Advertisement

                 துருவங்கள் 1

 

“தாயி இன்னைக்கு அறுவடை நாள்,களத்துல எல்லோரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க தாயி”

‘கனகாம்பரம்நிறமும்,ராமர் பச்சை நிறமும் கலந்த உயர் ரக  பட்டுஉடுத்தி, அதற்கு ஏற்றார்போல் தலையில் மல்லிகையும்,கைகளில் தங்க வளையலும்,கழுத்தில் அவள் கணவன் கட்டிய தாலிக்கொடியுடன் தங்க ஆரமும்,நெற்றியில் சாந்து பொட்டுடன் வகிட்டில் குங்குமமும்,என அனைத்திலும் லக்ஷ்மிதேவியாய் மின்னினாலும் அவள் முகத்தில் மட்டும் கடவுள் பார்வதியின் குணம்கொண்ட ஸ்ரீவள்ளி அந்தவீட்டில் முதல் மருகமகள்’

“ இதோ வரேன் நல்லத்தம்பி அண்ணே,நீங்க போய் பெரிய ஐயாவ கூப்பிட்டு வாங்க,நான் அத்தைய கூப்பிட்டு வரேன்”என்றால்.

‘சரி தாயி’

“ஐயா,அங்க களத்துல உங்களுக்காக ஆளுக காத்துட்டு இருக்காங்க”

‘என் மருமக வந்துடுச்சா”என்றார்.

“ஐயா,தாயி பெரியம்மாவா கூப்பிட்டு களத்துக்கு வந்துடுவாங்கலாம்,தாயி உங்கள கொப்பிடு நேரா வர சொன்னங்க”

“போகலாம் நல்லா,வா”என்று களத்துக்கு புறப்பட்டார் முத்தையாபிள்ளை.

“அத்தை கிளம்பலாமா”என்று வள்ளி மீனாட்சியிடம் கேட்க.

‘நான் எதுக்கு வள்ளி,நீயும் அவருதான் இருகேங்களே நான் உங்களுக்கும்,களத்துல வேலைபார்க்குரவங்களுக்கு சமைக்கணும்,உனக்கு தெரியாத நம்ம இடத்தல வேலை பார்க்குறவங்களுக்கு நாமதான் சாப்பாடு குடுக்கணுமனு,என்றார்’

“சரிங்க அத்தை கொஞ்ச நேரம் நான் கழுத்துல இருந்துட்டு வரேன்,நானும் உங்ககூட சேர்ந்து சமையலுக்கு உதவி பண்ணிறேன்”

‘சரி வள்ளி,நீ கிளம்பு எல்லோரும் உனக்காக காத்துட்டு இருப்பாங்க’

“சரிங்க அத்தை”

“வணக்கம் ஐயா”

“கும்பிடுறேன் சாமி”

வணக்கம் சாமி”

“வணக்கம்,எல்லோரும் சாப்பிடேங்களா,

‘சாப்பிட்டோம் ஐயா’

“எங்க,வள்ளிய இன்னுமா வரல”

‘ஐயா தாயி உங்க பின்னாடிதான் வராங்க’

“வணக்கம் தாயி”

“வணக்கம் அக்கா”

“வள்ளி,நல்ல நேரம் முடிய போகுது,அறுவடைக்கு நேரம் ஆச்சுமா,நீ வந்து ஆரம்பிக்கணும் வா’என்று அழைத்தார்.

“சரிங்க மாமா”

“தல வாழையில் பொங்கல் படைத்து,பத்தி சூடம் பொருத்தி,கருது அறுக்கும் அருவாளில்,சந்தனம்,குங்குமம்,வைத்து அந்த சூரியபகவானுக்கு படைக்கும் விதம் அந்த ஊரில் இன்னும் நஞ்சை வளமும்,புஞ்சை வளமும், பெருக கடவுளிடம் வேண்டுவர்”

“மாமா,சாமி கும்பிட்டாச்சு”

‘அடுத்து உங்கையால கருது அறுக்குற அருவாள எடுத்து குடுமா’

“சரிங்க மாமா”

“தாயி முதல உன்கையலா கருது அறுத்துட்டுவா தாயி”என்று அங்கு இருக்கும் ஒரு பெண்மணி கூற.

“ஆமா வள்ளி முதல நீ போய் கருத அறுத்துட்டுவா”என்றும் அவரும் கூற.

“சரிங்க மாமா”

‘கடவுளே இந்த ஊர் மக்கள் நல்ல இருக்கணும்,இந்த அறுவடை நல்ல படியா நடக்கணும்.என்று வேண்டிக்கொண்டே முதல் கருது அறுத்தால்.

“ம்ம் போங்க தாயி முதல் கருது அருத்ட்டாங்க,போங்க நீங்க போய் அறுவடை பண்ணுங்க,என அறுவடைக்கான வேலைகள் ஆரம்பித்தன.

“சரிங்க மாமா முதல் கருத சாமிக்கு வைக்கணும், நானும் வீட்டுக்கு கிளம்புறேன்,அத்தைக்கு சமையலுக்கு உதவி பண்ணனும்,வரேன் மாமா,என்று கிளம்பினால்.

“சரி வள்ளி,பார்த்து போம்மா”

“நெல் அறுவடையின் போது,வேலைபார்க்கும் மக்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க பெண்களும்,ஆண்களும் சேர்ந்து நாட்டுபுற பாடல் பாடுவார்கள்,அப்படிபாடும் போது அவர்களுக்கு வேலை செய்யும் நேரம் தெரியாது,பாடிகொண்டே அந்தநாளின் நெல் அறுவடை முடிந்ததது”

“முத்தையாபிள்ளை,இவர்தான் இந்த ஊரின் மிகப்பெரிய செல்வந்தர்,அனைவருக்கும் வாரித்தரும் வள்ளல்,சொல்லிய சொல் மாறாதவர்,என்று இவரை பற்றி கூறிக்கொண்டு போகலாம்,இவருக்கு இரண்டு மனைவிகள், காமாட்சியம்மாள்,மீனாட்சியம்மாள்,இருவரும் அக்கா,தங்கை..,காமாட்சிக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கலில் அவர் உயிர் பிரிந்தது,அவருக்கு பிறந்தது ஒரு மகன்,மீனாட்சிக்கு இரு பிள்ளைகள்,ஒருமகள் ஒரு மகன் இருவரும் வெளிஊரில் படித்துகின்றனர்.”

“என்ன மச்சான் அறுவடை எல்லாம் எப்படி போகுது”என்றபடி வந்தார் வள்ளியின் தந்தை முருகவேல்.

‘வாங்க மாமா எப்படி இருக்கேங்க,அறுவடை எல்லாம் நல்லா போகுது’என்ன சாப்பிடுறேங்க’.

“எதுவும் வேணாம் மச்சான்,தங்கச்சி எங்க”

‘உங்க தங்கச்சி வேலை ஆளுக்கு சமையல் பண்ணுறாங்க,எப்பவும் நாம்ம பண்ணுறது தானே மாமா,ஆமா எங்க என் தங்கச்சி’

“உங்களுக்கு தெரியாத என் வீட்டம்மா உங்க வீட்டுக்குத்தான் போயிருக்காங்க,மச்சான்”

“நல்லா, மாமாவுக்கு இளநி கொண்டுவா”

“மச்சான் எங்க வள்ளிய காணலா”

“முதல் அறுவடை பண்ணாதே நம்ம வள்ளிதான் மாமா,இப்போதான் செத்த நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு போனா”என்றார்.

“வள்ளிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு மச்சான்,எப்படி இருக்கா என் மவ”

“உங்க மக இல்லை,என் மருமக மாமா”

“சரி உங்க மருமகதான்,ஆனா அதுக்கு முன்னாடி என் பொண்ணு மச்சான்”

“நல்லா இருக்கா,என் வீட்டுல ராணி மாதிரி இருக்கா”

“முருகவேல்-தமிழ்செல்வி,இவர்களுக்கு பிறந்தவள் ஸ்ரீவள்ளி,இவளுக்கு ஒரு அண்ணன் மலைமாறன்,வெளிநாட்டில் வேலை பார்ப்பவன், தமிழ்செல்வியும்,முத்தையாபிள்ளையும் அண்ணன்,தங்கை.முத்தையாவுக்கு இன்னொரு சொந்தமும் உண்டு ஆனால் அவர்கள் இப்பொழுது இவர்களுடன் இல்லை”

“வள்ளி எல்லாம் சமையலும் ஆச்சா,ஆளுகளுக்கு வேலை முடிஞ்சது அவங்களுக்கு சரியான நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும்,வள்ளி”

“அத்தை எல்லாம் வேலையும் முடிஞ்சது இலைய அறுத்து போடசொல்லுங்க அத்தை,நான் எடுத்துட்டுவரேன்”.

‘அண்ணி,அண்ணி எங்க இருக்கேங்க’என்றபடி வந்தார்,தமிழ்செல்வி.

“வா வா தமிழு,எப்படி இருக்க,அண்ணே வரலையா,என்று வரவேற்றார். மீனா.

“உங்க அண்ணே,என் அண்ணனா பார்க்கா வயலுக்கு போயிருகாங்க,

“அதென்ன வீட்டுக்கு வந்துட்டு உள்ள வராம போறாங்க,அண்ணே வரட்டும், என்று செல்லமாக கொபம்கொண்டார்.

“அண்ணி, இன்னைக்கு அறுவடை நாளுல அதனால மச்சானுக்கு துணைக்கு நான் இருக்கணும்,தங்கச்சிக்கு சொல்லிடுனு என்கிட்டே சொல்லிட்டுதான் போனாங்க அண்ணி”என்றார்.

‘அம்மா எப்போ வந்தேங்க,வாங்க என்ன சாப்பிடுறேங்க,அப்பாவ எங்க ’ என்று வள்ளி தன் தாயை கண்டதும் உற்சாகமாய் இருந்தால்.

“நான் நல்லா இருக்கேன் கண்ணு,நீ எப்படி இருக்க”

“எனக்கென்னமா அத்தையும்,மாமாவும் நல்லா பார்த்ததுக்குறாங்க”

‘அது சரி,என் அண்ணே வீட்டுல உன்னை கொடுத்துஇருக்கேன்ல,உன்னை எப்பவும் நல்லா பார்த்துக்குவாங்க’.

“வாணி அக்கா,அம்மாவுக்கு ஒரு மோர் கொண்டுவாங்க, உட்காரும்மா,நானும் அத்தையும் சாப்பாடு எடுத்துவச்சுட்டு வரோம்”

‘அதெல்லாம் வேணாம்,நானும்,உங்ககூட உதவி பண்ணுறேன்,அண்ணி வாங்க,

“தாயி வேலை ஆளுக எல்லாம் வந்துட்டாங்க,என்றார்.நல்லத்தம்பி.

‘நல்லத்தம்பி அண்ணே இலை போடுங்க,வாங்க எல்லோரும் முதல உக்காருங்க,

“அத்தை வாங்க உங்க கையாலா சாப்பாடு போடுங்க”என்று அவளின் அத்தையை அழைத்தால்.

‘நீயே போடுமா,நீ சாப்பாடு போட்டாதான் அவங்க வயிறு நிறையும்,வள்ளி’

“சரிங்க அத்தை”

“எல்லோரும் கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுங்க”என்று வயலில் வேலைபார்த்த சாப்பாடு பரிமாறினார்கள்.

சாப்பாடு முடிந்த கையோடு,அவர்களுக்கு மோர் வழங்கினால்.

“தாயி இன்னைக்குதான் என் மனசு நிறைஞ்சு இருக்கு,நீங்களும் உங்க குடும்பமும்,என்னைக்கும் நல்ல இருக்கணும்,தாயி”என்று பெரியவர்.வாழ்த்தி சென்றார்.

“ஆமாம் தாயி,நீங்களும்,சின்னஐயாவும் நூறு வருஷத்துக்கும் நல்ல இருக்கணும்,பூவும் போட்டுமா சந்தோஷமா இருக்கணும் தாயி”என்று அவளையும்,அவள் கணவனையும் சேர்த்து வாழ்த்தினார் இன்னொரு பெண்மணி.

“அனைவரின் வாழ்த்தையும் கேட்டு,மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்,கடைசியாய் ஒரு பெண்மணி அவளின் அத்தானை நினைவுபடுத்திவிட்டு சென்றார்”

‘என்ன வள்ளி எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடங்களா,ஒரு குறையும் வைக்கலையே’என்று முத்தையா வள்ளியிடம் கேட்டார்.

“அவளிடம் பதில் இல்லை”

‘வள்ளி,வள்ளி,என அவளை தோள் தொட்டு திருப்பினார். ‘என்னமா,ஏன் இப்படி இருக்குற,அத்தை எதுவும் சொன்னால’என்று கேட்டார்.

“மாமா,அத்தான் எப்போ வருவாங்க”என்றால்.

‘அவரோ ஏன்மா,அவன் இப்போதான வேலைக்கு போய் இருக்கான்.உனக்கு அவன பார்க்கணும் போல இருக்கா’

“இல்லை மாமா,ஒரு பாட்டி நானும்,அத்தானும்,நூறுவருஷம் நல்ல இருப்போனு சொன்னங்க அதான் அத்தான் நினைப்பு வந்துட்டுச்சு”வேற ஒன்னுமில்லை மாமா.

“நான் ஒன்னு சொல்லவா வள்ளி,

‘என்ன மாமா,’

“உன் அத்தான்,அதாவது என் மகன் இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு போன் பண்ண போறான்,அதுக்கான நேரம் இப்போ நீ இன்னும் இங்கயே நிக்குற”என்று சொன்னார்.

‘அட ஆமால,மாமா ஞாபகப்படுத்துனதுக்கு ரொம்ப நன்றி,இதை பிடிங்க என்று சாப்பாடு கிண்ணத்தை அவர் கையில் கொடுத்து விட்டு அவளின் அறைக்கு ஓட்டினால்.’

“இங்க பாருடா,போன் பண்ண போரானுதனே சொன்னே,அதுக்கே சோத்து கிண்ணத்தை என்கிட்டே கொடுத்து போயிட்டா,அவன் ஊருக்கு வந்துட்டா என்ன கலாட்டா பண்ணுவா,என் மருமக”என்று நினைத்துக்கொண்டார்.

உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்

என்ற பாடல் வரியுடன் போன் ரிங்க்டோன் வள்ளியை அழைத்தது.

ஓடி வந்து அவளின் “விவோ11 ப்ரோ”போனைகையில் எடுத்தால்.அதில் அவளும்,பாண்டியனும்,அவர்கள் கல்யாணத்தில்,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தமாதிரி இருப்பதுபோல் புகைப்படத்தை வால்பேப்பராக வைத்திருந்தால்.

‘போனை அட்டென் பண்ணி காதில் வைத்தவுடன்,”என்னங்க வள்ளியம்மா எப்படி இருக்கேங்க”,என்றான்.அவளின் நாயகன்,அன்பு காதலன்,அடிமை கள்வன்,இவளால் காதலாக அழைக்கப்படும்,செந்தூர்பாண்டியன்.

“அத்தான்,நான் நல்லா இருக்கேன்,நீங்க, சாப்பிடேங்களா,வேலைஎல்லாம் எப்படி போகுது”

“வள்ளியம்மா,நான் நல்லா இருக்கேன்,இப்போதான் சாப்பிட்டேன்,வேலை கொஞ்சம் பரவாயில்லை,நெல் அறுவடை நல்லாபடியா முடிஞ்சதா வள்ளியம்மா”.

“ம்ம் நல்லா முடிஞ்சது அத்தான்,இந்த தடவை நான்தான் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறினே,என்று அன்று நடந்த கதையை சொல்லிக்கொண்டு இருந்தால்.இதெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்தான்,

“அத்தான் உங்களை பார்க்கணும் போல இருக்கு,எப்போ வருவேங்க”என்று கொஞ்சம் ஆர்வமாக கேட்டாள்.

‘வள்ளியம்மா நான் வர கொஞ்ச மாசம் ஆகும்,இப்போதானே வேலைக்கு போயிருக்கேன்,புரிஞ்சுகோங்க வள்ளியம்மா’என்று தன் மனம் புரிந்து நடந்துகொள்ளும் வள்ளியிடம் கெஞ்சினான்.

“சரிங்க அத்தான்,இருங்க அத்தை,மாமாகிட்ட கொடுக்குறேன் பேசுங்க”என்று அவளிடம் ஆரம்பித்த பேச்சுவார்த்தை அவனின்,அம்மா,அப்பா,வள்ளியின் அம்மா,அப்பா என்று அனைவரிடமும் பேசிமுடித்தான்”

“சரிங்க வள்ளியம்மா நான் நாளைக்கு பேசுறேன்,நீங்க தூங்குங்க”என்று போனை வைத்தான்.

ஆனால் அவள்,அவன் நினைவாக இருந்ததால்,கல்யாணம் போட்டோவை எடுத்து பார்த்துகொண்டு இருந்தால்.அதில் அவளுக்கு பிடித்த அவளுடைய அத்தானின் கையில் தாலி வாங்கியபோது எடுத்த படம்,அதை தடவி பார்த்து அந்த நாளுக்கு சென்றாள்.

“ஊரில் யார் கல்யாணம் என்றாலும் அதில் முக்கியஸ்த்தர் நம்ம முத்தையாபிள்ளையாக இருப்பார்,ஆனால் அவர் வீட்டில் முதல் கல்யாணம் என்றால் ஊரே ஒன்று திரண்டு ஜேஜேன்னு இருந்தது,ஆம் முத்தையாபிள்ளைக்கும்,காமாட்சிக்கும் பிறந்தவன் தான் செந்தூர்பாண்டியனுக்கும்,முருகவேல்,தமிழ்செல்வியின் மகள் ஸ்ரீ வள்ளிக்கும்,கல்யாணம் இரு வீட்டிலும் முதல் கல்யாணம்”

“சிறுவயது முதல் அவன் நினைவிலே வாழ்ந்தவளுக்கு இன்று அது நிஜமாக போகும் நேரம் வரப்போகிறது,என்று கண்களில் ஆசையுடன் மணமேடைய நோக்கி சென்றுகொண்டு இருந்தால் ஸ்ரீ வள்ளி”

“அந்த ஊரில் மிகப்பெரும் மதிப்புகொண்ட முத்தையாபிள்ளையின் சொந்தம் திருமூர்த்தி கையால் தாலி எடுத்துகொடுக்க அதை வாங்கி, ஸ்ரீவள்ளியின் கழுத்தில் கட்டினான்”.

“என்ன வள்ளி சாப்பிட வராம இன்னும் இங்க இருக்க”என்று வந்தார் மீனா.

‘அத்தான்கிட்ட பேசிட்டு இருந்தேன் அதான்,அதுக்காக நீங்க ஏன் மேல ஏறி வரணுமா,வாணிக்கிட்ட சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்து இருப்பேன்,ஏன் அத்தை கஷ்ட்டபடுறேங்க,என்று கோபம் கொண்டால்.

“ராசா நல்லா பேசுனான வள்ளி,பிள்ளைக்கு வேலை எல்லாம் எப்படி போகுது,என்று மகனை விசாரித்தார்.”

“நீங்க அத்தான்கிட்ட பேசனேங்களே,அப்புறம் எதுக்கு என்கிட்டே கேக்குறேங்க”

‘தம்பிக்கிட்ட இதை பத்தி கேட்க மறந்துட்டேன்,அதான்’

“அத்தானுக்கு ஒருகுறையும் இல்லை,அத்தை அவரு அங்க நல்லா இருகாங்க,நாளைக்கு பேசுறேன்னு சொல்லிட்டார் அத்தை”

‘அப்படியா ராசாவுக்கு ஒருகுறையும் இல்லமா நல்லா பாத்துக்க கருப்பையா,நீதான் என் மவனுக்கு துணையா இருக்கணும்,என்று கையெடுத்து சாமியை வேண்டினார்.’

“என் அத்தானுக்கு எந்த குறையும் இருக்காது அத்தை,அவர் மனசுக்கு எல்லாம் நல்லபடியா இருக்கும்”என்று தனது அத்தைக்கு ஆறுதல் கூறினால்.

 

          துருவங்கள் தொடரும் ………….

 

Advertisement