Advertisement

                 துருவங்கள் 8

 

”அய்யோ…..அம்மா…சார்…வேணாம் சார்,என்னை விட்டுட்டுங்க……..எனக்கு ஒண்ணும் தெரியாது….சார்…….என்னை அந்த பொண்ணு பின்னாடி போகதான் சொன்னாங்க……ஆனா எதுக்கு சொன்னாங்கனு தெரியாது சார்……….. அடிக்காதேங்க சார்……..வலிக்குது”

‘என்ன…உண்மைய சொன்னான…… “இல்லை சார்”………….. ‘இன்னும் நல்லா அடிங்க….அப்போதான்….. உண்மைய சொல்லுவான்’……. “வேணாம்…….அவன விட்டுட்டுங்க”……என பாண்டியன் சொல்ல…………சார்…..அவன் உண்மைய சொல்லல…….ஒருவன் சொல்ல, ‘நமக்கு தெரியும் இவன யார் அனுப்பினது……..அப்புறம் எதுக்கு அவனை அடிக்கனும்………….எனக்கு அந்த குடும்பத்தை பாதுக்காப்பா ஒப்படைக்கனும்…….அதனால இவன விட்டுருங்க’……சரிங்க சார்’என அவனை வெளியில் விட்டனர்..

“அவனையும் கொஞ்சம் கண்காணிச்சுட்டே இருங்க…..எங்க போறான், யாருகிட்ட பேசுறானு…….அந்த திவாகர்கிட்ட போனா நமக்கு அவன பிடிக்க…சுலபமா இருக்கும்”என பாண்டியன் கூறினான்…

‘ஐயா…..நீங்க சொன்ன குடும்பத்தை கண்டுபிடிச்சுட்டாங்க……அவங்கள நானே அழைச்சுட்டுவரேன்……எனக்கும், இந்த ஊருக்கு வந்த வேலை முடிஞ்சது….நானும் பிரகாஷும் இன்னும் ரெண்டு நாள்ல வேலைய ராஜினமா செஞ்சிட்டு வரோம்…..ஐயா’என பாண்டியன் திருமூர்த்தியிடம் சொல்ல…

“செந்தூர் அவங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லாம அழைச்சுட்டு வரனும்…..அந்த குடும்பத்துல ஒருத்தருக்கு விபரிதம் நடக்க இருந்தாலும் அதை நீதான் தடுக்கனும்……….அந்த மூனு பேரும் எனக்கு மட்டுமில்லை உன் குடும்பத்துக்கும் ரொம்ப முக்கியம்……….அதே மாதிரி திவாகர் கையில அந்த குடும்பம் கிடைக்க கூடாது….அவனால அந்த குடும்பத்துல சின்ன அடிபட்டாலும் நீதான் பொறுப்பு புரிஞ்சதா……” புரிஞ்சது ஐயா….நான் பார்த்துகிறேன்……அவங்களுக்கு எதுவும் ஆகாம உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் ஐயா…. “சரிப்பா செந்தூர்….நல்லது….பார்த்து பத்திரமா வாங்க”

‘என்ன காரணம்…மிஸ்டர்.பாண்டியன்,எதுக்கு உடனே வேலைய ரிசைன் பண்ணுறேங்க……….வேற கம்பெனில ஜாப் ஆஃபர் வந்திருக்கா….இல்லை நாங்க கொடுக்கிற சம்பளம் உங்களுக்கு ஃப்ரப்லமா பாண்டியன்’என அந்த கம்பெனியின் மேலதிகாரி கேட்க……… “சார்…..கொஞ்சம் பர்ஸ்னெல் இஸ்யூஸ் சார்…சோ,சாரி ………….என்னால வேலைய தொடரமுடியல”என தன்மையாக அவரிடம் கூறினான்…. ‘ஓகே…..செந்தூர்….ஆனா நீங்க ஏன் பிரகாஷ் வேலைய ரிசைன் செய்யுறேங்க….உங்களும் இங்க வேலை பார்க்குறது பிடிக்கலையா’…………. “ஆமா இது அம்பானி கம்பெனி…..இதுல பிடிச்சு வேலை பார்க்கனுமா………..என மனசுக்குள் நினைத்துகொண்டு….. வெளியில்……… எனக்கு உங்க கம்பெனியில வேலை பார்க்கிறது ரொம்ப பிடிச்சுருக்கு சார்……….ஆனா எனக்கு பிடிச்ச வேலை பார்க்கபோறேன் அதான் இந்த வேலைய ரிசைன் செய்யுறேன் சார்” பிரகாஷ் கூறினான்…… ‘என்ன வேலை பார்க்கபோறேங்க பிரகாஷ்’……… “விவசாயம்” என்று அவரிடம் ஒருவித கெத்துடன் சொன்னான்………. “கங்ராட்ஸ்….பிரகாஷ்”…… உங்க ரெண்டு பேரோட ரிசைன் லெட்டர நான் அக்செப்ட் பண்ணுறேன்….. ஒரு நல்ல எம்ப்ளாயிஸ நாங்க மிஸ் பண்ணுறோம்…..யூ மே கோ…

“பிரம்மா…..இன்னைக்கு வேலைய ரிசைன் பண்ணபோறோம்…….ரிசைன் லெட்டர் டைப்….செய்து எடுத்து வா…..என அவன் சொல்லிச்சென்றான்….. ஆனால் பிரகாஷிற்க்கு பிரியாவிடம் எதுவும் சொல்லமல் போகப்போகிறோம் என அவன் வருத்தப்பட்டான்………..என்னடா இப்படி யோசிச்சுட்டு இருக்குற…….ரிசைன் லெட்டர எடுத்துட்டு வா……நாம வந்த வேலை முடிஞ்சது”

‘என்ன வேலை பாண்டியா….எனக்கு தெரியாம’

“அது….சொல்லுறேன்…..ஊருக்கு போனா நீயே தெரிஞ்சுக்குவ…என அவன் சொல்லிகொண்டிருக்கும் போது பாண்டியனுக்கு போன் வந்தது “சார் அந்த திவாகர்….நம்ம ஆளுங்க எல்லோரையும் அடிச்சு போட்டு அந்த குடும்பத்தை தூக்கிடான் சார்….நீங்க உடனே வாங்க”

‘என்ன சொல்லுறேங்க……….எப்படி நடந்துச்சு………சரி….அவன் அந்த குடும்பத்தை எங்கவச்சுருக்காங்கனு ட்ரேஸ் பண்ணுங்க நான் வந்திட்டு இருக்கேன்….’

“சார்…..நாங்க…..அவன பின்தொடர்ந்துட்டுதான் இருக்குரோம் சார்……நீங்க வந்த்தான் காப்பத்த முடியும்…..சார்”

‘இதோ வரேன்………பிரம்மா….உடனே வா ஒரு இடத்துக்கு போகனும்’என அவனையும் இழுத்து சென்றான்………

“என்னாச்சுடா யாருக்கு பிரச்சனை”பிரகாஷ் கேட்க.

‘ஐயாவுக்கு தெரிஞ்ச குடும்பத்துக்கு பெரிய பிரச்சனைடா’என பாண்டியன் சொன்னது…பிரகாஷ்க்கு புரியவில்லை….. ‘என் அப்பாக்கு தெரிஞ்ச குடும்பமா’

”ஹே யாருடா நீங்க எதுக்கு இப்படி எங்கள கடத்திட்டு வந்தேங்க……..என் அம்மாவ, விடுங்கடா”என அவள் கத்திகொண்டிருக்க……அந்த அடியாளோ………. “இந்தா சும்மா இருக்கமாட்டீயா….ஏன் நொய் நொய்னு கத்திட்டு இருக்குற……..இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை எதுக்கு கடத்த சொன்னாங்கனு நீயேன் புரிஞ்சுப்ப….அதுவரை நீ தூங்கு’….என அவளது தலையில் கட்டையால் அடித்தான்…… “அய்யோ…..என் பொண்ணவிடுங்க உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க…..அதை கொடுக்கிறோம்….என் பொண்ணை ஒண்ணும் செய்யாதேங்க”என அவளின் அம்மா…கதற….

‘அதெப்படி அத்தை…..உன் பொண்ணை வச்சுதான்….உன் அண்ணன் குடும்பத்தை நான் பழிவாங்க முடியும்…….அதுக்குதான் இதனை வருசம் நான் காத்திருந்தேன்….என பேசிகொண்டு வந்தான்….திவாகர்…….. “திவா…..நீயா….வேணாப்பா…என் பொண்ணவிட்டுரு,உனக்கு என்னவேணுமோ சொல்லு…என் சொத்து முழுக்க உனக்கே எழுதித்தரேன் ஆனா என் பொண்ண ஒண்ணும் செய்யாத”…………….. ‘உன் சொத்தும் வேனும்….உன் பொண்ணும் வேனும்……ஆனா அதுக்கு தடையா, நீ இருக்க கூடாது… அதனால உன்னை கொன்னுட்டு…..உன் பொண்ணுக்கு தாலி கட்டுறேன்…..என அவன் சொல்லிகொண்டிருக்கும் போது…. “அது நான் இருக்கிற வரை நடக்காது திவாகர்”என சொல்லிக்கொண்டே வந்தான் பாண்டியன்….

‘என்னடா அவன் பாதுக்காப்புல இருந்த குடும்பத்தை தூக்கிருக்கோமே இன்னும் அவன் எண்ட்ரி கொடுக்கலயேனு பார்த்தேன்……வா பாண்டியன், என் உயிருக்கு உயிரான எதிரி வா….. உன் கண்ணுமுன்னாடியே அவளுக்கு தாலி கட்டுறத பாரு’என திவாகர்….எகத்தாளமாய் பேச…

“திவாகர்…உனக்கு ஒண்ணும் புரியலனு நினைக்கிறேன்……உன் மேல கேஸ் பைல் பண்ணிட்டுதான் வந்திருக்கேன் இங்க இருக்கிற குடும்பத்துக்கு உன்னால ஆபத்து நேர்ந்தா,உன்னை கைது பண்ணறதுக்கு போலீஸ் வந்திட்டே இருக்காங்க”

‘என்னடா பார்த்துட்டு இருக்கேங்க…..அவன அடிங்கடா…….என அவன் அடியாட்களை ஏவ……பாண்டியனோ……அவர்களை அடித்து நொறுக்கினான்….. இதற்கிடையில் திவாகர்…..பாண்டியனை அடிக்க வர…..திவாகரின் பின் இருந்த பிரகாஷ்….அவனை கட்டையால் அடித்தான்…… “பிரகாஷ்….அவங்கள இங்க இருந்து அழைச்சுட்டு போடா….நான் இங்க இவனுங்கள பார்த்துகிறேன்…. போலீஸ் இன்னும் பத்துநிமிசத்துல…. வந்திருவாங்க… நீ இவங்கள கூப்பிடு போடா…என மற்றவர்களை அடித்துக்கொண்டே கூறினான்…

“சரிடா…..என அவர்களை காப்பாற்றசென்றான்….. ஆனால் “அங்கு அவன் பார்த்தது…அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது…..ஏன்னென்றால் அங்கு இருந்த்து..பிரியா…. “பிரியா….உனக்கு என்னாச்சு…….ப்ரியா இங்க பாருமா”என மயக்கதில் இருந்தவளை…..எழுப்பிகொண்டிருந்தான்….. ‘தம்பி….என் பொண்ணா காப்பாத்துப்பா…..அவளை பத்திரமா இங்க இருந்து கூப்பிட்டு போப்பா’என பக்கதில் இருந்து சத்தம் வந்தது….. “நீங்க ப்ரியா அம்மாவா”என அவன் கேட்க… ‘ஆமா தம்பி……என் பொண்ண இங்கிருந்து…..கூப்பிட்டு போப்பா…..அந்த பொறுக்கிட்ட என் பொண்ணு மாட்டக்கூடாது…..தம்பி’என தாமரை செல்வி அவனிடம் கெஞ்சினார்.

’அம்மா ப்ரியாக்கு ஒண்ணும் ஆகாது….வாங்க நீங்களும்….இங்க இருந்து போகலாம்….என அவரையும்……..ப்ரியாவையும் அழைத்து சென்றான்…….. அவர்களை காப்பற்றி அழைத்துசெல்லும் போது அவர்களின் பின்னிருந்து வந்த ஒருவன் கத்தியைகொண்டு பிரகாஷை  குத்த வந்தான்….ஆனால் அதை பார்த்த தாமரை அவனையும்,பிரியாவையும் தள்ளிவிட்டு அந்த கத்திகுத்தை அவரின் வயிற்றில் வாங்கிக்கொண்டார்………. “ஆ…..அம்மா”என அவர் வலியில் சரிந்து கீழே விழுந்தார்…… “அம்மா…….என பிரகாஷும்…பாண்டியனும் அழைத்துகொண்டே அவரின் அருகில் வர….திவாகர் கீழே விழுந்த ப்ரியாவை தூக்கி தோலில் போட்டுகொண்டு தப்பிக்க முயன்ற போது போலீஸ் அவனை பிடித்துக்கொண்டனர்……

“டேய் உனக்கெல்லம் பட்டாலும் புத்தி வராத……உன்னை “கான்ஸ்டெபிள் அரெஸ்ட் ஹிம்…..”என திவாகரனையும்…அவன் அடியாட்களையும் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

‘உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுமா “பிரம்மா…ஹாஸ்பிட்டல் போகனும்… தூக்கு இவங்கள”என பாண்டியன் சொல்ல…… பிரகாஷ் இதோ போன் பண்ணுறேண்டா………..அவரோ ‘தம்பி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்துடுவேன்…..என்னை ஹாஸ்பிட்டல் கொண்டுபோனாலும் நான் பிழைக்கமாட்டேன்……என் பொண்ணு….நல்லா இருக்கனும்……எனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தாங்க தம்பி…….என தாமரை திக்கித்திணறி…. பாண்டியனிடம் கூற….. “என்ன செய்யனும் சொல்லுங்கம்மா”

‘நீங்க என் பொண்ண கல்யாணம் பண்ணிகனும்……தம்பி’என அவர் கூற….. “அவனுக்கோ அதிர்ச்சி…… என்னால முடியாதும்மா….உங்க பொண்ணுக்கு நல்ல பையனா பார்த்து நானே கல்யாணம் செஞ்சு வைக்கிர்றேன்ம்மா…. இந்த சத்தியம் மட்டும் என்னால பண்ணமுடியாதும்மா….எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சும்மா…..என்னால முடியாதும்மா….இது என் வள்ளியம்மாக்கு செய்யுற துரோகம்மா புரிஞ்சுக்கோங்கமா”என அவன் வள்ளியை நினைத்து அவருக்கு சத்தியம் செய்யாமல்…இருக்க… ‘உன் அத்தைக்காக இதை பண்ணமாட்டையா…..செந்தூர்’என அவர் உரிமையாய் அவனை அழைக்க……

‘அத்தையா…..அம்மா என்ன சொல்லுறேங்க…….. “உன் அப்பாக்கு இரண்டாவது தங்கச்சிதான் நான்…….உன் அம்மா உன்னை பெத்துதெடுக்கும் போது உன்னை நான் தான் முதல என் கையால வாங்குனேன்……உனக்கு செந்தூர் பாண்டியன் பேர் வச்சதும் நான்தான்” எனக்காக என் பொண்ண  கல்யாணம் பண்ணிக்கோப்பா…அவளுக்கு நீதான் பாதுகாப்பா இருக்கனும்… அந்த திவாகர் குடும்பத்துக்கு கையில மட்டும் என் பொண்ணு கிடைச்சுடக்கூடாது…..தம்பி…… இந்த அத்தைக்காக செய்யமாட்டீயா செந்தூர்..என அவர் கண்ணீருடம் கேட்க… “இந்த நிலையிலையா நீங்க என் சொந்த அத்தைனு தெரியனும்…..அய்யோ அத்தை….என்னால இதை செய்யமுடியாது……என அவன் மறுக்க……. “தாமரையோ….வயிற்றில் கத்திகுத்தின் வலியை தாங்கிகொண்டு மெதுவாக எழுந்து….அவனின் காலை தொட” ‘அய்யோ அத்தை என்ன பண்ணுறேங்க’…………. “எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை செந்தூர்…….என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுப்பா…..இல்லையினா என் உயிர் போனாலும்..என் ஆத்மா சாந்தி அடையாதுப்பா…”என அவர் அவனிடம் கைகூப்பி கேட்க…..

’பிரம்மா…………என பாண்டியன் அந்த கட்டிடமே அதிர கத்தினான்……. “பாண்டியா….இன்னும் அஞ்சு நிமிசத்துல ஆம்லன்ஸ் வந்திரும்………” என அவன் கூற……ப்ரியாவ எங்கடா…..  ‘அவ இன்னும் மயக்கத்துல இருந்து கண்ணுமுழிக்கலடா’………… “அவளை தூக்கிட்டு வா……பிரம்மா”என அவன் சொல்ல……. ‘சரிடா…..என அவன் மெதுவாக ப்ரியாவை கைத்தாங்களாக அழைத்து வந்தான்’……………….தாமரையோ அவரின் கழுத்தில்….இருந்த தாலியை எடுத்து…..பாண்டியனின் கையில் கொடுத்தார்…….. பிரகாஷ்க்கோ…. ஒன்றும் புரியவில்லை…….. “இந்தாப்பா இந்த தாலிய அவ கழுத்துல கட்டுப்பா”என அவர் கொடுக்க……..பிரகாஷிற்கு அதற்க்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது…………பாண்டியா……என அவனை தடுக்க…… “தாமரையின் முன்னிலையில் ப்ரியாவின் கழுத்தில் அந்த தாலிசெயினை போட்டுவிட்டான்” ப்ரியாவை தாங்கி பிடித்திருந்த பிரகாஷ்……..பாண்டியனை அப்பொழுதிருந்து வெறுக்க ஆரம்பித்தான்………. ‘மகளை ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்ததை நினைத்து அவர் இறுதியாக…..கண்களை மூடிகொண்டார்…….செந்தூர்பாண்டியனின் இரண்டாவது மனைவியானல் தெய்வப்பிரியா.

”முடிந்தது எல்லாம் முடிந்தது…………தாமரையின் பிரேத பரிசோதனை முடிந்து அவரின் உடல் பாண்டியனிம் ஒப்படைத்தனர்………ப்ரியா இன்னும் கண்விழிக்கவில்லை…….பிரகாஷ்……பாண்டியனிடம்…ஒருவார்த்தை கூட பேசவில்லை………..வள்ளிக்கு என்ன பதில் சொல்லவது, அப்பா,அம்மா, கீர்த்தி,தம்பி,அத்தை,மாமா…மாறான்….என அனைவரையும் நினைத்துப்பார்த்தான் அனைவரும் தான் சொல்வதை கேட்ப்பார்களா….என் வள்ளியம்மா…என்னை நம்புவாங்களா…….என யோசிக்க ஆரம்பித்தான் பாண்டியன்.

‘சார்….எல்லம் பார்மாலிட்டிஸ் முடிஞ்சது…..நீங்க போறதுக்கும்….அவங்க உடம்ப கொண்டுபோறதுக்கும்…..எல்லம் ரெடியா இருக்கு….சார்….ஆனா அந்த பொண்ணு கண்முழிக்கல……என்ன பண்ணலாம் சார்….என கேட்டுக் கொண்டிருக்கும் போது செவிலியர், பாண்டியனிடம் “சார் உங்க மனைவி கண்முழிச்சுட்டாங்க…நீங்க போய் பார்க்கலாம்”என சொல்லிச்சென்றார்……..

“பிரகாஷ் இதையெல்லம் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான்…… தவிர..தலையிடவில்லை….”

’ஓகே’ நர்ஸ்…..இதோ வரேன்…… பிரம்மா நீயும் வா….அப்போதான்  அவளுக்கு புரியவைக்க முடியும்”என அவனையும் அழைக்க………….. ‘என்னைக்கேட்டா அவ கழுத்துல தாலிக்கட்டுன……….உன்கிட்ட பேசகூட பிடிக்கல…..பாண்டியா… தயவுசெய்து என்னை விடு……..என அவன் அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டான்……

”அவளுக்கு எப்படி புரியவைப்பது………..எல்லாத்தையும்….புரிஞ்சுக்குவாளா……என யோசித்துக்கொண்டே அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றான்……………. ‘அம்மாக்கு என்னாச்சு சார்…அம்மா நல்லா இருக்காங்கள…… எதாவது சொல்லுங்க சார்’என அவள் அழுதுகொண்டே கேட்க…. “அம்மா உயிரோட இல்லை ப்ரியா”என அவளிடம் கூறினான்…….. ‘இல்லை பொய் சொல்லாதேங்க சார்…..அம்மாவ என் கண்ணுல காட்ட சொல்லுங்க சார்’……….என அவள் கதறி அழ……அவனோ அவளை எப்படி சமதானம் செய்வது எனத்தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்…….. “அம்மாக்கு ஒண்ணுமில்லை ப்ரியா…….அம்மா உன்னை, கடவுளா இருந்து பாதுகாப்பாங்க ப்ரியா……அழுகாத’என பிரகாஷ் வந்து அவளை சமாதானம் செய்தான்………… “என் அம்மா இல்லையினா எனக்குனு யாருடா இருக்குறா….அப்போ நான் அனாதையா…..அப்பாவும் எங்க இருக்காங்கனு தெரியாம அம்மாவ இழந்துட்டு அனாதையா இப்போ நிக்கிறேன் பிரகாஷ்…..என அவள் தேம்பி தேம்பி அழுதால்………… ‘உனக்கினு நாங்க இருக்குறோம் ப்ரியா…..நீ கவலைப்படாத…….என்னைவிட….உன்னை பாதுகாப்பா பார்த்துகிறதுக்கு பாண்டியன் பக்கபலமா இருப்பான் ப்ரியா….என அவன் சொல்ல…………அவரு எதுக்கு எனக்கு பாதுகாப்பா இருக்கனும் பிரகாஷ்……….ஏன்னா அவன் தான் உனக்கு தாலிக்கட்டிருக்கான்….. “என்ன சொல்லுற எனக்கு தாலிக்கட்டுனார…..என்ன உலறல் பிரகாஷ்…………என அவள் கழுத்தில் கைவிட்டு தொட்டு பார்க்க……….அதில் அவள் அம்மாவின் தாலி அழகாக அவள் நெஞ்சில் இருந்தது………….அவளோ…..யாரு கட்டுனது பிரகாஷ்……. “பாண்டியன்……….ப்ரியா”அவரு எதுக்கு எனக்கு தாலிக்கட்டனும்”… ‘உன் அம்மாவோட கடைசி ஆசை ப்ரியா…..அவங்கதான் சொன்னாங்க……’என அங்கு நடந்தை கூறினான்……. ‘அம்மாவ பார்க்கனும் பிரகாஷ்…..என் அம்மாகிட்ட கூப்பிட்டு போடா…..’

“அம்மாவ ஊருக்கு கொண்டுபோறோம் அங்க பார்த்துகலாம்……. ப்ரியாவ. .கூப்பிட்டு வா பிரம்மா…எல்லம் ரெடியா இருக்கு….ஊருக்கு போக”என அவர்களிடம் கூறிவிட்டு சென்றான்….

‘இங்கு தாமரை அத்தையின் குடும்பத்தை கடத்தியதும்…..அதில் தாமரை அத்தை உயிர் பிரிந்தததும்……அவரின் மகள் கழுத்தில் தாலி கட்டியதும், எல்லாத்திற்க்கு காரணமாய் இருந்த திவாகரனையும்,அவன் அடியாட்களையும் போலீஸ் கைது செய்ததும்…….அடுத்து தாமரை அத்தை உடலை எடுத்துகொண்டு ஊருக்கு வருவாதாய் அவன் திருமூர்த்தியிடம் கூறிமுடிக்க……  “வேண்டாம் செந்தூர்…….என திருமூர்த்தி சொல்ல………… ஐயா… என்ன சொல்லுறேங்க….. ‘ஆமா பாண்டியா…….தாமரைய இந்த ஊருக்கு முத்தியாவோட தங்கச்சியா அழைச்சுட்டு வரனும் நினைச்சேன்………ஆனா அவ உயிர் இல்லாத உடல இங்க கொண்டு வந்தா ஊருக்காரவங்க என்ன பேசுவாங்கனு தெரியாது…………….அதனால தாமரையோட உடல அங்கயே அடக்கம் செஞ்சுட்டு வந்திரு……..நான் நீங்க வர்ர விபரத்தை உன் அப்பாக்கிட்ட சொல்லுறேன்………..அதுவரை நீ உன் செல்போன ஆன் பண்ணாத……….பிரகாஷ்கிட்டையும் சொல்லிடு…….செந்தூர்………….அந்த பொண்ணையாவது உயிரோட அழைச்சுட்டுவா………….வள்ளிகிட்ட………எந்த விசயத்தையும்………….சொல்லவேன்ண்டாம்…………..புரியுதா…………என்று அவர் பேசிமுடித்து வைத்தார்.

”சரிங்க ஐயா”

‘நல்ல முறையில் தாமரையின் உடலை அடக்கம் செய்தனர்…… எல்லாவற்றையும் பாண்டியனே பார்த்தான்….அவருக்கு நெய் பந்தம் பிடித்து வாய்க்கருசி போட்டு……..முடிவாக கொல்லியும் அவனே வைத்தான்’ இதெல்லம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள்… பாண்டியனும், பிரகாஷும்…….

“ஊருக்கு கிளம்புற வேலைய பாரு பிரம்மா……அவளையும்…. கிளம்பச்சொல்லு…தேவையானதை இப்போ எடுத்து வச்சுக்க சொல்லு…… ஊருக்கு நாளைக்கு போகனும் பிரம்மா….மறந்துடாத”என அவன் கூறிவிட்டு செல்ல…..

‘ஒரு நிமிசம்…….பாண்டியா……என அவனை நிறுத்தினான்…….. “என்ன பிரம்மா”………….வள்ளிக்கு என்ன பதில் சொல்லப்போற……ஒரு கேள்வி மட்டும்தான் கேட்டான்…….. “தெரியலை ஐயா பார்த்துக்கிறேனு சொல்லிருக்காங்க……அங்க போனாதான் தெரியும்”…………ப்ரியாக்கு இன்னும் உண்மை தெரியாது பாண்டியா…..நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவனு….. அவகிட்ட இதை பேசனும்டா’………என அவன் சொல்ல…………நீயே அவளுக்கு புரியிறமாதிரி சொல்லுடா…..என்னால இன்னும் நம்பமுடியல  என் வள்ளிக்கு துரோகம் பண்ணத……..அவகிட்ட பேசுற நிலைமையில நான் இல்லைடா’என அவன் சென்றுவிட.

”ப்ரியாவை தேடி சென்றான் பிரகாஷ்………. ‘ப்ரியா…..சாப்பிடயா…..’என அவள் அறைக்குள் நுலைந்ததும் கேட்டான்……….. “என் அம்மா இந்நேரம் இருந்திருந்தா எனக்கு ஊட்டிவிட்டுதான் சாப்பிடுவாங்க……அவங்கதான் இல்லையே…..என அவள் வானத்தை வெறித்து பார்த்துகொண்டே… அவனிடம் சொல்ல…………..அவனோ….கையில் சாப்பாடு தட்டை ஏந்திகொண்டே வந்தான்… அவளை நோக்கி….. “இங்க பாரு ப்ரியா…..உன் அம்மாதன் இல்லை ………உனக்கினு ஒரு நல்லா ஃப்ரண்டா….ஒரு அண்ணனா நான் இருப்பேன்……..இப்போ ஒரு அண்ணனா உனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டா நீ சாப்படுவியா….ப்ரியா….என அவள் முன் வந்து நிற்க….. அவளோ………சம்மதமாய் தலை அசைத்தால்…… “அவனும் அவளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டுக்கொண்டு அவளிடம் பாண்டியனை பற்றி கூற வேண்டும் என முடிவுடம் பேச்சை ஆரம்பித்தான்………. ‘ப்ரியா…உன்கிட்ட பாண்டியன பற்றி சொல்லனும்……ஆனா நீ என்ன முடிவு எடுத்தலும் அது ஊருக்கு போனப்பின்னாடி பார்த்துகலாம் சரியா………’

“என்ன பிரகாஷ்…….என்ன சொல்லனும்………எந்த ஊருக்கு போறோம் நாமா”

‘பாண்டியனுக்கு…ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு ப்ரியா…..என அவன் சொல்ல’…………”அவளோ அதிர்ச்சியில்……….அப்போ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க”……..’ ‘உங்க அம்மா கடைசியா இறக்கும்போது…என அவன் ஆரம்பித்து……தாமரை,பாண்டியனிடம் ப்ரியாவை கல்யாண செய்துகொள்ளுமாறு சத்தியம் வாங்கியதும்…..ப்ரியாவை பாதுகாப்பதும், அவளுக்கு எந்தவித ஆபத்தும்….அந்த திவாகரன் குடும்பத்தினால் ப்ரியாவுக்கு எதுவும் ஆக்கூடாதும் என்றும் அதனால் தன் பொண்ணை பாண்டியன் கல்யாணம் செய்யவேண்டும்…..எனக்கூறி அவன் முன்னால் நடந்ததை அவளிடம் சொன்னான் பிரகாஷ்….

“இதெல்லாம் கேட்ட ப்ரியா……என் அம்மாவால,அவங்கள இப்படி ஒரு சூழ்நிலையில கொண்டுவந்து நிறுத்திட்டாங்களே……..அவங்கள எங்க பிரகாஷ்….. ‘அவன் ரூம்ல இருக்கான் ப்ரியா’…………. “நான் அவங்கள பார்த்துட்டு வரேன்…….”என அவன் அறைக்கு சென்றால்…………..

‘பாண்டியன்….அவனது மடிகணினியில் வள்ளியுடன் எடுத்த ஒவ்வொரு போட்டோவையும் பார்த்துக்கொண்டிருந்தான்………….ப்ரியா வந்ததை கவனிக்காமல்……….. “சார்…..என அவனை அழைத்தால்….”…அவனோ அதை மூடிவைத்துவிட்டு……… ‘என்ன ப்ரியா…….என்ன வேணும்’……….. “பிரகாஷ் இப்போதன் உங்களை பற்றி சொன்னான்……..உங்க வள்ளிய பற்றியும்…..சாரி என் அம்மாவால உங்களுக்குதான் அதிக பிரச்சனை……நான் ஊருக்கு வரலை சார்….என்னால உங்க மனைவிக்கும், குடும்பத்துக்கும் தான் மனக்கஷ்டம் சார்”என அவள் பேசிகொண்டே போக………..

‘கொஞ்சம் நிறுத்துறையா…..உன்னையும் ,உங்க குடும்பத்தையும்… கண்டுபிடிச்சு கூப்பிட்டு வரச்சொன்னது எங்க ஐயாதான்…..அவர் சொன்ன பேச்சுக்கு மறுவார்த்தை பேசாமா…..உங்களை தேடி வந்தோம்……ஆனா எங்கனால முடியல……அதுனால தான் எனக்கு தெரிஞ்ச ஃப்ரண்ட் ஒருத்தன் போலீஸ் வேலை பார்க்கிறனு அவன் மூலமா உங்கள தேடுனோம் அவனும் உங்கள பற்றி எல்லா விபத்தை கண்டுபிடிச்சு,உங்க போட்டோ முதல் கொண்டு எனக்கு அனுப்பி வைச்சான்….ஆனா உங்க குடும்பத்தை நேருல பார்க்கபோறனால எதுக்கு…போட்டோனு நான் பார்க்கவேயில்லை…. முன்னாடியே நீங்கதான் அந்த குடும்பனு தெரிஞ்சிருந்தான் இந்நேரம் நான் உங்கள எங்க ஐயா முன்னாடி கொண்டுபோயிருப்பேன்….எல்லாமே கெட்டு போயிருச்சு……..ஊருமுன்னாடி நான் எப்படி நிக்கபோறேனு தெரியல……… தயவுசெய்து என் கண்முன்னாடி நிக்காத போயிடு…..போ….என அவன் கத்தினான்………அவளோ தன்னை சுற்றி இவ்ளவு நடந்து இருக்கிறதா…என அவள் அழுதுகொண்டே சென்றாள்.

”பாண்டியனோ….நாளை என்னவெல்லம் நடக்கபோகிறதோ என யோசித்துகொண்டு உறங்க முற்ப்பட்டான்…….ஆனால் அவன் நினைவில் வள்ளி மட்டுமே…..இருந்தால்………..

‘என்ன ப்ரியா…எதுக்கு அழுகுற…….அவன் கோவமா பேசுனான….விடு ப்ரியா அழுகாத…..’என அவளை தேற்றிகொண்டிருந்தான்….  “பிரகாஷ்…..நான் ஊருக்கு வரலை….நான் இப்படியே எங்காயவது போயிடுறேன்…..என்னை விடுங்க….”என அவள் வீட்டின் வாசலுக்கு போக…… ‘ம்ம்ம்…அப்படியே உன் அப்பா மாதிரி எங்கயாவது தொலைஞ்சு போ….நாங்க எங்க  ஐயா முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கிறோம்…..உனக்கு உன் கவலைதான் தெரியுது…என்னையும் இவனையும் பத்தி நினைச்சுருந்தா….நீ இப்படி பண்ணுவியா….போ…’என பாண்டியன் அவளை சத்தம் போட்டுகொண்டே வர……… “அவளோ…..அப்படியே நின்றால்……என்ன நின்னுட்ட……….போகலையா…” என கேட்க…….அவளோ………அழுதுகொண்டே இருந்தால்…. ‘பிரம்மா இவளை கூப்பிட்டு போய் அவ ரூம்ல தூங்க வை….நாளைக்கு காலையில ஊருல இருக்கனும்………என சொல்லிவிட்டு சென்றான்…..

”அதே நாள் காலையில்……. “வள்ளி எழுந்து,குளித்துவிட்டு வாசல் பெருக்கி கோலமிட்டு…..வீட்டினுள் நுலைந்து சாமி கும்பிட்டு, குங்குமத்தை எடுத்து வைக்கும் பொழுது….குங்குமம் செப்பு தவறி கீழே விழ….அதை சரியாக…. அவளின் அத்தை பிடித்து அவளிடம் கொடுத்தார்….பார்த்துமா….இன்னைக்கு நல்ல நாள்..அதுவுமா குங்குமம் கீழே விழக்கூடாதுமா வள்ளி….இந்தா.. என்றார்….. “அவளுக்கோ….எதுவோ தவறாக நடக்க போகிற அறிகுறியாக இருக்குமோ…..என யோசித்தால்”……….அதற்க்கு ஏற்றார் போல்….பல்லி சத்தமிட…….. இவளுக்கு இன்னும் பயம் அதிகமானது……..”எல்லாரும் நல்லா இருக்கனும்….அத்தானுக்கும்,கீர்த்தி,தம்பி,என் அண்ணாவுக்கு எதுவும் ஆக்கூடாது….சாமி….எந்த கஷ்ட்டனாலும் எனக்கு கொடுங்க….என வேண்டிகொண்டு சென்றால்..ஆனால் அதற்கு தடையாய் அவள் ஏற்றிய குத்துவிளக்கு அணைந்து போனது……..

‘சமையல் அறையில் சமையல் செய்துகொண்டிருந்த வள்ளிக்கு…… ஒருமாதிரியாக இருந்தது…..இதை பார்த்த வாணி “தாயி…என்ன செய்து….ஒருமாதிரி இருக்கேங்க”…. ‘ஒண்ணுமில்லை வாணி…… நீ போய் கீரை பிடுங்கிட்டு வா…மாமாக்கு முருங்கை கீரை சூப்பு வச்சு கொடுக்கனும்….என அவளை….வெளியில் அனுப்பி வைத்தால்……. தாளித்த வாசனை தாங்கமுடியாமல்….அவள்….. வாஷ்பேஷனில் வாந்தியெடுத்தால்…… இதை பார்த்த மீனாட்சி…… ‘வள்ளி என்னாச்சு….என தலையை பிடித்துகொண்டார்……என்னடி வாந்தியெடுக்கிற.. ராத்திரி என்ன சாப்பிட்ட……’என வினாவிக்கொண்டிருந்தார்……. அவளோ இட்லி சாப்பிட்டேன் அத்தை…..என பேசியவள்… போன மாதம் தலைக்கு ஊத்தியது……இன்னும் வரவில்லை  தேதியை பார்த்து உடனே புரிந்துகொண்டால்……“அத்தை……நாள் தள்ளி போயிருக்கு”என மகிழ்ச்சியான விசயத்தை கூறினால்…. ‘என் வீட்டு மருமகளே…..என் குடும்ப வாரிச பெத்துகொடுக்க போற மகாராசி டி நீ’ வா வந்து இப்படி உக்காரு…..என அவளை மெதுவாக அழைத்து வந்தார்…..

“அப்பொழுது……பாண்டியன் வரும் விசயத்தை…..ஒருவன் வந்து கூற…….. “திருமூர்த்தி ஐயாதான் தாயி உங்ககிட்ட விசயத்தை சொல்ல சொன்னாங்க… வரேன் தாயி”

‘என் பையனும் ஊருல இருந்து வரான்……என் பேரனும் இன்னும் பத்து மாசத்துல வந்திருவான்……என உற்ச்சாகமாக கூற….  “வள்ளியோ அத்தை யாருக்கும் சொல்லவேணாம்,அத்தை அத்தான் வந்த பின்னாடி சொல்லிக்கலாம்…. அத்தனுக்குதான் முதல சொல்லனும் அத்தை”என கோரிக்கை வைத்தால்… ‘முதல் முதலா என்கிட்ட கேட்டுருக்க கண்டிப்பா யாருக்கும் சொல்லமாட்டேன்’என அவரும் அவளுக்கு துணையாய் இருந்தார்…..

 

                                        துருவங்கள் தொடரும்………..

 

Advertisement