Advertisement

அத்தியாயம்:33

                 மாதவன் தனது ஆபிஸ் அறையில் ஏதோ யோசைனையாக இருக்க அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த மது அவரின் கவலை படிந்த முகம் கண்டு

“என்னப்பா ஒரே யோசைனையா இருக்கீங்க எதாவது பிரச்சனையா”என அவரின் என்ன ஓட்டத்தை சட்டென்று கணித்து சொல்ல அது கேட்டு அதிர்ந்த மாதவன்

“அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா “என அவன் முகத்தை பாராமல் வேறு எங்கோ பார்த்து சொல்ல அதை கண்டு கொண்ட மது

“அப்பா என் முகத்தை பார்த்து சொல்லுங்க என்னாச்சு”என அழுத்தி கேட்க

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மது தலைவலி அதான் அமைதியா இருக்கேன்”என சமாளிக்க

“அப்பா என்கிட்டே எதையும் மறைக்காதீங்க மார்னிங் ஆபிஸ்க்கு யாரோ நாலைஞ்சு பேர் வந்ததாவும் ரொம்ப நேரம் பேசிட்டு வேற போயிருக்காங்க  அதுக்கப்புறம் உங்க முகம் சரியில்லைன்னு உங்க பி.ஏ என்கிட்ட சொல்லிட்டான் நானும் நீங்களா சொல்வேங்கனு பொறுமையா இருந்தேன் ஆனால் நீங்க சொல்றதா இல்லை அதான் வந்தேன் சொல்லுங்க என்னாச்சு”என கேட்க வேறு வழியில்லாமல் காலையில் நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தார்.

                          ஏதோ முக்கியமான வேளையில் ஈடுபட்டிருந்த மாதவனின் கவனத்தை கலைத்து உள்ளே நுழைந்தார் சுந்தரமூர்த்தி.ஒரு சில ஆட்களுடன் வந்தவர் அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு

“வணக்கம் மாதவன் நான் சுந்தரமூர்த்தி அரசியலில் முக்கியமான பதவியில் இருப்பவன்”என தோரணையாக சொல்ல அவனின் மரியாதையை இல்லாத செயல் மாதவனை முகம் சுளிக்க வைக்க அதை வெளியில் காட்டாமல் உதட்டில் புன்னகையை வரவழைத்துகொண்டு

“சொல்லுங்க சார் என்ன விஷயம் நீங்க என்னை பார்க்க வந்துருக்கீங்க”என பட்டென்று விஷயத்திற்கு வந்துவிட அதை கேட்டு பலமாக சிரித்தவர்

“பரவயில்லையே நேரா விஷயத்திற்கு வர சொல்லிட்டேங்க ஆமா நீங்க தொழிலதிபர் வேற டைம் வேஸ்ட் பன்னமாட்டேங்கனு புரியுது”என சொல்ல அதை கேட்டு அவர் அமைதியாக இருக்க தொடர்ந்தார்

“உங்களோட *******பக்கத்தில ஒரு காலியான கிரவுண்ட் நான் விலைக்கு வங்கலான்னு வந்திருக்கேன் நீங்க எவ்வளவுன்னு சொன்னேங்கன்ன  வர வெள்ளிகிழமை ரெஜிஸ்ட்ர் பண்ணிரலாம்”என சொல்ல

“நான் அந்த இடத்தை விற்கிறதா சொல்லவே இல்லையே “என மாதவன் சொல்ல

“எப்படி இருந்தாலும் ஒரு காலத்துல விற்கத்தான போறீங்க அதை எனக்கு வித்துருங்க”என சொல்ல

“சாரி சார் அது எங்களோட பூர்வீக இடம் அதுல நான் இப்போ ஒரு வீடு காட்ட போறேன் சோ நீங்க வேற இடம் பார்த்துகோங்க”என சொல்ல

“அந்த இடத்துக்கு பதில் நான் வேற இடம் கூட முடிச்சு தரேன் “என சொல்ல

“பூர்வீக இடம் சொன்ன பிறகு நீங்க இதை கேட்குறீங்களே இது உங்களுக்கே நியாமா “என மாதவன் பேச

“எனக்கு அந்த இடம் வேணும் அவ்ளோதான் நான் சொல்லிட்டேன்”என சுந்தரமூர்த்தி கோவமாக பேச

“இவ்ளோ நேரம் நான் உங்க பதவிக்கு மரியாதை கொடுத்து பேசிட்டு இருந்தேன் தேவையில்லாம மரியாதைய நீங்களே கெடுத்துக்காதீங்க கிளம்புங்க”என மாதவன் கறாராக பேச

“இன்னும் உங்களுக்கு ஒருவாரம் டைம் தாரேன் அதுக்குள்ள முடிவை சொல்லுங்க அதுவும் எனக்கு சாதகமா இருக்கணும் இல்லை புரியும்னு நினைக்கிறேன்”என அவர் சிரித்துக்கொண்டே இடத்தை காலிபண்ண மாதவனோ அவர் பேச்சை கேட்டு உறைந்து நின்றார்.அனைத்தையும் கேட்ட மது

“அப்பா அவன் பேச்சை எல்லாம் நினைச்சு நீங்க ஏன் இவ்வளவு கவலைபடுறீங்க நான் பார்த்துகிறேன்”என தயிரியம் கொடுக்க

“இல்லை மது அவனை பத்தி விசாரிச்சேன் பதவியில இருந்துட்டே ஏமாத்தி சொத்து சேர்க்கிறான் .எவ்வளவோ அப்பாவிகிட்ட இருந்து நிலத்தை பறிச்சு தன பேர்லயும் தன்னோட பினாமி பேர்லயும் மாத்திருவான் நிலத்தை கொடுக்க மருத்தவங்க குடும்பத்தை கூண்டோட அழிச்சுருவான்”என மாதவன் பயப்பட

“அப்பா அவனால நம்மள ஒன்னும் செய்ய முடியாது நான் நாளைக்கே இந்த பிரச்சனையை முடிச்சு வைக்கிறேன் வாங்க சாப்பிடலாம்”என அவன் உறுதியளிக்க அரைமனதாக அவனுடன் எழுந்து சென்றார்.

                      மறுநாள் காலையில் சுந்தரமூர்த்தியின் அலுவலகத்திற்கு நேராக சென்றான் மது.அவனை யாரென்று அறியாதவரோ

“யார் நீங்க என்ன வேணும்”என கேட்க அவனோ

“நேத்து நீங்க மிரட்டிட்டு போன மாதவனின் பையன் மதுசூதனன்”என தன்னை அறிமுகபடுத்த   அதை கேட்டு அவர்

“ஓஹோ அப்பா அனுப்பினாரா என்ன எல்லாம் நல்ல முடிவு தான ரெஜிஸ்டர் எப்போ பண்ணலாம்”என ஆணவமாக கேட்க அதை கேட்டு மதுவுக்கு கோவம் தலைக்கு ஏற அதை அடக்கியவன் கையில் இருந்த ஒரு பத்திரிக்கையை நீட்ட அதை வங்கி படித்தவர் அதிர்ந்தார்.அதை கண்டு உள்ளுக்குள் புன்னகையித்த மது

“வர  வெள்ளிகிழமை எங்க பூர்வீக இடத்தில் புது வீடு கட்டுரதுக்கான பூமி பூஜை நடத்திறோம் அதை நீங்க தான் நடத்தி வைக்கணும் மன்னிச்சுக்கோங்க உங்களை கேட்காம உங்க பேரை சீப் கெஸ்ட்ல போட்ருக்கோம் சார் மறக்காம வந்து விழாவை சிறப்பித்து தரனும்”என மது விளக்க சுந்தரமூர்த்திக்கோ ஒன்றும் புரியவில்லை இவன் இப்படி செய்வான் என சற்றும் எதிர்பார்க்கவில்லை

“நான் உன்னை சும்மா விடமாட்டேன் அந்த இடம் எனக்கு தான் வரணும் நீ எப்படி வீடு கட்டுறேன் நான் பாக்குறேன்”என கோவத்தில் கத்த

“சார் நீங்க கண்டிப்பா இந்த பங்சன்கு வந்து தான் ஆகணும் இல்லை மீடியாவில் நீங்க வரலைன்னு உங்களுக்கு எதிரா கெட்டபேர் சம்பாரிச்சு தர என்னால முடியும் அதுவும் நீங்க இந்த பங்சன் வரீங்கன்னு ரெண்டு மூணு பத்திரிக்கைக்கு நியூஸ் கொடுத்துருக்கேன் சோ கண்டிப்பா வந்துருங்க நான் கிளம்புறேன்”என மது சிரித்துக்கொண்டே போக அவனை தீப்பார்வை பார்த்தார் சுந்தரமூர்த்தி.

                       வெள்ளிகிழமை அன்று காலையில் வெகு சீக்கிரமாக எழுந்த மதுவிற்கோ மனம் ஏதோ ஒரு மாதிரியாகவே இருக்க அதை பொருட்படுத்தாமல் அன்று பூமி பூஜைக்கு தயாரானான்.ரெடியாகி கதவை திறக்க அவனின் அப்பா அம்மா தங்க அனைவரும் கோரசாக

“ஹாப்பி  பர்த்டே “என கத்த அப்போதுதான் அவனுக்கு இன்று தனக்கு பிறந்தநாள் என்பது நிபகம் வந்தது இந்த பிரச்சனையில் தன பிறந்தநாளையே மறந்துவிட ஆனால் தன் குடும்பத்தினர் அனைவரும் நினைவூட்ட எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தான்.

“தாங்க்ஸ் அம்மா அப்பா அப்புறும் என்னோடகுட்டி ஏஞ்சல்”என அனைவரையும் பார்த்து சொல்ல

“போதும் போதும் வாடா வந்து கேக் வெட்டு”என அவனின் தாயார் சொல்ல

“அதானா உன் புள்ளை உன்னை மட்டும்தான் கொஞ்சனும் வேற யாரையும் கொஞ்சிட்டா உனக்கு பொறுக்காதே”என தன தாயாரை வம்புக்கு இழுக்க

“அடி கழுதை”என அவள் காதை திருகினார்

“விடுங்கம்மா பாவம் அவள்”என மது சொல்ல அவளை விட்டார் மங்கை அனைவர் முன்னிலையில் கேக் வெட்டி முதலில் தன தங்கைக்கு ஊட்டியவன் பிறகு தாய் தந்தைக்கு ஊட்டினான்.குடும்பம் முளுவத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்க அங்கு வேலை செய்வோர் அனைவரும் அவர்களை மெய்மறந்து பார்க்க இன்னும் சற்று நேரத்தில் இவர்கள் சந்தோசம் தொலைய போவதை அறிவார்களோ.

                           இன்று ஏதோ ஒரு வேலையாக தன தந்தையின் அறைக்குள் நுழைந்த சந்துரு அவரின் கம்ப்யூட்டரில் தன வேலையை முடித்தவன் அப்போது அவரின் தபிளில் இருந்த போன் அலற எடுத்து காதில் வைத்தவன்

“அய்யா நீங்க சொன்னமாதிரி அந்த மாதவன் போற வண்டியில் நான் பாம் ந்பிக்ஸ் பண்ணிட்டேன் கார் கிளம்புன  1௦ நிமிஷத்துல அது வெடிச்சுரும்”என சொல்லி அவன் போனை கட் பண்ண சந்துரு உறைந்து போனான்.அப்பாவா பாம் வைக்க சொல்லிருக்காரு யாரு அந்த மாதவன் இத்தனை நாளும் இவர் மறைமுகமா இந்த வேலைதான் பார்த்துட்டு வராரா என அங்கிருந்த files அனைத்தையும் செக் பண்ண அது உறுதியானது.

“சந்துரு யோசிக்க நேரமில்லை நன் இப்போ அந்த மாதவன் உயிரை காப்பற்றி ஆகணும் முதல்ல அவர் யாருன்னு தெரியணுமே என யோசிக்க அப்போது அவன் கண்முன் ஒரு பேப்பரில் கார் நம்பர் இருக்க அதை உடனே தன நண்பனின் மூலம் விசாரித்து அட்ரஸ் போன் நம்பர் வாங்கியவன் நேராக அங்கு செல்ல தன காரை எடுத்தவன் மறுபுறம் மாதவனின் நம்பருக்கு கால் பண்ணினான்.இங்கு அனைவரும் மதுவின் பிறந்த நாளில் கொண்டாட்டமாக இருக்க மாதவன் போன் எடுக்கவில்லை.அவனோ விடாமல் ட்ரை பண்ணினான்.

“போதும் போதும் இன்னைக்கு பூமி பூஜை இருக்கு வாங்க போகலாம் “என அனைவரையும் காருக்கு முன்னே செல்ல சொல்ல மது பின்னோடு வந்தான் அப்போது ட்பாயில் போன் அலற அதை எடுத்தவன்

“ஹலோ”என சொல்ல

“மாதவன் சார் நீங்க போற கார்ல பாம் வச்சுருக்காங்க “என சந்துரு கத்த மதுவுக்கோ அது சரியாக கேட்கவில்லை

“ஹல்லோ யார் பேசுறா சரியா கேட்கல ஹல்லோ “என பேசிக்கொண்டே வெளியே வர அதற்குள் காரில் அனைவரும் ஏறி இருக்க மஞ்சரி காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு

“அண்ணா ஒரு ரவுண்ட் நான் சுத்திட்டு வரேன் பாய்”என டாட்டா காட்டிவிட்டு தாய் தந்தையோடு காரை எடுக்க அவனும் சிரித்துக்கொண்டே கையசைக்க

“ஹல்லோ மாதவன் சார் உங்க காரில் பாம் வச்சுருக்காங்க”என சந்துரு கத்த அப்போது டவர் கிடைத்து சரியாக மதுவின் காதில் விழ சிறிது தூரம் சென்ற கார் அவன் கண்முன்னே வெடித்து சிதற அதை பார்த்து சிலையாக நின்றவன்

“அம்மா அப்பா மஞ்சு”என அந்த வீடே அதிருமளவுக்கு கத்தினான்.அவன் கூக்குரல் கேட்டு அனைவரும் வர அவனோ காரின் அருகில் செல்ல அவனை பிடித்து நிறுத்தினர் அருகே இருந்த அனைவரும் முழுதாக எரிந்து முடிந்த காரினை கண்டு கதறினான் மது அதற்குள் யாரோ தகவல் சொல்ல போலீசார் அங்கு வந்து சோதனையிட உள்ளே இருந்த அனைவரின் உடலும் சாம்பலாகிவிட்டது என கூறிவிட அவனோ மூச்சு பேச்சற்று போனான்.அங்கு வந்த சந்துரு அன்று தான் மதுவை சந்திக்கிறான்.தான் எவ்வளவோ முயன்றும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்பதனை எண்ணி அவனின் கண்ணிலும் நீர் வழிய அதை துடைத்தவன் நேராக தன தந்தையை காண சென்றான்.

                           வீட்டில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க ஆக்ரோஷமாக வரும் மகனை கண்டு

“என்னப்பா சந்துரு காலையிலே வெளிய போயிட்டு வர போ போய் சாப்பிடு”என கூலாக சொல்ல

“ஒரு குடும்பத்தை வேரோட அழிச்சுட்டு இங்க நீங்க நிம்மதியா பேப்பர் படிச்சுட்டு இருக்கேங்க உங்களுக்கு மனசாட்சி இல்லை”என கோவத்தில் கேட்க

“ஓஹோ அந்த மாதவன் குடும்பத்தை பத்தி கவலைபடுரியா அந்த இடத்தை கேட்டேன் கொடுக்கமாட்டேன் சொன்னான் சரி சின்ன பையன் நினைச்ச எனக்கு எதிராவே திமிரா பேசினான் அதான் இதெல்லாம் நீ கண்டுக்காத வா சாப்பிடலாம்”என அவன் தோள்மேல் கை போட அதை வேகமாக தட்டிவிட்ட சந்துரு

“என்னை தொடாதீங்க இந்த பாவப்பட்ட கை என் மேல பட்டாகூட நான் ஏழு ஜென்மத்துக்கும் நல்லா இருக்க முடியாது இத்தனை நாளும் இந்த பாவப்பட்ட பணத்தில் தான் நான் சாப்பிட்டேன் படிச்சேன் வளர்ந்தேன் நினைக்கும்போது எனக்கு அருவெறுப்பா இருக்கு”அப்போது அங்கு வந்த சந்துருவின் தாயாரை பார்த்தவான்

“ஏன்மா நீயும் இவருக்கு உடந்தையா இதெல்லாம் தெரிஞ்சும் நீ கண்டுக்காம இருந்துருக்க சே “என வெறுக்க

“சந்துரு”என சொல்ல

“போதும் என் பேரை சொல்லாதீங்க ஒவ்வொரு குடும்பத்தையும் அழிச்சுதான் என்னை வளர்துருகீங்கன்னு நினைக்கும்போது எனக்கே என்னை நினைச்சா வெட்கமா இருக்கு “என வேதனையில் பேச

“நிறுத்துடா என்ன ஓவரா பேசுற இவ்வளவும் உனக்காகத்தான் நீ சந்தோசமா இருக்கனும்னுதான் நான் இவ்வளவு சொத்து சேர்த்தேன் இதெல்லாம் உனக்குத்தான்”என சுந்தரமூர்த்தி சொல்ல

“எது ஒரு குடும்பத்தை அழிச்சு நான் சந்தோசமா இருக்கனுமா தேவையில்லை ,எத்தனை பேரை அனாதையா அம்மா அப்பா இல்லாம தவிக்கவிட்டுட்டு நீங்கமட்டும் புள்ளையோட சந்தோசமா இருக்கனுமா இனிமே இது நடக்காது உங்களுக்கு இருந்த ஒரு புள்ளையும் செத்துட்டான் உங்களுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை அங்க ஒருத்தன் தன குடும்பத்தையே இழந்துட்டு நிற்கதியா இருக்கான் இனிமே அவன் தன எனக்கு எல்லாம் அவன் நல்ல இருக்ககூடாதுன்னு நினைசீங்கள இனிமே அவன் உங்க முன்னாடி எப்படி வாழ்வான் பார்க்கதான போறீங்க அவனுக்கு துணையா நான் இருப்பேன் இனி எனக்கு எல்லா உறவுமே அவன் மட்டும்தான் அவன் பேர் ஊர் எதுவும் எனக்கு தெரியாது ஆனால் இனி நான் இருந்தா அவன் கூடத்தான் இருப்பேன் அதுவும் அவனுக்கு செருப்பா இருப்பேன் குட் பாய்”என சொல்லி திரும்ப மது கையில் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட சந்துரு

“மது உங்க கோவம் நியாமானது நீங்க கொல்லணும்னு நினைச்சா என்னை முதல்ல சுடுங்க என் அப்பா எனக்காக தான் இவ்வளவு தப்பும் பண்ணிருக்காரு இந்த பாவமூட்டை என்னோட போகட்டும் சுடுங்க “என அவன் முன் மண்டியிட்டு கெஞ்ச தன் குடும்பத்தின் இந்த நிலைமைக்கு காரணம் யார் என்பதை அறிந்த மது வேகமாக அவர்களை அளிக்க கோவமாக வந்தவன் இங்கு சந்துரு பேசுவதை கெட்கு உறைந்து நின்றான்.யார் என தெரியாதவன் தனக்கு இனி காவலாக இருப்பேன் என் சொல்வதை கேட்டு அதிர்ந்தான்.கடைசியில் தனக்காக செருப்பாக இருப்பேன் என கூறியவனின் உள்ளம் எப்பேர்பட்டது  என எண்ணி வியந்து நிற்க தன முன் மண்டியிட்டு அமர்ந்தவனை கண்டு தன துப்பாக்கியை கீழே போட்டவன் அவனின் தோல் தொட்டு எழுந்து நிற்க வைத்து

“நான் உங்க எல்லாரையும் கொல்லணும்னுதான் வந்தேன் ஆனால் உனக்காக இந்த குடும்பத்தை மன்னிசுவிடுறேன்”என சொல்லிவிட்டு திரும்ப அவனின் கையை பிடித்து தடுத்த சந்துரு

“நீ இவரை சுட்டுபோசிக்கியிருந்தா கூட வலி இருந்துருக்காது இனி இவர் இதை நினைச்சு நினைச்சு நிம்மதியில்லாம இருப்பார் இந்த குடும்பத்தில் இனி நான் இருக்கமாட்டேன் உங்க வீட்டில நான் ஒரு ஓரமா இருக்கேன் என்னையும் உன்கூடவே சேர்த்துக்கோ எங்கப்பா செஞ்ச பாவத்துக்கு உன்கூட உனக்காக வேலை செஞ்சு பரிகாரம் தேடிகிறேன்”என கெஞ்ச இதை கேட்டு மது அமைதியாக சென்று காரில் ஏற அவன் பின்னோடு வந்தான் சந்துரு.மதுவோ அவனை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை ஆனால் அவனை உதசினபடுத்தவும் அவனால் முடியவில்லை.

                       தன குடும்பம் இல்லாத இவ்வீட்டில் அவனால் தனியாக இருக்கமுடியவில்லை எங்கு சென்றாலும் தன குடும்பத்தினரே அரவனைப்பதுபோல் உணர அவனால் எங்கும் நிம்மதியாக இருக்கமுடியவில்லை சந்துரு அவனுக்கு உதவியாக இருந்தான் அவனின் சோகமான முகத்தை பார்த்து குற்ற உணர்ச்சியில் தவித்தான்.அவனின் பிசினஸ் அனைத்தையும் சந்துரு ஒரு ஆழகா நின்று கவனித்தான்.அவனையும் கொஞ்ச கொஞ்சமாக மாற்ற நினைத்தான் ஆனால் மதுவோ எதோ மனநிலை பாதிக்கபட்டவன் போல் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து எங்கோ விட்டத்தை பார்த்துகொண்டிருக்க சந்துருவின் பேச்சு அவன் காதில் விழவில்லை.

                      ஒருநாள் மது ஏதோ யோசித்துக்கொண்டு கால் போன போக்கில் நடக்க எங்கிருந்தோ முனகல் சத்தம் கேட்க சத்தம் வந்த திசையில் சென்று பார்க்க ஒருவர் குண்டடிபட்டு சாகும் தருவாயில் இருக்க அவரை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கிளினிக்கில் சேர்க்க அவரை சார்ந்த அனைவரும் கிளினிக்கின் முன் கூட மதுவோ செய்வதறியாது திகைத்தான்.அப்போது மது எங்கு இருக்கிறான் என கேள்விப்பட்டு வந்த சந்துரு அவன் சேர்த்திருக்கும் ஆள் பற்றிய விவரத்தோடு வந்தான்.

“மது நீ ஹோச்பிட்டல் கொண்டுவந்து சேர்த்திருக்க ஆள் இந்த ஊரில் வாழும் நிழலுலக தாதா”என சொல்ல

“ஹ்ம்ம்”என வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.அப்போது வெளியே வந்த டாக்டர் மதுவிடம்

“சார் அவர் இப்போ நல்ல இருக்காரு உங்களை அவர் பாக்கனும்னு சொல்ராறு”என சொல்ல மது உள்ளே செல்ல பின்னோடு சந்துருவும் சென்றான்.அவன்முன் அசைக்க முடியாத தன் மெதுவாக கஷ்டப்பட்டு அசைத்து

“ரொம்ப நன்றி தம்பி”என சொல்ல

“பரவாயில்லை “என அவன் ஒற்றை வரியில் பதில் கொடுக்க நாங்க கிளம்புறோம் என அங்கிருந்து மது கிளம்ப நினைக்க

“ஒரு நிமிஷம் தம்பி”என அவர் தன் கட்டை குரலில் பேச

“சொல்லுங்க”என மது விருப்பமே இல்லாமல் நிற்க

“தம்பி நீங்கதான மதுசூதனன்”என மெதுவாக கேட்க மதுவுக்கும் சந்துருவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது

“இவர்தான் மதுசூதனன் உங்களுக்கு எப்படி தெரியும்”என சந்துரு கேட்க

“இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் குடும்பம் பாம் பிளாஷ்ல இறந்து போயிட்டாங்கள “என கேட்க

“ஆமா”என மது இறுகிய குரலில் கூற

“பாம் வச்சவனே நான்தான்”என சொல்ல கோவத்தில் சந்துரு அவனது சட்டையை பிடித்து

“உனக்கு எப்படி மனசு வந்தது ஒரு குடும்பத்தை கொல்ல உனக்கு மனசாட்சியே இல்லையா உனக்கு ஒரு குடும்பம் இருந்தா இப்படி செய்ய தோணுமா “என கத்த அப்போது அவனை விலக்கிய மது

“விடு அவரை நீ அவரை அடிக்கிரதுனால மட்டும் என் குடும்பம் எனக்கு திரும்ப கிடைச்சுருமா “என கேட்க அதை கேட்டு அந்த தாதாவின் கண்ணில் முதன் முறையாக குற்ற உணர்ச்சி தெரிந்தது.

“என்னை மன்னிச்சுருங்க தம்பி இதுவரை எவ்வளோவோ பாவம் பண்ணிட்டு திமிரா தான் இருந்துருக்கேன் ஆனால் அதை நினைச்சு வெட்கபடுறேன் உங்க குடும்பத்தை கொல்ல சொன்னது சுந்தரமூர்த்தி நான் அவர் சொன்னது செஞ்சதும் எங்க என்னை உயிரோட விட்டா அவருக்கு எதிரா மாறிடுவேன் என்னையும் ஆள் வைச்சு கொல்ல சொல்லிட்டாரு கடவுள் எனக்கு எப்படி ஒரு தண்டனையை கொடுத்திருக்கிறார் பாருங்க உங்க கையில தான் என் உயிர் காப்பத்தபடனும்னு இருக்கு இதுக்கு நான் நன்றி  கடன் செலுத்தியாகணும் தம்பி”என சொல்ல

“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் உங்க தப்பை நீங்க உணர்ந்துட்டேன்களே அதுவே போதும் “என சொல்லிவிட

“தம்பி நான் சொல்றதை கேளுங்க இனி என்னால எந்த வேலையும் செய்யமுடியாது என்னை நம்பி பலபேர் இருக்காங்க அவுங்கள நான் காப்பத்தனும் அதுவுமில்லாம அந்த சுந்தரமூர்த்தி என்னை சார்ந்துருக்கவுங்களையும் சும்மா விடமாட்டான் அவனை எதிர்த்து என்னால இனி போராட முடியாது என் இடத்தில இருந்து இதை நீங்க பாக்கனும்னு நான் ஆசைபடுறேன்”என சொல்ல

“என்ன நீங்க செய்யிற கொலையை இனி நான் செய்யவா”என மது நக்கலாக பேச

“தம்பி தாதான்னு நினைச்சாலே கேட்டதுதான் செய்யனும்னு இல்லை நல்லது செய்யலாம் பக்கபலமா ஆள் இருந்த போதும் கேட்டது செய்யிற எல்லோரையும் தண்டிக்கலாம் அவர்கள் எல்லோரையும் நல்லவர்களா மாற்றாலாம் இன்னும் எவ்வளோவோ பேர் சுந்தரமூர்த்தி மாதிரி ஆட்கள் கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறாங்க அவர்களை காப்பாத்தி ஒரு நல்ல வாழ்வு கொடுக்கலாம் உங்க நல்ல மனசுக்கு இன்னும் எவ்வளோவோ செய்யலாம்”என சொல்ல

“மது இவன் சொல்றதை நாம் ஏன் செய்யகூடாது”என கேட்க

“என்ன உளற”என மது

“நான் உளறல இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இந்த மாதிரி ஆட்களுக்கு பயந்து ஒதுங்கி இருக்க சொல்றநாம இதுக்கு ஒரு முடிவு கட்டிதான் ஆகணும் இன்னும் எத்தனயோ பேர் உன்னை மாதிரி குடும்பத்தை இழந்து தவிக்கிறதை நாம தடுக்கலாம் மது நீ தையிரியமா இந்த பொறுப்பை கையில் எடு உனக்கு பக்கபலமா நான் இருக்கேன்”என சொல்ல

“நாங்களும் இருக்கோம்”தாதாவின் ஆட்கள் அனைவரும் குரல் கொடுக்க மது நல்லது செய்வதற்காகவே இந்த பொறுப்பை கையில் எடுத்தான்.முதலில் இதை கேள்விப்பட்ட  சுந்தரமூர்த்தி கண்டுகொள்ளாமல் விட்டாலும் மதுவின் நடவடிக்கை சுந்தரமூர்த்தியை பயத்திற்கு உள்ளாக்கியது.அவரது எல்லா வேலையையும் இடையில் புகுந்து தடுத்து அவரவர் நிலங்களை திருப்பி கொடுத்தான்.அனைத்து ரவுடிகளையும் குறுகிய காலத்தில் தன கண்ட்ரோலுக்கு கொண்டுவந்தான்.இருப்பினும் தன பிசினஸ் அவன் விடவில்லை எப்பவும் போல் அதில் உயரத்தை கண்டான்.அவனை கண்டு பயபடாதவர்களே இல்லை அவனுக்கு போலி பக்கபலமா சேர்ந்து கொள்ள சுந்தரமூர்த்தி அவனை மறைமுகமாக கண்காணிக்க தொடங்கினான்.அப்போதுதான் மகி சபியின் பற்றி அறிந்து அவர்களை கொன்று விடுவதாக மிரட்ட அவர்களுக்கே தெரியாமல் பாடிகார்ட்ஸ் வேலைக்கு அமர்த்தினான்.தன்னால் மகிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்தில் மகியை விட்டு விலக ஆரம்பித்தான்.ஆனால் அவனின் காதல் அவனை விலக விடவில்லை .இருப்பினும் ஒரு கட்டத்தில் மகியும் மதுவும் தனித்திருக்கும் சமயத்தில் தாக்குதல் நடத்த அவள்முன் துப்பாக்கி ஏந்தி அவளை காப்பாற்றினான்.பின் மகி தன்னைவிட்டு விலகியதும் அவளின் வேண்டுதல் அவள் தன மேல் வைத்திருந்த காதல் எல்லாம் சேர்ந்து இத்தொழிலை கைவிட்டு தன்னை சார்ந்து இருந்த அனைவருக்கும் நல்ல ஒரு தொழிலை அமைத்து கொடுத்து ஒரு ஆசிரமம் தொடக்கி சிறப்பாக நடத்தி வருகிறான்.அதன் மகியின் நினைவில் இருக்க சந்துரு மகின் தந்தையின் முகவரியை கண்டுபிடித்து அவர்கள் காதல் பற்றி தெரிவித்து மது மகியை சேர்த்து வைத்தான்.என சந்துரு அனைத்தையும் கூற மகியோ சிலையென இருந்தாள்.அவளை உலுக்கிய சந்துரு

“மகி அவனைவிட்டு என்னைக்கும் பிரிஞ்சு போகதம்மா இப்போதான் அவன் லைப் ஒரு பிடிப்பு வந்துருக்கு”என சொல்ல

“எப்படி அண்ணா இவ்ளோ சோகத்தை வச்சுக்கிட்டு எங்ககிட்ட நார்மல் இருந்தேங்க”என மகி கேட்க

“நீங்க என் வாழ்க்கையில் வந்த பின்னாடி சந்தோஷம் தான் எங்களுக்கு மது உன்கூட இருந்தாலே எதையும் நினைக்க மாட்டான் “என சொல்ல மகியோ வாயடைத்து நின்றாள்.அப்போது அங்கே வந்த சபி

“ஹேய் சந்துரு உன்னை எங்கெல்லாம் தேடுறது இங்க உன் பாசமலர் தங்கசிகிட்ட கதை பேசிட்டு இருக்கியா கொஞ்சம் ரூம் வரியா மேல இருக்க என் ட்ரோலிலதேவையில்லாத டிரஸ் எல்லாத்தையும் வைக்கணும்”என சொல்ல

“இதோ வரேன்”என அவள் பின்னே செல்ல மகியோ இருந்த இடத்தை விட்டு நகரவில்லை மது தனக்காக தன தொழிலை விட்டு தான் சொன்ன ஒருவார்த்தைக்காக தன்னை தேடாமல் தன நினைவிலே காத்திருந்ததை எண்ணி வியந்தாள்.அப்போது உள்ளே நுழைந்த மது

“மகி என்ன பண்ற ஒரு காபி எடுத்துட்டு வா தலை வலிக்குது”என சொல்லி டிரஸ் சேன்ஜ் பண்ண அவளோ அவன் வந்ததையும் அறியாமல் இருக்க அவள் அருகே வந்த மது

“மகி”என உலுக்க அவனை கண்ட மகியோ இறுக கட்டிக்கொண்டு

“i love you தனா”என சொல்ல அதைகேட்டு மது திகைத்தான்.இதுவரை தங்கள் காதலை பரிமாறாமல் இருந்த இருவரும் இன்று மகி அந்த வார்தையை சொன்னதும் மகிழ்ச்சியில் திளைத்தான்அவளை தன முன்னே நிறுத்தி

“என்ன சொன்ன”என கேட்க

“i love you தனா”என சொல்ல அதை கேட்டு அவளை மேலும் இறுக கட்டியனைத்தவன் பின் அவளை விடுவித்து

“இன்னும் ஒருதடவ சொல்லு மகி”என கண்களால் கெஞ்ச

“i love you i love you i love you i love you”என அந்த அறையே அதிருமளவுக்கு கத்த அவள் இதழை தன இதழால் சிறை செய்தான் மது.பின் அவர்கள் இருவரின் தேடல்கள் ரம்யமாக தொடங்க கதிரவன் தன கண்ணை மூடி அவ்விடத்தைவிட்டு மறைந்தான்.

                         சபி தன அறையை ஒழுங்குபடுத்திகொண்டிருக்க அப்போது அங்கு வந்த மகி

“என்னடி உனக்கு செட்டாகாதா வேலையெல்லாம் செய்யிற”என கேட்க

“ஏண்டி சொல்லமாட்ட நானும் இதெல்லாம் அவன் செய்வான் பார்த்தா அவன் எனகுமேல ரூம்ல குப்பையை போடுறான்என் ரூம்ல என்னாலையே இருக்கமுடில பொறுத்து பொறுத்து பார்த்தேன் போனா போகுதுன்னு நானே ஒழுங்குபடுதுறேன்”என சொல்ல அப்போதுகீழே பெட்ஷீட் பில்லோ தனியாக இருப்பது கண்டு

“யார் சபி கீழ படுக்கிறா”என கேட்க அதை கேட்டு திகைத்த சபி

“யாருமில்லையே”என சமாளிக்க

“அப்புறம் எதுக்கு கீழ இதெல்லாம் இருக்கு”என கேட்க

“அதுவா வாஷ் பண்ண எடுத்து போட்ருக்கேன் “என சொல்ல மகிக்கு  அனைத்தும் நொடியில் புரிந்துவிட்டது இதற்கொரு வழி பண்ணவேண்டும் நினைத்துகொண்டு அங்கிருந்த நகர சபியோ

“அப்பாடா இவகிட்ட மாட்டினோம் அவ்ளோதான்”என நினைத்து சந்துருவின் டிராவை திறக்க அதில் சபி அசோக் சேர்ந்திருந்த போட்டோ கண்டு அதிர்ந்து நின்றால்.

“இது எப்படி இவன் கையில்”என யோசிக்க அன்று அசோக் இதை வைத்து மிரட்டுவதாக கூறியிருந்தது சந்து தான் பார்த்துகொள்வதாக கூறியது அனைத்தும் நினைவு வர அவள் விழியில் நீர் கோர்த்தது.சந்துரு தனக்காக எவ்வளவு செய்திருக்கிறான்.எல்லாம் எனக்காக அப்பொழுதெல்லாம் நான் அசோக் காதலிப்பது அவனுக்கு தெரிந்திருக்கும் ஆனால் அவன் தன்  காதலை விட என் காதலை மதித்தான்.நான் அவனை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். மது அண்ணா அவன் தன்னை உயிருக்கு உயிராக காதலிப்பது பற்றி கூறும்போது கூட அவன் மீதுள்ள நட்பின் அடிப்படையில் தான் கல்யாணத்திற்கு சம்மதித்தேன்.என தன் மனதை குழப்ப அப்போது சந்துரு வர அவசரமாக உள்ளே வைத்தவள் அவன்முன் எதையும் காட்டாமல் நகன்றாள்.

                           மகி ஹாலில் அமர்ந்து இவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற தீவிர யோசைனையில் இருக்க சந்துரு அங்கு அவ்ள்முன்னே அமர்ந்து பேப்பர் படித்துகொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சபி அவர்கள் முன்னே செல்ல

“என்ன அண்ணா ஆபிஸ் போகலையா”என மகி கேட்க சபி கீடுகொண்டே டைனிங் தபிளில் தண்ணீர் குடிக்க சந்துருவோ

“கொஞ்சம் லேட்டா போகலாம்னு இருக்கேன்மா”என சொல்ல

“அதான ஆபிஸ் சொந்தகாரர் என் புருஷன் சீக்கிரம் கிளம்பிட்டாரு நீங்க அவருக்கு கீழ எடுபிடி வேலை பர்க்குறவர் தான மெதுவாக போங்க”என நக்கலாக பேச இவள் பேச்சு புரியாமல் சந்துரு குழம்ப சபிக்கோ மகி பேசியதை கீடு கோவம் தலைக்கு ஏறியது.

“என்ன ,மகி சொல்ற புரியல”என சந்துரு கேட்க

“என்ன சொல்றேன்னா ஒழுங்கா ஆபிஸ் போய் வேலையை பார்க்கம எப்பபாரு வீட்டுல தண்டசோறு சாப்பிட்டு பொண்டாட்டியை கொஞ்சிட்டு இருந்தா நான் சொல்றது எப்படி உங்களுக்கு புரியும் “என மகி சபி தன்னருகே வருவதை கவனித்துக்கொண்டே பேச சந்துரு மகி ஏன் இப்படி பேசுது என குழம்பி தவித்தான்.

“உங்களுக்கு அமைஞ்ச வாழ்வு அப்படி அண்ணா ஓசி சாப்பாடு ஓசியில வீடு அதுவும் பங்களா மாதிரி பின்ன எப்படி உடம்பு வளையும்”என சொல்லி முடிப்பதற்குள் மகியின் இரு கன்னத்திலும் பளார் என்று அறை விழுந்தது

“என்ன இது ஒரு பக்கம் தான அறைஞ்சுருப்பா  ஆனா அடி ரெண்டு கன்னத்திலையும் விழுதே ஹப்பா என்ன தலை சுத்துது ஒருவேளை போக்கிரி விஜய் அடிசுட்டரோ பொறி கலங்கி தலை சுத்துதே சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு “என மகி மனதினுள் புலம்பிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க கோவமாக சபியும் மதுவும் எதிரே நிற்பது கண்டு மகியோ

“ஹய்யோ இவன் இந்த சீன்லையே இல்லையேடா திடீர்னு என்ட்ரி கொடுக்கிறான் இவன் எப்போ வந்தான் சரி சரி சாமாளி”என இருவரையும் கஷ்டப்பட்டு வரவழைத்த திமிராக பார்க்க

“என்னடி உன் புருஷன் சம்பாரிக்கிரதுல நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம்னு சொல்ற என் புருஷன் இல்லேன்னா உன் புருஷனுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது “என அவளிடம் சொல்லிவிட்டு மதுவிடம் திரும்பி

“மன்னிச்சுருங்க அண்ணா எனக்கு வேற வலி தெரியலை”என சொல்ல

“உன் புருஷனுக்கு அதிகம் வேலை வைக்ககூடதுன்னு ராத்திரி பகலா கண்முழிச்சு எல்லா வேலையும் என் புருஷன்  முடிச்சு கொடுக்கிறார் அது தெரியுமா உனக்கு என்ன சொகுசு வாழ்க்கை வந்ததும் பழசெல்லாம் மறந்து போச்சா நீ ஒரு ஏழை வீட்டில் இருந்துதான் வந்துருக்கணு முதல்ல புரிஞ்சுக்க”என சபி சொல்ல மகி

“என்னடி வார்த்தைக்கு வார்த்தை என் புருஷன் என் புருஷன் சொல்ற அவரை லவ் பண்ணியா கல்யாணம் பண்ண வேண்டா வெறுப்பா தான கல்யாணம் பண்ண இப்போ என்ன திடீர்னு பாசம் பொங்குது”என மேலும் அவளை வெறுப்பேத்த இதை கேட்ட சபியோ

“அதை உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை”என அவளிடம் சொல்லிவிட்டு மதுவிடம் திரும்பி

“அண்ணா நாளைக்கே நாங்க இந்த வீட்டை காலி பண்றோம் எங்களை மன்னிச்சுருங்க “என சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு வேகமாக செல்ல மதுவோ அவளிடம்

“உன்னை கல்யாணம் பண்ணதுக்கு முதன் முதலா இன்னைக்கு வெட்கபடுறேன் சீ “என சொல்லிவிட்டு அவன் வேகமாக வெளியே செல்ல மகி தலை சுத்துவது போல் இருக்க அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.அப்போது அவள்முன் தண்ணீர் நீட்டிய சந்துருவை கண்டு போய்கோவமாக முகத்தை திருப்ப அதைகண்டு சிரித்த சந்துரு

“போதும் தங்கச்சி எல்லோரும் போய்ட்டாங்க நீ நாடகத்தை நிறுத்தி பிரேக் எடுத்துக்கோ”என சொல்ல அதைகேட்டு ஆச்சர்யமடைந்த சந்துரு

“எப்படி அண்ணா கண்டுபிடிச்சீங்க நான் நல்லா நடிக்கலையா”என சோகமாக கேட்க

“நீ நல்லா நடிச்சதுனாலதான் உன் ரெண்டு கன்னமும் பழுத்துருக்கு”என சொல்லி சிரிக்க  

“ஆனாலும் உங்க பொண்டாட்டி இவ்ளோ வேகமாக அடிசிருக்ககூடாது”என தன கன்னத்தை தடவியவாறே கேட்க

“ஏன்மா இப்படி பண்ற எல்லோரும் உன்னை தப்பா நினைக்கிறாங்க”என சொல்ல

“சபி உங்களை காதலிக்கிறதை புரியவைக்கத்தான் இது”என சொல்ல

“எது உன்னை அடிச்சா என்ன அவள் லவ் பண்றான்னு அர்த்தமா “என நக்கலாக கேட்க

“ஆமா”என அவள் சிரித்துக்கொண்டே சொல்ல

“உளறாத மகி அவளுக்கு அசோக் மேல தான் காதல் அவனுக்காகத்தான அன்னைக்கு உன்னையே திட்டினாள்”என ஆதங்கமா பேச

“அவளுக்கு உங்கமேல மட்டும் தான் காதல் இருக்கு அதுனாலதான் இன்னைக்கு நான் பேசின பேச்சுக்கு என்னையவே கைநீட்டி அடிச்சிட்டா”என மகி  சொல்ல ஏதோ அவனுக்கு புரிவதுபோல் இருக்க மகியோ

“இதை அவளே  சொல்லுவா நீங்க இப்போ ரூம்க்கு போங்க எல்லாம் தன்னால புரியும்”என சொல்லி அவனை அங்கிருந்து அனுப்ப அவனும் ஒன்றும் புரியாமல் ரூம்குள்ளே வர சபியோ கோவத்தின் உச்சகட்டத்தில் இருந்தாள்.

“எவ்ளோ தயிரியம் இருந்தா என் புருஷனவே பேசிருப்பா.இவள் எப்படி இந்த அளவுக்கு மாறினா சே பணம் வந்துட்டா எல்லோரும் இப்படிதான் போல பாவம் சந்துரு மனசு எவ்ளோ கஷ்டபட்டிருக்கும்”என நினைக்க

“சந்துரு மனசு கஷ்டபட்டா உனக்கென்ன நீ ஏன் இவ்ளோ கோவபடுற”என அவள் மனசாட்சி அவளையே கேட்க

“என்ன கேள்வி அவன் என் புருஷன் அவனை யாராவது ஒரு வார்த்தை சொன்னா எனக்கு கோவம் வராத “என பதில் கொடுக்க

“யாரவது தன் புருஷன சொன்னா கோவம் வரத்தான் செய்யும் ஏன்னா அவுங்க லவ் பண்றாங்க வரும் நீதான் சந்துருவை காதலிக்கலையே பின்னே உனக்கு ஏன் வருது”என மனசாட்சி கேட்க அவளோ சட்டென்று

“யார் சொன்னா நான் லவ் பண்ணலேன்னு “என திருப்பி கேட்க

“மகி சொல்லிருக்க அதுவுமில்லாம ஏன் உனக்கு தெரியாத நீ சந்துரு மேல வச்சுருக்கது வெறும் நட்புதான் “என மனசாட்சி கேட்க

“இல்லை “என அவள் வாய்விட்டே கத்த அப்போது அதைகேட்ட சந்துரு

“என்ன இல்லை”என கேட்க அப்போதுதான் தான் வாய்விட்டு கத்தியிருக்கிறோம் என்பது புரிய அவனிடம்

“ஒண்ணுமில்லை நாம நாளைக்கே இந்த வீட்டை காலி பண்றோம்”என சபி

“எதுக்கு”என சந்துரு கேட்க

“என்ன உங்களுக்கு மூளை குழம்பி போச்சா அவள் உங்களை இன்னைக்கு எவ்ளோ பேசிருக்கா பாருங்க”என கேட்க

“”அதைபத்தி நீ ஏன் கவலைபடுற”என சந்துரு கேட்க

“ஏன்னா நான் உங்க பொண்டாட்டி நான் கவலைபடாம வேற யார் கவலைபடுவா”என அவள் திருப்பி கேட்க

“பொண்டாட்டியா எதை வச்சு அப்படி சொல்ற ஓஹோ இந்த கழுத்துல தொங்குதே இந்த தாலியை வச்சு சொல்றியா “என கேட்க அவளோ அமைதியாக இருக்க சந்துரு தொடர்ந்தான்

“இதை நான் உன்னை லவ் பண்ணேன் கட்டினேன் நீ என்னை லவ் பண்ணலையே வேண்டா வெருப்பாதான இதை நீ கழுத்துல வாங்கின மகி கேட்டதுல ஒன்னும் தப்பில்லையே நீ என்ன என்னை லவ் பண்ணியா கல்யாணம் பண்ண”என கேட்க சந்துருவை  பளார் என்று அறைந்தாள் சபி அவனோ இதை எதிர்பாராத செயலில் முழித்துகொண்டு நிற்க

“அவளும் நீயும் இன்னைக்கு என்கிட்டே அடிவாங்கனும்னு விதி இருக்கோ என்னமோ”என சொல்லிக்கொண்டே அவனிடம்

“என்ன சார் கேட்டேங்க திருப்பி கேளுங்க “என தன கையை தேய்த்தாவாறே புருவத்தை உயர்த்தி கேட்க அவனோ

“எதுக்குடி அடிச்ச”என கேட்க

“பின்ன நீ கேட்ட கேள்விக்கு நான் வேற மூட்ல இருந்துருந்தேன்னா கொலை பண்ணிருப்பேன் “என அவள் சொல்ல

“நான் என்ன தப்பா கேட்டேன் நீ என்னை லவ் பண்ணியான்னு தான கேட்டேன்”என கேட்க

“என்ன நான் உன்னை லவ் பண்ணாமலா கல்யாணம் பண்ண ஒத்துகிட்டேன் உன்னை பிடிக்கலேன்னு நினைச்சுருந்தா கல்யாணம் மண்டபத்தை விட்டு ஓடுறது எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது”என அவள் கேட்க அவனோ அமைதியாக இருந்தான் அவள் தொடர்ந்தாள்

“நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா”என கத்தியவள் அவனின் சட்டையை கொத்தாக பிடித்து அவனி முரட்டு இதழை சிறை செய்தாள்.சந்துவோ இதில் திக்குமுக்காட அவளோ அவனின் விடாமல் பற்ற சந்த்ருவுக்கோ இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த தன் உணர்ச்சிகள் மேலோங்க அவளை இறுக கட்டியனைத்தவன் இடையோடு சேர்த்து தூக்கி கட்டிலுள் விட சபியோ இதோலோற்றளில் தன்னை மறந்திருக்க சந்துருவோ அவளின் தேகத்தில் விளையாட ஆரம்பித்தான் சபியும் அதில் மெய்மறந்து தன்னவன் தேடலுக்கு வலி கொடுக்க அவனோ அவளை ஆசையாக அள்ளி அணைக்க இருவரின் தேகமும் அந்த ac அறையிலும் நனைய அதை பொருட்படுத்தாமல் தங்களின் தேடலை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.இருவரின் ஆடையும் ஒரு ஓரமாக வேலையில்லாமல் இருக்க ஒரு போர்வைக்குள் தங்கள் வாழ்க்கையை அழகாக ஆரம்பித்தனர்.சபி கலைத்து உறங்கிவிட சந்துரு அவளின் குழந்தை தனமான  முகத்தை தூங்காமல் ரசித்துகொண்டிருந்தான்.

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது

வா வா வா…

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்

தனிமையே போ போ இனிமையே வா

பூவும் முல்லாய் மாறிப்போகும்

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது

காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்

இதயமே ஓ உதயமோ சொல்

நீரும் வேரும் சேர வேண்டும்

 

                                                      துயில் கலைந்தவள் தன்னவன் தூங்காமல் இருப்பது கண்டு

“என்னடா துங்கலையா”என பதறியபடி கேட்க

“துக்கம் வரலை”என சொல்ல

“ஏன்”என கேட்க

“நீ பக்கத்தில் இருக்கும்பொது என்னகேப்படி தூக்கம் வரும் “என சிரித்துக்கொண்டே சொல்ல அவளோ அழகாக வெட்கபட்டாள்.அப்போது சந்துரு

“எப்போ இருந்து சபி என்னை காதலிக்க ஆரம்பிச்ச”என கேட்க

“உன்னை பார்த்ததில் இருந்துதான்”என சொல்ல

“பொய்”என அவன் சொல்ல

“என்னைக்கு உன் கையில் என்னை தூக்கினையோ அப்போ இருந்துதான் ஆனால் அது காதல் தான் எனக்கு தெரியலை முதன் முதல் உன்னை பார்த்தப்பவே அந்த அசோக் உன்னையும் கம்பர் பண்ணேன் அப்பவே என் மனசு என்னவோ சொன்னது அது எனக்கு புரியலை”என சொல்ல

“அப்போ நீ அந்த அசோக் காதலிச்சுட்டு இருந்தேல”என சோகமாக கேட்க அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டியவள்

“நான் அவனை காதலிக்கலை அவன் என்கிட்டே லவ் சொன்னப்போ எனக்கு மனசு பிடிச்சு ஓகே சொல்லல ஏதோ அவன் மேல ஒரு பரிதாபம் அது காதல்னு தான் தப்ப புரிஞ்சுகிட்டேன்.அதையும் கடைசியில அவன் பர்த்டே பார்ட்டியில் மகி எனக்கு புரிய வச்சுட்டா”என சொல்ல

“அப்போ அன்னைக்கு அவனுக்காக தற்கொலை பண்ணிக்க போகலையா”என கேட்க

“டேய் என்னடா சொல்ற நான் எப்போ தற்கொலை பண்ணிக்க போனேன்”என கேட்க

“அதான் ecr ரோட்டில இருக்க பீச் நான் தான் உன்னை காப்பதினேன் மறந்துட்டியா”என கேட்க

“அவன் சொன்னதுல ஏமந்துட்டோமேன்னு வெறுப்புல நின்னுட்டு இருந்தேன் சும்மா நின்னுட்டு இருந்தவள பிடிச்சு தற்கொலை பண்ணிக்க போனேன் சொல்ற நான் உள் நீச்சல் அடிக்கிரவ “என சொல்ல

“அப்போ நீ அவனை லவ் பண்ணலையா”என கேட்க

“இல்லைடா எருமை உன்னை என்னைக்கு பார்தொனோ அன்னைக்கு இருந்து உன் மேல ஒரு ஈர்ப்பு ,உன்கூட மகி சிரிச்சு பேசினாலே எனக்கு பிடிக்காது முதல்ல நட்பு தன நினைச்சேன் ஆனால் உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்குள்ள ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துச்சு நீ ஒரு பொண்ணை ஒன்சைடா லவ் பண்றேன் சொன்னதும் எனக்கு ஒரு அழுகையா வந்தது அப்புறும் அவள் லவ் பண்ணலன்னு சொன்னதும் தான் எனக்கு தூக்கமே வந்துச்சு அப்பாவும் உன் மேல இருக்க பொசசசிவே காரணம்னு நினச்சேன் ஆனால் இன்னைக்கு மகி காதல்ன்னு உணர்த்திட்டா”

“i love you டா கருவாய”என சொல்ல

“உன்னை “என சொல்லி அவள் கன்னத்தை கடித்தவன்

“i love you டி “என சொல்லி அவன் மீண்டும் தேடல் தொடங்க நிலவு வெட்கப்பட்டு ஒளிந்துகொண்டது.

                             கலையில் இருந்தே மகிக்கு ஒரே தலை சுற்றுவது போல் இருக்க அதோடு எழுந்து கீழே வந்தவள் முன் சபி தன பெட்டியை எடுத்து வைக்க மகியோ நேற்று என்ன நடந்ததுன்னு தெரியாம எதுவும் பேசக்கூடாது என மனதில் எண்ணியவள் அமைதியாக அவளை பார்க்க

“நாங்க கிளம்புறோம் “என சொல்ல

“நீ ஏன் சபி கிளம்புற”என மது தன கையில் ஒரு பெட்டியை கொண்டுவர அதைகண்டு மகி

“இவன் என்னத்துக்கு கையில் பெட்டியோட வரான் ஒருவேளை இவன் வேட்டை விட்டு கிளம்புறான் பாரு பெட்டியை கூட மாத்தி தஊக்கிட்டு வரான் டேய் அது என் பெட்டி டா”என நினைக்க சபியோ

“அண்ணா நீங்க எதுவும் சொல்லதேங்க நாங்க கிளம்புறோம் மரியாதை இல்லாத வீட்டில் ஒருநிமிஷம் கூட இருக்க மாட்டோம்”என சொல்ல

“சபி இந்த வேட்டை ஆபிஸ் எல்லாத்தையும் உன் புருஷன் பேர்ல எழுதி வச்சுட்டேன் இனிமே நீதான் இந்த வீட்டுக்கு முதலாளி”என மகியை முறைத்துக்கொண்டே சொல்ல மகி கண்டும் காணமல் இருக்க

“நீங்க இங்க இருக்கலாம் போகவேண்டியவுங்க போகட்டும்”என மகியை பார்த்து சொல்ல

“நீ உன் வீட்டுக்கு கிளம்பு”என மகியை பார்த்து சொல்ல மகியோ

“யாரை சொல்றான் “என நினைத்து தனக்கு பின்னால் திரும்பி பார்த்துவிட்டு பின்

“,மீ”என கேட்க

“எஸ் you”என சொல்ல

“ஒஹ் ஓகே “என அவளும் நேற்று என்ன நடந்தது என தெரியாமல் நாம் எதுவும் பேசமுடியாது என்ற காரணத்தால் கிளம்ப அப்போது உள்ளே நுழைந்த சந்துரு கையில் கொண்டுவந்திருந்த ஸ்வீட் எடுத்து மகிக்கு ஊட்டிவிட அவளும்

“சக்செஸ்”என கேட்க

“எஸ் மகி நீ சொன்னதுதான் நடந்தது தேங்க்ஸ் மகி”என சொல்ல மகிக்கு தான் நினைத்தது நடந்துவிட்டது நிம்மதியடைய

“இந்த மனுஷனுக்கு என்னாச்சு நேத்துத்தான அவள் உன்னை கழுவி கழுவி ஊத்தினா இப்போ பாரு அவளுக்கு ஸ்வீட் ஊட்டுரதை கடவுளே”என சொல்ல

“டேய் அவளை விடுடா அவள் கிளம்பட்டும்”என மது சொல்ல

“எங்க மகி கிளம்புற “என கேட்க

“அவள் இந்த வீட்டை விட்டு கிளம்புறா இனிமே அவள் இங்க இருக்ககூடாது”என மது சொல்ல மகிக்கோ தலை ரொம்ப சுத்த மயங்கி சரிந்தாள் அவளை தாங்கிய சந்துரு சோபாவில் படுக்க வைத்து டாக்டர் கால் பண்ணி வர சொல்லிவிட்டு மதுவிடம்

“எதுக்கு அவளை வீட்டை விட்டு போக சொல்ற”என கோவமாக கேட்க

“என்னடா நீது அவள் உன்னை எப்படி பேசினாள் மறந்துட்டியா அதன் என் சொத்து எல்லாத்தையும் உன் பேர்க்கு மாத்தி கொடுத்துட்டேன் அப்போதான் அவளுக்கு தன புருஷன் பணக்காரன் என்ற திமிரு குறையும்”என சொல்ல

“நீ என்னை என் பேர்க்கு மாத்தி எழுதுறது மகி எப்பவோ மெயின் ஆபிஸ் என் பேர்க்கு மாத்தி எழுதிட்டாங்க”என சொல்ல மதுவும் சபியும் அதிர்ச்சியாக

“அன்னைக்கு மகி உன்கிட்ட ஒரு டாகுமென்ட்ல கையெழுத்து வாங்குனது எதுக்குன்னு தெரியுமா”என அன்று நடந்த நிகழ்வுகளை கூற சபியும் மதுவும் மேலும் உறைந்து போயினர்

“பின்னே ஏன் நேத்து உங்களை அவள் அப்படி பேசினா”என சபி புரியாமல் கேட்க

“ஹ்ம்ம் உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கத்தான் என் மேல நீ வச்சுருக்க காதலை வெளிய கொண்டுவர அவள் போட்ட நாடகம் இது புரியாம சே”என சந்துரு வெறுப்பாக பேச அந்த நேரம் பார்த்து டாக்டர் வர அனைவரும் அமைதியாயினர்.மகியை பரிசோதித்த டாக்டர்

“டோன்ட் வொர்ரி எல்லாம் நல்ல விஷயம் தான் ஷி இஸ் பிரக்நென்ட் “என சொல்ல அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க மதுவுக்கோ அந்த செய்தி கேட்டு கண்ணில் நீர் வர மயக்கத்தில் இருந்த அவளை தன கையில் ஏந்தியவன் தன அறைக்கு கொண்டு சென்றான்

“சாரி சந்துரு எனக்கு தெரியாது மகியை நான் ரொம்ப பேசிட்டேன்”என சந்த்ருவிடம் மன்னிப்பு கேட்க

“மகி உன்னை மன்னிச்சா நான் உன்கிட்ட பேசுறேன் அதுவரை என் கண்முன்னாடி வராத”என சொல்லிவிட்டு கோவமாக அங்கிருந்து நகன்றான்.

                                 மயக்கத்தில் இருந்து கண்விழித்த மகி தன்னையே பார்த்து அமர்ந்திருக்கும் மதுவை கண்டும் கானதவள் போல் தன பெட்டியை எடுத்துகொண்டு நகர அப்போது அவளை கைபிடித்து தடுத்த மது

“எங்க போற மகி”என கேட்க

“நீதான் என் வீட்டுக்கு போக சொல்லிட்டயே இப்போ என்ன கேள்வி”என கேட்க

“என்னையும் கூட்டிட்டு போ”என மது சொல்ல

“என்ன சொல்றான் இவன் “என யோசிக்க  மதுவோ

“சந்துரு எல்லாம் சொன்னான் சாரி மகி உன்னை புரிஞ்சுக்காம அடிச்சுட்டேன் என்னை மன்னிச்சுரு மகி”என கேட்க

“அப்போ சந்துரு அண்ணாவும் சொல்லலேன்ன நீ என்னை வீட்டை விட்டு அனுப்பிருப்ப ஆக உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லை இதுதான் நீ என் மேல வச்சுருக்க காதலா”என கோவமாக கேட்கஅவனோ அமைதியாக நிற்க

“போடா”என சொல்லிவிட்டு நகர அவளை இழுத்து தன்னோடு அணைக்க

“டேய் என்னை விடுடா “என மகி திமிர

“i love you மஹா”என சொல்ல அதைகேட்டு தன் முட்டைகண்ணை விரித்தவள் கோவத்தில்

“போடா நான் அன்னைக்கு சொன்னப்போ சொன்னியா”என கோவப்பட

“i love you டி பொண்டாட்டி”என கொஞ்ச அவளோ

“டேய் விடுடா இப்படியெல்லாம் பண்ணா என் கோவம் குறையும்னு நினைச்சியா”என கேட்க

“சரி வேற பண்றேன் “என சொல்லி அவளை தூக்கி கட்டிலில் படுக்கவைக்க அவளோ

“ஹேய் என்னை விடு யாராவது என்னை காப்பாத்துங்க”என கத்த அவனோ அவளை அடுத்து பேசவிடாமல் செய்தான்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு:

“மதுரிமா”என சந்துரு  அழைக்க

“சக்தி”என மது அழைக்க இருவரும் வீட்டில் இல்லாதததால் சந்த்ருவிடம் சென்று

“டேய் என் புள்ளை சக்தியை பார்த்தியா”என கேட்க சந்துருவோ

“முதல்ல நீ என் பொண்ணை பார்த்தியா”என கேட்க

“இல்லைடா “

“டேய் சீக்கிரம் கண்டுபிடிக்கனும்டா இல்லை இவுங்க என்ன வேலை செஞ்சுருக்கோ அதுக்கு தண்டனை நாம வாங்கணும்”என சந்துரு சொல்ல மது தலையாட்டினான்.மதுவுக்கும் –மகிக்கும் பிறந்த பெண் தான் மதுரிமா சந்துரு பிறந்ததில் இருந்து ஆசையாக வளர்த்தால் அது சபிக்கும் சந்துருவுக்கும் செல்லக் குழந்தையாகி போனது அதுபோல் அடுத்த வருஷம் சன்றுவுக்கும் சபிக்கும் பிறந்த பெண் தான் சக்தி மதுவுக்கும் மகிக்கும் செல்லமாகி போனது இருவரும் தங்கள் செல்லகுட்டிகளை தேடிகொண்டிருக்க அவர்கள் இருவரும் எதிர்வீட்டு குழந்தை வைத்திருந்த பந்தை பிடுங்கிக்கொண்டு ஓடி வர அப்போது அவர்கள் இருவரையும் பிடித்த மகி மற்றும் சபி

“அடியேய் எதுக்கு பக்கத்து வீட்டு பாப்பா வச்சுருந்த பந்தை எடுத்துட்டு வர அப்பா எத்தனை பந்து வாங்கி கொடுத்திருக்காரு”என அவர்கள் கதை திருகியபடி கேட்க அப்போது அங்கு வந்த மது சந்து இருவரும் தத்தம் பிள்ளைகளை தூக்கி

“எங்கட செல்லம் போனீங்க”என கேட்க

“பக்கத்து வீட்டு பாப்பா வச்சுருந்த பந்தை திருட போச்சுங்க”என மகி சொல்ல

“இல்லப்பா அந்த பொண்ணு நேத்து வேணும்னே மதிமா(மதுரிமா என்பதை தன மழலை மொழியில்”மேல அதை தூக்கி போட்டு சிரிச்சது அதான் நாங்க அவ பந்து எடுத்துட்டு வந்டோம்”என சொல்ல மது சக்தியின் கன்னத்தில் முத்தம் கொடுக்க

“அண்ணா அவளை செல்லம் கொடுத்து கெடுக்காதீங்க”என சொல்ல

“விடு சபி வழக்கம் போல நம்ம பனிஷ்மென்ட் கொடுக்க வசதியாத்தான் பன்னுதுக”என மகி சொல்ல

“ஹய்யோ இப்போ என்ன பனிஷ்மென்ட்”என இருவரும் ஒருசேர கேட்க

“இன்னைக்கு இவுங்க ரெண்டு போரையும் கதை சொல்லி தூங்க வைக்கணும்”என சொல்ல

“சுப்பர் மகி நம்ம நிம்மதியா துங்கலாம்”என சபி கைகொடுக்க

“அப்போ இன்னைக்கு எங்களுக்கு சிவராத்திரியா”என சந்துரு தலையில் கைவைக்க சபியும் மகியும் சிரித்தனர்,ஒருவழியாக இருவரும் அவர்களை தூங்கவைத்துவிட்டு தங்கள் இணைகளை தேட அவர்களோ மெய்மறந்து தூங்க சந்துருவோ சபியை கீழே தள்ளிவிட மது மகியின் முகத்தி தண்ணீர் தெளிக்க இருவரும் அவசரமாக எழுந்தனர்

“எதுக்குடா என்னை கீழ தள்ளுன”என சபி கேட்க

“ஏண்டி இங்க நான் தூங்காம இருக்கேன் நீ என்னடான்னா குறட்டைவிட்டு தூங்குற”என கோவமாக கேட்க

“உன் பொண்ணு அப்படி பண்ணுது அதான் நல்லா பனிஷ்மென்ட் கொடுத்தா மகி”என சொல்ல

“இன்னி நீ தூங்கமாட்டா “என சொல்லி அவளை நெருங்க

“டேய் தூக்கம் வருது என்னை விடு”என சொல்ல அவளை அடுத்து பேசவிடாம பண்ணான்.

“என்னங்க தண்ணியை சிந்தாம குடிங்க”என தூக்கத்தில் சொல்ல

“அடியேய் நான் உன் மேல தண்ணி தெளிச்சேன்”என மது சொல்ல

“அப்படியா”என சொல்லி தன தூக்கத்தை தொடர

“இங்க மனுசன தூங்கவிடாம பனிஷ்மென்ட் கொடுத்துட்டு நீ நிம்மதியா தூங்கிரியா “என நினைத்து அவள்மேல் தண்ணீர் முழுக்க ஊற்ற அலறியடித்து எழுந்தவள்

“டேய் உன்னை “என அவனை துரத்த அவனும் அவளை ஓட விட்டவன் பின் அவளை தன்னோடு சேர்த்து அனைத்து

“நீயில்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை மகி “என காதலோடு சொல்ல

“நீங்கதான் என் வாழ்க்கை மது”என ,மகி கூற

“இல்லை மகி உன் காதல் தான் என்னை இந்த அளவுக்கு மாத்தினது “என அவளை விலக்கி நிறுத்தி அவள்முன் மண்டியிட்டு

“உருகினேன் உந்தன் காதலில் உயிர் உள்ள வரை உன் காதலில் நான் வாழவேண்டும்”என மது தன நெஞ்சில் கைவைத்து அவளை பார்த்து சொல்ல

உயிரின் உயிரே உனது விழியில்

என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும்போதும் உறங்கிடாமல்

கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேறு என்னக் கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்

என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும்போதும் உறங்கிடாமல்

கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில்

தோழி போல மாறுவேன்

சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்

தாயை போல தாங்குவேன்

வேறு பூமி வேறு வானம்

தேடியே நாம் போகலாம்

சேர்த்து வைத்த ஆசையாவும்

சேர்ந்து நாமங்கு பேசலாம்

அகலாமலே அணுகாமலே இந்த

நேசத்தை யார் நெய்தது

அறியாமலே புரியாமலே

இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்

என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும்போதும் உறங்கிடாமல்

கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது

தூரம் சென்று சேரத்தான்

மேற்கு வானில் நிலவு எழுவது

என்னுள் உன்னைத் தேடத்தான்

ஐந்து வயது பிள்ளைப் போலே

உன்னை நானும் நினைக்கவா

அங்கும் இங்கும் கன்னம் எங்கும்

செல்ல முத்தம் பதிக்கவா

நிகழ் காலமும் எதிர் காலமும்

இந்த அன்பெனும் வரம் போதுமே

இறந்தாலுமே இறக்காமலே இந்த

ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்

என் முகம் நான் காண வேண்டும்

உறங்கும்போதும் உறங்கிடாமல்

கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்

காலம் தாண்டி வாழவேண்டும்

வேறு என்னக் கேட்கிறேன்

 

“நானும் தான்”என சொல்லி மகி அவனோடு  இணைந்தாள்.

                          எப்போதும் இவர்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாம் விடைபெறுவோம்.

                            சுபம்…!!!

 

                               

Advertisement