Advertisement

               நினைவுகள் : 2

 

வசு “சாரி சார் அந்த குழந்தைய பார்த்துகிட்டே வந்ததுல தெரியாம மோதிட்டேன் சாரி சார்” என்றால்.

சரண் “ இட்ஸ் ஓகே” பார்த்துபோங்க என்றான்.

மலர் “ ஹே வசு இங்க என்ன பண்ணுற” என்றபடி அங்கே வந்தாள்.

வசு “ஹ்ம்ம் ஒண்ணும்மில்ல போகலாம் வா” என்று அவனை திரும்பி பார்த்து சாரி என்று கண்ங்களால் விடைபெற்றால்.

சரண் “ வசு எங்கோயோ கேட்டமாதிரி இருக்கு இந்த பேர் அஹ” என்று யோசனையுடன் சென்றான்.

தேவ் “விஷ்ணு” என்றவுடன் அவனின் மனதில் புதையுண்ட கடந்த காலம் நினைவுகளில் மூழ்கினான்.அந்த குழந்தை அவனின் கால்களை கட்டிகொண்டிருப்பதை மறந்து.

அந்தகுழந்தையின் தாய் “விஷ்ணு” என்னது அவங்க பின்னாடி ஒளிஞ்சுசுகிட்டு வா போகலாம்” என்று குழந்தையின் அன்னை அச்சிறுவனை அழைத்துகொண்டு இருந்தால் அப்பொழுது தன் சுயநினைவிற்க்கு வந்தான்.

தேவ் “அந்த குழந்தையின் உயரத்திருக்கு ஏற்ப மண்டியிட்டு அந்தக்குழந்தையின் முகத்தை பார்த்து கன்னத்தில் முத்தமிட்டு சென்றான்”.

மலர் “ ஹே யாரு டி அந்த ஹேன்ஸ்சம் பாய்”

வசு “யாரா சொல்லுற சோடப்புடி”

மலர் “இப்போ ஒருத்தனை இடிச்சுட்டு வந்தயே அவன்தான்”

வசு “அவனா எனக்கு தெரியாது டி குழந்தைய பார்த்துட்டு வந்தேனா அப்போ தெரியாம இடிச்சுட்டேன் அதான் சாரி கேட்டு இருந்ததேன் டி”

மலர் “ஓஓ நம்பிட்டேன்”

கண்ணன் “ ஓ மை காட்”

வசுவும், மலரும், என்னாச்சு கண்ணா என்று பதறினார்.

கண்ணன் “ இல்ல நீ அவனை இடிச்சுட்டு போயிருக்க கண்டிப்பா அவனுக்கு கை உடைச்சுருக்கும் அதான்”என்றான்.

வசுவோ மனதில் “என்னைய கலாய்க்கிறயா இருடா மகனே உன்னை என்று கண்ணனின் பர்சை ஒலித்து வைத்தால்”

வசு “இன்னைக்கு பில் நீ செட்டில் பண்ணுற வா மலர் போகலாம்” என்று கிளம்பினார்கள்.

கண்ணன் “பில் தானே நானே கொடுக்குறேன்”.என்றான்

சர்வர் “சார் பில்”

கண்ணன் “இதோ ஒருநிமிஷம்”என்று தன் பர்ஸை எடுக்க பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டான்.

“அந்தோபரிதாபம் அவன் பர்சை தான் வசு ஏற்கனவே எடுத்து ஒழித்துவைத்துவிட்டாள்.

கண்ணன் “சட்டையில் தேட,மறுபடியும் பேண்டில் தேட,பர்சை காணவில்லை”

வசு “என்ன டா இன்னுமா பர்ஸ எடுக்குற”என்றால்

கண்ணன் “வசு என் பர்ஸா காணம் டி” என்றான்

வசு ,மலர் “என்னது பர்ஸ காணமா போச்சு இன்னைக்கு நீ இந்த ஹோட்டல் அஹ மாவாட்டபோற”என்று ஒரே நேரத்தில் கூறினார்கள்.

கண்ணன் “என்னது மாவா அப்படின்னா என்னதுன்னுகூட என்னக்கு தெரியாது வசு”என்று அவன் அலறினான்.

அருண் “என்ன இன்னும் தேவ் அஹ காணம்” என்று தேடிக்கொண்டு இருக்கும்போது கண்ணனின் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தான்.

அருனின் டேபிள் இருந்து பார்த்தல் அவர்கள் இருக்கும் இடம் நன்றாக தெரியும்.

வசு “என்ன கிண்டல் பண்ணேல ஒழுங்கா பில் கொடுத்துட்டுவா” என்று வசு அவனின் பர்சை எடுத்துக்கொடுத்தாள்.

கண்ணன் “அடிப்பாவி நீதான் எடுத்து வச்சிருந்தியா உன்னை இரு பில் கொடுத்துட்டுவரேன்”.
மலர் “என்ன வசு நீ இப்படியா அவன் பர்சை உடனே கொடுப்ப கொஞ்சநேரம் இந்த கன்னுகுட்டிய அழவிட்டு இருக்கலாம் டி மிஸ் பண்ணிட்ட டி வசு”என்று அவளும் சேர்ந்து கண்ணனை வம்புசெய்துனர். “ஹப்பாடா நான் மட்டும் செலவு செய்யபோறேன்னு நினச்சேன் கண்ணா இப்போ நீ மாடிகிட்டயா நன்றி கடவுளே” என்று கண்ணை பார்த்து பழிப்புகாட்டினாள்”.

“இதை அருண் பார்த்து சிரித்துகொண்டு இருந்தான்”

ஒருவழியாக அவர்கள் பில் கொடுத்துவிட்டு சென்றனர்.

கண்ணின் நிலையயும்,இவர்கள் செய்யும் அட்டகாசத்தை பார்த்து சிரித்துகொண்டு இருக்கும் பொழுது தேவ் வந்தான்.

தேவ் “என்னடா ஏன் இப்படி சிரிக்குற” என்றான்.

அருண் “இல்லடா அங்க காலேஜ் பொண்ணுங்க ரெண்டும் சேர்ந்து அந்த பையன போட்டு பாடுப்படுதிட்டு இருக்காங்க  அதுவும் அந்த பொண்ணை பாரேன்” என்றான்.

தேவ், திரும்பி பார்ப்பதற்குள் கண்ணன் வசுவை மறைப்பதுபோல் எழுந்துவிட்டான்.

தேவ் “யாருடா எனக்கு தெரியல”

அருண் “அதோ அந்த ப்ளு சுடி டா” என்றான்

தேவ் “ஹ்ம்ம் எனக்கு தெரியல”

அருண் “அந்த பையன் மறைச்சுகிட்டான் டா”.

தேவ் “நமக்கு ஆர்டர் பண்ணிடாய அருண்”

அருண் “இதோ இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் டா”

வசு,மலர்,கண்ணன், கிளம்பலாம் என்று எழுந்தனர்,தேவ் அருண் இருக்கும் டேபிள்ளை நோக்கி வந்துகொண்டுஇருந்தனர்.

தேவ் அவர்களுக்கு எதிராக இருந்தான்.

வசு அவர்கள் டேபிள் அருகே வர, இடையில் சர்வர் வந்து தேவ்வின் டேபிளில் உணவுவைகளை அடுக்கினார்.

அப்பொழுது தேவ்வின் இதயமும்,வசுவின் இதயமும் ஒன்றாக துடித்தது.

வசு “காலையில இருந்து ஏன் எனக்கு இதயம் துடிக்குது”

தேவ் “அவள் பக்கத்துல இருக்கலா  என்று திரும்பி பார்த்துகொண்டு இருந்தான்”.

அருண் “தேவ் என்னாச்சு” என்றான்

தேவ் “ஒண்ணுமில்ல”

தேவ் திரும்பி பார்ப்பதற்குள் வசு மறைந்துவிட்டாள்.

சரண் “வசு இந்தபேர் எனக்கு யாரோ சொல்லி கேட்டமாதிரி இருக்கு” என்று காரில் செல்லும்போது யோசித்துக்கொண்டு இருந்தான்.

“வேணாம் சுகி என்னைவிட்டு போகாத பிளிஸ் சுகி,நீ என்னைவிட்டு போனா நான் என்னை பண்ணுவேன்”

“நோ சுகிகிகி”.என்று அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தான் தேவ்.

“ச்சே என்ன கனவு இது அதுவும் என் சுகி என்னைவிட்டு போறாமாதிரி” என்று மணியை பார்த்தான் “மணி 1.3௦”.

தேவ் “இதே மாதிரி ஒருதடவை கனவு வந்துச்சு, அப்போ என் விணு என்னைவிட்டு போய்ட்டான்” அதே மாதிரி இப்போவும் ஒரு கனவு,அப்போ என் சுகி கடவுளே என் சுகிக்கு எதுவும் ஆகக்கூடாது.

என்று நள்ளிரவில் வேண்டிகொண்டுயிருந்தான்.

(கடவுளோ இவனது பிரச்சனைக்கு முடிவுகட்ட அவனது சுகியை அவனிடமே அனுப்பிவைத்தார்)

“என்னைவிட்டு போகமாட்டேள அம்மு உன் தேவ் பக்கத்துலதான் இருக்கேன் அம்மு நீ ஏன் என்கிட்டே வரமாட்டர அம்மு”.

“அம்மு சீக்கிரம் என்கிட்டே வந்துடு அம்மு”என்று யாரோ வசுவின் கையை பிடித்துக்கொண்டும்,அதே கை அவளின் கையில் இருந்து பிரித்துக்கொண்டு தூரம் செல்வது போவதுபோல் ஒரு உணர்வு.

வசுவோ “நான் உங்க அம்மு இல்ல” என்று கூறிக்கொண்டே எழுந்தால்.

ச்சே கனவா… “ஏன் நமக்கு இப்படி ஒரு கனவு வரணும் அதுவும் அம்மு யாரு”என்று நள்ளிரவில் தன் மூளையை கசக்கி சிந்தித்தால்.

“ஹ்ம்ம் ஒன்னும் விலங்கள டி வசு இப்படி எல்லாம் யோசிச்ஹா தூக்கம் தூர போய்டும் பேசாம இழுத்து போர்த்திட்டு தூங்கு அதுதான் உனக்கு சரியாஇருக்கும் என்று தூங்கிவிட்டால்.

(விரைவில் உன் கனவு பழிக்க என் ஆசிர்வாதம் என்று கடவுள் கூற இதை எதையும் அறியாமல் தூங்கிபோனால்”)

ஒருமாதம் கடந்த நிலையில்,மலர் கண்ணன்,வசு இவர்களுக்கு கல்லூரி முடிந்தது,அவர்கள் மூவரும் ஒன்றாக வேலைக்கு சேர ஒவ்வொரு கம்பெனியாய் ஏறிஇறங்கினார்கள் ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

ஏன்னெறால் ஒருவருக்கு வேலை கிடைத்தால் மற்ற இருவருக்கு வேலை இல்லை,இருவருக்கு வேலை கிடைத்தால் ஒருவருக்கு வேலை இல்லை,இப்படியாக வேலைக்கு அலைந்துகொண்டு இருந்தனர்.

வசு “மலர், கண்ணனுக்கா ஒரு காபி ஸாப்பில் காத்துக்கொண்டு இருந்தால்”

அப்பொழுது யாரோ இருவர் தனியாக இருக்கும் பெண்ணிடம் வம்பு செய்தும்,கிண்டல் அடித்துகொண்டுஇருந்தார்கள்.

(டேய் இன்னைக்கு செத்தேங்கடா)

இதை ஒரு சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றனர்.

வசுவோ “அவர்கள் அருகில் சென்று”

உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவில்லையா தனியா இருக்க பொண்ணுகிட்ட இப்படியா பிஹேவ் பன்னுவேங்க, எவண்டா இந்த பொண்ண பார்த்து “வரியான்னு” கேட்டது சொலுங்க டா.

அதில் ஒருவன் “ நான் அவளதானா கூப்பிட்டேன் உனக்கு ஏன் கோவம் வருது”. “உன்னை கூப்பிடலேன்னு கோவம் வருதா” என்று அவன்கூற.

வசுவோ “என்னடா சொன்ன உன்னை என்று பளார் பளார் என்று அவனின் இரு கன்னத்திலும் அறைந்தால்.

“அவனை மட்டுமல்ல அவனின் பக்கத்தில் இருக்கும் இன்னொருவனையும் சேர்த்து வெளுத்து வாங்கினால்”

“சொல்லு டா இன்னொருதடைவை இப்படி தானிய இருக்க பொண்ணுகிட்ட தாப்பா நடந்துக்குவ சொல்லு டா சொல்லு”என்று அடித்துநொருக்கினால்.

இதை எல்லாம் சற்று தூரத்தில் வந்து கொண்டுஇருந்த தேவ் பார்த்துவிட்டான். ஒரு பெண் இரு ஆண்களை அடித்துக்கொண்டு இருந்தால்,அவளின் முகத்தை அவனால் பார்க்கமுடியவில்லை. அவன் பார்க்கும்போது அவளின் பின்தோற்றம் தான் தெரிந்தது.

தேவ் மனதிலோ “ஹப்பா என்ன பொண்ணுடா இப்படி எல்லாம் பொண்ணுங்க தைரியம்மா இருந்தா ஒரு பையனும் பொண்ணுங்க மேல கை வைக்கமாட்டானுங்க என்று வசுவை பாரட்டிக்கொண்டு இருந்தான்.

மலரும்,கண்ணனும் தூரத்திலே புரிந்துகொண்டனர் அங்கு ரகளை நடத்துவது தன் தோழி தான் என்று.

மலர் “டேய் கண்ணா அங்க இருக்குறது நம்மா வசு டா, வா போகலாம் இல்லையினா அவனுங்க உயிரோட இருக்கமாட்னுங்க டா வா” என்று கண்ணனை இழுத்துக்கொண்டு அங்கு சென்றால்.

“மலர் பேசியதை தேவ் கேட்டுவிட்டான்”

தேவ்வோ “வசு” என்ற பேரை கேட்டவுடன் மனதில் சின்ன தடுமாற்றம்.

மலரும் ,கண்ணனும் வசுவை தடுக்க,அவளோ அவர்களைமீறி அடித்துகொண்டுஇருந்தாள்.

மலர் “ டி வசு போதும் டி அவன் செத்துடபோறான் விடு டி உன் கடமை உணர்ச்சிக்கு அளவில்லமா போச்சு”

கண்ணன் “வசு வேணாம் விடு அவனுங்கள போலீஸ்கிட்ட பிடிச்சுக்குடுக்கலாம் வசு”

வசு “ விடு மலர் இன்னைக்கு என் கையாலதான் சாவு”

கண்ணன் “ டேய் நீங்க போங்க டா இங்கயே நிக்குறேங்க அவகிட்ட அடிவாங்கியே சாகதேங்க டா” என்று அவனுங்களை  விரட்டிக்கொண்டு இருந்தான்.

மலர் “ ஏன் வசு இப்படி பண்ணுற எல்லாரும் உன்னதான் பார்க்குறாங்க வசு” என்று அடக்கினாள்.

வசு “அந்தா பொண்ணுகிட்ட அவனுங்க ரெண்டுபேரும் தப்பா நடந்துக்கபார்த்தாங்க டி” என்றால்

மலர் “அதுக்கு உனக்கு இதே வேலையா,இந்த சமூகஅக்கறை உனக்குமட்டும் இருந்தா பத்தாது எல்லாருக்கு இருக்கணும்அதை புரிஞ்சுக்கோ” என்றால் மலர்.

கண்ணன் “இங்க பாரு வசு நீ சண்டை போட்டப்ப யாரவது வந்து கேட்டாங்களா சொல்லு இங்க நீதான் அந்த பொண்ணுக்கா சண்டை போடுற ஆனா யாரும் உனக்கு சப்போர்ட் பண்ணல அப்புறம் ஏன் வசு” என்று அவன் பங்குக்கு அவளைதிட்டிக்கொண்டிருந்தான்.

வசுவோ “யாரு இல்லேன்னா என்ன நான் கேட்பேன் என் கண்முன்னாடி நடக்குறத வேடிக்கை பார்க்க என்னால முடியாது” என்று அவர்களிடம் கோவமாக கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டால்.

மலர் ,கண்ணன் இருவரும் அழைக்க அவள் சென்றுவிட்டாள்.

தேவ் “வசு என்றவுடன் அவளின் முகத்தை பார்க்க அவளின் அருகில் சென்றான் ஆனால் அவனை பார்ப்பதற்க்கா அவனின் தோழன் சரண் அவனின் தோள் தொட்டு திருப்பினான்.

சரண் “என்ன தேவ் உனக்கா நான் அங்க வெயிட் பண்ணிட்டு இருந்தா நீ இங்க இருக்குற”

தேவ் “சாரி டா மச்சான்” அங்க என்னமோ ஒரு ப்ரோப்லேம் அதை பார்த்துட்டு இருந்தேன் என்று சரணிடம் கூறினான்.

சரண் “ஓகே வா நம்ம வொர்க் பத்தி பேசலாம்”.என்று அழைத்து சென்றான்.

(அப்பொழுதே தேவ் வசுவை பார்த்திருந்தால் பின்னால் வரும் கேள்விக்கு விடை தெரிந்திருக்கும்)

வசுவின் வீடு:

“ஜானு ஜானு ஓ மைய் ஜானு உன்னைக்கண்டாலே ஆனந்தமே” என்று அவள் அன்னையின் வாலை பிடித்துகொண்டு கொஞ்சியும், கெஞ்சியும் ஆர்பாட்டம் செய்துகொண்டுஇருந்தால்.

ஜானகி “என்னதான் நீ கெஞ்சினாலும்,கொஞ்சினாலும் உனக்கு கிடையாது” என்று அவள் ஆசைக்கு தடைவிதித்தார்.

(அன்று கிருஷ்ண ஜெயந்தி பூஜை அதானல் அவள் வீட்டில் அனைத்துவகை பண்டங்களும் ரெடியாக இருந்தது இதை பார்த்த வசு அவள் அன்னையிடம் ஒரே ஒரு பாதுஷா கேட்டு என்று கெஞ்சிக்கொண்டு இருந்தால்)

மலர் “அடிப்பாவி இன்னுமா நீ இன்னும் ரெடி ஆகல”என்றபடி வந்தால் அவளின் தோழி.

மலரை கண்டதும் வசு முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டால்

ஜானகி “வா மலர் எப்படி இருக்க ,அம்மா அப்பா எப்படி இருகாங்க” என்று அவளை வரவேற்றார்.

“ வசுவின் செயலுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அவளின் அன்னையின் அழைப்பால் சிரித்துகொண்டு உள்ளே வந்தால்” மலர்

ஜானகி “ வசு மலர் வந்திருக்க வந்து பாரு டி”என்று வசுவை அழைத்தார்கள்.

வசு “வா மலர்” என்று பன்மையில் அழைத்தால்.

மலர் “திரும்பி திரும்பி பார்த்து,என்னைய கூப்பிட்ட வசு” என்று வசுவிடம் கேட்டாள்.

வசுவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால்.

மலர் “அய்யோ வசு உன் பக்கத்துல புழு டி”என்று வசுவை பயமுறுத்தினால்.

வசுவோ “ அம்மா புழு எங்க,எங்க புழு என்று சோபாவை சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்”

ஜானகி வசுவின் அலறலில் ஓடிவந்து பார்த்து சிரித்துகொண்டு இருந்தார்,மலரும் சேர்ந்து சிரித்துகொண்டு இருந்தால்.

(வாசுவிற்கு புழு என்றால் ரொம்ப பயம் அதானல் அவள் மழைகாலத்தில் வெளியே உள்ள செடிகொடிக்கு பக்கத்தில்கூட போகமாட்டால்.)

மலர் “ ஒரு சின்ன புழுக்கு இப்படி பயப்படர வசு” என்று மலர் கிண்டல் செய்யதால்.

வசுவோ “அவளின் கேலியில் ஓடுவதை நிறுத்தி அவளை அடிக்க துரத்தினால்”

வசு “ ஓடதா டி சோடப்புடி ஒழுங்கா நில்லு இல்லையினா அவ்ளோதான் டி “ என்று வசு மலரை துரத்திக்கொண்டு ஓட்டினால்.

இருவரும் ஓடிக்கொண்டு இருக்கும்போது எதிரே கண்ணன் வந்ததை இருவரும் அறியவில்லை.

மலர் கண்ணனை இடித்துவிட்டு ஓட,கண்ணன் தரையில் விழுந்துகிடந்தான்,இது தெரியாத வசு மலரை பிடிக்க ஓட கண்ணன் வயிற்றின் மேல் ஏறி ஓடிவிட்டால்.

கண்ணன் “அய்யோ அம்மா” என்று கத்தியதில் மலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திருப்பி பார்த்தால்,வசுவோ எங்கோயோ கேட்ட குரல் மாதிரி இருக்குல என்று மலரிடம் வினவினாள்.

மலர் “நம்மகூடவே ஒரு ஜந்து சுத்துமே டி எங்க அது என்றால்”

வசு “ஆமால எங்க அந்த கன்னுக்குட்டிய காணம்” என்று அப்பொழுதுதான் கேட்பதுபோல் கேட்டால்.

ஜானகி “ டேய் கண்ணா என்னாச்சு டா இப்படி விழுந்துகிடக்குற” என்று அவர் அவனை பார்த்து கேட்டார்.

கண்ணனோ “நான் எங்கமா விழுந்தேன்,நான் வீடுக்குள்ள வரும்போது ரெண்டு புல்டோசர் சேர்ந்து என்னை இடிச்சு தள்ளிவிட்டுச்சுமா”. என்று வலியில் கூறினான்.

“என்னது புல்டோசர் அஹ” என்று கோரஸாக பதில் வந்தது.

மலர்,வசுவிடம் இருந்து.

“ஏன் டா நாங்க புல்டோசர் அஹ,என்று வசுவும் மலரும் சேர்ந்து துரத்த இம்முறை கண்ணன் ஓடினான்”

கண்ணன் “ஆமம் நீங்க ரெண்டுபேரும் அப்படியே இலியானா மாதிரி இருக்கேங்க, உங்கள புல்டோசர்னு சொன்னதுல தப்பே இல்லை” என்று மேலும் வம்பு இழுத்துக்கொண்டு ஓட்டினான்.

மூவரும் இவ்வாறாக ஒடி ஒடி களைத்து சோபாவில் தொப் என்று விழுந்தனர்.

மலர் “ஏன் டா நானே அவ என்ன துரத்துனானு ஓடுனா நீ ஏன்டா இடையில்ல வந்த” என்று கண்ணனிடம் கேட்டாள்.

கண்ணன் “ஆமா அப்படியே ஒலிம்பிக்ள ஜோதி அஹ எடுத்துட்டு ஓடுன மாதிரி இருந்துச்சு அதான் இடையில்ல வந்தேன் பாரு” என்று பதிலுக்கு பேசினான்.

ஜானகி “போதும் பிள்ளைகளா வாங்க பூஜைக்கு நேரம் ஆச்சு வசு, மலர், கண்ணன் மூணு பேரும் பூஜைக்கு தயாராகுங்க போங்க என்று அவர் வந்து விரட்டினார்”.

வசுவின் வீட்டில் பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது,ஆனால் ஒரு ஜோடி கண்கள் மலரை சுற்றியே வந்தது.

இதை யாரும் அறியாமல் ராமகிருஷ்ணன் கண்ண்டுகொண்டார்.

மலரும், வசுவும் பாதுஷாவிற்கு சண்டை போட ,கண்ணன் இவர்களின் சண்டையை சுவரசியம்மாகவும்,இருவருக்குள்ளும் சண்டையை மூட்டிக்கொண்டு இருந்தான்.

மலரின் ஒவ்வொரு அசைவையும் ஒரு கண்கள் ரசித்தது.

நந்தன்குமரன் வீட்டில்:

ராதா “கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கு அனைவரையும் அழைத்திருந்தார்”

நந்தன் “ராதா  எல்லாம் ரெடி அஹமா” என்று கேட்டுகொண்டே வந்தார்.

ராதா  “எல்லாம் ரெடி எங்க நம்ம பையன” என்றார்

நந்தன் “ஒரு மீட்டிங் அட்டென் பண்ணிட்டு வந்துட்டுயிருக்கான் மா”

ராதா “இப்படி அப்பாவும் பையனும் ஆபீஸ்,மீடிங்க்னு இருந்தா வீட்டை யாரு கவனிக்கிறது” என்று நந்தனிடம் கோவமாக கேட்டுக்கொண்டுஇருந்தார்.

நந்தன் “ராதா ஏன் மா கோவப்படுற அவன் இப்போ வந்துருவான் மா”

இருவரின் சம்பாசணைகளையும் கேட்டுகொண்டே வந்தான் தேவ்.

தேவ் “என்ன அம்மா என்னாச்சு என்றான்”

ராதா “என்ன ராஜா உனக்கா தானே இந்த பூஜை நீயே தாமதமா வந்த நல்லாயிருக்குமா” என்றார்.

தேவ் “சாரி மா கொஞ்சம் வொர்க் அதான்,இப்போ வந்துட்டேள வாங்க” என்றான்

ராதா “ இப்படியேவா, போய் குளிச்சுட்டு பட்டுவேட்டி உடுத்திட்டு வா” என்றார்.

தேவ் “சரி மா இன்னும் பத்து நிமிசத்துல உங்க முன்னாடி இருப்பேன் ஓகே”என்று தன் அறைக்கு சென்றான்.

நந்தன் “பிள்ளை வந்துவுடனே என்னை மறந்துட்டே ராதா”என்றார் குறும்பு பார்வையுடன்.

ராதா “பிள்ளைக்கு கல்யாண வயசு வந்துட்டுச்சு இப்போ என்ன ரொமன்ஸ் வேண்டிகிடக்கு போங்க போய் வந்தவங்கள கவனிங்க” என்று கண்ணில் காதலை மறைத்துக்கொண்டு சென்றார்.

ராதா மனதில் ஒரு கவலை மட்டுமே இருந்தது, “அவனும் என்கூட இருந்துதிருந்தா நல்ல இருக்கு அவனுக்கா கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுவேன் ஆனா இப்போ அவன் இல்லையே” என்று கண்ணீருடன் பார்த்துகொண்டுஇருந்தார்.

புல்லாங்குழல் வைத்து கண்ணில் சிரிப்புடன் எல்லோருக்கும் அருள்பாளிக்கும் அந்த மாயக்கண்ணனிடம் தன் இன்னொரு மகன் வாழ்வு சிறக்காதா என்று மனம் உருகிவேண்டினார் ராதா.

இதை எதையும் அறியாமல் தேவ் சுகியின் நினைவுகளிலே இருந்தான்.அவள் நினைவுடனே தன்னை தயார்செய்துகொண்டன்.

ராதா,நந்தன் பூஜைக்கு வந்தவர்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது ஒரு உறவுக்கார பெண்மணி “எங்க ராதா உன் பையன் வந்ததுல இருந்து அவன பார்க்கமுடியல எங்க அவன் என்று கேட்டுக்கொண்டுயிருந்தார்”.

ராதா “ தேவ் இப்போதான் ஆபீஸ் ல இருந்தது வந்தான்” என்று மாடிப்படியை திரும்பி பார்க்கும் பொழுது தேவ் வந்துகொண்டு இருந்தான்.

தேவ்வோ பட்டுவேட்டி சட்டையில் ராஜ நடையில் வந்தான்.

(ராதா ஒரு நொடி மகனின் அழகில் மெய்மறந்தார்)

ராதா “இங்க வா ராஜா இவங்க நம்ம பூரணி அத்தை,ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்றார்

தேவ் “வாங்க அத்தை எப்படி இருக்கேங்க” என்று விசாரித்து ஆசிர்வாதம் வாங்கினான்

பூரணி “நல்ல இருக்கணும்டா கண்ணா உன் அழக்குக்கு உனக்கு ஏத்தமாதிரி பொண்ணுகிடைப்பா” என்று ஆசிர்வதித்தார்.

தேவ்  மனதிலோ “அவக்கிடைச்சுட்ட அத்தை” என்று நினைத்து பார்த்தான்.

ராதா “வாங்க எல்லோரும் பூஜைய ஆரம்பிக்கலாம்” என்று அனைவரையும் அழைத்து சென்றார்.

தேவ் “உன்னை நான் கையெடுத்து கும்பிட்டதில்லை ஏனா என்னக்கு உன் மேல நம்பிக்கை இல்லை இதுக்கு முன்னாடி,ஆனா என் வினுக்காவும் ,என் சுகிக்கவும் உன்கிட்ட கெஞ்சினேன் ஆனா நீ என் வினுவ எங்கிட்ட இருந்து எடுத்துகிட்ட,என் சுகிய என்கிட்டே இருந்து பிரிச்சுட்ட,ரொம்ப உடைஞ்சுபோனேன்,ஆனா இப்போ உன்கிட்ட ஒண்ணுமட்டும் கேட்டுகிறேன் என் சுகிய மட்டும் என்கிட்டேஇருந்து பிரிச்சுடாத” என்று அந்த கண்ணனிடம் காதல் கண்ணீருடன் வேண்டிக்கொண்டான்.

ராதா ,நந்தன், இருவரின் மனதில் இருப்பது ஒரு வேண்டுகோள்தான் தேவ் வாழ்க்கை சிறக்கவேண்டும் என்று மனம் உருகவேண்டிக்கொண்டனர்.

தேவ் நினைப்பதுபோல் கடவுள் சுகியை தேவ்விடம் சேர்ப்பரா,

விணு யார்????

        

                             உன்நினைவுகள் தொடரும்…………….

 

Advertisement