Advertisement

                  துருவங்கள் 17

 

”மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவை அங்குள்ள மதுரை மக்களும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள மக்களும் எவ்வாறு கொண்டாடுவார்களோ, அதிலும்… மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்தை போல, முத்தையாவின் மகள் கீர்த்தி,மாறனின் கல்யாணமும், பிரகாஷ், மலரின் கல்யாணமும், ஊர் மக்களின் ஆசீர்வாதத்துடன், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்துடனும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் நடந்து முடிந்தது…”

“கீர்த்தியின் நாத்தனாராக, வள்ளி, கீர்த்திக்கு நாத்தனார் முடிச்சு போட்டு அவளுக்கு செய்யும் சீர்வரிசையும் செய்தாள் வள்ளி.”

“அடுத்து மலருக்கு, நாத்தனாராக தெய்வாவை முன் நிறுத்தி நாத்தனார் முடிச்சு போட்டாள். மலருக்கு செய்யவேண்டிய சீர்வரிசகளை, தெய்வாவே செய்தாள்.”

“இரு ஜோடிகளின் கல்யாணத்தை அவரவர் பெற்றோர்கள், ஆனந்த கண்ணீருடன் பார்த்தனர். பாண்டியனோ, கீர்த்தியை கையில் எடுத்து வளர்த்த போது சிறுப்பெண்ணாக இருந்தவள், இன்றோ வளர்ந்து வேறு குடும்பத்தில் மருமகளாக செல்கிறாள் தங்கை மீது உள்ள பாசத்தில் கலங்கி நின்றான். அவனுக்கு ஆதரவாய், வள்ளி அவனருகில் வந்து நிற்க, அவனோ யாரும் அறியாமல் கண்களில் உள்ள கண்ணீரை துடைத்துக்கொண்டான்.”

“ மணமகனுக்கு செய்யவேண்டிய, சீர்களை அதாவது…, தங்கையின் கணவனுக்கு பத்து பவுன் தங்க செயினும், இரண்டு பவுன் மோதிரமும்,கைச்செயின் ஐந்து பவுனும், பிளாட்டினத்தில் ஒரு மோதிரமும் என அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு சீரை அடுக்கினர், பாண்டியனும், கார்த்திக்கும்.”

“  சிவநாதனோ, அதே போல், பிரகாஷூக்கும், மாப்பிள்ளைக்கான சீர்வரிசை, தென்னவனும், பாண்டியனும் செய்தனர்.., ஆனால் பிளாட்டினத்தில் இருவருக்கும் ஒரே மாதிரி மோத்திரத்தை பரிசளித்தான், தென்னவன்.”

“மாப்பிள்ளைகளுக்கும், மணப்பெண்களுக்கும், பால் பழம் கொடுக்கும் சம்ப்ரதாயம் நடந்தது.., வள்ளியும், தெய்வாவும் ஒருசேர்ந்து மணமக்களுக்கு முதலில் அவர்களை ஏமாற்றிவிட்டு, அதற்கடுத்து கொடுத்தனர்.”

“கார்த்திக்கும், அவர்களை ஒவ்வொரு நிமிடமும் கேலிசெய்துகொண்டும், பிரகாஷை மட்டும் வம்பு இழுத்துகொண்டும் இருந்தான்”.

“என்ன பிரகாஷ் மாமா, கல்யாணம் முடிஞ்சது.., அடுத்து எங்க ஹனிமூன் போறீங்க…, நீங்க தான் காதல் செய்யறப்போவே ஹனிமூன் போயிட்டு வருவீங்கள, நான் தெரியாம கேட்டுட்டேன்.., மாமா.”

“டேய், கொஞ்சமாச்சும் மாமானு மரியாதை கொடுடா.., இப்படி கலாய்ச்சா அப்போ நானும் உன்னை கலாய்ப்பேன்..”

“சும்மா, நடிக்காதீங்க மாமா…, நீங்க செஞ்ச சேட்டையெல்லாம், எனக்கு தெரியாதா என்ன…,”

“அப்படி என்னடா உனக்கு தெரியும்”

“அக்காவ பார்க்க, நீங்க மாந்த்தோப்புக்கு தானே வரச்சொல்லுவீங்க… அது எனக்கு தெரியாதா மாமா” அவனின் ரகசியத்தை போட்டு உடைக்க.

“டேய்.., என் அப்பா இருக்காருடா.., கொஞ்சம் மெதுவா பேசு.., உனக்கு எப்படி இந்த விசயம் தெரியும்..”

“ நாங்க நாலு வருசம் கழிச்சு ஊருக்கு வந்தாலும், எல்லா விசயமும் என் கையில இருக்கு…, அப்புறம் நீங்களும், அக்காவும்.., அந்த ஆத்தங்கரையில” கார்த்தி ஆரம்பிக்க.., அவன் வாயில் வாழைப்பழத்தை வைத்து அடைத்தான் பிரகாஷ்.

“மணமக்கள் அவரவர் இல்லத்துக்கு செல்ல நேரமும் வந்தது…., கீர்த்திக்கும், மலருக்கும், கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது…, அதை யாரிடமும் காட்டாமல் அவர்களுக்குள்ளே அடக்கிக்கொண்டனர்.”

“வெள்ளி, பித்தலை, சில்வர், என இரண்டு வீட்டு மணமக்களுக்கும், சீர்வரிசை இரண்டு லாரிகளிலும், மரக்கட்டில், மரப்பீரோ,அலங்காரக்கண்ணாடி, சோபா செட்,  என வீட்டிற்க்கு தேவையான அனைத்து உபயோக பொருளும், மேலும் இரண்டு லாரிகளில் இருந்தது…,”

“முத்தையா,மீனாட்சியும், முருகவேல் – தமிழ்செல்வியிடம், “மாமா, செல்வி, என் பொண்ணுக்கு, நான் மட்டும் இல்லாம என் மகன்கள் ரெண்டு பேரும் சேர்ந்து, எங்களால முடிஞ்ச சீர்வரிசையை கொடுத்துருக்கோம் இதுல குறை இருந்தா சொல்லுங்க…, அப்புறம் கீர்த்திகிட்ட இப்போ எங்க வீட்டு சார்பா ஒரு பித்தலை குத்துவிளக்கும், வெள்ளிக்குத்துவிளக்கும், இருக்கு. பித்தலை குத்துவிளக்காளா தான், உங்க வீட்டுல விளக்கு ஏத்தனும், வெள்ளி குத்துவிளக்கு சீர்வரிசையோட., அப்புறம். பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும், சேர்த்து நூறு பவுன் நகையும், செஞ்சிருக்கேன்.., பலாகாரக்குடம் மட்டும் இப்போ சாமிகும்பிட்டு, நல்ல நேரம் முடியிரத்துக்குள்ள, உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க.”

“ உங்க வீட்டு பொண்ண தான் நாங்க என் வீட்டுக்கு மருகளா அழைச்சுட்டு போகனும் சொன்னே தவிர, இந்த சீர்வரிசை இல்லை மச்சான். இப்போ செய்தது எல்லாம் கீர்த்திக்கும், மாறனுக்கும் மட்டுமே சொந்தம் தவிர எங்களுக்கு உங்க  பொண்ணு மட்டும் தான் சொந்தம்., இதை நாங்க இப்பவே மறுத்துருக்க முடியும் ஆனா, கீர்த்திக்கு நீங்க செய்யிற பாசமான, அன்பளிப்பு.

“சிவாநாதனும், திருமூர்த்தியிடம், முத்தையா, கூறியது போல் சொல்லிவிட்டு. அவரும் மலருக்கு செய்யவேண்டிய சீர்வரிசை இரண்டு லாரிகளிலும், வீட்டு உபயோக பொருள் உள்ள லாரிகளிலும், தயராக இருந்தது.”

“சாமியிடம் வைத்து எடுத்து வந்த பலாகரக்குடத்தை மீனாட்சியும், முத்தையாவும் எடுத்து கொடுக்க, கீர்த்தியும்,மலரும் வாங்கிகொண்டனர்..,  பலகாரக்குடத்தை காரில் வைத்துவிட்டு, அனவரிடமும் சொல்ல வந்தனர்.”

“கீர்த்தியோ, பாண்டியனையும்,கார்த்தியையும் பார்த்து கண்ணீரை மறைத்து கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றாள். வள்ளியிடம் வந்த கீர்த்தி “உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணி” வள்ளியை கட்டிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள். முத்தையாவும், மீனாட்சியும், “கீர்த்தியின் தலையி ஆதரவாக தடவிகொடுத்து, பார்த்து இரும்மா, எல்லோரும் மனசு அறிஞ்சு நடந்துக்கனும் கீர்த்தி” மீனாட்சி பாசத்துடன் சொன்னார்.”

“மலரோ, தென்னவனிடம்.. “அப்பாவ பார்த்துக்கோண்ணா…., நான் தினமும் வந்துட்டு போறேன்..,”… “போயிட்டுவரேன்ப்பா…,” ஒரே ஊரில் இருக்க போகும் மகிழ்ச்சியில் அவளுக்கு ஆனந்த கண்ணீர் வந்தாலும், இனி நான் வேறு வீட்டு பெண்ணாகிவிட்டேனே என்று அவளுக்கு இருந்தது.”

“ஐயாவ நல்லா பார்த்துக்கோம்மா.., மாப்பிள்ளையையும் பார்த்துக்கோ…, அவங்க தான் இனி உனக்கு எல்லாமே.., சரியா..,” சிவநாதனும், தென்னவனும் சொல்ல, மலர் அதை கேட்டுக்கொண்டால்.

“அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு இரு ஜோடிகளும் அவரவர் புதிய இல்லத்துக்கு தங்களின் துணைவிகளோடு சென்றனர்., கண்ணீருடன் அவர்களை அனுப்பி வைக்காமல், மிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.”

“திருமூர்த்தி, ”தெய்வா கிளம்பளாமா…, நீதான் வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளை பொண்ணுக்கு திருஷ்டி எடுக்கனும்…, வாம்மா..” தெய்வாவை அழைக்க.

“ஐயா…, தெய்வா இப்போ உங்கூட வந்து, அவங்களுக்கு திருஷ்டி எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு அனுப்பிவச்சுடுங்க.. ஐயா..” வள்ளி கூற.

“ஏன் மா…”

“ஐயா.. புதுசா கல்யாணம் ஆனவங்க…, அவங்க இருக்கும் போது தெய்வா அங்க இருந்த நல்லா இருக்காது…, அதுவுமில்லாம இன்னும் ஒரு வாரம் தான் தெய்வா கல்யாணம் இருக்கு, மூனு நாள் முன்னாடி தெய்வாவ வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் ஐயா…” வள்ளி தயங்கி தயங்கி கூறினால்.

“ஓ…ஓஓ.. சரிம்மா…, அவங்களுக்கு ஆராத்து எடுத்ததும், கார்த்திக்கூட அனுப்பி வைக்கிறேன்.., கார்த்தி நீயும் என்கூட வாப்பா..”

“சரிங்க ஐயா…., நான் கார் எடுக்குறேன்.. ஐயா, உக்காருங்க,” கார்த்தி, தெய்வாவையும் ஐயாவையும் அழைத்துகொண்டு சென்றான்.

” நேற்று வரை, கேலி, கிண்டல், ஆட்டம்,பாட்டம் கலைகட்டிய கல்யாணம் நல்ல படியாக முடிந்து அவர்களை நல்ல முறையில் வழியனுப்பி வைத்து, இப்போது வீடே கலை இழந்தது போல இருந்தது.., இதற்க்கு தான் வீட்டில் ஒரு பெண்பிள்ளை வேண்டும் எனக்கூறுவர். அவர்கள் இருந்தால் எப்பொழுது வீடு கலையாக இருக்கும்..,

“ அத்தை, கீர்த்திக்கும்,மலருக்கும் ராத்திரி துணைக்கு இருக்க, சுசீலா அக்காவும், ரத்தினம் அக்காவையும் அனுப்பிருங்க, நான் இந்த நேரத்துல எங்கயும் போகக்கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க, பாவம் பிள்ளைக அதுகளுக்கு என்ன தெரியும், பெரியவங்கனு இருந்த்தா நாம கவலைப்பட தேவையில்லை, அதான்…, கீர்த்திக்கு சுசீலா அக்கா துணைக்கு போகட்டும், மலருக்கு ரத்தினம் அக்கா போகட்டும், சரிங்களா அத்தை…”

“ஆமாம் வள்ளி…, நான் மறந்தேன் போயிட்டேன் நான் சுசீலாகிட்ட ராத்திரி நடக்க போற சடங்குக்கு, எல்லா பொருளும் வாங்கி கொடுத்துவிட்றேன், நீ மலருக்கு, வாங்கி கொடுத்துவிடு ரத்தினத்துகிட்ட..,”

“அத்தை, நீங்க கீர்த்திக்கும்,மலருக்கும், நீங்களே வாங்கி கொடுத்துவிடுங்க உங்க கைராசி தான் நல்லா இருக்கும், உங்க கையில ஆரம்பிக்கிற அவங்க வாழ்க்கை, அடுத்த பத்தாவது மாசம் , அவங்களுக்கும் குழந்தை பிறக்கனும் அதான், நீங்களே வாங்கி கொடுத்துவிடுங்க அத்தை”

“சரிம்மா…, நானே வாங்கி கொடுத்துவிடுறேன்”

“பயமா இருக்கு, வள்ளி”

“ஏன், என்னாச்சு… எதை பார்த்து உங்களுக்கு பயம் மாமா”

“தெய்வாவோட அப்பா, சென்னைக்கு வந்திட்டாராம் வள்ளி, அவரு தெய்வாவோட பழைய வீட்டுல போய் விசாரிச்சுருக்காரு, ஆனா எந்த தகவலும் கிடைக்கல…., “

“கிடைக்கலைல, அப்புறம் என்ன விடுங்க மாமா…”

“இல்லை வள்ளி, அவரு யோசிச்சு கடைசியா பொண்ணு நம்ம சொந்த ஊருல தான் இருக்கானு தெரிஞ்சா, என்ன பண்ணறது”

“தெரிஞ்சா தெரியட்டும், வந்தா வரட்டும், அப்படியே உங்க கல்யாணத்துக்கு வந்து ஆசீர்வாதம் செய்யட்டும், இதுக்கு ஏன் இவ்வளோ கவலை மாமா”

“உனக்கு புரியுதா, வள்ளி.. நான் என்ன சொல்ல வரேனு, ஒரு வேளை அவருக்கு பாண்டியனுக்கு, தெய்வாவ கல்யாணம் பண்ணி வச்சது தெரிஞ்சா, இந்த கல்யாணத்தை நிறுத்தமாட்டாரா..”

“அவருக்கு, மட்டும் இல்லை… கார்த்தி, கீர்த்தி என் அண்ணா மாறனுக்கு கூட இன்னும் விசயம் தெரியாது…, ஊருக்காரவங்க நம்ம குடும்பத்து மேல வச்சுருக்குற நம்பிக்கை தான், இன்னும் அவங்களுக்கு தெரியாத காரணம்.. இல்லைனா அவங்க மூனு பேரும் ஊருல கால் எடுத்து வச்சதும், நம்ம ஊரு மக்கள் சொல்லிருப்பாங்க, ஆனா ஏன் சொல்லல, நம்ம குடும்பத்துக்கு அவளோ மரியாதை.. அதான் காரணம்”

“ எவ்வளோ நாள் மூடி மறைச்சாலும், விசயம் தெரியாம்ம போகுமா வள்ளி”

“தெரியவரும் போது நாம பார்த்துக்கலாம் மாமா”

“தெய்வாவோட அப்பா, ஊருக்கு வந்த அவருக்கு புரியிர மாதிரி உங்க கல்யாணத்தை சொல்லலாம், அவருக்கு யார் மூலமா பஞ்சாயத்து விசயம் தெரியவரும்முனா அது பழனிச்சாமி குடும்பத்தால மட்டும் தான் ஆனா, அவரு தான் ஊருலயே இல்லையே, அப்புறம் அந்த திவாகரன், இந்த ஊரு பக்கமே தலைவச்சு படுக்கமாட்டான்.., இன்னேரம் ஜெயில இருப்பான்..”

“ஆனா வள்ளி, ஒவ்வொரு நாளும் நெருங்க, நெருங்க எனக்கு பயமா இருக்கு,”

“பாருடா எங்க பேராசிரியக்கூட பயம் வருது, நீங்களா எப்படி படிச்சு கோல்டு மெடல் வாங்கினேங்களோ மாமா…, அதுவும் நாலு வருசக் காதல் உங்களோடது.., பாவம் தெய்வா..ச்சு…ச்சு..”

“ம்ம்ம்…, நீங்க என்னமா, காதலிச்சேங்க வீட்டுல சொல்லி, கல்யாணமும் பண்ணிட்டேங்க, ஆனா நான் அவகிட்ட சொல்லப்போறப்ப தான், அவளுக்கு பிரச்சனை மேல பிரச்சனை வருது என்ன பண்ண,” அவன் கவலைப்பட.

“வருத்தம் படாதீங்க மாமா.., இன்னும் மூனு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு, வெளிய சுத்தாம போய் மாப்பிள்ளையா லட்சணமா, பொண்ணுக்கு, தாலிகட்டி தினமும் உங்க காதல் கதையை அவகிட்ட சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணுங்க சரியா.., அத்தான் வந்துருவாங்க நான் கிளம்புறேன்.., நாளைக்கு கீர்த்தியும் என் அண்ணாவும் மறுவீட்டுக்கு வந்துட்டு, உங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடி தான் கிளம்புவாங்க, அதுக்கு ஏற்பாடு பண்ணனும் நான் போயிட்டுவரேன் மாமா..”

“சரிம்மா வள்ளி, பார்த்து போ…” வள்ளியை அனுப்பிவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான் தென்னவன்.

”தென்னவன், பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்று, கல்லூரியில் முதல் மாணவனாக திகழ்ந்தான். அவனுக்கு வேலையும் அதே அவன் படித்த கல்லூரியில் கிடைக்க, அங்கேயே வேலை பார்த்துகொண்டான், தென்னவன் இருப்பதால், பாண்டியன் வள்ளியையும், மலரையும் அங்கு படிக்க அனுப்பி வைத்தான், வள்ளிக்கோ பாண்டியனை பிரிய மிகவும் வருத்தம் கொண்டால்., ஆனால் பாண்டியன் சொன்ன வார்த்தைக்காக அவள் அங்கு சென்று படிக்க ஆரம்பித்தால். அப்பொழுதான் அவர்களின் பொறியியல் அறிவு திறனை நிருபிக்க, ஒரு போட்டி வந்தது, அதில் இவர்கள் படிக்கும் கல்லூரிக்கு வந்தது, அதில் கலந்துகொள்ள, தென்னவன், நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுடன் அவனும் அந்த போட்டி நடக்கும் கல்லூரிக்கு, அழைத்து சென்றான். அப்பொழுது தான் தெய்வாவை அங்கு வைத்துப் பார்த்தான், அவளோ, குழுவின் தலைவி என்ற முறையில் அவளும் அதில் பங்குபெற்றாள், எல்லா கல்லூரியிலும் தென்னவன் கல்லூரி தான் முதல் இடத்தைப்பெற்றது, இரண்டாம் இடத்தை வேறு கல்லூரி யும், மூன்றாவது இடமாக தெய்வாவின் கல்லூரி இடம் பெற்றது…, தென்னவன் மூன்று கல்லூரி மாணவர்களுக்கு, கைகொடுத்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துகொண்டான், இறுதியாக தெய்வாவின் கல்லூரியி ஆசிரியரை பார்த்து அவரிடம் பேசி, அவரின் மாணவர்களிடமும், அவர்களின் மூன்றாவது பரிசை பெற்றாலும், அவர்களுக்கு இன்னும் அதிகமாய் மோட்டிவேட் செய்தான்.., ஆனால் அதில் தெய்வா இல்லை. தனியாக சென்று, மூன்றவது பரிசு கிடைத்தாலும் அவளுக்கு வருத்தமாக தான் இருந்தது, அவளின் வருத்தை பார்த்தவன், முதலில் அவளின் கண்ணீரை கண்டது தான், ”அவளுக்கு ஆறுதலாய் நான் இருக்க வேண்டுமே” அவன் யோசித்தை நினைத்து அவனுக்கே, ஒன்றும் புரியவில்லை. அதற்க்கு பின் அவளை பார்க்கவில்லை.”

“இப்படியாக, நான்கு மாதம் கழிய அவனுக்கு தெய்வாவின் நினைவும் கொஞ்சமாய் வந்தாலும் அடுத்து இருக்கும் அவனது வேலை பழுவினால் மறந்துவிடுவான் இப்படியே இரண்டு வருடம் செல்ல, தெய்வவை மறுபடியும் சந்திக்கும் நாள் வந்தது.”

“வள்ளி,மலர் இவர்களின் ப்ராஜெக்ட்டுக்காக, அவர்களுக்கு தேவையான புத்தகம், தேடிகொண்டிருந்த போது தான், அவளின் குரல் தெளிவாக கேட்டது.”

“இல்லை டி, முக்கியமான புத்தகத்தை தேடிட்டு இருக்கேன்.”

“………….”

“ நான் தான் அந்த காலேஜ்விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சே, வேற காலேஜ்ல முதல் வருசத்துல இருந்து படிக்குறேன்…, ஏன்னு உனக்கு தெரியாதா”

“ அவளின் தோழி என்ன கூறினாளோ”

“இல்லைடி படிப்பு தான் முக்கியம், திருநெல்வேலில இருந்து போன மாசம் தான் வந்தேன், அம்மா தீடீருனு வந்து சென்னைக்கு போகனும் சொன்னாங்க காலேஜ்ல பாதியில படிப்பு நிறுத்திட்டு சென்னை போக காரணம் கேட்டாங்க அதுக்கு என் அம்மா சொன்ன பதில் இருக்கே, நீயும் பக்கத்துல தான இருந்த அப்பறம் என்ன டி..,”

“இங்க வந்து காலேஜ்ல சேர்ந்தா, பாதியில படிப்பவிட என்ன காரணம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை, நீங்க இங்க முதல் வருசத்துல இருந்து படிக்கிறதா இருந்தா, நான் காலேஜ்ல படிக்க சீட் கொடுக்கிறேன் சொன்னாங்க அதுவே போதும்னு நான் சரி சொல்லிட்டேன் டீ..”

“சரி நான் வேற புக் ஷாப்ல, தேடனும்.., அம்மா காத்திருப்பாங்க வைக்குறேன் டீ”

“தெய்வாவின் முழுப்பேச்சையும் கேட்ட பின் தான், தென்னவனுக்கு என்னவோ புரிவது போல இருந்தது., ஆனால் அவனால் யூகிக்க முடியவில்லை, அன்று முதல் முறை அந்த போட்டியின் போது பார்த்தது, அன்றுவிட இன்று உடல் மெலிந்தும், அவளின் அழகும் குறைந்தது போல இருந்தது.”

“தெய்வாவை, பார்த்துவிட்டு வந்தவன் அமைதியாகவே இருந்தான், அடுத்து தெய்வாவை எப்பொழுது பார்ப்போம் என்று அவனுக்கு ஆவலாய் இருந்தது. அதுவும் விரைவில் அமைந்தது.”

“மலரும், வள்ளியும், கல்லூரியின் இறுதி வருடம் படிப்பு முடிய இன்னும் ஒரு மாதம் இருந்த நிலையில், அவர்களும் வெளியே சென்றான்., அப்பொழுது தான் ஷாப்பிங்க் மாலில் தெய்வாவை பார்த்தான். ஒரு உடையை அணிந்துகொண்டு அவள் யாரிடமோ உடையை சுற்றி சுற்றி காட்டிகொண்டிருந்தாள், ஆனால் அவள் எதிர் நின்றவர் இவனுக்கு தெரியவில்லை.”

“தென்னவன் பார்வையை பார்த்த வள்ளி, அவனை பின் தொடர்ந்து அவளும் பார்த்து அதிர்ந்து நின்றாள். ஏனெனில் தெய்வாவின் சாயல், திருமூர்த்தியின் சாயல் போன்றே இருந்தது…, அதன் பின் தான், தென்னவனிடம் எல்லாம் விசயத்தை, கேட்டு தெரிந்துகொண்டால்..,, வள்ளி, தென்னவனின் காதலுக்கு உதவினாலும் ஒரு குடும்பம் சேர்வதற்க்கான சூழ்நிலையை தான் உருவாக வேண்டும் என்று தான்.., பாண்டியனிடம் நேரில் தெய்வாவை பற்றி கூறாமல் திருமூர்த்தியின் மூலம், தெய்வாவை பார்த்தது, அவளின் அம்மாவுடம் அவள் இருப்பதும், தாமரையை எப்படியாவது குடும்பத்துடன் இணைக்க வேண்டும் என்று தான், திருமூர்த்தி, பாண்டியனின் துணையை நாடியதும், அதற்க்கு பின் நடந்த அத்தனை சம்பவத்திற்க்கும் முக்கிய காரணம் வள்ளி, திருமூர்த்தி, தென்னவன்..”

“தென்னவன், தெய்வாவின் நிழல் போல் அவள் பின்னே சுற்றினான், அவளை திவாகரனின், அடியாள் ஒருவன் பின் தொடர்வதை கண்டவன், அவனை அடித்து நொருக்கிவிட்டான், தெய்வாவை கடத்தும் முதல் நாள் அன்று”

“அனைத்து நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.. தென்னவன்.., அவனை பார்த்த சிவநாதன்”

“என்ன தென்னவா, ஏன் இவ்ளோ நேரம்… வயலுக்கு தான போன”

“ஆமாம்ப்பா, அப்படியே தோப்பையும் பார்த்துட்டு, தண்ணீ கட்டிட்டு வந்தேன், நாளையில இருந்து அதுக்கான ஆளையும் போட்டுவந்தேன்”

“சரிப்பா, கல்யாணத்துக்கும்  இன்னும், மூனு நாள் இருக்கு நாளையில இருந்து வெளிய போகாத, மலரும் மாப்பிள்ளையும் நாளைக்கு வந்துருவாங்க…, அவங்களுக்கான ஏற்பாடு பார்க்கனும் சரியா.., “

“சரிங்கப்பா…, நான் பார்த்துகிறேன்..”

“தென்னவனின் காதலுக்கு கிடைத்த பரிசாய், தெய்வா அவனுக்கு முழுமனதுடன், அவன் கட்டிய தாலியை தன் கழுத்தில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல் வாங்கிக்கொண்டால், இப்போது தெய்வ்ப்ரியா தென்னவனின் காதல் மனைவியாகிவிட்டாள்.,”

“அப்பொழுது, திடிரென்று, “என் பொண்ணுக்கு, என்னை கேக்காம யார் கல்யாணம் பண்ணி வைக்க நீங்க யாரு” திருமூர்த்தியை பார்த்தும், முத்தையாவை பார்த்தும் கேள்வியை கேட்டார், தெய்வாவின் தந்தை.

  துருவஙகள் தொடரும்…………..

Advertisement