Advertisement

                  நினைவுகள் 7

 

“அந்த பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க போய் பார்க்காலாம்”என்று செவிலி அங்கு இருக்கும் தேவ் மற்றும் மலர் ,கண்ணனிடம் கூறினார்.

“அவர் சொல்லி முடித்ததும் தேவ் முதல் ஆளாய் உள்ளே நுழைந்தான்”.

மலர் “வா கண்ணா போய் பார்க்காலாம்”என்று அவனை அழைத்தால்.

வேணாம் மலர் சார் பார்க்கட்டும் நாம கிருஷ்ணாப்பாக்கு போன் பண்ணுலாம் என்றான்.

உள்ளே நுழைந்த தேவ் வசுவின் அருகில் சென்று பார்த்து “எப்படி இருக்க சுகி”

வசு “இப்போ பரவாயில்லை பாஸ்……’என்ன சொல்லி கூப்பிடேங்க என்னை” என்று கேட்டால்.

ஒரு நிமிடம் அதிர்ந்த தேவ் “இல்லை எப்படி இருக்கேங்க வாசுகி கேட்டேன்” ஏன் உங்களுக்கு என்னை கேட்டுச்சு.

“இல்லை சுகினு சொன்னமாதிரி இருந்துச்சு அதான்..’எங்க மலர் கண்ணன்,”

தேவ் “அவங்க வெளிய இருக்காங்க இரு வர சொல்லுறேன்”

“கிருஷ்ணாப்பா ******* ஹோஸ்பிடேல் வாங்க…நீங்க வாங்க முதல,அப்படியே இல அண்ணாவையும் கூப்பிட்டு வாங்க”

மலர் “என்ன சொன்னங்க மாமா வரங்களா”

“ஆமம் ,அண்ணாவையும் வர சொல்லிருக்கேன்’என்றான்.

தேவ் “கண்ணா,மலர் உங்களை வசு வர சொல்லுறா,என்று அவர்களிடம் கூறினான்.

மலர் உள்ளே போக “ஒரு நிமிஷம் மலர்” என்று நிறுத்தினான்.

மலர் தேவ்வை பார்த்து “நாங்க வாசுகிட்ட சொல்லமாட்டோம் சார்” என்றால் அவன் சொல்வதற்குள்.

தேவ் சிறு புன்னகையுடன் “தேங்க்ஸ்”

“எப்படி இருக்க டி”வசுவின் கையை பிடித்துகொண்டு மலர் கேட்டால்.

வசு உடம்புக்கு இப்போ பரவாயில்லைல”என்று கண்ணன் வசுவின் மறு கையை பிடித்து கேட்டான்.

“ஹ்ம்ம் இப்போ ஓகே,பயந்துடேங்களா”

“ரொம்ப டி,அதுவும் உன் மூக்குல இருந்து ரத்தம் வரத பார்த்து எனக்கே பயம் வசு”என்று அவள் மயங்கியதி இருந்து தேவ் ஹோஸ்பிடேல் சேர்த்தது வரை கூறி முடித்தாள்.

வசு, மலர் சொல்வதை எல்லாம் கேட்டுகொண்டால்.

“இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது தேவ் உள்ளே வந்தான்”

வசு தேவ்வை பார்த்து “தேங்க்ஸ் சார்”

தேவ் முழித்தான் “எதுக்கு”

“மலர் எல்லாம் சொன்னா சார் அதுக்குதான்”

தேவ் “ஹ்ம்ம் ஓகே”

“வசுமா என்னாச்சு உனக்கு”என்று கிருஷ்ணனும்,இலக்கியனும் உள்ளே வந்தனர்”

“அப்பா எனக்கு ஒன்னும் இல்லை,மயக்கம் தான்,நீங்க டென்ஷன் ஆகாதிங்க” என்றால்.

இலா “மாத்திரை போட்டாய வசு”

“போட்டேன் அண்ணா”

கிருஷ்ணன் “உங்க அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சது ரொம்ப வருத்தபடுவா வசுமா”

மலர் “மாமா வசுக்கு ஒன்னும் இல்லை,நீங்க ஏன் வருத்தப்படுறேங்க”

“நீங்கதான் வசுவ இங்க சேர்த்ததா”என்று மலர் ,கண்ணனிடம் கேட்டார்”.

கண்ணன் “ஆமாம் கிருஷ்ணாப்பா,ஆனா தேவ் சார் இல்லாம நானும்,மலரும் ஒன்னும் செய்து இருக்க முடியாது”என்று அங்கு தேவ் நிற்கும் இடத்தை காட்டினான்.

“நந்தன் பையன் தேவ் தானே”என்று கிருஷ்ணன் அவனை பார்த்து கேட்டார்.

“ஆமாம் சார்”

“நன்றி தம்பி,”

“சார் நீங்க என்கிட்டே போய் நன்றி சொல்லிக்கிட்டு”

தேங்க்ஸ் தேவ்,வசுக்கு ஒன்னுனா நாங்க கவலைப்படுறதைவிட எங்க யசோ அம்மாவும்,ராம் அப்பாவும் ரொம்ப கவலைபடுவாங்க.ஏன்னா வசு அவங்களுக்கு செல்ல பொண்ணு.

விடுங்க இலா,எல்லோரும் தேங்க்ஸ் சொல்லி அந்நியப்படுத்தாதேங்க.

நான் போய் டாக்டரா பார்த்துட்டு வசுவ கூட்டிட்டு போகலாமான்னு கேட்டு வரேன் நீங்க வசுவ பார்த்துகோங்க இலா.

ஹ்ம்ம் சரி தேவ்….நானும் வரேன் தேவ்..

வேணாம் இலா நானே போய் பார்த்துட்டுவரேன்..

மருத்துவரை பார்த்து “டாக்டர் வசுவ கூட்டி போகலாமா”

அவங்க ஹெல்த் இப்போ கொஞ்சம் சரி இல்லை பத்திரமா பார்த்துகோங்க அப்புறம் என்று மருத்துவர் வசுவின் உடம்பில் உள்ள பிரச்சனையை கூறினார்.

இதை சரி பண்ணமுடியாத டாக்டர்.

முடியும் அவங்க உணர்ச்சிவசப்படமா,எந்த ஒரு அதிர்ச்சியான விசயமும் கேட்காம,பார்க்காம இருந்தா அவங்களுக்கு இதுமாதிரி ஏற்படாது.மீறி அவங்களுக்கு இதே மாதிரி ஏற்ப்பட்டா காப்பத்துறது ரொம்ப கஷ்டம் தேவ்.

ஓகே டாக்டர் நான் பார்த்துகிறேன்.

வசுவின் ரிப்போர்ட் வாங்கிகொண்டு தேவ் கிருஷ்ணனை நோக்கி வந்தான்.

“என்ன தம்பி கிளபம்பலாம”

“இந்தாங்க வசுவோட ரிப்போர்ட் வசுவ கொஞ்சம் பத்திரமா பார்த்துகோங்க அங்கிள்,என்று டாக்டர் கூறியதை பாதி பொய்யும்,பாதி உண்மையும் கூறினான்.

தேவ் வசுவை பார்த்து”இனி நீ ஆபிஸ் வரவேண்டாம்”வீட்டுல ரெஸ்ட் எடு,உடம்ப பார்த்துக்கோ நான் போயிட்டுவரேன்”,எல்லோரிடம் சொல்லிக்கொண்டு சென்றான்.

நான் சொல்லுறதை யாரு கேக்குறேங்க ஆப்பிஸ் போகவேண்டாம் சொன்னே கேட்டேங்களா இப்போ இவளுக்கு மயக்கம் வந்திருக்கு.. யசோ அக்காவுக்கு மட்டும் தெரிஞ்சது நம்மளாதான் சொல்லுவாங்க என் பொண்ணை உன்னை நம்பிவிட்டு போனா இதன் நீ பார்த்துக்கிற லட்சணமான்னு என்னை பார்த்துகேப்பாங்க,அனைவரின் காது ஜவ்வு கிளியும்வரை பேசினார் ஜானகி.

“அம்மா பேசி முடிச்சுடேங்களா,இப்போ நான் பேசலாமா ஜஸ்ட் மயக்கம்தான்மா ஏன் பயப்படுறேங்க”என்று வசு,ஜானகியை சமாதானம் செய்தால்.

“வசு இனி வேலைக்கு போகவேணாம் சரியா” என்றார் ஜானகி.

“நீ சொல்லுறதுக்கு முன்னாடி என் பாஸ் சொல்லிட்டாங்கமா”

இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு,போடி உன் ரூம்ல ரெஸ்ட் எடு உனக்கு சாப்பாடு எடுத்துட்டுவரேன்.

என்னங்க சொல்ல மறந்துட்டேன் யசோ அக்காவும்,மாமாவும் நாளைக்கு வராங்க நீங்களும்,இலாவும் போய் கூப்பிட்டு வாங்க.

சரிமா நான் பார்த்துகிறேன்.இலா ரெண்டு நாள் லீவ் சொல்லிடு சரியா….

சரிங்கப்பா,நான் ஹோஸ்பிடேல் கிளம்புறேன்.

தேவ் மனம் முழுவதும் வசுவின் உடல்நிலை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தது.மருத்துவர் சொன்னதையும் தொடர்ந்து மனதில் நினைத்துகொண்டான், அவனும் இறுதியாக முடிவெடுத்தான்.

“அம்மா உங்ககிட்ட பேசணும்,என்று ராதாவிடம் இன்று ஆபிசில் நடந்ததை அனைத்தும் கூறி முடித்து,ராதாவின் முகத்தை பார்த்து அவளை காதலிப்பதையும் கூறினான்,ஆனால் ராதா எதுவும் சொல்லாமல் பூஜையறையில் இருந்து ஒரு கவருடன் வந்தார்.

ராஜா இந்த பொண்ணாதான் உனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருகோம் நானும் உன் அப்பாவும்,கண்டிப்பா உனக்கு இந்த பொண்ணா பிடிக்கும்,என்று அவனின் கையில் அந்த கவரை கொடுத்துவிட்டு சென்றார்.

தேவ்வோ அதிர்ந்து நின்று “அந்த கவரில் உள்ள போட்டாவை பார்த்து இன்னும் அதிர்ச்சியடைந்தான்”.

வசுமா….வசுமா என்று அன்பாக மெல்லிய குரலில் வசுவை எழுப்பினார்,யசோ.

ம்மா மணி ஏழு தான கொஞ்சம் நேரம் தூங்குறேன்,ஜானகியின் குரலுக்கும்,இப்போ பேசிய குரலுக்கும் வித்தியாசம் தெரிந்தது,உடனே வசு எழுந்து கண்களை முழித்து பார்த்தால்.

யசோமா நீங்களா….என்னால நம்ப முடியல,எப்படி இருக்கேங்க,ராம் அப்பாவ எங்க,நீங்க ரெண்டு பேரும் என்னைவிட்டு ஊருக்கு போனேங்களே பேசாதேங்க,கோபத்துடன் திரும்பிகொண்டால்.

இனி உன் யசோமா எங்கயும் போகமாட்டேன்,இது என்மேல சத்தியம் வசுமா,இப்போ உன் அம்மாகிட்ட பேசமாட்டயா.

அய்யோ யசோமா….நீங்க என்கூட இருந்தா போதும்.வசுவும்,யசோவும் பிரிந்திருந்த தாயும்சேயும் இன்று சேர்ந்தனர்.

‘ஆயா நல்லா இருக்கியா,என்றபடி வந்தார் ராமன்.

‘ராம் அப்பா எப்படி இருக்கேங்க,நீங்களும் என்னை மறந்துடேங்களா, “உன்னை எப்படிமா மறக்கமுடியும்….அப்பாவுக்கு வேலை அதிகமா இருந்துச்சு அதான்…இனிமே அப்பாவும் அம்மாவும் உன்கூடத்தான் இருப்போம் இல்லை யசோ”

“ஆமாங்க இனி வசுகூடத்தான் இருப்போம்”.

அன்று முழுவதும் வசு யசோவுடனே இருந்தால், யசோவும் வசுவுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது,ஜூஸ் கொடுப்பது என்று பார்த்து பார்த்து செய்தார்.

இதை பார்த்த ஜானகி,இன்னும் இவ சின்ன பொண்ணு இல்லை அக்கா அவளுக்கு ஊட்டிவிட்டு இருக்கேங்க,வசு நீ சாப்பிட மாட்டாய அக்கா சாப்பிட வேணாமா,என்றார்.

ஜானகி “என் பொண்ணுக்கு நான் ஊட்டுறேன்,உனக்கென்ன நீ சாப்பிடு வசுமா,இன்னும் ஒரு தோசை சாப்பிடு அப்போதான் தெம்பா இருக்கும் வசுமா.

“யசோமா இங்க நானும் இருக்கேன் என்னை மறந்துடேங்க” என்று இலா வந்தான்.

“உன்னை மறப்பேனா இலா வா வந்து நீயும் ஒரு வாய் வாங்கிக்கோ”

கிருஷ்ணன் “அண்ணி,அண்ணா எங்க”

“அவங்க மேல இருக்காங்க தம்பி,நான் கூப்பிடுறேன்.”

“வேணாம் அண்ணி நானே போய் பார்த்துகிறேன்”

ராமன் யோசைனையுடன் இருந்தார்,அப்பொழுது அண்ணா ஏன்  சாப்பிட வரல வாங்க,என்றபடி வந்தார்.

“நீ சாப்பிட்டயா கிருஷ்ணா”

“உங்களுக்கா வெயிட் பண்ணுறேன் அண்ணா,வாங்க போகலாம்,

அண்ணா உங்ககிட்டயும்,அண்ணிகிட்டயும் ஒரு விஷயத்தை கேட்கமா முடிவு பண்ணிட்டோம்,என்று நந்தன் வீட்டில் நடந்தை சொன்னார்.

யசோ “நல்ல குடும்பமா தம்பி,மாப்பிள்ளை எப்படி,கேள்விமேல் கேள்வியாக கேட்டார் யசோதா.

ராமன் “அப்புறமா என்ன கிருஷ்ணா எனக்கும் ரொம்ப சந்தோசம்”.

ஜானகி “மாமா ,அக்கா ரெண்டு பேரோட நிச்சயதார்த்ததையும் நீங்க முன்னாடி நின்னு நடத்தி கொடுக்கணும்,இது நம்ம பிள்ளைகளோட கல்யாணம்”

யசோ “கண்டிப்பா ஜானகி என் பொண்ணுக்கும்,பையனுக்கும் சிறப்பா செய்யணும்”.

அந்த மண்டபமே மிகவும் பரபரப்பாய் இருந்தது,ஒரு பக்கம் மணமகன் வீட்டார் வந்திருந்த உறவுகளை அன்போடு அழைத்துக்கொண்டு இருந்தார்,மறுபக்கம் மணமகள் வீட்டார் அதற்கு ஈடாய் இருந்தார்கள்.

“ஜானகி… ஐயர் தாம்பூலம் கேக்குறாங்க,எங்க இருக்கு”.

அக்கா நீங்க வசுகூட இருங்க,நான் போய் எடுத்துட்டுவரேன், வசுக்கும்,மலர்க்கும், அலங்காரம் முடிஞ்சதா அக்கா.

இல்லை ஜானகி அவ அமைதியா இருக்கா,ஒண்ணும் பேசவே இல்லை.

“நீங்க சொன்னா கேட்ப்பா அக்கா”

மலர் “ஏன் வசு அமைதியா இருக்க”

“உனக்கென்ன என் அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கபோற,ஆனா நான் தெரியாத பையன கல்யாணம் பண்ணிக்கணும்”.

“இன்னும் கொஞ்சம் நேரத்துல இவங்களா மாப்பிள்ளைனு நீ அலறல அப்போ பார்த்துகிறேன் உன்னை”என்று மலர் மனதுக்குள் சொல்லிகொண்டாள்.

வசுமா இன்னும் ரெடியாகமா என்ன பண்ணுற,இங்க பாரு மலர்கூட அழகா இருக்கா நீயும் அப்படி இருந்தாதானே இந்த அம்மாவுக்கு சந்தோஷமா இருக்கும்,வா ரெடி பண்ணிவிடுறேன்.

யசோ ஒரு வழியாக வசுவை அலங்கரித்து முடித்தார்.

மண்டப மேடையில் ஒருபக்கம் மணமகன் சொந்தம், பந்தங்களும்,அவர்களுக்கு எதிர்பக்கம் மணமகள் சொந்தம் பந்தங்களும் அமர்ந்திருந்தனர்.

ராமன் மனது மிகவும் சஞ்சலத்துடன் இருந்தது.அப்போது கிருஷ்ணன்,

‘அண்ணா இவங்கதான் வசுவ பொண்ணு கேட்டவங்க,என்று நந்தன், ராதவை அறிமுகபடுத்தினார்.

ராமனோ ‘நந்தனின் முகத்தையும்,ராதாவின் முகத்தையும் எங்கோ பார்த்தது போல் ஒரு உணர்வு,ஒரு நொடிதான்.‘அண்ணா இந்த பையன்தான் நம்ம வசுவ கட்டிகபோற மாப்பிள்ளை,என்று தேவ்வை அறிமுபடுதினார்.

ராமன் மொத்தமாக அதிர்ந்தார்…மனதில் “அவன் இறந்துட்டதா சொன்னாங்களே அப்போ இவன் யாரு”

தேவ் “வணக்கம் அங்கிள் எப்படி இருக்கேங்க”

நந்தன் “உங்களை எங்கோயே பார்த்த மாதிரி இருக்கு,ஆனா எங்கனு தெரியல,என்ன ராதா”என்று மனைவிடம் கேட்டார்.

“ஆமாங்க நானும் எங்கோயோ பார்த்தமாதிரி இருக்கு”

ஜானகி “வாங்க அண்ணி,அண்ணா,தம்பி எப்படி இருக்கேங்க,நேரம் ஆச்சு அண்ணி நிச்சிய ஓலை படிக்கணும்,தம்பிய ரெடியாகி வர சொல்லுங்க , என்றார்.

“கண்ணா இங்க வா,தம்பிய இலா இருக்குற ரூம்க்கு கூப்பிட்டு போ,அப்பிடியே இலாவையும்,தம்பியும் கூட்டிட்டு வா”

“வாங்க மாமா.”

ராமன் குழப்பத்துடன் தேவ்வை பற்றியும்,நந்தனின் குடும்பம் பற்றியும் யோசித்துக்கொண்டு இருந்தார்.

ஐயர் “கிருஷ்ணன்,தங்கம்,உங்க நிச்சிய ஓலைய படிக்கலாமா”.

இருவரும் “படிங்க ஐயரே”

“பாலகிருஷ்ணன்,ருக்குமணி பேரன்,ராமகிருஷ்ணன்,ஜானகி,இவர்கள் குமரனுமாகிய செல்வன் “இலக்கியன்”க்கும்,வேலாயுதம்,தெய்வானை பேத்தி தங்கம்,கற்பகம் குமாரத்தியுமான செல்வி “மலர்விழி”க்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன்,ஊர் பெரியோர்களின் சம்மதத்துடன், இன்று நிச்சயமும்,ஆவணி 27 ஆம் தேதி திருமணமும் நடைபெறும்”.

கிருஷ்ணன் இப்போ நீங்க தாம்புலத்தை எடுத்து,என் வீட்டுக்கு உங்க பொண்ணா மருமகளா கொடுக்க சம்மதமா,கேளுங்க’நீங்க கொடுக்க சம்மதம் சொலுங்க தங்கம்”என்று ஐயர் கூறினார்.

அதே போல் கிருஷ்ணன் சொல்லி,தங்கத்திடம் தாம்பூலத்தை கொடுத்தார்.

தங்கம் “எனக்கு உங்க வீட்டுக்கு என் பொண்ணா கொடுக்க சம்மதம்” என்று சொல்லி வாங்கிகொண்டார்.

இப்போ தங்கம் நீங்க அதே மாதிரி சொல்லுங்க,என்று தங்கமும்,”என் வீட்டுக்கு உங்க பையன மாப்பிள்ளையா ஏற்க சம்மதம்.”

ஐயர் “பொண்ணையும்,பையனையும் அழைச்சுட்டு வாங்க”

இலக்கியனிடம் ஜானகி மோதிரத்தை கொடுத்து மலர்க்கு போட்டுவிட சொன்னார்,மலரிடம் கற்பகம் மோதிரத்தை கொடுத்தார்.

இலக்கியன் மலர்விழியின் கையை பிடித்து மெதுவாக போட்டுவிட்டான், மலரும் அவன் கையை பிடித்து மோதிரம் போட்டுவிட்டால்.

ஐயர் “ கிருஷ்ணன் அடுத்த நிச்சிய ஓலையை படிக்கலாமா,

ஒரு நிமிஷம் ஐயரே என் பொண்ணுக்கு அம்மா ,அப்பாவா என் அண்ணாவும் அண்ணியும் நிச்சிய தாம்பூலம் மாத்துவாங்க,என்று ராமனையும் ,யசோவையும் முன்னிறுத்தினார்.

ராமனும்,யசோவும், கொஞ்சம் அதிர்ச்சியாகவும்,சந்தோஷமாகவும் இருந்தனர்.

ஐயர் “அப்படியா ரொம்ப சந்தோஷம்,அவங்கள முன்னாடி வந்து உட்காரசொல்லுங்க”

ஜானகி “அக்கா,மாமா போங்க”

கிருஷ்ணன்,ஐயரே இப்போ நிச்சிய ஓலையை படிங்க.

“நந்தகோபாலன்,லக்ஷ்மி,இவர்களின்,பேரனும்…நந்தகுமரன்,ராதாவின் இவர்களின் மகன்,திருவாளர்.”வாசுதேவ்”க்கும்’ “பாலகிருஷ்ணன்,ருக்குமணி இவர்களின் பேத்தியும்,ராமன்,யசோதாவின் மகளுமாகிய,திருநிறைசெல்வி “வாசுகி”க்கும்.இருவீட்டாரின் சம்மதத்துடன்,ஊர் பெரியோர்களின் சம்மதத்துடன் இன்று நிச்சியமும்,ஆவணி 27 திருமணமும் நடைபெறும்.

இருவீட்டாரும் தாம்பூலத்தை மாற்றிகொண்டனர், ‘பொண்ணை அழைச்சுட்டு வாங்க,நீங்க மாப்பிள்ளைய அழைச்சுட்டு வாங்க.

தேவ் சுகியை காண ஆவலாய் இருந்தான்,ஆனால் வசுவோ குனிந்த தலை நிமிராமல் மேடையில் ஏறினாள்.

ராதா “ராஜா இந்த மோதிரத்தை என் மருமக கையில போட்டுவிட்டு”

மலர் “வசு நிமிர்ந்து மாப்பிளை யாருன்னு பாரு டி”…..ஆனால் அவளோ என்னவேணா சொல்லு நான் பார்க்கமாட்டேன் என்னும் ரீதியில் குனிந்தே இருந்தால்.

தேவ்,வசுவின் கையை பிடித்து மோதிரம் போட்டுவிட்டு…”என்னை நிமிர்ந்து பார்க்கமாட்டாய சுகி”

வசுவிற்கோ “பரிட்சயமான குரல் மாதிரி இருக்கே,என்று நிமிர்ந்தால்.”

தேவ் சிறு புன்னகையுடன்,வசுவை பார்த்து கண்சிமிட்டினான்….அவளோ கண்களை விரித்து பார்துகொண்டுயிருந்தால்..

யசோ வசுவின் கையில் தேவ்விற்கு போடும் மோதிரத்தை கொடுத்தார்… வசு தேவ்வின் கையை பிடித்து மோதிரம் போட்டுவிட்டு,அவனது உள்ளங்கையை கிள்ளி வைத்தால்,யாருக்கும் தெரியாமல்.

தேவ்வோ “ஸ்ஸ்…”

“இரு ஜோடிகளின் நிச்சயம் நன்றாக முடிந்தது”

ஐயர் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது…நான் கிளம்புறேன் கிருஷ்ணன்”

“ரொம்ப நன்றி ஐயரே”

‘வந்திருந்த உறவினர்கள் எல்லாம் இரண்டு மணமக்களுக்கும் வாழ்த்துக்கூறி,பரிசு கொடுத்தனர்….இரண்டு ஜோடியில் ஒரு ஜோடி,மகிழ்ச்சியிலும்,இன்னொரு ஜோடி கொஞ்சம் தயக்கத்துடனும் காணப்பட்டனர்….

‘வசு தேவ்வின் அருகில் நிற்கவே தயங்கினால்..ஆனால் தேவ் “அவள் கையை அழுத்தி என்ன” என்று கேட்டான்.

அவளோ “பிளிஸ் கைய விடுங்க எல்லோரும் பார்க்குறாங்க”

“அப்போ பிடிச்சுயிருக்குன்னு சொல்லு சுகி”

“அதென்ன சுகி”

“முதல நீ என்னை பிடிச்சுயிருக்குன்னு சொல்லு சொல்லுறேன்”

“முடியாது…நீங்க சொல்லவேணாம்”

“அப்போ உன் கைய நான்விடமாட்டேன்”என்று தேவ் மோதிரம் போடும்போது பிடித்த கையை,சாப்பிடும் போதும்,அதற்கும் பின்பும் விடாமல் பிடித்திருந்தான்”……

கண்ணன் “மாமா இப்போ வசு வீட்டுக்கு கிளம்பனும் இப்பவாச்சும் அவ கைய விடுவீங்களா….இல்லை இப்படியே உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போயிடுவேங்களா”என்று தேவ்வை கிண்டல் செய்தான்..

தேவ் “சுகி மட்டும் ஓகே சொல்லட்டும் நான் கூப்பிட்டு போய்டுவேன்…என்ன சுகி போகலாமா..என்றான்.

“போதுமா…இதுக்குதான் சொன்னே…கேட்டேங்களா”என்று தேவ்விடம் இருந்த கையை உருவிகொண்டால்..

கண்ணன் “பாரு டா வசுக்கு வெக்கத்த”

‘கண்ணா  சுவாதினு ஒரு பொண்ணு…என்று தேவ் கண்ணனை கேலி செய்ய ஆரம்பித்தான்…..

“அய்யோ மாமா ஆளைவிடுங்க…என் அப்பா அங்கதான் இருக்காங்க கேட்டாங்க நான் செத்தேன்,என்று கண்ணன் அங்கிருந்து ஓடினான்…

ஹாய் மிஸ்டர்.வாசுதேவ்…..என்றபடி வந்தான் கதிர்….

தேவ் “நீங்க,யாரு”

கதிர் “வாழ்த்துகள் தேவ்…விகேவி குருப் ஆப் கம்பெனி தேவ்”என்று தன்னை அறிமுகபடுத்திகொண்டான்.

தேவ் “ஆனா கதிர் உங்களை நான் பார்த்ததில்லை”

“இட்ஸ் ஓகே தேவ் இப்போ இந்த அறிமுகம் போதும்,இந்தாங்க என் சார்பா என்று மலர்கொத்தை கொடுத்து வாழ்த்தினான்..இருவரையும்”.

தேவ் “தேங்க்ஸ் கதிர்”.

கதிர் “தேவ் நீங்க எப்போ ப்ரீயா இருப்பேங்க”

“இந்தாங்க இது என் கார்ட் என் ஆபிஸ் வாங்க அங்க பேசலாம்”.

“ஓகே தேவ், ஐ வில் மீட் யூ சூன் தேவ்’.

“எனக்கு எல்லாம் உண்மையும் தெரியும் ராமன்……ஆமாம் அண்ணா எங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் உண்மையும் தெரியும்”.

 

                                    உன்நினைவுகள் தொடரும்………

 

Advertisement