Advertisement

                 துருவங்கள் 11

 

”வாங்க….வாங்க…என்ன ஊருக்காரவங்கயெல்லாம் சேர்ந்து வந்திருக்கேங்க…. என்ன விசயம்”

‘வணக்கம்….ஐயா….வணக்கம்…பெரியய்யா’

“வணக்கம்…அண்ணே….வணக்கம்…என்ன சாப்பிடுறேங்க….”

‘அதெல்லாம் வேண்டாம் ஐயா….உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசுறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம்….பேசலாமுங்களாம்…’

“சொல்லுங்க என்ன பேசனும்…”

‘அது வந்துங்கய்யா…..எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல….அதான்…’

“எந்த தயக்கமும் வேண்டாம்….சொல்ல வந்த விசயத்தை சொல்லுங்க….”

‘ஐயா….உங்க குடும்பத்துமேல, பஞ்சாயத்துல..புகார், கொடுத்துருக்காங்க…அது விசயமா பேசத்தான் நாங்க வந்திருக்கோம்…’

“என் குடும்பத்துமேல…புகார், கொடுத்துருக்காங்களா…யாரு…என்னனு சொல்லிருக்காங்கா?????”

‘அது….தம்பி ரெண்டாம் தாரமா…கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்காங்காளா…அதை பற்றி தான்…புகார் கொடுத்திருக்காங்கா….அதுவும் புகார் கொடுத்தவங்க பேருல….ஊர் மக்களுனு போட்டுயிருக்கு…..’

“உங்களுக்கே தெரியும்….ஊர் மக்கள், போட்டு புகார் வந்தாலே அதை நிராகரிக்க முடியாது……இதை நாங்க முதல திருமூர்த்தி ஐயாகிட்ட சொன்னோம்…. அவரு பஞ்சாயத்தை கூட்டனும் சொல்லிட்டாரு……உங்களுக்கு நேருல போய் புரியும் படியா சொல்லச்சொன்னாங்க…… ஊர் மக்களுக்கு  தண்டோரா அறிவிப்புல உங்க குடும்பம் பஞ்சாயத்து நடக்குதுனு சொல்லலை….. பஞ்சாயத்து கூடுதுனு மட்டும் தான் அறிவிப்பு கொடுத்துருக்கோம் ஐயா…நீங்க என்ன சொல்லுறேங்க ஐயா… இந்த…. பஞ்சாயத்தை நடத்தலாமா இல்லை… வேண்டாமானு சொல்லுங்க நீங்க சொல்லுறமாதிரி செய்றோம்…ஐயா…இது தான் விசயம்..” கொஞ்சம் நேரம் யோசித்த முத்தையா….ஒரு முடிவுடன்… அவர்களை பார்த்தவர்…… ‘என்னைக்கு பஞ்சாயத்தை..கூட்டாலாமுனு சொல்லுங்க…..நான் என் குடும்பத்தோட அங்க வரேன்….’அவர் சொல்ல… “ஐயா பஞ்சாயத்தை உங்க வீட்டுலையே வச்சுக்கலாம்…. எதுக்கு நீங்க அங்க வரனும்.’ “அது தப்பு…ஊர் மக்களே என் குடும்பத்துமேல மனு கொடுத்திருக்காங்க…. எல்லோருக்கும் எப்படி பஞ்சாயத்து நடக்குமோ….அப்படியே எங்க குடும்பத்துக்கும் நடக்கனும்…இங்க எல்லோரும் ஒன்னுதான்….’ முத்தையா அனைவரும் ஒன்றுதான் அனைவரையும் சேர்த்து சொன்னதை கேட்டு அவர்களுக்கு கொஞ்சம் மனவேதனையாக இருந்தது….இப்படிப்பட்டவரின் மேல் எப்படிதான் மனு கொடுக்க தோன்றியதோ…..ஊர் பெரியவர்களுக்கு வேதனையாக இருந்தது…. ‘பஞ்சாயத்து…நாளை மறுநாள் நடக்குது ஐயா…. சரிங்க ஐயா நாங்க போயிட்டுவறோம்….’ ஊர் பெரியவர்கள்….கிளம்பினர்.. “ம்ம்.. போயிட்டுவாங்க’… கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பிவைத்தார்…. முத்தையா….

’வீட்டில் இருக்கும்…அனைவருக்கும் இந்த விசயம் பரவியது…..மீனாட்சிக்கோ அதிர்ச்சியாய் இருந்தது….ஊரில் உள்ள மக்களின் பஞ்சாயத்தை நடத்திய குடும்பத்துக்கே….பஞ்சாயத்தில் புகார் கொடுத்து, குடும்பத்தையே பஞ்சாயத்துக்கு அழைப்பது…..இதுவே முதல் முறை….. “என்னங்க இது…நம்ம குடும்பத்து மேல புகார் கொடுத்து….பஞ்சாயத்துக்கு கூப்பிடுறது யாருங்க….”.. ‘மனு கொடுத்தவங்க பேருல ஊர் மக்களுனு இருக்குது….மீனா’… “யாருக்கு எந்த தீங்கும் நினைக்காதா குடும்பத்துமேல இப்படி பஞ்சாயத்துல நிக்க வைக்க எப்படி மனசு வந்தது”…..கண்ணீருடன் முத்தையாவிடம் கேட்டார்….  ‘மீனா..எதுக்கு இப்போ கண்கலங்குற…..யாருக்கும்…எந்த துரோகமும் நாம செய்யல…அப்படி இருக்க…என் மகன் மேல எந்த தப்பும் இருக்காது…..கடவுள் நம்மல சோதிச்சுப்பார்க்குறாரு போல….என்ன நடக்குதுனு பார்க்கலாம்… அழுகாத மீனா…’ மீனாட்சியை சமதானம் செய்தார்….

“மாமா….நமக்கு இது சோதனை காலமும்…நினைச்சுக்கோங்க…என்ன நடந்தாலும் நம்ம பக்கம் தெளிவான ஆதாரம் இருக்கும் போது எதுக்கு கவலைப்படுறேங்க…..நம்ம குடும்பத்த பஞ்சாயத்துக்கு கூப்பிட்டாங்கனா…இது நமக்கான வழினு எடுத்துக்கோங்க….அந்த தெய்வா..பொண்ண ஊருல என்ன சொல்லி பேசுறாங்கனு நமக்கு தெரியாது….சிலர்…தெய்வாவையும்,அத்தானை சேர்த்து வச்சு பேசலாம்….இல்லை…நம்ம குடும்பத்து மீது அக்கரையாவும் இருக்கலாம்…..எதுக்கு வருத்தப்படனும்….மாமா,…குடும்பத்தோட பஞ்சாயத்துக்கு போகலாம்….என்ன நடந்தாலும்…நம்ம குடும்பத்துல எந்தவித பிரச்சனையும் வராது….என் வார்த்தை உண்மை மாமா….”..

‘வள்ளி…..உன்னை மாதிரி பொண்ணு தான் வீட்டுக்கு வீடு மருமகளா கிடைக்கனும்…எந்த சூழ்நிலை வந்தாலும் எவ்வளவு தைரியமா இருக்க….இதுக்கு தான் என் மருமக வள்ளி வேணும்….. மீனா.. இங்க பாரு வள்ளி எப்படி தைரியமா இருக்கா… உனக்கு ஏன்…வள்ளி போல இருக்க முடியல….வள்ளிக்கு இருக்குற பக்குவம் உனக்கு இல்லை மீனா…..இப்போ கவலைபடுறதை நிறுத்திட்டு…மத்த வேலையா பாரும்மா போ’ முத்தையா மீனாவை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.’

“பஞ்சாயத்துனா என்னக்கா….எதுக்கு காலையில இருந்து…எல்லோரும் முகமும் சோகமா இருக்கு…..என்னால எதுவும் பிரச்சனையா…அக்கா…சொல்லுங்கக்கா.. என்னால முடிஞ்ச வரை உங்களுக்கு உதவி பண்ணுறேன்…அக்கா…ப்ரியா…… வள்ளியிடம் கேட்க…”

‘பஞ்சாயத்துனா…ஊர் மக்களோட குறையை தீர்த்து வைக்குறது……தெய்வா…, முதல் முதலா நம்ம குடும்பத்துமேல பஞ்சாயத்துல புகார் கொடுத்துருக்காங்க அதை கேள்விப்பட்டு தான் எல்லோரும் கொஞ்சம் வருத்தமா இருக்காங்க…. உன்னால எந்த பிரச்சனையும் இல்லை தெய்வா நீ ஏன் அப்படி நினைக்குற….. எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணனும் தெய்வா…செய்வயா…’

“என்ன உதவினு சொல்லுங்கக்கா…..கண்டிப்பா செய்யுறேன்”

‘நாளை மறுநாள் நடக்க போற…பஞ்சாயத்துல நீ உண்மைய மட்டும் பேசனும்…. சரியா..’

“கண்டிப்பா உண்மை என்னனு நான் சொல்லுவேன் அக்கா…என்ன, என்ன நடந்தது…முதல் கொண்டு எல்லாமே சொல்லுவேன்க்கா….என்கிட்ட முதல் முறை கேட்டுருக்கேங்க செய்வேன்க்கா…உங்களுக்கா”

‘ம்ம்..சரிம்மா….’

“என்ன மதினி….. நம்ம குடும்பத்தவே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருக்காங்க….. பாண்டியன் அண்ணாவுக்கு தெரியுமா…..செல்வி அத்தை,மாமாக்கு தெரியுமா… பஞ்சாயத்து நடக்க போறது…..’” மலர்…கோவிலுக்கு வந்த வள்ளியிடம் பேசிகொண்டிருந்தால்…

‘அம்மாக்கு,அப்பாக்கு…அத்தை சொல்லிட்டாங்க….அவங்க நாளைக்கு வந்திருவாங்கா….அத்தான்…விதை நெல்லும்,விதை வெங்காயமும், வாங்க திண்டுக்கலுக்கும்,மதுரைக்கு,….போயிருக்காங்கா…இன்னைக்கு ராத்திரி தான் ஊருக்கு வருவாங்க….அத்தான் வந்த பின்னாடிதான் நான் பஞ்சாய்த்தை பற்றி அவருகிட்ட சொல்லனும்….’

“மதினி….என்னகென்னமோ அந்த பொண்ணு….பஞ்சாயத்துல அண்ணாகூட தான் வாழ்வேனு சொல்லிட்டா…என்ன பண்ணறது……, மாறன் மாமாக்கு இன்னும் விசயமே தெரியாது….தெரிஞ்சா…சும்மா இருக்கமாட்டங்க…..கீர்த்திக்கு,கார்த்திக்கு கூட இங்க நடக்குற இசயம் தெரியாது…..என்ன பண்ணப்போறீங்க மதினி…. எனக்கு பயமா இருக்கு…நாளைக்கு நடக்கப்போற பஞ்சாயத்தை நினைச்சா..”

‘என்ன நடந்தாலும்….எனக்கு அத்தான்மேலையும்,கடவுள் மேலையும், நம்பிக்கை இருக்கு….மலர்…பார்க்கலாம் பஞ்சாயத்து கூட்டத்துல என்ன நடக்குனு……நான் கிளம்புறேன் மலர்… நீ பார்த்து போ வீட்டுக்கு’

“சரி மதினி, நீங்களும் பார்த்து போங்க”

‘வழி நெடுக்கிலும்…பாண்டியனிடம் எப்படி பேசுவது,… பஞ்சாயத்து பற்றி பேசினால் புரிந்துகொள்வாரா…இல்லை…தெய்வாவிடம் சண்டை போடுவாரா…., மாறன், அண்ணாக்கிட்ட பேசி.. புரிய வைக்கலாம்,…மலர் சொன்ன மாதிரி… கீர்த்திக்கும்,கார்த்திக்கும் தெரிஞ்சா…..அதுவும் கார்த்திக்கு,….அத்தானுக்கு ஒன்னுனா…யாரு காரணம் தெரிஞ்சுகிட்டு போய் சண்டை போடுவான்….. அவனை சமாதானம் பண்ண…யாருலும் முடியாது….என்ன செய்யலாம்….. அத்தைகிட்ட இதை பற்றி பேசிடலாம்….அவங்க இதுக்கு ஒரு முடிவு சொல்லுவாங்க….’ முடிவுடன் கோவிலில் இருந்து வீட்டுக்கு விரைந்தால்…

“என்ன பண்ணலாம் அத்தை….இதுக்கு நீங்க தான் ஒரு முடிவு சொல்லனும், இப்போதைக்கு தம்பிக்கிட்ட நாளைக்கு நடக்கப்போற பஞ்சாயத்தை மட்டும் சொல்லி புரியவை…..மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்…. மாறன்,கீர்த்தி, கார்த்தி, மூனு பேரும் ஊருக்கு வரலை, அப்படியே வந்தாலும், நாம சொல்லாம அவங்களுக்கு எப்படி விசயம் தெரியும்….இதையும் மீறி அவங்களுக்கு தெரிஞ்சா…. அன்னைக்கு பார்த்துகலாம்…. சரியா….” வள்ளிக்கு தெளிவான முடிவை கூறினார்……

‘சாப்பிட்டு தூங்கு தெய்வா….எதையும் நினைக்காம தூங்கனும்…சரியா..’

“சரிக்கா….”

‘பாண்டியனுக்கா காத்திருந்தால் வள்ளி… அவனும் வந்தான் “என்னத்தான் ….இவ்வளவு தாமதா வரேங்கா….. வாங்க சாப்பிட்டலாம்…..”.. ‘குளிச்சுட்டு வந்திறேன் வள்ளியம்மா…அப்போ தான் நல்லா இருக்கும்….’… “சரிங்க அத்தான் குளிச்சுட்டு வாங்க….அதுக்குள்ள சாப்பாடு டேபிள்ல எடுத்து வைக்குறேன்…” குளித்துவிட்டு வந்தவன் ..சாப்பிட அமர்ந்தான்….. பாண்டியனுக்கு சாப்பாடும் பரிமாறினால்…வள்ளி…. “எவ்வளவு வேலை செய்துவிட்டு….களைப்போடும் வரும் கணவனுக்கு தன் கையால் செய்யும் உணவை, அதை பார்த்து, பார்த்து பரிமாறும் அழகும், மனைவிக்கு அழகு தான்…..அது தான் வள்ளியிடம் இருக்கிறது…..”….

“இருவரும் அவகளின் அறைக்கு சென்றனர்…… பாண்டியன் வழக்கம் போல் அன்றைய கணக்குகளை பார்க்க ஆரம்பித்தான்…..வள்ளி, உடை மாற்ற குளியல் அறைக்கு சென்று மாற்றிக்கொண்டு வந்தால்…..எப்படி பேசுவது எனத்தெரியாமல்…. அவர்களின் படுக்கையை விரித்துகொண்டே பாண்டியனிடம் பேச ஆரம்பித்தால்…. ‘அத்தான்….நாளைக்கு எதாவது முக்கியமான வேலை இருக்குதா….’.. “இல்லைங்க வள்ளியம்மா….விதை நெல்லும்,விதை வெங்காயமும்…வாங்க்கிட்டு வந்துட்டேன்….இனி வேலை எதுவும் நாளைக்கு இல்லை…..ஏன் வள்ளியம்மா….”… ‘நாளைக்கு நம்ம குடும்பத்தை பஞ்சாயத்துக்கு கூப்பிடுருக்காங்க..அத்தான்… ஊர் பெரியவங்க நேத்து தான் மாமாகிட்ட, வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போனாங்க….’ ஒரு நொடியில் அவனிடம் கூறிமுடித்தால்…. “வள்ளியம்மா….நம்ம குடும்பத்து மேலையா புகார் கொடுத்திருக்காங்க….”….அவன் அதிர்ச்சியுடன், வள்ளியிடம் கேட்க….. ‘ ஆமாம் அத்தான்….’… “வள்ளியம்மா….., நீங்க சொன்ன மாதிரி கடவுள் எனக்கு இப்போ மிகப்பெரிய சோதனை கொடுத்திருக்காங்கா… அந்த சோதனையில்ல நான் கண்டிப்பா…ஒரு வழி எனக்கு கிடைக்கும்…. என்மேல நீங்களும்….நம்ம குடும்பமும் வச்சிருக்க நம்பிக்கைய நான் காப்பாத்துவேன் வள்ளியம்மா….” கோவப்படுவான், நேராக ப்ரியாவிடம் சண்டை போட்டப்போகிறான் இன்று…அனைவருக்கும் தூங்கா இரவாக அமையப்போகிறது  என நினைத்தவள்…. பாண்டியன் …. தன்மேல் ஒரு தவறும் இல்லை , அதை அனைவரின் முன் சொல்லுவேன் என தைரியமாக பேசுவதை பார்த்த வள்ளி….அவனை கட்டியணைத்தால்… ‘அத்தான்….. கண்டிப்பா உங்கமேல எந்த தவறும் இல்லைனு, எல்லோரு சொல்லுவாங்க அத்தான்… என் நம்பிக்கை என்னைக்கும் பொய்யாகது….அத்தான்….’.. அவனிடம் மனதில் நினைத்ததை சொல்லாமல்….அவனின் நம்பிக்கைக்கு… துணையாய் இருந்தால்… “வள்ளியம்மா…..நீங்க சொன்னதை கேட்டு நான் சண்டை போடுவேனு …. நினைச்சேங்களா…” அவள் மனதை சரியாக புரிந்துகொண்டு கேட்டான்…. ‘வள்ளியோ….ஆம் ‘ தலை ஆட்டினால்….. “வள்ளியம்மா…..சண்டை போட்டாலும், போடாம இருந்தாலும்….நாளைக்கு நடக்கப்போற பஞ்சாயத்து நடக்காம போயிடுமா…..என்ன???… எனக்கு நம்பிக்கை அதிகமா இருக்கு வள்ளியம்மா…. என்மேல எந்த தவறும் இல்லையினு…..அப்புறம் எதுக்கு சண்டை போடனும்…. சொல்லுங்க….”….. ‘அத்தான் …..உண்மையை மட்டும் பேசனும்….எக்காரணம் கொண்டு தெய்வாவ சங்கடப்படுற மாதிரி பேசக்கூடாது….என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லுங்க,….சரிங்களா..’.. “ம்ம்…. சரிங்க வள்ளியம்மா… என்ன நடந்ததோ அதை மட்டும் தான் பேசுவேன்…வாங்க தூங்கலாம்…..நேரமாச்சு”.. அவளை அணைத்துகொண்டே மெத்தையில் படுக்க வைத்தான்…..அவனும் அவள் பக்கதில் படுத்துகொண்டான்…வள்ளி படுத்தாவுடனே உறங்கிவிட…. பாண்டியனுக்கு….நாளை நடக்க இருக்கும் பஞ்சாயத்தில் திருமூர்த்தி ஐயா தான் தலைவர்….அவர் முன்னிலையில் நடந்ததை கூறாமுடியுமா….. பார்க்கலாம்…நாளை என்ன நடக்க போகின்றது” அவனும் உறங்க முயன்றான்…

’பிரகாஷ்க்கு தூக்கமே வரவில்லை….. தந்தையிடம், பாண்டியனுக்குகாக சண்டை போட்டது…..அதற்கடுத்து….சிவநாதனிடம் தைரியமாக  சொல்லிவிட்டான் பெண் கேட்டு வருவாதாக மலருக்கும்,தனுக்குமான.. திருமணப்பேச்சை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் இருக்க….அதற்க்குள்…. பாண்டியன், குடும்பத்தின் மீது பஞ்சாயத்தில் புகார் கொடுத்திருப்பது அவனுக்கு அதிர்ச்சி தான்…. அதை கேள்விப்பட்டதும்…. திருமூர்த்தியிடம் மீண்டும் சண்டை போட்டது  “இப்போ சந்தோஷமா….மூனு பேர் வாழ்க்கையில தேவையில்லாம குழப்பத்தை ஏற்ப்படுத்திட்டு….இப்போ அதுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சு…. அவங்களை…கேவலப்படுத்த போறீங்க….. உங்களையெல்லாம் என் அப்பானு சொல்லிக்கவே பிடிக்கலை…..என் அம்மாக்கு துரோகம்… செஞ்ச உங்களை எனக்கு பிடிக்கவேயில்லை…… அன்னைக்கு நான் கேட்டல….அந்த அம்மா…உங்க மனைவியானு….அப்போவே நீங்க அமைதியா போகும் போதே எனக்கு எல்லாம் புரிஞ்சுச்சு…….. இங்க பாருங்க நாளைக்கு நடக்கப்போற பஞ்சாயத்துல ஊர்மக்கள் முன்னாடி எப்படியும் நீங்க உண்மையான தீர்ப்பு மட்டும் தான் வழங்கனும்….. இல்லையினா உங்களுக்கு ஒரு மகன் இல்லையினு நினைச்சுக்கோங்க…’… எப்பொழுது….திருமூர்த்தியை கண்டால், சாதரணமாக கூட பேசமாட்டான்….. அவரிடம் சண்டையும்…அவ்வளவாக போடமாட்டான்…..அவனுக்கு எதாவது தேவையென்றால் மட்டும், பேசுவான்….ஆனால் அவரிடம் பாசம் இருக்கிறதா, இல்லையா… எனக்கேட்டால் அவனுக்கே தெரியாது….. திருமூர்த்தியும் அப்படிதான் தாய் இல்லாத மகன்…அவனை, பாசத்தோடு வளர்க்க வேண்டும் என நினைக்கவில்லை….என் மகன்….அவ்வளவே தான் அவருக்கு,இது தான் பிரகாஷ் மீதுள்ள எண்ணம்…..’

“காலையில் எழுந்த வள்ளி…குளித்து முடித்து, சாமியறையில் விளக்கேற்றி.. கண் மூடி…எதை வேண்டுவது, தெரியாமல்….அமைதியாக இருந்தால்…..”எனக்கு என்ன வேணும்,கொடுக்கனும் உனக்கு தெரியும்……ஆனா.. இன்னைக்கு எனக்கு மனசுல ஏதோ சஞ்சலாம இருக்கு…..எந்த அசாம்பாவிதமும் நடக்காம… இன்னைக்கு…பஞ்சாயத்து நல்லாபடியா நடந்து முடியனும்……அதுக்கு நீங்க துணையா இருக்கனும்…..” அவள் வேண்டிகொண்டு….சாம்பிராணி புகையை எடுத்துகொண்டு…மாட்டுத்தொழுவத்திற்க்கு சென்றால்….. அங்கு….வரிசையாக கட்டியிருந்த பசுமாட்டிற்க்கு அந்த புகையை காண்பித்தால்…….அனைத்து வேலையும் முடிந்து….பஞ்சாயத்துக்கு கிளம்பவேண்டிய நேரமும் நெருங்கியது…..”

‘ஆலமரம்….பிள்ளைகள் போல்……தன் விழுதுகளையும்,கிளைகளும்…. சுமக்கும்.. ஆலமரம்… கிராமப்புறங்களில் மிகவும், சிறப்பு…. அதுவும், திருமணமானவர்கள் குழந்தை வரவு தள்ளிப்போனால்….காலைபொழுதில் ஆலமரத்தை சுற்றினால்… குழந்தை வரவு கைகூடி வரும் என ஐதீகம்…அதிலும் விநாயகர் குடிகொண்டிருக்கும் ஆலமரத்தை சுற்றினால் இன்னும் விசேஷமாக இருக்கும்,…..இப்படி போற்றும் அந்த ஆலமரத்தில் ஊர் மக்களின்  நிறை,குறைகளையும் தீத்து வைக்கபடும்…நீதிபதியில்லாத ஒரு நீதிமன்றம்… ஆம்….அந்த ஊரில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையும், தவறு செய்திருந்தால் அதற்க்கு தண்டனையும்,…அந்த ஊர் பெரியவர்களால் கொடுக்கப்படும்,…..அந்த பஞ்சாயத்தின் தலைவரான….திருமூர்த்தி ஐயாவும், அதன் கீழ் உள்ள பெரியவர்களில் ஒருவரான…முத்தையாவும் அடங்கும்,….. இருதரப்பில் நடக்கும் விசாரணையில் யார் பக்கம் குற்றம் இருக்கிறதோ அவர்களுக்கு ஏற்ற தண்டனை வழங்கப்படும், குற்றம் இல்லாதவர் பக்கம் அவர்களுக்கான நியமான தீர்ப்பு வழங்கப்பட்டு…..அவர்களின் குறையும் தீர்த்து வைக்கப்படும்…. இது தான் அந்த ஊரின் வழக்கம்……இது என்றுமே மாறாத வழக்கமும் கூட….அதே போல் முத்தையாவின் பஞ்சாயத்தும் நடக்க போகிறது..’

”ஊரின் உள்ள…பெரியவர்கள், மக்கள்,……பஞ்சாயத்தின் தலைவர்….அவ்ருக்கு கீழ் உள்ள பெரியவர்கள்….முத்தையாவின் குடும்பமும்..உட்பட……அனைவரும் பஞ்சாயத்தில் இருந்தனர்….. ‘ஐயா…ஆரம்பிக்கலாம……’…..ஒரு பெரியவர் திருமூர்த்தியிடம் கேட்க….. “எல்லோரும் வந்தாச்சா…”… ‘எல்லோரும் வந்தாச்சுங்கயா…’… “அப்போ ஆரம்பிக்கலாம்”….திர்மூர்த்தி சொல்லியவுடன்….  ‘ஊர் மக்களுக்கு முந்தினநாளே….தண்டோர மூலம் இன்று பஞ்சாயத்து நடக்க இருக்குனு அறிவிச்சோம்….அதுபடி…இன்னைக்கு பஞ்சாயத்துல….முத்தையா ஐயா குடும்பத்துமேல புகார் கொடுக்கப்பட்டுள்ளது…..அந்த புகாரு கொடுத்தது ஊர் மக்களுனு நம்ம எல்லோரையும் சேர்த்து சொல்லிருக்காங்கா……அதுனால இந்த புகார நிராகரிக்க முடியாது….. ஊர் தலைவரான திருமூர்த்தி ஐய்யாகிட்ட இந்த புகாரை பற்றி சொன்னதும்…. பஞ்சாயத்தை நடத்த சொல்லிட்டாரு…. அவரோட சம்மதம்… எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அது போல…. முத்தையா ஐய்யாவோடா வார்த்தையும் முக்கியம்…அவருக்கு தெரியப்படுத்த ஐய்யாவோட வீட்டுக்கு போய் இந்த பஞ்சாயத்தை பற்றி பேசினோம்….அவரும் நடத்தை சொல்லிட்டாரு…… இப்போ இந்த புகாருல என்ன எழுதி இருக்குனு படிக்கபோறேன்….அதுபடி இனி பஞ்சாயத்து நடக்கும்……ஒரு பெரியவர் பஞ்சாயத்து எதுனால் கூடியது ……மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டு அந்த புகாரை படிக்க ஆரம்பித்தார்….

“ஊர் பெரியவர்களுக்கு,மக்களுக்கும் என் வணக்கங்கள்…..

உங்களுக்கே தெரியும், வள்ளியம்மாவும்,பாண்டியன் ஐய்யாவும், சேர்ந்து எத்தனை வருஷமாக காதலித்து,கல்யாணம் செய்தனர் என்று…..ஆனால் அவர்களின் கல்யாணம் நடந்தது மூன்று மாதம் ஆன நிலையில் பாண்டியன் வேலையின்  காரணமாக வெளியுர் சென்று…..திரும்பி வரும் போது இரண்டாம் தாரமாக வேறொரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு வந்தார்….அதை கேள்விப்பட்டதும்….ஒரு மனைவிக்கு செய்யும் துரோகமாக எனக்கு தெரிந்தது…..அதானல் …பாண்டியன்.. இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டு வந்த பெண்ணை….தீர விசாரித்தும்,அவர்களுக்கு எப்படி திருமணம் நடந்தது பற்றியும்,…பாண்டியன் பக்கமும் விசாரிக்க வேண்டும் என்பதையும்,….தெரிவித்துக்கொள்கிறேன்….. இருவரின் பக்கமும் தவறு இருந்தால்….ஊரைவிட்டு வெளியில் அனுப்பும்மாறும், இருவரின் பக்கம் தவறு இல்லையென்றால் அவர்களுக்கு நியமான நீதியை வழங்கவேண்டும் என்பதை மிகவும்….தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…..

                                               இப்படிக்கு….

                                                ஊர் மக்கள்……

‘புகார் கடிதத்தை…படித்து முடித்த பெரியவர்….திருமூர்த்தியிடம் அந்த புகார் கடிதத்தை கொடுத்தார்… “

‘திருமூர்த்தி அந்த கடிதத்தை வாங்கி மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு….. முத்தையாவின் பக்கம் பார்த்தார்… “முத்தையா…இந்த கடித்துல பாண்டியன், வள்ளி, அப்புறம் அந்த பொண்ணு… தெய்வப்ரியா….இவங்க மூவரையும் குறிப்பிட்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டுயிருக்கு…..அதுனால….அவங்க மூனு பேரும் இந்த சபை முன்னாடி வரச்சொல்லுங்க முத்தயா…..திருமூர்த்தி அவரிடம் சொல்ல…. ‘சரிங்க ஐயா’.. பாண்டியன்,வள்ளி,தெய்வப்ரியா.. மூவரும் சபையின் முன்னாடி வந்து நின்றனர்…..’

“பாண்டியன்… முதல் மனைவி இருக்கும் பொழுது எதுக்கு இரண்டாம் தாரமா திருமணம் செஞ்சுட்டு வந்திருக்க அதுக்கான காரணம் என்ன…..பாண்டியன்.. எதுனால இந்த பொண்ண கல்யாணம் பண்ணனு இந்த பஞ்சாயத்துக்கு சொல்லுப்பா”

‘முதல இங்க இருக்குற எல்லா பெரியவர்களுக்கும், ஊர் தலைவரான ஐய்யாவுக்கும்…என் வணக்கம்….., நான் வெளியூர் போக காரணம்…..எங்கள விட்டு பிரிஞ்சு போன சொந்தத்தை தேடி தான் நான் வெளியூர் போன்னேன்… அதுக்கு துணைக்கு ஐய்யாவோட மகன் பிரம்மாவையும் அழைச்சுட்டு போனேன்…..வெளியூர் போறதாதான் என் வீட்டலையும்,என் மனைவி வள்ளியம்மாக்கிட்டையும், சொல்லிட்டு போன்னேன்…..அங்க எங்க ரெண்டு பேருக்கு தேவையான வேலைய தேடிகிட்டு,  பிரிஞ்சு போன சொந்தத்தையும் தேடிட்டு இருந்தேன்…..அப்போதான் எனக்கு முக்க்கியமான ஒரு ஆள், அறிமுகம் ஆனாங்க…..அது ….சென்னை டி.ஐ.ஜி…..திரு.ரவிக்குமார்….அவர் எனக்கு உதவி செய்ய முன் வந்தாரு…..அவரு மூலமா… பிரிஞ்சு போன சொந்தம்…. கிடைக்க வாய்ப்பிருக்குனு அதிகம் நம்பிக்கை வச்சேன்….., நான் வேலை செய்யுற கம்பெனில தெய்வப்ரியா சேர்ந்தாங்க…..அந்த பொண்ணு பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது…..ஆனா…முக்கியமான நேரத்துல தான் பிரிஞ்சு போன சொந்தம் கிடைக்க போகுதுனு எனக்கு தகவல் வந்துச்சு…….நானும்…அந்த சந்தோஷ்த்தோட….. வேலையை ராஜினமா பண்ணிட்டேன்……அடுத்த நாள் அந்த குடும்பம்….திவாகரனால….அதாவது…. பழனிசாமி மகன்…திவாகரன்…என் சொந்த்ததை கடத்திட்டாதா…..எனக்கு தகவல் வந்துச்சு…..அங்க போனா…அவன், அந்த பொண்ணையும்,அம்மாவையும், கடத்திவச்சு…அந்த அம்மாவ கொல்லப்போனா…..அதை தடுக்க போனை என்னையும், பிரம்மாவையும் அடிக்க வந்தான்…..ஆனா நான் முன்னாடி போலீஸ்க்கு தகவல் பண்ணிட்டு வந்தனால….என்னால அவங்களை காப்பத்த முடிஞ்சது….ஆனா….ப்ரியாவோட அம்மாவ என்னால காப்பத்த முடியலை…..ஐய்யா…” பாண்டியன் நடந்ததை…சொல்லிக்கொண்டே வரும்போது…..அதை கேட்டுகொண்டிருந்த முத்தையாவுக்கு…..பெரிய அதிர்ச்சியாக இருந்தது…….மீனாட்சிக்கு சொல்லவே வேண்டாம்……அவர் பாண்டியன் எந்த சொந்ததை தேடி சென்றான் என்பதை அவ்ருக்கு கொஞ்சம் கொஞ்சம் புரியத்துவங்கியது…… ப்ரியாவுக்கு அன்றையா நாளை நினைத்து கண்ணீர் வரத்துவங்கியது……பிரகாஷ்,மலர்…, வள்ளியின், தந்தை,செல்வி, இவர்களுக்கும் கூட….பாண்டியன் சொன்னதை கேட்டதும் திகைத்து நின்றனர்…..ஆனால் வள்ளி மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பாண்டியன் கூறுவதையே….பார்த்துகொண்டிருந்தால்….. “ப்ரியாவோட அம்மாவ அந்த திவாகரனோட ஆள்…, கத்தியால குத்திட்டான்…..அவங்க…காப்பத்த முடியமா….நான் பட்ட வேதனை…..கொஞ்சம் நஞ்சம் இல்லை……ஐய்யா….அப்போ அவங்க என்கிட்ட கேட்ட உதவி தான்…..என்னால செய்யமுடியாம இருக்க முடியல….. அவங்க, என்கிட்ட ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கனும்,அந்த பொண்ண…என்னால மட்டும் தான் காப்பாத்த முடியும்…சொன்னாங்க….என்னால முடியாதுனு நான் மறுத்தேன்….ஆனா அந்த அம்மா..கத்திகுத்தோட அந்த வலியிலையும் கையெடுத்து கும்பிட்டு என் கால்ல விழுக போனாங்க……நான் தடுத்துத்தேன்….அவங்களோட மகளை என்னைத் தவிர யாரும் காப்பாத்த முடியாது……இதை மட்டும் என்க்காக செய்யவேண்டுமுனு என்கிட்ட கேட்டாங்க என்னால….அதை தாங்க முடியாம….ப்ரியாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்…..அடுத்த நிமிசமே அவங்க கழுத்துல இருக்குற மாங்கல்யத்தை எடுத்து என் கையில கொடுத்து போடச்சொன்னாங்க….அதை வாங்கி எந்த எண்ணமும் இல்லாம அந்த பொண்ணு கழுத்துல தாலிய போட்டேன்…..இது தான் நடந்தது….ஐய்யா…”பாண்டியன் முழுதாக சொல்லிமுடித்ததும்…….அங்கு இருந்தவர்கள் அமைதியாக பாண்டியனை பார்த்துகொண்டிருந்தனர்…..

‘அந்த அமைதியை கலைத்தார்… திருமூர்த்தி… “சொந்தம், சொந்தமுனு சொல்லுறையப்பா….அந்த சொந்தம்… யாருனு இந்த ஊர்காரவங்க முன்னாடி சொல்லு பாண்டியா’..

“அந்த சொந்தம்…..என் அப்பாவோட இரண்டாவது தங்கச்சி…. சேதுபதி பிள்ளையோட…. மூனாவது பொண்ணு…..திருமதி. தாமரைச்செல்விகுருமூர்த்தி,… அவங்களோட பொண்ணுதான்… தெய்வப்ரியா…” பாண்டியன் தாமரையை பற்றி உண்மையை சொன்னான்…..

‘பாண்டியன்….தெய்வாப்ரியாவை பற்றியும்,அவள் யாருடைய குடும்பத்தை சேர்ந்தவள் என முழுவதையும் கேட்ட முத்தையா,மீனாட்சியும்…..அதிர்ந்து நின்றார்கள்……அவர்களுக்கே…இப்படி என்றால்…..ஊர் மக்களுக்கும்,பிரகாஷ், மலர்க்கும்,செல்வி,முருகவேலுக்குமே இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது…. ஆனால் மூவருக்கு மட்டுமே இது ஏற்கனவே தெரிந்த விசயம் என்பது போல் அமைதியாக இருந்தனர்…..’

”இனி…பஞ்சாயத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்????”

 

                                              துருவங்கள் தொடரும்………

 

Advertisement