Advertisement

                               துருவங்கள் 16

 

“சரிம்மா வள்ளி பார்த்து இரும்மா.., நாங்க போயிட்டு வர எப்படியும் ராத்திரி ஆகிடும் நீயும், தம்பியும் பார்த்து இருங்க… உனக்கும், தம்பிக்கும் நாங்க புடவை எடுத்து கார்த்தியோட போன்ல இருந்து வாட்ஸ்ப் பண்ணுறோம், அதுல உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை சொல்லு சரியா.., வேலை எல்லாம் நீயே செய்யாதா வாணிக்கிட்ட சொல்லு, அப்புறம் வாந்தி அதிகமா வந்தா மட்டும் மாத்திரை எடுத்துக்கோ.. சரியாம்மா வள்ளி, தம்பி இன்னும் கொஞ்சம் நேரத்துல வயல இருந்து வந்திரும். சூதானமா இரும்மா.., வேணா நான் உன்கூட துணைக்கு இருக்கவா.., அவங்க மட்டும் போய் துணி எடுத்துட்டு வரட்டும்”

“அத்தை…, நீங்க தான் முக்கியமா அங்க இருக்கனும், மூனு பொண்ணுக்கும், மூனு மாப்பிள்ளைகளுக்கும் தான கல்யாண துணி எடுக்குறோம்.., அதுக்கு பெரியவங்க நீங்க எல்லாம் இருந்தா தானே நல்லா இருக்கும், எனக்கு துணைக்கு தான் அத்தான் இருக்காங்களே அப்புறம் என்ன… பத்திரமா போயிட்டு வாங்க…, கீர்த்தி, மலர்,தெய்வா, மூனு பேருக்கும் பிடிச்சமாதிரி கல்யாண சேலையும், நிச்சிய சேலையும் எடுங்க, தாலிகட்டு சேலை நம்ம ஊரு வழக்கப்படி மஞ்சள்ல கூரைச்சேலை எடுத்துருங்க.., சரியா.., நீங்க எல்லாம் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..,”

“சரிம்மா…, போயிட்டுவரோம்..,”

“சரிங்க அத்தை…,”

“தென்னவன் மாமா…, இங்க வாங்களேன் கொஞ்சம்” வள்ளி அழைக்க.

“சொல்லுங்க அண்ணி…”

“தெய்வாவ பார்த்துக்கோங்க…., அவளை தனியா எங்கயும் அனுப்பாதீங்க மாமா.., சரியா…”

“சரிங்க அண்ணி.., நான் பத்திரமா பார்த்துகிறேன்..”

“சரிங்க மாமா பார்த்து போயிட்டு வாங்க”

“அம்மா.., கல்யாணச்சேலையும், நிச்சிய சேலையும் பொண்ணையும், மாப்பிள்ளையும் செலக்ட் பண்ணட்டும்.., நீங்க தாலிகட்டு சேலையும், மாப்பிள்ளைக்களுக்கான துணியும், மற்ற சொந்தக்காரங்களுக்கு எடுக்குற துணியும் நீங்க எடுங்க…, அத்தைகிட்ட சொல்லிருக்கேன்.., அதான் உங்களுக்கு சொன்னேன்.. சரியா..”

“சரி வள்ளி..”

“அண்ணி, நாங்களும் உங்ககூடவே இருக்கோமே, நீங்க இல்லாம கல்யாண துணி எடுக்க நல்லாவே இருக்காது..,” கீர்த்தி புலம்ப..

“ஆமாம் மதினி.., அத்தை, மாமா, எல்லோருமே போறாங்களே அவங்களே  எங்களுக்கு பார்த்து எடுத்துட்டு வரட்டும்.. நாங்க உங்ககூடவே இருக்கோம்..” மலர் சொல்ல

“ஆமாம் அக்கா..,” தெய்வாவும் அவர்களுடன் சேர்ந்து ஆமாம் போட…, அந்த பக்கம் இருந்து மூன்று பேரின் காதில் புகை வந்தது…, அது யார் என சொல்லவேண்டுமா என்ன.., பிரகாஷ்,மாறன்,தென்னவன்.. இவர்கள் மூவரும், பெண்கள் மூவரையும் பார்த்து முறைத்து கொண்டிருக்க, அதை பார்த்த வள்ளி., நம்முட்டு சிரிப்புடன், பெண்களிடம் “உங்க கல்யாணத்துக்கு நீங்க தான் துணி செலக்ட் பண்ணனும், என் கல்யாணத்துக்கு நானும், அத்தானும் தான் சேர்ந்து துணி எடுத்தோம், அதே மாதிரி தான் உங்களுக்கும்.., போங்க சமர்த்தா போய் கார்ல உக்காருங்க..,”

“சரிம்மா வள்ளி கிளம்புறோம், ஏய் பொண்ணுகளா வாங்க வந்து வண்டியில ஏறுங்க.., மீனாட்டிசியும்,செல்வியும் சத்தம் போட.., வள்ளிக்கு டாட்டா காட்டிக்கொண்டே மதுரைக்கு கல்யாணத்துணி எடுக்க…,  மூன்று மாப்பிள்ளை, மூன்று பெண்களுடன், மீனாட்சி, முத்தையா,செல்வி, முருகவேலும், புறப்பட்டனர். வள்ளிக்கு இது இரண்டாம் மாதம் தொடக்கம் என்பதால் அவள் போக்குவரத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அலைச்சலால் குழந்தைக்கு ஆபத்தும் இருக்கும் என்பதால்.., அவளையும், பாண்டியனையும் தவிர்த்து மற்றவர்கள் கிளம்பினர்.”

“வாணி, மதிய சமையல் முடிஞ்சதா…”

“ம்ம்… முடிஞ்சது தாயி.., இந்தாங்க உங்களுக்கு சக்கரை குறைச்சு போட்டு ஜூஸ் கொடுக்க சொன்னாங்க, பெரியம்மா…, சாப்பிட்டு நீங்க தூங்குவேங்களாம் தாயி, அம்மா சொல்லச்சொன்னாங்க தாயி.”

“சரி… எல்லாமே நான் பார்த்துகிறேன்.., நீங்க கிளம்புங்க வாணி இன்னைக்கு உங்களுக்கு விடுமுறை, நாளைக்கு காலையில வேலைக்கு வந்தா போதும்” வள்ளி சொல்ல.

“ஏன் தாயி…, பெரியம்மா உங்க பக்கத்துலயே இருக்க சொன்னாங்க, நீங்க என்னான, என்னை கிளம்பச்சொல்லுறேங்க.”

“வாணி, இன்னிக்கு தான் நானும், என் அத்தானும் தனியா இருக்க போறோம், ரொம்ப நாள் கழிச்சு எங்களுக்கு இந்த தனிமை கிடைச்சுயிருக்கு, வாணி சொன்னா புரிஞ்சுக்கோ” வள்ளி, அவளுக்கு புரியும்படி சொன்னாள்.

“சரிங்க தாயி.., இதோ கிளம்புறேன், ஆனா எந்த வேலையும் செய்யக்கூடாது, சரிங்களா தாயி…,”

“சரி வாணி…” வள்ளி, வாணியை அனுப்பிவிட்டு, அவர்களின் அறைக்கு சென்றாள்.., அங்கு கொஞ்சமாய், டேபிள் சேரை மாற்றி வைத்து, அதில் ஒரு சில இடத்தில் கேண்டில் ஏற்றி வைத்தாள். பின் அவர்கள் இருவரும் எடுத்துகொண்ட போட்டோ, கல்யாணத்துக்கு முன், காதலர்களாக இருந்த போது எடுத்த போட்டோவை ஒவ்வொன்றையும் அந்த அறையில் மாட்டிவைத்தாள், கொஞ்சம் குழந்தையின் வால்பேப்பர்களும் அதில் இடம் பெற்றது.., அவர்கள் இருவருக்கும் பிடித்தமான பாடல்கள், மீயுசிக் சிஸ்டத்தில் போட்டுவிட்டு சரியாக, பாண்டியன் அறையில் கால் எடுத்து வைக்கும் போது அந்த பாடல் ஒலிப்பது போல் செட் செய்து வைத்தாள். எல்லாத்தையும் ரெடி செய்துவிட்டு அவள் குளித்துவிட்டு, பாண்டியன் அவளுக்கு எடுத்துகொடுத்த, டிசைனர் சேலையை அவன் நினைவுடனே கட்டினாள், தலையை உலர்த்திகொண்டு இருக்கும் போதே பாண்டியனின் பைக் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது…, அவன் வருவதற்க்குள், அலாங்காரம் செய்துகொண்டு அவனுக்காக அறையில் காத்திருந்தாள்.

“என்ன, வீட்டுல யாரையும் காணாம்.., எங்க போயிட்டாங்க, அவன் தேடிகொண்டே வந்தவன், மாடிப்படியில் கால் எடுத்து வைக்கும் போது ஒரு துண்டு தாளில் குறிப்பு எழுதி இருந்தது.. “உனக்காக காத்திருக்குறேன்” என்று.. “கண்டிப்பா வள்ளியம்மா தான்” அவன் சரியாக நினைத்து, அவர்களின் அறைக்கு அருகில் செல்லும் போது, இன்னொரு குறிப்பு, இருந்தது.. அதில் “காத்திருக்கிறேன் காதலியாக” அதை படித்தவன், சிரிப்புடன்.., “ நானும் தான்” வேகமாக, அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.

“அங்கு, சுற்றிலும் சிறி வெளிச்சத்துடன் கூடிய மின்விளக்கும், அதனுடன் மெழுகுவர்த்தியும் எரிந்துகொண்டிருந்தது., அவன் அறைக்குள் நுழந்தவுடன் மெல்லிய இசையில், மீயுசிக் சிஸ்டத்தில் இருந்து பாடல் ஒலிப்பரப்பானது. சுவர் முழுவது, அவர்களின் போட்டோவை பார்த்ததும் அவனுக்கு காதலித்த நினைவுகள் தான் வந்தது., அதை பார்த்துகொண்டிருக்கும் போதே கொலுசின் ஒலி அவனுக்கு கேட்க ஆரம்பித்தது…”

“பின்னிருந்து அவனை கட்டி அணைத்தாள் வள்ளி. அந்த சமயத்தில் ஒரு பாடல், ஒலித்தது அது இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல்.

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி
நானில்லையே உயிர் நீயே

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

இந்த மனம்தான் என் மன்னவனும்
வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா

சுமையானது ஒரு சுகமானது
சுவை நீ தான்”

“வள்ளியம்மா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…, இந்த மாதிரி நான் உங்களுக்கு செய்யனும், உங்களை அப்படியே என் கையில அணைச்சு தூக்கிட்டு வரனும்னு நினைச்சேன், இப்போ தலைகீழா மாறிடுச்சு, ஆனா இதுகூட நல்லா தான் இருக்குங்க வள்ளியம்மா.” அவளை பார்க்காமலேயே பேசினான்.

“ சாப்பிட்டேங்களா அத்தான்…, வாங்க..”அவனை, அழைத்து சென்று அவள் செட் செய்திருந்த டேபிள் சேரில் அமர்த்திவிட்டு, அவளும் அவனுக்கு அருகில் அமர்ந்தாள். ஒவ்வொரு பதார்த்ததையும் அவனுக்கு பார்த்து, பார்த்து வைத்தாள். பாண்டியனோ அவளை காதலா பார்த்துகொண்டே சாப்பிட்டும், அவளுக்கு ஊட்டியும் விட்டான்”

“வீட்டுல யாரும் இல்லைங்க அத்தான்” மெல்லிய குரலில் வள்ளி சொல்ல,

“வரும்போதே பார்த்தேங்க வள்ளியம்மா, எல்லோரும் எங்க போனாங்க வள்ளியம்மா”

“கல்யாணத்துக்கு துணி எடுக்க, போயிருக்காங்க அத்தான்.., எல்லோருமே” வள்ளி எல்லோரில் அழுத்தி சொல்ல, அவனுக்கு புரியாமல் இருக்குமா என்ன..

“ அப்போ நாமா ஆரம்பிக்கலாம வள்ளியம்மா…, தடை ஏதும் இல்லையே…,” பாண்டியன் கேட்க.

“ஆனா…. அத்தான்” அவள் இழுக்க…

“வாங்க வள்ளியம்மா, மெதுவா ஆரம்பிக்கலாம்” அவளை தூக்கிகொண்டு அவர்களின் அறையின் நடுமையத்தில் இரக்கிவிட்டான்.., பாடல் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது.

ஓரு வீட்டில் நீயும் நானும்

ஒன்றாக வாழும் நேரம்

எதிர் பார்த்தே இருந்தேன் பலகாலம்

இதுநாள் வரையில்

கனவெல்லாம் இனிதாய் நினைவாகும்

இரவின் மடியில்

 

உதடுகளின் அசைவுகள் என்றாய்

பேச்சேனவே அறிந்திருந்தேன்

ஒலிகளில்ல இனி ஓரு வேலை

நீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்

 

இதுவே குறைவு இனிமேல் இருக்கு

இனிதாய் தொடரும் முதல்நாள் கிறுக்கு

உடலின் தசைகள் உயிரின் கசைகள்

மறந்தேன் பல நாட்கள்

ஓரு வீட்டில் நீயும் நானும்

ஒன்றாக தூங்கும் நேரம்

எதிர் பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்

முதல்நாள் வரையில்

இனி எல்லாம் முழுதாய் அரங்கேறும்

                  விரும்பும் வகையில்

பாடலின் வரிகளுக்கேற்ப பண்டியனும்,வள்ளியும் மெதுவாக நடனம் ஆடினர், அந்த பாடல் இடையில் முடிய, அதற்கடுத்த பாடல்,

காலை அணைப்பின் வாசமும்
காதில் கிருங்கும் சுவாசமும்
சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே.

காதில் உதைக்கும் பாதமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாளும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே.

ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்.

கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்.

சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா.

செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா.

லாலி லாலி நானும் தூளி தூளி.

மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் ஆசையுதே.

துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே.

லாலி லாலி நீ என் தூளி தூளி.

உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா.

தலைமுதல் கால்வரை
பணிவிடை பார்க்கவா.

லாலி லாலி நீ என் தூளி தூளி
லாலி லாலி நீ என் தூளி தூளி.”

வள்ளியின் கையை பிடித்துகொண்டு, என் காதல் மொத்தமும் அவளுக்கே சொந்தம். என்னும் ரீதியில் அவளுடன், காதலாக நடனம் ஆடினான். ஓர் நிலையில் வள்ளியால் அவனுக்கு ஈடாக ஆட முடியவில்லை.., அதை பார்த்த பாண்டியன் அவள் எதிர்பாரத வேளையில் கையில் தூக்கிகொண்டு அவர்களின் அறையின் மெத்தையில் இரக்கிவிட்டான்.

“வள்ளியின் மடியில் படுத்துகொண்டே…, கடந்து வந்த காதலின் பாதைகளை பேசிகொண்டும், வள்ளியை சீண்டிகொண்டும் இருந்தான். இந்த காதல் ஜோடி, காதலில் மூழ்க. பயணத்தில் இருக்கும் மூன்று ஜோடிகள் என்ன செய்கின்றனர் என  பார்ப்போம்.”

”முருகவேல் டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்க, பக்கத்தில், முத்தையா இருக்க பின் இருக்கையில் மீனாட்சி,செல்வி, அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு காரில், சிரியவர்கள் மற்றொரு காரில் சென்றனர்.. “அதில், டிரைவர் சீட்டில் தென்னவன் இருக்க, பக்கதில் தெய்வா, நடு இருக்கையில் மாறன், கீர்த்தியும், கடைசி இருக்கையில், பிரகாஷ், மலர் அமர்ந்திருந்தனர்”

“தென்னவனுக்கு, கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், நான் பேசியதற்க்கு இன்னும் பதில் இல்லாமல் போனது அவனுக்கு “இவள் என்ன நினைக்கிறாள்” எனப்புரியாமல் இருந்தான்…”

“ மாறனோ, இத்தனை வருடத்தில் கீர்த்தியை, மாமான் மகளாகவே பார்த்துவிட்டு, இப்பொழுதோ தனக்கு சொந்தமாய் வரபோகும் மனைவியாக இன்று தான் பார்க்கிறான் மாறன், அதனால் அவளிடம், காதல் மொழி குறையாகவும், வாழ்க்கையின் மொழி அதிகமாகவும் பேசிகொண்டே வந்தான்.”

“பிரகாஷூக்கு சொல்லவா வேண்டும், மலரின் கையை, தன் கையில் வைத்துகொண்டே…, கல்யாண வானில் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தனர் அந்த ஜோடி, மலரோ.. காதல் கைகூடிய சந்தோஷத்தில் அவனுடன் சிரித்துப்பேசிகொண்டு வந்தாள்”

”பொண்ணுங்களா…., நீங்களும், மாப்பிள்ளைகளும் சேர்ந்து, உங்களுக்கு பிடிச்ச கல்யாண துணி எடுங்க, நாங்க உங்களுக்கு தாலிக்கட்டு சேலையும்,பட்டு சட்டை, பட்டு வேஷ்டியும் எடுக்குறோம், சரியா…,”

“இரண்டு ஜோடிகளும் சந்தோஷத்தில் சரியென்று சொல்லிவிட்டு, அவரவர் ஜோடியை அழைத்துகொண்டு பட்டு சேலை பக்கம் சென்றனர். ஆனால், ஒரு தென்னவன்,வள்ளி ஜோடி மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல், அமைதியாக நின்றிருந்தனர். அதை பார்த்த மீனாட்சி, தெய்வாவின் அருகில் சென்று”

“என்ன, தெய்வா இங்கயே நின்றிருக்க…. நீயும் உனக்கான ட்ரெஸ் எடுக்க போம்மா, தென்னவா, என் மருமகளை கூட்டிட்டு போப்பா.., அங்க பாரு இரண்டு ஜோடியும் போட்டி போட்டுகிட்டு ட்ரெஸ் செலக்ட் பண்ணுறாங்கனு நீங்களும் உங்களுக்கு பிடிச்ச ட்ரெஸ் செலக்ட் பண்ணுங்க…, போங்க..” இருவரையும் அனுப்பி வைத்தார்.

“சொல்லுங்க சார் என்ன விலையில பட்டு சேலை பார்க்குறேங்க…” கடை ஊழியர் கேட்க.

“கல்யாணப்பட்டு எடுத்துப்போடுங்க, அது மூப்பதாயிரத்துக்கு மேல இருக்கனும் சார்” தென்னவன் சொன்னான்.

“சரிங்க சார்….,”

“தாழம்பூ குங்குமம் கலரில் பட்டுச்சேலைகள் நிறைந்து இருந்தது…, அதில் அவளுக்கு எது பிடிக்கும் என்று ஒவ்வொன்றாக பார்த்து,பார்த்து தேடினான். அவளோ அவன் சேலை எடுப்பதையே பார்த்துகொண்டிருந்தாள். நாங்கு, ஐந்து சேலைகளுக்கு நடுவே, தாழம்பூ குங்குமம் கலரில் மயில் டிசைனுடன், ஒரு பெண், கையில் அன்னத்தை வைத்திருப்பது போல் இருந்த ஒரு பட்டுச்சேலையை தேர்ந்தெடுத்தான் தென்னவன், அதை அவளிடம் காட்டினான்….”

“தேவி, உனக்கு இந்த சேலை பிடிச்சு இருக்கா,”

“ம்ம்ம்… பிடிச்சிருக்கு” அந்த சேலையை பார்த்துகொண்டே கூறினாள்.

“சார் பிரிச்சி காட்டாவா சேலையை…” கடை ஊழியர் கேட்க,

“சரி.. பிரிச்சுக்காட்டுங்க..”

“சார்…,  பார்டர்ல தங்க கம்பி போட்டு இதுல நெஞ்சுருக்காங்க…, கீழ குட்டி, குட்டி மயில் இருக்குல அதுல எல்லாம் வெள்ளிக்கம்பில நெஞ்சுருக்காங்க, அப்புறம் சார்…, உங்க ரெண்டு பேருக்கும் தானே கல்யாணம்.”

“ஆமாம்.. ஏன்”

“உங்க ரெண்டு பேர் சொன்னா, முந்தானை, பார்டர்ல உங்க ரெண்டு பேரோட பேர் போட்டு நாங்க கொடுக்குறோம், சார்.., இது இப்போ உள்ள ட்ரெண்டிங் சார்.”

“ம்ம்ம்…, இந்தாங்க இது தான் எங்க பேர்…,” தென்னவன் ஒரு தாளில் அவர்கள் இருவரின் பெயரையும் எழுதிக்கொடுத்தான்.

“மாறனும்,கீர்த்தியும், அவர்களுக்கு பிடித்த பட்டுச்சேலையை எடுத்தனர், பின் மாறன் கீர்த்திக்கு நிச்சிய சேலையும், அவளுக்கு முதல் முதலாய் பரிசளிப்பதற்க்கு டிசைனர் சேலையும் எடுத்தான்.”

“பிரகாஷூக்கு, எந்த சேலை எடுத்தாள் நன்றாக இருக்கும் என கடை ஊழியரை போட்டு, ஒருவழிப்படுத்திக்கொண்டிருந்தான்…, மலரோ, நிச்சிய சேலையை அவளே தேர்ந்தெடுத்து அதை பிரகாஷிட காட்ட வந்தாள்.., ஆனால் பிரகாஷ் பட்டுத்தும் பாட்டிற்க்கு அந்த ஊழியர் மிகவும் நொந்து போய்விட்டார். இறுதியில், அவளே சேலையை தேர்வு செய்து அந்த ஊழியரை காப்பாற்றினால்.”

”இப்படியாக ஒவ்வொருவரின் ஷாப்பிங்கும் முடிந்தது…,கடைசியில் வள்ளிக்கும், பாண்டியனுக்கும் எப்படி  துணி எடுத்தாள். நன்றாக இருக்கும் என ஒவ்வொருவரும் யோசிக்க, முடிவில் மீனாட்சி தான், அவர்களுக்கு பிடித்த துணி எடுத்துகொண்டு, அந்த ஜவுளிக்கடையை விட்டு வெளியேறினர்.”

“ஏங்க, இந்த போட்டோவுல இருக்குறவங்களை பார்த்துருக்கீங்களா…, இப்போ அவுங்க எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா..” ஒரு புகைபடத்தை காட்டி ஒருவரிடம், ஒரு பெரியவர் கேட்க.

“இவங்க, தாமரை அக்காவாச்சே…., இந்த அக்கா இறந்து போய் தான் ஒரு மாசம் ஆக போகுதே…, இவங்களை ஏன் கேக்குறேங்க, அவங்களுக்கு நீங்க என்ன வேணும்,”

“ என்ன…, இறந்துட்டாங்களா…, அப்போ என் பொண்ணு எங்க போனா.., அய்யோ என் குடும்பத்தை தொலைச்சுட்டு இப்போ நிக்குறேனே…, என்ன பண்ணுவேன்…,” அவர் புலம்ப,

“அந்த பொண்ண.. இரண்டு பசங்க அவங்களோடவே அழைச்சுட்டு போனாங்க, ஆனா எங்க அழைச்சுட்டு போனாங்கனு தெரியலைங்க…, இவ்ளோ அழுகிறேங்க ஆனா அவங்களுக்கு, நீங்க ரொம்ப சொந்தமாங்க…,” அந்த வீட்டின் ஒனர் பெண்மணி கேட்க.

“இவ என் மனைவிம்மா…, அவகூட இருந்தது என் ஒரே மக, அவங்களை இப்படி தவிக்கவிட்டுட்டு நான் இத்தனை வருசம் பிரிஞ்சு இருந்ததுக்கு, அந்த கடவுள் கொடுத்த தண்டனை தான் எனக்கு,” அவர் தலையில் அடித்துகொண்டே அழுக ஆரம்பித்தார்.

“ஐயா…, உங்க பொண்ணு கண்டிப்பா நல்ல இடத்துல தான் இருப்பாங்க.., நீங்க உங்க சொந்த ஊருல இருக்குறவங்களை கேட்டுப்பாருங்களேன்…, ஒரு வேளை அங்க உங்க பொண்ணு இருந்தா…,” அந்த பெண்மணி அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி,அவருக்கு அறிகுறியும் காட்டினார்.

“என் சொந்த ஊரைவிட்டு வந்து தான் பலவருசம் ஆச்சே…, மறுபடியும் நான் போனா என்னை, அந்த ஊருகாரவங்க ஏத்துக்கனும், என் அண்ணா என்னை மன்னிச்சு ஏத்துக்கனும், இதை எப்படி என்னால செய்யமுடியும்.” மனதுக்குள் பேசிகொண்டார்.

“ஐயா…, ஐயா.. அந்த பெண்மணி அழைக்க…, அவரோ யோசனையில் இருந்து விடுப்பட்டார்…, “சொல்லுங்கம்மா”

“ஒரு முறை, உங்க ஊருப்பக்கம் போய் தேடிப்பாருங்க ஐயா…, உங்க பொண்ணு கிடைப்பா..,” அவர் சொல்லிவிட்டு சென்றார்.

“அந்த பெரியவரோ ஒரு முடிவுடன், சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். ஆனால் அவர் சென்ற நேரம்…

“அங்கு இரு ஜோடிகளின் கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது, அடுத்த வாரம் நடக்கவுள்ள தென்னவன், தெய்வாவின் கல்யாணத்திற்க்கு, அடுதடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தனர்..

”ஆனால் தெய்வாவின் மனதில் ஒரு சஞ்சலம் நிலவிகொண்டே இருந்தது. அது என்னவென்று தான் தெரியவில்லை..,”

 

                              துருவங்கள் தொடரும்………

 

Advertisement