Advertisement

                   துருவங்கள் 6

 

”ஏன் டி..இவ்ளோ காலையில யாருக்குடி சமைக்க சொல்லுற…அதுவும் இத்தனை அயிட்டத்தை எப்படி கொண்டு போகப்போற….நீ யாருக்காவது டீரிட் வைக்குறக்கு கஞ்சத்தனம் பட்டுகிட்டு,இப்படி என்னை காலங்காத்தால எழுப்பி சமைக்க சொல்லி பாடுப்படுத்துற”என தாமரை புலம்ப.

‘ம்மா நான் சொல்லிருக்கேன்ல,ஆபீஸ்ல என் ஃபெஸ்ட் ஃப்ரண்ட் இருக்கானு,அவனுக்குதான்….பாவம் ரெண்டு நாளா நல்லவே சாப்பிடலயாம் அதான், அவனுக்கு கொண்டு போறதுக்குதான், இத்தனைக்கு என்கிட்ட முதல் முறையா வாய்விட்டு சாப்பாடு கொண்டு வாரியான்னு கேட்டான் போதுமா….டக்குன்னு எடுத்து வைம்மா லேட் ஆகுது’

”சரிடி… இந்தா,எல்லாத்தையும் சரியா வைச்சுட்டேன்..பார்த்துக்க,ம்ம் அப்புறம்…அந்த தம்பிய வீட்டுக்கு கூப்பிட்டு வா ஒருநாள்..சரியா”

‘ம்ம் கூப்பிட்டு வரேன்,ஆனா அவன்..அந்த பைல்வான் இல்லாம வரமாட்டானே’

“யாரு டி அந்த பைல்வான்”

‘அதான், அந்த ஹச்.ஆர்,ம்மா’என்று செந்தூர் பாண்டியன் பற்றி கூறிமுடித்தால்.

“உனகெல்லாம் அந்த தம்பி தண்டனை கொடுத்தது தப்பே இல்லை,நானும் அந்த தம்பிய பார்த்து இன்னும் நல்லா பனிஷ்மெண்ட் கொடுங்கன்னு சொல்லுறேன் அப்போதான் உனக்கு பயம் வரும்”

’ம்மா,நான் உன் பொண்ணு..எனக்கு சப்போர்ட் பண்ணாம அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணுற’

“தப்பு யாரு செஞ்சுருந்தாலும் தப்பு தப்புதான்,அது நீயா இருந்தாலும்,முதல உனக்கு மேல வேலை பார்க்குறவங்களுக்கு மரியாதை கொடுத்து பழகு சொல்லிருகேன்ல,..அந்த தம்பி என்ன பண்ணாங்க,நீ எதாவது தப்பு பண்ணிருப்ப,அதான் அந்த தம்பியும் உனக்கு அதிகவேலை கொடுத்துருக்கங்கா,அந்த பாண்டியன் தம்பியயும் வீடுக்கு அழைச்சுட்டு வா தெய்வா”

‘மாட்டேன்,அவனை கூப்பிட்டு வரமாட்டேன்,என் ஃப்ரண்ட் ப்ராகாஷ் மட்டும்தான் கூப்பிட்டு வருவேன்…நீ அவனுக்கு சப்போர்ட் செய்யுறேல அதுக்காகவே கூப்பிடமாட்டேன்’எனக்கூறி ஸ்கூட்டியில் சென்றுவிட்டால்.

“ஏய்..ஏய்,..தெய்வா..ம்ம் இந்த பொண்ணு இருக்காலே…அப்படியே அவங்க அப்பா மாதிரி”..என்று அவரின் நினைவில் ஆழ்ந்தார்.

‘அவரும் இந்நேரம் இருந்தா நல்லா இருக்கும்’

“விடியல் அழகாக விடிந்தது…..மெல்ல கண்விழித்தால்…வள்ளி… ‘அவள் உடம்பில் வெறும் போர்வை மட்டுமே ஆடையாக இருந்தது…நேற்று நடந்தது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்தது…அவனின் அன்பில் அவள் கொண்ட காதல் இன்னும் அவன் மீது அதிகமானதே தவிர குறையவில்லை….மெதுவாக அவன் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு அருகில் கிடந்த இரவு உடையை எடுத்து அணிந்துகொண்டு குளியல் அறைக்கு சென்றால்”

‘குளித்து முடித்துவிட்டு,தாமரைப்பூ கலரில் சேலையை உடுத்தி, அதற்க்கேற்றார் போல்,அலங்காரம் செய்து,கீழே சென்றாள், “எப்பவும் போலவே..மாட்டுசாணத்தை நீரில் கலந்து அதை வாசலில் தெளித்து, என்றும் இல்லமால் புதிய ரக ரங்கோலி போட்டு,அதில் செம்மண் பட்டை கொடுத்து,சில பாகத்தில்,கலர் பொடி கொடுத்துவிட்டு எழுந்தால்.வீட்டுக்குள் நுலைந்து சாமியறையில் விளக்கேற்றி,சாமி கும்பிட்டுவிட்டு , அனைவருக்கும் காஃபி கலந்து,அதை எடுத்து வாணியிடம் அத்தை,மாமாவிற்க்கு கொடுக்க சொன்னால்,அவனுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்கு சென்றாள்”

’கதவுதிறந்து உள்ளே சென்றால்,அங்கு அவன் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு எழுப்ப மனம் இல்லை,அவன் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தால்… “எவ்ளோ மாற்றம்,என் அத்தான்கிட்ட, அவருக்கு பிடிச்சதே அந்த மீசைதான் ஆனா சென்னைக்கு எப்போ போனாங்களோ அப்போ இருந்து மீசைய எடுத்துட்டாங்க..முதல் முறையா நான் அத்தான்கிட்ட பேசின வார்த்தை “என்னை கல்யாணம் பண்ணிக்க ரெடியா அத்தான்”அந்த பெருமாள் கோவில வச்சு,என் காதல சொன்னப்போவும்,சரி இப்பவும் சரி,உங்கமேல உள்ள காதலும்,அன்பும் அதிகமா இருக்கு அத்தான்” அதுகடுத்து என் படிப்புக்கு சென்னை போகும்போது நான் போகமாட்டேனு அடம்பிடிச்சேன், ஆனா நீங்க சொன்ன ஒத்தவார்த்தைக்காக நான் படிக்க போனேன்,அப்புறம்…என் பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுக்க…மழையையும் பொருட்டா கருதாம ராத்திரியில சரியா 12 மணிக்கு எனக்கு வாழ்த்து சொன்னது…அன்னைக்கு முழுசும் என்கூட இருந்தது” என ஒவ்வென்றையும் நினைத்து பார்த்துகொண்டு இருந்தவள் திடீரென்று அவளை அணைப்பதுப்போல் உணர்வு… “என்னங்க வள்ளியம்மா கனவு கண்டு முடிச்சுடேங்களா..இல்லை இன்னும் நம்மா காதலை நினைச்சு பார்த்துட்டு இருகேங்களா”என்றபடி வள்ளியை பின்னிருந்து அணைத்தபடி கேட்டான்”

‘எழுந்துட்டேங்களா அத்தான்’

“ம்ம்,எழுந்துட்டேங்க வள்ளியம்மா”

‘இந்தாங்க.. அத்தான் டீ’

“இந்த டீ வேணாம்,இந்த ரெடிமேட் டீ தான் வேணும்”என அவளை திருப்பி இதழில் முத்தமிட்டான்..

‘என்னங்க அத்தான்..நான் குளிச்சுட்டேன்…மறுபடியும் என்னை’அவளை பேசவிடாமல் தொடர்ந்து முத்தமிட்டுகொண்டுயிருந்தான்..

“ம்ம் இப்போதான் சோம்பலே போனமாதிரி இருக்கு”

‘முதல நீங்க போய் குளிச்சுட்டுவாங்க,அம்மா, அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க அத்தான்’

“அய்யோ போச்சு…அப்போ இன்னைக்கு முழுசும் நான் மாமாகூட இருக்கனுமா”என்று அலறினான்.

‘ஹாஹா அத்தான்,அம்மா,அப்பா வராங்கன்னு சொன்னதுக்கே இந்த அலறலா..அம்மாவும்,அப்பாவும் உங்கள வழியனுப்பிவிட்டுதான் கிளம்புவாங்க அத்தான்’வள்ளி இன்னும் அவனுக்கு எடுத்துகொடுத்தால்.

”அப்போ நான் கீழயே வரலைங்க வள்ளியம்மா”

‘என்னது, ஒழுங்க குளிச்சுட்டு கீழ வாங்க…இல்லை இன்னைக்கு முழுவதும் உங்க கண்ணு முன்னாடி வரமாட்…என்னும் சொல்லும்போது அவள் வாயை அவன் கைகொண்டு மூடினான்.. “அப்படி மட்டும் சொல்லாதேங்க வள்ளியம்மா,எப்பவும் நீங்க அந்த வார்த்தைய மட்டும் சொல்லிடாதேங்க என்னால நீங்க இல்லாத வழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்கமுடியாது”

‘அத்தான்,நெருப்புனா வாய் சுட்டுரும்மா என்ன,எப்பவும் உங்களவிட்டு போகமாட்டேன், என அவள் கூற, அவனோ “அப்படியே நீங்க என்னைவிட்டு போனாலும்,அடுத்த நொடி என் உயிரும் உங்க்கூடவே…இப்பொழுது அவள்,அவன் வாயை மூடினாள்.. “எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இந்த வள்ளிக்கு,செந்தூர்பாண்டியன் தான், செந்தூர்பாண்டியனுக்கு இந்த வள்ளி தான்,நம்ம காதலும்,உங்க கையால கட்டுன தாலியும் அந்த பஞ்சபூதங்களும் சாட்சி”எனக்கூறி அவனுக்கு முத்தமிட்டு சென்றாள்..,

“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கா,அத்தான்..அம்மா, அப்பாவும் உங்க்கிட்ட முக்கியமான விசயம் பேசனும் சொன்னாங்க”எனறு போகிறபோக்கில் சொல்லி சென்றாள்.

‘இந்தாங்க திவாகர்…நீங்க சொன்ன குடும்பம் இப்போ சென்னையில,இந்த ஏரியாவுல இருக்காங்க,இது அவங்க குடும்ப போட்டோ…அப்புறம் அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணுதான்…அந்த குடும்பத்த ஒரு ஆள் தீவிரமா தேடிட்டு இருக்காங்க….அதுல போலீஸும் ஒருபக்கம் தேடுறாங்க..நீங்க இப்போ கொஞ்சம் நாள் தேட வேண்டாம் திவாகர்…அந்த குடும்பத்துக்கு ஒரு பாதுக்காப்பா யாரோ பக்கத்துல இருக்காங்க…நான் சொல்லுற வரைக்கும் நீங்க காத்திருக்கனும்,அதுக்குனு சரியான நேரம் இப்போ இல்லை,அதுவரைக்கும் நீங்க பொருத்துருக்கனும் திவாகர்’என அவன் தேடி வந்த குடும்பத்தின் மொத்த விவரமும் அவன் கையில் இருக்க,அவர்களை நெருங்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறான்.

“ச்சே….எங்கெல்லாம் தேடினே ஆனா,அவங்க இருக்காங்களா…இவ்ளோ நாள் பொருத்திருந்த எனக்கு இன்னும் கொஞ்ச நாள் தானே பரவாயில்ல….இனி அந்த பாண்டியனுக்கு நான் வைக்குறேன் பெரிய ஆப்பா….டேய் பாண்டியா என்னை இனி அந்த குடும்பத்த யாரலும் காப்பாத்த முடியாது”என்று அந்த குடவுனே அதிரும்படி கத்தி கூறினான்.

‘அண்ணே…இப்பவாச்சும் அவங்க யாருனு சொல்லுறேங்களா’என அவன் அடியாள் கேட்க..

“சொல்லுறேன்டா..சொல்லுறேன்.”

‘இன்னைக்கு உங்களுக்கு என்னவேணுமோ ஆடர் பண்ணி சாப்புடுங்க…அதுக்கான மொத்த செலவும் என்னோடது’என ஒரு கட்டுப்பணத்தை எடுத்துகொடுத்தான்.

“அண்ணே நீங்க என்ன சொன்னாலும் அதை நாங்க செஞ்சு முடிப்போம்…என்னங்கடா”என்ற கூவ..

‘ஆமா…ஆமா..’என அங்கிருந்தவர்கள் கூட்டமாக கூச்சலிட்டனர்.

“வாங்க,அத்தை..மாமா”

‘மாப்பிள்ளை….எப்படி இருக்கேங்க’என வள்ளியின் தாய்…தந்தை வந்திருக்க..

“நல்லா இருக்கேன் அத்தை,மாமா”

‘எப்போ வந்தேங்க…வேலையெல்லம் சுழுவா இருக்கா..இல்லை ரொம்ப அதிகமா’என கேட்க..

“எல்லாம் நல்லா போகுது மாமா…மாறன் என்ன பண்ணாறாங்க”

‘நல்லா இருக்கான் மாப்பிள்ளை, “அட்டே..வாங்க மாமா…வாம்மா தங்கச்சி”என முத்தையாவும்..மீனாட்சியும் வரவேற்க்க..

“வரோம்..மச்சான்,இப்போதான் வந்தோம் அண்ணா..எங்க வள்ளிய காணாம்”

‘நீங்க வருவேங்கனு முன்னாடியே சமையல் வேலைய ஆரம்பிச்சுருக்கும்,அதான் சமையல்கட்டுல இருந்து வாசனை வர்ரத பார்த்து நீங்க புரிஞ்சுக்கனும் செல்வி’என்று முத்தையா கூற.

’வள்ளி..வள்ளி..இங்க வாம்மா…அம்மாவும்..அப்பாவும் வந்திருக்காங்க’என முத்தையா அவளை அழைக்க.

“இதோ வரேன் மாமா”

‘வாணி..அந்த  மீன பொரிச்சு வைச்சுரு…அப்புறம்..மட்டன்கூட்டு  இன்னும் அஞ்சு நிமிசத்துல இறக்கிடு..கோழி வறுவல் மட்டும் நான் வந்து பண்ணிகிறேன்..சோறுக்கு உலை வச்சுடு…ம்ம் மறந்துட்டேன் ரசத்த தாலிச்சுடு அவ்ளோ தான்’என்று சமையல் கட்டு வாசலில் நின்று அத்தனையும் சொல்லிக்கொண்டே வந்தாள்.

“வாங்கம்மா,வாங்கப்பா..என்ன சாப்புடுறேங்க”என வரவேற்றுவிட்டு.. “வாணி பிரிட்ஜ்ல குடிக்க மாதுளம் பழம் ஜுஸ் இருக்கு,அதை எடுத்துட்டு வாங்க”

‘ஏன்டி இப்பவாச்சும் எங்க்கூட உக்கார்ந்து பேச உனக்கு நேரம் இல்லையா,இப்படி எல்லாம் வேலையும் நீயே எடுத்து செஞ்சேனா அப்புறம் எதுக்கு வீட்டுக்கு வேலையாள் இருக்காங்க’என செல்வி கேட்க.

“நீங்களாவது சொல்லுங்கம்மா…காலையில இருந்து பெரிய்யா முதல் கொண்டு எல்லாரும் சொல்லிட்டாங்க, தாயிதான் கேக்காம எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யுறாங்க” என்று வாணி ஜீஸ் கொடுத்துகிட்டே அவளை பற்றி புகார் பட்டியல் வாசித்து கொண்டிருந்தால்.

’வாணி..அடுப்பு வேலைய விட்டுட்டு இங்க என்னை என் அம்மாகிட்ட புகார் பண்ணுறையா போய் வேலைய பாரு’

“உடனே அவமேல எதுக்கு கோவப்படுற….அம்மா, இது நான் வாழவந்த வீடு ஆரம்பிக்காத”என செல்வி கேலிசெய்ய..

‘ம்ம்ம்…என்னை கேலிசெய்யதான் ஊருல இருந்து வந்தீங்களா’

“சரி விடும்மா….அம்மாவ பத்தி உனக்கு தெரியாத என்ன…மாப்பிள்ளை உங்க்கிட்ட ஒரு நல்ல விசயம் சொல்லனும்.”

‘என்ன மாமா..என்ன விசயம்’

“கீர்த்திக்கும்,மாறனுக்கு.பரிசம் போடலாமுன்னு இருக்கோம்..உங்க வேலை முடிஞ்சா கையோட கல்யாணத்தையும் அப்படியே பண்ணிருலாம்..அதான்”

‘நல்ல விசயம் மாமா..ஆனா என் வேலை காரணம் காட்டி நல்ல விசயத்தை தள்ளிப்போடாதேங்க…மாறன் எப்போ வராங்க’

“இன்னும் அவனுக்கு தெரியாது மாப்பிள்ளை…உங்க்கிட்ட கேட்டுட்டு..அவன்கிட்ட பேசனும்”

‘சரி மாமா…எனக்கு பதில வள்ளியம்மா இருக்காங்களே..என் இடத்துல இருந்து எல்லமே என் வள்ளியம்மா பார்த்துக்குவாங்க…முடிஞ்சா நான் வேலைய சீக்கிரம் முடிச்சுட்டுவரேன்..என் ஒருத்தனுக்காக நல்ல விஷேசத்த தள்ளிபோடாதேங்க…என்னப்பா…என்னம்மா.நான் சொல்லுறதுல எதுவும் தப்பில்லையே…என்ன வள்ளியம்மா’

“என்ன தம்பி உன் வார்த்தைக்காக நாங்க காத்திருந்தோம்…நீங்க என்னான எங்க்கிட்டே கேக்குரேங்க..நீங்க எது சொன்னாலும் சரிதான்”என்றார் முத்தையா.

‘ஆமா..தம்பி..கீர்த்திக்கு நீங்க மாப்பிள்ளை பார்க்குறதா சொல்லிருந்தேங்க..ஆனா திருமூர்த்தி அய்யா மூலம் வந்த வார்த்தையாலதான் நாங்க இதை முடிவு பண்ணோம்..இப்போ மாப்பிள்ளை வீட்டுகாரங்களே உங்க்கிட்ட முறையா சொல்லிருக்காங்க அவ்ளோ தான்’

“சரிம்மா…மாறன் எப்போ வராங்கனு சொல்லுங்க..அவருக்கு பொண்ணுவீட்டு சார்பா நானே துணி எடுத்து அனுப்புறேன்…என அவன் பேசிகொண்டு இருக்கும் போது அவனுக்கு செல்போனில் இருந்து அழைப்பு வந்த்து.

’ஒரு நிமிசம்ப்பா…முக்கியமான போன்…ஆபீஸ்ல இருந்து வந்திருக்கு..பேசிட்டுவரேன்… ‘போங்க தம்பி வேலை விசயமா இருக்கும் பேசிட்டு வாங்க’

“ம்ம் சரிப்பா…இதோ வரேன்..வள்ளியம்மா”என அனைவரிடமும் கூறிக்கொண்டு வெளியே சென்று பேச ஆரம்பித்தான்..

‘சொல்லுங்க…என்னாச்சு’கணீர் குரலில் பேச ஆரம்பித்தான்.

“ம்ம் சரி…பாதுகாப்பு எல்லம் பலமா இருக்கனும்…எப்பவும் அவங்க பின்னாடி ஒருத்தர் கூடவே இருங்க…அவங்க மேல சிறு கீறல்கூட படாம பார்த்துகோங்க…அந்த பொண்ணு பின்னாடி ஒரு ஆள் தினமும் ஆபீஸ் போகும் போதும் வரும் போது துணைக்கு இருக்குனும்…இன்னும் ஒருவாரம் உங்களுக்கு டைம் அதுக்குள்ள அந்த பெரியவரையும் கண்டுபிடிக்கனும்…சரியா”

‘சரிங்க சார்…எல்லாம் வேலையையும் முடிச்சுட்டு கூப்பிடுரேன்..சார்’

“ம்ம் சரி…அந்த திவாகரையும் ஃபாலோ பண்ணுங்க…அவனை எனக்கு உயிரோட பிடிக்கனும்”

‘ஓகே சார்…செஞ்சுட்டு உங்களுக்கு கூப்பிடுறோம்’

“ஓகே..தாங்க்யூ”என போனை ஆஃப் செய்தான்”

’ஹே ப்ரியா..என்ன இவ்ளோ பெரிய டிபன் கேரியல்..ஒரு ஊருக்கே கொண்டு வந்திருக்க.’ என அனித்தா கேட்க.

“.பிரகாஷ்க்கு கொண்டு வந்துருக்கேன் அனித்தா”

‘இத்தனையும் அவன் சாப்பிடுறதுக்கா’.என வாயை பிளந்தால்.

“ஆமாம்..உனக்கென்ன”

‘எனக்கொன்னும் இல்லை….ஆனா முதல் முறையா ஐடி ல வேலை பாக்குறவனுக்கு இவ்ளோ பெரிய கேரியல்ல சாப்பாடு கொண்டுவந்த முதல் ஆள் நீதான்….

“அவள் கொண்டுவந்தை பார்த்து அனைவரும்…அவ்ர்களுக்குள் பேசி சிரித்துகொண்டனர்…. “டேய் இந்தா ஆஃப்ட்ர்நுன் லன்ஞ் கேட்டேல இந்தா”

‘ப்ரியா..முகியமான ஃபைல் தேடிட்டு இருக்கேன்..அதை டேபிள் மேல வச்சுட்டு போ”என அவன் அவளை பார்க்காமல் கூறினான்.

“டேய் இதை டேபிள் மேலயெல்லம் வைக்கமுடியாது”

‘என்ன சொல்லுற பிரியா…என அவளை திரும்பிப்பார்த்து பேசும் போதுதான் கவனித்தான்..அவள் கொண்டு வந்திருந்த கேரியரை..

“அடிப்பாவி..உன்னை டிபன் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்துட்டு வரச்சொன்னா..இவ்ளோ பெரிய கேரியர்லயா எடுத்துட்டு வருவ.”

‘உன்க்கு பிடிச்ச சாப்பாடு என்னனு கேக்கலாமுனு இருந்தேன்டா..ஆனா ராத்திரில உனக்கு போன் பண்ணா நல்லா இருக்காதேனு..நானா கெஸ் பண்ணி உனக்கு என் அம்மா கையால சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்..ஆனா நீ என்னை கிண்டல் பண்ணுற’

“சரி பிரியா…சாரி…அண்ட் தாங்க்யூ”என அவளை சமாதானம் செய்தான்.

’ப்ரியா…நீ சாப்பாடு கொண்டு வந்தத பார்த்தா அப்படியே என் ஊருக்கார பொண்ணுங்க அவங்க அவங்க புருசனுக்கு கஞ்சி எடுத்துட்டு போவாங்க..என்ன அந்த பொண்ணுங்கயெல்லம் துக்குவாலில எடுத்துட்டு போவாங்க..நீ கேரியர்ல கொண்டுவந்துருக்க..அவ்ளோதான் வித்தியாசம்’என்று சொல்லி அவளை கேலிசெய்தான்..

“ஆமா என் வீட்டுகாரர் இங்கதான் வேலை பார்க்குறான்…அவனுக்கு விதவிதமா என் கையால சமைச்சு எடுத்துட்டு வர…அடப்போட”என அவள் சொல்லிகொண்டு இருக்கும்போது ஃலிப்டில் இருந்து வெளிவந்தான் பாண்டியன்.

‘சரி பிரியா இதை..கேண்டின்ல வை..மதியம் போய் சேர்ந்து சாப்பிடலாம்…சார் ஃபைல் எடுத்துட்டு வரச்சொன்னாங்க’

“சார் தான் இன்னும் ஊர்ல இருந்து வரலையே பிரக்காஷ்..அப்புறம் எதுக்கு ஃபைல தேடுற”

‘பாண்டியன் வரலை பிரியா…மேனேஜர் சார் கூப்பிட்டாங்க’

“அதான பார்த்தேன்…எங்கடா அந்த பைல்வான் வந்துட்டானோனு… அவன் டெல்லிலேயே இருக்கனும்..முடிஞ்சா அங்கயே அவனுக்கு வேலை கொடுக்கனும்…எண்ணி ஒருவாரத்துக்கு அவன் இந்த பக்கம் வரகூடாது கடவுளே”என்று அவள் வேண்ட..

‘ப்ரியா..நீ வேண்டுனது அந்த கடவுளுக்கே பொருக்கல…போல..கொஞ்சம் திரும்பி பாருமா’

“என்னடா சொல்லுற”என திரும்பி பார்த்தால்..

‘அனைவரின் வணக்கத்தையும் சிறுபுன்னகையுடன்,ஏற்றுகொண்டு அவன் அறையை நோக்கி வந்துகொண்டு இருந்தான்’..

“வந்துட்டானா..இது அவன் தானா இல்லை வேற யாருமா…என கண்களை கசக்கி பார்த்தால்… “ஹுகும் இது அவனே தான்”என அவள் யோசித்துகொண்டிருக்க…அவளை தாண்டி சென்றான்.

‘ப்ரியா..நான் சார பார்த்துட்டுவரேன்..நீ வேலைய பாரு’என்று பிரகாஷ் கிளம்பினான்.

‘முக்கியமான வேலை வந்துருச்சுப்பா…உடனே கிளம்பனும்’என போன் பேசி முடித்ததும்..அங்கு இருந்தவர்களிடம் கூறினான்.

“என்ன தம்பி..ஊருக்கு ராத்திரிதான் கிளம்பனும் சொன்னேங்க இப்போ என்னனா உடனே கிளம்பனும் சொல்லுறேங்க”என முத்தையா கேட்க.

‘இல்லைப்பா…வேலைய என்ன நம்பி கொடுத்துருக்காங்க நான் தான் சரியான நேரத்துல முடிச்சுகொடுக்கனும் இல்லையா’

“அதுசரி..ஆனா கீர்த்தி,மாறன் விஷேசம் பேசும் போது இப்படி திடுதிப்புனு புறப்பட்டா…என இழுத்தார் வள்ளியின் தந்தை”

“என் வேலை அப்படி மாமா…உங்கூட இருக்கனும் எனக்கு ஆசை தான்…ஆனா..மேலதிகாரி கூப்பிடும் போது என்ன பண்ணமுடியும்”

‘‘அத்தான்…உங்களுக்கு என்ன எடுத்து வைக்கனும்’என வள்ளி கேட்க..

‘இதோ வரேன் வள்ளியம்மா’

“சாப்பிட்டு கிளம்பனுமா..இல்லை இப்போவே கிளம்புறேங்களா அத்தான்”என அவள் கேக்கும் போது அவளது குரலில் அவனைவிட்டு தற்காலிக பிரிவைகூட தாங்கமுடியாமல் கண்ணீரை அவனுக்கு தெரியாமல் துடைத்தால்.

‘அவள் குரலின் வித்தியாத்தை உணர்ந்த் பாண்டியன்…அவளை திருப்பி..அவளின் கண்களை பார்த்து… “இன்னும் ஒருவாரம் மட்டும் தான் வள்ளியம்மா..வேலையை முடிச்சுட்டு இங்கயே உங்க்கூடவே வாழ்க்கை முழுவது இருக்கபோறேன் அப்புறம் என்ன…அதுவரைக்கும்…இந்த முத்தம் உங்களுக்கு துணை இருக்கும்.”என அவளிடம் பேசி..அவனின் வருகை எண்ணி காத்திருக்க செய்தது….

“மிஸ் யூ அத்தான்..மிஸ் யூ பேட்லி”

‘மீ டூ…என் அழகு வள்ளியம்மா”என்று அவளை அணைத்துகொண்டான்.

“அனைவரோடு அமர்ந்து சாப்பிட்டு…வாசல் வரை அவனை வழியனுப்பி வைத்துவிட்டு சென்றார்கள்”

‘சரிங்க மாமா…எனக்கு போர்டிங் போக சரியா இருக்கு..நீங்க கிளம்புங்க…. “சரிங்க மாப்பிள்ளை…பார்த்து போயிட்டுவாங்க…உடம்ப பார்த்துகோங்க”

’சரிங்க மாமா’என அவன் உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு கிளம்பினார்.வள்ளியின் தந்தை.

”என்ன வள்ளி…முகம் ஏன் கருத்துருக்கு”என மீனாட்சி கேட்க.

‘ஒண்ணுமில்லை அத்தை’

“இங்க பாருமா..தம்பி சீக்கிரம் இங்கதான வரப்போகுது அப்புறம் என்ன…உன்கிட்ட காலையிலயே கேக்கனும் நினைச்சேன்..உன் முகம் பொலிவா இருந்துச்சு”என்று அவளை சிரிக்க வைக்க அவர் கேட்க.

‘ச்சீ போங்க அத்தை…அதெல்லாம் எதுவும் இல்லை’என நழுவ

“ஏய் என்னடி…வெக்கமா”

‘என்ன அத்தை..போங்க..எனக்கு வேலை இருக்கு’அவரிடம் இருந்து தப்பித்து ஓடினாள்…

“ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்”என்று மனதார வேண்டிகொண்டார்.

ஆனால்…….

 

                                    துருவங்கள் தொடரும்…………..

 

Advertisement