Advertisement

                துருவங்கள் 18

 

”ஐயர் மந்திரத்தை சொல்லிகொண்டிருக்க, மணமகனின் அறையில் மாப்பிள்ளை தயராக, மணமகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்களும், கல்யாணத்திற்க்கு வந்த சொந்தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கும், மாப்பிள்ளை வீட்டாரும், மணமகளின் வீட்டாரும். புதிதாக திருமணம் முடிந்தாலும், இப்பொழுது நடக்கும் திருமணத்தை பார்க்கையில் அவர்களின் திருமணமும் நினைவு வராமல் இருக்குமா என்ன???, தலைவாழை இலை போட்டு மூனு நேரமும் பந்தி நடக்குறது கிரம்மத்து கல்யாணத்துல மட்டும் தான், அதே மாதிரி தான் திருமூர்த்தியின் மகளின் கல்யாணமும் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது”.

”மாப்பிள்ளையை அழைச்சுட்டு வாங்கோ” ஐயர் சொல்ல.

“பிரகாஷூம்,மாறனும், கை பிடித்து, தென்னவனை அழைத்து வந்தனர்”

“மாப்பிள்ளையோட தாய்மாமா, இங்க வாங்க”

“சொல்லுங்க ஐயரே” வள்ளியின் தந்தை வந்து நிற்க.

“மாப்பிள்ளைக்கு, மாலை போட்டு, இந்த பட்டு வேஷ்டி,சட்டைய கொடுங்கோ”

“தென்னவனோ, முருகவேலின் காலில் விழுந்து, அவர் கொடுத்த உடையை வாங்கிகொண்டு சென்றான்.

“இதே போல், தெய்வாவுக்கும் இந்த சடங்கு நடந்தது, முத்தையா, அவளுக்கு மாலை அணிவித்து, அவளிடம் கல்யாண உடையை கொடுத்தார்.”

“மாப்பிள்ளையை அழைச்சுட்டு வந்து, இந்த மனையில அமர்த்துங்கோ”

“தென்னவனை, மனையில் அமரவைத்து, அருகிலேயே பிரகாஷூம்,மாறனும் நின்றுகொண்டனர்.”

“பொண்ணை அழைச்சுட்டு வந்து, மனையில அமர்த்துங்கோ”

“கீர்த்தியும்,மலரும், தெய்வாவை அழைத்து வந்து, மனையில் அமரவைத்து அவளின் அருகிலேயே நின்றனர்.”

“வள்ளியின், உடல் நிலைக்காக, அவள் எல்லா பொறுப்பையும், கீர்த்தியிடமும், மலரிடமும், கொடுத்துவிட்டாள். பாண்டியனும், வள்ளியின் அருகில் அமர்ந்துகொண்டான்.”

“இந்த மாங்கல்யத்தை எல்லோரிடம், கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோம்மா” ஐயர், மாங்கல்யத்தை தட்டை கொடுக்க. கீர்த்தி அதை வாங்கிகொண்டு, அனைவரிடமும் ஆசீ வாங்க சென்றால்.

“தம்பி, பெரியவங்க இருந்தா வரசொல்லுங்கோ,” கார்த்தியை பார்த்து சொன்னார்.

“கார்த்தியோ, முத்தையா, மீனாட்சி, திருமூர்த்தி, சிவநாதன் செல்வி, முருகவேலை, அழைத்துகொண்டு மேடையை நோக்கி போனான்.

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” ஐயர் சொல்ல, மந்திரம் முழுங்க, தென்வ்வனின் கையில் மாங்கல்யத்தை கொடுத்த ஐயர், “கட்டுங்கோ தம்பி”, சொல்ல, மஞ்சள் கயிறில், சிவனும், பார்வதியும் அந்த மாங்கல்யத்தி இருக்க, அதை வாங்கிய தென்னவன், தெய்வாவின் கழுத்தில், கட்டி இரண்டு முடிச்சு போட, மூன்றாவது முடிச்சை, மலருக்கு கொடுத்தான்.”

“தெய்வாவின் கல்யாணத்தை பார்த்த முத்தையா, தன் தங்கையின் கல்யாணத்தை மறுமுறை பார்ப்பது போல் உணர்வு,”

“விழிகளில் கசிந்த நீரை, தன் துண்டினால், துடைத்துக்கொண்டார் திருமூர்த்தி, மகளின் திருமணத்தில், பார்க்கும் பெற்றோர்களுக்கு வரும் அந்த கண்ணீர் திருமூர்த்திக்கும் வந்தது.”

“மீனாட்சியும், செல்வியும், தெய்வாவின் கல்யாணத்தை கண்டு மிகவும் மகிழ்ந்தனர்.”

“வள்ளியின் மனதில், தெய்வாவின் கல்யாணம் நல்ல படியாக முடிந்தது, சந்தோஷத்தில் இருந்தாள்.”

“வாழ்க்கையில், நீயும், நானும், இனி சரிசமம்”

“ நீ, நான்னு, பிரிவு எதுவும் இனி இல்லை

வாழ்க்கைய நாமா இரண்டு பேரும் அழகாக வாழ்ந்து காட்டலாம்

உன், துன்பமும், இன்பமும் அதில் எனக்கும் பங்கு உண்டு

தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கையில்லை, அதையும் தாண்டி அன்பு, விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, இதை குறிக்கிறது தான் வாழ்க்கை

வா… வாழ்ந்து பார்ப்போம் அந்த அழகான வாழ்க்கையை”

“இந்த நிமிடம் முதல், தெய்வா எனது மனைவி, அவளுக்கு யாரலும் துன்பம் நேர்ந்தாலும், அத் என்னை தாண்டி தான் போகனும், இனி கடவுள் துணை எனக்கு இருக்கோ இல்லையோ, தெய்வாவுக்கு, அந்த கடவுள் துணை இருக்கனும்”

“மப்பிள்ளை, பொண்ணுக்கு கால்ல மிஞ்சி போட்டு, அருந்ததிய பாருங்கோ,”

“இந்த அக்னி குண்டத்தை மூனு முறை சுற்றி வாங்கோ,” ஐயர் ஒவ்வொரு சடங்கையும் சொல்ல, அதை மகிழ்ச்சியுடன் செய்தான் தென்னவன்.

“அப்போது யாரும் எதிர்பார்க்காத குரல், அந்த மகிழ்ச்சியை கலைத்தது”

“யாரை கேட்டு என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சேங்க” மண்டபம் அதிர பேசினார். குரல் வந்த திசையை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாக இருந்தனர். வள்ளியை தவிர.

“வாங்க, மச்சான் எப்படி இருக்கேங்க, எங்க போனேங்க இத்தனை வருசமா” பாசத்துடன் முத்தையா ஓடி வந்து அவரின் கை பிடித்து கேட்க.

“ நான் வருவது இருக்கட்டும், இந்த கல்யாணத்தை நிறுத்துங்க முதல”

“எல்லாம் முடிஞ்சது குரு, இனி தெய்வா உன் மக இல்லை, தென்னவன் மனைவி” திருமூர்த்தியின் குரல் ஓங்கி ஒலிக்க.

“அவருக்கோ, தன் ஒரே மகளின் திருமணத்தை பார்க்க முடியாமல் போனதே என்று சிறு வருத்தம் இருந்தாலும், தன் மனைவியின் சாவுக்கு இந்த குடும்பம் தான் காரணம், தவறான எண்ணத்தில் ஊருக்கு வந்தார்., ஆனால் அவர் வருவதற்க்குள் எல்லாம் முடிந்துவிட்டது.”

“என் மனைவி சாவுக்கு நீங்க தான காரணம், அண்ணா”

” நானா…, என்ன உளறல் இது குரு, தாமரை இறந்தது ஒரு விபத்து அதுக்கு காரணம் யாரும் இல்லை அதை புரிஞ்சுக்கோ” திருமூர்த்தி அனைவரும் இருக்கும் காரணத்தால், தாமரையின் இறப்பை மறைத்தார்.

“அங்கு இருந்த, கீர்த்தி, கார்த்தி, மாறன், மூவருக்கும் இந்த விசயம் கொஞ்சம் அதிர்ச்சி தான், ஆனால்…, குருமூர்த்தியின் வருகை அவர்களை அதிகமாக பாதித்தது. அவர்கள் மனதில் “தாமரை, அத்தை இறந்ததுக்கு ஐயா காரணமா என்ன சொல்கிறார் இவர், அப்போ தெய்வா, இவரின் மகளா”  அவர்கள் யோசிக்க.

“தெய்வாவோ, சிறுவயதில் பார்த்த தந்தையை இன்று தான் பார்க்கிறாள், ஆனால் அவள் மனதில் தந்தையாவது கல்யாணத்தில் கடைசி நேரத்தில் வந்தாரே, அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் தாயின் மரனத்திற்க்கு ஏன் பெரியப்பாவின் மீது பழி போடுவது அநியாயமாக இருந்தது”

“ஆமாம் என் மனைவி இறந்ததுக்கு காரணம் நீங்க தான், நீங்க தான் உங்க மகனையும், அதோ நிக்கிறானே பாண்டியனையும் சென்னைக்கு அனுப்பி அவங்களை தேடி கண்டுபிடிச்சு கொலைசெய்ய சொன்னது நீங்க தானு, எனக்கு தெரியும்” தவறாய் கூறினார்.

“குரு, தாமரை இறந்தது கொலை தான், ஆனா அதுக்கு காரணம் என் மகனும், பாண்டியனும் இல்லை, திவாகரன் தான் காரணம், இது புரியாமா பேசாத.”

“தெரியும் நீங்க அந்த திவாகரன் மேல தான், பழி போடுவேங்கனு எனக்கு தெரியும், ஏன்னா, அவன் தான் எனக்கு சென்னையில நடந்த எல்லா விசயத்தை என்கிட்ட சொல்லிட்டான். ஆனா அவன், கொலை செய்யலை உங்க மகனும், அவனும் தான் காரணம், தேவை இல்லாம அவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டேங்க, உங்களை விடமாட்டேன் அண்ணா, என் மனைவி இறந்ததுக்கு, நீங்களும், அதோ நிக்கிறானே அவனும் பதில் சொல்லனும், என் பொண்ணையும், என் மனைவியையும் என்கிட்ட பிரிச்சதுக்கு பதில் சொல்லனும் நீங்க, செய்யாத குற்றத்துக்கு என் குடும்பத்தை இந்த ஊரைவிட்டு அனுப்புனீங்கள, உங்களை விடமாட்டேன்” அவர் சாபம் விட்டார் குருமூர்த்தி.

“ குரு, நீ குடும்பத்துக்கு ஆகாதவங்க பேச்சை கேட்டு, இப்படி பேசாத… சென்னையில என்ன நடந்ததுனா.” அவர் சொல்லுவதற்க்குள்,

“போதும் நிறுத்துங்க அண்ணா, என் மனைவிய கொன்னு, என் மகளை ஏற்கனவே கல்யாணமானவனுக்கே இரண்டாவது கல்யாணம் பண்ணி வச்சு, இப்போ ஊர் அறிய அவளுக்கு வேற ஒருத்தனோட இன்னொரு கல்யாணம், நினைக்கவே வேதனையா இருக்கு, எந்த பொண்ணுக்கும், என் பொண்ணு மாதிரி வாழ்க்கை அமையக்கூடாது, ஆனா எங்களை இப்படி பழிவாங்கிட்டீங்களே அண்ணா..” குருமூர்த்தி, அந்த விசயத்தையும் போட்டு உடைத்தார்…, இதை எதிர்ப்பார்க்காத வள்ளி அதிர்ந்தாள். அவளுடன் சேர்ந்து அந்த மூவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

“குரு… ஒரே கத்தலில் அவரின் வாயை அடக்கினார்”

“என்ன சொல்லப்போறீங்க, என் மனைவியோட கடைசி ஆசைனு சொல்லப்போறீங்களா, இல்லை அவ பேருல இருக்குற சொத்தை அடையிறத்துக்கு இது நல்ல நேரம்னா…” அவர் மீண்டும் பேச ஆரம்பிக்க.

“இந்த முறை, முத்தையாவும், முருகவேலும் சேர்ந்து அவரை அடக்கினர்…, திருமூர்த்தியின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. அவரை கவனித்த பிரகாஷ், முதல் முறையாக அவரை தந்தையாய் அழைத்தான்.

“அப்பா…, என்ன செய்யுது உங்களுக்கு, அவன் தாங்க போக, அதற்க்குள் அவருக்கு இரத்தழுத்தம் அதிகமாகி, கீழே சரிய போக, பிரகாஷூம், பாண்டியனும் அவரை தாங்கினர்.

“மண்டபமே, அதை அதிர்ச்சியாக பார்க்க, மணமக்கள் இருவரும் மாலையை கழட்டி போட்டுவிட்டு அவரின் அருகில் வந்தனர்.., அனைவருக்கும் பதற்றமாகி போக, அவர்களை சமாதான் செய்ய  ஊர் மக்கள் மட்டுமே அருகில் இருந்தனர்.”

“குருவோ, என் மனைவிய கொன்னதுக்கு தான் கடவுள் உங்களுக்கு தண்டனை கொடுத்தாரு,” மனதுக்குள் நினைக்க. அவரை தவிர அனைவரும் திருமூர்த்தி என்னாவானதோ, ஏதானதோ என பதறிக்கொண்டு சென்றனர்.

”அவருக்கு, பிரஷர் அதிகமாகிடுச்சு…., அதுனால அவரை ஒரு நாள் ஹாஸ்பிட்டல இருக்கட்டும், நாளைக்கு அவரோட உடல் நிலையை பரிசோதிச்சுட்டு அப்புறம் பார்க்கலாம்.” மருத்துவர், பிரகாஷிடமும், பாண்டியனிடமும் சொல்லிகொண்டிருந்தார்.

“வேற எதுவும் இல்லையே டாக்டர்….” பிரகாஷ் பதற்றத்துடன் கேட்க..

“ நத்திங்க் பிரகாஷ்.., நீங்க பயப்படாம இருங்க, அவருக்கு கொஞ்ச நாள் ஓய்வு தேவை புரியுதா.., “ மருத்துவர் அவனுக்கு தைரியம் சொன்னார்.

”பிரகாஷ், மலரை தவிர மற்றவர்கள் விட்டுக்கு போகச்சொல்லி, செவிலியர் சொல்ல மற்றவர்கள் கிளம்பினர்.

“முதல் முதலில் மணமக்களை அழைத்துகொண்டு மணமகன் வீட்டுக்கு செல்வார்கள், ஆனால் இன்று காலையில் நடந்தை, நினைத்து அனைவரும் புது மணமக்களை மறந்திருந்தனர்.”

“அனைவரும், முத்தையா வீட்டில் இருக்க.., கார்த்திக் பேச்சை ஆரம்பித்தான். “ நாங்க ஊருல இல்லாதப்ப என்ன நடந்ததுனு சொல்லுங்கப்பா…, தாமரை அத்தை இறந்ததுக்கு ஏன் அண்ணாவையும், ஐயாவையும் சொல்லுறாங்க. அத்தை எப்படி இறந்தாங்க, அப்புறம் தெய்வா நம்ம வீட்டு பொண்ணா, அவளை அண்ணா, இரண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டாங்களா…, என்ன சொல்லுறாங்க அப்பா…, சொல்லுங்கப்பா…., “ முத்தையாவிடம் கேட்க.

”அவருக்கு இருந்த வேதனையில், எல்லாம் உணமையும் சொல்லி முடித்தார், பாண்டியனும், பிரகாஷும் எதற்க்கு சென்னை சென்றார்கள் என்பதையும், அதில் பாண்டியன் தாமரையை தேடி சென்றதும், அவர்கள் குடும்பத்தை தன் குடும்பத்துடன் சேர்க்க எண்ணியதும், அதில் திவாகரனின் சதியால் தாமரை உயிர் விட்டதும், இறுதி நேரத்தில் தாமரையின் கடைசி ஆசையாய் தெய்வாவின் கல்யாணத்தை பாண்டியனுடன் பார்க்கவேண்டிய நிலையை எடுத்து கூறினார். தங்களுக்கே, பஞ்சாயத்தில் தான் எல்லா விசயங்களும் தெரிந்ததும், அதையும் கூறினார்.” ஆனால், கார்த்தியோ கோபமாக பாண்டியனிடம் பேச ஆரம்பித்தான்..

“முத்தையா சொன்னதை கேட்ட, கீர்த்தியும், மாறனும் பாண்டியனின் செயல், வருத்ததை அளித்தாலும், வள்ளியின் வாழ்க்கையில் இப்படி ஒன்று நடந்ததை ஏன் யாரும் எங்களிடம் சொல்லவில்லை என்பதும், ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், அவர்களால் கோபப்படவில்லை காரணம் வள்ளி, பாண்டியனின் காதல் தான்”

“எப்படிண்ணா, அண்ணிக்கு உங்களால துரோகம் செய்ய முடிஞ்சது…, அவங்க மேல நீங்க வச்சுருக்குற காதல் இது தானா…., தாமரை அத்தை கேட்டாங்கனா சொல்லவேனடியது தானே உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுனு, ஏன் சொல்லல அண்ணா.., சொல்லுங்க…, நீங்களாம் என்ன காதல் செஞ்சேங்களோ, அண்ணியும் உங்களை நம்பிட்டு இருக்காங்களே…,  இப்போ அந்த பொண்ணு தென்னவன் அண்ணாவ கல்யாணம் செஞ்சா நீங்க அவளை கல்யாணம் செஞ்சது இல்லைனு ஆகிடும்மா… நீங்கல்லாம் அவன் அடுத்து பேசுவதற்க்குள்…”

“ நிறுத்துடா…., யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுற…, அவன் உன் அண்ணா அவன்கிட்ட இப்படி தான் பேசிவியா…, சொல்லு…, அதான… நீ என் பிள்ளையா இருந்தா இப்படி பேசிருக்கமாட்டா…,  நீ, யாரோ பெத்த பிள்ளைனு இன்னைக்கு நிருப்பிச்சுட்ட…” மீனாட்சி உண்மையை போட்டு உடைக்க..

“மீனாட்சி……., அத்தை……, அம்மா…..” முத்தையா, வள்ளி, பாண்டியன் அவரை தடுத்து நிறுத்துவதற்க்குள், எல்லாம் உண்மையையும் போட்டு உடைத்தார்.

“அம்மா…, நான் …. உங்க… உங்க மகன்… இல்லையா…, அப்போ அண்ணா, எனக்கு அண்ணா இல்லையா….., அப்போ நான் யாரு…. உங்க செல்ல மகன் இல்லையா…,” கார்த்திக்கு தனது பிறப்பின் உண்மை இந்த நேரத்தில் வெளிவரும் என கனவிலும் நினைக்கவில்லை.,”

“அப்பசியெல்லாம், இல்லை கார்த்தி… நீ என் தம்பி தான், நீ இந்த வீட்டு வாரிசு டா…, நான் உன் அண்ணாடா கார்த்தி.. கார்த்தியை தேற்ற…,”

“ வள்ளியோ, பக்கதில் இருக்கும் கீர்த்தியை நினைத்து பார்த்தாள், ஏன்னென்றால் அவளும், மீனாட்சிக்கும், முத்தையாவுக்கும் பிறக்கவில்லையே…,”

” முத்தையாவோ, அம்மா கோபத்துல சொல்லிட்டா கார்த்தி… நீ என் மகன் டா.. என் மூத்த மகனுக்கு தம்பி டா… அம்மா சொன்னதை நினைச்சு எதுவும் மனசுல வச்சுக்காத… கார்த்தி…” அவரும் அவனை தேற்ற.

”கார்த்தியும், கீர்த்தியும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என அவர்களின் நிலையை பார்த்தே தெரிந்துகொண்டனர்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விசயத்தை மறைக்கமுடியும், விடுங்க…, நான் சொல்லுறேன்… “ நீயும், கீர்த்தியும் எனக்கும், இவருக்கும் பிறக்கலை,  அவரின் கடந்த கால நினைவை கூற ஆரம்பித்தார்….”

“காமாட்சியின் இறப்பி போது, மீனாட்சியை அழைத்த காமாட்சி…, பாண்டியனுக்கு மீனாட்சி தான் அன்னையாக இருக்கவேண்டும் என்பதையும், அதற்க்கு, முத்தையாவிடம், மீனாட்சியை இரண்டாம் தாரமாக ஏற்று வாழவேண்டும் என்பதையும் காமாட்சி இருவரிடமும் சத்தியம் வாங்கிகொண்டு கண்மூடினார் , இது திருமூர்த்தி,செல்வி,தாமரைக்கு, முருகவேலுக்கு தெரியும்.”

“அடுத்த நாளே, வீட்டில் வைத்து தாலிகட்டினார் முத்தையா…, ஆனால் அவரோ மீனாட்சியிடம் எப்பொழுதும் என் மூலமாக குழந்தை வாய்ப்பு உனக்கு கிடையாது என்பதையும், அதையும் ஏதாவது நடந்து குழந்தை வந்துவிட்டால், முத்தையாவின் மனது பாதிக்கபடும் என்பதால் தன் கர்ப்பையை எடுத்துவிட்டார் மீனாட்சி…, இது தெரிந்த முத்தையா…, அதிர்ந்தே போய்விட்டார்…, என்ன தான் அவர்களுக்குள் இந்த முடிவு இருந்தாலும், ஊரின் பேச்சால், இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் போது, ஒரு பெண்ணை பார்த்தனர்.., அவரின் நிலையை உணர்ந்து, அவருக்கு பிறக்கும் குழந்தையை, தாங்கள் தத்து எடுத்துகொள்வதாகவும், அவருக்கு உறுதி அளித்தனர்…, அதன் படி, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் வரை மீனாட்சி அவருடனே இருந்தார்…, குழந்தை பிறந்தது அதுவும் இரட்டை குழந்தையாய் ஆண், பெண் என பிறந்தது…, குழந்தை பிறந்ததும், அவர் இறந்துவிட…, அந்த குழந்தைக்கு தாய் ஆனார் மீனாட்சி…”

“ஊரும் , குழந்தைக்காக தான் மீனாட்சி.., மருத்துவனையில் இருந்தார் என்பதையும் ஊர் மக்கள் நினைத்துகொண்டனர்.., குழந்தையின் வரவால் பாண்டியனும் மகிழ்ச்சி கொண்டான்…, ஆனால் இவர்கள் ரகசியம், தெரிந்தது  நால்வருக்கு மட்டுமே, அது வள்ளி, பாண்டியன், முத்தையா.., திருமூர்த்தி, இன்று, உண்மை அனைவருக்கு தெரிந்தாலும், அதை ஏற்க்கும் பக்குவத்துடன் அனைவரும் இருக்கின்றனர்…, ஆனால் கீர்த்தி, கார்த்தியின் மனநிலை எவ்வாறு இருக்கும்..”

“அவ இந்த வீட்டு பிள்ளை, நீ அவளை பற்றி பேசுனதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு, இனியும் என் நாத்தனார் பிள்ளைய பேசுன…, உன்னை… அவர் சொல்லிகொண்டே…, கீர்த்தியை பார்த்தார்… “அய்யோ, கீர்த்தி…, அம்மா தெரியாம சொல்லிட்டேன்ம்மா…, நீ என் பொண்ணு தான் அதை யாரலும் மாத்த முடியாதும்மா…, “ அவளை கட்டிகொண்டு அழ… அவளோ…”

“ நான் வேற வயித்துல பிறந்தாலும், என் அம்மா நீங்க தான்ம்மா…., என்னை விலக்காதேங்கம்மா…., நான் உங்க பொண்ணு இல்லையா…, அப்போ மாமா எனக்கு சொந்த மாமா இல்லையா…” மாறனை சுட்டிக்காட்ட…

“யார் என்ன சொன்னாலும் நீ, முத்தையா மாமா பொண்ணு, இப்போ என் மனைவி… கீர்த்தி…” அவனும் அவளின் தோளை அணைத்து பதில் கூறினான்..

“இல்லை…, நான் யாரோ பெத்தவங்க மகன் தானே…., அதான் அம்மாவே சொல்லிட்டாங்களே…, இனி எனக்கு இந்த வீட்டுல இடம் இல்லை…, அதுக்கு முன்னாடியே… நான் வெளிய போறேன்…,” கார்த்தி.. அழுதுகொண்டே.. வாசலை நோக்கி போக…,

“ நில்லு கார்த்தி….” வள்ளி சொல்ல….. அவளின் பேச்சை கேட்க்காமல் நடந்துக்கொண்டிருந்தான்…. “அண்ணி சொன்னா கேட்க்கமாட்டீயா கார்த்தி..” வள்ளி சொல்ல…, அவன் கால் வாசலை தாண்ட இருந்தது…

“அண்ணி சொல்லுறேன்…, என்னைக்கும் நீ இந்த வீட்டு பையன் தான்…, அதுவும் என் அத்தானுக்கு தம்பி தான்…., அத்தை, அத்தானை நீ புரிஞ்சுக்காம பேசிட்டேனு கோபம், அதான்…, வா உள்ள…,”

“இல்லை…., நான் வரமாட்டேன்…,”

“அண்ணி பேச்சுக்கு மரியாதை கொடுப்பியா இல்லையா…. சொல்லு..” அவளின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து…. அழைத்து சென்றால் வள்ளி…, அத்தான் கார்த்திய அழைச்சுட்டு போங்க…”

“தென்னவன் மாமா…, தெய்வாவ மேல இருக்குற இரண்டாவது ரூம்க்கு அழைச்சுட்டு போங்க…, கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்க…,”

“அண்ணா, கீர்த்திய அழைச்சுட்டு அவ ரூம்க்கு போங்க…”

“மாமா, அத்தைய கூப்பிட்டு போங்க…, நான் எல்லோருக்கும் குடிக்க எடுத்துட்டு வரேன்…” அவள் சமையல் அறைக்கு செல்ல…, அங்கு வாணி தயராக வைத்திருந்தால்…, காஃபியை…

“என்னை மன்னிச்சுருங்கண்ணா…., நான் தெரியாமா பேசிட்டேன்…, அதுக்காக நான் உங்க தம்பி இல்லைனு சொல்லாதீங்கண்ணா…, எப்பவும் நீங்க என் அண்ணா தான், நானும் கீர்த்தியும் உங்க தம்பி, தங்கச்சி தான்…,..  கார்த்தி, பாண்டியனை கட்டியணைத்து அழுக…” பாண்டியனோ… “அம்மா கோபத்துல சொல்லிட்டாங்க… எப்பவும் நீங்க தான் இந்த வீட்டு பிள்ளைங்க.. சரியா.. அண்ணா மறந்துட்டேன் கார்த்தி… நீ பேசுனது எல்லாம் சரியா…, இப்போ அமைதியா இருடா..” அவனின் தலையை கோதினான்.

“என்னால, எல்லோருக்கும் நிம்மதி இல்லங்க…., பேசாம நான் இந்த ஊரைவிட்டு போயிடவா…,” தென்னவனை பார்த்து கேட்டால்…, அவனோ.., ”ஏன் என்னை விட்டு போறதில இவ்வளவு சந்தோஷமா…, தேவி” அவன் கவலையாய் கேட்க…, அவனின் பதிலில் அதிர்ந்தாள் தெய்வா…

“கீர்த்தியின் அமைதியை பார்த்த மாறன்…, அவளை இப்படியே விட்டால் சரிவராது என…, அவன் அவளின் முகத்தை நிமிர்த்தி “என்னமா கீர்த்தி, ஏன் அமைதியா இருக்குற…, எப்பவும் நீ அத்தைக்கு பொண்ணு தான், என் மனைவி தான் சரியா…” அவன் பேச…,  அவளோ, மாறனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்..,” அவளின் முதுகை தடவிக்கொடுத்து, அவளுக்கு ஆறுதல் அளித்தான்..”

“ என்னை, மன்னிச்சுருங்க…, அவன் தம்பிய பற்றி புரியாம பேசுனத்துக்கு தான், என் வாய் தவரி எல்லாம் உண்மையும் வந்துருச்சு…, என்னை மன்னிச்சுருங்க…” முத்தையாவின் காலில் விழுந்தார்.

“முதல் முறையாக மீனாட்சியை தொட்டு தூக்கினார், முத்தையா…, அவரின் தொடுதலை.., காமாட்சிக்கு செய்யும் துரோகமாக நினைத்து.., அவரின் தொடுதலை நிராகரித்தார்…, அவருக்கு தெரியும், காமாட்சியின் மீது முத்தையா எவ்வளவு, காதல் வைத்திருப்பது”

“மீனாட்சியின் நிராகரிப்பு, அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை…, ஆனால் அவருக்கு பெருமிதம் தான் இருந்தது…, சிறு தீண்டலை கூட தன்னிடம் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவருக்கு உணர்த்தினார்… மீனாட்சி..”

“இப்போ அழுகுறதுக்கு, ஏன் உண்மைய சொன்ன…, அவன் சின்ன பையன்ம்மா.. எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவான்.., நீ தான் பாண்டியன் மீது உள்ள அதிக பாசத்தால்.., உண்மைய சொல்லிட்டா. விடும்மா அவன் எங்கயும் போகமாட்டான் எப்பவும் நமக்கு மூனு பிள்ளைங்க தான்.. சரியா, அவரின் மனதில் இருப்பதை தெளிவாக கூறினார்..”

”எல்லாரின் வேதனையும் முடிந்து, திருமூர்த்தி ஐயா.. நல்ல படியாக வீட்டிற்க்கு வந்தார்.., அவரைக்காண.., அனைவரும் சென்றனர். ஆனால் குருவின் வருகையால் அனைவரும் பயந்து இருந்தனர்.”

“புது மணமக்களை…, எல்லா சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளையின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்…, கீர்த்தியும், மலரும்..” தென்னவனும், தெய்வாவை மகிழ்ச்சியுடன் அழைத்துச்சென்றான்..,”

“ ஆனால்…, குருமூர்த்தியின்  பார்வையில், பாண்டியனும், திருமூர்த்தியும் கொலைகாரானக தெரிந்தது…, அவர் இப்படி நினைக்க, திவாகரனின் சதியால் அடுத்த சம்பம் நிகழ்ந்தது..”.

 

                                             துருவங்கள் தொடரும்………….

 

Advertisement