Advertisement

               துருவங்கள் 3

 

“அந்த ஹால் முழுவதும் அவன் பேச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்தது, சாப்ட்வேர் பற்றியும்,அதன் நுணுக்கங்களையும் தெளிவாகவும்,மற்றவருக்கு புரியும்படி சொல்லிக்கொண்டு இருந்தான்”

‘சிலர் அதன் விளக்கங்களையும்,குறிப்புகளும் அவனிடம் கேட்டு நோட்ஸ் எடுத்துகொண்டனர்’

“ஓகே ப்ரிண்ட்ஸ் மீட்டிங் ஓவர்”என அவன் கூறியதும் அனைவரும் வெளியேறினர்.

‘அனிதா,ப்ரியா வந்துட்டாங்களான்னு பார்த்து சொல்லுறேங்களா’என கடைசியாக வெளியே இருந்தவளை அழைத்து கேட்டான்.

“ஓகே பாண்டியன்”

‘பிரகாஷ் உங்க டீம் லீடர் ப்ரியா வந்துட்டாங்களா’

“அய்யோ மீட்டிங் முடிஞ்சுடுச்சு போல அதான் அவன் ப்ரியாவ பத்தி கேக்குறான்”.

‘இல்லை அனிதா,வந்தா நான் சொல்லுறேன்’என சொல்லுபோது ப்ரியா உள்ளே நுழைந்தால்.

“எங்க ப்ரியா போனா மீட்டிங் முடிஞ்சா பின்னாடி இவ்ளோ லேட் அஹ வர”என வந்தவளை எதுவும் பேசவிடவில்லை.

‘ஒண்ணுமில்லை பிரகாஷ், அதை அப்புறமா சொலுறேன்,சார் என்ன சொன்னாங்க,மீட்டிங் வேற அட்டென் பண்ணலை’என சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது “ப்ரியா பாண்டியன் வரசொன்னாங்க”என அனிதா சொல்லிவிட்டு சென்றாள்.

“போச்சு அந்த பைல்வான்,உன்னை வைச்சு செய்யபோறான்,போ போய் பார்த்தட்டு வா”என்று அவளை அனுப்பி வைத்தான்.

‘என்னடா இப்படி பயமுறத்துற பிரகாஷ்’

‘சரி நீ போய் பாண்டியன் சாரா பார்த்துட்டு வா’

“ம்ம் சரி”என அவளும் அவனை காண சென்றாள்.

“மே ஐ கமின் சார்”

‘எஸ்’

“இன்னைக்கு மீட்டிங் இருக்குனு நேத்து உங்களுக்கு மெயில் பண்ணிருந்தேன் ஆனா மீட்டிங் முடிஞ்சு இருபது நிமிஷம் கழிச்சு வந்திருக்கேங்க,எனித்திங் ப்ரோப்லேம் ப்ரியா”என தன்மையாக கேட்டான்.

‘நத்திங் சார்,வரும்போது எனக்கு அடிபட்டுச்சு சார் அதான் ஹோஸ்பிட்டேல் கூட போகாம நேரா ஆபிஸ்க்கு வந்தேன் சார்’

“என்னாச்சு எப்படி அடிபட்டுச்சு,இப்போ எப்படி இருக்கு”,என வரிசையாக கேட்டான்.

‘இப்போ பரவாயில்லை சார்,சாரி சார் என்னால மீட்டிங் அட்டென் முடியல,வெரி சாரி சார்’என்று மன்னிப்புகேட்டால்.

“இட்ஸ் ஓகே ப்ரியா,உடம்ப பார்த்துகோங்க இன்னைக்கு லீவ் வேணா எடுத்துகோங்க”

‘நோ சார்,ஐம் ஓகே சார் நான் வொர்க் பார்க்க போகலாமா’

“ஓகே போங்க”

‘பாவம் ப்ரியா,அந்த பைல்வான்கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாளோ,முருகா என் ப்ரிண்ட் ப்ரியாவ அவன்கிட்ட திட்டு வாங்காமா பத்திரமா வந்தா அவளை கூட்டிட்டு உன் கோவிலுக்கு பால் காவடி எடுக்கவைக்குறேன் முருகா’என அவளுக்கு வேண்டுதல் வைத்தான்.

“முருகா அந்த பால் காவடி எனக்கு பதிலா,என் உயிர் தோழன் பிரகாஷ் எடுக்கனும்னு நான் வேண்டிக்கிறேன்”என்றபடி வந்தால் ப்ரியா.

‘ஹே ப்ரியா அவன் உன்னை எதுவும் சொல்லலையா,இல்லை அவன்கிட்ட திட்டுவாங்குனத என்கிட்டே மறைக்குறையா’

“அவன்கிட்ட திட்டு வாங்கனும்னு எனகென்ன தலையெழுத்தா என்ன, என்ன நடந்துச்சுனா” என்று அவளும்,அவனும்,கொசுவத்தி சுருளை சுத்திக்கொண்டு அங்கு நடந்ததை கூறி முடித்தாள்.

‘எங்க அடிபட்டுச்சு ப்ரியா,வா ஹோஸ்பிட்டேல் போகலாம்,என பிரகாஷ் பதறிக்கொண்டு வந்தான்.

“ஹே அதெல்லாம் அவன்கிட்ட பொய் சொன்னே,எனக்கு அடிபடல,என்ன நடந்துச்சுனா “அவள் சிக்னலில் நின்றுக்கொண்டுஇருக்கும் போது ஒரு சிறுமி அவளிடம் பிச்சை கேட்டுவந்தால் அந்த சிறுமியை அழைத்துகொண்டு அவளுக்கு தெரிந்த ஆசிரம்மத்தில் சேர்த்துவிட்டு அந்த குழந்தைக்கான படிப்பு செலவை தான் ஏற்றுகொள்வதாய் கூறினால்”

‘ஹே எவ்வளவு பெரிய உதவி  பண்ணிருக்க அந்த பொண்ணுக்கு,இதை ஏன் நீ பாண்டியன்கிட்ட மறைக்கனும் ப்ரியா,சார்கிட்ட சொல்லிருந்தா அவரே ஒன்னும் சொல்லிருக்க மாட்டாரு,என பேசிக்கொண்டு இருந்த போது “அவங்க எப்படி சொல்லுவாங்க பிரகாஷ் ஒரு பொய் சொல்ல மத்தவங்கள பார்த்து கத்துகுவாங்க,எப்படினா நீ சொன்ன மாதிரிதான் ப்ரோக்ராம் போட்டது நானு சொல்லுபோது,அவங்களும் வரும்போது எனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சொல்லிருக்காங்க”என்ன ப்ரியா,என்று சொல்லிக்கொண்டு வந்தான்,பாண்டியன்.

“ஆஹா வந்துட்டான்யா பைல்வான்,ப்ரியா இன்னைக்கு நீ யாரு முகத்துல முழிச்ச”

‘இப்போ எதுக்கு இந்த கேள்வி’

“ஏன்னா நான் காலையில இவன் முகத்துலதான் முழிச்சேன்,என் ராசில இன்னைக்கு பரிசுகிடைக்கும்னு போட்டு இருந்துச்சு,ஆனா அதை தவிர இவன்கிட்ட திட்டுதான் கிடைக்குது” என்று அவளிடம் ரகசியமாய் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“அங்க என்ன பேச்சு பிரகாஷ்,இப்போ ப்ரியா சொல்லுறது உண்மையா அவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்துச்சா இல்லையா,சொல்லுங்க”என அவனை போட்டு மிரட்டிக்கொண்டு இருந்தான்.

ஆமாம் சார் அவங்களுக்கு எதுவும் அடிபடல,அவங்க என ஆரம்பித்து ‘அவனிடம் கூறியதை பாண்டியனிடம் சொல்லி முடித்தான்’ இதான் சார் நடந்துச்சு.

“இன்னைக்கு நடந்த மீட்டிங்ல, மினிட்ஸ் ஒப் மீட்டிங்  எனக்கு சமிட் பண்ணல சோ அதை நீங்க சமிட் பண்ணனும்,என்று ப்ரியாவிடம் கூறிவிட்டு,அனிதா இவங்க இன்னும் கால்மணி நேரத்துல மினிட்ஸ் ஒப் மீட்டிங் டைப் பண்ணி எனக்கு சமிட் பண்ணனும் அதுக்கு நீங்க பொறுப்பு ஓகே”என யாரும் அவளுக்கு உதவி செய்யகூடாது என்றும் மறைமுகமாக சொல்லி சென்றான்.

‘இதுக்குதான் சொன்னே பார்த்தியா இப்போ பனிஸ்மென்ட் கொடுத்துட்டு போய்ட்டான், இதுக்கு காவலா இந்த அனிதா வேற’என்று அவன் ப்ரியாவை கேலி செய்தான்.

“இப்போ என்ன பண்ணுறது பிரகாஷ்,மீட்டிங்ல என்ன நடந்துச்சுன்னு தெரியாது,சார் என்ன பேசுனாங்கனு தெரியாது,ஏதாவது சொல்லுடா”

‘இப்போ உனக்கு மினிட்ஸ் ஒப் மீட்டிங் தானே டைப் பண்ணிகொடுக்கணும்,ஒரு நிமிஷம் இரு’என அவளிடம் சொல்லிக்கொண்டு மீட்டிங் அட்டென் செய்த அவனின் தோழன் அவனின் போனில் மீட்டிங் நடந்தை ரெகார்ட் செய்து வைத்திருந்தான்,அதை அவனிடம் போய் கூறி வாங்கிகொண்டு வந்தான்.

“இந்தா இதுல மீட்டிங் நடந்தத அவன் எப்போதும்,ரெகார்ட் பண்ணி வைக்குறது பழக்கம்,அது உனக்கு இன்னைக்கு யூஸ் ஆகிருக்கு, போ சீக்கிரமா அந்தவேலைய முடிச்சுட்டுவா உனக்காக வெயிட் பண்ணுறேன்”என்று அவளிடம் அதைகொடுத்துவிட்டு சென்றான்.

‘அவளும் அதை ஒருமுறை கேட்டுவிட்டு, அதில் நடந்தை கணினியில் ஏற்றி அவனுக்கு மெயில் மூலம் சமர்பித்தால்’.

“மாமா சாப்பிட வாங்க”என்று வள்ளி அழைத்தால்.

‘எனக்கு சாப்பாடு வேணாமா’

ஏன் மாமா, என்மேல இன்னும் கோவம் போகலையா???

உன்மேல கோவபட்டு என்ன ஆகுபோகுதுமா…

‘அப்புறம் ஏன் மாமா சாப்பாடு வேணாம் சொல்லுறேங்க…

“மனசு சரி இல்லைமா,அதான் கொஞ்சம் நேரம் கழிச்சு நான் சாப்பிட வரேன் நீயும் அத்தையும் சாப்பிடுங்க….

அத்தை நீங்க வரமா எப்படி மாமா சாப்பிடுவாங்க….என்று வம்படியாக கூப்பிட்டு சென்றாள்.

சரிமா வா போகலாம்….அத்தையையும்,கூப்பிட்டுவாமா….

“நீயும் உக்கார்ந்து சாப்பிடு வள்ளி……நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமேல் சாப்பிட்டுக்குறேன் அத்தை….

“நாளைக்கு வாழை கண்டு நடவு இருக்கு மாமா…..தோப்புல வாழைகண்டு வந்து இறங்கிடுச்சு,நல்ல நேரம் பார்த்து நடவு வேலைய ஆரம்பிக்கணும் மாமா”என்று முத்தையாவிற்கு நியாபக படுத்தினால் வள்ளி.

‘ஆமா வள்ளி…எனக்கு நியாபகம், இருக்கு நீயும் அத்தையும் காலைபொழுதுல வாழைத்தோப்புக்கு வந்துடுங்க’

“ஆமாம் வள்ளி,உன் கையாலா இந்த வாழைகண்டு நடவு செஞ்சா நம்ம குலம் வாழையடி வாழையா தலைக்கும்”என மீனாட்சி பேச்சுவாக்கில் கூறினார்.

“ஐயா டவுனுக்கு போய், பூஜை பொருள் வாங்கணும் சொன்னேங்க ஐயா,அதான் உங்களுக்கு நியாபகபடுத்த வந்தேன்,அப்படியே திருமூர்த்தி ஐயா உங்கள பார்க்கணும்னு சொன்னங்க ஐயா”என்றார் நல்லதம்பி.

‘சரி நல்லா’ வா போய் திருமூர்த்தி ஐயாவ பார்த்துட்டு அப்படியே டவுனுக்கு போயிட்டு வரலாம்’

“மீனா,வள்ளி, நாங்க போயிட்டு வரோம்”என்று கூறிசென்றார்.

வள்ளியும் சாப்பிட்டு முடித்து அவள் அறைக்கு சென்றாள்,துவைத்ததுணியை மடித்து அலமாரியில் வைக்கும்போது ஒரு சிறிய ஆல்பம் அவள் கையில் கிடைத்தது,அதை பிரித்து பார்த்தால்  அதில் பாண்டியனும்,வள்ளியும் இருவரும் கல்யாணம் முடிவு செய்வதற்கு முன் எடுத்த போட்டோ,அதை எடுத்துகொண்டு கட்டிலில் அமர்ந்து ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து,அந்த நினைவுக்கு சென்றாள்.

“அத்தான்,இதோட என் படிப்பு முடிஞ்சுடும் அதுக்கடுத்து நமக்கு கல்யாணம் பேச சொல்லுங்க உங்களை விட்டு என்னால இருக்கமுடியாது”என்று அவனின் கையை கோர்த்துக்கொண்டு அவளின் ஆசை கூறிக்கொண்டு இருந்தால்.

‘சரி உன் படிப்பு முடிஞ்சுடுச்சு ஆனா நான் அப்பாக்கிட்ட வாக்குகொடுத்த மாதிரி அந்த நெல் அறுவடை லாபம், நான் காட்டனும் அது இன்னும் முடியல,அது முடிஞ்சா பின்னாடிதான் நமக்கு கல்யாணம்,பதினஞ்சு வருசமா என்னகாக காத்திட்டு இருந்தேங்க, இன்னும் மூணு மாசம் மட்டுதான் சரியா’என்று அவளை கொஞ்சியும்,கெஞ்சியும் சொன்னான்.

“என் அத்தானுக்காக நான் ஜென்மம் முழுசும் காத்துட்டு இருப்பேன்,இந்த மூணு மாசம் காத்துட்டு இருக்கமாட்டேனா”

‘இதான் என் வள்ளியம்மா,சொன்ன புரிஞ்சுக்குவாங்க,அதுனாலதான் உங்கள இன்னும் காதலிக்குறேன்’

“நானும்,உங்களைவிட அதிகமா காதலிக்குறேன் அத்தான்”என அவனின் மார்பில் சாய்ந்துகொண்டு பேசும்பொழுது,அவளுக்கு தெரியாமல் எடுத்த போட்டோ.

“பாதி போட்டோ பார்க்கும் பொழுது அவளுக்கு அவள் அண்ணனிடம் இருந்து போன் வந்தது, “சொல்லுங்க அண்ணா எப்படி இருக்கேங்க” இங்க எல்லோரும் நல்லா இருக்காங்க,நீங்க எப்படி இருக்கேங்க”

“நான் நல்லா இருக்கேன் ஸ்ரீகுட்டி,சாப்பிட்டயா,மச்சான் போன் பண்ணுணாங்களா”

‘அத்தான் எப்பவுமே,நைட்தான் போன் பண்ணுவாங்கண்ணா,இப்போ அவங்களுக்கு வேலை இருக்கும்’

“ஓ அப்படியா சரிமா நானும் மச்சானுக்கு போன் பண்ணி பார்த்தேன் ஆனா எடுக்கல அதான் உன்கிட்ட கேட்டேன்”

‘தெரியலேயே அண்ணா,வேலையா இருப்பாங்க’

“சரிமா,நான் அடுத்த மாசம் ஊருக்கு வரேன்,இன்னும் யாருகிட்டயும் சொல்லல நீயும் யாருகிட்டயும் சொல்லாத,சப்ரைஸா இருக்கட்டும்”

‘ஓ அப்பிடியா அண்ணா சரிண்ணா,நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்’

‘சரிமா நான் வேலை இல்லாதப்போ போன் பண்ணுறேன்,மச்சான் போன் பண்ணுனாங்கனா நான் அவங்களை விசாரிச்சேன்னு சொல்லு’ அழைப்பை துண்டித்தான் மலைமாறன்.

“சரிங்கண்ணா”

அடுத்த மாசம் அண்ணா வராங்க,அப்படியே அவங்களுக்கும்,கீர்த்திக்கும் கல்யாணம் பேச சொல்லணும் அப்போதான் அத்தைக்கும்,மாமாவுக்கும் சந்தோசமா இருக்கும்.

தாயி,அந்த லெட்சுமி இன்னைக்கு கன்னு போடபோகுது சீக்கிரம் வா தாயி,என்று பாட்டி கூற..இதோ வந்துட்டேன் பாட்டிம்மா.

“அய்யோ மாமாவேற டவுனுக்கு போயிருக்காங்களே பக்கத்துல திருமூர்த்தி ஐயா இருந்தா வர சொல்லுங்க முத்து”

இதோ போறேன் தாயி….

“ஒன்னுமில்லை லெட்சுமி,ஒண்ணுமில்லை சரியா”என்று அந்த மாட்டின் மூக்கணாங்கயிறை பிடித்து அதன் தலையை தடவிகொடுத்தால்.

ஆனால் மாடு கொஞ்சம் மிரண்டுகொண்டே இருந்தது,பாட்டி மாட்டோட வயிற தொட்டு பாருங்க இன்னும் எத்தன நிமிசத்துல கன்னுபோடும் சொல்லுங்க…

“இன்னும் கால்மணி நேரத்துல கன்னுபோடும் தாயி”

‘நீங்க வெந்நீர் காய வையுங்க பாட்டி,முத்து மூர்த்தி அய்யா எங்க’

“தாயி அய்யா இப்போதான் தோட்டத்துக்கு போனாங்களா,நான் ஆளுககிட்ட சொல்லிவிட்டு இருக்கேன் தாயி”

‘நீங்க மூக்கணாங்கயிற பிடிங்க நான் என்னனு பார்க்குறேன்’என்று அவள் மாட்டின் பின்பகுதியில்,வாலை தூக்கிவிட்டு பார்த்தால்,அதில் கன்னுக்குட்டியின் தலையும்,முன்னங்காலும்,கொஞ்ச கொஞ்சமாக வெளியேவர,வள்ளி தானே அதுக்கு பிரசவம் பார்த்தால்.

“தாயி மாடு பயந்துக்கும்,பெரிய ஐயா வந்தவுடனே அது என்னனு பார்க்கலாம்”என்று அவளை தடுத்தனர்.

‘வேணாம் பாட்டி,இப்பவே தலையும்,காலும் வெளியே வரபோகுது,இன்னியும் காத்திருந்தா மாட்டுக்கு ஆபத்து வந்துடும்,நானே அந்த கன்னுக்குட்டிய வெளியே எடுக்குறேன்’என்று அவளின் இரு கைகளையும் மாட்டின் பிரசவிக்கும் வாயில் பகுதியில் உள்ளே விட்டு கன்னுக்குட்டியின் இரு கால்களையும் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்தால்.

‘பாட்டி மாடு மிரளுது பார்த்து பிடிங்க,முத்து நீங்களும் மாட தடவிகொடுங்க அப்போதான் அது மிரளாது,இன்னும் செத்த நேரத்துல கன்னுக்குட்டிய வெளியே எடுத்துடலாம்’ என சொல்லிக்கொண்டு அந்த கன்னுக்குட்டியை வெளியே எடுத்தால்.

“கீழே விழுந்த கன்னுக்குட்டியை,தாய் பசு தன் நாவினால் தடவிகொடுத்து அதன் மீது உள்ள உதிரத்தை தொடைத்தது”

‘முத்து அந்த வென்னீர கொண்டு வாங்க,பாட்டி சுண்ணாம்பு,மஞ்சளும் கலந்துகொண்டுவாங்க’என்று அந்த மாட்டை குளிப்பாட்டி அதற்க்கு சாம்பிராணி காட்டி,அதை தொழுவத்தில் கட்டி வைத்து அதன் பக்கத்திலே அதன் கன்னுக்குட்டியை படுக்க வைத்தனர்.

வள்ளி,மாட்டுக்கு பிரசவம் பார்த்தது,அனைவருக்கு தெரிந்து அனைவரும் கூடிவிட்டனர்.

முத்தையா,திருமூர்த்தி,மீனாட்சி, வள்ளியின், அம்மா அப்பா, ஊரே அந்த வீட்டின் முன்தான் இருந்தது.

“தாயி அந்த பார்வதியோட குணம் உன்கிட்ட இருக்கு,அதுனாலதான் அந்த லெட்சுமிக்கு உன் கையாள கன்னு பிறக்கணும்னு இருந்திருக்கு”என அந்த பாட்டி கூற.

‘என் மருமகளாச்சே,அவ கைராசிக்காரி,அவ மண்குடம் தொட்டாலும்,அது பொன்குடமா மாறும் அப்படிபட்டவ என் மருமக’என்று மீனாட்சி பெருமையில் சொல்ல.

“தாயி அப்படியே நீயும் எப்போ நல்ல செய்தி சொல்லபோற,அதுக்குதான் நாங்களும் காத்துட்டு இருக்குறோம்”என ஒரு பெண்மணி கூற.

“கூடிய சீக்கிரம்,நீயும் நல்ல செய்தி சொல்லணும்”என்று திருமூர்த்தி அவளின் நெற்றியில் திருநீறு வைத்து சொல்லிச்சென்றார்.

‘ஆனால் வள்ளியோ, அனைவரும் நல்ல செய்தி சொல்லணும்,என்றவுடன் வெட்கம்பட்டுக்கொண்டு உள்ளே சென்றாள்.

“அது எப்படி கரெக்டா மீட்டிங் நடந்தத எழுதிருக்கேங்க,நீங்க மீட்டிங் அட்டென் பண்ணல,அப்புறம் எப்படி ப்ரியா”என அவளை கேள்விகேட்டான்.

‘சாப்ட்வேர் பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்,அதை வச்சுதான் இன்னைக்கு நீங்க என்ன டாபிக் பேசி இருப்பேங்கனு, அதையே எழுதி உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் சார்’என்று திக்கி திணறி கூறினால்.

“ஓகே நீங்க போங்க,இனி இந்த மீட்டிங் மிஸ் பண்ணமாதிரி வேற எந்த மீட்டிங்கும்,மிஸ் பண்ணகூடாது ஓகே”

“ஓகே சார்”

‘என்ன மீட்டிங் அட்டென் பண்ணலை அப்புறம் எப்படி நீங்க எழுதி கொண்டு வந்தேங்கனு கேட்டனா’என்று சரியாய் சொன்னான் பிரகாஷ்.

“எப்படி டா வெளிய வந்து ரெண்டு நிமிசம்கூட ஆகல எப்படி கண்ண்டுபிடிச்ச”

‘இதெல்லாம் இந்த கம்பெனி ஓனர்க்கே தெரியும்,சரி அதைவிடு இன்னைக்கு சாமி 2 மூவி ரிலீஸ் ஆகிருக்கு,ரெண்டு டிக்கெட் புக் பண்ணிருக்கேன் ஈவ்னிங் அஞ்சு மணிக்கு ரெடியா இரு ஓகே’

“நான் வரல பிரகாஷ்,அம்மா வீட்டுக்கு சீக்கிரம் வரசொல்லிருகாங்க,அதனால நீ உன் ஆளா கூப்பிட்டு போ”

‘யாரு அந்த அனிதாவ சொல்லுறையா,அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு’

“நான் அனிதாவ சொல்லல,பாண்டியன் சாரா சொல்லுறேன்”என்று அவனை கலாய்த்துகொண்டு இருந்தால்.

‘யாரு அந்த பைல்வான கூப்பிடு போறதுக்கு பதிலா,நான் தனியாவே போய் படம் பார்த்துட்டு வந்துடுவேன்,நீ வரையா இல்லையா சொல்லு’

“அதான் சொன்னேல அம்மா வர சொல்லிருக்காங்க சோ முடியாது”

ஓகே நான் அதை கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு புக் பண்ணிடுறேன் நாளைக்கு உனக்கு ஓகேவா…

“அவளோ யோசித்து ‘ஓகே போகலாம்” என்று சொன்னவுடன்தான் அவளைவிட்டான்.

“ஹலோ பாண்டியன் நீங்க தேடிவந்த குடும்பம் கடைசியா நெல்லையில இருந்திருக்காங்க அப்புறம் அவங்க திருச்சிக்கு மாறி இருக்காங்க ஆனா அங்க போய் விசாரிச்சா அவங்க இப்போ சென்னையில இருக்குறதா சொல்லுறாங்க,அந்த குடும்பத்துல,நீங்க சொன்னமாதிரி மூணு பேர்தான் இருக்காங்க”

‘ஓகே சார்,ஆனா இப்போ அவங்க அட்ரெஸ் கிடைக்குமா’

“அதுக்குதான் முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்,பாண்டியன்,ஆனா அட்ரெஸ் கிடைக்கல இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க அதுக்குள்ள கண்டுபிடிச்சு கொடுக்குறேம்”

‘ஓகே சார்,ஆனா நான் அவங்கள தேடுறேனு யாருக்கும் தெரியாகூடது,முக்கியமா அந்த திவாகரனுக்கு தெரியாகூடது சார்’

“நீங்க பர்சனலா கொடுத்த வேலை இது,யாருக்கும் ஒரு துளி விசயம்கூட தெரியாவிடாமாட்டோம் பாண்டியான்,எங்களை நம்பலாம்”

‘சரிங்க சார்’என்று அழைப்பை துண்டித்தான்.

டேய் அந்த தாமரை குடும்பம் எங்க இருக்குனு கண்டுபிக்க இவ்வளோ காலமா எடுத்துப்பேங்க,அந்த பாண்டியன் கைக்கு அந்த குடும்பம் கிடைக்குறதுக்கு முன்னாடி என் கைக்கு அந்த குடும்பம் கிடைக்கணும்,இல்லையினா உங்களை கொன்னுருவேன்…

“ஏன் அந்த குடும்பத்த இத்தன வருசமா தேடிட்டு இருக்கேங்க,அய்யா அவங்களுக்கு உங்களுக்கு பகையா,இல்லை அந்த குடும்பத்த பழிவாங்க போறேன்களா”என்று அவன் கூட்டாளி ஒருவன் கேட்க.

“எனக்கு அந்த குடும்பத்தோட பரம்பரை பகைடா,அதை எல்லாம் அந்த பொண்ண கல்யாணம் செஞ்சாதான் இன்னும் அந்த குடும்பத்த அதிகமா பழிவாங்க முடியும்,அதான் ஒவ்வொரு ஊருலயும் அந்த குடும்பத்த பத்தி விசாரிச்சுட்டு இருக்கேன்”

“யாருனே அந்த பொண்ணு”

‘அவளை கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணும்போது பாரு,அப்போ தெரியும் யாரு அந்த பொண்ணுனு’

 

                 

                                 துருவங்கள் தொடரும்………..

 

Advertisement