Advertisement

                 துருவங்கள் 14

 

”வள்ளியின் நல்ல செய்தியை கேட்டு திருமூர்த்தி ஐயாவும், தெய்வாவும், காலையின் பொழுதே முத்தையாவின் வீட்டுக்கு வந்திருந்தனர்…, திருமூர்த்தி ஐயா, வள்ளியையும்,பாண்டியனையும், ஒருசேர ஆசீர்வாதம் செய்தார், தெய்வா வள்ளியிடம் அவளது வாழ்த்துகளை சொன்னாள்.அதே சந்தோஷத்துடன்  கீர்த்தி,மாறன் கல்யாணத்தை பேச தொடங்கினர்..”

‘ஐயா… கீர்த்தியும் படிப்பு முடிச்சு வந்துட்டா…, மாறனும் இன்னும் இரண்டு நாளுல ஊருக்கு வரதா போன் செஞ்சான்… ஐயா. அடுத்து நாம கீர்த்திக்கு பரிசம் போட நல்லா நாள்  பார்த்து சொல்லுங்க ஐயா…, நீங்க பார்த்து குறிச்சு கொடுத்த நாளுல தான் பாண்டியன்,வள்ளிக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சோம், உங்க ராசியால இன்னைக்கு வள்ளி மாசமா இருக்கா, அதே மாதிரி மாறன் கல்யாணத்தையும் முடிச்சுக்கொடுக்கனும் ஐயா… முத்தையா, கூறினார்’

“எல்லாம் நல்லபடியா நடக்கும் முத்தையா…, அந்த காலாண்டர் எடுத்துட்டு வாம்ம மீனாட்சி..,’

”காலாண்டரில் நல்லா நாள்,நல்ல நேரம், பார்த்தார்…,”. ‘முத்தையா, ஐப்பசி 20 தேதி நல்லா நாளா இருக்கு, அன்னைக்கு மாலையில 6.30 லிருந்து 8.00 மணி வரை நல்ல நேரம் இருக்கு, அப்போவே நாம பரிசம் போடலாம்.., இது எல்லாருக்கும் சம்மதமா..,”

‘எல்லாருக்கும் சம்மதம் ஐயா, நீங்க குறிச்சுகொடுத்த நேரத்துலயே பரிசம் போடலாம்…, என்னம்மா மீனாட்சி, சம்மதமா…’மீனாட்சியை கேட்க

“முதல,அண்ணா, அண்ணிய கேளுங்க,”

‘எங்களுக்கு சம்மதம் மாமா, அண்ணா, இருவரும் ஒன்றாக கூறினார்கள், “இன்னும் மூனு நாள் தான் இடையில இருக்கு, அதுக்குள்ள பரிசம் சேலை எடுக்கனும், நகை எடுக்கனும், ஊருக்காரவங்களுக்கு சொல்லனும், இப்போ இருந்தே வேலைய பார்க்க ஆரம்பிக்கனும் மாமா,என்ன செல்வி நான் சொல்லறது..”

‘ஆமாங்க…, நீங்க சொல்லற மாதிரி வேலை அதிகமா இருக்கு,’

“கீர்த்தியின் கல்யாணம் பேசும் போதே… முத்தையாவுக்கு தெய்வாவிடம் வள்ளி வாங்கிய சத்தியத்தை அப்போது நினைவுக்கு வந்தது…, தாமரையின் இடத்தில் இருந்திருந்து தெய்வாவின் கல்யாணத்தை தாய் மாமான் முறைக்கு எல்லாம் நான் செய்யவேண்டும், அவர் நினைத்திருக்க, அதை அனைவரின் முன் கேட்டார் வள்ளியிடம்.”

‘வள்ளி, பஞ்சாயத்துல தெய்வாகிட்ட சத்தியம் வாங்குனியேம்மா, அந்த மாப்பிள்ளை யாரும்மா, முத்தையா கேட்க…, அன்நேரத்தில் பிரகாஷூம், பைக்கில் வந்து இறங்க, சிவநாதனும், தென்னவனும் காரில் வந்து இறங்கினர்…, அவர்களை பார்த்த முத்தையா, ”வா சிவநாதா…, வாப்பா தென்னவா, பிரகாஷ்  அதிசயமா நீயும் வந்திருக்க…”முத்தையா அவர்களை வரவேற்றார்…”

‘ஆனால் திருமூர்த்தி ஐயா, அவர்கள் இருவரையும் பார்த்து எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார்…, பிரகாஷ் வந்தது, சாதாரணமாக இருந்தது, அனைவரும் அவர்களை பார்த்து வரவேற்றனர், ’வரேன் அண்ணே…,வரேன் பெரியப்பா,’

“எப்படி இருக்கீங்க அண்ணி, மாமா,செல்வி,பாண்டியா எப்படி இருக்கீங்க..”

‘நல்லா இருக்கோம், தம்பி நீங்க எப்படி இருக்க’

“நல்லா இருக்கேன் பெரியம்மா,’தென்னவன் சொல்ல

”என்ன விசயம், சிவநாதா…, திடீர்னு வீடு தேடி  வந்திருக்க…,” முத்தையா கேட்க..

‘பஞ்சாயத்துல நடந்த விசயத்தை கேள்விப்பட்டேன் அண்ணே, அன்னைக்குனு வெளியூர் போயிட்டேன், இப்போ தான் விசயத்தை கேள்விபட்டு வந்தேன்…, செல்வி எப்படி எனக்கு தங்கச்சியோ, அதே மாதிரிதான் தாமரையும், ஆனா தாமரைக்கு நம்மளவிட்டு போக எப்படி மனசு வந்துச்சோ…, கவலையா இருக்குண்ணே…, அதான் விசாரிச்சுட்டு போகலானு வந்தேன்… அண்ணே..,’

“என்ன செய்றது சிவா…, எல்லாம் வலியையும் தாங்கிக்க பழகிக்கனும், என் தங்கச்சி போனாலும் அவளோட பொண்ணு இருக்காளே, அவளை நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சுகொடுக்கனும் தாய் மாமானு நான் எதுக்கு இருக்கேன்…, என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் செஞ்சுகொடுக்குறேனோ அதைவிட அதிகமா என் தங்கச்சி பொண்ணுக்கு செய்வேன்.., கண்கள் கலங்கி அவர் பேச, மீனாட்சி முத்தையாவின் கரத்தை பிடித்துகொண்டு அவரின் வருத்தபடுவதை வேண்டாம், கையை அழுத்தினார், கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு மற்றவர்கள் முன் சாதாரணமாக பேசினார் இதை பற்றி வள்ளிகிட்ட பேசும் போது தான் நீங்க வந்தீங்க…,”

‘அப்படியா…. அண்ணே, சரிண்ணே… நான் கிளம்புறேன்…, சிவநாதன் எழுந்திரிக்க, ‘நில்லுங்க மாமா, எங்க கிளம்புறேங்க…”..வள்ளி சிவநாதனை நிறுத்த…

“இல்லைமா வள்ளி, குடும்ப விசயம் பேசும் போது நான் இருந்தா நல்லா இருக்காது…, நான் கிள்ம்புறேன்… நீங்க பேசுங்க…”

‘மாமா… நீங்களும் எங்க குடும்பம் தான்… மறந்துட்டீங்களா.., என் மாமாவோட சின்னம்மா மகன் நீங்க அப்படி இருக்க நீங்க ஒதுங்கி போகலாம… மாமா.., நான் பேசப்போற விசயத்துல உங்க குடும்பமும் அடங்கி இருக்கு.. மாமா.. அப்போ நீங்களும் இருக்கனும்.’

“ஆமாம் சிவநாதா… நீயும் என் குடும்பம் தான், நீயா தனியா ஒதுங்கி நிக்குறது எனக்கு பிடிக்கலை, என் வீட்டு விசேஷ்ம்னா உன் வீட்டு விசேஷ்ம் தான் சரியா…” முத்தையாவும் சொல்ல…

“வள்ளி,  என்ன விசயம்னு சொல்லுமா…, எல்லோரையும் காக்க வைக்காதே.., என்னனு சொல்லுமா… “ அனைவரும் ஆவலாய் கேட்க… வள்ளியும் அந்த விசயத்தை சொன்னாள்…

‘ஐயா…,மாமா…, நான் தெய்வாகிட்ட, நான் பார்க்குற மாப்பிள்ளையா தான் கல்யாணம் செய்யனும், சொன்னேன்…, மாப்பிள்ளையும் நான் பார்த்துட்டேன் ஐயா,..’

“யாரும்மா அந்த மாப்பிள்ளை”

‘சிவநாதன் மாமாவோட மகன், தென்னவன் தான், தெய்வாவுக்கு பார்த்த மாப்பிள்ளை… ஐயா..’ வள்ளி சொன்னதும், முத்தையா முதலில் திருமூர்த்தி ஐயாவை தான் பார்த்தார்…, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று…, ஆனால் திருமூர்த்தியோ…, வள்ளியின் முகத்தை பார்த்து நான் கணித்த விசயம் சரிதான் என்ற பாவனையில் அவர் இருந்தார்…, முத்தையா மட்டும் இல்லை அனைவரும் ஐயாவின் முகத்தை தான் பார்த்தார்கள்…, ‘

“சரிம்மா வள்ளி, நீ பார்த்த மாப்பிள்ளைய எனக்கு பிடிச்சுருக்கு, ஆனா தெய்வாவுக்கு பிடிக்கனுமே…, தெய்வாவ கூப்பிட்டு கேளுமா…, அந்த பொண்ணோட விருப்பத்தை…, வள்ளியிடம் கூறிவிட்டு, அப்புறம், சிவா,உனக்கு சம்மதமா, என் வீட்டு பொண்ண உன் வீட்டுக்கு மருமகளா வரதுக்கு சம்மதமா,” சிவநாதனிடம் கேட்டார்..”

‘பலநாள் சண்டையை மறந்து, அவரே வழிய வந்து பேசும் போது அவர் மட்டும் பேசாமல் இருப்பாரா என்ன…, “என்னங்க ஐயா, உங்க வீட்டு பொண்ணு என் வீட்டுக்கு மருகளா வந்தா அதைவிட வேற என்ன சந்தோஷம், சொல்லுங்க,… ரொம்ப சந்தோஷம் ஐயா,” சிவநாதனும் சம்மதம் சொல்ல…

“தம்பி உனக்கும் சம்மதமா, என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க..” திருமூர்த்தி, தென்னவனிடம் கேட்க..

‘சம்மதம், ஐயா,’அவனும் சொல்ல..

“தெய்வாவை அழைத்து வந்தாள் வாணி, வள்ளி, தெய்வாவிடம் அவளின் சம்மதத்தை கேட்க.. “தெய்வா…, நான் பார்த்த மாப்பிள்ளை இவங்க தான், அந்த பையன பார்த்து உனக்கு பிடிச்சுருக்கானு சொல்லுமா….” வள்ளி, தென்னவனை பார்க்க சொல்ல.

“தென்னவனை நிமிர்ந்து பார்த்து, வள்ளியிடம் “எனக்கு சம்மதம் அக்கா, அவங்களை எனக்கு பிடிச்சுருக்கு,” தெய்வா தன் சம்மத்தை சொன்னவுடன்,அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும், மூவருக்கும் தெய்வாவின் பதிலால் திருப்தி இல்லை,”

‘அப்புறம் சிவநாதா… உன்கிட்ட இன்னொரு விசயமும் கேட்க்கனும்…’

“சொல்லுங்க ஐயா,”

‘என் மகன் பிரகாஷுக்கு, உன் பொண்ணு தங்கமலரை,  கொடுப்பியா,’ ஐயா கேட்க.

“எனக்கு சம்மதம் ஐயா…,” தென்னவன் ,பிரகாஷின் கல்யாணமும் முடிவானது.

‘பிரகாஷுக்கு ஒன்றும் புரியவில்லை, காலையில் பாண்டியன் அழைத்து இன்று வீட்டுக்கு வரச்சொன்னதும்,இதோ தன் கல்யாணமும்,தெய்வாவின் கல்யாணமும் உறுதியானதும் அவனுக்கு சந்தோஷம் இருந்தாலும், ஏதோ படத்தை பார்ப்பது போல் இருந்தது…, அதில் இருந்து அவனால் வெளிவரமுடியவில்லை…

“அப்போ கீர்த்தி,மாறன் பரிசம் போடுற நாளுலயே இவங்க ரெண்டு பேர் பரிசமும் வச்சுக்கலாம் ஐயா… அன்னைக்கே கல்யாண நாளையும் குறிச்சுருலாம்.. மூனு பேருக்கும் என்னங்க ஐயா நான் சொல்லுறது..” முத்தையா, திருமூர்த்தியிடம் கேட்டார்.

‘சரி, முத்தையா, அதுக்கான வேலைய பார்க்கலாம்..எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு, பிரம்மா, தெய்வாவ மாலையில வீட்டுக்கு அழைச்சுட்டு வா…’முத்தையாவிடம், சொல்லிவிட்டு, தெய்வாவை அழைத்து வருவதை பிரகாஷிடம் ஒப்படைத்தார்…,

“முதன் முதலாய், பிரகாஷிடம் அமைதியாக பேசியது இதுவே, அவனோ “சரிங்க ஐயா, பத்திரமா அழைச்சுட்டு வரேன்” அவனும், அவரை உரிமையாய் அழைத்தான்…

’சரிங்கண்ணே, நானும் கிளம்புறேன் ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம், அதுக்கான வேலைய நானும் பார்க்கிறேன், வரேன் அண்ணே, அண்ணி, எல்லோருக்கும் நான் போயிட்டுவரேன்…’ சிவநாதன் விடைபெற..

“நல்லது சிவநாதா… பார்த்து போயிட்டு வா…,”

‘அண்ணா, நாங்களும் கிளம்புறோம், எங்களுக்கு அதே கல்யாண வேலை இருக்கும் போயிட்டு நாங்க பரிசம் போடுற நாளுக்கு வரோம்… ‘ அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினர் செல்வியும்,முருகவேலும்.

“சரிமா, சரிங்க மாமா, பார்த்து போயிட்டு வாங்க…” அவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பிவைத்தார்.

’உனக்கு உண்மையில இந்த கல்யாணத்துல சம்மதமா ப்ரியா…” செம்பருத்தி ப் செடியை வருடிகொடுத்து கொண்டிருந்த தெய்வாவிடம் கேட்டான் பாண்டியன்… திடீரென பேச்சை கேட்டதும்,அதிர்வுடன் திரும்பி பார்த்தாள், “என்ன கேட்டீங்க சார்”..

‘என்னை சார்னு கூப்பிடுறதை நிறுத்து ப்ரியா, நான் உன்னோட மாமா பையன், உனக்கு மாமா முறை, மாமானு சொல்லி கூப்பிடு என்ன, சரி அதை விடு, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமானு கேட்டேன்’

“சம்மதம் தான் சா…சார்… ச்சே மாமா… ஏன் திடீர்  கேள்வி”

‘என் வள்ளியம்ம தேர்வு செஞ்ச எந்த பொருளும், சோடை போகாது, அதே மாதிரி தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளையும்…, தென்னவன் ரொம்ப நல்லவன், அதைவிட மலரும்,சித்தாப்பாவும் ரொம்ப நல்லவங்க…, அவங்க உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்க.. இருந்தாலும் உன் மனசுல என்ன இருக்குனு தெரியாமா வள்ளியம்மா சத்தியம் வாங்கிட்டாங்க அதான் எனக்கு உறுத்தாலா இருந்துச்சு, வேற ஒண்ணுமில்லை.., ப்ரியா..’

“எனக்கும் அக்காமேல நம்பிக்கை இருக்கு, அதுனால தான் சத்தியம் பண்ணேன் சா….. இல்லை  மாமா..”

’சரி…, சாப்பிட்டயா…’

“இல்லை, இனிதான் சாப்பிடனும்..”

‘சரி…, நான் வரேன்…, என் தங்கச்சிக்கும், உனக்கும் பிரகாஷுக்கும் பரிசம் போடுறாங்க அதுக்கான வேலை பார்க்கனும்… நீ போய் சாப்பிடு ப்ரியா’ அவளை அனுப்பி வைத்தான்.. அவனுக்கு தெய்வாவின் கல்யாணம் புரியாத புதிரக இருந்தது…, இருந்தும் வள்ளியின் செயலுக்கு பின் ஏதோ இருக்கிறதென்று பாண்டியனும் உணர்ந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்…, ஆனால் இவர்களின் சம்பாசனையை ஒருவர் அறிந்துகொண்டு, அடுத்த திட்டதை செயல்படுத்த முனைந்தனர்.

”டேய்.., போயும், போயும் அந்த சின்னகுழந்தைகிட்ட சண்டை போட்டு இந்த கொய்யாபழத்தை வாங்கிட்ட வந்திருக்க உன்னை…. கீர்த்திகா அவனின் தலையில் தட்ட…, “நீ அந்த பொண்ணுக்கிட்ட திருடி கல்லாக்காய் சாப்பிட்டேல அதை என்ன சொல்ல”.. “டேய்… அந்த பொண்ணுகிட்ட எவ்ளோ கெஞ்சுனேனு நீயே பார்த்தேல, அதான் இரண்டு கல்லாக்காய் அவளுக்கு தெரியாம எடுத்து சாப்பிட்டேன்…, உனக்கே தெரியுமுல…எனக்கு கல்லாக்காய்ன ரொம்ப பிடிக்குனு…”..

“எப்படியும் திருடி சாப்பிட்டயா இல்லையா… அதை சொல்லு”.. ‘சரி நீ திருடி சாப்பிட்ட, நான் வாங்கி சாப்பிட்டேன் அதைவிடு டா… ஐயா வீடு வந்திருச்சு, வா பேசிட்டு வரலாம்..”

‘அடிப்பாவி மாத்தி சொல்லுற…, நான் திருடுனேனா, அவ்வாவா…, என்னாமா பொய் சொல்லுற…, உன்னெல்லாம் மாறன் மச்சான் எப்படி சமாளிக்க போறாறோ…, கடவுளே அந்த பச்சகுழந்தைய இவகிட்ட இருந்து காப்பாத்து…,’ இருவரும் சண்டையும்,கேலியும் செய்துகொண்டு திருமூர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்தனர்… அப்பொழுது கீர்த்தியை பார்த்து ஒரு பெண்மணி பேச…, அவள் நின்று பேசிகொண்டிருப்பதை கவனிக்காமல்…, கார்த்தி உள்ளே நுழைந்தான்..’

“செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிகொண்டிருந்தவரை பார்த்த கார்த்திக், “பெரியவரே.. உள்ள ஐயா இருக்காங்களா…” அவரிடம் கேட்டான்… ‘நீங்க யாருப்பா…, ‘… “ஐயாவுக்கு ரொம்ப நெருங்கின சொந்தம் பெரியவரே…, அவருக்கு நாங்க… பாதியில் நிறுத்தியவன்…. இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு பெரியவரே… அவரு இருக்காறா… இல்லை வெளிய போயிருக்காறா..அதை சொல்லுங்க…, அப்படியே குடிக்க எதுவும் இருந்தா கொடுங்க பெரியவரே… தண்ணீர் தவிக்குது…’அவருக்கு ஒரு வேலையையும் வைத்தான்…., “இருப்பா குடிக்க எடுத்துட்டு வரேன்.. “.. அவர் குடிக்க அவனுக்கு எடுத்து வருவதை பார்த்த கீர்த்தி.. “ஐயா… நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணுறேங்க…, எங்க பிரகாஷ் அண்ணாவா…இப்போ யாருக்கு இதை எடுத்துட்டு போறீங்க…, இந்த சோம்பேறிக்கா…, டேய் எதுக்குடா ஐயாவ வேலை வாங்குற..”.. கீர்த்தி சொன்னதும் தான் அந்த பெரியவரின் முகத்தை பார்த்தான்….’

“அய்யோ ஐயா.. நீங்களா…, தெரியாமா உங்களை பேசிட்டேன்… ஐயா அதுவும் இல்லாம உங்களவே வேலை வாங்கிட்டேன்… மன்னிச்சுருங்க ஐயா…, திருமூர்த்தியின் காலில் சாஷ்ட்ராங்கமாய் விழுந்தான்.. கார்த்திக்..,”

‘வேலை வாங்குறதையும் வாங்கிட்டு இப்போ காலுல விழுகுற மாதிரி நடிகிறையா…, எழுந்திரிடா..’

“விடும்மா கீர்த்தி, அவன்,நீயும், என்னை பார்த்து நாலு வருசம் ஆச்சு, அடையாளம் மறந்திருக்கும் விடும்மா…, ”கார்த்தி எழுந்திருப்பா…, யாரை வேலை வாங்குன உனக்கு பிடிச்ச ஐயாவ தானே… எழுந்திரிப்பா,..” அவனுக்காக பரிந்து பேசி அவனை எழுப்பிவிட்டார்… “எப்போ ஊருக்கு வந்தீங்க… ரெண்டு பேரும், நல்லா இருகீங்களா…படிபெல்லாம் முடிஞ்சதா…”

‘நல்லா இருக்கோம் ஐயா, படிபெல்லாம் நல்லபடியா முடிஞ்சது, நீங்க எப்படி இருக்கீங்க…, ஊருல இருந்து நேத்து தான் வந்தோம் ஐயா, உடம்புக்கு எப்படி இருக்குங்க ஐயா.., கீர்த்தியும், கார்த்தியும் மாறி,மாறி கேட்க…’

“எனகென்னமா…, நல்லா இருக்கேன்…, ’என்னது ஊருல இருந்து நேத்து இவங்க வந்தாங்கனா இன்னும் இவங்களுக்கு பஞ்சாயத்து நடந்தது தெரியாது போல அப்படியே இருக்கட்டும்’ மனதில் நினைத்துகொண்டார்..”அவர்களிடம் பேசிவிட்டு வீட்டின் தோட்டத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பஞ்சாயத்துல நடக்க போகும் முன் வள்ளி பேசியதை நினைத்துப்பார்த்தார் திருமூர்த்தி.

‘வீட்டில், நுழைந்ததும்.., புதிய பெண்ணை பார்த்ததும் இருவருக்கும் எங்கோ பார்த்தது போல் இருக்க…, தெய்வாவை நோக்கி இருவரும் சென்றனர்., “யார் நீ” கீர்த்தி தெய்வாவை பார்த்து கேட்க.. “குரல் வந்த திசையில் திரும்பி அவர்களை பார்த்தாள்.. “உன்னை தான்மா யாரு நீ???” இப்போ கார்த்தி கேட்க. அவர்கள் இருவரையும் பார்த்த தெய்வா..,  ‘நான்..,நான் பிரகாஷோட தங்கை..’ நீங்க யாரு’..

“என்ன கலாய்கிறையா…, ஐயாவுக்கு ஒரு மகன் மட்டும் தான்…, எங்கிருந்து வந்த நீ…, உன் பேர் என்ன…, உன் ஊர் என்ன????” அவளை பேசவிடமல் கார்த்திக் கேள்விமேல் கேள்வி கேட்க… அவர்களுக்கு பதில் சொல்ல திணறி போனால்.. தெய்வா…’

“ஓய் வாலுங்களா… வந்தவுடனே என் தங்கச்சிய கலாய்க்குறேங்களா…, ஆமாம் கோவிலுக்கு போயிட்டுவர இவ்வளோவு நேரமா உங்களுக்கு…”வள்ளி வர…

‘அது இருக்கட்டும் அண்ணி, இந்த பொண்ணு எப்படி உங்களுக்கு தங்கச்சியா இருக்க முடியும், உங்களுக்கு ஒரு அண்ணா தானே…அப்புறம் எப்படி உங்களுக்கு தங்கச்சி வரும்…’ கீர்த்தி யோசிக்க,கார்த்திக் அதை கேட்டுவிட்டான்..

“ம்ம்ம்…அது எல்லாம் அப்புறமா சொல்லுறேன்…, இப்போ உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…, “தெய்வா…, இவங்க ரெண்டு பேரும் அத்தானோட தம்பி,தங்கை,.., இவன் பேரு கார்த்திகேயன், இவ பேரு கீர்த்திகா..,கீர்த்திக்கும், என் அண்ணாவுக்கும் தான் கல்யாணம் முடிவும் பண்ணிருக்கோம்,”தெய்வாவிற்க்கு அறிமுகப்படுத்த…, அவளோ “ஹாய்.., கீர்த்தி, கார்த்தி.. கைகொடுத்து அறிமுகமானாள்.”

‘கீர்த்தி,கார்த்தி, இவ என் சித்தி பொண்ணு, ஊருல இருந்து வந்திருக்கா, பேரு தெய்வப்ரியா…,ஐயாவோட தம்பி பொண்ணு மாதிரி.. இருவரிடமும் பாதி உண்மைய மறைத்தாள்…, கூறினால் வள்ளி… “ஹாய் ப்ரியா,” கீர்த்தி தெய்வாவை கட்டியணைத்து வரவேற்றால்…,  “ஹாய் ப்ரியா…” கார்த்தியும் கீர்த்தி செய்தது போல் தெய்வாவை கட்டியணைக்க போக… ‘கார்த்தி, அவளுக்கும், தென்னவன் அண்ணாவுக்கு கல்யாணம் முடிவாகிருக்கு அதனால நீ இப்படி பண்ணக்கூடாது அவனது சேட்டைய அடக்கினால்..’

“ஒ மை காட் அண்ணி…, இப்படிப்பட்ட அழகிக்கு நான் கொடுத்து வைக்கல இட்ஸ் ஓகே…, என்ன இருந்தாலும் நீயும் எனக்கு இன்னொரு அண்ணினு சொல்லமாட்டேன்…, வேணா.., என் ஃப்ரண்டா இருந்துகோ.., ஒகே…” அவளிடம் கைகொடுத்தான்.. “அவளும் சிரித்துகொண்டே…, உனக்கு ஃப்ரண்டா இருக்குறதைவிட தங்கச்சியா இருக்கேனே கார்த்தி… இது நல்லா இருக்குல அக்கா..” தெய்வாவும் கேலி செய்ய…, “நோ நோ… எனக்கு கீர்த்தியும்,மலரும் மட்டும் தான் தங்கச்சி, நீ என் அத்தை, பொண்ணு அதுனால முறை மாறக்கூடாதுமா..” அவனும் அவளுக்கு சரிசமாமாய் பேசினான்…”

‘கார்த்தி, உன்னவிட தெய்வா ஒரு வயது மூத்த பொண்ணு, அதுனால மரியாதை கொடுக்கனும்…, சரியா…, இப்படியெல்லாம் பேசக்கூடாது, அத்தான் மாதிரி தான் தென்னவனும் உனக்கு அண்ணன், அப்படி இருக்க, தெய்வாவ கேலி பண்ணக்கூடாது கார்த்தி” பாசமான கண்டிப்புடன் சொன்னால் வள்ளி..

“சரிங்க அண்ணி…, இனிமே அப்படி பேசமாட்டேன்.., தெய்வா.. சாரி சாரி அண்ணி…,” அவனும் வள்ளியின் சொல்லுக்கேற்ப தெய்வாவுக்கு மரியாதை கொடுத்தான்…

‘அதற்கடுத்து கார்த்திகிடமும், கீர்த்தியிடமும், காலையில் நடந்தவற்றை, பரிசம் போடும் நாளும்,, அதே நாளில், பிரகாஷிற்க்கும், தெய்வாவிற்க்கும் நடக்கும் பரிசம் போடுவதையும், அதே நாளில் கல்யாண தேதியை குறிக்கப்படுவதை சொல்லிமுடித்தாள் வள்ளி….’

”பஞ்சாயத்து நடக்கும் முதல் நாள், வள்ளி திருமூர்த்தியின் வீட்டுக்கு சென்றால், அவரும் வள்ளி எதற்க்கு தேடி வந்திருப்பால், கொஞ்சம் யோசனையாக இருந்தார்…’

“வாம்மா, வள்ளி எப்படி இருக்க???”

‘நல்லா இருக்கேன் ஐயா”

“உங்ககிட்ட பேசனும் ஐயா,”

“தெரியும்மா, சொல்ல வந்த விசயத்தை சொல்லும்மா”

‘பஞ்சாயத்தை கூட்ட சொன்னது, நான் தான் ஐயா’

“தெரியும்மா”

‘நாளைக்கு நடக்குப்போற பஞ்சாயத்துல…., எல்லாம் உண்மையும், வெளிவரப்போகுது ஐயா…, ஆனா…, இதுல தெய்வா பாதிக்கபடக்கூடாது ஐயா”

‘சரிம்மா, அதுக்கு என்ன பண்ணலாம்,’

“அதுனால.. தெய்வாவுக்கும்,தென்னவனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்,”

‘சரிம்மா’

“ஐயா, நான் இதெல்லாம் எதுக்கு செய்யுறேனு நீங்க யுகிச்சுருப்பேங்க, ஆனா தெய்வா உயிரை,காப்பாத்த இதைவிட வேற வழி எனக்கு தெரியலை ஐயா,”

“இன்னும் முழுசா விசயத்தை சொல்லலையேம்மா..”

‘தெய்வாக்கு ஆபத்து கழுத்துல இருக்குற கத்தி போல, எப்போ அவள் கழுத்தை அறுக்குனு சொல்லமுடியாதுங்க ஐயா, அதான் தெய்வாமேல ஆசைப்பட்ட தென்னவனுக்கே அவளை கல்யாணம் செஞ்சு வைக்காலானு முடிவு பண்ணிருக்கேன்…, இதை உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன் ஐயா, இன்னொரு விசயமும் இருக்குங்க ஐயா… அது.., மலரும்,பிரகாஷ் அண்ணாவும் விரும்புறது உங்களுக்கு தெரியும் அவங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் பிரிஞ்சு இருப்பாங்க ஐயா.., அவங்க இரண்டு பேரும் உங்க முடிவுக்காக தான் காத்திருக்காங்க ஐயா… அதுக்கும் ஒரு நல்ல முடிவ எடுக்கனும் நீங்க..’

“சரிம்மா, அதையும் நான் ஏத்துகிறேன், ஆனா நீ ஏன் மா இந்த விசயத்தை என்கிட்ட மறைச்ச…”

‘ஐயா.. இது என் அத்தைக்கு, எனக்கும் மட்டும் தான் தெரியுமுனு நினைச்சேன் ஆன உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ஐயா’ பாண்டியனிடம் கூட சொல்லாத விசயம் இன்று இவருக்கு எப்படி என, அவள் சிந்தித்து கேட்க.

“பாண்டியன், ஊருக்கும் வந்த போதே எனக்கும் தெரியும்மா, ஆனா அந்த சூழ்நிலையில எதையும் நானும் கேட்கமுடியலை, எப்போ பாண்டியனுக்கும், குடும்பத்துக்கும் சொல்லப்போறம்மா.”

‘பஞ்சாயத்து நல்ல படியா முடிஞ்ச பின்னாடி சொல்லானும் ஐயா’

“என் மகள்மேல கோவம் படாம இந்த மூனு நாளும் நல்லா பார்த்திருக்க, அவளுக்கு கூட பிறந்த அக்காவ எப்பவும் நீ தெய்வாவுக்கு இருக்கனும்மா வள்ளி, எனக்காக “

‘சொன்னாலும், சொல்லாட்டியும், தெய்வா என் சித்தி பொண்ணு தானே ஐயா..’ அவள் உண்மையை சொல்ல… அவருக்கோ.. எப்படி வள்ளிக்கு தெரியும் அவர் யோசிக்க..

“ஐயா…, எனக்கும் எல்லாம் தெரியும்…, நாளைக்கு நடக்க போற பஞ்சாயத்துல இன்னொன்னும் நடக்கும் ஐயா, ஆனா அதை இப்போ சொல்லமாட்டேன் ஐயா” அவள் சொல்லிச் சென்றாள்… அதற்க்கு பின் எல்லாம் நடந்தவற்றை எல்லாம் கனவு போல் இருந்தது அவருக்கு…., ”

‘பிரகாஷுக்கு, அவனின் தந்தையை நம்ப முடியவில்லை, மலரின் தந்தைகூட சண்டை போட்டது என்ன, இப்போது அவரிடமே, பெண் கேட்பது என்ன, அனைத்து அதியமாக இருந்தது…, அவனுக்கு. காலையில் நடந்ததை நினைத்தவன், மலரிடம் பேசவேண்டும் போல் இருந்தது.., ஆனால் இடையில் தெய்வாக்கும் ஏன் தென்னவனை கல்யாணம் செய்து வைக்க வேண்டும், அவன் பேசுவதற்க்கே காசு கேட்ப்பவன் எப்படி தெய்வாவிடம் சகஜமாய் பழகுவான்.., ஒரு அண்ணாய் யோசிக்க.., அப்பொழுது மலர், பிரகாஷிற்க்கு அழைத்தால்.., அவளிடம் பேசும் ஆவலில், தெய்வாவின் நினைவை ஒதுக்கிவத்தான்…’

“ பரிசம் போடும் நாளுக்காக மணப்பெண்களும்,மாப்பிள்ளைகளும் அந்த நாளுக்காக காத்திருந்தனர்”…

 

                                             துருவங்கள் தொடரும்……….

 

Advertisement