஸ்கிட்ட லீவ் கேட்டயா வசு”

வசு “இல்லை டி மலர்,கேக்கணும்”

மலர் “ஒழுங்கா கேளு வசு,நீயில்லாம நான் மட்டும் எப்படி ட்ரெஸ் எடுக்கமுடியும்”

வசு “அதான் என் அண்ணா வராங்க,அப்பா,அம்மா,எல்லோரும் உன்கூடா இருப்பாங்க அப்புறம் எதுக்கு நான்”

மலர் “எல்லோரும் இருந்தாலும் நீ இருக்கமாதிரி வருமா”

வசு “ரொம்ப குளிருது டி”என்று கேலிசெய்தால்.

மலர் “பாஸ்கிட்ட லீவ் கேட்டு எனக்கு போன் பண்ணு சரியா,கண்ணா வா கிளம்பலாம்”

“ஹே மலர் நில்லு டி,”என்று அவள் கூப்பிட அவளும் ,கண்ணனும் சென்றுவிட்டனர்”

“வசு, என்னமோ நான்தான் இந்த கம்பெனி ஓனர் மாதிரி பேசுறா”

“ஹையோ அவன்கிட்ட லீவ் கேட்டா கொடுப்பானோ என்னவோ”என்று தனக்குதானே பேசிக்கொண்டு திரும்பினால் அங்கு தேவ் நின்றுகொண்டு இருந்தான்.

தேவ் “என்ன, உனக்கு நீயே பேசிட்டு இருக்குற”

“வசுவோ அதிர்ந்து நின்றால்”

தேவ் “உன்னதான் கேக்குறேன்”

வசு “நத்திங் சார்,என் ப்ரிண்ட்ஸ்கிட்ட வர லேட் ஆகும்,நீங்க கிளம்புங்கனு சொல்லிட்டு இருந்தேன் சார்”

தேவ் “பேசியாச்சா,இப்போ நம்ம மீட்டிங்க்கு கிளம்பனும் அதனால வரேன்களா”என்றான்.

வசு “எஸ் சார்,போகலாம்”

“நல்ல வேலை அவனுக்கு மட்டும் நான் முன்னாடி பேசுனத கேக்கல”

“தேவ்வும்,வசுவும் காரில் சென்று கொண்டு இருந்தனர்”

வசு “சார் நீங்க மீட்டிங்ல ஸ்பீச் கொடுக்குறதுக்கு இந்த  பைல் அஹ பேப்பர் இருக்கு”

தேவ் “ஓகே வாசுகி”

வசு “சார்,நீங்க *******கம்பெனியோட எம்,டி உங்கள மீட் பண்ணனும் சொன்னங்கா சார்”

தேவ் “அதை நாளைக்கு பார்த்துக்கலாம்,வேற என்ன அப்பாயின்மென்ட் இருக்கு”

வசு “நோ சார் இது மட்டும்தான்”

தேவ் “ஓகே”

*******ஹோட்டல் பார்க்கில் காரை நிறுத்திவிட்டு,இருவரும் இறங்கி மீட்டிங் ஹாலை நோக்கி தேவ்வும் வசுவும் சென்றனர்.

“மீட்டிங் தொடங்கி பேச ஆரம்பித்தனர்”

“தேவ்வும் தன் பங்குக்கு இன்றைய தொழில் உத்திகளையும், அதன் பயன்பாட்டையும் கூறினான்,அதற்கான பயன்களையும் கணினித்திரையில் காண்பித்து அனைவருக்கும் விளங்கும்படி கூறினான்”

“தேவ் உரையை முடித்ததும்,அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்”

“அனைவரின் பாராட்டையும் தேவ் சிறு தலையசைப்புடன் ஏற்றுகொண்டான்”

வசுவோ “மெய்மறந்து அவனின் உரையை பார்த்துக்கொண்டு இருந்தால்”

“மீட்டிங் முடிந்து தேவ்வும்,வசுவும் வெளியில் வந்தனர்,அப்பொழுது ஒருவன் வசுவை இடிக்க வர இது அறியாமல் வசு நடந்து வந்தால், ஆனால் தேவ் பார்த்துவிட்டான்”

“அவன் இடிக்க வசுவை நெருங்கி வர,அந்நேரம் தேவ் அவளின் இடையில் கைவைத்து அவளை வலதுபுறமாக மாற்றிவிட்டு,இடிக்க வந்தவனை ஒருமுறைப்புடன் கடந்து சென்றான்”

“வசுவோ,தேவ் இடையில் கை வைத்ததும் அதிர்ந்து அவனைநோக்கி பார்த்தால்,அவனின் முகத்தில் எதிரே வந்தவன் மீது கொன்றுவிடும் அளவிற்கு கோவம் தெரிந்தது”

“ஹோட்டலைவிட்டு வெளிய வந்ததும் அவளின் இடையில் மெதுவாக கையை எடுத்தான்”

தேவ் “சாரி வாசுகி,அவன் உன்னை இடிக்க வந்தான் அதான் நான் அப்படி பண்ணாவேண்டியதா போச்சு”

வசு “இட்ஸ் ஓகே சார்”

தேவ் “கிளம்பலாமா”

வசு “ம்ம்ம் போகலாம் சார்”

தேவ் “உங்க வீடு எந்த பக்கம் சொன்னா நானே ட்ராப் பண்ணிடுவேன் வாசுகி”

வசு “*******ஸ்ட்ரீட் சார்”

தேவ் “ஓகே”

“இருவரும் போகும் இரண்டாவது கார் பயணம் ஆனால் அங்கு வசுவோ லீவ் எப்படி கேக்குறது,என்று மனதில் நினைத்துகொண்டு வந்தால், தேவ்வோ அவளிடம் தன் காதலை புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டு இருந்தான் இருவரின் மன நிலையையும் அழகான பாடல் கலைத்தது”

“காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?

ஒ… நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது

கேட்காத குயிலில் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்

நான் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில்

கேலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்

தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

என்ன கனவு கண்டாய்

நீ வந்தாய் முத்தம் தந்தாய்

பதிலுக்கென தந்தாய்

போ போ போ சொல்ல மாட்டேன் போ

கனவில் நீ செய்த குறும்பை நேரிலே நான் செய்யவா?

கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?

பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்

சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா”

“பாடலை இருவரும் ரசித்தாலும்,பொருள் மட்டும் தேவ்வின் பார்வை வசுவைதான் காட்டிகொடுத்தது”

வசு “சார் இங்க நிறுத்துங்க”

தேவ் “உங்க வீடு வரலேயே வாசுகி”

வசு “இருக்கட்டும் சார்,நான் இங்கயே இறங்கிக்குறேன்”என்று இறங்கினால்.

தேவ் “ஓகே நாளைக்கு முக்கியமான கம்பெனியோட மீட்டிங் இருக்கு சீக்கிரம் வாங்க வாசுகி”

“வசு கொஞ்சம் தயங்கி நின்றால்”

தேவ் “என்ன வாசுகி”

வசு “சார் நாளைக்கு என் அண்ணாவுக்கு நிச்சியத்தார்த்துக்கு ட்ரெஸ் எடுக்க போகணும் ஒரு நாள் மட்டும் லீவ் வேணும் சார் பிளிஸ்”

தேவ் “ஒரு நிமிடம் யோசித்து,பின்பு ஓகே எடுத்துகோங்க”

வசு “தேங்க்ஸ் சார்”

“தேவ் சிரித்துகொண்டு விடைபெற்றாலும் அவன் மனதில் ஒரு நாள் என்றாலும் அவளின் முகத்தை காணமல் இருக்கமுடியாது இவனால்”

“அந்த பிரம்மாண்டமான ஜவுளிக்கடையின் முன் வசுவின் குடும்பம் மலரின் குடும்பத்திற்காக காத்துக்கொண்டு இருந்தது”.

வசு “அம்மா கடைக்கு இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க இப்போதான் மலர் போன் பண்ணா”

ஜானகி “அப்படியா சரி,உன் அண்ணாவுக்கு போன் பண்ணு டி,அவங்க வர்ற நேரத்துல இவன் ஹோஸ்பிட்டேல் அஹ இருப்பான்”என்று சொல்லிக்கொண்டு இருக்குபொழுது இலக்கியன் வந்தான்.

இலக்கியன் “அம்மா நான் வந்துட்டேன்,அத்தை மாமா வந்துட்டாங்களா” என்று கேட்டான்.

வசு “மலர் அஹ விட்டுட்ட”

இலக்கியன் “அதெல்லாம் அவ வருவான்னு ஆல்ரெடி எனக்கு தெரியும் வசு”

வசு “அப்புறம் எதுக்கு இந்த நல்லவன் வேஷம்”

ஜானகி “வசு அண்ணாவ இப்படி கேலி செய்யகூடாது”என்று சொல்லும்போது மலர் குடும்பம் வந்தது.

கிருஷ்ணன் “வாங்க மச்சான்,வாமா கற்பகம்,மலர் வாமா,எப்படி இருக்கேங்க”என்று விசாரித்தார்.

தங்கம் “எல்லோரும் நல்லா இருக்கோம் மச்சான்,நீங்க”

கிருஷ்ணன் “இங்கயும் எல்லோரும் நல்லா இருக்கோம் மச்சான்”

ஜானகி “வாங்க அண்ணா,அண்ணி,மலர் திரும்பு பூ வைக்குறேன்”

கற்பகம் “நல்லா இருக்கோம் அண்ணி”

இலக்கியன் ,வசு “வாங்க மாமா ,அத்தை,”

தங்கம்,கற்பகம் “வரேன் மாப்பிள்ளை,வசுமா எப்படி இருக்க”

வசு “நல்லா இருக்கேன் அத்தை,மலர் வா நாமா முனாடி போகாலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

“பட்டு எடுக்கும் தளத்திற்கு அனைவரும் சென்றனர்”

ஜானகி “மலர் உனக்கு பிடிச்ச சேலை அஹ எடும்மா”

மலர் “சரிங்க அத்தை”

வசு “மலர் உனக்கு இந்த பட்டு சேலை நல்ல இருக்கும்”

மலர் “இல்லை வசு இது கொஞ்சம் டார்க் அஹ இருக்கு எனக்கு நல்லா இருக்காது”

ஜானகி “வசு மலரே எடுக்கட்டும்,நீ உனக்கு சேலை எடு”

வசு “சரிமா”

கற்பகம் “அண்ணி மாப்பிள்ளைக்கு என்னமாதிரி எடுக்கணும், வாங்க நாமா அங்க போய் பார்க்கலாம்”என்று பெரியவர்கள் இலக்கியனுக்கு துணி எடுக்க சென்றனர்.

இலக்கியன் “அந்த சேலை எடுங்க”என்று மலரின் அருகே நின்றான்.

வசு “அண்ணா,நீயா இது”

இலக்கியன் “என் வருங்கால மனைவிக்கு எடுத்துக்கொடுக்குறேன் உனக்கென்ன”

“மலர்,இலக்கியன் எடுத்துக்கொடுத்த சேலையைதான் உடுத்துவேன் என்று அவள் கூறி இருந்தால்”

“இலக்கியன் ஐந்து சேலைகள் எடுத்து அதில் மூன்றை மலரிடம் காட்டினான்”

இலக்கியன் “இந்த மூணுல சேலையில,இது நல்லா இருக்கு,உனக்கு”என்று அவன் கேட்டான்.

மலர் “உங்களுக்கு பிடிச்சுயிருக்குல அப்போ நான் இதுவே எடுத்துக்கிறேங்க”என்று அவன் செலக்ட் செய்ததை எடுத்தால்.

“வசு டார்க் மை ப்ளுவில் பட்டு சேலை எடுத்து தன்மீது வைத்து கண்ணாடியில் பார்க்கும் பொழுது அவளின் பின்னால் தேவ் நின்றுயிருந்தான்”

தேவ் “உனக்கு இந்த சேலை நல்லா இருக்கு”

வசு திரும்பி பார்க்கும்பொழுது அங்கு தேவ் இல்லை.

வசு “இங்கதானா இருந்தான்”என்று தேடிக்கொண்டு இருந்தாள்.

ஜானகி “வசு உனக்கு இதுதான் பிடிச்சுஇருக்கா”என்று அவள் அன்னை வந்தார்

வசு “ஆமாம் மா,எப்படி இருக்கு”

ஜானகி “ரொம்ப நல்லா இருக்கு டி ,சரி வா”என்று அழைத்துகொண்டு சென்றார்,ஆனால் வசு திரும்பி தேவ்வை தேடிக்கொண்டே வந்தால்.

மலர் “இந்த சேலை நல்ல இருக்குல வசு அவங்கதான் எடுத்தாங்க”என்று இலக்கியன் எடுத்ததை வசுவிடம் காண்பித்தால்.

வசு “சூப்பர் டி உனக்கு இதுதான் நல்லா இருக்கும்”

“அண்ணா உன் செலக்சன் சூப்பர்”

இலக்கியன் “தேங்க்ஸ் வசு,உனக்கும் ஒரு சேலை எடுத்திருக்கேன் பாரு நல்லா இருக்கா”என்று அவன் வசுவிற்கு எடுத்ததை காட்டினான்.

வசு “இதுவும் நல்ல இருக்கு அண்ணா”

இலக்கியன் “சரி நான் எடுத்துகொடுத்த சேலைய அஹ கல்யாணத்துக்கு முதல் நாள் காட்டிக்கோ வசு ஓகே “

வசு “சரிண்ணா”

இப்படியாக அனைவருக்கும் ட்ரெஸ் எடுத்துமுடித்தனர்.

“தேவ் ஆபிஸ் வந்ததும் முதலில் தேடியது வசுவைதான், ஆனால் அவள் அங்கு இல்லை,அவளை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான்,அருண் வந்ததை அறியாமல்”

அருண் “சார்”என்று அழைத்தான்,பதில் இல்லை.

“சார்,தேவ் சார்,என்று தொடர்ந்து அழைத்தான்.

“தேவ்வோ, வசுவின் நினைவில் இருந்தான் என்பதை இவன் அறியவில்லை”

அருண் தேவ்வை தொட்டு அழைத்தான்.

தேவ் “சொல்லு…..சொல்லுங்க அருண் என்ன விஷயம்”

அருண் “சார் ஒரே யோசனையா இருக்கேங்க”

தேவ் “அதெல்லாம் ஒன்னுமில்லை அருண்,என்ன விஷயம் சொல்லுங்க”

அருண் “இன்னைக்கு *****கம்பெனியோட மீட்டிங் இருக்கு,டைம் ஆச்சு அதான்”

தேவ் “ஓ மறந்துட்டேன் அருண் வாங்க கிளம்பலாம்”

ஜானகி “ராதா அண்ணி”என்று அழைத்துக்கொண்டே நந்தன் இல்லத்திற்கு மகனின் நிச்சியதார்த்த விழாவிற்கு அழைக்க வந்திருந்தனர்.

நந்தன் “அடடே வாடா கிருஷ்ணா,வாம்மா ஜானகி”

கிருஷ்ணன் “வரேன் நந்து எப்படி இருக்க”

ஜானகி “வரோம் அண்ணா,அண்ணி எங்க”

நந்தன் “இதோ வந்துடுவா”

ராதா “வா ஜானகி,வாங்க அண்ணா,எப்படி இருக்கேங்க”

கிருஷ்ணன் “எல்லோரும் நலம்,நீ எப்படி இருக்க ராதா”

ராதா “நல்லா இருக்கேன் அண்ணா,வசு எப்படி இருக்கா,இலக்கியன்”என்று விசாரித்தார்.

ஜானகி “அவங்க நல்லா இருக்காங்க அண்ணி”என்றபடி ஒரு தட்டில் பூ,பழம் வெற்றிலை,பாக்கு,வைத்து இலக்கியன் நிச்சயதார்த்தத்திற்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்று என்று கிருஷ்ணன்,ஜானகி,நந்தன் ராதாவை அழைத்தனர்.

ஜானகி “அண்ணி முக்கியமா தேவ் தம்பியையும் அழைச்சுட்டுவரனும்” என்றார்.

ராதா “கண்டிப்பா ஜானகி”என்றார்.

நந்தன் “கிருஷ்ணா உன்கிட்ட ஒருவிசயம் கேக்கணும்”

கிருஷ்ணன் “சொல்லு நந்து”

“நந்தன்,ராதாவின் விருபத்தை கூறி,ஜானகியிடமும்,கிருஷ்ணனிடமும் சம்மதம் கேட்டார்”

ஜானகி “என்ன அண்ணி இதை எங்ககிட்ட சொல்ல என்ன தயக்கம், கண்ணடிப்பா இதுல எங்களுக்கு சம்மதம் அண்ணி,அண்ணா”

கிருஷ்ணன் “நந்து எங்களுக்கு பரிபூரண சம்மதம் போதுமா”

நந்தன்,ராதா இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

யசோதா “என்னங்க இன்னும் கிளம்பலையா அங்க ஜானகி நமக்காக காத்துட்டு இருக்கா”.

ராமன் “நாமா அவசியம் போகனுமா யோசோ”

யசோதா “இது என்ன கேள்வி,இலக்கியன் நமக்கு பையன் அதை மறந்துட்டேன்களா,என் பொண்ணா பார்க்காமா நான் ஒரு நிமிஷம் இருந்ததில்லை,நாமா ரெண்டு வருஷமா பிரிஞ்சு இருந்திருகோம் இனிமே என்னால இருக்க முடியாது வாங்க கிளம்பலாம்”

ராமன் “சரி யசோ கிளம்பலாம்”ஆனால் அவர் மனதில் ஒருவித சஞ்சலம்.

தேவ் “வாசுகி இந்த பைலை செக் பண்ணிட்டேன்,ஆனா நாமா டெண்டர் கொட்டேஷன் பைல் எங்க”

வசு “அருண் சார்கிட்ட இருக்கு”

தேவ் “ஓகே,அப்புறம் இன்டிரியல் டிசைன் செலக்ட் பண்ணனும் நீங்க,செந்தில் அஹ வரசொல்லுங்க”

வசு “ஓகே சார்”

வசு “செந்தில் அண்ணா உங்கள பாஸ் வரசொன்னங்க”

“சரி வாசுகி”

மலர் “கண்ணா இந்த ப்ரொஜெக்ட் பைல் அஹ ஒரு மிஸ்டேக் இருக்கு நீ அருண் சார்கிட்ட சொல்லிடு”

கண்ணன் “எனக்கு வேற வேலை இல்லை,நீ போய் கொடு மலர்”

மலர் “நீ ஸ்வாதியதான சைட் அடிக்குற இரு அவகிட்ட சொல்லுறேன்” என்று அவளை அழைக்க போனால்.

கண்ணன் “ஹே மலர் அப்படி மட்டும் செய்யாத,இப்போ என்ன சார்கிட்ட மிஸ்டேக் சொல்லி சரிபண்ணி வாங்கிட்டு வரேன் போதுமா”

மலர் “அந்த பயம்”

வசு “என்ன டி கண்ணனா வம்புசெய்யிற” என்று கேட்டுகொண்டே வந்தால்

மலர் “எப்போயும் போலதான் வசு”என்று தோழிகள் இருவரும் பேசிக்கொண்டே உணவு உண்ண சென்றனர்.

கண்ணன் “அடிபாவிங்களா என்னை விட்டு சாப்பிடுறேன்களே”

மலர் “டேய் இப்போதான் டிபன் பாக்ஸா எடுத்துட்டுவந்தா வசு”

வசு “எருமை கண்ணை தொறந்து பாரு நாங்க இன்னும் சாப்பிடல,வா சாப்பிடலாம்”

கண்ணன் “வசு நீ எப்படியும் எனக்கு பிடிச்சதை கொண்டு வந்திருப்ப சோ உன் பாக்ஸ் எனக்கு,என் பாக்ஸ் உனக்கு இந்தா”

வசு “கொடு என்ன சாப்பாடு கண்ணா”என்று கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

“வசு சாப்பிட்டுகொண்டு இருக்கும் பொழுது அவளுக்கு நெஞ்சில் சுரீர் என்று வழி வந்தது,ஆனால் அவள் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால்”

மலர் “வசு உனக்கு ஒன்னு தெரியுமா”என்று பேசும்போது வசு ஒருமாதிரி இருந்ததை கவனித்தால்.

மலர் “வசு என்னாச்சு ஏன் இப்படி இருக்க”

வசு “இல்லை டி நெஞ்சுல வலிக்கிற மாதிரி இருக்கு”

கண்ணன் “சாப்பாடு வேணாம் வசு  ஜூஸ் வாங்கிட்டு வரேன்’என்று எழுந்து சென்றான்.

“மறுபடியும் வசுவிற்கு வலி அதிகமாக வந்தது,இந்தமுறை அவள் மூக்கிலும் ரத்தம் வர ஆரம்பித்தது”

மலர் “ஹே வசு ரத்தம் டி,என்னாச்சு  உனக்கு,கண்ணா இங்க வா டா”என்று கண்ணனை அழைத்தால்.

கண்ணன் “வசு இங்க பாரு”என்று கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டு இருந்தான்.ஆனால் அவளோ மூக்கில் இருந்து ரத்தத்தை கண்டதும் மயங்கினால்.

கண்ணன் “மலர் நான் சார் அஹ கூப்பிட்டுவரேன் நீ வசுவ பார்த்துக்கோ”

தேவ் “செந்தில் டிசைன் நல்லா இருக்கு இதையே” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கண்ணன் கதவை திறந்துகொண்டு வந்தான்.

“சார் வசுக்கு அங்க…மூக்குல இருந்து ரத்தம்,அவ மயங்கி’என்று பதட்டத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினான்”

தேவ் “என்ன சொல்லுறேங்க கண்ணன்,சுகிக்கு என்னாச்சு”என்று அவனும் கண்ணனுடன் சென்று பார்த்தான்.

“அங்கு வசு மயங்கிய நிலையில் இருந்தால்”

தேவ் “கண்ணா நான் சுகிய தூக்கிட்டு வரேன் நீ என் கார் அஹ ஸ்டார்ட் பண்ணி எடுத்து வா,மலர் நீயும் வா”என்று உடனடியாக வசுவை தன் கையில் எடுத்துகொண்டு ஓடினான்.

“காரில் பின்பக்கம் வசுவை படுக்கவைத்து அருகில் தேவ் அமர்ந்துகொண்டான்”

“கண்ணன் காரை ஓட்ட,மலர் அழுதுகொண்டே வசுவை பார்த்தால்”

“என்கிட்ட இருந்து என் சுகிய பிரிச்சுடாத அவளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது,என்று கடவுளை வேண்டினான்”

“ஹோஸ்பிட்டேல் வந்ததும் தேவ் வசுவை கையில் எடுத்துகொண்டு உள்ளே சென்றான்”

டாக்டர் “என்னாச்சு இவங்களுக்கு”என்று வசுவை பரிசோதித்தனர்.

மலர் “சாப்பிடுபோது நெஞ்சு வலுக்குதுன்னு சொன்னா,அப்புறம் மூக்குல இருந்து ரத்தம் வந்தது, டாக்டர்”.

டாக்டர் “ஓ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”என்று வசுவை உள்ளே அழைத்து சென்றனர்.

“மலரும்,கண்ணனும்,வசுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிகொண்டனர்.

“தேவ்வோ என் சுக்கிக்கு எதுவும் ஆகாகூடாது என்று மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தான்”

வசுவை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்தார்,

தேவ் “என்னாச்சு டாக்டர் அவளுக்கு,இப்போ எப்படி இருக்கா”

“அவங்களுக்கு இப்போ பரவாயில்லை,ஆனா மறுபடியும் இதே மாதிரி வராம பார்த்துகோங்க,நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேணும்”

தேவ் “என் வருங்கால மனைவி டாக்டர்”என்று கூறினான்.

“இதை கேட்ட மலரும்,கண்ணனும் விதிர்த்து நின்றனர்”

டாக்டர் “ஓ ஓகே மிஸ்டர்,அவங்கள பத்திரமா பார்த்துகோங்க”.

தேவ் “ஓகே டாக்டர்”

“வெற்றி எனக்கென்னமோ அவன்கிட்ட மோதுனா நமக்குதான் சேதாரம்முனு தோணுது”

“என்ன சொல்லுற”

“ஆமாம் அன்னைக்கு அந்த பொண்ணா நான் இடிக்க போனே ஆனா அவன் “என்று அன்று நடந்தை கூறினான்.

“அவன்,அவள எப்படி பாதுகாப்பா வச்சு இருந்தாலும் அவள என் கையாலதான் கொல்லபோறேன்”

“அந்த  பொண்ணுமேல உங்களுக்கு அப்படி என்ன கோவம் அண்ணா”என்று கேட்டுகொண்டே வந்தான் கதிர்.

வெற்றி “நீ எதுக்கு இங்க வந்த,உன்னை நான் வர சொல்லலையே”

கதிர் “நீ வெளிய போ ,நானும் என் அண்ணனும் தனியா பேசணும்”என்று வெற்றியின் தோழனை பார்த்து வெளியேற சொன்னான்.

“என்னை சொன்னேங்க நான் ஏன் இங்க வந்தேனா அது போக போக உங்களுக்கு புரியும்”கதிர்

வெற்றி “வேணாம் கதிர் அந்த பொண்ணு விசயத்தில நீ தலையிடாத”

“அந்த பொண்ணுமேல சின்ன அடி விழுந்தாலும் நான் சும்மா இருக்கமாட்டேன் அண்ணா”

“பார்க்கலாம் நீ எப்படி அவள காப்பாத்துறேன்னு”வெற்றி ஏளனமாக கூறினான்.

“பார்க்கதான போறேங்க,என் உயிர காப்பத்துன அவளை உங்களால நெருங்க முடியாது அண்ணா”என்று தீர்க்கமாக சொல்லிச்சென்றான்”கதிர்.

“எத்தனை பேர் அவளுக்கு பாதுகாப்பா இருந்தாலும்,அவள கொல்லாம விடமாட்டேன்”என்று மாலையிட்ட புகைப்படத்தில் இருந்த தன் தம்பியின் மேல் சத்தியம் செய்தான் வெற்றி.

 

                                       உன்நினைவுகள் தொடரும்………..

 

 

 

Advertisement