Advertisement

               துருவங்கள் 9

 

”சென்னையில் இருந்து கோட்டையூர் நோக்கி அந்த கார் சென்றுக்கொண்டிருந்தது………டிரைவர் சீட்டில் பிரகாஷ் இருக்க……..அவன் பக்கதில் பாண்டியன் அமர்ந்திருக்க…….பின்னாடி ப்ரியா……அமர்ந்திருந்தால்…. அவள் நேற்று நடந்ததை நினைத்துகொண்டிருந்தால்…… பாண்டியன் அவளை திட்டிவிட்டு சென்றதும்…….பிரகாஷ், பிரியாவை அவளின் அறைக்கு அழைத்துசென்று ’எல்லாம் முடிஞ்சது ப்ரியா….இனி எதுவும் நீ பேசாக்கூடாது… நாளைக்கு நாம ஊருக்கு போகப்போறோம்….அங்க போய் பேசிக்கலாம்…..நீ எதுவும் நினைக்காம தூங்கு…….அங்க என்ன நடந்தாலும், நான் இருக்கேன்…. யாரும் எதுவும் உன்னை சொல்லமாட்டாங்க…..சரியா…..இப்போ தூங்கு நான் என் ரூம்க்கு போறேன்……’ என அவள் உறங்கிய பின் அவன் அறைக்கு சென்றான்……..

‘மறுநாள்……………….. காலையில் மூவரும் தயாரக இருந்தனர்….. “பிரகாஷ் என் வீட்டுக்கு போகனும்,என் அம்மாவும்,நானும் வாழ்ந்த வீடு…. பிளிஸ் டா……என்னை கூப்பிட்டு போடா…..”என அவனிடம் கேட்டுகொண்டிருந்தால்…….. ‘சரி ப்ரியா….அவன்கிட்ட கேக்குறேன்…….’

“எல்லாம் எடுத்தாச்சுலா பிரம்மா…….கிளம்பலாம…….ஊருக்கு போகவே நேரம் ஆகும்….இருட்டுறதுக்குள்ள போகனும்…….வா, நீ வண்டிய ஓட்டு…..நான் உன் பக்கத்துல உக்கார்ந்துக்கிரேன்…..பிரம்மா…..அந்த் பொண்ணையும் வரச்சொல்லு…” என்றான்.

‘பாண்டியா……ப்ரியாவுக்கு…..அவளோட வீட்டுக்கு போகனுமா….அவங்க அம்மா போட்டோவ எடுக்கனுமா……அதனால ப்ரியா வீட்டுக்கு போயிட்டு நாமா  ஊருக்கு போயிடலாம்….’என அவனிடம் கேட்டான்.

“ம்ம்ம்…..சரி போகலாம்,…………….ஆனா அங்க போய் அழுக வேண்டானு சொல்லு………நமக்கு நேரம் இல்லை……வா வண்டிய எடு அந்த பொண்ண பின்னாடி உக்காரச்சொல்லு..”

“அவளின் வீட்டின் முன் கார் நின்றது….ப்ரியாவோ….பள்ளிவிட்டு செல்லும் குழந்தைப்போல் அவள் வேகமாக இறங்கி ஓடினால்……………… “டேய் நீயும் போடா இலையினா அந்த பொண்ணு பீல் பண்ணிட்டு இருப்பா…….”என அவனையும் உள்ளே போகச்சொன்னான்………..

‘உள்ளே சென்றதும்…..அந்த வீட்டையே சுற்றிப்பார்த்தால்…..அங்கு அவளும்,தாமரையும் ஒன்றாக எடுக்கொண்ட போட்டோவை எடுத்துப்பார்த்தால்………அதை பார்த்ததும்……அடக்கி வைத்திருந்த அழுகை வெளிவந்தது………….. ‘ஏன் மா என்னைவிட்டு போன…………..நீயும்,நானும்… சந்தோஷமா இருந்த வீடு இப்போ யாருமில்லாம அமைதியா இருக்கு…. பிளிஸ்மா நீ இருக்குர இடத்துக்கே நானும் வரேன்…..எனக்கு நீ மட்டும் போதும்மா…… ’என அவள் அழுதுகொண்டே சொல்ல…….அவள் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த பிரகாஷ்……ப்ரியாவை தோள் தொட்டு எழுப்பி அவளை சமாதானம் செய்தான்………… “என்ன ப்ரியா…..இப்போதனே சொன்னே, அழுகாத…… வேற பொருள் எதாவது எடுக்கனுமா…..எடுத்துட்டு வா போகலாம்… என அவன் சொல்ல…… “அவளோ தாமரையின் அறையில்….தேவையானதை எடுத்துகொண்டு……மற்றவையெல்லாம் ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு சென்றால்………… “எடுத்துடீயா…..போகலாமா…….எதுவும் மறக்கலையே…….” என அவன் கேட்க……….. “இல்லை எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டேன்………. போகலாம் பிரகாஷ்…..”…………..என அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தான்….’

“என்ன பிரம்மா போகலாமா………..”

‘போகலாம் பாண்டியா…….ப்ரியா போய் காருல உக்காரு……அதை கொடு நான் பெட்டியில வைக்குறேன்……’என அவள் எடுத்து வந்த பொருளை,உள்ளே வைத்து பூட்டினான்……….’

“அங்கிருந்து ஆரம்பித்த பயணம்………ஆறு மணி நேரம் அவர்களின் பயணம் தொடர்ந்தது………ப்ரியாவோ யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக…. வந்தால்……….பாண்டியன் பிரகாஷிடம் மட்டுமே பேசினான்…….ப்ரியாவிடம் பேசவேயில்லை……..இடையில் பிரகாஷ், ப்ரியாவிடம் சாப்பிட எதுவும் வேண்டுமா.. என கேட்க……அவளோ பேசாமல் வேண்டாம் என தலையை மட்டுமே அசைத்தால்……”.

‘பாண்டியனுக்கு….ஊர் நெருங்க,நெருங்க அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது…. என்னதான் திருமூர்த்தி ஐயா….சொன்னலும்,அவன் பக்கம் நியாயம் என்ற, ஒன்றை பார்ப்பார்களா……இல்லை, தாமரை அத்தையை பற்றி கூறினால் நம்புவார்களா….. ப்ரியாவை எப்படி எடுத்துக்கொள்வார்கள்……..’என அவன் நினைத்துகொண்டே வர…….அவனுக்கு திருமூர்த்தியிடம் இருந்து அழைப்பு வந்தது………… அதை பார்த்ததும்…… “பிரம்மா காரை ஓராம நிறுத்து…….முக்கியமான போன்கால்..” என்றான். கார் நின்றதும் பாண்டியன் காரில் இருந்து இறங்கி கொஞ்சம் தள்ளி சென்றான் பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க ஐயா…”

’எங்க இருக்கீங்க பாண்டியா….ஊருக்கு வந்துட்டேங்களா…இல்லை….வர நேரம் ஆகுமா’

“ஊரு எல்லைய, தாண்டிட்டோம் ஐயா…..இன்னும் அரை மணி நேரத்துல வந்திருவோம்………..என்னங்க ஐயா எதாவது பிரச்சனையா…..அங்க”என அவன் பதற.

‘அதெல்லாம் இல்லை…..பாண்டியா………….பார்த்து வாங்க…….அந்த பொண்ணு பத்திரம்’

“சரிங்க ஐயா” என அவன் பேசிமுடித்ததும் காரில் வந்து ஏறினான்…..’ ‘போகலாம் பிரம்மா’… “யாருடா போன் பண்ணது…….” என்று பிரகாஷ் கேட்க…. ‘ஐயா….தான் போன் பண்ணிருந்தாங்க……வேற ஒண்ணுமில்லை…’அவ்வளவு தான் என்பது போல் அமைதியாகிவிட்டான்..

‘பாண்டியன் ஊருக்கு வருவது அனைவருக்கும்…..கட்டுத்தீப்போல் பரவியது……. முத்தையாவிர்க்கு இருப்பு கொள்ளவில்லை……..ஊர் மக்கள் அவன் வரவிர்க்கு காத்திருந்தனர்……. “அண்ணே…….ஆட்டுக்குட்டி இளம் குட்டிதானே……..அப்போதான் கறி வேகும்…….அப்புறம்……சிக்கன் பிரியாணி பண்ணிடுங்க…….அரிசி சோறு அதிகமா செஞ்சுடுங்க…….அசைவம் சாப்பிடாதவங்களுக்கு,சாம்பார் சாதம் செஞ்சுடுங்க….முட்டை,வறுத்த மீன்…….எல்லாம் ரெடி பண்ணிடுங்க….ரசத்துல மிளகு,சீரகம், அதிகமா போட்டு பண்ணுங்க அப்போதான் ஜீரணம் ஆகும் அண்ணே…………சரியா,….. ‘வாணி நீ பக்கத்துல இருந்து பாத்துக்க…… சரி தாயி எல்லாம் சரியா செய்றோம்……………முத்து அண்ணே இலை அறுத்துட்டேங்களா….. ‘அதுக்கு தான் தாயி வாழை தோப்புக்கு போயிட்டுயிருக்கேன்….’  “சரிணே…. அப்படியே……தென்னைந்தோப்புல இளநி வெட்டிட்டு வாங்க…..” ‘சரி தாயி’ என ஆளுக்கு ஒவ்வொரு வேலையை கொடுத்தால்…வள்ளி…………

”வள்ளி…….இப்படி வந்து உக்காரு……………அங்கயும்,இங்கயும் அழைஞ்சா உன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது…………..இந்த மாதுளம் பழம் ஜூஸ் குடிச்சுட்டு ஒழுங்க ரெஸ்ட் எடு……..தம்பி வந்தா நான் சொல்லுறேன்…..அதுவரை நீ எழுந்து வரகூடாது புரியாதா…..என்று வள்ளியை செல்லமாக கடிந்தார்…..மீனட்சி……..”

‘ம்ஹூகும் அத்தை,…………..அத்தான் வரும் போது நான் இங்கதான் இருப்பேன்….. நான் தான் முதல பார்ப்பேன்….அதுகடுத்து தான் நீங்க பார்க்கனும்…அத்தான் வந்த பின்னாடி ரெஸ்ட் எடுத்துகிறேன்……அம்மாக்கும்,அப்பாக்கும், அத்தான் வர்ர விசயத்தை சொல்லனும் அத்தை…….சமையல் ரெடியாகுது….அதை அப்போ அப்போ போய் பார்க்கனும்…….இன்னும் வேலை இருக்கு அத்தை……நீங்க என்னான ரெஸ்ட் எடுக்க சொல்லுறேங்க…போங்க அத்தை….’என்றாள்’

“இங்க பாரு வள்ளி,அந்த வேலையெல்லாம் நானும்,வாணியும் பார்த்துகிறோம்…..நீ மேற்ப்பார்வை பார்த்தா போதும்……அதுவரை இந்த இடத்தவிட்டு எழுந்திருக்க கூடாது……அத்தை நான் சொல்லுறேன் கேட்டுக்கனும்..” ‘சரிங்க அத்தை…..நான் இங்கயே இருக்குரேன்… போதுமா’……. ம்ம்….இதுதான் என் மருமக……” என அவளை கொஞ்சிவிட்டு சென்றார்….

‘என்ன முத்தையா……பாண்டியன் எப்போ வருவான்…..இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்…….எங்க வந்திட்டு இருக்கானு கேட்டையா……..’என திருமூர்த்தி, முத்தையாவிடம் விசாரிக்க……. “இன்னும் அரைமணி நேரத்துல வந்திருவான் ஐயா……நீங்க உள்ள வந்து உக்காருங்க…..”என அவரை வரவேற்று அமர வைத்தார்……..அப்பொழுது…..தமிழ்செல்வியும்,முருகவேலும்…வந்திறங்கினர்…… “வாங்க மாமா….வாம்மா…..எப்படி இருக்கேங்க”என முத்தையாவும்… திருமூர்த்தியும் வரவேற்க…… ‘நல்லா இருக்கோம் ஐயா……அண்ணே…..நீங்க எப்படி இருக்கேங்க……ஐயா…” ‘என தமிழ்செல்வி விசாரிக்க…..’எனகென்னமா நல்லா இருக்கேன்….உள்ள போங்க…..  ‘வணக்கம் ஐயா,எப்படி இருக்கேங்க மச்சான்’என முருகவேல் அவர்களிடம் பேசிகொண்டு அங்கயே அமர்ந்துவிட்டார்…..

“வள்ளி,என்னமா….இங்க உக்கார்ந்திருக்க…….மாப்பிள்ளை வராங்கனு அண்ணி சொன்னாங்கா…….இந்நேரம் வீட்டைய அமர்களப்படுத்திருப்பனு பார்த்தா….. அமைதியா இருக்க……உடம்பு சரியில்லையாமா”என அவளின் கழுத்திழும்…. நெற்றியிலும் கை வைத்து பார்த்தார்……….உடம்பு நல்லாதானே இருக்கு அப்புறா என்னமா”……………..என அவளிடம் கேட்க………… ‘அதை நான் சொல்லுரேன் அண்ணி, எப்படி இருக்கேங்க…..அண்ணே எங்க’ என கேட்டுகொண்டே வந்தார்..மீனட்சி…….. “இப்போதான் வந்தோம் அண்ணி….நல்லா இருக்கோம்….. அவரு, ஐயாகூடவும், அண்ணே கூடவும் வெளிய பேசிட்டு இருக்காரு………….வள்ளி ஏன் இப்படி இருக்குரா…அண்ணி…..”………என செல்வி,மீனாட்சிடம் கேட்க… ‘காலையில இருந்து தம்பி வராங்கனு தெரிஞ்சதுமே ஒரு இடத்துல இவ நிக்கல………… அத்தானுக்கு, பிடிச்சது செஞ்சு வைக்கனும்,அது, இதுனு ஒருத்தரையும் இவ விடல……….நான் எல்லாம் பார்த்துகிறேன் நீ அமைதியா இந்த இடத்தவிட்டு எழுந்திருக்க கூடாதுனு சொன்னே அதான் அமைதியா இருக்குறா…”

‘ஏன் டி,மாப்பிள்ளை தான் இங்கயே இருக்க போறாங்கள அப்புறம் என்ன…………வேலையை ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சுட்டு நீ அமைதியா இருக்க மாட்டீயா…………….இப்பவும் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வீயா……..உன்னயெல்லாம் மாப்பிள்ளை சொன்னாதான் கேட்ப்ப……..அண்ணி சொன்னது சரிதான்…………இங்கயே உக்காரு……எல்லாம் வேலையும் நானும்,அண்ணியும் பார்த்துகிறோம்………….’

“அம்மா,………..அத்தான் வராங்கம்மா…….எந்த வேலையும் செய்யவிடாமா என்னை சோம்பேறியா இருக்க சொல்லுறேங்க….போங்கம்மா…….முத்துண்ணே இலை அறுத்துட்டு வந்துட்டாங்களானு கேட்க்கனும்,சமையல் ரெடியாகிடுச்சானு போய் பார்க்கனும்……….இன்னும் நிறைய இருக்குமா…….வள்ளி சொல்லிகொண்டே எழுந்திருக்க………”வள்ளி அப்போ நான் சொன்னதுக்கு மரியாதை இல்லை” மீனாட்சி பேச………அப்படியே அமைதியாக அமர்ந்தால்………….. ”ம்ம்ம் அது” …………நீங்க வாங்க அண்ணி உள்ள போகலாம்……என்று செல்வியை அழைத்துசென்றார்….

‘ஒவ்வொரு நிமிடமும்…….வள்ளிக்கு யுகமாய் நகர்ந்தன………வாசலை பார்ப்பதும்,கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தால்…………..வீட்டில் இருந்த அனைவரும், பாண்டியனுக்காக கத்திருந்தனர்………….. “ஐயா…….சின்னத்தம்பி வண்டி நம்ம தெருவுக்குள்ள வருதுங்க ஐயா……” என ஒருவர் கூற…

“அனைவரும் அவனின் வரவுக்காய் காத்திருந்த தருணம் வந்துவிட்டது……. ‘வாணி ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா……..அத்தை,அம்மா வாங்க………….அத்தான் வந்துட்டாங்கா…….’ என்று வள்ளி அவர்களிடம் கூறிக்கொண்டு வாசலை நோக்கி அவள் செல்லவும்…………..அதே நேரத்தில்……….பாண்டியன் கார் வாசலில் வந்து நிற்க்கவும்…….சரியாக இருந்தது……….”

‘முதலில்….பிரகாஷும்,பாண்டியனும் இறங்கினர்…… “வா….பாண்டியா…..வாப்பா பிரகாஷ்…..” முத்தையாவும்,திருமூர்த்தி ஐயாவும்,முருகவேலும் அவர்களை வரவேற்க…… ‘அத்தான்……வாங்க,பிரகாஷ் அண்ணா வாங்க……எப்படி இருக்கேங்க’ வள்ளியும்…….ஊர் மக்கள் அனைவரும் அவர்களை விசாரிக்க…….. “அவனோ சிறு புன்னகையை மட்டும் சிந்தினான்………. “அத்தான்,அண்ணா…. இப்படி வந்து நில்லுங்க………ஆராத்தி எடுக்கனும்…..”என வள்ளி சொல்ல…….. ‘ஒரு நிமிசம் வள்ளி……இன்னொருத்தவங்களும் வந்திருக்காங்க…….அவங்களையும் சேர்த்து ஆரத்தி எடும்மா……” திருமூர்த்தி கூற………. ‘யாரு அத்தான் அவங்க……’.. காரில் இருந்து இறங்கினால் ப்ரியா…..

“வாம்மா….இப்படி வந்து நில்லு….” பாண்டியன் பக்கத்தில் நிற்க்க வைத்தார்…..வள்ளி இப்போ ஆரத்தி எடும்மா……என்று சொன்னவுடன்…. .அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும்…..இருந்தது…….. ‘முத்தையாவோ……….யாருங்க ஐயா….இந்த பொண்ணு……எதுக்கு பாண்டியன் பக்கத்துல நிக்கவைக்குறேங்க…….’ திருமூர்த்தியிடம் கேட்க……. ‘நான் சொல்லுறேன்……இப்போ ஆராத்தி எடும்மா வள்ளி’ என அவர் சொல்ல…….அதை ஏற்று…..அவளும்…..ஒரு கேள்வியும் கேட்காமல்…..அவர்களுக்கு ஆராத்தி எடுத்துதால்………… ‘வாணி இதை தெற்க்கும்,வடக்குமா….ஊத்திட்டுவா….. ஆராத்தி தட்டை அவளிடம் கொடுத்தால்………’ “வாங்க…அத்தான்…..வாம்மா….என அவர்கள் அழைத்து சென்றால்……வள்ளி…’

“தம்பி…..நல்லா இருக்கியா……பிரகாஷ் நல்லா இருக்கியா…மீனாட்சியும், செல்வியும்…அவர்களை வரவேற்றும்….விசாரித்தனர்……அப்பொழுதுதான்…..ஒரு பெண் புதிதாக இருப்பததை கண்டுகொண்டார்….. “யாரிந்த பொண்ணு…..தம்பி” ப்ரியா பார்த்து கேட்க.”

‘அதை நான் சொல்லுறேன்…….மீனாட்சி… “இந்தப் பொண்ணு…..உன்வீட்டு இரண்டாவது மருமக……” திருமூர்த்தி சொல்ல……  ‘ரெண்டாவது மருமகளா…. புரியலை அண்ணா…..’ என்ன சொல்லுறேங்க…….ஆமாம் மீனாட்சி.. பாண்டியனோட ரெண்டாவது மனைவினா…..உங்களுக்கு ரெண்டாவது மருமகதானே…….’

“என்னது….பாண்டியனுக்கு ரெண்டாவது மனைவியா……”என மீனாட்சி, செல்வி, முத்தையா,முருகவேல்…..என அங்கிருந்த அனைவருக்கும் இது மிக பெரிய அதிர்ச்சிதான்………….. ‘தம்பி என்ன இது………….நீ…. இப்படி பண்ணுவனு நாங்க எதிர்ப்பாக்கல….குடும்பத்தையே இப்படி தலைகுனிய வச்சுட்டையே…….தம்பி……’ “என்ன மாப்பிள்ளை…என் பொண்ணு வள்ளி உயிரோட இருக்குறப்போ….. இன்னொரு பொண்ணுக்கு தாலிக்கட்ட எப்படி மனசு வந்துச்சு……சொல்லுங்க மாப்பிள்ளை…..எதுக்கு என் பொண்ணுக்கு துரோக செஞ்சேங்க….” என செல்வியும்,முருகவேலும் பாண்டியனை பார்த்து கேட்க….. ‘ஐயா சொன்னதை தான் செஞ்சேன் மாமா…..ஆனா இந்த பொண்ணு யாருனு தெரியுமா???…எந்த மாதிரி சூழ்நிலையில இவ கழுத்துல தாலி கட்டுனேனு….’என பாண்டியன் பாதி சொல்லிகொண்டிருக்கும் போது…. ‘நிறுத்து பாண்டியா…..எந்த விசயமும் இப்போ சொல்லக்கூடாது……அதுக்குனு ஒரு நேரம் இருக்குது…. அதுவரை இந்த பொண்ண பத்தி நீ சொல்லக்கூடாது…….உங்களுக்கு ப்ரியாவ ரெண்டாவது மருமகளா ஏத்துக்க முடியாதுனா……….நான் ப்ரியாவ கூப்பிடு என் வீட்டுக்கு போறேன்….பிரம்மா…வா போகலாம்..அவனை அழைத்துகொண்டு… அவர் ப்ரியாவிடம் “என் வீட்டுக்கு வருவியாம்மா….உன் அப்பாவா என்னை நினச்சுக்கோ….” அவளிடம் கேட்க…  “அதுவரை இங்கு என்ன நடக்கிறது என்ன தெரியாமல்……. கண்ணைக் கட்டி காட்டுக்குள் விட்டது போல ஒரு உணர்வு……அவர்களுக்குள் என்ன பேசினார்கள்… எதுவும் அறியாமல்….நின்றிருந்தால்…. தன் முன் ஒரு பெரியவர்….தன்னை அவர் வீட்டுக்கு அழைக்க…….அவளுக்கு அழுகை முட்டிகொண்டு வந்தது……. “என்னக்கு என்ன நடக்குதுனு தெரியல…..பிரகாஷ் சொன்ன ஒருவார்த்தைக்கு தான் அவங்க கூட கிளம்பினேன்…..எனக்குனு யாரும் இல்லை….என்னை இங்கிருந்து சென்னைக்கு அனுப்பிவையுங்க….சார்… தேவையில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையில நான் தடங்களா இருக்ககூடாது…..அது பெரிய பாவம்…….நான் உங்க கூட வரேன்…..”ப்ரியா அழுதுகொண்டே கூறினால்.. “வாம்மா போகலாம்…”என அவர்,அவளை அழைத்துகொண்டு வாசலுக்கு சென்றார்.

“நில்லுங்க ஐயா……எங்க கூப்பிட்டு போறேங்க அந்த பொண்ண……அவ இந்த வீட்டு மருமக……அவ  இங்க இருக்குறது தான்….சரி…..அவள இங்க விட்டுட்டு போங்க….” எனறு சொல்லியது….வள்ளிதான்….. ‘வள்ளி என்ன பண்ணுற…..அந்த பொண்ணு வீட்டை விட்டு போறது தான் சரி……நீ ஏன் தடுக்குற….’என மீனாட்சி கேட்க…. “இந்த வீட்டு மருமகளா….செந்தூர்பாண்டியனோட மனைவியா சொல்லுறேன்….அந்த பொண்ணு இங்க தான் இருப்பா…..இது தான் என்னோட முடிவு…இதை எதிர்த்தேங்கனா…..நான் இந்த வீட்ட விட்டு போகவேண்டிய” என முடிக்கும் முன்னே…..மீனாட்சியும்,முத்தையாவும், ’வேண்டாம் வள்ளி….அந்த பொண்ணு இங்கயே இருக்கட்டும்,….ஐயா அந்த பொண்ணு இங்க இருக்கட்டும்… அந்த பொண்ண விட்டுட்டு போங்க’ என அவர்கள் கூறியதும்….. “….ஆனா பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்க…. வள்ளி உன் வார்த்தைக்காக தான் என் பொண்ண விட்டுட்டு போறேன் பாத்துக்க…”என அவர் பிரகாஷை கூப்பிடுக்கொண்டு சென்றுவிட்டார்..

‘உன் வாழ்க்கையே நீயே கெடுத்துக்காத…..வள்ளி…..அந்த பொண்ணுக்காக…நீ ஏன் டி வெளிய போகனும்…..’மகளின் வாழ்க்கை இப்படி இருப்பதை கண்ட செல்வி கண்ணீர் விட….. “என் அத்தான் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…எனக்கு அவரு துரோகம் செய்யமாட்டாரு…”என ஒரே ஒரு வார்த்தை சொன்னால்., வள்ளியின் பதிலால் பாண்டியனின் மனதில் வள்ளி மீது உள்ள காதல் இன்னும் அதிகமானது,…………… “வாணி….இந்த பொண்ணு…..உன் பேர் என்னமா”..என ப்ரியாவிடம் கேட்க.. ‘தெய்வப்ரியா’ அவள் அழுதுகொண்டே சொல்ல… “இங்க பாரு தெய்வா…..வீட்டுக்கு முதல் முறை வந்திருக்க….அழுக கூடாது…..என அவள் கண்களை துடைத்துவிட்டால்…..இது உன் வீடு என்ன வேணும் சொல்லு நான் உனக்கு செஞ்சு தரேன்…..உனக்கு யாருமில்லைனு நினைக்காத….நான் இருக்குறேன்….. என்ன அக்கானு சொல்லி கூப்பிடு…….”அவளின் அழுகையை நிறுத்தினால்.

“வாணி….இந்த பொண்ண…விருந்தாளிங்க இருக்குற அறையில தங்க ஏற்ப்பாடு பண்ணு…” ‘போம்மா…தெய்வா…ரூம்க்கு போயி ரெஸ்ட் எடு….. ’..வாங்கம்மா… போகலாம் தெய்வாவை அழைத்துப்போனால்….வாணி..”

‘முத்துண்ணே….அவங்க காரு இருக்குற…பெட்டிய எடுத்துட்டு வாங்க….அந்த பொண்ணு பெட்டிய…வாணிக்கிட்ட கொடுங்க….அத்தான் பெட்டிய….என் அறையில் வச்சுடுங்க…..அப்படியே…சாப்பாடு எடுத்து வையுங்க…..முதல…ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுங்க…..அதுகடுத்து நாங்க சாப்பிட வரோம்……’.. “என்ன எல்லாரும் இங்கயே நிக்கிறேங்க….சாப்ப்பிட போங்க…..பாட்டி…. அக்கா,மாமா… போய் சாப்பிடுங்க…’ என வந்தவர்களை அழைத்து சாப்பிட வைத்தால்…

“என்ன அத்தான் இன்னும் நீங்க ரூம்க்கு போகலையா… போய் குளிச்சுட்டு வாங்க…..எல்லாரும் உங்களுக்காக காத்திருக்காங்க….போங்க அத்தான்…அத்தை.. மாமா,அம்மா,அப்பா….நீங்களும் என்ன இங்கயே நின்னுட்டு இருக்குறேங்க…. போங்க…..வந்தவங்கள கவனிக்க வேண்டாமா…”அந்த வீட்டின் மருமகளாய் பேசினால்.

’பாண்டியனை தவிர….மற்ற நால்வரும் அமைதியாக சென்றனர்…. ’அத்தான் இன்னும் ரூம்க்கு போகலையா… வாங்க..’என அவனை அழைத்துகொண்டு… அவர்களின் அறைக்கு சென்றனர்…. “இந்தாங்க அத்தான் துண்டு போங்க குளிச்சுட்டு வாங்க…..அப்படியே இந்த ட்ரெஸ் போட்டு வாங்க…அழுக்கு துணியெல்லாம் குடுங்க துவைக்க போட்டுவரேன்…”என உள்ளே வந்தும் அவளே பேசிக்கொண்டிருந்தால்……அவனோ… “வள்ளியம்மா….என்மேல நம்பிக்கை வச்சுயிருக்க உங்களுக்கு நான் என்னைக்குமே துரோகம் செய்ய நினைக்கல……வள்ளியம்மா…..அந்த இடத்துல அவங்க….என்”அவன் சொல்ல வருவதை கேட்காமல்…..பாண்டியனின் வாயை மூடினால்.. “அங்க நடந்தது எதுவும் எனக்கு தேவை இல்லை அத்தான்…..நீங்க எனக்கு துரோகம் செய்யமாட்டேங்க அத்தான்…..அந்த கடவுளவிட உங்கமேல நம்பிக்கை அதிகமா இருக்கு…..யாரும் எது சொன்னாலும் உங்கமேல உள்ள எனக்கு சந்தேகமே வராது அத்தான்…..அப்படி நான் உங்கமேல சந்தேகப்பட்டா….நான் தீக்குளிக்குறதுக்கு சமம் அத்தான்..”… ‘அய்யோ வள்ளியம்மா….அப்படி சொல்லாதேங்க…..என்னைக்குமே நான் உங்களுக்கு மட்டும் தான்….கூடிய சீக்கிரம்….அந்த பொண்ண பத்தின விசயத்தை எல்லாரும் முன்னாடியும் நான் சொல்லுறேன்..வள்ளியம்மா….’.. “சரி போதும் அத்தான் நீங்க வருத்தப்பட்டா இந்த வள்ளிக்கு பிடிக்காது….போங்க குளிச்சுட்டு வாங்கா…”

’என் காதல் என்னைக்குமே உங்களுக்கு மட்டும் தான்…..அத்தான்..,அதே மாதிரி உங்க காதலும் எனக்கு மட்டும் தான்…..அத்தான்…..தெய்வா யாருனு எனக்கு தெரியும் அத்தான்…..ஆனா அந்த பொண்ணுக்கு நம்ம வாழ்க்கையில இடம் இல்லை…..அத்தான்’.

”பாவம் தாயி…..அவங்க வாழ்க்கைய பங்கு போட இன்னொரு பொண்ணு வந்துட்டா……இது அந்த கடவுளுக்கே அடுக்குமா……நம்ம ஊருக்கு எல்லாரையும் காக்கும் பெண் தெய்வமே இருந்ததே தாயிதான்,….அந்த தாயிக்கே இப்படி ஒரு சோதனை……” என  பாட்டி ஒருவரிடம் புலம்ப….. ‘ஆமா பாட்டியம்மா….ஆனா சின்னத்தம்பி இப்படி செஞ்சிருக்க கூடாது……வேணுமுனா பாருங்க,தாயி ஊர் பஞ்சாயத்தை கூட்டி அந்த பொண்ணையும்,சின்னத்தம்பியயும் அத்துவிடப்போறாங்க…’…என வேறு ஒரு பெண்மணி சொல்ல….எது எப்படி நடந்தாலும்…..வெளியூர் பொண்ணு நம்ம ஊரைவிட்டு போகனும்…..அப்போதான் தாயிக்கும்,சின்னத்தம்பியும் ஒன்னா இருப்பாங்க….நான் கும்பிடுற அந்த பாண்டிச்சாமி இதுக்கு ஒரு வழி பண்ணுவாரு….என கடைசியாய் அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.”

‘இதையெல்லாம் ஓரமாக நின்று கேட்க்கொண்டிருந்தால் ப்ரியா’

”நீங்களா ஒரு பெரியமனுசரா…..நீங்க இப்படி பண்ணுவேங்கனு நான் நினைக்கல……உங்களை என் அப்பானு சொல்லிக்க பிடிக்கல…….உங்க ஒருவார்த்தைக்காக அங்க மூனு பேரு வாழ்க்கை வீணா போயிடுச்சு…..எப்படி உங்களால வருத்தப்படாம இருக்க முடியுது…..ச்சே…..அப்படி என்ன வேலை கொடுத்து சென்னைக்கு பாண்டியனை, அனுப்புனேங்க சொல்லுங்க…. ஊர்க்காரவுங்க ப்ரியாவையும்,பாண்டியனையும் இந்நேரம் தப்பா நினைச்சுருப்பாங்க…..செத்து போனா அந்த அம்மா யாரு உங்களுக்கு…. சொல்லுங்க…..ஏன் அமைதியா இருக்கேங்க…..”என வீட்டுக்குள் நுழைந்ததும் அவனின் சண்டையை ஆரம்பித்துவிட்டான்….பிரகாஷ்…… ‘ஆனால் அவர் ஒரு வார்த்தை பேசவில்லை…….சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் பேசுவதை கேட்டுகொண்டிருந்தார்…. “ஒரு வேளை அந்த அம்மா…உங்களோட மறைமுக மனவியோ……அப்போ ப்ரியா உங்களுக்கு மகளா.……சொல்லுங்க…,  உங்களால என் அம்மாவுக்கு எப்படி துரோகம் நினைக்க முடிஞ்சது” என அவன் அந்த கேள்வியை கேட்டது….அவர் கண்களை திறந்து….அவனை கூர்மையாக பார்த்துவிட்டு……அவரின் அறைக்குள் சென்றுவிட்டார்…”

‘அப்பொழுது பிரகாஷின் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது…….’ “ஹலோ…யாரு பேசுறா…”… ‘மாமா….அப்பா, எனக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க,…….பரிசம் போட….இன்னும் ரெண்டு நாள்ல மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்களா மாமா.’என மலர் அழுதுகொண்டே சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட்டால்…. “ஏய் என்னடி சொல்லுற……ஹலோ….ஹலோ….மலரு நீ பேசுறது கேக்கலம்மா”..

 

                        துருவங்கள் தொடரும்…………..

 

Advertisement