Advertisement

             துருவங்கள் 15

 

”எல்லாம் நார்மலா இருக்கு, மிசஸ்.பாண்டியன்…, குழந்தை ஆரோக்கியமா இருக்கும்மா வள்ளி. நான் எழுதி தர மாத்திரைய மட்டும் வேளா வேளைக்கு சாப்பிட்டு எடுத்துக்கோங்க, அப்புறம் மார்னிங் சிக்னஸ் இருக்கா தான் செய்யும், அதுனால் வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை அடுத்து, ஜூஸ் குடிங்க…, அடுத்த மாசம் இதே தேதிக்கும் வாங்க ஸ்கேன் எடுத்துக்கலாம்…, மிஸ்டர். பாண்டியன்.., அவங்களை பத்திரமா பார்த்துக்கோங்க.., அப்புறம், ஒரு ரெண்டு மாசத்துக்கு உங்களுக்குள்ள எந்த தொடர்பு வேணாம்… சரியா…,” மருத்துவர், வள்ளியை பார்த்து சொன்னார்..

‘வள்ளியின் முதல் மாத செக்கபிற்கு அழைத்து வந்திருந்தான் பாண்டியன். அவள் தினமும் எடுக்கும் வாந்தியல் பாண்டியன் பயந்துவிட்டான்…,அதிலும் வள்ளி வழக்கத்தை விட தாமதமாக எழும் போதும்,அவளின் கையால் காஃபி கொடுப்பதும், அவனுக்கு சாப்பாடு வைப்பதும், அவனின் உடையை எடுத்து கொடுப்பதும்,  என அனைத்தும் தவறியது…, இதனால்,வீட்டில் உள்ளவர்கள் பதிக்கப்பட்டார்களோ இல்லையோ, பாண்டியன் மிகவும் பாதிக்கப்பட்டான்.., வள்ளியின் இந்த சோர்வு அவனை மிகவும் பாதித்தது.., இரவு நேரம் அவர்களுக்கான நேரம், அவர்களின் அன்றைய நாளை இருவரும் பகிர்ந்துகொண்டு பேசுவதும், இடையில் வள்ளி, பாண்டியனை தூங்க வைப்பதும், இவை எல்லாம் இருந்தது, ஆனால் வள்ளியின் மசக்கையால் இரவு,  அவன் பேசிகொண்டிருக்கும், போதே அயர்ந்து உறங்கிவிடுவாள், இதனால் பாண்டியன் தவித்து போனான் இதை மனதில் வைத்துகொண்டு பாண்டியன், முத்தையாவிடம், பரிசம் போடும் தேதியை தள்ளி வைக்கலாம் என அவரிடம் சொல்ல, அவரோ அவனின் மனைவியின் மீது அக்கரையில் சந்தோஷம் கொண்டாலும், பரிசம் போடும் நாள் இன்னும் இரண்டு நாளே உள்ளதால்…அவர் அவனுக்கு புரியவைத்தார்…, அதற்க்கு பின் தான் வள்ளியை மருத்துவரிடம் அழைத்து வந்தான்..,”

“காரில், வள்ளி பாண்டியனுடன், பேசிகொண்டே வர அவனோ… ம்ம்ம்… சொல்லிகொண்டே வந்தான்.., வள்ளி, அவனது ”ம்ம்ம்” சொல்லுவது வைத்தே அவனை புரிந்துகொண்டால், பாண்டியன் வேறு சிந்தனையில் உள்ளான் என்பதை, அதையும் அவனிடம் நேரே கேட்டால்… அதற்க்கு அவன் பதிலோ குழந்தை தனமாக இருந்தது…”

“இப்போ எதுக்கு அத்தான் அமைதியா வரேங்க…”

“இல்லைங்க வள்ளியம்மா, நான் பேசிட்டே தான் வரேன்..”

“ஆமா, நீங்க சொல்லுற.. “ம்ம்ம்” தான் உங்கள் ஊருல பேசுறதா.. இப்போ என்னனு சொல்லப்போறீங்களா இல்லையா அத்தான்”

“அது வள்ளியாம்மா…, இப்போ எல்லாம் நீங்க என்னை கண்டுக்கவே இல்லை, இரவுல நாமா எவ்வளோ நேரம் பேசிட்டு, என்னை உங்க மடியில படுக்க வச்சு தூங்க வைப்பேங்க ஆனா, இப்போ நான் பேசிட்டு இருக்கும் போதே தூங்கிடுறேங்க, அது மட்டுமா…, காலையில் கொடுக்கும் காஃபி யில் இருந்து அவனுக்கு செய்யும் ஒவ்வொன்றையும் பள்ளி குழந்தை ஒப்புவித்தான் வள்ளியிடம்…., “ இதெல்லாம் கூட தாங்கிருவேன் வள்ளியம்மா, ஆனா அந்த டாக்டர்.., உங்ககூட தொடர்புலேயே இருக்ககூடாதுனு சொல்லுறாங்க அதை தான் என்னால் தாங்க முடியலை வள்ளியம்மா.., நீங்க, என்கூட இருக்க போய் தான், எனக்கு சந்தோஷமா இருக்கு, ஏற்கனவே.. உங்களைவிட்டு என் படிப்புக்காக, பிரிஞ்சு,வேலைக்காக பிரிஞ்சு, தாமரை அத்தைக்காக பிரிஞ்சு இப்போ தான் உங்ககூட இருக்கேனு சந்தோஷமா இருக்கேன் வள்ளியம்மா. ஆனா அந்த டாக்டர் அப்படி சொல்லுறாங்க அதான்…,” அவனின் முழு ஏக்கத்தையும் சொல்லிமுடித்தான்…, அந்த மருத்துவர் தொடர்பு இருக்ககூடது என சொன்னதும் அவன், வள்ளி தன்னுடன் ஒரே அறையில் இருக்கமாட்டால் , பேசாமல் இருப்பது என பாண்டியன் நினைத்துகொண்டான், ஆனால் அவர் சொன்னது “அந்த தொடர்பு” என அவனுக்கு தெரியவில்லை

“இதை கேட்ட வள்ளிக்கோ, பாண்டியனை இவ்வளவு தூரம் ஏங்க வைத்துள்ளோம் என்பதை புரிந்துகொண்டால்.., அதிலும், அவனின் படிப்பைவிட, வேலைக்காக பிரிந்தது தான் அவர்கள் இருவருக்கும் வேதனை அதிகமாக இருந்தது…, கல்யாணம் புதிதில் பாண்டியன், வள்ளியிடம் செலவிட்ட நேரமும் கொஞ்சம் குறைவு தான் ஆனால்…, அதை நிறைவு செய்யவே, பாண்டியன் அவளிடம் முன்பைவிட அதிக காதலுடனும், அன்புடனும் இருந்தான்…,.., ஆனால் வள்ளி அதை புரிந்துகொண்டு தான் இருக்கின்றால்.., மசக்கையினால், பாண்டியனை கவனிக்க தவறினால்…, பாண்டியன், வள்ளியிடம் இப்படி கூறியது, தன் காதல் குழந்தையின் வரவால் அவனை, மிகவும் ஏங்க வைத்ததை நினைத்து, அவள், கவலைகொண்டால்.., இனியும், அத்தானை ஏங்க வைக்கக்கூடாது.., முடிவுடன் அவனிடம் பேச ஆரம்பித்தால்…,”

“அத்தான்.., உங்க பொண்ணு படுத்துறப்பாட்டுல, என்னால ஒருவேளையும் செய்ய முடியலை, நீங்களே என்னை பார்த்தேங்கள…, நான் சோர்வா இருக்குறது.., இனி என் அத்தான நான் கவனிக்காம இருக்க மாட்டேன்.., இரண்டாம் மாசம் ஆகிருச்சுனா.., எனக்கு இந்த சோர்வு இருக்காது.., அத்தான்.., அதுவும் இல்லாம அந்த டாக்டர்.., அப்படி சொன்னா, நமக்குள்ள இருக்குற காதல் குறைஞ்சுரும்மா என்ன…, அவங்க அப்படி தான் சொல்லுவாங்க ஆனா, நான் அப்படி சொல்லலையே,…,.அத்தான்…, யார் என்ன சொன்னாலும், உங்க காதலும்,என் காதலும், நாளுக்கு நாள் கூடுமே தவிர, குறையாது, குறையவும் விடமாட்டேன்…, சரியா…,” அவனின் கையுடன்,கையை சேர்த்து அவனை மகிழ்ச்சிப்படுத்தினால்.. வள்ளி..,

“பரிசம் போடும் நாளும் வந்தது.., பரிசம் போடும் நாள் அன்று காலை தான் மாறன் ஊருக்கே வந்தான்.., வள்ளியை பார்க்க, மாறன் புறப்படும் போது, செல்வி அவனை தடுத்தார்.., ஏன் எனக்கேட்டதற்க்கு, பரிசம் போட மாலையில் செல்வோம், அப்போது உன் தங்கையை பார்த்துகொள்ளலாம்…, அது வரை வெளியில் செல்லக்கூடாது என சொல்லிவிட்டார்.., மாறனுக்கும், அதுவே சரி எனப்பட.., அவனும் செல்லவே இல்லை..,”

“இரண்டு ஊர் மக்களும், மூன்று வீட்டு மாப்பிள்ளைகளும், மூன்று வீட்டு குடும்பமும், அந்த சபையில் அமர்ந்திருந்தனர்.., பிரகாஷிற்க்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.., எப்பொழுதுடா…, மலரை பார்ப்போம் என்று, மாறனுக்கும் மகிழ்ச்சி தான்.., ஆனால் கீர்த்தியை சிறுவயதில் பார்த்தது.., இப்போ அவள் எப்படி இருப்பாள் எனத்தெரியவில்லை, அவனும் அவளுக்காக தான் காத்திருந்தான்.., தென்னவனோ.., மனதில் நடுக்கத்துடன், வெளியில் அமைதியுடன் இருந்தான்…, தெய்வாவின் சம்மத்துடன் நடந்தாலும், அவளின் முழு விருப்பத்தையும் அறிந்துகொள்ள விரும்பினான்..,., மாப்பிள்ளைகள் இவ்வாறு நினத்துகொண்டிருக்க…, மூன்று வீட்டு குடும்பமோ, சந்தோஷம், ஆனந்தக்கண்ணீருடன் தென்பட்டது…, வந்திருந்த விருந்தாளிகளை கவனிக்கவும், சமையல் நடக்கும் இடத்தில் கவனிக்கவும், இரண்டு தங்கைகளின், மற்று, அத்தை மகளின் நிச்சிய விழாவில் குறை ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என பார்த்து, பார்த்து வேலைகளை செய்துகொண்டும், வேலை ஆட்களை அன்புடன் வேலை வாங்கிகொண்டு இருந்தான் பாண்டியன்…,”

“நிச்சயப்பெண்களை, தன் கைவண்ணத்தால் அலங்கரித்துகொண்டிருந்த வள்ளி, ஒவ்வொருவருக்கு, பரிசச்சேலை கொடுப்பதற்க்கு முன், சாதாரண பட்டு சேலையை தேர்வு செய்து, அவர்களுக்கு கொடுக்கவும், நிச்சய பெண்களின் கூடவே இருந்தாள்.., வள்ளி.., மலர், கீர்த்தி என இருவரும் அவர்களுக்குள்ளே கிண்டல் செய்துகொண்டிருந்தனர்.., தெய்வாவோ.., அவர்களின் கிண்டலை பார்த்து சிறித்துகொண்டிருந்தால்..,.,”

“மலர் அண்ணி,  உங்களுக்கு பரிசம் போடாத அப்பவே, அண்ணாக்கூட டூயட் ஆடுவேங்க…, இன்னைக்கு பரிசம் போட்டவுடனே எந்த பாட்டுக்கு டூயட் ஆடுவேங்க..,” கீர்த்தி கேலி செய்ய…,

”வேணாம் கீர்த்தி, என்னை கேலி செஞ்சா உனக்கு தான் சேதாரம் அதிகம், மலர் சொல்ல..”

“நீங்களும் என்னை சேதாரம் ஆகிட்டாலும், உண்மைய சொல்லுங்க, நீங்களும் அண்ணாவும், ஒரே ஊருல தான் இருக்கேங்க, பார்த்துகிறேங்க, பேசிக்கமட்டும், உங்களுக்குனு மாந்தோப்பு தான் ரொம்ப பிடிக்குமாமே.. உண்மையா அண்ணி..” கீர்த்தி, மலரை அதிகமாய் கேலி செய்ய…, தெய்வாவோ இதுவேறையா என்ற பார்வையில் மலரை பார்த்து கொண்டிருந்தால்,

“மதினி, உங்க நாத்தனார் என்னை ஓட்டுறா…,நீங்களும் பார்த்துகிட்டு சிறிக்குறேங்க…, அவளை திட்டுங்க மதினி…, “மலர் வள்ளியிடம் புகார் வாசிக்க…

“கீர்த்திமா.., மலரை ஓட்டாத…,” வள்ளியின் அன்பு கோவமும் கீர்த்திக்கு பழகியது…. கீர்த்தி, மலரிடம், ஆரம்பித்து, வள்ளியின் காதலை ஓட்ட, பிராகாஷின் காதல் வரையில் வந்தி நின்றாள்.”

“மலர்… “தெய்வாவ மட்டும் விட்டு வச்சுருக்க…, அவங்களையும் கிண்டல் பண்ணவேண்டியது தானே..” மலர் கேட்க..

“அவங்க அமைதியா, இருக்காங்க.., முக்கியமா அவங்க காதல் செய்யவே இல்லை, தென்னவன் அண்ணாவும் அப்படிதான்.., அதுனால இரண்டு பேருமே இனி கல்யாணத்துக்கு அடுத்து தான் காதல் பண்ணப்போறாங்க அப்போ கிண்டல் செய்யலாம்… என்ன அண்ணி நான் சொன்னது சரி தான…” மலர் கேட்டதுக்கு, தெய்வாவிடம் பதில் சொன்னால்..

“ம்ம்ம்.., ஆமாம் கீர்த்தி.., என் வாழ்க்கையில.., யார் மீதும் காதல் ஏற்ப்படலை,”

“நீ வேணா பாருங்க மதினி, என் அண்ணா தான் உங்ககிட்ட காதலை சொல்லப்போறாங்க…”  மலர், தெய்வாவை சொல்ல ”என்ன கீர்த்தி..”

“ஆமாம்.. அண்ணி, மலர் அண்ணி சொல்லறது சரி, அமைதியா இருக்கறவங்க தான் காதல் பண்ணு வாங்களாம்.., ஏன் என் அண்ணா பண்ணலை..” மறுபடியும் கிண்டலை ஆரம்பிக்க.., சபையில் நிச்சயப்பெண்களை அழைத்து வரச்சொல்லி, அழைப்பு வந்தது…. பெரியவர்களிடம் இருந்து”

“மாப்பிள்ளை வீட்டார் ஒரு பக்கமும், பெண் வீட்டார் ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்…, வயதில் மூதத்வர்.., அதாவது.. நாலு,ஐந்து தலைமுறையை பார்த்தவரை, பெரிய தலைகட்டு எனகூறுவர்…, அவரின் முன்னிலையில்.., ஆரம்பித்தார்கள்…,இருவீட்டினர் பக்கமும் பெரிய தலைக்கட்டுடன்.., நிச்சிய விழா தொடங்கியது…”

“எல்லோருக்கும் வணக்கம்…, நீங்க எதுக்காக எங்க வீடு தேடி வந்தீங்கனு நாங்க தெரிஞ்சுக்கலாம…, என்ன விசயம்னு சொல்லுங்க” ஒரு பெரியவர்  மூன்று குடுபத்துக்கும் சேர்த்து, பெண்வீட்டு பக்கம் இருந்து பேச…”

“வணக்கம், நாங்க கோட்டையூர் பக்கம் கிராமம்.., எங்க மூனு குடுப்பத்து பசங்களுக்கு உங்க மூனு வீட்டு பொண்ணுங்களை, பொண்ணு கேட்டு வந்துருக்கோம்,அதுவும் இல்லாம இந்த பசங்களோட குடும்பமும், பொண்ணு வீட்டுக்கு நெருங்கின சொந்தம்…, பொண்ணு தட்டி வேற யாருக்கும் போக கூடாதுனு தான் நாங்க விரசா நல்ல நாள் பார்த்து, பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.., உங்க பொண்ணு தான் எங்க மூனு வீட்டு மருமகளுங்க..,” மாப்பிள்ளைகளின் குடும்பத்து பக்கம் அவர் பேச.

”ரொம்ப சந்தோஷம்…, எங்க பக்கம் இருந்து பொண்ணுக்கு என்ன செய்யமுடியுனு நாங்க சொன்னதுக்கு பின்னாடி.., உங்க சம்மதத்தை சொல்லுங்க…,எங்க வீட்டு மூனு பொண்ணுங்களுக்குமே, அம்பது பவுனு நகை தான்,அதுக்கு மேல வெள்ளி,பித்தலை, சில்வர், மாப்பிள்ளைகளுக்கு, பத்து பவுனு தான்…, அப்புறம்.., கல்யாண விருந்துக்கு வந்தாங்கனா அதுக்கு ஏத்த மாதிரி சீர் செய்வோம்.., உங்களுக்கு எப்படி…., இதில சம்மதமா”

“உங்க பொண்ணு, எங்கவீட்டுக்கு மருமகளா வந்தா போதும், நாங்க சீர்செனத்தி எதிர்ப்பார்க்கலைங்க…, கட்டின புடவையோட…, அனுப்பி வச்சாலும் எங்களுக்கு சம்மதம் தான்..,”

“அப்போ சரி…, எங்களுக்கும் இந்த சம்பந்த்துல, சம்மதம்…, இரண்டு பக்கமும் மூனு வீட்டு சம்பந்தம் இருக்குது.., மூனு வீட்டு சார்பா.., ஒருத்தர் தட்டு மாத்துங்க…, மாப்பிள்ளை பக்கம்.., யாரு இருக்கேங்க.., அவர் கேட்க…,”

“எங்க மூனு வீட்டு சார்பா… தமிழ்செல்வியும்,முருகவேலும், மாப்பிள்ளை பசங்களுக்கு அம்மா அப்பா இருந்து தட்டு மாத்துவாங்க…,” அந்த பெரியவர் சொல்ல..

“ பொண்ணு வீட்டு பக்கம், முத்தையாவும்,மீனாட்சியும், பொண்ணுங்களுக்கு அம்மா, அப்பாவா இருந்து தட்டு மாத்துவாங்க…,” அவர் சொல்ல.. இரண்டு வீட்டு பக்கமும், மகிழ்ச்சியுடன்.. அதை வாங்கியும்,கொடுத்தும் கொண்டனர்.., இதை எல்லாம், அழகாக.. படம் பிடித்தான்.. கார்த்தி…”

“சரிங்க, பொண்ணு அழைச்சுட்டு வாங்க.., எங்க குடும்பத்து சார்ப்பா பொண்ணுங்களுக்கு, பரிசச்சேலையும், தாலிக்கொடியும், மாப்பிள்ளை பசங்களும்,பொண்ணுங்களும் மாத்திக்க மோதிரமும் எடுத்துட்டு வந்திருக்கோம்.., அதை போடனும்.., ” அந்த பெரியவர் சொல்ல…,

“சரிங்க…, இதோ அழைச்சுட்டு வரச்சொல்லுறேன்…,”… “ ஏம்மா, மீனாட்சி…, உன் மருமக.. வள்ளியை அந்த பொண்ணுங்களை அழைச்சுட்டு வரச்சொல்லு….,” பெரியவர் சொல்ல… “இதோ இப்பவே சொல்லுறேன் ஐயா..”

“மூன்று பெண்களும், வந்தனர்.., இருப்பக்கமும், வள்ளியும், வாணியும் அவர்களை அழைத்து வந்தனர்…சபைக்கு…,” மூவ்வருக்குமே, கொஞ்சம் பயமாக தான் இருந்தது.., அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்.., சபையில் நின்று ஊர் மக்களுக்கு, பெரியவர்களுக்கும், வணக்கம் சொல்லி, ஆசீர்வாதம் வாங்கினர் மூவரும்..”

“வணக்கம் பொண்ணுங்களா…, நாங்க தான் மாப்பிள்ளை வீட்டுக்காரவாங்க…, எங்க வீட்டு பசங்களுக்கு தான் உங்களை பொண்ணு கேட்டு வந்து, இப்போ உங்களை எங்க வீட்டு மருமகளா அனுப்ப.., உங்க வீட்டுலையும் சம்மதம் சொல்லி தட்டு மாத்திட்டோம்.., உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா பொண்ணுங்களா” அந்த பெரியவர்.. மூவரிடம் கேட்க…

“எங்க அம்மா, அப்பா, பார்த்து எது செஞ்சாலும் அதுல எங்களுக்கு சம்மதம் ஐயா…” மூவருமே ஒன்றாக கூறினர்…

“இப்படி தான் பொண்ணு இருக்கனும், நல்ல வளர்ப்பு முத்தையா…, உங்க சம்மதமே அவங்க சம்மதம்னு சொல்லிட்டாங்க…, இனி எங்க வீட்டு பசங்க ஒவ்வருத்தரா… பொண்ணுக்கு சீர் செய்வாங்க…, முதல “மலைமாறனுக்கும் –கீர்த்திக்கும்”  சீர் செய்யுங்க அவர் சொல்ல..”

“ மாறன், கீர்த்தியிடம் தாம்பூழத்தட்டில் “பரிசச்சேலையில், வெற்றிலை,பாக்குடன்” அவளிடம் கொடுத்தான்.., அதை பின்பற்றி பிராகாஷும், தென்ன்வனும் கொடுக்க…, அதை மூவரும் வாங்கி கொண்டு, பரிசச்சேலை கட்டி வந்தனர்…,”

“மாறன், கீர்த்திக்கு மாலையிட்டு, அவளுக்கு வாங்கிருந்த தாலிகொடியயும் போட்டுவிட்டான்…, பின் இருவரும் மோதிரம் மாற்றிகொண்டனர்..,”,… பிரகாஷூ, மலருக்கு மாலையிட்டு, தாலிகொடி போட்டுவிட்டான்.., மோதிரம் மாற்றிகொண்டனர்.. இருவரும்…, அடுத்து தென்னவனும்,தெய்வாவின் ஜோடி மட்டுமே பாக்கி..”

“பெரியவர்… “என்னப்பா.. தென்னவா.. அடுத்து நீதான்… போ.. பொண்ணு உனக்காக காத்திருக்கு” அவர் சொல்ல… அவனும்.. தெய்வாவின் அருகில் சென்று நின்றான்…, செல்வி அவனிடம் மாலையை கொடுக்க…, அதை வாங்கி அவளுக்கு போடும் பொழுது அவனது கை நடுங்கியது…, இதை பார்த்த ஒருவர்.. “ஏம்ப்பா… இப்படி நடுங்குனா.., பொண்ணு கொடுக்க மாட்டாங்க… தைரியமா நில்லுப்பா…” அவனை கேலி செய்ய…. மற்றிவரின் கண்ணுக்கு தான் அப்படி தெரிவது அவனுக்கு வெக்கமாக போனது…, அடுத்து அவனது கையில் தாலிகொடியை கொடுக்க…, அதை கையில் வாங்கியவன்.., அவள் கழுத்துக்கு அருகே கொண்டு செல்லும் போது…, தெய்வாவின் அருகில் வந்து நின்றால்.. வள்ளி…, வள்ளி, தென்னவனை பார்த்து, கண்ணசைவில் அவனை தைரியப்படுத்தினால்.., அவனும்.. வள்ளி அருகே இருப்பதால்.., தெய்வாக்கு கையில் வைத்திருந்த தாலிக்கொடியை போட்டுவிட்டான்…, மோத்திரத்தை எடுத்து அவளின் கையின் அருகே.. செல்ல.., தெய்வா அவளது கையை தானாக அவனிடம் கொடுத்தால்…, அவனும்.. கொஞ்சம் அதிசயமாக பார்த்தான்…, தாமதிக்காமல் அவளின் விரலில் மோதிரத்தை போட்டுவிட்டு, அவளை தனக்குறியவளாக்கினான் தென்னவன்..”

” மூனு பொண்ணுக்கும் சீர் செஞ்சாச்சு, அடுத்து… கல்யாண தேதி அறிவிப்பை சொல்லிடலாம்… என்னங்க நான் சொல்லுறது சரியா..,” அவர் கேட்க..

“சரிதானுங்க… கல்யாண தேதி குறிச்சுட்டா, அதுக்கான வேலையை ஆரம்பிக்கனும்ல…, சொல்லுங்க…”

“ஸ்ரீ விளம்பி வருடம், அங்காளஈஸ்வரி,கருப்பணச்சாமி.. இவர்களின் ஆசீர்வாதமும், எல்லா தெய்வங்களின் சாட்சியாகவும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த..ரத்தினவேல், ராக்காயின் பேரனும், முருகவேல் – தமிழ்செல்வியின் மகனுமாகிய… செல்வன். மலைமாறனுக்கும். திண்டுக்கல் மாவட்டம், கோட்டையூரை சேர்ந்த, சேதுபதி –ராஜாகுமாரியின் பேத்தியும், முத்தையா –மீனாட்சியின் மகளுமாகிய செல்வி, கீர்த்திக்கும் வருகிற.. கார்த்திகை மாதம், நவம்பர் 28 தேதி திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது… அதே போல், மருதமலை – தெய்வானையின் பேரனும், திருமூர்த்தி –தெய்வத்திரு . கங்காதேவியின் மகனுமாகிய செல்வன் . பிராகாஷ் என்கிற பிரம்மமூர்த்திக்கும், அதே ஊரை சேர்ந்த, தெய்வத்திரு ராஜாவேலன் –வேலாம்மாள் பேத்தியும், சிவநாதன் – தெய்வத்திரு நாகலெக்சுமியின் மகளுமாகிய செல்வி தங்கமலருக்கும், கார்த்திகை மாதம், நவம்பர் 28 தேதி ஒரே நாளில் இரு ஜோடிகளின் திருமணம் நிச்சயக்கப்படிகிறது….,”

“கோட்டையூரை சேர்ந்த, சிவநாதன் –  தெய்வத்திரு நாகலெக்சிமியின் மகன், செல்வன் தென்வனுக்கும், அதே ஊரை சேர்ந்த, திருமூர்த்தி –  தெய்வத்திரு கங்காதேவியின் மகள் செல்வி. தெய்வப்ரியாவுக்கும், வருகிற.., கார்த்திகை மாதம், டிசம்பர் 9 தேதி திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது… என் இரு வீட்டு பெரியவர்களின் சம்மத்துடன் உறுதி செய்யப்படுகிறது.”

“என்னப்பா…, இதுல எல்லாருக்குமே சம்மதம் தானே…,”

“சம்மதம்..ஐயா”

“ அப்படின்னா கல்யாணத்துக்கு இன்னும் மூனு வாரம் தான் இருக்கு, ஒன்னுக்கு இரண்டு கல்யாணம்.., அடுத்த கல்யாணத்து இன்னும் ஒரு வாரம் அதிகமாவெ இருக்கு, இரண்டு வீட்டு பக்கமும் நிதானமும்,வேகமாகவும், கணபதியை கும்பிட்டு வேலையை ஆரம்ப்பிங்கப்பா” இரு பெரியவர்களும் ஒரு சேர கூறினர்.”

“இவை அனைத்தையுமே மிஸ் செய்யாமல்…, ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த தருணத்தை படம் பிடித்தான் கார்த்திக்”

“ பாண்டியனும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அதற்க்கு காரணமாக இருந்த வள்ளியையும் பார்த்துகொண்டிருந்தான்.., அனைவரும்மே மகிழ்ச்சியில் இருந்தனர்…, வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கும், ஊர் மக்களுக்கு, விருந்து வைத்தனர்..”

“தெய்வாக்கு தான் மனதில் சொல்ல முடியாத உணர்வு, இருந்தும் அதை வெளிக்காட்டவில்லை…, இரு ஜோடிகளும், தங்களுக்குள் இருக்கும் சந்தோஷத்தை அவரவர் இணைகளிடம் பேசிகொண்டே, பகிர்ந்தனர்…, ஆனால் ஒரு ஜோடி மட்டும் என்ன பேசுவது என தெரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர். இவர்களை பார்த்த கார்த்திக், “தென்னவன் அண்ணா, நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் சிரிக்காம இருக்கீங்க…, அங்க பாருங்க அந்த இரண்டு ஜோடியும் என்ன செய்யுறாங்கனு, என்னமோ இவங்களை இத்தனை வருசமா பிரிச்சு வச்சு, இப்போ தான் சேர்ந்த மாதிரி, வந்தவங்களை கூட கவனிக்காம எப்படி சிரிச்சு பேசிட்டு இருக்காங்கனு பாருங்க,… மாறன் மாமா கூட இன்னைக்கு வந்தாரு, அவரை விடுங்க…, இந்த பிராகாஷ் மாமா என்ன அலும்பு பண்ணறாங்கனு பாருங்க…, மலர் அக்காவ இன்னைக்கு தான் பார்க்குறதை போல விடமா பேசிட்டு இருக்காரு, நீங்க ரெண்டு பேரு மட்டும் ஏன் அமைதியா இருக்கீங்க…, தெய்வா… சாரி…சாரி அண்ணி…, நீங்களாச்சும் அண்ணாக்கிட்ட பேசவேண்டியது தானே…, அப்போ தான் நான் போட்டோ எடுக்க நல்லா இருக்கும், இப்போ இரண்டும் பேரும் ஒருத்தர், ஒருத்தர் எதிர்ச்சியா பார்க்குற மாதிரி பாருங்க…, அண்ணா நீங்க மட்டும் கொஞ்சமா ஸமைல் பண்ணுங்க…, “ கார்த்தி சொல்ல…, தென்னவனுக்கோ.., ”பெரிய சோதனையா.. இருக்கே… இந்த கார்த்தி வேற என்ன்னையும், அவளையும் இப்படி பண்ண சொல்லுறானே…, அவளுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ…, “ தென்னவன் மனதில் பேசிக்கொண்டிருக்க…, கார்த்திக், மறுபடியும் அவர்களை போஸ் கொடுக்க சொல்ல…, வேறுவழியில்லாமல்…, தென்னவன், தெய்வாவை பார்க்க, அவளும் அவனை மெதுவாக பார்த்தாள்…, “அண்ணா, கரெக்டா செய்யுறேங்க…,.., அப்படியே கொஞ்சமா சிரிங்க…,” கார்த்திக் சொல்ல..,  தென்னவனின், மனதில் அவளை முதல் முதலாய் பார்த்த நினைவை மனதில் நிறுத்திக்கொண்டு, இதழ் ஓர சிரிப்பை அவளை பார்த்து சிரித்தான்…, அதை அழகாக கார்த்திக், போட்டோ எடுத்தான்…, ” அண்ணா, சூப்பர்.. ரொம்ப அழகாக போட்டோ விழுந்துருக்கு, பாருங்களேன்..,” அவனின் மோன நிலையை கலைத்தான்…. தெய்வாக்கோ… அவனின் சிரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் பதிய வைக்க நினைத்தாள்…,”

“வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரும் தவிர, அவர்களின் சொந்தம், பந்தகளும், பரிசம் போட்ட கையுடன், கிளமபினர்.., மாறன் மட்டும், வள்ளியை பார்த்து பேசிகொண்டிருந்தான்.. அவன், மாமான் ஆன மகிழ்ச்சியில் அவளிடம், வெளிபடுத்திகொண்டிருந்தான்.. “எப்போ சொல்லுற ஸ்ரீமா.., அண்ணாகிட்ட வந்த போதே சொல்லிருக்களாமே…, ஏன் மா.., அம்மாகூட என்கிட்ட, நீ மாசமா இருக்குறதை சொல்லவே இல்லையே” அவன் வருத்தமாய் பேச..”

“அண்ணா, சொல்லகூடாதுனு இல்லை…, நீங்க எப்படியும் ஊருக்கு வருவேங்கனு தெரியும் அதான், வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டேன்.., இதுக்காக  ஏன் அண்ணா, வருத்தப்படுறேங்க…,.,” அவள் சமாதானம் படுத்த.. “ மாறனோ, வள்ளியை தோளோடு அணைத்து, வள்ளியின் தலையை கோதிவிட்டான்.., இதை பார்த்த, அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்..”

“தென்னவனுடன் தெய்வாவை பார்த்தவள், அவளை அருகில் வரசொன்னால் வள்ளி…,…, “ அண்ணா, இவ.. தெய்வப்ரியா.., ஐயாவோட பொண்ணு, பிரகாஷ் தங்கச்சி, இவளும் உனக்கு என்னை மாதிரி தங்கச்சிதான்…,” மாறனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள்…, “தெய்வாம்மா, இவங்க என் அண்ணா…, மலைமாறன் அண்ணா, உனக்கும் பிராகாஷ் அண்ணா மாதிரி தான், இவங்களும், நீயும் இனி இவங்களை, அண்ணானு தான் சொல்லனும்.. சரியா” வள்ளி தெய்வாக்கு சொல்ல.., இருவரும் பேசிகொண்டனர்.., “வள்ளி சொன்ன மாதிரி நீயும் எனக்கு, வள்ளி மாதிரி தான்மா ப்ரியா.., சரியா..,” அவன் இயல்பாய் பேச.., “அவளோ, சரிங்கண்ணா,” அவனுடன் பேசினால்…,

“இப்பொழுது மாப்பிள்ளை வீட்டாரும் கிளம்ப ஆரம்பித்தனர்….”.. ‘சரிங்க அண்ணா, நாங்க கிளம்புறோம், எல்லோருக்கும் போயிட்டு வரோம், அண்ணி, வள்ளி உடம்ப பார்த்துக்கோ, தெய்வா,கீர்த்தி,கார்த்தி மாப்பிள்ளை, போயிட்டுவரோம்…., ஐயா, மாமா, தென்னவா, மலர்.. போயிட்டுவரோம்.., தமிழ்செல்வியும்,முருகவேல்,மாறன் மூவரும் கிளம்பினர்..,”

“முத்தையா, நாங்களும், கிளம்புறோம்.., தெய்வா,அண்ணன அழைச்சுட்டு வா.., போகலாம்.., திருமூர்த்தி ஐயாவும் அனைவரிடம் சொல்லிகொண்டு கிளம்பினார்.., அதை தொடர்ந்து, சிவநாதனு, தென்னவன், மலரை அழைத்துகொண்டு புறப்பட்டனர்..”

“அறையில், உடையை மாற்றிவிட்டு சாய்ந்து படுத்து இருந்த பாண்டியன், இன்று நடந்த விழாவை நினைத்துகொண்டிருந்தான்.., அப்பொழுது குளியல் அறையில் இருந்து உடையை மாற்றிகொண்டு வந்த வள்ளி, அணிந்திருந்த பட்டுபுடவை, மடித்து, தொங்கவிட்டாள்…, கழட்டி வைத்த நகையை பீரோவில் வைத்துவிட்டு, பாண்டியன் அருகில் நெருக்கமாகா அமர்ந்தால் வள்ளி.., ”

“ என்ன அத்தான், யோசனையா இருக்கேங்க…, இன்னைக்கு நடந்த நிச்சய விழாவை நினைச்சுட்டு இருக்கேங்களா..,”

“ இல்லைங்க வள்ளியம்மா.., நமக்கு நடந்த நிச்சய விழாவை நினைச்சு பார்த்துட்டு இருந்தேன்.., அதுவும் இல்லாம, பரிசம் போட்ட போது நான் கொடுத்த பரிசச்சேலைய தானே இன்னைக்கு உடுத்தி இருந்தேங்க, அதுல உங்களை பார்த்ததும்.., எனக்கு நம்மக்கு நடந்த நிச்சயதார்த்தம் ஞாயபகம் வந்திருச்சு.., அதான் நினைச்சு பார்த்துட்டு இருந்தேன்..,” அவனும், வள்ளியை நெஞ்சில் சாய்த்துகொண்டு, விரலை பிடித்து சொல்லிகொண்டிருந்தான்…,.

“ வள்ளி, முன்பைவிட இன்னும் அதிக நெருக்கத்துடன்.. அவனை நெருங்கி, அமர்ந்தால்.., வள்ளியின், இந்த நெருக்கத்தை பார்த்தவன்…, வள்ளியிடமும் கேட்டான்.. “ என்னங்க வள்ளியம்மா, ஏதோ சொல்ல வரேங்க…, ஆனா சொல்ல முடியாத நிலையில இருக்குறது போல தெரியுது.., சொல்லுங்க வள்ளியம்மா..,” அவன், கேட்கவும்.., அவளும் பதில் சொன்னால்..

“ அத்தான்…, உங்ககிட்ட நான் சொல்லாம சில காரியம் பண்ணிட்டேன்.., அதை இப்போ சொன்னா, நீங்க எப்படி எடுத்துக்குவேங்கனு தெரியலை, அதை சொல்லுறேன் அத்தான்…, பஞ்சாயத்துல நடந்ததுக்கு முன்னாடி,” அவள் சொல்ல வருவதை, ஒருவிரல் கொண்டு அவளி உதடுகளை மூடினான்..,
“எனக்கு எதுவும் தெரியாவேணாம், வள்ளியம்மா…., நீங்க எது செஞ்சாலும் அது என்க்கும், நம்ம குடும்பத்துக்கும் நல்லாத தான் இருக்கும், வள்ளியம்மா. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், சரியா..,” அவன், வள்ளியை சொல்லவிடாமல் தடுக்க.., வள்ளிக்கோ.., “இப்போ தெரியாம, அத்தானுக்கு, பின்னாடி வேற சூழ்நிலையில தெரிய வந்தா.., ரொம்ப பிரச்சனை ஆகிடுமே, அத்தான் ஏன் சொல்ல வருவதை தடுக்குறாங்க…,” வள்ளிக்கு கவலையாக இருந்தது…

“வள்ளியம்மா, இப்போவே மணி பதினொன்னு ஆகப்போகுது, இவ்ளோ நெரம் தூங்காம இருந்தா, உங்களுக்கும்,பாப்பாவுக்கும், நல்லது இல்லை..,” பாண்டியன் சொல்ல.., வள்ளியோ.., ஏற்கனவே.., அத்தனை ஒருவாரம் ஏங்க வைத்துவிட்டோம், இன்று.. என் உடல் நிலையை கருத்தில் கொண்டு அத்தான் பேசுவது.., அவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அவனை உறங்க வைக்கும், பொறுப்பு வள்ளியுடையதாகும், “ அத்தான்.., உங்க பொண்ணு சமத்தா இருக்கும், அவளுக்கு ஒன்னும் ஆகாது, நீங்க தூங்குங்க வாங்க.., அவன் தலையை மடியில் சாய்த்து, தலை கோத்திகொண்டே அவனை தூங்க வைத்தாள்.., அப்பொழுதுதான் அவளுக்கு அந்த பாட்டின் வரிகள்.., நினைவில் வந்தது..,

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா
நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ?”

அந்த பாட்டை பாடிகொண்டே.., அவனை உறங்க வைத்துவிட்டு அவளும், பாண்டியனின் கையை வயிற்றில் வைத்துகொண்டு…,தூங்கிப்போனால்…”

“உறக்கம் வராமல், அறைக்குள்ளேயே நடந்துகொண்டிருந்த தெய்வாக்கு, இன்று நடந்த நிச்சயதார்த்தம், மகிழ்ச்சியை தரவில்லை, மாறாக யோசனையை தான் தந்தது.., அவன் என்னை பார்த்து சிரித்தது, ஏற்கனவே என்னை பார்த்தது போல் இருந்தது.., ஆனால், எனக்கு ஏன் இப்படி தோன்ற வேண்டும், அவன் தான் இனி என் வாழ்க்கையின் எல்லாம் ஆகா மாறப்போகிறான், எனக்கும் மட்டும் அவனை, நினைத்து யோசனை ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்.., தெய்வா.., யோசித்துகொண்டே, ஜன்னலின் அருகே செல்ல, அங்கு.. தென்னவன் போவது போல் தெரிந்தது.., அவன் தானா.. என ஒரு நிமிடம் நன்றாக பார்த்தாள்.., ஆனால் அவன் இல்லை.. “ ”ச்சே.., ஏன் எனக்கு இப்படி அவன் ஞாயபகம் வருது…, போய் தூங்கலாம்..,”  படுத்து கண்ணை மூடினால்.., அவளது அறையின் பால்கேனி கதவு தட்டும் ஓசை கேட்டது…., முழித்து பார்த்தாள்.., ஆனால் அந்த ஓசை கேட்கவில்லை.., தெய்வாவோ,பிரகாஷின் அறை கதவின் ஓசையாக இருக்கும் என நினைத்துகொண்டால்.., மறுபடியும் அவளது பால்கேனியின் அறை கதவு தட்டும் ஓசை கேட்டது.., இப்பொழுது எழுந்து அந்த கதவின் அருகில் சென்று நின்றுகொண்டால்.., மெதுவாக, தட்டும் ஓசை கேட்டது.., தெய்வாவுக்கோ, பயமாக இருந்தது.., யார் இந்த நேரத்தில் இந்த வழியாக வந்திருப்பது, அவள் யோசிக்க.., “தேவி, நான் தென்னவன் வந்திருக்கேன்.., கதவ திறக்க முடியுமா..,” தென்னவன் கேட்க.., அவளுக்கோ.., ஒரு நிமிடம் அதிசியாக இருந்தது.., ஆனால் அவன் எதுக்கு இந்த நேரம் இங்க வரவேண்டும்.., அவள் நினைக்க, அவனோ “ பிளீஸ், தேவி கதவை திறங்க உங்ககிட்ட பேசனும், நீங்க கதவுக்கு அருகில் தான் நிக்குறேங்கனு எனக்கு தெரியுங்க, யாரவது பாக்குறதுகுள்ள, கதவை திறங்க..” அவன் சொல்ல, மெதுவாக கதவை திறந்து அவனை உள்ளே வர வழிவிட்டாள்.”

“முதல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன், இங்க இந்த நேரத்துல வந்தது என் தப்பு, ஆனா உங்க பதில தெரிஞ்சுக்காம என்னால தூங்க முடியலை, அதான் நேரத்தை பார்க்காம வந்துட்டேன்.., சாரிங்க.., “ வந்தவன் மன்னிப்பு கேட்டதும், அதற்கான காரணத்தை சொன்னதும், அவளுக்கு அவன் மீது உள்ள, நன்மதிப்பை உண்டாக்க, அடுத்து அவன் பேசியது, அவளின் பதிலை எதிர்பார்த்து வந்திருப்பதை, உணர்த்த.., அவளோ என்ன பதில் என்று நினைத்தாள்.

“என்…என்ன பதில்.., எனக்கு… புரியலை.., தெளிவாகா சொல்லுங்க..”

“என்னங்க, இது..,, நமக்கு, நிச்சயதார்த்தம் முடிஞ்சது, ஆனா உங்களுக்கு இன்னும் என்னை பிடிச்சுருக்குதா, இல்லையானு சொல்லாவே இல்லை நீங்க அதான்.., அதுவுமில்லாம.. நீங்க என்னை மனசார ஏத்துகிட்டாங்களானு எனக்கும் தெரியனும்…, சொல்லுங்க..”

“அவளோ, இந்த கேள்விக்கு தான் பதிலை எதிர் பார்த்து, இந்த நேரத்தில் வந்திருக்கானா.., இதுவும் நல்லா இருக்கிறது, ஒரு ஆண் மகன், அவனுக்கு நிச்சியக்கப்பட்ட பெண்ணின் மனதை அறிய, நேரம், பார்க்காமல்.., வந்திருப்பது தெய்வாக்கும் மகிழ்ச்சி என்றாலும், இன்றே சொல்லவேண்டும் என்னும் நிலையில் அவன் சொல்லுவது அவளுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது, அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது என சொல்லவேண்டும் போல் உணர்வு ஏற்பட்டது, ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று தடுத்தது.., அதை சொல்லவிடாமல்.”

“என்னங்க, நான் வந்து அரைமணி நேரம் ஆக போகுது, நீங்க எதுவும் சொல்லாம அமைதியா நிக்குறேங்க…, உங்க அமைதிய பார்த்தா, நான் நினைச்சது சரி தான் போல.., சரிங்க.., நாளைக்கு, குளக்கரை கோவில்ல உங்களுக்காக நான் காத்திருப்பேன், வருவதும்,வராததும் உங்க விருப்பம்.., நான் கிளம்புறேன் தேவி..”அவளின் பதிலை எதிர்பார்த்து வந்தவன், அவளின் அமைதியை பார்த்து, கவலையுடன் திரும்பி சென்றான் தென்னவன்…

”குளக்கரையில் காத்திருந்தான் தென்னவன்”

 

                             துருவங்கள் தொடரும்…………

 

Advertisement