Advertisement

                துருவங்கள் 4

 

அத்தை நம்ம கீர்த்திக்கு இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடிஞ்சுடும்,படிப்பு முடிஞ்ச கையோட எங்க அண்ணனுக்கு கீர்த்திக்கு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்,மாமாகிட்ட இதை பத்தி பேசலாமா அத்தை…..

‘ஆமா வள்ளி நான்கூட மறந்துட்டேன்,அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சுட்டா அடுத்து தரணிக்கு முடிக்க சரியா இருக்கும்,நான் மாமாகிட்ட நல்ல நாள் பார்த்து பேசுறேன் வள்ளி சரியா’

“ம்ம் சரிங்க அத்தை”

“முத்தையா பாண்டியன் எப்படி இருக்கான்,அங்க அவனுக்கு எல்லாம் சவுகரியமா இருக்கா,என் பிள்ளைனால அவனுக்குதான் தொந்தரவு இதுக்குதான் அவனை பாண்டியன்கூட அனுப்பமாட்டேனு சொன்னே எங்க கேட்டான் உன் பிள்ளை,அவனுக்கு அவன் காரியம் ஜெயிக்கணும்”என்று திருமூர்த்தி பாண்டியனை பற்றி முத்தையாவிடம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

‘ஹா ஹா என்ன மூர்த்தி அய்யா உங்க பிள்ளைய பத்தி நீங்களே குறைகூறலாமா..அவனுக்கென்ன ராஜா மாதிரி இருக்கான் அவன் தங்குறதுக்குனு தனியா வீடு வாங்கி கொடுத்திருக்கேன்,எல்லாம் வசதியும் அவனுக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கேன்,சமையல் மட்டும் அவனே பண்ணிக்குவான், பிறகு என்ன…பிரம்மாதான் வேலையில கவனம் இல்லாம விளையாட்டு பிள்ளையா இருக்கானு ஒருமுறை பாண்டியன் சொன்னான் அய்யா’

“அதுக்குதான் சொன்னே முத்தையா எதுக்கு அவனையும் உன்கூட வெளியூருக்கு கூட்டிட்டு போறேன்னு அவனால ரொம்ப தொல்லையா இருக்கும் சொன்னே பாண்டியன்தான் நான் அவனை பார்த்துகிறேன் அய்யான்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டான்,எப்போ ஊருக்கு வராங்க பாண்டியனும்,என் பிள்ளையும்”

‘அது தெரியல அய்யா,ரொம்ப பெரிய வேலையாம்,முடிய இன்னும் நாலு அஞ்சு மாசம் ஆகுமா, அப்படின்னு வள்ளிதான் சொல்லுச்சு’

‘அப்போ சரி வள்ளி சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும்,அப்புறம் கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்க்கணுமா இல்லை மாறனுக்கு கட்டிகொடுக்க போறியா’என்று கேட்டார்.

“வெளி மாப்பிள்ளை நம்பி எப்படி கட்டிகொடுக்க முடியும் அய்யா,மாறனுக்கு கீர்த்தினு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன் அய்யா,வள்ளிகிட்டையும்,என் தங்கச்சிகிட்டையும் ஒரு வார்த்தை கேக்கணும்,ஏனா மாறன் வெளிநாட்டுல வேலைபார்க்குறான் அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றார்.

‘இங்க பாரு முத்தையா,தமிழ்செல்வி உன்கூட பிறந்த தங்கச்சி அப்படி இருக்க,அண்ணே மகளை தன் பையனுக்கு கல்யாணம் கட்ட காசுக்குமா என்ன,நீ வேணா பாரு தமிழு நாளைக்கே உங்கிட்ட பரிசம்போட தேதி குறிக்க வரும்’என்று அவர் கூற.

“உங்க வாக்கு பொன்னாகட்டும் அய்யா”என இருவரும் தங்களது பிள்ளைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

“என்ன மாமா உங்களை பார்க்கவே முடியல என்னை மறந்துட்டு அப்படி என்ன வேலை உங்களுக்கு,இப்படி என்னை நினைக்காம உங்க வேலைதான் முக்கியம்மா இருந்துச்சுனா நான் என் அப்பா சொல்லுற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிப்பேன்”

“என் தங்கம்,இந்த மாமாவுக்கு உன்னை நினைக்காம இருக்கமுடியுமா, எல்லாம் அந்த பைல்வான்தான் ரொம்ப வேலையா கொடுக்குறான் உங்க அண்ணே, அவனை சமாளிச்சு உன்னை கவனிக்குறதுக்குள்ள இந்த மாமா ரொம்ப டயர்ட் ஆகிடுறேன் செல்லம்,அதான் மாமா உன்னை பார்க்க ஓடோடி வந்திருக்கேன் ஆனா நீ ஒன்னும் தரமாட்டேங்குற போ இந்த மாமாகூட பேசாத”

“அச்சோ என் மாமாவுக்கு இல்லாததா, இந்தாங்க என்று அவள் அவனின் கன்னத்தில், முத்தம் கொடுக்க வர,எங்கிருந்தோ பிரம்மா டே பிரம்மா,என்று பாண்டியான் அவனை எழுப்ப, அவனோ இன்னும் கொஞ்சம் கிட்ட வா என் தங்கம்,என்று அவன் பாண்டியனுக்கு முத்தம் கொடுக்க போக, பாண்டியனோ அவன் தலையில் கொட்டி முழிக்க செய்தான்.

“அய்யோ அம்மா, என் தலை”என்று அவன் தலையை தேய்த்துகொண்டே முழித்தான்,அய்யோ மச்சான் உங்க தங்கச்சிதான் பார்க்க வரசொன்னா அவளை அடிங்க”என்று பயத்தில் கூறினான்.

‘டேய் பிரம்மா நான் பாண்டியான் உன் மச்சான் இல்லை”என மறுபடியும் அவனை கனவில் இருந்து விழிக்க செய்தான்.

“எங்க பாண்டியா என் மாமா பொண்ணு தங்கம்,அவதானே இங்க என் பக்கத்துல இருந்தா, இப்போ நீ இருக்க”

‘போடா பக்கி,உன் மாமா பொண்ணு தங்கமலரு இந்நேரம் பிள்ளையாருக்கு தண்ணி எடுத்து ஊத்திட்டு இருப்பா “என் மாமா நல்ல இருக்கணும்,அவருக்கு எதுவும் ஆககூடாதுன்னு”ஆனா இங்க வந்து பார்த்தா தான் தெரியும் பொண்ணுங்கள சைட் அடிக்குறான்னு’

“வேணாம் பாண்டியா என்னை கேலி செய்யாத,நான் என்னதான் மத்த பொண்ணுங்கள பார்த்தாலும் என் மாமா பொண்ணு எனக்குதான்”என்று கெத்துடன் சொன்னான்.

‘உன் மாமா பொண்ணு உனக்குத்தான், அதை நீ பெரிய அய்யாகிட்ட சம்மதம் வாங்கி,உன் மாமாகிட்ட பொண்ண கேட்டு, நீ கல்யாணம் பண்ணுறதுக்குள்ள எனக்கு இன்னொரு கல்யாணம் முடிஞ்சுடும்’என எதார்த்தமாக கூற.

“என்னது இன்னொரு கல்யாணமா,பாண்டியா நீ சரி இல்லை, வள்ளி தங்கச்சி இருக்கும் போதே இன்னொரு பொண்ணா, இரு நான் வள்ளிகிட்ட சொல்லுறேன்”

‘டேய் நான் இன்னொரு கல்யாணம்னு சொன்னது,எனக்கும் வள்ளியம்மாக்கும் நடக்குற அறுபதாம் கல்யாணத்தை சொன்னே,அதுக்குள்ள நீ எங்கயோ போயிட்ட, நீ நான் பேசுனத சொன்னேனா வள்ளியம்மா நம்பமாட்டாங்க என்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சு இருக்காங்க வள்ளியம்மா,என்றான்.

“இரு உன் மாமாகிட்ட நான் உனக்கு பொண்ணு கொடுக்ககூடாதுன்னு சொல்லுறேன் அப்போதான் நீ அடங்குவ,அப்படியே தங்கத்துக்கிடையும் சொல்லுறேன் உன்னை விட்டு வேற பொண்ண சைட் அடிக்குறானு”என்று அவனை பயமுறுத்தினான்.

“என் ராசா இல்ல,நான் போய் உன்னை பத்தி வள்ளிகிட்ட சொல்லுவேனா, அதான் நீயே சொல்லிட்டேயே நான் எது சொன்னாலும் வள்ளி தங்கச்சி நம்பாதுன்னு,அப்புறம் என்ன”என ஜாகா வாங்கினான்.

‘ம்ம் அது அப்படி இருக்கணும்,ஆபிஸ் டைம் ஆச்சு நீ முன்னாடி போ நான் ஒரு முக்கியமான வேலையை முடிச்சுட்டு வரேன்’

“இன்னைக்கு நானும் உன்கூட வரேன்”

‘அதெல்லாம் வேணாம்,பிரம்மா நான் வேலைய முடிச்சுட்டு வரேன் உனக்கு இன்னைக்கு முக்கியமான ட்ரைனிங்  இருக்கு அதுனால நீ போ’

“எங்கயோ போற ஆனா என்கிட்டே சொல்லமாட்டேங்குற,பார்த்துகிறேன் கடல்ல இருக்குற மீனை பிடிச்சா கடைக்கு கொண்டுவரமாட்டங்களா என்ன அப்போ அந்த முக்கியமான மீனை பார்த்துக்குறேன்”

‘ஒரு பழமொழி கூட ஒழுங்கா சொல்ல தெரியல நீ எல்லாம்,எங்க வேலை பார்க்க போற, போ வேலைய பாரு’என்று அவனை அனுப்பிவைத்தான்.

“என்ன முக்கியமான வேலையா இருக்கும் அப்படி என்கிட்டே மறைக்கிறானா இது ரொம்ப முக்கியமானா விசயமா இருக்கு அப்படி என்ன இருக்கும்”என அவன் யோசித்துக்கொண்டே பைக்கில் சென்றுகொண்டுஇருக்கும் போது யாரோ தன்னை அழைப்பது போல் இருந்தது “டேய் பிரகாஷ் எருமை நில்லுடா”என்று ப்ரியா கூப்பிட அவனோ “என்னை இவ்ளோ பாசமா கூப்பிடுற அந்த ஜீவன் யாரு”என நினைத்துக்கொண்டே பைக்கை நிறுத்தினான்.

‘ஹே ப்ரியா என்னை இங்க நின்னு என்னை கூப்பிட்டுட்டு இருக்குற,என்ன விஷயம்’

“ஹ்ம்ம் என் மாமா பையன் இப்போ வர்ற நேரம் அதான் நின்னுட்டு இருக்கேன்,லூசு கம்பெனியை தாண்டி போயிட்டு இருக்குற அதான் உன்னை கூப்பிட்டு நிறுத்தினே”அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது பாண்டியன் உள்ளே நுழைந்தான்.

‘இதோ வந்துட்டான், உன் மாமா பையன் இல்லை, என் அத்தை பையன்’என்றுபிரகாஷ் சொல்ல’அவர்கள் இருவரையும் நோக்கி வந்துகொண்டு இருந்தான் பாண்டியன்.

“என்ன இன்னும் உங்களுக்கு ஆபீஸ்குள்ள வர்ற எண்ணம் இல்லையா,இங்க நின்னு அரட்டை அடிச்சுட்டு இருக்கேங்க”என கொஞ்சம் கோவமாக பேச.

‘இங்க பாருங்க பாண்டியன்,இது ஒன்னும் உங்க ஆபிஸ் இல்லை,அப்படியே உங்க ஆபீஸா இருந்தாலும் இன்னும் நாங்க ஆபிஸ்குள்ள வரல,நீங்களும் போகல,அப்போ நாங்க ஒன்னும் உங்க ஸ்டாப் இல்லை, நீங்களும் இப்போ ஹச்ஆர் இல்லை,இனிமே வெளிய நின்னு என்னையும்,என் ப்ரிண்டையும் பேசுற வேலையெல்லாம் எங்ககிட்ட வேணாம்,நாங்க ஆபிஸ் வருவோம்,இல்லை படத்துக்கு போவோம் உங்களுக்கு என்ன’என்று அவள் கோவமாக பேச பாண்டியனோ அவளையும்,பக்கத்தில் இருக்கும் பிரகாஷையும் மாறி மாறி பார்த்தான்.

“பிரக்காஷ் ப்ரியாவா இப்படி பேசியது என்று அவளையே பார்த்துகொண்டு இருந்தான்”.

‘ப்ரியா பேசிமுடித்ததும்,உள்ளக்குள் உதறல் எடுத்தாலும்,வெளியே கெத்தாக இருந்தால்’

“பாண்டியன் எதுவும் பேசாமல் ஆபிஸ்க்குள் சென்றான்”

‘ஏய் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா,எதுக்கு தேவையெல்லமா அவன்கிட்ட சண்டை போடுற’

“டேய் உனக்கும் சேர்த்துதானே சண்டை போட்டேன் அப்புறம் ஏன் டா,என்மேலேயே கோவம்படுற”

‘பெரிய இந்தியா பாகிஸ்தான் சண்டை,இதுல எனக்காக சண்டை போடுறலாம்,அவன் என்ன ஆப்பு வைக்கபோறானோனு நான் பயந்துபோயிருகேன்,இதுல நீ வேற ஏன் ப்ரியா,இன்னைக்கு அவன் என்ன ப்ரோக்ராம் கொடுத்து என்னையும், உன்னையும் பாடுபடுத்தபோறானோ வா போகலாம் ஆபிஸ்குள்ள’என்று அவளை அழைத்துகொண்டு லிப்ட்க்குள் சென்றான்.

“ஹே பயந்தாகொல்லி இந்த ப்ரியா இருக்க பயமேன்,பயப்படமாம வா டா எந்த ப்ரோக்ராம் கொடுத்தாலும் நான் செஞ்சுத்தரேன் உனக்கு, இதுக்குபோய் அழுக்குற”என அவனுக்கு தைரியம் சொல்ல.

‘நீ பண்ணிடுவ அதுக்கடுத்து அவன் என்கிட்டே கேக்குற கேள்வியில்ல நான்தான் பதில் சொல்லணும், அது எப்படி இருக்கும் தெரியுமா “குற்றம் நடந்தது என்ன” அப்படின்னு கேள்விமேல கேள்விகேட்டு என்னை இன்னிக்கு முழுசும் என்னை ஆபிஸ்க்கு எழுதிகொடுக்கபோறான்’

“அவன் புலம்பல் லிப்ட் நின்றும் தொடர்ந்து கொண்டு இருந்தது, அனைவரும் அவனை பார்த்து ஒருமாதிரி சிரித்துகொண்டு இருந்தனர், “டேய் புலம்பாம வா எல்லாரும் உன்னைத்தான் பார்க்குறாங்க”என்று அவள் கூற.

‘என்ன பிரகாஷ், வீட்டுல பொண்ணு பார்த்துட்டாங்களா என்னை இப்போவே புலம்ப ஆரம்பிச்சுட்ட’என அனிதா கிண்டல் செய்ய.

“ம்ம்க்கு இப்போ அதுக்குதான் எனக்கு குறைச்சல்,போ மா போய் புதுசா சாப்ட்வேர் கண்டுபிங்க,என்னையெல்லாம் கிண்டல் செய்ய வந்துட்டா”

‘பிரகாஷ் இப்போ நீ ஏன் கோபம்படுற’

“ம்ம் வேண்டுதல்”

“சரி இன்னைக்கு என்ன வேலைன்னு பார்க்கலாம்,என்று மெயில் ஓபன் செய்தால்”

‘பிரகாஷ் இன்னைக்கு உனக்கு ட்ரைனிங்,ஆல்ரெடி ஸ்டார்ட் ஆகி போயிட்டு இருக்கு இன்னும் போகாம என்ன பண்ணுற’என்று ஒருவன் கூற.

“அய்யோ பிரகாஷ் இன்னைக்கு சிக்கினது நீ இல்லை நான்தான்”என ப்ரியா அலற.

‘அடித்துபிடித்து,அவன் எனவோ ஏதோ என்று பார்க்க,அவள் விழிகள்  மெயிலை விட்டு அசையவில்லை’

“பிரகாஷும்,பார்த்துவிட்டு “அச்சோ ப்ரியா உன்னை இன்னைக்கு வச்சு செய்யப்போறான்,ஆல் தி பெஸ்ட்”என்று அவன் வாழ்த்திவிட்டு செல்ல,இவளோ இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.

“இந்த போட்டோவில இருக்குறவங்க உங்களுக்கு தெரியுமா”

‘ம்ம் தெரியும்,என் வீட்டுலதான் குடியிருந்தாங்கா,ஆனா அவங்க வீட்டை காலி பண்ணி ரொம்ப நாள் ஆச்சு,இப்போ வந்து இவங்களை விசாரிக்குறேங்க’

“அது உனக்கு தேவையில்லை,இப்போ அந்த குடும்பம் எங்க இருக்காங்க அதுமட்டும் சொல்லுங்க”

‘இல்லைங்க இப்போ எங்க இருக்காங்கனு தெரியலை,நீங்க யாருன்னு சொல்லலை’

“ம்ம் இந்த குடும்பத்தோட ரொம்ப நெருங்கின சொந்தம்”என்று பெரியவர் என பார்க்காமல் பேசிசென்றான்.

“ஹெலோ, உன்னை கேட்டு ரெண்டுபேர் வந்தாங்க,ஆமா நீ சொல்லுற மாதிரிதான் அவன் இருந்தான்,நீ நல்லா இருக்கேள,நான் எதுவும் உங்கள பத்தி சொல்லல,நீ எங்க இருக்கேனு நான் ஒரு வார்த்தை கூட சொல்லம்மா,என் பேத்தி எப்படி இருக்கா,ம்ம் சரிமா நான் வைக்குறேன்”என்று பேசிவிட்டு அவர் எதிரில் இருக்கும் கடவுள் கந்தனின் படத்தை பார்த்து “உன்னை நம்பித்தான் அந்த குடும்பம் இருக்கு கடவுளே நீதான் அவங்கள,அவங்க இடத்துல சேர்க்கணும் என கையெடுத்து கும்பிட்டார்.(ஆனால் கடவுள் கந்தனோ, இனிமேதான் என் ஆட்டமே இருக்கு என்ற பாவனையில் சிரித்தார்)

“என்ன அண்ணே,அந்த ஆளு அவங்கள பத்தி எதுவும் சொன்னாரா”

‘இல்லைடா அந்தாளுக்கே அவங்கள பத்தி தெரியாதுன்னு சொல்லுறான்,அதுவும் அவங்க காலி பண்ணி ரொம்ப நாள் ஆச்சாம்,இனி வேற இடத்துலதான் தேடனும்,வாங்க டா போகலாம்’

“அண்ணே நாம ஏன் சென்னையில தேடக்கூடாது”என்று ஒருவன் கூற.

‘டேய் சென்னையில எனக்கு தெரிஞ்ச ஆளு இல்லையேடா,அப்புறம் எப்படி தேடுறது”

‘அண்ணே எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காங்க,அவங்ககிட்ட சொன்ன ஒரு வாரத்துல கண்டிபிடிச்சு கொடுப்பாங்க,நீங்க தேடுற குடும்பத்த’

“அவனோ யோசித்து,சரி போகலாம்,ஆனா அவன் ஒரு வாரத்துல கண்டுபிடிக்கலேனா நீ செத்த வா போகலாம் சென்னைக்கு”

‘என்மேல நம்பிக்கை வையுங்கனே கண்டிப்பா பிடிச்சுடலாம் அந்த குடும்பத்த’என்று அந்த கும்பல் சென்னைக்கு பயணமானது.

“ப்ரியா,பாண்டியன் கூப்பிடுறாங்க”

‘அய்யோ நான் இன்னும்,இந்த வேலையா முடிக்கலையே,வேலைய முடிச்சுட்டியா இல்லையானுதான் கேப்பான்,பிரகாஷ் இன்னும் ட்ரைனிங் முடிச்சு வரலையே’என அவள் புலம்பிக்கொண்டு இருந்த போது மறுபடியும் அனிதா அவளை பாண்டியன் அழைத்ததாக கூற, ‘இதோ போறேன்’என்று அவனை பார்க்க சென்றாள்.

“ம்ம் ப்ரியா,அந்த வேலையா முடிச்சுடேங்கனா,இந்த பைல் அஹ இருக்குற வேலையையும் முடிச்சுருங்க”என அவளை பார்க்காமல்,அந்த பைலை எடுத்து கொடுத்தான்.

‘அவளோ அதை வாங்காமல்,அவனை பார்த்து முழித்துகொண்டு இருந்தால்’

அவனோ கையில் உள்ள பைலை இன்னும் வாங்காமல் அவள் நின்றுகொண்டுஇருப்பதை,பார்த்து “என்ன”என்று கேட்டான்.

“அது….நான் இன்னும் அந்த வொர்க்க முடிக்கலை,அப்புறம் எப்படி இந்த வொர்க் பார்க்கமுடியும்”

‘என்ன, இன்னும் அந்த வொர்க் முடிக்கலையா,இவ்வளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்கேங்க’

“இல்லை,பாண்டியன் அந்த வொர்க்ல எதுல எரர் இருக்குனு கண்டுபிடிக்கமுடியல அதான்”

‘ஒருவேலையகூட ஒழுங்கா முடிக்கமுடியலை,நீங்க எல்லாம் எதுக்கு ஆபிஸ் வரேங்க ம்ம், சொல்லுங்க’என்று அவன் அவளை பிடித்து கத்திக்கொண்டு இருந்தான்.

“சாரி பாண்டியன்,எவ்வளவு ட்ரை பண்ணியும் என்னால முடிக்க முடியலை”என அழும் நிலையில் அவனிடம் பேசினால்.

‘வாங்க உங்க இடத்துக்கு’என்று அவளின் கம்ப்யூட்டரில் அவன் எந்த இடத்தில் தப்பு நடந்துள்ளது என்று கண்டுபிடித்தான்,அதை சரி செய்து முடித்ததும்,கம்ப்யூட்டரில் “டிங்டாங்”என மெசேஜ் டோன் பேஸ்புக்கில் இருந்து அவளுக்கு மெசேஜ் வந்தது, அதை பார்த்ததும் அவன் இன்னும் கோபமானான்.

“ஓ என்னடா இன்னும் வேலைய முடிக்கலேன்னு தைரியமா சொல்லுறேன்னு,இப்போதான் தெரியுது இவ்வளவு நேரம் உங்க லவர்கிட்ட சாட் பண்ணிட்டு இருக்கேங்க மேடம்,உங்களுக்கு பேசுறதுக்கு நேரம் இல்லையா,இல்லை இவன் கொடுக்குற வேலையெல்லாம் நாம செய்யணுமா என்னனு ஒரு திமிரா இருக்கேங்க,இது ஒன்னும் உங்க கம்பெனி இல்லை கண்ட நேரத்துலயும் கண்டவங்கிட்டயும் பேசுறததுக்கு,லுக் ப்ரியா இது வேலைக்கான நேரம்,இதுகடுத்து ப்ரேக் இருக்கு அப்போ உங்க லவர்கிட்ட பேசுங்க,இன்னும் அரைமணி நேரத்துல எனக்கு இந்த பைல் வரணும் மைன்ட் ட்”என அவன் பேசிமுடித்து சென்றான்.

“அனைவரும் அவளையே பார்த்துகொண்டு இருந்தனர்,அவளோ அசைய மறுத்து நின்றுகொண்டிருந்தால்,அப்பொழுது பிராகாஷ் “என்ன எல்லோரும் நின்னுட்டு இருக்காங்க,யாரவது புது எம்டி வராங்களா,இல்லை அனோன்ஸ்மென்ட் பண்ணுறாங்களா”என அவனுக்குள்ளே பேசிக்கொண்டு வந்தவன்,அப்பொழுதுதான் பார்த்தான் ப்ரியா கண்களில் கண்ணீருடன் நிற்பதை “இவ ஏன் இப்படி நின்னுட்டு இருக்கா” என யோசித்துக்கொண்டு அவளின் அருகில் சென்று “என்ன ப்ரியா எதுக்கு அழுகுற,என்னாச்சு, உடம்பு எதுவும் பண்ணுதா,சொல்லு ப்ரியா”என்று அவளை கேட்டுக்கொண்டு இருக்கும் போது அனிதா அவனிடம் பாண்டியன் வந்து அவளை சத்தம் போட்டதை கூரிசென்றால்.

“அந்த பைல்வானுக்கு வேற வேலை இல்லை,அவன் திட்டுனத மைண்ட்ல வச்சுக்காத ப்ரியா”என சமதானபடுத்தினான்,ஆனால் அவளோ கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் இருக்கையை இழுத்துபோட்டுகொண்டு உட்கார்ந்து,அவன் சரிசெய்துகொடுத்த பைலை கிலித்துபோட்டுவிட்டு, இவளே அந்த தவறை கண்டுபிடிக்க முயற்சி செய்தால்.

‘ஹே ப்ரியா,எதுக்கு அந்த பைல கிழிக்குற’அவள் செய்வதை பார்த்ததும்,புரிந்துகொண்டான் இவள் வேலையை முடிக்காமல்,எழுந்திரிக்க போவதில்லை என்று.

‘அவனும் அவள் பக்கத்தில் இருந்தே அவள் செய்வதை பார்த்துகொண்டுயிருந்தான்,அவளோ வேகவேகமாக அந்த தவற்றை கண்டுபிடித்து அந்த பைலை எடுத்துகொண்டு பாண்டியன் அறைக்கு சென்றாள்’

“படார் என யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு தலையை திருப்பினான், ‘என்ன’ என்று பேசவருவதற்குள், “இந்தாங்க இது நீங்க தப்ப கண்டுபிடிச்சகொடுத்த பைல்”, என இரண்டாக கிழிக்கப்பட்டு இருந்த பைலை அவன் முன் வைத்தால், “இது நானா சொந்தமா எந்த இடத்துல மிஸ்டேக் ஆகி இருக்குனு கண்டுபிடிச்ச பைல்”என வேறு ஒரு பைலை அவனிடம் கொடுத்தாள்.

“ம்ம் என்ன சொன்னேங்க நான் லவர்கிட்ட பேசிட்டு இருந்தேனா,ஆமா நான் மெசேஜ் பண்ணிட்டுஇருந்தேன்,அப்படியே இருந்தாலும் அது என் பர்சனல் விஷயம் அதுல நீங்க தலையிட தேவை இல்லை ஓகே”என்று அவள் பதிலடி கொடுத்துவிட்டு சென்றாள்.

“வாங்க அண்ணி,வாங்க அண்ணா,எப்படி இருக்கேங்க”என்று மீனாட்சி வள்ளியின் அம்மா,அப்பாவை வரவேற்றார்.

‘வரோம் அண்ணி,அண்ணா,நீங்க,வள்ளி எப்படி இருக்கா’என தமிழ்செல்வி கேட்க.

‘தங்கச்சி,மச்சான் எப்படி இருக்காங்க,நீ எப்படி இருக்க’

“எல்லோரும் நல்லா இருக்கோம்அண்ணா,அண்ணி”

‘அடடே வாங்க மாமா,வாம்மா தமிழு’என முத்தையாவும் வரவேற்றார்.

“நல்லா இருக்கோம் அண்ணா”

‘அம்மா, அப்பா, வாங்க’

“இந்தா வள்ளி,உனக்கு பிடிச்ச பருத்திபால்,முறுக்கு”என்று கொண்டுவந்த பொருளை வள்ளியிடம் கொடுத்தார்.

‘உக்காருங்கமா குடிக்க எடுத்துட்டு வரேன்’

“இருமா வள்ளி இன்னைக்கு மச்சான் சொல்லுற பதிலுக்கு அடுத்துதான், இங்க சாப்பிடுவோம்”என வள்ளியின் தந்தை கூற.

‘என்ன மாமா என்ன சொல்லணும்’என கேட்க.

“அண்ணா என் மகன் மாறனுக்கு,உங்க பொண்ண கீர்த்திய கல்யாணம் பண்ணிகொடுக்குறேன்களா”என்று தமிழ் கேட்க.

‘ஆமா மச்சான்,என் வீட்டுக்கு கீர்த்திதான் மருமகளா வரணும்,எப்போ பரிசம் போட வரணும் நல்ல தேதி பார்த்து சொல்லுங்க’

“இதுக்குதான் சாப்பிட மாட்டோம் சொன்னீங்களா,வள்ளி இன்னைக்கு நல்ல விஷயம் பேசி இருக்கோம் சைவ சாப்பாடு போடனும் என் வருங்கால சம்மந்திக்கு”என்று மறைமுகமாக சம்மதம் சொன்னார்.

“அண்ணா ரொம்ப நன்றினா,இப்போதான் சந்தோசமா இருக்கு”

‘அண்ணி இந்தாங்க குங்குமம் வைச்சுகோங்க’என மீனாட்சி தமிழுக்கு கொடுக்க.

“இப்போவாச்சும்,குடிக்க கொண்டுவரவாப்பா”

‘குடும்மா,நான் சாப்பிடுறேன்’என மகிழ்ச்சியில் அந்த குடும்பமே இருந்தது.

“வள்ளி இங்க கொடு நானும் அந்த காய்கறிய நறுக்குறேன்,என அவள் அன்னையும்,அத்தையும் பரிசத்திற்கு என்ன பொருள் வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டே சமைத்துக்கொண்டு இருந்தனர்.

“பாண்டியனின் மனநிலை கொஞ்சம் சரி இல்லாமல் இருந்தது,வேலையில் கவன சிதறிக்கொண்டு இருந்தது, “என்னாச்சு எனக்கு ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்க அப்புறம் ஏன் எனக்கு இப்படி இருக்கு,இன்னைக்கு கோவில் போயிட்டு வரலாம் அப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்,முதல பிரகாஷ்கிட்ட சொல்லணும் இன்னைக்கு அவனை கூட்டிட்டு போகணும்”என முடிவுடுத்தான்.

‘நீயா ப்ரியா இது,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அழுதிட்டு இருந்த ப்ரியாவ இது,என சாப்பிட்டுகொண்டிருந்தவளை கேட்டான்.

“டேய் சும்மா சும்மா அழுதேன்னு சொல்லாத”உள்ள நடந்தத கேளுடா, எப்படி அவனுக்கு டோஸ்விட்டேன்னு”என்று உள்ளே நடந்ததி கூறிமுடிக்க அவள் அருகில் வந்து நின்றான் பாண்டியன்.

‘பிரகாஷோ அவளையும், அருகில் நிற்கும் பாண்டியனையும் மாறிமாறி  பார்த்துகொண்டு இருந்தான்’

“அவளோ என்ன டா, என் பக்கத்துல யாரு இருக்கானு பார்த்துட்டு இருக்குற”என அவள் பக்கத்தில் பார்க்க “பாண்டியன் அவளை பார்த்தவிட்டு,இன்னைக்கு கோவில் போகணும் அதானால ரெடியா இரு சரியா”என பேசிவிட்டு சென்றான்.

‘ஏன் டா அவன் பக்கத்துல இருக்கானு சொல்லமாட்டாய,எருமை’என அவனை போட்டு அடித்துக்கொண்டு இருந்தால்.

“அடிப்பாவி அவன் வந்தும் நீ அவனை பத்தி சொல்லிட்டு இருந்த,அதான் எப்படி நிறுத்துறதுன்னு தெரியலை,சரி விடு,நீயும் கோவிலுக்கு வா போயிட்டு வரலாம்”என அவளையும் அழைத்தான்.

“உன்கூடனா நான் வரேன்,ஆனா அந்த பைல்வானும் வருவானே அதனால நீயும்,அவனும் போயிட்டு வாங்க”

‘ஓகே நான் கிளம்புறேன்,பார்த்து போ ப்ரியா’

“ம்ம் சரி டா பை”என்று இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

“எந்த கோவிலுக்கு போறோம் பாண்டியா”

‘சிவன் கோவிலுக்கு பிரம்மா’

“அம்மா எங்க இருக்கேங்க”

‘கோவில்ல இருக்கேன் தெய்வா,சாப்பாடு எடுத்து வச்சு சாப்பிடு நான் வந்துடுவேன்’

“சரிமா,பார்த்து வாங்க”

 

                                              துருவங்கள் தொடரும்……

 

Advertisement