Advertisement

                     துருவங்கள் 7

 

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் அறைக்கு வந்தாள் வள்ளி….மெத்தைய பார்த்த்தும் நேற்று அவளும்,பாண்டியனும் சிரித்து பேசியதும்….அவர்களின் காதல் கதையை நினைத்துக்கொண்டிருந்தனர்….. ஆனால் இப்பொழுது அவள் மட்டும் இருக்க..அவள் அத்தான் இல்லை… “இன்னும் ஒருவாரம் சீக்கிரம் போகனும்…..என அவளுக்குள் பேசிகொண்டே அன்று அணிந்திருந்த நகைகளை கழட்டி,அதை அலமாரியில் வைக்கும் போது அவள் கண்ணில், அவன், காதலர் தினத்தன்று அவளுக்கு பரிசாய் கொடுத்த  “பிளாட்டினம் லவ்பேண்ட்ஸ்” மோதிரத்தை பார்த்ததும் அன்றை நாளுக்கு சென்றால்….. “அத்தான் எங்க கூப்பிட்டு போறீங்க சொல்லுங்க…. ‘இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே தெரிஞ்சுக்குவேங்க வள்ளியம்மா’….என அவளை கண்களை மூடி அழைத்து சென்றான்……

“டேய் பிரம்மா…எல்லாம் ரெடியா”… ‘எல்லம் ரெடி பாண்டியா’ வள்ளிய அழைச்சுட்டு வா’………….1…..2…..3….. “இனிய காதலர் தினம் வாழ்த்துகள் என் இதயராணி வள்ளியம்மாக்கு”என கூறி அவள் கண்களில் இருந்து கையை எடுத்தான்…….பலூன்கள் பறக்க….விளக்குகள் ஒளிர……அவள் முன் ரெட்வெல்வெட் கேக்கில் “என் வள்ளியம்மாக்கு அன்பு காதலர் தின வாழ்த்துகள்” என எழுதிருக்க…..அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை….. “கேக் வெட்டுங்க வள்ளியம்மா”… ‘வள்ளி தங்கச்சி சீக்கிரம் வெட்டுமா…காலையில சாப்பிட்டது……..இந்த பையன் என்னை சாப்பிடவிடாம வேலைவாங்கிட்டான்மா’பாவமாக பிரகாஷ் சொல்ல…. “ஏன் மாமா இவ்ளோ நேரம் காத்திருந்தேங்கள இன்னும் செத்த நேரம் பொருக்கமாட்டேங்களா”மலர் சொல்ல….. “வள்ளியோ…..சேர்ந்து வெட்டலாம் அத்தான்”……. ‘சரிங்க வள்ளியம்மா”என்று இருவரும்…ஒன்றாக இணைந்து அந்த கேக்கை வெட்டினர்…..முதல் துண்டை எடுத்து அவள் அவனுக்கு ஊட்ட,அவன் அதையே வாங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான்…. “நாமா காதலிச்சு இதோட 16ஆவது வருசம் தொடங்குது வள்ளியம்மா…..அதுக்காக என்னோட முதல் பரிசு… “மலர் அந்த ஃகிப்ட் எடுத்துட்டு வாம்மா” ‘இதோ எடுத்துட்டு வரேணா’என மலர் இரண்டு மோதிர பாக்ஸை கொண்டு வந்தால்……….. “அண்ணா…இந்தாங்க”……அதில் முதல் பாக்ஸில் உள்ள மோதிரத்தை எடுத்து அவளுக்கு போட்டுவிட்டு அவளின் கையில் முத்தமிட்டான்….. “இதை நீங்க  அண்ணனுக்கு போட்டுவிடுங்க மதினி”என்று மலர் அவளிடம் அடுத்த மோதிர பாக்ஸை எடுத்துகொடுத்தால்….. ‘வள்ளியும் அதை வாங்கி அவனுக்கு…..போட்டுவிட்டு அவனை அணைத்துகொண்டால்….நான் எதுவும் உங்களுக்கு வாங்கி தரலையே அத்தான்’…….. “நீங்கமட்டும் எனக்கு வாழ்க்கை முழுதும் வந்தீங்கனா அதைவிட வேற எந்த பரிசும் எனக்கு வேணாம் வள்ளியம்மா”

“டேய் உங்க காதல் வார்த்தையெல்லாம் அப்புறம் வைச்சுக்கோங்க……. எனக்கு கேக் தருவேங்களா இல்லையா…அவன் புலம்ப…………….மலரோ….. ‘மாமா…இனிய காதலர் தினம் வாழ்த்துகள்…என மலர் அவள் கையில்  “வொயிட்ஃப்ரஸ்ட் ஐஸ்கீரிம்” கேக்கை கொண்டுவந்தால்”…ஹே…மலரு….நீ எப்போ இதையெல்லம் ரெடி பண்ண… “அதெல்லாம் அப்புறம் சொல்லுரேன் இப்போ கேக் கட் பண்ணுங்க”என அவனும் அவளும் சேர்ந்து கேக்கை வெட்டி இருவரும் ஊட்டிவிட்டுக்கொண்டனர்….. “ஐ லவ் யூ மாமா”என்று பிரகாஷ்க்கு இதய வடிவுகொண்ட டாலர் செயினை அவனுக்கு போட்டுவிட்டால்…’ மலரு இது ஒண்ணும் உன் அப்பா பணத்துல வாங்கலலா’என அவன் கேட்க… “நான் பார்ட் டைம் ஜாப்க்கு போனேன், அதுல சம்பாரிச்ச பணத்துல வாங்குன செயின் போதுமா….மாமா பணம் வேணாமா ஆனா அவரு பெத்த பொண்ணு மட்டும் வேணுமா..ம்க்கும்…மலர் கோவபடுவது போல் அவனிடம் நடித்தால்… “என்ன பண்ணுறது….இந்த பொண்ண என்னைக்கு பார்த்தேனோ அன்னைக்கே நான் அவகிட்ட என் மனச கொடுத்துட்டேன்…அதுனாலதான் என் அப்பாவே எதிர்த்தாலும் உன்னை கல்யாணம் பண்ணனுவேனு என் அத்தைக்கு வாக்குகொடுத்துருக்கேன்”… ‘சும்மா சொன்னேன் மாமா அதுகுள்ள பழைய ப்ளாஸ்பேக்குக்கு போயிடுவேங்க.’….. ‘ஹாப்பி லவ்ர்ஸ் டே தங்கமலர்’என அவளுக்கு பிடித்த காஞ்சிபுரம் பட்டுச்சேலையை அதுவும் அவளுக்கு பிடித்த கலரில் இரண்டு வாங்கி மலருக்கு பரிசளித்தான்…………’மாமா நீங்களா…அதுவும் எனக்கு பட்டுச்சேலை….லவ் யூ மாமா’என அவனின் காலில் விழுந்து வணங்கினால்…….”.ஹே மலரு…என்னதிது”,…’ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா அப்போதான் எழுந்திருப்பேன்’ …………… “என்னைக்கும் என் மலரும்,நானும் சந்தோஷமா இருக்கனும்”போதுமா……என அவளை எழுப்பினான்….அதன் பின் அவர்கள் காதலர் தினத்தை ஜோடியாக கொண்டாடிவிட்டு வள்ளியயும்,மலரையும் ஹாஸ்ட்டலில் விட்டு சென்றனர்…..அந்த மோதிரத்தையே பார்த்துகொண்டிருந்த வள்ளி, அவள் போன் அழைப்பில் நினைவுக்கு வந்தால்……….. ‘போன் ஸ்கீரினில்…மலர்பிரகாஷ்’என வந்திருக்க…. “எதுக்கு இந்நேரம் போன் பண்ணுறா” யோசித்துகொண்டே போனை அட்டென் செய்தால்.

“என்ன மதினி…………எத்தனை முறை உங்களுக்கு கூப்பிடுறது…..ஃபுல் ரிங்காகுது ஆனா நீங்க எடுக்கல…வேலையா இருந்தேங்களா”……… ‘இல்லைடி மலரு….இப்போதான் வந்தேன்… சொல்லு…என்ன விசயம்’…. “அண்ணா வந்தாங்கனு வாணி சொன்னா…எப்படி இருக்காங்க…இருந்தான் கொடுங்க மதினி”….என்று பாண்டியனை பற்றி விசாரிக்க………..

‘அவங்க காலையிலயே கிளம்பிட்டாங்க மலரு…ஆபீஸ்ல இருந்து வேலை வந்திருச்சாம் அதான் அவங்க ஊருக்கு போயிருப்பாங்க இந்நேரம்..நல்லா இருக்காங்க டி’

“அப்படியா மதினி……மதினி,அவங்களும் வந்தாங்களா”……என பிரகாஷை பற்றி கேட்க..

’ஓ….இதுக்கு நீ நேராவே கேட்டுயிருக்கலாம் மலரு…..எதுக்கு அத்தான விசாரிக்கனும்…..

“மதினி அவங்க வந்தாங்களா…இல்லை, எதுவும் உங்ககிட்ட சொனாங்களா”மலர் கொஞ்சம் பதற்றமாய் வினாவ……….

‘என்னடி ஏதும் பிரச்சனையா…உன்பேச்சு சரியா இல்லை’

“எனகொன்னும் இல்லை மதினி…அண்ணா வந்தாங்கள…அதான் அவரும் வந்திருப்பாங்கனு நினைச்சேன்”

‘இல்லைடி பிராகாஷ் அண்ணா வந்திருந்தாங்கன…உனக்கு சொல்லாமயா இருப்பேன்….ஏன் டி என்னாச்சு’

“மாமா என்கிட்ட பேசியே ஒருவாரம் ஆச்சு மதினி…நான் போன் போட்டாலும் எடுக்கல…அதான் ஊருக்கு வந்திருக்காங்களோனு.. நினச்சேன்….அவருக்கு ஒண்ணுமில்லையே உடம்புக்கு,நல்லா இருக்காங்களா”

‘ஏய் அண்ணா நல்லா தான் இருக்காங்க….நான் அத்தானுக்கு பேசிட்டு..உனக்கிட்ட பேச சொல்லுறேன் அண்ணன சரியா….எதுவும் நினைக்காம போய் தூங்கு…நாளைக்கு குளக்கரைக்கு வா அங்க பேசலாம்…சாப்பிட்டு தூங்கு’..

“சரி மதினி….பேசிட்டு எனக்கு வாட்ஸப் பண்ணுங்க………..நான் வைக்குறேன்”

‘சரிடி’என அவள் பேசிவிட்டு வைத்தாள்…

”அம்மா உனக்கு என் ஃப்ரண்ட் ரொம்ப தாங்க்ஸ் சொல்ல சொன்னான்…சாப்பாடு அருமை…அதுவும் வாழைப்பூ பொரியல், மிகவும் அருமை….அன்னமிட்ட இந்த அன்னலெக்‌ஷிமிக்கு மிகவும் நன்றினு..என் ஃப்ரண்ட் பிரகாஷ் சொன்னான்மா”

‘அவரோ சிரித்துகொண்டே…சரி தெய்வா..அந்த தம்பிய வீட்டுக்கு கூப்பிட சொன்னேல….நீ கூப்பிட்டயா’

“அய்யோ அதை மறந்துட்டேன் ம்மா….அவனுக்கு இன்னைக்கு ரொம்ப வேலைமா..சாப்பிடவே தாமதம் ஆச்சுமா……….நெக்ஸ்ட் டைம் அவனை கையோட அழைச்சுட்டுவரேன்மா”

‘சரி ம்மா…ரெப்ரஸ் பண்ணிட்டு வா காஃபி,ஸ்நாக்ஸ் எடுத்து வைக்குறேன்’.. “சரிம்மா….காஃபி ஸ்ட்ராங்கா”

“பிரம்மா…சாப்பிட வா” என பாண்டியன் அழைக்க… “சாப்பிடேன் பாண்டியா….நீ சாப்பிடு”

‘எங்க சாப்பிட்ட…………இன்னைக்குதான் உனக்கு நகரகூட நேரம் இல்லையே அப்புறம் எப்படி’

“இன்னைக்கு ப்ரியா எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்தா…அதை ரெண்டு பேருமே சேர்பண்ணி சாப்பிட்டோம்…ஆமா நீதான் டெல்லிக்கு போயிட்டு வர மூனு நாள் ஆகும் சொன்ன….ஆனா ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்ட”

‘வேலை சீக்கிரம் முடிஞ்சது…அதான் உடனே கிளம்பிட்டேன்…..என அவன் சொல்லிகொண்டிருக்கும்போதே பாண்டியனுக்கு போன் வந்தது… அழைத்தது வள்ளி என அறிந்துகொண்டு அவன் அறைக்கு சென்றான்…. “சொல்லுங்க வள்ளியம்மா…உங்களுக்கு போன் பண்ணமுடியல….சாரி..வள்ளியம்மா, வந்தவுடனே வேலையே அதிகமா இருந்துச்சு….என்ன பண்ணுறேங்க….சாப்பிட்டேங்களா…..என அவனே பேசிக்கொண்டிருந்தான்…. ‘என்னாத்தான் எதுக்கு சாரி….உங்க வேலையை பத்தி எனக்கும் தெரியும்…நான் சாப்பிட்டேன்…நீங்க சாப்பிட்டேங்களா.

’இப்போதான் சாப்பிடபோறேங்க வள்ளியம்மா…சொல்லுங்க என்ன விசயம்..நானா போன் பண்ணாம நீங்களா பண்ணிருக்கேங்க..எதாவது முக்கியமான விசயமா’என அவள் பேச வந்ததை குறிப்பிட்டான்..

“பிரகாஷ் அண்ணா ஏன் மலருக்கு ஒருவாரமா போன் பண்ணலை..பாவம் மலரு அண்ணுக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சுட்டா….அண்ணா எப்படி இருக்காங்க…அவங்களுக்கு ஒண்ணுமில்லையே”

‘அவனுக்கென்ன நல்லாதான் இருக்கான்…நான் மலருகிட்ட,பிரம்மாவ பேச சொல்லுறேன்….காலையில…மலர கவலைபடாம தூங்க சொல்லு….ஒருவாரம அவன் மலருகிட்ட பேசலையா வள்ளியம்மா’

“ஆமா அத்தான்…இப்போதான் போன் பண்ணி என்கிட்ட பேசுனா…அவ பேசுறவிதமே எனக்கு சரியா படல….அதான் உங்கிட்ட பேசிட்டு சொல்லுறேனு சொன்னே அத்தான்”

‘நான் அவன்கிட்ட பேசிட்டு….உங்களுக்கு சொல்லுறேங்க வள்ளியம்மா…மணி பத்தாக போகுது போய் தூங்குங்க…காலையில போன் பண்ணுறேங்க வள்ளியம்மா’

“சரிங்க அத்தான்…சாப்பிட்டு..பால் குடிச்சுட்டு….கொஞ்ச நேரம் நடந்துட்டு தூங்குங்க…..எந்த வேலை இருந்தாலும் ராத்திரில பார்க்கவேணாம்…உங்களுக்கு சாப்பிட்ட்து செரிக்காது அத்தான்….குட் நைட் அத்தான்….போன் வைக்குறேன்”

“சரிங்க வள்ளியம்மா…..குட் நைட்…ஸ்வீட் டீரிம்ஸ்…”என அவன் போனை வைத்ததும்……….நேராக பிரகாஷிடம் சென்றான்……….

‘உனக்கும்,மலருக்கும் என்ன பிரச்சனை….பிரம்மா,…..மலருக்கு ஒருவாரமா போன் பண்ணாம அப்படி என்ன வேலை உனக்கு’

“அதுக்குள்ள உனக்கும்,வள்ளிக்கு நீயூஸ் வந்திருச்சா….ஒருவாரமா அவகிட்ட பேசாம நான் இருப்பேனா…இன்னைக்கு காலையில நடந்த சண்டை டா….ஏழு மணி நேரம் தான் பேசாமா இருந்திருப்பேன்….அதுக்குள்ள அவ ஒருவாரனு உன்கிட்டயும்,வள்ளிக்கிட்டயும் பொய் சொல்லிருக்கா”

‘சரி நீங்க சண்டை போட்டாலும் வழிய போய் பேசிடுவேங்க….இப்போ மட்டும் என்ன…..மலரு ஃபீல் பண்ணறா போல பிரம்மா….அவகிட்ட பேசுடா..சமாதானம் பண்ணு..அவ இன்னும் சாப்பிடலயம் பிரம்மா’

“என்னது அவ இன்னும் சாப்பிடலையா….இரு அவளை திட்டுனாதான் ஒழுங்கா சாப்பிடுவா…நான் நாளைக்கு வந்து உன்கிட்ட பேசுறேன்”என்று ப்ரகாஷ்..போனை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றான்..

‘ஏய்……… என்னடி……………. லுசா நீ………….. இன்னும் சாப்பிடாம என்ன பண்ணுற….போய் சாப்பிடு’என அவன் எடுத்தவுடன் அவளை திட்ட….அதை கேட்டுகொண்டே பாண்டியன் சிரித்துகொண்டு சென்றான்…

“ஏன் டி என்னை இப்படி பாடுபடுத்துற………..பேசுனதுக்கு சாரி டி…….அதுக்குனு அவங்க ரெண்டு பேருகிட்டயும் ஒருவாரம் பேசலைனு சொன்னியா……அந்த பக்கம்…… “நான் ஒருவாரம் சொல்லல மாமா….ஒருமணி நேரம் தான் சொன்னே”…………. ‘என் அப்பாக்கு தினமும் போன் பண்ணுறேனோ இல்லையோ உனக்குதானடி முதல போன் பண்ணுவேன்’……….”ம்ம்…ஆமாம்”

“சரி போய் சாப்பிடு தங்கம்…இவ்ளோ நேரம் சாப்பிடாம இருந்தா..உனக்கு அல்சர் வந்திரும்….போம்மா…மாமா நாளைக்கு போன் பண்ணுறேன்..சரியா”

‘மாமா…ஒருநிமிசம்’…………….. “என்னமா”………….. ‘அண்ணா ஊருக்கு வந்திருந்தாங்கா நீங்க ஏன் வரலை அவருகூட’……………. “என்ன சொல்லுற பாண்டியன் டெல்லிக்கு போயிருந்தான்….நீ வேற யாரோவ பார்த்துவிட்டு பாண்டியனு சொல்லுற……….. ‘அய்யோ என் மங்குனி மாமா…உண்மையில அண்ணா வந்திருந்தாங்க..வேணுமுனா பெரிய மாமாக்கு போன் பண்ணி கேளுங்க’….. “சரி நான் நாளைக்கு பேசுறேன்…போய் சாப்பிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு…வைக்குறேன்”………. ‘சரி மாமா…பை’….ம்ம்ம் சரிமா….அவன் போனை வைத்ததும்…. “எதுக்கு டெல்லிக்கு போறேனு சொல்லிட்டு…ஊருக்கு போயிருக்கான்….அதுவும் என்கிட்ட சொல்லாம…………வரவர இவன் சரி இல்லை…நாளைக்கு என்னனு விசாரிப்போம்”என்று பேசிகொண்டு மெத்தையில் அமர்ந்து மீதம் இருந்த வேலைய பார்க்க ஆரம்பித்தான்..

‘அவங்களுக்குள்ள சின்ன பிரச்சனைங்க வள்ளியம்மா……வேற ஒண்ணுமில்லை….ஆல்ரெடி மலருக்கு போன் பேச போயிட்டான் வள்ளியம்மா….நீங்க எதுவும் நினைக்காம தூங்குங்க..என அவளுக்கு மெசேஜ் செய்தான்’

”டேய் எல்லாம் பக்காவ இருக்குல…..இன்னைக்கு அந்த பொண்ண தூக்குனும்….அவள வச்சு அவங்க குடும்பத்த தூக்கனும்…..எவனாவது கோட்டவிட்டேங்க….மவனே என் கையால உங்கள கொன்றுவேன்”என்று திவாகர் அடியாட்களை வைத்து “அந்த குடும்பத்தை,கடத்த சென்றான்”

‘அண்ணே…..முதலாலி தான் கொஞ்ச நாள்..காத்திருக்க சொன்னாங்களே ஆனா நீங்க இப்போவே அந்த குடும்பத்த தூக்க போறேங்க…அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சா….எங்களையும் சேர்த்து போட்டுருவாருண்ணே’என அடியாள் பயப்பட……

“டேய்….இன்னைக்குவிட்டா நல்லநாள் இல்லைடா…..அவன் கிடக்குறான்…உங்களுக்கு அவன் கொடுக்குற பணத்தைவிட எக்ஸ்ட்ரா நான் தரேன் நான் சொன்ன வேலைய முடிக்காமா எவனும் இந்த இட்த்தவிட்டு போக்கூடாது…..புரியுதா”

‘புரிஞ்சதுண்ணே”………

“அண்ணே, அந்த பொண்ணு வருது……அங்க பாருங்க”என திவாகரிடம்,அவன் சொல்ல..

‘எல்லாம் ரெடியா இருங்கடா….அவ இந்த பக்கம் தான் போவா….டேய் நீ அவ பின்னாடி போயிட்டே இரு…உன் கையில கொடுத்திருக்க மயக்க மருந்து துணியை அவமூக்குல வைச்சு,அப்படியே அவளை தூக்கிடு…நாங்க உன் பின்னாடி கார்ல வரோம் சரியா’என ஒருவனை அனுப்பிவைத்தான்.

“சரிண்ணே..நீங்க சொன்ன மாதிரி நான் முடிக்குறேன்”என அவளை பாலோ செய்தான்….

‘அவளோ தன் பின்னாடி யார் வருவது…என தெரியாமல்……….அந்த சாலையோரத்தில் நடந்தால்………அவள் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென்று யாரையோ போட்டு அடிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால்..அவள் பின்னாடி வந்துகொண்டிருந்தவனை,ஒருவன் சகட்டுமேனிக்கு அடித்துக்கொண்டிருந்தான்….இவளோ,எதுக்கு அவனை அடிக்குறான்..என நினைத்துகொண்டிருக்க…பக்கத்தில் இருந்த ஒருவர்.. “பொண்ணை கிண்டல் பண்ணதுக்கு, இவனுக்கு வேணும்…..நல்லா அடிங்க அப்போதான் எந்த பொண்ணையும் திரும்பிகூட பார்க்ககூடாது, இதை பார்த்தாவது இவனமாதிரி பசங்களுக்கு பயம் வரும்” என அந்த ஒருவர் கூறிக்கொண்டே சென்றார்..

”இவளோ..நல்லாவேணும் அவனுக்கு……நம்மலும் போய் ரெண்டு அடியாவது அடிக்கனும்”என இவள் மனசுக்குள் நினைக்க..அதற்க்குள் அவனை  போலீஸ்ஜீப் வந்து ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது….

‘சொன்னேல…நான் அப்போவே சொன்னேல….அந்த குடும்பத்துக்கு ஒருத்தன் பாதுகாப்பா இருக்கானு…கேட்டயா திவாகர்….உன்னால கொஞ்ச நாள் பொருக்க முடியாதா….இப்போ பாரு என் ஆளு அங்க மாட்டிகிட்டான் … இப்போ என்ன பண்ணபோற…..இங்க பாரு திவாகர் என் ஆள் எனக்கு வேணும்…..அவன் மட்டும் என்னை பத்தி ஏதாவது போட்டுக்கொடுத்தான் …உன்னால என் ஃபிஸ்னஸ் எல்லாம் பாலாபோயிடும்…..அப்படி மட்டும் நடந்துச்சு உன்னை சும்மா விடமாட்டேன் ஞாயபகம் வச்சுக்கோ’..என கோபமாக பேசிவிட்டு போனான்…

“எப்படிடா,அவன் அங்க வந்தான்…..நாம எப்படிடா வழிமாறிப்போனோம்…. சொல்லுங்கடா…அவன் பின்னாடிதான போயிட்டு இருந்தோம்”

’அண்ணே…அடுத்து என்ன பண்ணுறது’

“அவன் சொல்லுறமாதிரி கொஞ்ச நாள் பொருத்திருப்போம்..அதுவரைக்கும் அவள கண்காணிச்சுட்டே இருங்க..சரியா”

“சரிண்ணே….”

‘என்னாச்சு….எப்படி நடந்தது……சரி இப்போ யாருக்கும் எதுவும் ஆகலையில….சரி நான் வரேன்….அந்த பெரியவர கண்டுபிடிச்சேங்களா… ம்ம்ம்….சரி…..அந்த குடும்பத்தோட போட்டோ எனக்கு மெயில் பண்ணுங்க… நான் பார்க்கனும்..சரி நீங்களும் ஜாக்கிரதையா இருங்க…ஓகே”என பேசிவிட்டு வைத்தான் போனை.

“யாருகிட்ட பேசிட்டு இருந்த பாண்டியா”என கேட்டுகொண்டே வந்தான் பிரகாஷ்.

’வேலை விசயமா பேசிட்டு இருந்தேன்….என்ன வேணும் உனக்கு காலையிலயே வந்திருக்க’

“ஊருக்கு போயிட்டு,எதுக்கு டெல்லி போனேனு பொய் சொன்ன”

‘அது….அது…வள்ளியம்மாவ பார்க்கனும் போல இருந்துச்சு….அதான் வேற ஒண்ணுமில்லை…உனக்கு யாரு சொன்னது மலரா’

“ஆமா…நேத்து போன் பேசுனதுல சொன்னா”

‘சரி….நீ எதுக்கு மலர்கூட சண்டை போட்ட……. “பிரியாவும் நானும் அப்போதான் வேலை முடிஞ்சு சாப்பிட வந்தோம்….அப்போ மலர் போன் பண்ணிருந்தா…நான் முதல கட் பண்ணிவிட்டேன்..ஆன திரும்பவும் போன் பண்ணா…அதை கட் பண்ணும் போது பிரியா என் மொபைல பிடுங்கி பேச ஆரம்பிச்சா….நான் யாருனு சொல்லவரதுக்கூட கேட்காம… ‘ஏங்க…அவனே இப்போதான் வேலைய முடிச்சுட்டு வந்து சாப்பிட உக்கார்ந்தான்..அது உங்களுக்கு பொருக்காதா….அவன் சாப்பிட்டு மெதுவா உங்களுக்கு போன் பண்ணுவான்…ஓகே’ மலர பேசவிடாம…….அவளே பேசிட்டு வச்சுட்டா…. மலரு சும்மா இருப்பாளா……வாட்ஸ்ப்ல….யாரு அவ…..உங்கள அவன்,இவனு…. கூப்பிடுறா…இதுக்குதான் நீங்க சென்னைக்கு வேலை பார்க்க போனீங்களா மாமானு அழுக ஆரம்பிச்சுட்டா…ஏற்கனவே அந்த ஃபிரஜெக்ட் ஃப்ரப்லம் வேற பாண்டியா….அதான் கோவமா அவகிட்ட பேசிட்டேன்….ஆனா அடுத்த நிமிசம் அவளுக்கு போன் பண்ணா எடுக்கல…சரி எப்படியும் உங்க மூலமா பேசிடுவானு நினைச்சேன்….ஆனா அவ கோவத்துல சாப்பிடமா இருந்திருக்கா…அதுகடுத்துதான் உனக்கு தெரியுமே….என நேற்று நடந்ததை கூறினான்.

”உனக்கும்,பிரியாவுக்கும் இருக்குற ஃப்ரண்ட்சிப் எனக்கு தெரியும்…ஆனா மலருக்கு தெரியாது……. மலரு உன்னை நம்பி இருக்குறவ…..அதை மறக்காத………உன் காதல் அஞ்சு வருஷம்…அவ காதல் பத்து வருஷம்…..ஞாயபகம் வச்சுக்கோ….அவங்க அப்பாவ எதிர்த்திட்டு உன்னை கல்யாணம் செய்ய ரெடியா இருக்குறா… அந்த பொண்ணுக்கிட்ட நீ கோவமா பேசுனதுக்கு உன்னை நான் திட்டியிருக்கனும்…ஆனா மலருக்கு உன்னை திட்டுனா பிடிக்காது அதுனால உன்னை விடுரேன்…இனிமே மலர்கிட்ட கோவமா பேசுறத இதோட நிறுத்திக்கோ சரியா பிரகாஷ்”

‘சரிடா…உன் பாசமான தங்கச்சியை இனி எதுவும் சொல்லமாட்டேன் போதுமா’

“சரி ஆபீஸ் கிளம்பனும்…போய் ரெடியாகு”

‘ஏன் டி இதுகெல்லாம சண்டை போடுவ…..அண்ணா பாவம் டி….ஏதாவது முக்கியமான வேலையில இருந்திருப்பாங்க…அதுக்கு நீ கோவமா மெசேஜ் பண்ணுவியா….அண்ணாவுக்கு நீதான் எல்லாம்….அவங்க அப்பாவ எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணபோறாங்க…..உனக்கே தெரியும்ல….அண்ணா உனக்காக எல்லாம் செய்யுறாங்கனு….இனிமே கோவப்படாத மலரு… அண்ணாக்கு நீதான் வாழ்க்கையே….அப்படி இருக்குறப்போ… அவருமேல சந்தேகப்படுறது நல்லதில்ல… புரிஞ்சுக்கோ டி…..….நான் கிளம்புறேன்….பார்த்து வீட்டுக்குப்போ’என அவள் பேசவந்ததை பேசிமுடித்துவிட்டு சென்றாள்.

“மலரோ….பிரகாஷ்க்கு,மெசெஜ் செய்து மன்னிப்பு கேட்டும்…பிரியாவை பற்றி பேசியதற்கும் சாரி சொல்லியும்….இனி நீங்கள் கோவம்படுவதுபோல் பேசமாட்டேன் மாமா”என சோகமா ஸ்மைலியும்…..காதல் குறி போட்ட ஸ்மைலியும் அனுப்பி வைத்தாள்…

‘அண்ணே…அந்த பொண்ணு யாருனு சொல்லுங்கண்ணே…அந்த குடும்பம் அப்படி உங்களுக்கு என்ன செஞ்சாங்க’என அவன் அடியாள் குடிபோதையில் அவனிடம் கேட்க…

“டேய்……நான் தேடுற குடும்பம்…..எங்க தாய்மாமா குடும்பம்….என் அத்தையும்,மாமாவும்,அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா…ஆனா ஒரு சூழ்நிலையில அவங்க ஊரவிட்டு போயிட்டாங்க….அவங்க ஊரவிட்டு போயி கிட்டதட்ட பதின்ஞ்சு வருஷம் ஆகிருச்சு”

‘அண்ணே…புரியல…அப்போ அந்த பாண்டியன் யாருண்ணே’

“அவன்….எனக்கு ஒரே எதிரி…..அவனுக்கும்,எனக்கு நடக்குற யுத்த்துல நான்தான் ஜெயிக்கனும்….அதுவும் அவன் கையில மாமா குடும்பம் கிடைக்ககூடாது….அப்படிமட்டும் குடும்பம் அவன் கையில கிடைச்சா….இதுல நான் தோத்துபோனாதா அர்த்தம்…..அவனையும்,அவன் குடும்பத்தையும் பழிவாங்க என் மாமா குடும்பம் வேணும்”

‘அண்ணே…..கண்டிப்பா உங்க மாமா குடும்பம் உங்க கைக்கு கிடைக்கும்…அதுக்கு நாங்க பொருப்புண்ணே’என போதை தலைக்கேறியதில் அவன் உலறிக்கொண்டு கீழே விழுந்தான்….திவாகரனுக்கு இன்று நடந்ததை நினைத்து வெறியேரி இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பித்தான்..

”சார்…மெயில் பண்ணிட்டேன்….அந்த பொரியவர் எங்க இருக்காங்கனு கண்டுபிச்சுட்டாங்க சார்…இனி நாங்க அவங்களை நேருல சந்திச்சு பேசுறோம் சார்”

‘வேணாம்…..நானும் உங்ககூட வரேன்..எனக்கும் வந்த வேலை முடிஞ்சது….நானே அவங்கள பார்த்து பேசி…எல்லாம் புரியவைக்கனும்… அதுவரை நீங்க பாதுகாப்பா பார்த்துக்கோங்க’

“சரி சார்”…….

 

                                       துருவங்கள் தொடரும்…………..

 

Advertisement